Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கலைந்து போகும் கோலங்கள்
கலைந்து போகும் கோலங்கள்
கலைந்து போகும் கோலங்கள்
Ebook69 pages24 minutes

கலைந்து போகும் கோலங்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையே வெறுமையாக தோன்றியது குமாருக்கு.
யோசிக்க யோசிக்க மனதில் வெறுப்பும், சலிப்புமே மிஞ்சியது.
இருபத்தாறு வயதிற்குரிய சுறுசுறுப்பு அவனிடம் இல்லை.
எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் புரண்டான்.
“குமார்... குமார்... மணி எட்டாச்சு. இன்னுமா தூங்கறே”
போர்வையை விலக்கி அம்மாவை பார்த்தவன்...
“இப்ப உனக்கு என்ன வேணும்.”
“என்னப்பா இப்படி கேட்கிற. வயசு புள்ளை பொழுது விடிஞ்சு... இப்படி படுத்திருக்கலாமா... எழுந்து வா குமார். காபி கலந்து தரேன்.”
லட்சுமியின் மென்மையான குரல், அவனை இளக்க...
“சரி, நீ போ... நான் வரேன்...”
வெளியே வந்தாள்.
“என்ன உன் மகனை சுப்ரபாதம் பாடி எழுப்பிட்டியா...”
“ராத்திரி ரொம்ப நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தான். லேட்டாகத்தான் தூங்கினான். அதான் போய் பார்த்தேன். எழுந்துட்டான்.”
“ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு அவர் ப்ரோக்ராம் என்னவாம்... படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காட்டி... கிடைச்சதை ஏத்துக்கணும். இப்படி வெட்டியா உட்கார்ந்திருந்தா என்ன நடக்கும்” சலிப்பு தெரிந்ததுஅவனும் முயற்சி பண்ணிட்டுதாங்க இருக்கான்.”
“ஒவ்வொரு நாளா போயிட்டு இருக்கு... நாள் மட்டும் போகலை. அதோடு மட்டும் போகலை. அதோடு வயசும் போகுது. ஒரே பிள்ளை அவன் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாம் போச்சு.”
“சரி, நான் கிளம்பறேன். பென்ஷன் மட்டும் வரலைன்னா... நாம் தெருவில்தான் நிக்கணும்.”
“சோமசுந்தரம் வேளச்சேரியில் ஒரு கடையில் வேலையிருக்குன்னு சொன்னான். போய் பார்க்கிறேன். அஞ்சு, பத்து கிடைச்சா செய்யறது.”
எழுந்து காலில் செருப்பை நுழைக்க,
“என்னங்க... இட்லி ஊத்திட்டேன். சாப்பிட்டு போங்க.”
“அது ஒண்ணுதான் குறைச்சல். எல்லாம் வந்து சாப்பிட்டுக்கறேன்.”
ஸ்டாண்டு போட்டு நிறுத்தியிருந்த டி.வி.எஸ். பைக்கை எடுக்கிறார் ரத்தினம்.
இட்லியை சட்னியில் தொட்டு வாயில் வைத்தவன்...
“என்னை என்னம்மா செய்ய சொல்றே. நான் என்ன சும்மா ஊர் சுத்திட்டா இருக்கேன். வேலை தேடிட்டுதான் இருக்கேன்.”
“இப்ப முடிச்சுட்டு வர்ற பசங்க... லட்டு லட்டா மார்க் வாங்கினவங்களைதான் சேர்த்துக்கிறாங்க. என்னை மாதிரி இரண்டு வருஷத்துக்கு முன்னால் அரியர்ஸில் பாஸானவங்களை கண்டுக்க மாட்டேன்கிறாங்க. நெட்டிலும் நிறைய கம்பெனிக்கு பயோ-டேட்டா அனுப்பி வச்சுட்டுதான் இருக்கேன். எதுவும் நடக்க மாட்டேன்குது.”
“இதுக்குதான் அப்பா படிக்கிற காலத்திலேயே, உன்கிட்டே போராடினாரு.”,
“நான் சாதாரண குமாஸ்தாதான். பெரிசா சொத்து, சுகம் எதுவுமில்லை. நான் சம்பாதிக்கிற பணம்தான் நம்மை காப்பாத்திட்டிருக்கு. நீ நல்லா படிச்சு உன் தகுதியை வளர்த்துக்கன்னு கிளி பிள்ளைக்கு சொல்றமாதிரி சொன்னாரு. வயசு திமிரு. அவர் சொன்னதை கேட்டியா... இப்ப தடுமாறுவது நீதானே. நல்லா படிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா.”
சாப்பிட்டு கொண்டிருந்த தட்டைதூர வீசுறான்.
“குமார்... என்னப்பா இது... நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு தட்டை வீசுறே... தப்புப்பா... இப்படியெல்லாம் செய்யக்கூடாது.”
பரிதவிப்புடன் இறைந்து கிடந்த சாப்பாட்டை பார்த்து சொல்கிறாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
கலைந்து போகும் கோலங்கள்

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to கலைந்து போகும் கோலங்கள்

Related ebooks

Reviews for கலைந்து போகும் கோலங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கலைந்து போகும் கோலங்கள் - பரிமளா ராஜேந்திரன்

    1

    பெரிய நிலப்பரப்பை வளைத்துப் போட்டு அந்த இஞ்ஜினியரிங் கல்லூரியை கட்டியிருந்தார்கள். கல்லூரியில் ஃபீஸ் கட்டி, டொனேஷன் கொடுத்து பிள்ளைகளை படிக்க வைப்பது எட்டாக்கனியாக இருக்கும் இந்த காலத்தில், நன்றாக படிக்கும் பிள்ளைகளுக்கு... வசதியில்லாத பெற்றவர்களை கொண்டவர்களுக்கு, நியாயமான கட்டணத்தில்... நிறைய சலுகைகளுடன் அந்த கல்லூரி இயங்கியது. ஏழை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது.

