Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manjal Maththaappu
Manjal Maththaappu
Manjal Maththaappu
Ebook162 pages1 hour

Manjal Maththaappu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466879
Manjal Maththaappu

Read more from Mekala Chitravel

Related authors

Related to Manjal Maththaappu

Related ebooks

Related categories

Reviews for Manjal Maththaappu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manjal Maththaappu - Mekala Chitravel

    1

    நீலக்கடலில் நீந்திக் களிக்கும் மீன்கள் போல நீல வானில் வெள்ளி நட்சத்திரங்கள் உதிக்கத் தொடங்கிய பின் மாலைப் பொழுது.

    டப்பாவில் மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருந்த ரவையை உப்புமாவாகக் கிளறி இறக்கிய அபிராமி வாசலுக்கு வந்தாள்.

    நான்கு குடித்தனங்கள் இருக்கும் குடியிருப்பு. எந்த காலத்திலேயோ குறைந்த வாடகைக்குக் கிடைத்த இடம். எத்தனை வசதிக் குறைச்சல் இருந்தாலும் வீட்டுக்காரரிடம் வீம்பும் பேச முடியாது. வேகம் காட்டி வெளியே போகவும் முடியாது. வயதுக்கு வந்த பெண்களை வைத்துக் கொண்டு எங்கே போவது?

    என்ன அபிராமி... பசங்க யாரையும் காணோம்? பக்கத்து வீட்டுப் பாட்டி கேட்டாள். "வெளியில போனா சீக்கிரமா வீட்டுக்கு வரணும்னு எது நினைக்குது? பெரிசுங்கதான் அப்படின்னா இந்த பொடிசும் அதையேத்தான் செய்யுது. விளையாடப் போய் எவ்வளவு நேரமாவுது? இன்னும் காணோம்.’ அபிராமி உச் கொட்டினாள்.

    எங்க வீட்டுல மட்டும் என்ன வாழுது? அப்பனும் ஆத்தாவும் வேலைக்குப் போயிட்டு ராத்திரிதான் வராங்க. இதுங்க அதுக்கு தகுந்தா மாதிரி ஒரு டைம் டேபிள் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வருதுங்க. நான் எதையாவது சொன்னா என் பிள்ளையும் மருமகளும் நம்பறதில்லை. இந்தப் பசங்களும் மதிக்கறதில்லை. அதனால நான் வாயே தொறக்கறதில்லை. ஏதாவது ஏடாகூடம்னா ‘தடதட’ன்னு வெளியே போகச் சொல்லிட்டா எங்கடி போறது? அநாதைப் பொணமா கிடந்து கார்ப்பரேஷன்காரங்கதான் வந்து வாரிக்கிட்டுப் போகணும். ஒத்தைப் பிள்ளையைப் பெத்தா இதுதான் பாடு... உனக்குப் பரவாயில்லை. பிள்ளை குட்டிகளைப் பெத்தெடுத்த மகராசி…

    நீங்கதான் மாமி மெச்சிக்கணும். ஒண்ணைப் பெத்தவளுக்கு உரியில சோறு... நாலைப் பெத்தவளுக்கு நடுத்தெருவில சோறுன்னு சொல்லி இருக்காங்களே... எங்க வீட்டுல என்ன வாழுது? பெரியவளைப் பொண்ணு பார்க்க வந்துட்டு இளையவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனாங்க… பெரியவளுக்கு எப்படி மாப்பிள்ளை தேடறதுன்னு தெரியலை. அடுத்து ரெண்டு தயாரா இருக்கு. போதும் போதாததுக்கு அந்திமத்தில பட்டம் கட்டினா மாதிரி இந்த பொடிப்பையன் பிறந்திருக்கான். என்ன போங்க அபிராமி அலுத்துக் கொண்டாள்.

    நீலகண்டன் கூப்பிட்டார்.

