Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தாய்மடி தேடி
தாய்மடி தேடி
தாய்மடி தேடி
Ebook154 pages52 minutes

தாய்மடி தேடி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காரிலிருந்து இறங்கி, ஓவர் கோட்டினால் தன்னை நன்றாக மூடியபடி, கையில் பார்சலுடன் உள்ளே வரும் மடோனாவை எதிர்கொண்டு வரவற்கிறான் பிரெடரிக்.
அமெரிக்கா வழக்கப்படி, அவனை தழுவி நெற்றியில் முத்தமிடுகிறாள்.
தளர்ந்த கைகளால் அவன் தலையில் கை வைத்து, “நல்லா இரு பிரெடரிக்”
“என் அருமை மகள் எங்கே காணும்.”
“மாடி அறையில் பெட்டியை ‘பாக்’ பண்ணிட்டு இருக்காம்மா. இருங்க கூப்பிடறேன்”.
“வேண்டாம் பிரெடரிக் நானே போய் பார்க்கிறேன்.”
கார்பெட் போடப்பட்ட மரப்படிக்கட்டில் சப்தமிட நடக்கிறாள்.
பெட்டியை திறந்து வைத்து எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த எல்சா,
அம்மாவை பார்த்ததும், அதை அப்படியே போட்டுவிட்டு, ஓடி வந்து அவளை தழுவிக் கொள்கிறாள்.
“அம்மா, இந்த ஸ்நோவில் டிரைவ் பண்ணிட்டு வர, இன்னும் லோட்டாகும்னு நினைச்சேன். சீக்கிரமாக வந்துட்டியே”
“என் மகளை பார்க்க போகிறேன் என்ற எண்ணமே என்னை சீக்கிரம் இங்கே கொண்டு வந்து சேர்த்துடுச்சு எல்சா.”
அம்மாவை பார்க்கிறாள் எல்சா.
பிரெட்ரிக்கை விட இன்னும் கூடுதலான ரோஜா நிறம். வெளிறிய தலைமுடி, வயதின் காரணமாக கண்கள் குழிவிழுந்திருந்தாலும், தீட்சண்யமான பார்வைமுதுகு லேசாக கூன் விழுந்து விட்டது. பேண்ட், சட்டை அணிந்து, அதன்மேல் குளிருக்கு வெல்வெட் அணிந்திருந்தாள்.
அமெரிக்கா பிரஜை என்பது அவளை பார்த்தாலே தெரிந்தது.
“இந்தா உனக்கு பிடிக்குமென்று வழியில் “காஸ்கோவில் நிறுத்தி ‘பனானாமஃபின்’ வாங்கிட்டு வந்தேன்.”
“உனக்கு எதுக்கும்மா சிரமம். இந்த ஸ்நோவில் நீ டிரைவ் பண்ணிட்டு வந்ததே பெரிய விஷயம். இதில் ஷாப்பிங் வேறா...”
“மகளை பார்க்க கைவீசிட்டு வரலாமா”
“உன் அன்பை தாராளமாக கொண்டு வர்றியேம்மா. எனக்கு கடைசிவரை அது கிடைச்சா அதுவே எனக்கு சந்தோஷம்.”
“என்னடா இந்திய பயணத்திற்கு தயாராயிட்டியா.”
“ஆமாம்மா, வேணுங்கற பொருளை ஞாபகம் வரும்போது எடுத்து வைக்கிறேன். நாலு மாசம் இல்லையா. நிறைய ஏற்பாடு பண்ண வேண்டி இருக்கு.”
“பெத்த தாயை பார்த்ததும், உன்னை வளர்த்த தாயை மறந்துட மாட்டியே எல்சா”
கண் கலங்க தன்னை பார்க்கும் அம்மாவை பார்க்கிறாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
தாய்மடி தேடி

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to தாய்மடி தேடி

Related ebooks

Reviews for தாய்மடி தேடி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தாய்மடி தேடி - பரிமளா ராஜேந்திரன்

    1

    அமெரிக்கா, சிகாகோ நகரில், கண்ணாடியில் மூடப்பட்டிருந்த ஜன்னல் வழியாக தேங்காய் பூ துருவலாக விழும் பனிப்பொழிவை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் எல்சா.

