Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம்
Ebook87 pages30 minutes

காலங்களில் அவள் வசந்தம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“அப்பப்பா என்ன கூட்டம். இப்ப வியாழக்கிழமையில் பாபா கோயிலுக்கு அதிக கூட்டம் வருது. சாமியை பார்க்கவே இரண்டு மணி நேரமாயிடுச்சே. நல்லவேளை முன்னால வீடு வந்து சேர்ந்துட்டோம்.”
பேசியபடி கமலம் சோபாவில் அமர,
“ஆமாம்மா... இனிமே, வியாழக்கிழமை பாபா கோயிலுக்கு காலையிலேயே போய்ட்டு வந்துடலாம்.”
“உனக்கு காலேஜிக்கு லேட்டாயிடுமே.”
“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினா நேரத்துக்கு வந்துடலாம். என்ன பார்த்துட்டு நிக்கற, தலைவலிக்குது, போய் சூடா ஒரு டம்ளர் காபி போட்டு எடுத்துட்டு வா. அம்மா உங்களுக்கு...”
“எனக்கு வேணாம்பா. நேரம் கெட்ட நேரத்தில் காபி குடிச்சா, எனக்கு சரிவராது. நீ குடி.”
கையிலிருந்த காபியை அவனிடம் கொடுத்தவள், மெளனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“என்ன இது, இருந்த பழைய மாவை சரிகட்டி தோசை ஊத்திட்டியா... வாயிலே வைக்க முடியலை. ஏன் வந்து ஒரு இடியாப்பம் செஞ்சு, குருமா வைக்க உனக்கு வணங்க மாட்டேன்னு சொல்லிடுச்சா.”
“இன்னைக்கு ஆபீசிலும் வேலை அதிகம். அதுவும் வந்ததும் அடுப்படியில் எல்லாம் அப்படியே கிடந்ததால், ஒழிச்சு போட்டு டிபன் செய்ய நேரமாயிடும்னு செய்தேன்.”
“இப்ப என்ன மகாராணி வரும்போது, எல்லாத்தையும் சுத்தமா எடுத்து வைக்கணும்னு சொல்றியா. இந்த குட்டியை பார்த்துக்கிட்டு என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் புரிஞ்சுதா. வாய்க்கு வாய் பேசாம போய் வேலையைப் பாரு.”
சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவன், தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல, டி.வியில் லயித்திருந்தான்சாப்பிட கூட தோன்றாமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.
அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு, உள்ளே நுழைந்த கணவனை பார்த்தாள்.
“ஏன் எப்போதும் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கே. ஆனா வீட்டில்தான் இப்படி, வெளியே கிளம்பிட்டா முகத்தில் சிரிப்பும், பொலிவும் தாண்டவமாடுது. போன வாரம் உன் ப்ரெண்ட் அவ பேரென்ன... மாலினி... அவகூட அப்படி சிரிச்சு பேசிக்கிட்டு நான் பைக்கில் வர்றதை கவனிக்காம கூட ரோடில் போனே. வீட்டுக்கு வந்தா முகமே மாறிடுது.”
தேவையில்லாமல் தன்னை சீண்டுகிறான் என்று புரிந்து கொண்டவள்,
“தலை வலிக்குது. சாப்பிட கூட பிடிக்கலை. அதான் சோர்வாக இருக்கு.”
“ஊசி போன மாவை சாப்பிட்டா வயிறு கெட்டுடும்னு எங்களுக்கு கொடுத்துட்டு, சாப்பிடாம வந்துட்டியா?”
இப்படிகூட ஒரு மனிதனால் பேச முடியுமா. வார்த்தைகளில் விஷத்தை தடவி... அடுத்தவர் மனம் புண்பட பேசுவதில்தான் எவ்வளவு சந்தோஷம். இரண்டு வருஷ தாம்பத்யம். கையில் குழந்தை... இன்னும் கட்டின மனைவியை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறானே. இதற்கு மேல் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பாமல் படுத்துக்கொண்டால் நந்தினி.
ராத்திரி எதுவும் சாப்பிடாமல் படுத்தது, வயிற்றை பிரட்ட, சமாளித்துக்கொண்டு காலை டிபன், சாப்பாடு வேலையை முடித்து ஆபீசுக்கு கிளம்ப...
“நந்தினி, என் வெள்ளை ஷர்ட்டை அயர்ன் பண்ணிக் கொடு. இன்னைக்கு அதைத் தான் போடணும்.”
குழந்தை சுமிக்கு பால் கொடுத்தவள்,
“எனக்கு லேட்டாச்சு. அப்புறம் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவேன். வேறு ஏதாவது அயர்ன் பண்ணின ஷர்ட் போட்டுக்குங்க. சாயந்திரம் வந்து அயர்ன் பண்ணி வைக்கிறேன்.”
“அரவிந்தா உன் இஷ்டத்துக்கு சட்டைகூட போட முடியாது போலிருக்கே. மகாராணி உத்தரவுபடி நடந்துக்க.”
கோபமாக அவள் முன் வந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
காலங்களில் அவள் வசந்தம்

