Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathodu Oru Kaadhal Kathai
Kaathodu Oru Kaadhal Kathai
Kaathodu Oru Kaadhal Kathai
Ebook133 pages1 hour

Kaathodu Oru Kaadhal Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரகுராமனை திருமணம் செய்து கொண்டு சௌக்கியமாக இருக்கவேண்டிய சீதா, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் எப்படி நொறுங்கிப் போகிறாள்... அதிலிருந்து மீண்டு அவளுக்குப் பொருத்தமான ரகுராமனுடன் இணைந்தாளா? நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580110009131
Kaathodu Oru Kaadhal Kathai

Read more from Anuradha Ramanan

Related to Kaathodu Oru Kaadhal Kathai

Related ebooks

Reviews for Kaathodu Oru Kaadhal Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathodu Oru Kaadhal Kathai - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதோடு ஒரு காதல் கதை

    Kaathodu Oru Kaadhal Kathai

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை

    அனும்மாவும் நானும் இந்தக் கதைகளும்...

    அனும்மாவின் கதைகளை அச்சில் ஏறுவதற்கு முன் சுடச்சுடப் படித்து அனுபவித்த பாக்கியசாலி நான்.

    அனும்மாவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான, நம்மிடையே நடமாடும் சக மனிதர்கள்... அவர்களுக்கு ஏற்படும் சந்தோஷங்கள், வருத்தங்கள், சோகங்கள், வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், இவற்றை அவர் எழுதும் கதைகளில் படிக்கும்போது நேரில் பார்ப்பது போல் உணர முடியும்.

    படிப்பவர்களுக்கு, அவர்களையோ, அவர்களை சேர்ந்தவர்களையோ கண்டிப்பாக ஞாபகப்படுத்தும். மனிதர்களை, அவர்களின் போராட்டங்களை இவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் சொல்ல முடியுமா என்று வியந்திருக்கிறேன்.

    பெண்களை மையப்படுத்தி எழுதும் கதைகளென்றால் அனும்மாவுக்கு அல்வா சாப்பிடுவது போல... பெண்களால் சாதிக்க முடியும், அவர்களால் சோதனைகளையும் சாதனைகளாக்கிக் காட்ட முடியும் என்று நம்பியது மட்டுமில்லாமல் அதற்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.

    உறவு விட்டுப்போகக்கூடாது என்பதற்காக வாழப்போகிறவர்களின் விருப்பத்தைக் கேட்காமல் இருவருக்கும் ஒத்துப் போகுமா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பெரியவர்கள் தீர்மானம் செய்யும் திருமணங்கள், சில சமயங்களில் எவ்வளவு துன்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை சமுதாயக் கண்ணோட்டத்துடன் எழுதியிருக்கிறார்.

    ரகுராமனை திருமணம் செய்துகொண்டு சௌக்கியமாக இருக்கவேண்டிய சீதா, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் எப்படி நொறுக்கிப் போகிறாள்... அதிலிருந்து மீண்டு அவளுக்குப் பொருத்தமான ரகுராமனுடன் இணைந்தாளா? நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

    பலவிதமான குணாதிசயங்கள் கொண்ட பெண் கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருக்கும் இந்த ‘காதோடு ஒரு காதல் கதை’யில் அமைதியும் அடக்கமும் உருவான சீதா, அதிர்ந்து பேசத் தெரியாத அன்னபூரணி, திமிரும் தைரியமும் கலந்த சுமதி, சுயநலமே உருவான லட்சுமி பாட்டி, ரங்கநாயகி இவர்களுடன் நாமும் அந்த குடும்பத்தில் ஒருவராக வாழ்வது போல ஒரு உணர்வு...

    வெகுநாட்களுக்குப் பிறகு அனும்மா எழுதிய இந்த கதையைப் படிக்கும் போது முப்பது வருடங்களுக்கு முன்னால் அனும்மாவுடன் சேர்ந்து ஒரு நீண்ட நடை பயணம் சென்று வந்த அனுபவத்தை உணர்ந்தேன்.

    அன்புடன்

    ஜெயந்தி சுரேஷ்

    1

    விழிப்பு வந்த பின்பும் படுக்கையில் புரள்வதில் ஒரு சுகம் இருக்கிறது...

    அதுவும் இருள் பிரியாத விடிகாலை ஐந்து மணியிலிருந்து - ஐந்தரைவரையில் உள்ள நேரம் இருக்கிறதே... பிரம்மமுகூர்த்தம்!

    புது மாப்பிள்ளை, பெண்டாட்டியைச் சுற்றிச் சுற்றி வருவதுபோல, தூக்கம் கண்ணில் வட்டமிட...

    புழக்கடையில் ராமநாதன் பாய்லர் பற்றவைப்பதும், சடசடவென பொறி பறப்பதும், ரங்கநாயகியின் கை மணத்தில் புறப்படும் காப்பி வாசனை அந்தத் தெருவையே பள்ளியெழுப்புவதும், எதிர் வீட்டு பாட்டு டீச்சர் ஒரு நாளையப்போல பூபாளத்தில் பொழுது புலர்ந்தது... புள்ளினம் ஆர்த்தன என்று பாடுவதும்...

    இந்த இடத்தில் சீதா சிந்தனை ஓட்டத்தைச் சற்று நிறுத்தி, தனக்குள் சிரித்துக்கொள்கிறாள்...

    ‘பூபாளத்துல வேற பாட்டா இல்லே? பாவம்! பாட்டு டீச்சருக்கு வேற பாட்டு ஒண்ணும் இந்த ராகத்துல பாடமாகலை போலிருக்கு!’

    சீதா, எழுந்திருக்காமல் படுத்திருப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது.