    அம்மா... பசிக்குது. என்ன இருக்கு? என்று கத்திக் கொண்டே வந்த கோபி ஓடிப்போய் பாத்திரங்களை உருட்டினான். போம்மா... எப்பப் பார்த்தாலும் இந்த உப்புமாதானா? எனக்கு வேணாம் என்று கத்திவிட்டு மூலையில் உட்கார்ந்து அழுதான். அவனை சமாதானம் செய்ய முடியாமல் அபிராமி தவித்தாள். இந்த சூழ்நிலையில் நைசாக உள்ளே நுழைந்து விட்டார்கள் மல்லிகாவும் அல்லியும். யார் பேசுவது என்று புரியாத நிலையில், கோபி..." என்று வித்யாவின் குரல் கேட்டது.

    எதுக்காக நீ அழுதிருக்கேன்னு சொன்னின்னாதான் உன்கூட பேசுவேன். வித்யா கேட்டாள். சின்ன சங்கடத்துடன் கோபி விவரம் சொன்னதும், சரி கோபி... இப்படியே கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம். வா...’ என்று கிளம்பினாள்.

    வித்யா கைப்பையை அபிராமியிடம் நீட்டினாள். அம்மா... என் பிரண்டு வீட்டுல நிறைய இருக்குன்னு மணத்தக்காளிக் கீரை பறிச்சிக்கிட்டு வந்திருக்கேன். காலையில் கூட்டு பண்ணிடும்மா. செலவும் மிச்சம்... உடம்புக்கும் நல்லது."

    அபிராமி உடனே மறுத்தாள். மணத்தக்காளிக்கீரை சிறு கசப்பா இருக்குமேடி. பசங்க சாப்பிடாது… அதைக் கேட்டு வித்யா சிரித்தாள். ‘பசங்க. சாப்பிடாதா? இல்லை நீ சாப்பிட மாட்டியா? ஏம்மா உன்னோட பழக்க வழக்கத்தையெல்லாம் இதுகள் மேல திணிக்கறே? இன்னிக்கு விக்கற விலைவாசியில பத்து வருஷத்துக்கு முன்னால நீ தின்ன மாதிரி ஒரு கவளம் கூட இப்ப தின்ன முடியாது. நான் சொன்னதை மட்டும் நீ செய். மைதிலி கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்கற வழியைப் பாரு... கோபி... நீ வாடா...’

    வித்யா வெளியே போனதும் அபிராமி வெடித்தாள். "பார்த்தீங்களா அவ பேசிட்டுப் போறதை? ஒரு வரி வார்த்தைக்கு ஒரு மகாபாரதம் படிச்சிட்டுப் போறாளே... எனக்கென்ன. நான் மணத்தக்காளி கூட்டு வைக்கிறேன். யாருமே தின்னாம வீணாத்தான் போகப் போவுது.’

    உன்னோட புலம்பலை நிறுத்திடு அபிராமி. காலத்தை அனுசரிச்சி குடும்பம் நடத்தறதைப் பாரு… என்னமோ வித்யா நல்லவளா இருக்கறதால நமக்கு இந்த சோறாவது கிடைக்குது... தன்னைப் பொண்ணு பார்க்க வந்திட்டு தங்கச்சியை பண்ணிக்கிட்டுப் போனவனைக்கூட அவ தப்பா பேசறதில்லை. அந்தக் கடனைத் தன் தலையில்? போட்டுக்கிட்டு அடைக்கப் பார்க்கற இந்த நேரத்தில் நீ ஏதாவது, ஏடாகூடமா பேசி உள்ளதைக் கெடுத்திடாதே... நீலகண்டன் அன்பு பாதியும், எச்சரிக்கை பாதியுமாக சொன்னார்.

    மல்லிகாவுக்கு எரிச்சல் வந்தது. ரெண்டு பேரும் உங்க புராணத்தை நிறுத்துங்க. நீங்க எதை செய்து தந்து நாங்கத் தின்னாம எழுந்து போயிருக்கோம்? எங்களுக்கு வேண்டியது பசிக்கு சோறு. ருசிக்கு பாதாம் அல்வா இல்லை. இன்னும் ஒரு தரம் சாப்பாட்டைப் பத்தி பேச்சு வந்தது... நான் சும்மா இருக்க மாட்டேன். கத்தி எடுத்து ஒரே போடா போட்டிடுவேன். காலம் கெட்ட காலத்தில இத்தினி பிள்ளைங்களைப் பெத்திட்டோமேன்னு வெட்கப்படுங்க. அதை விட்டிட்டு பேச வந்துட்டீங்க...