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to காலங்களில் அவள் வசந்தம்

Related ebooks

Reviews for காலங்களில் அவள் வசந்தம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காலங்களில் அவள் வசந்தம் - பரிமளா ராஜேந்திரன்

    1

    புழுதியை கிளப்பிக் கொண்டு காற்று வேகமாக வீச, இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் என்று மழை பயமுறுத்துவது போல் வானத்தில் மின்னல் கீற்றுகள் பளீரிட்டு, இடி முழங்க...

    பஸ்ஸை விட்டு இறங்கிய நந்தினி, காற்றின் வேகத்தில் முகத்தில் விழும் முடிக்கற்றைகளை ஒதுக்கிய வண்ணம், முன்புற புடவை சுருக்கத்தை ஒரு கையால் தூக்கி பிடித்தபடி வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள்.

    பஸ்ஸை விட்டு இறங்கி, வீட்டை அடைய எப்படியும் இரண்டு தெரு நடக்க வேண்டும். பத்து நிமிஷ நடையை, வேகமாக ஐந்து நிமிடத்தில் கடந்து வீட்டை நெருங்க, கதவு பூட்டியிருப்பதை பார்த்து, அத்தை எங்கே போயிருப்பார்கள். அவரும் இந்த நேரம் வந்திருப்பார். குழந்தை சுமியை மழை வரும் நேரத்தில் வெளியில் அழைத்து சென்றிருக்கிறார்களா... பலவித சிந்தனையுடன் நின்றவளை...

    அம்மா...

    மகளின் குரல் கேட்டு திரும்ப, எதிர்வீட்டு பார்வதியின் இடுப்பில் உட்கார்ந்திருந்த இரண்டு வயது சுமித்ரா... அம்மாவிடம் தாவினாள்.

    சுமிக்குட்டி... நீ இங்கேயா இருக்கே.

    மகளை முத்தமிட்டு வாங்கியவள்,

    என்னம்மா... அத்தை எங்கே. சுமியை உங்ககிட்டே கொடுத்துட்டு எங்கே போனாங்க?

    இப்பதான்மா அரை மணி நேரத்துக்கு முன்னால் உன் வீட்டுக்காரர் வந்ததும், அழைச்சுக்கிட்டு கோயிலுக்கு கிளம்பினாங்க. மழை வர மாதிரி இருக்குன்னு சுமியை என்கிட்டே விட்டுட்டு போனாங்க. இந்தாம்மா சாவி.

    சாவியை வாங்கிக் கொண்டவள்,

    ரொம்ப தாங்ஸ்மா.

    பூட்டிய கதவை திறந்தாள்.

    சுமிக்குட்டி சமர்த்தா விளையாடணும் அவளது விளையாட்டுப் பொருட்களை ஹாலில் கொட்டி உட்கார வைத்தாள்.

    அடுப்படியில் நுழைந்தவளுக்கு தலைசுற்றிக் கொண்டு வந்தது. எல்லாம் போட்டது, போட்டபடி இருந்தது. வேலைக்காரி மதியம் அலம்பி வைத்த பாத்திரங்கள் கூடையில் அப்படியே இருந்தன. மேடையில் காபி போட்ட டபரா, டம்ளர் என்று அங்கும் இங்கும் கிடந்தது. மேடையில் சிந்திய காபியை துடைக்காமல் எறும்பு சுற்றிலும் வரிசை கட்டி நின்றது.

