Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Nappinnai Pesukiren
Naan Nappinnai Pesukiren
Naan Nappinnai Pesukiren
Ebook146 pages1 hour

Naan Nappinnai Pesukiren

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466770
Naan Nappinnai Pesukiren

Read more from Mekala Chitravel

Related authors

Related to Naan Nappinnai Pesukiren

Related ebooks

Reviews for Naan Nappinnai Pesukiren

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Nappinnai Pesukiren - Mekala Chitravel

    1

    நிலவுப் பெண், நட்சத்திரத் தோழிகளோடு நீராட வருமுன் வானக் காதலன் மேகக் குளத்தை தயார் செய்யும் முன் மாலைப் பொழுது.

    வேலை நேரம் முடியறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலயே அனுமதி வாங்கிண்டு வீட்டுக்குக் கிளம்பிட்டேன். அரசுப் பேருந்து நிலையத்துக்கு நடையை எட்டிப் போடறேன்.

    பள்ளிக்கூடம் விடற நேரமானதால் பேருந்தில் கூட்டம் நெரியறது. வேகமா ஏறினப்ப ஒரு கால் செருப்போட படியில் மாட்டிண்டது. நான் தவிக்கறதைப் பார்த்துட்டு யாரோ ஒருத்தர் கையைப் பிடிச்சு இழுத்து உள்ளே தள்றார், நகர்ந்து உள்ளே போறேன். அடுத்தவா உடம்பு மேல படறதெல்லாம் ஒரு பொருட்டாவே தோணலை.

    வீட்டுல அம்மா என்ன பண்ணிண்டிருக்காளோன்னு பதைப்பா இருக்கு. பானு அவளை நல்லா பார்த்துக்கலைங்கறது மட்டும் புரியது. நேத்து கன்னத்தில் ரத்தம் காஞ்சு காயமா இருந்தது. பானுதான் கிள்ளிருப்பா. அவகிட்ட என்னடின்னு கேட்டா உடனே ஒரு ஒப்பாரி வைப்பா.

    அதனால முடிஞ்சவரை நாமே பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிண்டு இன்னிக்கு சீக்கிரமே ஓடி வரேன். படியேறி வந்த என்னைப் பார்த்ததும் பானு படபடன்னு பொரியறா.

    வாடிம்மா மகாராணி... வந்து இந்தத் துன்பத்தைப் பாரு. இந்தப் பைத்தியத்தை என்னால சமாளிக்க முடியலை. சாப்பிடறதுக்கு ஒருமணி நேரமா படுத்தி எடுக்கறா. என்னால இனிமே முடியாது. நீயே பார்த்துக்கோ.

    பானு கையிலிருந்த தட்டை தடால்னு கீழ போடறா. எனக்கு அவமேல கோபம் வர்றது.

    என்னடி இப்படி அலுத்துக்கற... அம்மா தெரிஞ்சு செய்யலியேடி... நாமதான் கொஞ்சம் அனுசரிக்கணும். நாம சின்னவாளா இருந்தப்ப அவ எத்தனை செய்திருப்பா... கொஞ்சம் நன்னியா நினைக்கணும்டி...

    பானு ஆங்காரமா கத்தறா.

    ஆமா நான் நன்னி கெட்டவதான். உனக்கென்ன பேசிடற. காலையில் எட்டு மணிக்கு வெளியே போறவ அந்தி நேரம் வர்ற... பகல் முழுசும் இவளோட நாந்தானே மல்லுக்கட்ட வேண்டியிருக்கு. இந்தப் பைத்தியத்தோட மல்லாடி, மல்லாடி நானும் பைத்தியமாகிடுவேனோன்னு பயமா இருக்கு...

    சரிடி... இனிமே நான் சாயங்காலம் சீக்கிரமே வந்துடறேன். நீபோ. நான் அம்மாவைப் பார்த்துக்கறேன்.

    பானு முணுமுணுத்துண்டே உள்ளே போறா. நான் அம்மாவைப் பார்த்துச் சிரிக்கிறேன்.

    என்னம்மா இது கோலம். சாப்பிடறதுக்கெல்லாம் ஏம்மா அடம் பண்றே. மொகமெல்லாம் சாதம் ஈஷிண்டிருக்கு. வா மொகம் அலம்பிண்டு சமத்தா சாப்பிடு பார்க்கலாம்.

    அம்மா என் பேச்சுக்குக் கட்டுப்படறா. மடமடன்னு சாப்பிடறா. அவ வாயைத் தொடச்சி மாத்திரை தரேன். படுக்க வைச்சு போர்த்தி விடறேன். அம்மா சட்னு என் கையைப் பிடிச்சுக்கறா.

