Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannan Varum Neramithu
Kannan Varum Neramithu
Kannan Varum Neramithu
Ebook123 pages37 minutes

Kannan Varum Neramithu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466824
Kannan Varum Neramithu

Read more from R.Sumathi

Related to Kannan Varum Neramithu

Related ebooks

Reviews for Kannan Varum Neramithu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannan Varum Neramithu - R.Sumathi

    1

    விடிந்தால் தீபாவளி. ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. திரும்பிய இடமெல்லாம் தீபாவளியின் ஒளிவெள்ளம், பரபரப்பு, ஆர்ப்பரிப்பு. கொண்டாட்ட குதூகலிப்பு.

    அந்த முதியோர் இல்லம் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதுதான் ஆச்சரியம்.

    தீபாவளி என்றால் குழந்தைகள்தான் கொண்டாட்டமாகயிருப்பார்கள் என்பதை பொய்யாக்கிவிட்டிருந்தது அங்கிருந்த முதியோர்களின் உற்சாகமும் உள்ள குதூகலிப்பும்.

    தன் - அறையில் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த பிரபாவதிக்கு உண்மையில் ஆச்சரியமாகயிருந்தது.

    சிறு குழந்தைகளைப் போல் தீபாவளியை வரவேற்கத் தயாராகயிருக்கும் அவர்களுடைய உற்சாகமும் சுறுசுறுப்பும் நிஜமாகவே உண்மைதானா என்று தோன்றியது.

    ஏனென்றால் -

    அங்கிருக்கும் வயதானவர்களில் அவளும் ஒருத்தி. அவளால் அப்படி இருக்க முடியவில்லை.

    இவர்களெல்லாம் சந்தோஷமாக எப்படியிருக்கிறார்கள்?

    எப்படியிருக்க முடிகிறது? நிச்சயமாக இருக்க முடியாது.

    நிச்சயம் இவையெல்லாம் வெறும் நடிப்புத்தான். தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

    உற்சாகம், மனதைரியம் என்ற சட்டையை மாட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

    பொய்யான பேச்சு. கற்பனை வாழ்க்கை இவற்றிலேயே உழலும் கிழடுகள்.

    இல்லாவிட்டால் செண்பகம் இந்த அறுபது வயதில் சமையலறையில் மைசூர் பாக் கிளறிக் கொண்டிருப்பாளா?

    அவளுடைய கணவர் சுந்தரேஸ்வரர்... அதோ... தோட்டத்தில் தன்னை ஒத்த கிழங்களை சுற்றி உட்கார வைத்துக்கொண்டு ராணுவத்தில் தான் ஆற்றிய சாதனைகளைப் பட்டியல் போட்டுக் கொண்டிருப்பாரா?

    பெயர் சொல்ல ஒரு பிள்ளை கூட இல்லை.

    இவர் ராணுவத்தில் சாதனை புரிந்து என்னாகப் போகிறது? புருஷனும் பொண்டாட்டியும் சம்பாதித்ததையெல்லாம், நமக்கு பிள்ளை இல்லைன்னா என்ன? அண்ணனோட பிள்ளைகளே நம்பிள்ளைகள், தம்பியோட பிள்ளைகளே நம் பிள்ளைகள் என அவர்களை ஊட்டி ஊட்டி வளர்த்து, பார்த்து பார்த்து படிக்க வைத்து, தேடித் தேடி வேலையில் அமர்த்தி இறுதியில் இவர்கள் வந்து சேர்ந்திருக்கும் இடம் இந்த முதியோர் இல்லம்.

    எஞ்சிய பணம் கையில் இருக்கிறது. கடைசிவரை இந்த முதியோர் இல்லத்தில் வசதியாக வாழலாம்.

    ஆனால், மனதில் மிஞ்சியிருப்பது வெறுமையும் விரக்தியும்.

    எல்லாவற்றையும் உறிஞ்சிக்கொண்ட அண்ணன் பிள்ளைகளும் தம்பி பிள்ளைகளும் வந்து பார்ப்பது கூட இல்லை.

    அண்ணன் பிள்ளைகள், தம்பி பிள்ளைகள் அடுத்தவர் பிள்ளைகள்தானே?

    சொந்த பிள்ளைகளிடமே பாசத்தை எதிர்பார்க்க முடியாத போது மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

    சமையலறையிலிருந்து மைசூர் பாக் செய்யும் வாசனை மூக்கைத் துளைத்தது.

    உடம்பு முழுவதும் சுகர். ஒரு துணுக்கைக் கிள்ளி வாயில் போட முடியாது. ஆனால் மூச்சைப் பிடித்துக்கொண்டு மைசூர் பாக்கை கிளறிக் கொண்டிருக்கிறாள் செண்பகம்.

    இவள் மட்டுமே...

    உட்கார்ந்த இடத்திலிருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கூடத்தில் அமர்ந்து உற்சாகமாக பேசி சிரித்தபடி மற்ற பெண்மணிகளும் லட்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

    ஐம்பத்தைந்துக்கு மேல் வயதாகிவிட்ட அவர்களில் அனைவருக்கும் சுகர், பி.பி. என ஏதாவது ஒன்று சொந்தமாகயிருக்கிறது.

    ஒரு பூந்தியைக்கூட வாயில் எடுத்துப் போடாமல் சிரத்தையாக லட்டு பிடிக்கின்றனர்.

    கொஞ்சம் எடுத்து வாயில் போடலாம் என்று எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் இந்த வயசான காலத்தில் சுகர், பி.பீ ஏறி மயக்கம் போட்டு விழுந்தால் கவனிக்க யார் இருக்கிறார் என்ற கவலையிலேயே வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்தும் நிலை.

