Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoruthi + Innoruthi
Innoruthi + Innoruthi
Innoruthi + Innoruthi
Ebook374 pages2 hours

Innoruthi + Innoruthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொருளாதார விற்பன்னரான காலேஜ் புரபசரை, தன்னை எதிர்த்துப் பேசமுடியாத ஒரு ஊமையாக ஆட்டிப் படைக்கும் தர்மபத்னி சாந்தகுமாரி.

அவளிடம் காணமுடியாத ஆதரவு, அரவணைப்பு, பாராட்டு இவற்றைப் பரிந்தளித்த தானே இன்னொருத்தியாக இருக்க, + இன்னொருத்திபால் அவருடைய ஆசை படருமோ என்று சந்தேகித்த நடனமணி அம்பிகா.

பெண்கள் பற்றிய சைக்காலஜியை முழுக்க முழுக்க அறிந்து வைத்திருக்கும் அருமை நண்பர் மற்றொரு காலேஜ் புரபசர் ஆனந்தராஜ். இவர் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி!

பசிக்கும்போது தனக்கென்று ஒரு பிளேட் ஆர்டர் கொடுக்காமல், இன்னொருவர் பிளேட்டில் இருக்கும் பதார்த்தத்தைப் பார்த்துப் பார்த்தே பசி தீர்த்துக்கொள்ள முடியுமாம். அப்படியும் பசி அடங்காதபோது கற்பனையிலேயே பசி தீர்த்துக் கொள்வாளாம்.

இப்படி ஒரு புதுக் காதல் வேதம் சிருஷ்டிக்கும் கல்பனா.

தகாத காதலுக்குப் புது நியாயம் கற்பித்துப் பரவசமூட்டும் அதிதிறமைசாலியாக விளங்குகிறாள் கல்பனா.

இத்தனைப் பேருக்கு மத்தியில் கிளைக்குக்கிளைதாவும் அர்ச்சுனன் மகாரானாக அவதரிக்கும் விஜயன்.

இந்தக் கற்பனைப் பாத்திரங்களுக்கு நிஜத்தன்மை சேர்ப்பதற்காக கமல்ஹாசன் முதல் கவிஞர் வைரமுத்து வரை நடமாடும் பாத்திரங்களையும் சேர்த்துக் கையாளும் இலாவகமான புதிய நாவல் உத்தி.

மோகம் மோகனம் பாடும் இந்தக் கதையில் கல்பனா வரும்போது மட்டுமல்லாமல் காது முழுவதுமே ஒரு கிளுகிளுப்பு தோன்றி விரவிக் கிடக்கிறது.

சிவசங்கரியின் வெற்றிப் படிகளில் இந்த நாவல் ஒரு படி!

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803602
Innoruthi + Innoruthi

Read more from Sivasankari

Related to Innoruthi + Innoruthi

Related ebooks

Reviews for Innoruthi + Innoruthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoruthi + Innoruthi - Sivasankari

    http://www.pustaka.co.in

    இன்னொருத்தி + இன்னொருத்தி

    Innoruthu + Innoruthi

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    பதிப்புரை

    பொருளாதார விற்பன்னரான காலேஜ் புரபசரை, தன்னை எதிர்த்துப் பேசமுடியாத ஒரு ஊமையாக ஆட்டிப் படைக்கும் தர்மபத்னி சாந்தகுமாரி.

    அவளிடம் காணமுடியாத ஆதரவு, அரவணைப்பு, பாராட்டு இவற்றைப் பரிந்தளித்த தானே இன்னொருத்தியாக இருக்க, + இன்னொருத்திபால் அவருடைய ஆசை படருமோ என்று சந்தேகித்த நடனமணி அம்பிகா.

    பெண்கள் பற்றிய சைக்காலஜியை முழுக்க முழுக்க அறிந்து வைத்திருக்கும் அருமை நண்பர் மற்றொரு காலேஜ் புரபசர் ஆனந்தராஜ். இவர் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி!

    பசிக்கும்போது தனக்கென்று ஒரு பிளேட் ஆர்டர் கொடுக்காமல், இன்னொருவர் பிளேட்டில் இருக்கும் பதார்த்தத்தைப் பார்த்துப் பார்த்தே பசி தீர்த்துக்கொள்ள முடியுமாம். அப்படியும் பசி அடங்காதபோது கற்பனையிலேயே பசி தீர்த்துக் கொள்வாளாம்.

    இப்படி ஒரு புதுக் காதல் வேதம் சிருஷ்டிக்கும் கல்பனா.

