Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravai Thedum Paravai
Uravai Thedum Paravai
Uravai Thedum Paravai
Ebook169 pages2 hours

Uravai Thedum Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாலாவிற்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையில் உறவுகள் அவளைக் கைவிட குடும்பத்தை விட்டு வெளியேறி அவள் என்ன செய்கிறாள்? தனக்கு வந்த அவப்பெயரை துடைத்துக்கொண்டு எப்படி எல்லோரும் போற்றும்படி மாறுகிறாள்? முரட்டு துரைபாண்டி மனிதாபிமானமிக்கவனாய் மாறினானா, இல்லையா?

பாலா, சிவகாமு போன்ற கதாபாத்திரங்களின் மூலம் பெண்களால் சாதிக்க முடியும் என்று அறிய வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580110009123
Uravai Thedum Paravai

Read more from Anuradha Ramanan

Related to Uravai Thedum Paravai

Related ebooks

Reviews for Uravai Thedum Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravai Thedum Paravai - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    உறவைத் தேடும் பறவை

    Uravai Thedum Paravai

    Author :

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more book

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முன்னுரை

    அனும்மாவும் நானும் இந்தக் கதைகளும்...

    அனும்மாவின் கதைகளை அச்சில் ஏறுவதற்கு முன் சுடச்சுட படித்து அனுபவித்த பாக்கியசாலி நான். வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கதைகளைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில் மட்டமற்ற மகிழ்ச்சி எனக்கு.

    அனும்மா கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான, நம்மிடையே நடமாடும் சக மனிதர்கள். அவர்களின் சந்தோஷங்கள், வருத்தங்கள், சோகங்கள், வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், இவற்றைத் தன் எழுத்தில் பிரதிபலிப்பதே அனும்மாவின் வெற்றி ரகசியம்.

    உறவைத் தேடும் பறவை கதையில் வரும் நர்ஸ் பாலா, பொறுப்பில்லாத கணவனின் குடும்பத்திற்காக ஓடாக உழைத்து தேய்பவள்.

    சின்ன வயதில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாததால் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்துவிட்ட முரட்டுக்காளை துரைபாண்டி... மறுநாள் தன்னுடைய கைகள் இரண்டையும் ஆபரேஷன் செய்து

    எடுத்துவிடப் போகிறார்கள் என்று அறிந்ததும் அவன்படும் வேதனை... அந்தக் கைகளால் அவன் அனுபவிக்காத எத்தனை நல்ல விஷயங்களிருக்கிறது என்று நினைக்கிறான். எல்லாவற்றையும் ஸ்பரிசித்துப் பார்க்க வேண்டும் என்று அவன் துடிக்கும்போது நமக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது.

    பாலாவிற்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையில் உறவுகள் அவளைக் கைவிட குடும்பத்தை விட்டு வெளியேறி அவள் என்ன செய்கிறாள்? தனக்கு வந்த அவப்பெயரை துடைத்துக்கொண்டு எப்படி எல்லோரும் போற்றும்படி மாறுகிறாள்?

    முரட்டு துரைபாண்டி மனிதாபிமானமிக்கவனாய் மாறினானா, இல்லையா?

    பாலா, சிவகாமு போன்ற கதாபாத்திரங்களின் மூலம் பெண்களால் சாதிக்க முடியும் என்று அனும்மா மீண்டும் நிரூபிக்கிறார்.

    அன்புடன்

    ஜெயந்தி சுரேஷ்

    1

    தனது சின்னஞ்சிறு பர்ஸைத் தலைக் குப்புறக் கவிழ்த்துப் பார்க்கிறாள் பாலா.

    சுத்தமாய்க் காலி!

    நேற்று - இதே நேரத்தில் முழுசாய் ஒரு நூறு ரூபாய் நோட்டு அந்தப் பர்ஸில் இருந்தது.

    என்ன செலவு?

    ‘காலைல ஆஸ்பத்திரிக்குப் போறப்ப சில்லறையா இருந்த பணத்துல அம்பது பைசா கொடுத்து டிக்கெட் வாங்கினேன். மத்தியானம் ஒரு கப் டீ அதுவும் நர்ஸ் சூஸையம்மா தயவுல. சாயந்திரம் வீட்டுக்கு வரப்ப டாக்டரம்மாவோட காருல வந்திட்டேன். தெருவோரக் கடையில் நாலு முருங்கக்காயும் அரைகிலோ வெங்காயமும் வாங்கினேன். அத்தனைதான். ராத்திரி - வேற எதுவும் செலவில்லையே. எங்கே போயிருக்கும்?’

    பாலா தன்னைச் சுற்றிப் பார்வையைச் சுழல விடுகிறாள்.

    அறையின் சுவரோர மூலையில் கவிழ்ந்து படுத்தபடி குறட்டை விடும் கணவன் ஜெகன்.

    அவனைப் போலவே உருவமும், உடம்பு நிறையச் சோம்பேறித்தனமுமாய்க் கூடத்தில் படுத்துக் கும்பகர்ணனைக் கும்பிடும் ஜெகனின் தம்பி ராஜா.