    பிரட்டோஸ்டரில், ப்ரெட்டை டோஸ் பண்ணி, பட்டர், ஜாம் தடவி, இரண்டு ப்ளேட்டுகளில் எடுத்துக்கொண்டு எல்சாவிடம் வந்தான் ப்ரெடரிக்.

    ‘‘எல்சா... சாப்பாடு ரெடி"

    (அவர்கள் உரையாடல் ஆங்கிலத்தில் இருந்தது)

    தாங்க்யூ... ஹனி... இன்னைக்கு என்னமோ தெரியலை ரொம்ப பசி.

    வேலை ஜாஸ்தியா

    ஆமாம், நாலுமாசம் லீவு போடப்போறேன். வேலை அதிகம், ஓரளவு என் வேலைகளை முடிச்சு கொடுத்துட்டேன். அட்வான்ஸா என் வேலைகளை முடிச்சதில் மானேஜருக்கு திருப்தி

    ஓகே. இந்தியா கிளம்ப ரெடியாயிட்டு இருக்கே

    பின்னே இல்லையா. என்னுடைய எத்தனை நாள் கனவு நிறைவேற போகுது.

    "பிரெடரிக் உன்னுடைய பிஸினஸ் ஒண்ணும் பாதிக்காதே’’

    நோ டியர். அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். உன்னோடு நீ பிறந்த மண்ணுக்கு வர நானும் தயாராயிட்டேன்.

    அமெரிக்கர்களுக்கே உரிய சிவந்த ரோஜா நிறத்தில், பூனை விழிகளுடன், பொன்னிற தலைமுடியை ஒட்ட வெட்டி, ஆறடி உயரத்தில் கம்பீரமாய் தன் முன் நிற்கும் கணவனை பார்த்தாள்.

    என்ன எல்சா என்னை அப்படி பார்க்கிறே

    ப்ரெட்டை இரண்டு கைகளாலும் பிடித்து கடித்தபடி எல்சாவை புன்னகையுடன் பார்த்தான்.

    ‘ம்... என் அழகு கணவனை ரசிக்கிறேன்."

    ஓ.கே. நானும் அதையே செய்யறேன். மாநிறம் என்றாலும் களையான திருத்தமான முகம். குட்டையாக வெட்டப்பட்ட கூந்தலை தளர விட்டிருந்தாள்.

    உன்னுடைய நிறத்துக்கு நான் பொருத்தமானவளாக இருக்கேனா பிரட்ரிக்

    ‘‘எனக்கு அதை பத்தி கவலையில்லை. என் எல் சாவோட அன்பான மனசு எனக்கு பிடிக்கும்."

    பிரெடரிக்கை பார்த்து சிரித்தாள் எல்சா. ஸ்நோபால் பார்த்தியா... நிக்காம கொட்டுது. இன்னைக்கு நைட் பத்துமணி வரை இருக்கும். நிறைய ப்ளைட் கான்சல் ஆயிடுச்சுன்னு வெதர் டெலிகாஸ்டில் சொன்னான்.

    நோ ப்ராப்ளம். நாம் அடுத்த வாரம் கிளம்பற அன்னைக்கு வெதர் நல்லா இருக்கு. நம்ப ப்ரோக்ராம் எதுவும் மாறாது.

    "நாளைக்கு அம்மா வர்றதாக சொல்லி இருக்காங்க’’

    இந்த ஸ்நோவில் டிரைவ் பண்ணிட்டு வரணுமா

    சொன்னேன். கேட்கலை. அடுத்தவாரம் இந்தியா போற. ஒரு நாலு நாள் உன்னோடு இருந்தா தான் மனசுக்கு திருப்தியாக இருக்கும்னு சொல்றாங்க.’’

    ம்... உன்மேலே அவ்வளவு பாசம். அதான் நாலு மாசம் கூட உன்னை பிரிய அவங்களுக்கு மனசில்லை.

    உண்மைதான் ஹனி, தாயோட அன்பு என்னைக்குமே மாறாது, குறையாது. அதை என் தாய் மூலமா நான் பரிபூரணமாக உணர்ந்திருக்கேன்.