    தகாத காதலுக்குப் புது நியாயம் கற்பித்துப் பரவசமூட்டும் அதிதிறமைசாலியாக விளங்குகிறாள் கல்பனா.

    இத்தனைப் பேருக்கு மத்தியில் கிளைக்குக்கிளைதாவும் அர்ச்சுனன் மகாரானாக அவதரிக்கும் விஜயன்,

    இந்தக் கற்பனைப் பாத்திரங்களுக்கு நிஜத்தன்மை சேர்ப்பதற்காக கமல்ஹாசன் முதல் கவிஞர் வைரமுத்து வரை நடமாடும் பாத்திரங்களையும் சேர்த்துக் கையாளும் இலாவகமான புதிய நாவல் உத்தி.

    மோகம் மோகனம் பாடும் இந்தக் கதையில் கல்பனா வரும்போது மட்டுமல்லாமல் காது முழுவதுமே ஒரு கிளுகிளுப்பு தோன்றி விரவிக் கிடக்கிறது.

    சிவசங்கரியின் வெற்றிப் படிகளில் இந்த நாவல் ஒரு படி!

    -கங்கை புத்தக நிலையத்தார்

    இன்னொருத்தி + இன்னொருத்தி

    1

    ஆரம்பித்துவிட்டது.

    கத்தல்.

    ஏசல்.

    வாய் மூடாத புலம்பல்.

    சிலசமயம் மொணமொணவென்று முனகலாக..

    பல சந்தர்ப்பங்களில் அண்டை வீடுகளுக்கும் கேட்கும்படியான கூச்சலாக...

    இது ஒன்றும் புதுசு இல்லை. இன்றைக்குத்தான் நடக்கும் சமாச்சாரம் இல்லை.

    ரொம்ப வருத்தங்களாக, சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்குத் திருமணமான இந்த ஏழு வருஷங்ளாக, நாள் தவறாமல் தினமும், தொடர்ந்து நடப்பதுதான்.

    புதுக்குடித்தனத்தை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு வீட்டில் துவங்கிய போது, அந்தக் கட்டடத்தில் சற்று நெருக்கமான ஒண்டுக் குடித்தனங்கள் இருந்ததில் இந்தக் கத்தலை பலர் கேட்டார்கள்.

    இப்போது மந்தைவெளி குடியிருப்பில் அத்தனை நெரிசல் இல்லை என்பதால் கூச்சலைக் கேட்கும் கூட்டம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அவ்வளவுதான். மற்றபடி கத்தலும் மட்டுப்படவில்லை. அதற்கான உப்பு சப்பில்லாத காரணங்களுக்கும் அளவே இல்லை.

    இன்றைய கத்தல் அவன் நேற்று மாலை வாங்கி வந்திருந்த காய்கறிகளின் உபயம்.

    "மனுஷன் வாங்குவானா இந்த மாதிரி அவிஞ்சகாய்கள்? அன்னாடம் இதே ரோதனையாப் போச்சு... அழுகினது, முத்தினது, காஞ்சது எங்க கெடைக்கும்னு தேடித்தேடிப் போய் வாங்கறாப்பல இது என்ன அடாவடி! த்தா... ஒரு சின்ன காரியத்த செய்யக்கூட துப்பு இல்ல... படிச்சா ஆச்சா! பெரிய்ய்ய்ய படிப்பு... கை நிறைய சம்பாதிக்கத்தான் சாமர்த்தியம் இல்ல…

    அட, கடைக்குப் போய் சாமான் சஜ்ஜா வாங்கக்கூடத் தெரியலைனா, இந்தக் கேவலத்தை யார்கிட்ட சொல்லி முட்டிக்கறது! எல்லாம் என் தலையெழுத்து... இப்படி எதுக்கும் வக்கில்லாத மனுஷனோட காலம் பூராவும் உசிர விடணும்னு

    நா பிறந்தப்பவே எழுதிட்டானே. அத மாத்த முடியுமா? நா பண்ண பாவம், கிடந்து அல்லாடறேன். ஒரு தாய் வயத்து மக்களாயிருந்தும், எங்கக்கா ஜம்முனு கார்ல தளர்கோலம் போறா, தங்கச்சி ஃபிரிஜ்ஜும் டேப் ரெகார்டுமா அமர்க்களமா வாழறா... நா நாந்தான் இந்த துப்புக் கெட்ட ஜன்மத்தக் கட்டிகிட்டு எதுக்கும் கொடுப்பினை இல்லாம் தேஞ்சு சாறேன்! காயா இது! ததூ... முத்தல் பீன்ஸும் அழுகின கீரையுமா காசு கொடுத்து வாங்கினாப் ப.பவா தெரியுது! என்னமோ பிளாட்பாரத்துல் கூறு கட்டி வச்சத அள்ளிகிட்டு வந்தமாதிரியில்ல இருக்கு..