    என்கூடவே இருடி. பானு என்னை வையறா. அடிக்கறா. நேத்து கிள்ளிட்டா இதோ பாரு. எனக்கு அவளைப் பார்த்தாலே பயமா வருது. உன் மடியில் படுத்துக்கட்டுமா

    எனக்கு அடிவயிறு கலங்கி விம்மல் தெரிக்கிறது. கவனமா அதைத் தவிர்த்துட்டேன்.

    அதையேம்மா கேக்கறே... வா... படுத்துக்கோ.

    மடியில் படுத்திண்ட அம்மா என்னமோ முணுமுணுக்கறா. திடீர்னு நெனைப்பு வந்தா மாதிரி பேசறா.

    சாரு வந்துட்டாளோ... வழி தெரியாம தவிக்கிறதோ என்னமோ... பசி தாங்காதே அதுக்கு. நீ வரும்போதே ஒரு நடை காலேஜில போய்ப் பார்த்திட்டு வந்திருக்கலாம். உனக்கு பொறுப்பே இல்லையடி...

    மன்னிச்சிடும்மா. இப்பவே போய் அழைச்சிண்டு வரேன். நீ தூங்கு தங்கமோன்னோ...

    எப்பவும் ரெண்டு பேரையும் ஒண்ணாவே இருக்கச் சொன்னேன். என் பேச்சைக் கேக்காம சாரு பாட்டுக்கு எங்க போனாளோ தெரியலை.

    அம்மா என்வோ பேசிப் புலம்பிண்டிருக்கா. மாத்திரை வேலை செய்யறது. பத்து நிமிஷத்திலே தூங்கிட்டா. நான் அவளைக் கலைக்காமல் படுக்கையில் படுக்க வைச்சிட்டு எழுந்துக்கறேன். பானு என்னை சைகை பண்ணி வெளியே கூப்பிடறா.

    என் காலேஜ் தோழி சுஷ்மா டெல்லியில் இருக்கா. அவட்ட வேலைக்கு சொல்லி வைச்சிருந்தேன். அவ கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டாளாம். உடனே வரச்சொல்லி காலையில கூரியர்ல கடுதாசி வந்திருக்கு. நான் நாளை மறுநாள் கிளம்பணும். எனக்குப் பத்தாயிரம் ரூபாய் வேணும். ஏற்பாடு பண்ணிக்கொடு.

    எனக்கு ஒரு நிமிஷம் பேசவே முடியலை. என்ன பேசறா இவ... எரிச்சலா வர்றது.

    என்னடி நீ பேசுறது... எங்கிட்ட ஏதுடி அத்தனை பணம். என்னால் எப்படி ஏற்பாடு பண்ண முடியும்?

    இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். அந்த நந்தகுமார் கொண்டு வந்து கொட்டின பணத்தை வாங்கிக்கலாம்னு... அப்பாவும், பொண்ணுமா தூக்கி எறிஞ்சேள். இப்பபாரு... அது இருந்தா எம்பாட்டுக்கு எடுத்துண்டு கிளம்பிடுவேன். இப்படி உன்னைக் கெஞ்சத் தேவை இருக்காதே...

    நான் அவளையே பார்க்கிறேன். இதே பானுதான் ஆறு மாசம் முன்னாடி வரை என் தோள்ள சாஞ்சிண்டு கண் மைக்கும், ஸ்டிக்கர் பொட்டுக்கும் காசு கேட்டவ. என் மேல கால் போட்டுண்டு தூங்கினவ.

    இன்னிக்கு அவ பணம் கேக்கற தோரணை என்னை பயம் காட்டறது. பத்தாயிரம் காசுகூட எங்கிட்ட கிடையாதுன்னு அவளுக்குத் தெரியும். இருந்தாலும் வம்புக்குக் கேட்கறா...

    எனக்கு இப்பதான் ஒண்ணு புரியறது. என்னதான் ஒரு தாய் வயத்தில் பொறந்து ஒண்ணா வளர்ந்து ஒரே கூரைக்கு அடியில் வாழ்ந்தாலும், ஒரு கஷ்ட நேரத்தில் தான் உண்மையான சுபாவம் தெரிய வருது.

    எல்லாரும் உதறிண்டு ஓடத்தான் பரபரக்கறாளே தவிர அதைத் தூக்கி சுமக்க யாரும் முன் வர்றதில்லை. தூக்கிக்கூட சுமக்க வேணாம். சுமக்க முன் வர்றவாளுக்குக் கொஞ்சம் தோளாவது கொடுக்கலாமோன்னோ, என்ன பொல்லாத வேலை டெல்லியில இவளுக்குக் கெடைச்சிருக்கும்... அதையே உள்ளூரிலயே வாங்கிக்க முயற்சி பண்ணக்கூடாதா... சென்னையில் யாரும் இவ சினேகிதிகள் இல்லையான்ன...