    ச்சை... என்ன வாழ்க்கையிது. பிரபாவதிக்கு எரிச்சலாகயிருந்தது.

    அவளைப் பொறுத்தவரை இது ஒரு ஜெயில். மற்றவர்களெல்லாம் சாதாரணமாகயிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கையிலேயே இப்பொழுதுதான் நிம்மதியை அனுபவிப்பதாக கூறுகின்றனர்.

    எல்லாம் நடிப்பு.

    பிரபாவதியக்கா...

    செண்பகத்தின் குரல்தான்.

    அதற்குள் மைசூர் பாக் செய்து முடித்துவிட்டாளா என்ன?

    அக்கா... அக்கா கூப்பிட்டபடியே உள்ளே வந்தாள் செண்பகம்.

    ‘என்னைவிட ரெண்டு வயசு மூத்தவள். ஏதோ வம்சாவழி பயனாக நிறைய தலைமுடி நரைக்கவில்லை. பிள்ளையே பெற்றுக் கொள்ளாததால் இந்த வயதிலும் கட்டுக்கலையாத உடம்பு, அதற்காக மனதில் பதினாறு வயதுப் பெண் என்ற எண்ணமா? அக்காவாம் அக்கா.’

    மனதிற்குள் சிடுசிடுத்தாள் பிரபாவதி.

    வயதிற்கான சோர்வை கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல் சிரிப்பும் பேச்சுமாய் பருவப் பெண்ணைப் போல் வளையவரும் செண்பகத்தை எல்லோருக்கும் பிடிக்கும்.

    பிரபாவதி மட்டும் ‘ரொம்பத்தான் ஆடறா’ என மனதில் நினைப்பாள்.

    அக்கா... மைசூர் பாக்கை கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பார் என்று கையிலிருந்த தட்டை நீட்டினாள்.

    ஏற்கனவே உடம்பு பூரா சுகர். இதைக் கொடுத்து என்னை பரலோகத்திற்கு அனுப்பப் பார்க்கறியா? சிரிப்பும் முறைப்பும் முகத்தில் படர அவளைப் பார்த்தாள்.

    அக்கா... ரொம்ப கட்டுப்பாடாயிருந்தா வாழ்க்கையை ரசிக்க முடியாது. கொஞ்சம் சாப்பிடுக்கா.

    இந்த கிழட்டு வயசில் அனாதைமாதிரி உறவுகள் யாரும் இல்லாமல் இந்த ஹோமில் இருந்து கொண்டு வாழ்க்கையில் எதை ரசிக்க முடியும்?

    மனசோர்வுடன், உன் புருஷனுக்கு கொண்டு போய் கொடு. ஒரு மணி நேரமா தன் மிலிட்ரி அனுபவங்களை சொல்லி சொல்லி டயர்டாயிருப்பார். அவருக்குத்தான் க்ளுகோஸ் தேவை.

    இந்த தட்டை அவர்கிட்ட கொடுத்தா அத்தனையையும் சாப்பிட்டுடுவார். மிலிட்ரி உடம்பு இல்லையா? சுகர் பி.பி. இந்த வயசுவரைக்கும் எதுவும் இல்லை. அதனால அவருக்கு பிடிச்ச மைசூர் பாக்கை ஒவ்வொரு தீபாவளிக்கும் தவறாம செய்துடுவேன். குழந்தைமாதிரி ரசிச்சு ரசிச்சு சாப்பிடுவார். ரொம்ப டேஸ்ட்டாயிருந்ததுன்னு வச்சுக்க புதுமாப்பிள்ளை மாதிரி என் கன்னத்தைப் புடிச்சு கிள்ளிடுவார்.

    அந்த வயதிலும் கன்னம் சிவக்க செண்பகம் மயக்கமாக சிரிக்க, ‘வெட்கம் கெட்ட கிழவி. இந்த வயதிலும் குசும்பைப் பாரு. புருஷனோட லீலைகளை வெட்கமில்லாம பேசறா. புள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்ட கதையா புள்ளைங்களெல்லாம் கைவிட்டவர்கள் இருக்கற இந்த ஹோம்ல இந்த கிழவி துள்ளி விளையாடறாள்.’

    புருஷன் இருக்கற வரைக்கும்தான் நமக்கு மதிப்பு, மரியாதை எல்லாம். இல்லையாக்கா...

    ஆமாம். நீ போய் மிலிட்ரிக்கு மைசூர்பாக் கொடு. அவளை அறையிலிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தாள்.

    அக்கா... எல்லாரும் உற்சாகமாயிருக்காங்க. நீ ஏன் ரூமுக்குள்ளயே அடைஞ்சுக்கிடக்கறே. அவங்களோட சேர்ந்து லட்டு பிடிக்கலாம் இல்லையா?

    போகிற போக்கில் உத்தரவு போட்டுவிட்டுப் போனதோடல்லாமல் லட்டு பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் சுசீலா... பிரபாவதியக்காவை போய் அழைச்சுட்டு வந்து இங்க உட்கார வை. சும்மா ரூமுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு எதையாவது யோசிச்சுக்கிட்டு டென்ஷனாயிருக்கா. போ... போய் கூட்டிக்கிட்டு வா. - சொல்லிவிட்டு மிலிட்ரிக்கு மைசூர்பாக் கொடுக்கவும் கன்னத்தில் கிள்ளு வாங்கும் சந்தோஷத்துடனும் தோட்டத்திற்குச் சென்றாள்.

    சுசீலா எழுந்திருப்பதற்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1