    தூத்தேறி. மாடு தின்னாதுப்பா இதுங்கள். படிச்ச ஆம்பிளை செய்யற காரியமா இது! மனுஷன்னா ஒரு சூடு சொரணை இருக்க வேணாம் என்ன கேட்டாலும் பதில் சொல்லாம் அமுக்கா இருந்தா ஆச்சா? இவரும் ஒரு ஆம்பிளை... இவருக்கு ஒரு வெள்ளை வேட்டி… பாண்ட்... த்தூ... பழகிவிட்டது.

    நீயம் அரு ஆம்பிளையா? என்று முகத்துக்கெதிரிலேயே கேட்பதிலிருந்து, வரிக்கு வரி 'த்தூ' என்று காரித் துப்புவது வரை எல்லாமே பழகிவிட்டது.

    பின்னே?

    நாபியிலிருந்து குரலெடுத்து உரக்கப் பேசுவதே பிறவிக் குணத்திற்கு ஒவ்வாத விஷயம் என்கிறபோது, ஏய் - சும்மா இரு என்று அதட்டுவதாவது, தரம் இறங்கி பதிலுக்குப் பதில் வாயாடுவதாவது... ம்ஹ ம் - ஒன்றும் இல்லை.

    விஜயன் கையில் வைத்திருந்த தினசரியைப் பிரித்து, ஜன்னல் வெளிச்சம் தாளில் விழ உட்கார்ந்துகொண்டான். எதிர் போர்ஷன் சாமிநாதன் இவனைப் பரிதாபமாகப் பார்க்கிற மாதிரி தோன்றியது.

    படிகளில் ஏறிக்கொண்டிருந்த மாடி வீட்டு வேலைக்காரி அரை நிமிஷம் நின்று கீழிருந்து எழுந்த கத்தலை ரசித்து விட்டுப் போவது புரிந்தது.

    சாந்தகுமாரி…

    குணத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெயர்!

    அவனுக்குச் சிரிக்கத் தோன்றியது. உதடுகளை அழுத்திக் கொண்டான்.

    திருமணமான புதிதில் அவளை மற்றவர்கள் கூட்டிட்டது போலவே அவனும் 'சாந்தி" என்றுதான் அழைத்தான். அப்புறம், அவள் பேச்சும், வாயும், குணமும் புரிய ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு முறை பெயர் சொல்லிக் கூப்பிடும் போதும் மனசுக்குள் ஏதோ ஒன்று நெருடுவதோ அல்லது வேற… ஹே... - என்று கைகொட்டிச் சிரிப்பதோ அதிகமான பிறகு, கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொண்டான்.

    சாந்தி - அமைதி…

    யார்? இவளா?

    மறுபடியும் விஜயனுக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியது. மீண்டும் அடக்கிக்கொண்டான்.

    ஆனால் ஒன்று - இவன் அன்று அருமை பெருமையாய் சாந்தி, சாந்தம்மா - என்று கொஞ்சியதையும் சாந்தகுமாரி கேட்டுக் குதூகலிக்கவில்லை. இன்று மொட்டையாய் இங்க பாரு என்று பேசுவதையும் லட்சியம் பண்ணவில்லை என்பதுதான் உண்மை.

    சாந்தகுமாரிக்குத் தெரிந்ததெல்லாம் அவள் பிறந்த வீட்டுப் பெருமை, சொந்த ஊர் திண்டுக்கல்லின சிறப்பு - இவனுடைய குடும்பத்தின் சாதாரண நிலை- முக்கியமாய் கையாலாகாத்தனம்.

    காய் வாங்குவதில்தான் என்றில்லை. யார் என்ன தவறு செய்தாலும் அது இவனுடைய துப்புக் கெட்டதனத்தால்தான் என்பது சாந்தகுமாரியின் அசைக்கமுடியாத கருத்து.

    வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், புதுசாய் ரீலிஸான சினிமாவுக்குப் போக நினைத்து டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், கோயிலில் சாமிதரிசனத்துக்கு 'க்யூ' நீண்டிருந்தது என்றால், துவரம்பருப்பு சரியாக வேகவில்லை என்றால், லாண்டரியில் கொடுத்த புடவையில் சாயம் போயிருந்தது என்றால் - எல்லா வற்றிற்கும் அவளைப் பொறுத்தவரை அவன்தான் காரணம்.