    எதனால் இப்படி, எல்லா வேலைக்கும் என்னையே எதிர்பார்த்து காத்திருக்கும் இவர்கள், என்னை ஒரு மனுஷியாக கூட மதிப்பதில்லை.

    நந்தினி தனியார் நிறுவனம் ஒன்று நடத்தும் டிராவல் ஏஜென்சியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் கணவன் அரவிந்த், கல்லூரி பேராசிரியர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவன். நிலபுலம் இருந்ததால், வசதிக்கு எந்தக் குறையும் இல்லாமல் இருந்தது.

    அரவிந்தை பொறுத்தவரை, அவனுக்கு எல்லாமே அம்மாதான். திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே அதை புரிந்துகொண்டாள் நந்தினி.

    நந்தினி, எங்கம்மா என்னையே நம்பி, எனக்காக வாழ்கிறவங்க. அவங்க மனசு கோணாம நீ நடந்துக்கணும். எனக்கு அதுதான் முக்கியம். என் தங்கை ஹேமாவும் கல்யாணம் முடிச்சு, அமெரிக்காவில் இருக்கா. நான்தான் அவங்களுக்கு எல்லாம்.

    சாப்பிட உட்கார்ந்தால் கூட பரிமாற அம்மாதான் வர வேண்டும். தாய்க்கும், மகனுக்குமான பாசத்தில் தலையிட விரும்பாமல், இந்த அளவுக்கு தாய் மேல் பிரியமாக இருக்கும் கணவனை நினைத்து வெகு மதிப்பாள்.

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

    அதுபோல... எல்லாமே அம்மாதான் என்று நினைத்து வாழும் அரவிந்த். மனைவியாக வந்த தன்னை, ஏதோ தனக்காக படைக்கப்பட்டவள் என்பது போல நடத்திய விதம், அவளுடைய ஆசைகள், எண்ணங்கள் எதுக்குமே மதிப்பு கொடுக்காமல் நடந்து கொண்டது. ஒரு கட்டத்தில் இதை சகித்துக் கொள்ள இயலாமல் எதிர்ப்பு காட்டியபோது, வீட்டில் சின்னதாக புயல் உருவாக தொடங்கியது.

    உங்கம்மாதான் சாப்பாடு போடணும், வெளியே. போனாலும் அம்மா வரணும், எதுவாக இருந்தாலும் அம்மாவை கேட்டுதான் செய்யணும்னா... என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.

    அடுத்த கணம், பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்ததில் பொறி கலங்கி நின்றாள்...

    இங்கே பாரு, உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எங்கம்மாவை விட்டுட்டு வரச் சொல்றியா?

    பெத்து வளர்த்த தாயின் மதிப்பு தெரியாதவன் வேணுமினா... பெண்டாட்டி இழுத்த இழுப்புக்கு வருவான். நான் அப்படிப்பட்டவன் இல்லை. எங்கம்மாவை மதிச்சு, என்னோடு குடித்தனம் நடத்த முடிஞ்சா இங்கே இரு. இல்லாட்டி டைவர்ஸ் தரேன். அப்பா வீட்டுக்கு போயிட்டே இரு.

    வயிற்றில் சுமியை சுமந்து கொண்டு தாய்மை பூரிப்போடு நின்றவள், அவன் பேச்சில் அடங்கி போனாள்.

    அதற்குப் பிறகு எதற்குமே அதிகமாக வாய் திறப்பதில்லை. மாமியார் கமலம் எடுத்தெறிந்து பேசும்போதும் பொறுத்துக் கொண்டாள்.

    பெற்றவர்களுக்கு ஒரே மகளான நந்தினி, தன் நிலைமையை வெளியே சொல்லாவிட்டாலும், அதை உணர்ந்த மகாதேவன்,

    "அம்மா, நந்தினி...

    Enjoying the preview?
    Page 1 of 1