Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thavari Podum Thalam
Thavari Podum Thalam
Thavari Podum Thalam
Ebook109 pages2 hours

Thavari Podum Thalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Indhumathi
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466718
Thavari Podum Thalam

Read more from Indhumathi

Related to Thavari Podum Thalam

Related ebooks

Related categories

Reviews for Thavari Podum Thalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thavari Podum Thalam - Indhumathi

    1

    அந்த அநாதை ஆசிரமம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு... தமிழும், ஆங்கிலமும் கலந்த ‘கோரஸ்’ குரல்கள் அவ்வப்போது உயர்ந்து கேட்டன. சற்றுத் தள்ளி நின்றிருந்த பெரிய ஆலமரத்தடியிலிருந்து தறி நெய்கிற சத்தம் இடைவிடாமல் ஓடுகிற ரெயிலின் தொனியாக வந்து கொண்டிருந்தது. அதை அடுத்து வரிசையாகத் தையல் வகுப்பு, பாட்டு வகுப்பு, தச்சுப்பட்டறை, அச்சடிக்கும் இடம், ‘என்ஜினீயரிங் செக்ஷன்’ என்று எல்லாமே இயங்கிக்கொண்டிருக்க... ஒவ்வொன்றாக பார்வையிட்டுவிட்டு கடைசியாக நூலகத்தை அடைந்தாள் அருணா. அவள் வருவதற்கு முன்னரே புதிதாக வெளியிடப்பட்ட புத்தகங்களோடு காத்து நின்றார் அச்சக ‘சூப்பர்வைசர்’ கணேசன்.

    என்னம்மா... இன்னிக்கு ‘லேட்’? - சிரித்துக்கொண்டே கேட்டார்.

    கொஞ்சம் நேரமாயிடுச்சு சார் - அருணாவும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள்.

    இதுவரை அந்த ஆசிரமத்தில் யாரும் சிடுசிடுத்து அருணா பார்த்ததில்லை. எத்தனை கோபமானாலும் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களை முகம் மாறாமல் வெளிக்காட்டப் பழக்கி இருந்தார் சேதுரத்தினம் பிள்ளை. முகத்தை விகாரமாக்கி, ஆக்ரோஷமாகக் கத்தி கோபத்தை வெளிப்படுத்துவது அநாகரிகமாக பழக்கம் என்று சொல்லிக் கொடுத்திருந்தார்.

    அது மட்டும்தானா சொல்லிக் கொடுத்தது? நேர்மை, நல்ல நடத்தை, கூடுமான வரை பொய் பேசாமை, அகிம்சை எல்லாம் கற்றுத் தந்தவர். தீவிரமான காந்தியவாதி. விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்றவர். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு இதே வேதாரண்யத்தையும், ஆங்கிலேயர்களையும் கலக்கினவர்.

    காந்தியின் மறைவுக்குப் பின் அவர் பெயரில் ஆசிரமம் ஆரம்பித்தபோது எட்டே எட்டு அநாதைச் சிறுமிகளோடு ஓர் ஓலைக் கொட்டகையின் கீழ் நடந்தது. தற்போது தனித் தனியாக ஓடு வேய்ந்த கூரை. நானூறு மாணவிகள். கிட்டத்தட்ட சின்ன பல்கலைக் கழகமாகவே உருமாறி இருந்தது. அத்தனைக்கும் காரணம் சேதுரத்தினம். அவரது தனி மனித உழைப்பு; மனத்திடம்.

    புஸ்தகங்களை எண்ணி குறித்துவிட்டு, அவர் கொண்டு வந்த தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, திருவாசகப் பிரதிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள். அடுக்கிக்கொண்டிருந்தபோது நேற்று பாதியில் படித்து வைத்திருந்த ஜானகி ராமனின் ‘அன்பே ஆரமுதே’யை எடுத்து மேசை ‘டிராயரில்’ தனியாக வைத்தாள். புத்தக அலமாரியில் இருந்தால் அதை வேறு யாரும் எடுத்துக்கொண்டு போய்விடுகிற வாய்ப்பு உண்டு. பள்ளி ஆசிரியைகள் யாராவது எடுத்தபின், தான் பாதி படித்துக்கொண்டிருப்பதை இவளால் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது மரியாதை ஆகாது.

    இவள் அந்த ஆசிரியைகளின் கீழ் படித்தவள். பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டு, ஆசிரமத்திலேயே வேலை பார்ப்பவள். வேலை என்றால் இதுதான் என்று பிரித்துச் சொல்ல முடியாது. தினமும் ஆசிரம ‘வார்டன்’ எங்கே அனுப்புகிறாளோ... அங்கே போய் வேலை பார்க்க வேண்டியதுதான். சமையலறையில் இருந்து ஆசிரம வங்கிக் கணக்கு வரை அத்தனை வேலைகளும் இவளைப் போல் படிப்பை முடித்துவிட்டு அங்கேயே இருக்கிற ஏனைய பெண்களுக்கும் தெரியும்.