    வாடகைக்கு வீடு எடுத்திருக்கிற லட்சணத்தைப் பாரு - குழால தண்ணிகூட வரலை என்பாள்.

    கொஞ்சம் முன்னாலியே வந்து டிக்கெட் எடுக்கத் துப்பு இல்ல, பொண்டாட்டியையும், பிள்ளைங்களையும் சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்தா ஆச்சா? என்பாள்.

    அவனவன் பத்து ரூபா கொடுத்து 'சீட்டு' வாங்கி சாமி தரிசனம் பண்ணி வைக்கிறான். அந்த சாமர்த்தியம் இல்ல. அப்புறம் கோயில் என்ன. குளம் என்ன? என்பாள்.

    மளிகைச் சாமான் வாங்கி இருக்கா அழகைப் பாருத்த... ஏமாந்தவன் எவண்டா ஆப்படுவான்னு காத்திட்டு இருக்கற கடையா பாத்துப் போனீங்களோ? என்பாள்.

    லாண்டரிக்காரன் புடவை சாயத்தப் போக்கிட்டுக் கொடுத்திருக்கான் - வாய் பேசாம வாங்கிட்டு வந்திருக்கிங்கனே - விவஸ்தை வேணாம் ஒரு மனுஷனுக்கு? உங்ககிட்டப் போயி கொடுத்தேன் பாருங்க, ஏம் புத்தியச் சொல்லணும் என்பான்.

    இத்தனை தொட்டாங்கு அடிக்கிறானே. சரி. எனக்குத் தான் சாமர்த்தியும் இல்லையே - இனி நீயே பார்த்துக் கொள்ளேன் என்றாலும் நடக்காது.

    கடைக்கா? நானா? அதெல்லாம் நம்பளால முடியாது. ஊர்ல நாங்க படி எறங்கிப் போய் ஒரு முழம் பூ வாங்கினம்ன்ரதோ, மளிகைக் கடைல போய் நின்னோம்ன் ஏதோ கிடையவே கிடையாது. எல்லாத்தையும் வீட்டு அம்பளைங்கதான் செய்வாங்க.

    மூலைக்கு மூலை ஆளுங்க நிக்கும். இல்லாட்டியும் அப்பாவும் அண்ணங்களும் வாங்கிட்டு வந்திடுவாங்க... உங்களால முடிஞ்சா செய்யுங்கள் இல்லாட்டி விடுங்க. உங்க வீடு, உங்க பசங்க, உங்க சோறு- எனக்கென்னாச்சு! என்பாள் விழிகளை உருட்டிக் கொண்டு.

    சாந்தகுமாரியின் ஏசல்களைப் புதுசாய்க் கேட்கும் நபர் ஒஹோ - இவன் எதற்கும் லாயக்கில்லை போலிருக் கிறது - என்றுதான் நினைப்பார், நிச்சயம். ஆனால் உண்மை அதுவல்ல - அவனோடு கொஞ்சம் பேசிப் பழகினவர்களுக்குத் தெரியும் அவன் அறிவும், கல்லூரியில் பாடம் எடுக்கும் நேர்த்தியும், அதன் மூலம் மாணவர்களிடமும், நிர்வாகத்திடமும் எடுத்திருக்கும் மதிப்பும்...

    சாந்தகுமாரியின் கத்தலும், விஜயனின் பரிதாபமும் பொறுக்கமாட்டாமல், தெரிந்தவர் எவராவது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, காய் மோசமா இல்லியே - பொறுக்கிப் பொறுக்கி இளசாதானே வாங்கினார்? நா சுடவே நின்னு எங்க வீட்டுக்கு வாங்கினப்ப பார்த்தேனே என்றோ.

    லாண்டரிக்காரர் சாயத்தப் போக்கினா அதுக்கு விஜயன் என்னம்மா பண்ணுவார்? என்றோ கேட்டுவிட்டால், போயிற்று... அன்றைக்கு அனேகமாய் குருக்ஷேத்திர யுத்தமே துவங்கிவிடும்.

    என் புருஷனைப்பத்தி எனக்கே சொல்லித் தர்றீங்களா? என்று ஆரம்பித்து நாக்கில் நரம்பில்லாமல் வந்தவரைப் பந்தாடிவிடுவாள்.

    ஆக, அவர்களால் தற்சமயம் முடிந்தது இப்போது சாமிநாதன் எதிர் போர்ஷன் வராந்தாவில் அமர்ந்தவாறு ‘ஐயோ - பாவம்' என்று பார்க்கிறாரே, இப்படிப் பார்வையால் வருடிக்கொடுப்பதுதான்.