    கூடத்தின் மற்றொரு மூலையில் போர்வைக்குள் முடங்கிக் கிடக்கும் ஜெகனின் தங்கை சரளா. அந்த விடிகாலைப் பொழுதில்கூடத் தன் மேக்கப்பில் மிகுந்த கவனமாய்க் கையலகக் கண்ணாடியில் ஆயிரம் தடவை அழகு பார்த்துக் கொண்டிருக்கும் ஜெகனின் இளைய சகோதரி - சரளாவின் அக்கா உமா, ஆஸ்பத்திரிக்குக் கிளம்பும் மருமகளுக்காகப் பெண்டாட்டி அவித்து வைத்திருக்கும் இட்லியை, சுவராஸ்யமாய் உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் ஜெகனின் அப்பா ராமையா. மருமகள் கிளம்புவதற்குள் இன்னொரு ஈடு இட்லி வெந்துவிட்டால் தேவலையே எனப் பரபரக்கும் ஜெகனின் அம்மா சிவகாமு.

    இவர்களில் யார் எடுத்திருப்பார்கள்?

    யார் வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். இங்க உள்ள அத்தனை பேருக்கும் ஆயுசு முழுக்கப் பணமுடைதான். பாலா ஒருத்தியின் சம்பாதித்தியத்தில் இவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது.

    இந்த நிமிஷம் இவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தால் அடுத்த நிமிஷத்துக்குள் அத்தனையையும் ஊதியெறிந்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.

    ஆனால் - சம்பாதிக்கும் வழி மட்டும் இவர்களுக்குத் தெரியாது. அதற்கு பாலாதான் வேண்டும்.

    எப்பொழுதாவது இந்த உமா, அண்ணியின் மேலுள்ள எரிச்சல் தாங்காமல், ‘நானும் சம்பாதிக்கிறேன்’ என்று கிளம்புவாள். நிரந்தரமாய் எந்த இடத்திலும் நிலைத்து நிற்கமாட்டாள். மாசம் இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கினால் முந்நூறு ரூபாய்க்குச் செலவு தயாராக இருக்கும் அவளுக்கு.

    அண்ணி, அம்பது ரூபா இருந்தாக் கொடு. அடுத்த மாசம் சம்பளம் வாங்கின உடனே திருப்பிடறேன்...

    இப்படி இவள் பேசுவதைக் கேட்பவர்கள். இவளுக்குக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது சம்பளம் இருக்கும் என்றுதான் நினைப்பார்கள்.

    பாலாவுக்குத்தான் தெரியும் - உமாவுக்கு அடுத்த மாசம் சம்பளம் வருமா வராதா என்பது.

    இருந்தாலும் இதை வெளிப்படையாய்ச் சொல்ல முடியாது, கையில் இருப்பதைக் கொடுத்தே தீர வேண்டிய தர்ம சங்கடமான நிலை.

    இப்படிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி பர்ஸில் வைத்திருக்கும் சில்லறையும் நோட்டுக்களும் மாயமாய் மறைந்து விடுகிறதே.

    இந்தப் பணம், நேற்றே மேட்ரன் புஷ்பாவிற்குக் கொடுத்திருக்க வேண்டியது. அவள் வேலைக்கு வராததால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இன்று வந்தவுடன் கேட்பாள்;

    பாலா, பணம் கொண்டு வந்தியோ...?

    என்ன செய்வாள் பாலா? போன மாசமே திருப்பித் தந்திருக்க வேண்டியது. என்றுமே கொடுத்த கடனை நினைப்பூட்டும் படியான நிலைமைக்கு அவள் ஆளானதில்லை. அவசியமிருந்தாலொழிய யாரிடமும் கை நீட்டி வாங்க மாட்டாள். வாங்கினாலும் இரவு பகலாய்க் கடனை நினைத்தே உருகிப் போவாள்.

    அப்படிப்பட்டவளுக்கு இந்த மாதிரி ஒரு குடும்பம்.

    ஆத்திரம் தொண்டைக் குழிக்குள் முள்ளாய் இம்சிக்க, அத்தை... என்று அவள், சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்துக் குரல் கொடுக்கிறாள்.

    பாலா, சித்த இரேன், அவிச்ச இட்லியெல்லாத்தையும் அந்த மனுஷன் தின்னுட்டு போயிட்டாரு. இதோ, இன்னும் ரெண்டு நிமிசத்துல அடுப்புல இருக்கறதை எடுத்துப் போடறேன். விடிகாலம்பற, இத்தினி சுருக்க இவரு எழுந்திருக்கலைன்னு யாரு அழுவறாங்க? பல்லை விளக்கிட்டு நேரே அடுப்பங்கரைக்கு வந்து தட்டைப் போட்டுக்கிட்டு உட்கார்ந்திடறாரு. வாயைத் திறந்து ஏதாவது சொன்னா துர்வாச முனி மாதிரி கோபம் எட்டுக் கல்லு விட்டெறியுது...