    அவள் அப்படி பேசினது நீலகண்டனையும் அபிராமியையும் மிரள வைத்தது. இனிமேல் எதையுமே பேச முடியாது. பெண்களுக்கு அடங்கித்தான் போக வேண்டும் என்பது புரிந்து இருவரும் அவமானத்தில் தலை குனிந்து கொண்டார்கள்.

    என்னடி இப்படி பேசிட்டே? என்று அல்லி கேட்டபோது, "பின்ன என்னடி? பெத்தா மட்டும் போதுமா? பிள்ளைகளுக்குன்னு ஏதாவது சேத்து வைக்கணும். நல்ல சாப்பாடு போட்டு படிக்க வைச்சி ஒரு வழி காட்டணும். எதுவும் முடியலை இல்லே? அப்புறம் எதுக்குடி இவளுக்கு வாய்? நாளைக்குக் காலையில கீரைக் கூட்டாவது கிடைக்கப் போவுது.

    எனக்கு ஒரு நல்ல நேரம் வரும். அப்ப பாரு... நான் அக்கா மாதிரி இதுகளை இழுத்துக்கிட்டு ஓட மாட்டேன். கழட்டிவிட்டுட்டு ‘அக்காடா’ன்னு நடந்திடுவேன்." என்றாள் மல்லிகா.

    அதற்குள் வித்யா வரும் சத்தம் கேட்டது. வேகமாக உள்ளே வந்த கோபி, அம்மா உப்புமா குடும்மா. இனிமே எதையும் வேணாம்னு சொல்ல மாட்டேன் என்றபடி தட்டை எடுத்தான்.

    வித்யா சொன்னாள். இவனை பக்கத்திலிருக்கிற காலனிக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன். தங்க இடமில்லாமல், உடுத்திக்க சரியான உடுப்பு இல்லாம, தின்ன அவன் வேணாம்னு சொன்ன உப்புமாக்கூட இல்லாம இருக்கற சின்னப் பிள்ளைங்களைக் காட்டினேன். கற்பூரமாட்டம் புரிஞ்சிக்கிட்டான். இனிமே எதையும் சாப்பிட மாட்டேன்னு சொல்ல மாட்டான்.

    2

    காலை வேலை பரபரப்பில் வீடு ஓடிக் கொண்டிருந்தது. சகாதேவன் வேகமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான். மதிய சாப்பாடு இருந்த ஹாட் கேசை அவனிடம் நீட்டிய அம்மணி, சாப்பாடு முழுசையும் சாப்பிட்டுடுப்பா. நேத்து மாதிரி திரும்பிக் கொண்டு வந்திடாதே என்று சொல்லிவிட்டு வாசலை அடைத்துக் கொண்டு நின்றாள்.

    சகாதேவன் ஜாடையாக கமலாவைத் தேடினான். ஜன்னல் ஓரத்தில் நின்று கையாட்டியவளைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்து விடை பெற்றான்.

    ஏய் கமலா... தெண்ட சோறு... மூதேவி... உனக்கு எத்தனை தரம் படிச்சிப் படிச்சி சொல்லி இருக்கேன்? எம்பிள்ளை கிளம்பும்போது ஜன்னல் ஓரத்தில் நின்னு பார்க்காதேன்னு? பெரிய மகாராஜா வீட்டுப் பொண்ணு. சீரா கொண்டு வந்து இறக்கியிருக்கே. நீ கெட்ட கேட்டுக்கு இதெல்லாம் கேக்குதாடி?