    அந்தஸ்தில் சாந்தகுமாரியின் குடும்பம் இவனுடையதைவிடப் பல படிகள் உசந்தது. மறுப்பதற்கில்லை. இவன் அப்பா கும்பகோணத்தில் வக்கீல் குமாஸ்தா, நிலம், நீச்சு என்று எதுவும் கிடையாது. சொற்ப சம்பளம், எளிமையான வாழ்க்கை.

    கும்பகோணம் கலைக்கல்லுாரியில் பி.ஏ.யும் பின்னர் திருச்சி செயிண்ட் ஜோஸப் காலேஜில் எம்.ஏ. படித்ததும் கூட வக்கில் பெரிய மனசு கொண்டு உபகாரம் பண்ணிய தால்தான்.

    ஆனால், சாந்தகுமாரியின் குடும்பம் அப்படிப்பட்டது அல்ல. அப்பா வினாயகம் பண்ணைக்காடு, பெருமான் மலைப் பகுதிகளில் விளையும் மலைப்பழங்களை மொத்தமாக வாங்கி திண்டுக்கல்லில் வியாபாரம் செய்பவர்.

    'வினாயகம் பழக்கடை’ தெரியாதவர்கள் திண்டுக்கல், வத்தலகுண்டு வட்டாரத்தில் இருக்கமாட்டார்கள். மலைப் பழ வியாபாரத்தோடு, 'சக்தி பூட்டு தொழிற்சாலையையும் பங்காளி மாணிக்கத்தோடு கூட்டாக நடத்துவதில் அதிலிருந்தும் வருமானம் உண்டு

    இப்படிச் சொல்வதைக் கேட்டு, கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்வம் கொட்டுவதாகவும், வீடு பூராவும் பொன்னும் மணியுமாய் இழைக்கப்பட்டிருப்பதாகவும் அர்த்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது. ஓரளவுக்கு அந்தஸ் தாக வாழ்க்கை இருந்தாலும் வினாயகத்தின் குடும்பம் கொஞ்சம் பெரிசு. சாந்தகுமாரியைச் சேர்த்து அவருக்கு மொத்தம் ஐந்து பெண்கள், மூன்று பிள்ளைகள்.

    சாந்தகுமாரியும், அவளோடு பிறந்தவர்களும், வளர்ந்தது, படித்தது எல்லாமே திண்டுக்கல்லில்தான். படிப்பு என்றால் பெரிய படிப்பு ஒன்றுமில்லை. பிள்ளைகள் பள்ளி இறுதியாண்டை முடித்தபின், அப்பாவோடு வியாபாரத்தில் இறங்கிவிட்டார்கள்.

    பெண்களுக்கு அதுகூட இல்லை. அவளவள் பெரியவளானதுமே பொட்டச்சிக்கு படிப்பு எதுக்கு? என்று டயலாக் அடித்துவிட்டு சொந்தத்திலேயே வினாயகம் எல்லா பெண்களையும் செட்டில் செய்து விட்டார்.

    அந்த ரீதியில் ஒன்பதாவதில் பெயில் ஆகி, வீட்டோடு சாந்தகுமாரி இருக்க முற்பட்ட சமயத்தில், தூரத்து சொந்தக்காரரான வடிவேலுவின் மகன் விஜயனுக்கும், அவளுக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. அப்போது சாந்தகுமாரிக்கு வயசு பதினேழு, விஜயனுக்கு இருபத்துமூன்று.

    வசதி என்று பார்த்தால் வினாயகத்திற்கோ, முந்தின சம்பந்தங்களுக்கோ விஜயன் ஏற்றவன் இல்லைதான். ஆனாலும், படித்திருந்த எம்.ஏ. படிப்பு அவனை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டியது நிஜம். வினாயகத்தின் குடும்பத்தைப் பொறுத்தவரை கல்லூரிப் பக்கமே ஆண் பிள்ளைகள் எட்டிப் பார்த்திராமல் இருந்தபோது எம்.ஏ. டிகிரி என்பது எத்தனை உசத்தியான விஷயம்!

    சொத்து, சுகம் இல்லாட்டி என்ன போச்சு? மாப்பிள்ளை ஏகத்துக்கு படிச்சிருக்காரு. மெட்ராஸ்ல காலேஜில வேலைகூடக் கிடைச்சாச்சு. அப்பால் என்ன? நாளைக்கே படிப்படியா உசந்து பிரின்ஸிபாலா அயிட்டா, கூடிடாதா? வினாயகம் தயக்கமின்றி தடாலடித்துப் பேச, எந்த முட்டுக்கட்டையுமின்றி திருமணம் நிச்சயம் ஆனது.