    இவள் வயதில் கிட்டத்தட்ட இருபத்தைந்து, முப்பது பெண்கள் இருக்கிறார்கள். சேதுரத்தினம் பிள்ளையின் கவலையெல்லாம் இவர்கள்தானே தவிர ஆசிரமத்தில் உள்ள மற்ற பெண்கள் இல்லை. பொதுவாக இவர்களை வெளியில் எங்கும் வேலைக்கு அவர் அனுப்புவதில்லை. மேல் படிப்புக்கும் விடுவதில்லை.

    மேலே படிக்க வைக்க வேண்டுமானால் சென்னைக்கு அனுப்ப வேண்டும். அல்லது மயிலாடுதுறை, தஞ்சாவூர் என்று கல்லூரி இருக்கிற இடங்களுக்குப் போக வேண்டும். முதலாவதாக ஒவ்வொரு ஆண்டும் இப்படி இருபது, முப்பது பேரை வெளியில் அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்க ஆசிரமத்துக்குப் பண வசதி போதாது. இரண்டாவதாக... வயது வந்த பெண்களை வெளியில் அனுப்பிவிட்டு தவித்துக்கொண்டிருக்கிற சக்தியும் இல்லை.

    அதன் காரணமாக ஆசிரமத்துப் பெண்களை அவர் மேலே படிக்க விடுவதில்லை. ஓரிருவர் மேல் படிப்புக்கு ஆசைப்பட்டுத் தயங்கித் தயங்கி அவரது அறைக்குள் நுழைந்து தடுமாறி நின்றபோது... அவர்கள் எதற்காக தன் அறைவரை வந்திருக்கிறார்கள் என்ற காரணம் புரியாதவராக மூக்கில் சரிந்த மூக்குக் கண்ணாடியை உயர்த்தி விட்டுக்கொண்டு நிமிர்ந்து அவர்களைக் கனிவாகப் பார்த்தார்.

    முன்பு ஒரு முறை தீபாவளி தருணத்தில் இப்படித்தான் தாவணி போட்ட பத்துப் பதினைந்து பெண்கள் அவரது அறை வாசலை முற்றுகையிட்டனர். இவர் காரணம் கேட்டபோது, ‘இந்தத் தீபாவளிக்கும் எங்களுக்கு நாங்களே நெய்த கதர்த் துணிதானாப்பா...?’- என்று தயங்கித் தயங்கிக் அவர்கள் கேட்க, - சேதுரத்தினம் பிள்ளை ஒரு விநாடி தன் உடையைக் குனிந்து பார்த்துக்கொண்டார். உள்ளத்துக்கு நேர் எதிரான முரட்டு வெள்ளைக் கதர் சட்டை, வெள்ளை கதர் வேட்டி, தன் வீட்டில் உள்ளவர்களை நினைத்துப் பார்த்தார். மனைவி மீனாட்சி அம்மையில் இருந்து வேலைக்காரி முனியம்மா வரை கதர் துணிதான். ஒரே மகள் பானுமதி தன் கல்யாணத்துக்கு கதர் அல்லாது ஒரு ‘ஷிபான்’ புடவையாவது எடுத்துத் தர கெஞ்சினாள். அப்போதும் சேதுரத்தினம் உறுதியாகத்தான் இருந்தார். ஒரு பெண்... அதுவும் கல்யாணமாகிப் போய்விடப் போகிறவள் என்பதற்காகத் தன்னை கொள்கைப் பிடிப்பில் இருந்து விலகிவிடவில்லை.

    "இதோ பாரும்மா பானுமதி. நானோ... என் குடும்பத்தவர்களோ... ஆசிரமத்தைச் சார்ந்தவர்களோ கதர்தான் உடுத்துறதுங்கறது நான் எடுத்துக்கிட்ட சங்கல்பம். அதுவும் காந்திஜி எதிர்ல செஞ்சு கொடுத்த சத்தியம். அதை உனக்காக இப்போ மீற முடியாதும்மா! எனக்கு நீ வேற... ஆசிரமத்துப் பெண்கள் வேற இல்ல.

    உனக்கு விட்டுக் கொடுத்தால் அந்தப் பெண்களுக்கும் விட்டுக் கொடுக்கணும். இதுவரை என் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்த நீ, கல்யாணம் வரைக்கும் கொடுப்பாய் என நினைக்கிறேன். கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளையோட விருப்பம். அவருக்கு கதர் இஷ்டமில்லை என்றால் வற்புறுத்தற உரிமை எனக்கு இல்லையம்மா."

    கல்யாணத்தில்கூட அத்தனை பேருக்கும் கதர் துணிதான் அவர் எடுத்தார். மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளை அழைப்பு, முகூர்த்தம் எல்லாவற்றுக்கும் கதர்தான்!

    அப்படி இருக்கிறபோது... அப்போது அந்தப் பெண்கள் வந்து நின்று கேட்டது அவருக்கு ஆச்சரியத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1