    எல்லாம் திட்டமிட்டு செய்யறது. குளத்தில் நீர் வத்திட்டா கொக்கும். நாரையும் யாரைக் கேட்டுண்டு பறக்கறது. அதைப்போலத்தான் இதுவும். எப்படியாவது ஓடிட்டா போதுங்கற சுயநலம்... சே... என்ன வாழ்க்கை என்ன மனுஷங்க.

    எதுக்கு இந்தப் போராட்டம். யாரை சந்தோஷப்படுத்தி ஈஷிக்க இந்த உறவுகள். எல்லாம் பொய் வேஷம். எனக்கு ஆயாசமா வர்றது.

    பணத்துப் பொறுப்பை என் தலையில் போட்டுட்டு பானுபாட்டுக்கு தன் வேலையைப் பார்க்கறா... இப்ப நான் என்ன செய்யறது...

    என்னால யாருக்கும் ஒரு காரியம் கெட்டுப் போச்சுன்னு இருக்கப்படாது. கொஞ்ச நேர யோசனைக்குப் பின்னால ஈஸ்வருக்கு போன் செய்யக் கீழ போறேன். மனசுக்குள்ள தயக்கமா இருக்கு. ஆனாலும் இப்ப அவரை விட்டா வேற கதியும் இல்லையே...

    நல்லவேளை ஈஸ்வர் செல்போனில் உடனே கிடைச்சார். தயக்கத்தோட விவரம் சொன்னேன். காலையில் வர்றதா சொன்னார்.

    கையோட பாத்திமாவுக்கும் போன் பண்ணி ஒரு வாரம் விடுமுறை சொல்லிட்டு வரேன்.

    அம்மா தூக்கத்தில் புரண்டு படுக்கறா. போர்வை கலையறது. அதை சரி பண்ணி விடறேன். அவ பக்கத்தில உட்கார்ந்து சுவத்தில சாஞ்சுக்கறேன். தூக்கமே வரலை.

    உள்ள பானு எலி மாதிரி எதையோ உருட்டிண்டு இருக்கா.

    சே... உடுத்திக்க நல்லதா நாலு துணி இருக்கா இந்த வீட்டில்... சாயம் போனதும், சின்னதா போனதுமாத்தான் இருக்கு. பிச்சைக்காரக் கூட்டமாவே ஆகிப் போச்சே...

    அந்த நிலையிலயும் எனக்கு அவமேல கோபம் வரலை. சிரிப்புதான் வர்றது. இந்த துணிகள் தானே கொஞ்ச நாள் முந்தி நன்னா இருந்தது. இந்தக் குடும்பம் தானே உலகத்திலேயே சிறந்த குடும்பம்னு சொல்லித்திரிய வைச்சது.

    ஒரு கஷ்டம் வந்தப்ப எல்லாம் தலைகீழாய்ப் போச்சு... வாயில் என்ன வார்த்தைகள் வருதுங்கறதே புரியாம பேச்சு பொரியறது.

    பால்வண்டி வர்ற சத்தம் கேக்கறது... கொஞ்ச நாழிக்கெல்லாம் முல்லை மொட்டுகள் போல பால் பைகள் இறங்கிடும். பால் வாங்கப் போகணும். எழுந்து படி இறங்கிப் போறேன். ராத்திரி முழுசும் தூங்காம இருந்ததிலே கண்ணு செவந்து எரியறது... சமாளிச்சுக்கறேன்.

    காபி கலக்கிண்டு பானுவைத் தேடறேன். அவ தன்னோட வேலையைத் தீவிரமா செய்துண்டிருக்கா. அம்மா இன்னும் எழுந்துக்கலை.

    பானுவோட பிரிவு அவளை எந்தவிதத்திலயும் பாதிக்கப் போறதில்லை. சாருவை அழைத்துக்கொண்டு வரச்சொல்லி படுத்தறா மாதிரி பானுவையும் அழைச்சிண்டு வரச் சொல்லி பொலம்பி என் உயிரை வாங்கப்போறா.

    சரியா ஏழு மணிக்கெல்லாம் ஈஸ்வர் வந்துட்டார். வணக்கம் சொல்லிட்டு காபி தரேன்.

    என்னால உங்களுக்கு மேல மேல தொல்லைதான். மன்னிச்சிடுங்கோ சார் என குரல் தழுதழுக்கிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1