    விஜயனின் தோற்றத்தில் கிறங்கிப்போயிருந்த சாந்தகுமாரிக்கு மற்றதெல்லாம் அந்த வயசில் ஒரு பொருட்டாகவே இல்லை.

    சும்மா சொல்லக்கூடாது விஜயனின் உருவ அமைப்பு அப்படி.

    நல்ல உயரம். திட்டமான பருமன். மாநிறம்தான் என்றாலும் களையான முகம். கச்சிதமான மீசை, வழவழவென்று வாரிவிடப்பட்ட தலைமுடி சிரித்தால் பளிச்சென்று வெளிப்படும் பல் வரிசையோடு, வெள்ளை வேட்டியும், ஷர்ட்டும் அணிந்து எதிரில் நடந்து வந்தால்.

    யார் இது? என்று இரண்டாவது முறை எவரையும் பார்க்க வைக்கும் தோற்றம்.

    திருமணம் நடந்தது தை மாசம். சென்னையில் குடும்பம் நடத்த வகையாய் போர்ஷன்' கிடைக்காமல் இழுத்தடிக்க, ஒரு வழியாய் ஆடி கடந்ததும் திருவல்லிக்கேணியில் ஒரு சின்ன போர்ஷனில் தனிக்குடித்தனத்தைத் துவங்கினார்கள்.

    இரண்டாம் வருஷம் கெளரி பிறந்தாள். அவளுக்கு ஒன்றரை வயசாகும்போது ரேவதி.

    திருமணமாகி ஏழு வருஷங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது விஜயனுக்கு எல்லாமே மரத்துவிட்டன. சாந்த குமாரியின் கத்தல், சாமிநாதனின் பார்வை, வேலைக் காரியின் நமுட்டுச் சிரிப்பு எல்லாமே..

    பேப்பரைப் பிரித்துப் பார்வையை முதல் பக்கத்தில் படரவிட்டான். அனேகமாய் அனைத்துச் செய்திகளுமே பிரதமர் மொரார்ஜி தேசாய், அவருடைய ஜனதா அரசாங்கம் சம்பந்தப்பட்டதாய் இருந்தன.

    நாட்டில் அமெரிக்க அதிக்கத்தைப் பரவவிடாமல் தடுக்க, சோக்கோ கோலா தயாரிப்பை உடனடியாய் நிறுத்த ஜனதா அரசு தீர்மானித்திருப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கத்திலேயே செய்தி..

    மூன்றாம் பக்கத்தில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட ஓர் அரசு விழாவின் படம். விவரத்தைப் படிப்பதற்குள் சாந்தகுமாரியின் குரல் அதிர்ந்து ஒலித்தது.

    கூப்படறதுகூட காதுல விழாம அங்க அப்படி என்ன வெட்டி முறிக்கறீங்க

    விஜயன் பேப்பரை தழைத்தான்.

    என்ன?

    என்னவா? அங்கேயிருந்தே கேட்டா? இங்க வந்தா கெளரவம் கொறஞ்சிடுமா?"

    பேப்பரை மடித்து ஜன்னல் விளிம்பில் வைத்துவிட்டு சமையல்கட்டுக்குள் சென்று நின்றான்.

    என்ன செஞ்சிட்டிருக்கீங்க? பேப்பரா?

    ம்…

    காலேஜ் இருந்தாதான் விரலை அசைக்கமாட்டீங்க, லீவு சமயத்துலியாவது எதனாச்சும் ஒத்தாசை பண்ணா என்ன?

    ………..

    சாயங்கால வண்டிக்கு ஊருக்குக் கிளம்பணும் - இன்னும் ஒரு எழவும் ஆகல. அலமாரி மேல் இருக்க பொட்டிய எடுத்து தொடைச்சு, பிள்ளைங்க துணிங்கள் அடுக்கக் கூடாதா?

    பதில் பேசாமல் விஜயன் திரும்பி, கூடத்துக்கு வந்தான்.

    மர அலமாரி மேல் வைத்திருந்த பெட்டியை எடுத்து பழைய துண்டால் தூசி போகத் தட்டினான். பூட்டு சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தான். செய்தது.