    அப்பா, இப்பொழுது காப்பிக்காக சமையலறையில் இருப்பார். சீதாவுக்குத் தெரியும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கிடைக்கிற தனிமையான நேரமே அதுதான் என்பது.

    அவர்கள் ஒன்றும் கொஞ்சி, குலாவப் போவதில்லை. அது மாதிரியான அற்புதமான தருணங்களை எல்லாம் அவர்கள் என்றைக்கோ தூக்கி எறிந்தாகிவிட்டது. சீதாவுக்குத் தெரிந்து அவள் அப்பா, அம்மாவிடம் சீண்டியிருக்கிறார்...

    ரங்கம், கன்னத்துல என்ன கறுப்பா... கரியா?

    காஸ் அடுப்புல கரி எங்கேயிருந்து வந்தது?

    இல்லேம்மா... அந்த இடது கன்னத்துல பாரு! அங்கே இல்லே. காதோரமா... இங்கே வா, நான் துடைச்சுவிடறேன்!

    அவர் கன்னத்தைத் துடைப்பதுபோல அழுத்தித் தேய்ப்பதும், அம்மா முகமெல்லாம் சிவப்பாய், மூக்குத்தியின் வைர மினுக்கலில்கூட வெட்கம் பளீரிட, முகத்தை நொடித்துக்கொண்டு உள்ளே ஓடுவதும்...

    பதினைந்து வயது சீதாவுக்குப் புரிய நியாயமில்லை. என்றாலும், இருபத்தியொரு வயசு சீதாவுக்குப் புரியாமல் இல்லையே!

    ஆ... இது காதல்! குளித்துவிட்டு நடந்து போகும் மனைவியின் ஈரப் பாதங்களை, தன் பாதங்களால் ஒற்றி நடப்பதில்கூட கணவனின் முகத்தில் ஒரு கர்வம் சாயல் காட்டும்.

    ‘என்னுடையவள்...’

    ‘எனக்காக உள்ளே காபி கலக்கிறாள்...’

    ‘அவளுக்குத் தெரியும், எனக்கு டிகாக்ஷன் தூக்கலாகவும், பால் குறைவாகவும் சேர்த்துக் கலக்க வேண்டுமென்பது...’

    ‘அவளுக்குத் தெரியும், காப்பியில் சர்க்கரையின் ஆதிக்கம் அதிகம் இருக்கவேண்டுமென்பது...’

    ‘அவளுக்குத் தெரியும், எனக்குத் தரும் காப்பி நுரைததும்ப, குடிக்கும் பதத்தில் இருக்கவேண்டும் என்பது...’

    ‘எனக்கு ஆற்றிக் குடிக்கத் தெரியாது. தம்ளரில் பாதியும், டபராவில் மீதியுமாய் வைத்துக் குடிக்கத் தெரியாது. இன்னும் எவ்வளவோ விஷயங்கள் தெரியாது...’

    ‘சகலமும் அவளே...’

    ***

    சீதா மல்லாந்து படுத்து கால்மேல் கால் போட்டு, இரு கைகளையும் பின் தலையில் கோர்த்து கண்மூடிப் படுத்திருக்கிறாள்.

    ‘அப்பாவும், அம்மாவும் சிரிப்பை மறந்தது தன்னால்தான்... சிரிப்பை மறந்துவிட்டார்களா? இல்லை, சிரிக்க பயப்படுகிறார்களா?’ நெஞ்சுக்குள் சின்னதாய் முள் நெருடல்...

    பதினெட்டு வயசில் கல்யாணம் செய்து வைக்கவில்லை என்று யார் அழுதார்கள்?

    என்ன அவசரம்? கல்லூரியில் இரண்டாம் வருடப் படிப்பே முடியவில்லை...

    இதோ, கூடத்தில் பாய் விரித்து, மெத்தை போட்டு, மெத்தை மேல் கம்பளி போட்டு, பக்கத்தில் வெந்நீர் ஊற்றிய ஃபிளாஸ்க்கும், விக்ஸ் பாட்டிலுமாகப் படுத்து நிம்மதியாய்த் தூங்குகிறாளே... சீதாவின் பாட்டி, ராமநாதனின் அம்மா லட்சுமி, அவள் அழுதாள்...

    அடேய் ராமநாதா! உறவு விட்டுப் போகக்கூடாதுடா... அன்னத்துக்கும் நம்மைவிட்டா வேற யார் இருக்கா? அப்பிராணி... சாது... புதுசா ஒரு நாட்டுப் பொண் வந்து அவளை ஆட்டி வைக்கிறதைவிட, நம்ம சீதாவைக் கொடுத்திடலாம். உறவும் வளரும். மாமியார்ங்கறதைவிட, நம்ம அத்தையாச்சேன்னு நினைக்கத்தோணும்.

    ராமநாதனின் அக்கா, அன்னபூரணி அழுதாள்...

    திலீபன் படிப்புக்காக அமெரிக்கா போறேன்; ஆஸ்திரேலியா போறேன்னு சொல்லிட்டிருக்கான். ஏற்கெனவே இப்படிச் சொல்லித்தான் என்னை விட்டுட்டுப் போன இவன் அப்பா திரும்பியே வரல்லை... ஆச்சு; இப்ப இவன் கிளம்பறான். பேசாம ஒரு கல்யாணத்தை செஞ்சு, சீதாவையும் அவன்கூட அனுப்பிட்டேன்னு வச்சுக்க... நானும் அம்மாவும் நிம்மதியா கண்ணை மூடுவோம். இதுக்கு அப்புறம் என்ன இருக்கு எங்களுக்கு?

    சீதாவுக்கு இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

    மரணம் என்ன, அத்தனை சுலபமானதா?

    "இந்தாப்பா எமதர்மராஜா! என்

    Enjoying the preview?
    Page 1 of 1