    மருமகளின் காதருகே, ரகசியமாய் - மிக ரகசியமாய் - முணுமுணுக்கிறாள் சிவகாமு.

    பாலாவுக்குத் தெரியும் - கணவன், பல் விளக்கிவிட்டு தெய்வமே என்று வாசலுக்குப் போனாலும் இந்தச் சிவகாமு விடமாட்டாள்.

    ஏங்க, இட்லி சூடா இருக்கு, தின்னுட்டுப் போய் உட்காருங்களேன்.

    இந்த வார்த்தை போதும் ராமையாவுக்கு. சடக்கென மணைப் பலகையைப் போட்டுக்கொண்டு அமர்ந்து விடுவார். உட்கார்ந்தால் இலேசில் எழுந்திருக்க மனசு வராது. மற்றவர்கள் சாப்பிட வேண்டுமே என்கிற நினைப்பும் இராது. சிவகாமு - புருஷனையும் அரை வயிற்றுப் பசியோடு எழுப்ப மனசு வராமல், வேலைக்குக் கிளம்பும் மருமகளையும் பட்டினியாக அனுப்ப மனசில்லாமல் தவியாய்த் தவிப்பாள்.

    ‘இவரை இன்னும் அரை மணி கழிச்சு இலை முன்னாடி உட்கார வச்சா என்னவாம்?’ பாலாவின் நெஞ்சுக்குள் வழக்கமாய் அரும்பும் எரிச்சல்.

    சம்பாதிக்கற பணத்துக்கு வயிறு நிரம்பச் சாப்பிடும் சந்தோஷம்கூட இல்லாமல் என்ன அவதி இது!

    வேறு என்னதான் சுகம் இருக்கிறது இவள் வாழ்க்கையில்?

    தினம் தினம் ஆஸ்பத்திரிக்கு ஓடி, நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு முகம் சுளிக்காமல் சேவை செய்து, ராத்திரி பகல் பாராமல் உழைத்து அலுத்துச் சலித்து வருபவளுக்கு என்னதான் சுகம்...?

    ஜெகனால் பைசாவுக்குப் பிரயோசனமில்லை. என்றைக்கு பாலா இந்த வீட்டுக்குள் அவனது மனைவியாய் அடியெடுத்து வைத்தாளோ, அன்றே தெரிந்துபோன விஷயந்தான்.

    அந்தக் குடும்பத்தில் ராமையாவிலிருந்து கடைக்குட்டி சரளா வரையில் யாருக்குமே உழைப்பில் நம்பிக்கை கிடையாது.

    ஏதோ ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து கெட்ட குடும்பம். இன்று வரையில் பழம் பெருமை பேசியே காலத்தை ஓட்டும் மனிதர்கள்.

    அந்தக் காலத்துல, பர்மாவுல நாலு மாடி பங்களா எங்க அப்பாவோடது. பங்களா வாசல்லே அஞ்சு காரு எப்பவும் தயாரா நிற்கும். சண்டை வந்தாலும் வந்தது. அத்தனை சொத்தும் நாசமாப்போச்சு. அப்படியும்கூட இந்தியாவுக்கு வந்தப்ப எங்க அம்மா இருநூறு பவுனு நகை கொண்டாந்தா. அதை வச்சுக்கிட்டுத்தான் என்னை வளர்த்து ஆளாக்கினா.

    ராமையாவின் தினசரி ராமாயணம் இது. தான் பெரிய இடத்துப் பிள்ளை என்றும், தன்னால் ஒருவனுக்கு அடிமையாய் வேலை செய்து பிழைப்பதென்பது முடியாது என்றும், தங்களது வம்சத்திலேயே எவனும் கைகட்டிச் சேவகம் செய்ததில்லை என்றும் பீற்றிக் கொள்வதுதான் அவரது நித்தியப் பொழுதுபோக்கு.

    ஜெகனும், மற்ற அவரது அருமைச் செல்வ புத்திரர்களும் தங்களின் மூதாதையரின் பெருமைகளை அப்பாவின் வாய் வழியாகக் கேட்டுக்கேட்டே உடம்பில் திமிரேறிக் கிடப்பதில் வியப்பேதும் இல்லை.

    இந்தாம்மா காலையில் செஞ்ச குழம்புதானே இது? தூக்கிப் பிச்சைக்காரனுக்குப் போடு. ராத்திரி புதுசாச் சமைக்கறதை விட வேற என்னத்தைப் பெரிசாப் புரட்டறீங்க, உம்? காலையில் செஞ்சது எதையும் ராத்திரி வரைக்கும் வச்சுக்காதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதே உனக்கு...

    ஜெகன், பிரமாதமாய்த் தாயிடம் கோபிப்பதை கல்யாணமான புதிதில் பாலா பார்த்து வியந்திருக்கிறாள்.

    "நல்லாத்தானேடா இருக்கு? இந்தா பாலா,

    Enjoying the preview?
    Page 1 of 1