    சாந்தகுமாரியும் குழந்தைகளும் இரவு வண்டியில் திண்டுக்கல்லுக்குப் புறப்படுகிறார்கள். கெளரிக்கு இன்றோடு கோடை விடுமுறை துவங்குகிறது. பெண்ணுக்குப் பள்ளி விடுமுறை ஆரம்பித்துவிட்டால் அன்றே சாந்தகுமாரி தாய் வீட்டுக்குக் கிளம்புவது மாமூல் நடப்பு.

    அப்படிச் செல்லும்போதெல்லாம் குழந்தைகளைப் பிரிவது கஷ்டமாக இருப்பதையும் மீறிக்கொண்டு விஜயனுக்கு 'அப்பாடா' என்று இருக்கும்,

    ஸ்ரீரங்கத்தில் வருஷத்திற்கு ஒருமுறை சொர்க்கவாசல்' திறப்பார்கள் என்றால், இவனுக்கு சாந்தகுமாரி ஊருக்குப் போகும்போதெல்லாம், வருஷத்திற்குக் குறைந்தபட்சம் மூன்று தடவையாவது, சொர்க்கவாசல் திறக்கும், இந்தப் பேரை வைத்ததுகட்ட இவன் இல்லை - எதிர்வீட்டு சாமிநாதன்தான்.

    மந்தைவெளி வீட்டுக்கு வந்த புதுசில் முதல் தடவை அவள் கிளம்பிப் போனதும். மோட்சத்துக்குப் போற சொர்க்கவாசல் திறக்குதோ இல்லியோ, கொஞ்ச நாளுக் காவது நிம்மதியா இருக்க உங்களுக்கு வழி பிறந்திருக்கு.. என்றார். கொஞ்சம் வேடிக்கை, நிறைய வேதனையோடு.

    அதிலிருந்து தனியாக இருக்கும் போது, சொர்க்கவாசல் எப்ப திறக்கப் போவுது, சார்? இன்னும் பத்து நாள்வியா? என்று அவ்வப்போது கேட்பதுகூட உண்டுதான்...

    பெட்டியைத் துடைத்தவன் கட்டில் மேல் சாந்தகுமாரி தனியாக எடுத்து வைத்திருந்த துணிகளை அதன் உள்ளே அடுக்கினான். இன்னும் கொஞ்சம் சில்லரை வேலைகளைச் செய்தான், ரேவதியை அழைத்துச் சென்று குளிப்பாட்டி, உடை அணிவித்தான்.

    ஊருக்கு எடுத்துச் செல்லவென மனைவி வாங்கியிருந்த சாமான்களைப் பேப்பரில் கட்டி, ஒயர்கூடையில் வைத்தான்.

    சாந்தகுமாரி சொன்ன அத்தனை வேலைகளையும் முடித்துக் குளித்தபிறகு பத்து மணி அளவில் பரிட்சை பேப்பர்களைத் திருத்த உட்கார எண்ணிய போது, இவன் சாமான்களை 'பேக்' பண்ணிய விதத்தைக் குறை சொல்லி அவள் முறையிட ஆரம்பிக்க, வீட்டில் இருப்பதைவிட சில மணி நேரமாவது லைப்ரரியில் கழிப்பது நல்லது என்கிற தீர்மானத்துடன் எழுந்து தலைவாரி, உடை மாற்றிக்கொண்டான்.

    லைப்ரரி என்றால் சாந்தகுமாரியின் கோபம் அதிகமாகும் என்பதால் அவசர வேலையை கவனிக்க கல்லூரிக்குப் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு படியிறங்கினான்.

    இரண்டு தெருக்களைக் கடந்து ராமகிருஷ்ண மடம் சாலையை அடைந்து பஸ் ஸ்டாப்பில் நின்றான்.

    பஸ், இதர வாகனங்களைத் தவிர இரண்டு பக்கமும் நிறைந்திருந்த கடைகளுக்கு வருவோரும். போவோருமாய் தெரு சந்தடி நிறைந்திருந்தது.

    ‘பெல்பாட்டம்’ பாண்ட் அணிந்து, பிடரியைத் தொட்ட கிராப்புடன் சைக்கிளில் சென்ற இளவட்டங்கள்.

    டிஸைன் ரவிக்கை, காஞ்சியில் விரைத்த ப்ளெய்ன் மல்மல் புடவையில் பெண்கள் - சமீபத்திய நாகரிகத்தின் சாட்சியாய்.

    சில நிமிஷங்களுக்குச் சாலையில் சென்றவர்களை வேடிக்கை பார்த்த விஜயன், தலையைத் திருப்பி பஸ் வருகிறதா என்று பார்த்தான். இல்லை.

    அருகில் நின்றிருந்த ஆள் சிகரெட் பிடித்து வெளியிட்ட புகை முகத்தைத் தாக்க கொஞ்சம் நகர்ந்து நின்றுகொண்டான்.