    உங்கம்மாவுக்கு மனோதைரியம் அதிகம். நம்மோடு வந்து இருக்கலாம்னு சொல்லியும் அதை அவங்க ஏத்துக்கலை. என்னோட ஒரே பொண்ணு எல்சா, நானும் என் கணவரும், அவளை ஒரு நல்ல பெண்ணாக, திறமை உள்ளவளாக வளர்த்து ஆளாக்கிட்டோம். அவளை உன்னை நம்பி உன் கையிலும் ஒப்படைச்சாச்சு. இனி இந்த வாழ்க்கை உங்கள் இருவருக்குமானது, அதில் நாங்க தலையிடக் கூடாதுன்னு மறுத்துட்டாங்க.

    அம்மாவை நினைக்கும்போது எல்சாவுக்கு பெருமையாக இருக்கிறது.

    அவங்க என்னைக்குமே தன்னை நம்பி வாழுறவங்க. நம்மகிட்டே அவங்க எதிர்பார்க்கிறது நம்மோட அன்பான அரவணைப்பு மட்டும்தான்.

    இருக்கட்டும் எல்சா, அப்பா இறந்தபிறகும், இந்த வயசான காலத்தில் தனி மனுஷியாக இருக்காங்களே

    ஒரு மருமகனாக இல்லாமல், மகனாக மாறி நீ என் அம்மாவை நினைச்சு கவலைப்படறதை நினைச்சு பெருமை படறதா... இல்லை வயசானாலும் நம்மாலே யாருக்கும் எந்த தொந்தரவும் வரக் கூடாதுன்னு தனி மனுஷியாக வாழும் அம்மாவின் மன உறுதியை நினைச்சு பெருமை படறதான்னு தெரியலை.

    மொத்தத்தில் உன்னை கணவனாகவும், அவங்களை அம்மாவாகவும் அடைஞ்ச நான் தான் கொடுத்து வச்சுருக்கேன்."

    இரு கைகளையும் அகல விரித்து, எல்சாவை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்கிறான் பிரெடரிக்.

    மங்கிய விளக்கொளியில் கண்ணில் நீர் பளபளக்க, மார்பில் சாய்ந்தபடி கண்களை மேல்நோக்கி பிரெடரிக்கின் முகத்தை பார்க்கிறாள்.

    என்ன ஹனி சொல்லுடா

    நான் இந்தியா போற டிரிப் நல்லபடியா முடியுமா

    ஆமாம். அதிலென்ன சந்தேகம்

    அத்தனை கோடி மக்களிலே என்னை பெத்த தாயை நான் தேடி கண்டுபிடிச்சுடுவேனா டியர்

    கண்டிப்பா. உன் மனசில் தேக்கி வச்சிறக்கிற அன்பு. உன் தாயை அடையாளம் காண்பிக்கும்.

    உன் வாக்கு பலிக்கட்டும். நான் என் குடும்பம், சகோதர, சகோதரிகள் எல்லாரையும் சந்திக்கணும். அதுக்கு அந்த கடவுளும் நீயும்தான் துணை இருக்கணும் பிரெடரிக்

    கண்டிப்பாக

    **

    2

    காரிலிருந்து இறங்கி, ஓவர் கோட்டினால் தன்னை நன்றாக மூடியபடி, கையில் பார்சலுடன் உள்ளே வரும் மடோனாவை எதிர்கொண்டு வரவற்கிறான் பிரெடரிக்.

    அமெரிக்கா வழக்கப்படி, அவனை தழுவி நெற்றியில் முத்தமிடுகிறாள்.

    தளர்ந்த கைகளால் அவன் தலையில் கை வைத்து, நல்லா இரு பிரெடரிக்

    என் அருமை மகள் எங்கே காணும்.

    மாடி அறையில் பெட்டியை ‘பாக்’ பண்ணிட்டு இருக்காம்மா. இருங்க கூப்பிடறேன்.

    வேண்டாம் பிரெடரிக் நானே போய் பார்க்கிறேன்.

    கார்பெட் போடப்பட்ட மரப்படிக்கட்டில் சப்தமிட நடக்கிறாள்.

    பெட்டியை திறந்து வைத்து எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த எல்சா,

    அம்மாவை பார்த்ததும், அதை அப்படியே போட்டுவிட்டு, ஓடி வந்து அவளை தழுவிக் கொள்கிறாள்.