    இன்னொரு தரம் இப்படிச் செய்தே. தொலைச்சிடுவேன் உன்னை. போ... போய் துணி துவைக்கிற வேலையைப் பாரு. உடனே தின்ன உட்கார்ந்திடாதே... வேலையெல்லாம் முடிச்சிட்டு தின்னுத் தொலை. தெரியுதா?" என்று சொல்லிக்கொண்டே சுவரில் மோதித் தள்ளினாள். கொஞ்சம் ஆசுவாசமானதும் கிணற்றடிக்குப் போனாள்.

    அம்பாரமாய் துணிகள் குவிந்து கிடந்தன. சாயம் போகக் கூடியவை, கஞ்சி போட வேண்டியவை எனத் தரம் பிரித்து சோப்புத்தூள் போட்டு ஊற வைத்தாள். மற்ற துணிகளை சோப்பு போட்டுத் துவைக்க ஆரம்பித்தாள். திருமணமாகி வந்த ஒரே வாரத்தில் அம்மணி தீர்த்து சொல்லி விட்டாள்.

    "அக்கம் பக்கத்து வீடுங்கள்ள வேலைக்குப் போற பொண்ணுங்களாத்தான் இருக்கு. காலையில வெளியில போனா ராவுலதான் திரும்புதுங்க.

    ஞாயித்துக் கிழமையன்னிக்குதான் மாங்கு மாங்குன்னு துணி துவைக்குதுங்க. அதனால தினமும் அழுக்குத் துணியெல்லாம் இங்க கொண்டு வந்து தரச் சொல்லி நீ துவைச்சி காய வைச்சி மடிச்சிக் குடுத்திடு. உருப்படிக்குத் தகுந்தா மாதிரி காசு வாங்கிடலாம்."

    ஆரம்பத்தில் இரண்டு வீடுகளாக இருந்தது. இந்த நான்கு மாதத்தில் பத்து வீடுகளாகி விட்டது. கமலாவுக்கு சோப்பு ஒத்துக் கொள்ளாமல் கை புண்ணாகியது. அதைப் பார்த்துவிட்டு சகாதேவன் திட்டினான்.

    உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இந்த வேலையெல்லாம் நமக்கு ஒத்து வருமா? வருமானம் வரும்னு எதுக்கு இந்த பாடு? உனக்கு யாரு இந்த அற்புதமான யோசனையை சொல்லித் தந்தாங்க? ஏம்மா... நீங்களாவது இந்த சிறுக்கிக்கிட்ட சொல்லக் கூடாது? அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?

    தரகர் சொன்னாருன்னு சும்மா பார்க்கப் போன இடத்தில சின்னவளைப் பண்ணிக்கறேன்னு நீதானே பிடிவாதம் பண்ணினே? இப்ப பாரு இவ என் பேச்சு எதையும் கேக்கறதில்லை. என்னைத்தானே கொடுமைக்காரின்னு பார்க்கறவங்க பேசுவாங்க? இது எனக்குத் தேவையா?" என்று அம்மணி அப்படியே மாற்றிப் பேசும்போது கமலாவுக்கு பேச்சே வராது வாயடைத்துப் போகும்.

    இந்தத் திருமணம் அவள் ஆசைப்பட்டதுமில்லை. எதிர் பார்த்ததுமில்லை. அக்காவை பெண் பார்க்க வந்தார்கள். அவளோடு வந்து எட்டிப் பார்த்தவளை சகாதேவன் எப்படி பார்த்தானோ அவளுக்கே தெரியவில்லை. ஒரே வினாடியில் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டான். அம்மணி ஒப்புக் கொள்ளவே இல்லை., அவள் திருமணத்துக்காகப் பெண் பார்க்கவே வரவில்லை. மகனுக்கு பல இடங்களில் பெண் பார்ப்பதை பெருமை பட்டுக் கொள்ளவே வந்தவள் அவள்.

    அரைகுறை மனதோடு அம்மணி சம்மதித்தாள். வித்யாவுக்காக வைத்திருந்த பத்து பவுன் நகைகளை அவள் தங்கைக்காக விட்டுக் கொடுத்தாள். அம்மணிக்கு பத்து பவுனெல்லாம் கால் தூசிக்கு சமம். அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1