    சாமான்களை ஏற்றிக்கொண்டு வந்த டெம்போ ஒன்று பஸ் ஸ்டாப்புக்கு எதிர் வரிசையில் இருந்த வீட்டின் முன் நின்றது. நாற்காலி, பீரோ, கட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள்.

    டெம்போவைத் தொடர்ந்து வந்த ஆட்டோ அதைத் தாண்டிப் போய் நிற்க, அதிலிருந்து அந்தப் பக்கமாய் இறங்கிய தலை நரைத்த பெண் மணி டெம்போவிடம் சென்று ஒட்டுனரிடம், சாமான்களை ஜாக்கிரதையா எறக்குங்க என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, ஆட்டோவின் இந்தப் பக்கமாய் ஒரு கால் வெளிப்பட்டது.

    சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்துக்கொண்டு நின்ற விஜயனுக்கு சடும்மென்று சிலிர்த்தது.

    வெள்ளைப் பாதம்... அந்த வெண்மையைக் கூட்டிக் காட்டிய வெள்ளிக் கொலுசு...

    புடவை சற்றே தாக்கி இருந்ததில், காலின் வெளுப்பும், கச்சிதமான கணுக்காலின் அளவும் பளீரென்று தெரிந்தன.

    செருப்பையும் மீறிக்கொண்டு பாதத்தின் வளைவு கண்களில் படம் விஜயனுக்கு முன்பு எப்போதோ படித்த ஒரு விசயம் ஞாபகத்தில் மின்னியது.

    சாமுத்ரிகா லட்சணத்தின்படி பெண்கள் நான்கு ஆகையாகப் பிரிக்கலாமாம். 'ஆர்ச்' போல் வளைந்த உள்ளங்கால் 'பத்மினி' ரக பெண்களுக்கு இருக்குமாம். இந்தப் பெண்கள் நடந்தால் பூமியில் பாதத்தின் மேல், கீழ பாகங்கள் பதியுமே தவிர, நடுப்பகுதி படவே படாதாம்.

    பாதமே இவ்வளவு அழகாக இருக்கிறதே, முழுமையாகப் பார்த்தால் எப்படி இருப்பாள்?

    மேற்கொண்டு சிந்திக்கவோ, பார்க்கவோ விடாமல் பஸ் வந்து நின்று பார்வையை மறைக்க, என்ன விபரீத கற்பனை என்று லேசான கோபத்துடன் தன்னைத்தானே கடிந்துகொண்டவன். கூட்டம் நெரிந்த பஸ்ஸில் அவசரமாய்த் தாவி ஏறினான்.

    2

    தனிமை - சுகம்.

    மெளனம் – சுகம்.

    விடிகாலைத் தூக்கம் - சுகம்.

    சோம்பல் - சுகம்.

    விழிப்புக் கண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுக்கையில் கண்களை மூடிப் படுத்தவாறு அதிகாலை சுகங்களைப் பட்டியல் போட்டுக்கொண்டிருந்தவனால் மனசு பூராவும் சந்தோஷப் பூக்கள் பூப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    ஒருக்களித்துப் படுத்துக்கொண்டான். மணி இன்னும் ஆறரைகூட ஆகியிருக்கவில்லை என்றாலும், கோடை நாட்களில் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவதுபோல வானத்தில் ஏறிவிட்ட உதயசூரியன் கதிர்கள் முகத்தை ஆசையுடன் தடவிக்கொடுத்தன.

    தனிமை - சுகம் - என்று மறுபடியும் விஸ்ட் போட நினைத்தபோது அம்மா கூறும் சுலோகம் ஒன்று நெஞ்சுக்குள் எட்டிப் பார்த்துப் புன்னகைத்தது.

    அதரம் மதுரம், வதனம் மதுரம்

    நயனாம் மதுரம், ஸஹிதம் மதுரம்

    ஹ்ருதயம் மதுரம், கமனம் மதுரம்

    மதுராதிபதேரகிலம் மதுரம்.

    'உதடு இனிமை, முகம் இனிமை, கண் இனிமை, சிரிப்பு இனிமை, இதயம் இனிமை, செயல் இனிமை - மதுராபுரி நாய்கனைச் சார்ந்த அனைத்துமே இனிமை.'

    பின்கட்டில் அமர்ந்து பூ கட்டின நாழிகையில், அதிக வெளிச்சம் இல்லாத சமையலறையில் உட்கார

    Enjoying the preview?
    Page 1 of 1