    அம்மா, இந்த ஸ்நோவில் டிரைவ் பண்ணிட்டு வர, இன்னும் லோட்டாகும்னு நினைச்சேன். சீக்கிரமாக வந்துட்டியே

    என் மகளை பார்க்க போகிறேன் என்ற எண்ணமே என்னை சீக்கிரம் இங்கே கொண்டு வந்து சேர்த்துடுச்சு எல்சா.

    அம்மாவை பார்க்கிறாள் எல்சா.

    பிரெட்ரிக்கை விட இன்னும் கூடுதலான ரோஜா நிறம். வெளிறிய தலைமுடி, வயதின் காரணமாக கண்கள் குழிவிழுந்திருந்தாலும், தீட்சண்யமான பார்வை.

    முதுகு லேசாக கூன் விழுந்து விட்டது. பேண்ட், சட்டை அணிந்து, அதன்மேல் குளிருக்கு வெல்வெட் அணிந்திருந்தாள்.

    அமெரிக்கா பிரஜை என்பது அவளை பார்த்தாலே தெரிந்தது.

    இந்தா உனக்கு பிடிக்குமென்று வழியில் காஸ்கோவில் நிறுத்தி ‘பனானாமஃபின்’ வாங்கிட்டு வந்தேன்."

    உனக்கு எதுக்கும்மா சிரமம். இந்த ஸ்நோவில் நீ டிரைவ் பண்ணிட்டு வந்ததே பெரிய விஷயம். இதில் ஷாப்பிங் வேறா...

    மகளை பார்க்க கைவீசிட்டு வரலாமா

    உன் அன்பை தாராளமாக கொண்டு வர்றியேம்மா. எனக்கு கடைசிவரை அது கிடைச்சா அதுவே எனக்கு சந்தோஷம்.

    என்னடா இந்திய பயணத்திற்கு தயாராயிட்டியா.

    ஆமாம்மா, வேணுங்கற பொருளை ஞாபகம் வரும்போது எடுத்து வைக்கிறேன். நாலு மாசம் இல்லையா. நிறைய ஏற்பாடு பண்ண வேண்டி இருக்கு.

    பெத்த தாயை பார்த்ததும், உன்னை வளர்த்த தாயை மறந்துட மாட்டியே எல்சா

    கண் கலங்க தன்னை பார்க்கும் அம்மாவை பார்க்கிறாள்.

    **

    3

    "மடோனா, கிளம்பலாமா கார் வந்துடுச்சு"

    ம் நான் அப்பவே ரெடி

    குட்டை கவுன் காற்றில் பறக்க, பொன்னிற கூந்தலை, இழுத்துக் கட்டி கணவனை நோக்கி வருகிறாள்.

    டிரைவர் அட்ரஸ் தெரியுமா. ஆதம்பாக்கம் ‘கருணை இல்லம்’ போகணும்.

    மடோனாவுடன் ஏறி அமர்ந்து கொள்கிறார் ஜான்.

    "என்ன மடோ... உனக்கு சந்தோஷம்தானே. உன் விருப்பப்படி இந்தியா வந்தாச்சு. இந்திய குழந்தையையே தத்தெடுக்க போறோம்.’’

    "ஆமாங்க. நமக்கு கல்யாணமாகி நாலு வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லை. அதுக்காக டிரீட்மெண்ட் போறதில் எனக்கு விருப்பமில்லை. தாய் தகப்பன் இல்லாத குழந்தைக்கு, நாம் ஏன் தாய், தந்தையா இருக்க கூடாதுன்னு நினைச்சேன்.

    பெத்து, வளர்த்தா தான் ஒரு பெண், குழந்தைக்கு தாயாக மாற முடியும்னு இல்லைங்க. பெறாமலேயே, உண்மையான அன்பு, பாசத்தை காட்டி அரவணைச்சு வளர்த்தால், அந்த குழந்தைக்கே ஒரு பெண்ணால தாயாக மாற முடியும்ங்க. நான் அதை நிரூபிப்பேன்."

    கண் விழிகளை உருட்டி பேசும் மடோனாவை பார்த்து

    Enjoying the preview?
    Page 1 of 1