    அந்த கல்லூரியின் தாரக மந்திரமே ஒழுக்கம். ஒழுக்கமும், கீழ்படிதலும் இருந்தால் வாழ்வின் உயரங்களை தொடலாம். உன் பெற்றோரை மதிக்க கற்று கொள். பெயரும், புகழும் உன்னை தேடி வரும். அந்த கல்லூரியின் ஸ்தாபகரின் அறை முன்... பொன்னெழுத்துக்களால் இந்த வரிகள் பொறிக்கப்பட்டிருந்தது.

    பிரின்ஸ்பால் அறை முன் மனைவி வேலாயியுடன் அமர்ந்திருந்த ஆறுமுகம் நெற்றியில் வழியும் வியர்வையை துண்டால் ஒற்றி எடுத்தார்.

    கண்களில் சோர்வு, பெரிய மனிதரை சந்திக்க வந்திருப்பதால் உடம்பில் தோன்றிய லேசான நடுக்கம்.

    என்னங்க... இன்னைக்காச்சும் அந்த பெரிய மனுஷனை பார்க்க முடியுமா... இரண்டு நாளா வந்து காத்து கிடக்கோம். நாளை முரளி ஊரிலிருந்து வந்துடுவான். அதுக்குள் பார்த்து பேசினால்தான் நல்லது.

    பார்ப்போம் வேலாயி. எல்லாம் நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து தானே நடக்கும்.

    உங்களை பிரின்ஸ்பால் உள்ளே கூப்பிடறாரு

    பவ்யமாக அவர் முன் இருவரும் நிற்கிறார்கள்.

    ஃபைலில் மூழ்கியிருந்தவர் நிமிர்கிறார்.

    ஊரிலிருந்து நிறுவனர் வந்துட்டாரு. இப்பதான் காலேஜ் வந்தாரு. இரண்டு நாளா அவரைப் பார்க்க நீங்க வர்றரை பத்தி சொன்னேன். அவர் ரூமிற்கு வரச் சொன்னாரு. அட்டெண்டரை அனுப்பறேன். அவரோடு போங்க. தைரியமாக சொல்ல

    நன்றி ஐயா...

    வராந்தாவில் அட்டெண்டரின் பின்னால் நடக்கிறார்கள்.

    குளிரூட்டப்பட்ட அறை. அவர் நடுக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. கம்பீரமாக, வி.ஐ.பி. சேரில் அமர்ந்திருப்பவரை பார்க்கிறார். கோல்டு ப்ரேம் போட்ட கண்ணாடி... முகத்தில் தெரியும் பணக்காரக் களை, கண்டிப்பை காட்டும் கண்கள், உட்கார்ந்திருப்பதில் தெரியும் கம்பீரம், இவ்வளவு பெரிய கல்லூரியை நடத்துவதற்கான தகுதி அவரிடம் தெரிகிறது.

    இருவரையும் பார்த்தவர்.

    உட்காருங்க...

    எதிரில் இருக்கும் நாற்காலியை காண்பிக்க...

    கையிலிருக்கும் துண்டை இடுப்பில் கட்டியவராக...

    இருக்கட்டும் ஐயா... இப்படி ஓரமா நிக்கிறோம். நாங்க சொல்றதை மட்டும் நீங்க ஒரு பத்து நிமிஷம் காது கொடுத்து கேட்டால் போதும்.

    முதலில் இரண்டு பேரும் உட்காருங்க அவர் அதட்டலாக சொல்ல...

    சீட்டின் நுனியில் பட்டும் படாமலும் உட்காருகிறார்கள்.

    ட்ரேயில் காபி வர...

    சாப்பிடுங்க...

    குடித்து முடிக்கும் வரை மெளனமாக இருந்தவர்,

    உங்க பையன் முரளி, ஃபர்ஸ்ட் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறான் அப்படிதானே...

    ஆமாங்கய்யா...

    இப்பதான் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சுது. ஒரு சப்ஜெக்ட் தவிர, மத்த எல்லாத்திலும் மார்க் இல்லை. அரியர்ஸ் வச்சிருக்கான். பிரின்ஸ்பால் சொன்னாரு.

    இந்த கல்லூரியை உங்களை மாதிரி ஏழைகளின் பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னுக்கு வரணுங்கிற ஒரே நோக்கத்தோடு லாபத்தை எதிர்பார்க்காம நடத்திட்டு வர்றோம். அது உங்களுக்கு தெரியும் தானே...

    ரொம்ப நல்லாவே தெரியும் ஐயா... குரலில் தயக்கம் தெரிகிறது.

    சரி. நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க.

    "எல்லாம் எங்க மகனை பத்திதாங்க... ப்ளஸ் டூ வரை நல்லா தான் படிச்சான். கிராமத்திலிருந்து பஸ் ஏறி பள்ளிக்கூடம் வருவான். ஆயிரம் மார்க் வாங்கினான். மகராசன் நீங்களும் நியாயமான கட்டணம் வாங்கிட்டு காலேஜில் சேர்த்துக்கிட்டீங்க... சந்தோஷப்பட்டோம். கூலி தொழிலாளி எங்க வீட்டில் படிப்பறிவில்லாத குடும்பத்தில் படிப்பாளி

    Enjoying the preview?
    Page 1 of 1