Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasanthame Varuga
Vasanthame Varuga
Vasanthame Varuga
Ebook217 pages3 hours

Vasanthame Varuga

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Megala Chitravel
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466725
Vasanthame Varuga

Read more from Megala Chitravel

Related to Vasanthame Varuga

Related ebooks

Related categories

Reviews for Vasanthame Varuga

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasanthame Varuga - Megala Chitravel

    1

    சூரியப்பூ தன் ஒளி இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மெதுவாக பூமியில் இறங்கிக் கொண் டிருந்தது.

    அப்பா ராசா ஆதி... எழுந்திருப்பா... பள்ளிக்கூடத்துக்கு நேரமாவுதில்லே? என்றபடி சீனியம்மா மகனை அசைத்தாள்.

    ஏய் முட்டாளு... நம்ம புள்ள படிக்கறது பள்ளிக்கூடமில்லே. காலேசுடி... காலேசு... எத்தினி தடவை சொன்னாலும் உன் மர மண்டையில் ஏற மாட்டேங்குதே... பீடி பிடித்துக்கொண்டிருந்த வெள்ளையன் அலுத்துக் கொண்டார்.

    நான் என்னத்தைக் கண்டேன்? புள்ளைங்க பாடம் படிக்கிற இடமெல்லாம் பள்ளிக்கூடம்னுதான் இருக்கேன். நான் டீ போடறேன். புள்ளயை எழுப்புங்க... என்ற சீனியம்மா குடிசைக்கு வெளியிலிருந்த சமையல் தடுப்புக்குள் நுழைந்தாள்.

    ராத்திரி ரொம்ப நேரம் படிச்சிக்கிட்டிருந்தான். இன்னும் கொஞ்சநேரம் தூங்கட்டும். இதோ பாரு சீனியம்மா... புள்ளைக்கு பழையது போட்டுடாதே... மாவு இருந்தா தோசை சுட்டுக்குடு. இல்லைன்னா கையில காசு ஏதாவது குடுத்து அனுப்பு. வெளியில சாப்பிட்டுக்கட்டும்...

    கிருஷ்ணாயில் வாங்கத்தான் இருபது ரூபா வச்சிருக்கேன். பரவாயில்லை. அதை புள்ளக்கிட்ட குடுத்திடறேன். நீங்க பாட்டுக்கு அவன்கிட்டே சொல்லிடாதீங்க. புள்ளை மனம் சங்கடப்படும்.

    அடங்கு சீனியம்மா... புள்ள எழுந்திட்டான். வெளிய வரான் வெள்ளையன் எச்சரிக்கை கொடுத்தார். சீனியம்மா டீயைக் கலக்கினாள்.

    ஆதி எழுந்து வந்து சோம்பல் முறித்தான்.

    பல்லைத் தேய்ச்சிட்டு வந்து டீ குடி. சுடு தண்ணி தயாரா இருக்கு. கையோடக் குளிச்சுட்டு கிளம்புடா கண்ணு. காலையில பலகாரம் செய்யலை. பணம் தரேன். கடையில் சாப்பிட்டுக்க... சீனியம்மா வாஞ்சையுடன் சொன்னாள்.

    சரிம்மா... என்று சொல்லிவிட்டு டீ குடித்த ஆதி, குளித்துக் கிளம்பி சீனியம்மா தந்த பணத்தை வாங்கிக்கொண்டு வெளியேறினான். ஜீன்ஸ் பேண்ட்டும் முழுக்கை சட்டையும் அணிந்து காலில் ஷூ மாட்டிக்கொண்டு நடந்து போகும் அவனைப் பார்த்த பெற்றவர்களுக்கு பெருமை தாங்க முடியவில்லை.

    பார்த்தியா சீனியம்மா... சும்மா துரை மாதிரி அவன் நடக்கறதை அந்த காலத்தில் சீமையில இருந்து ஒரு துரை நம்மூருக்கு வந்திருந்தாரு. அவரு இப்படித்தான் ‘டக்... டக்’ன்னு நடப்பாரு. ஊரே அவரைத் திரும்பிப் பார்க்கும். இப்ப நம்ம புள்ளையை இந்தக் காலனியே பார்க்குது. என்னா ஒண்ணு... அவரு ரத்த சிவப்பா இருப்பாரு... நம்ம பய மாநிறமா இருக்கான். மத்தபடி அந்த கம்பீரம், அழகு எல்லாமே அவரு மாதிரிதான். அவரு பெரிய ஆபீசரா வந்தாரு. அதைப் போல நம்ம தங்கமும் படிச்சி பெரிய ஆபீசரா ஆவணும்... என்னமா நடந்து போவுது எம் புள்ள... வெள்ளையன் சொன்னதை இடமறித்தாள் சீனியம்மா.

    போதும்... போதும். புள்ளயைப் பார்த்து சும்மா கண்ணு போடாதீங்க. வெளி மனுஷங்களோட கண்ணைவிட பெத்தவங்க கண்ணு ரொம்ப பொல்லாததுன்னு எங்க ஆத்தா சொல்லும். வந்ததும் பிள்ளைக்கு திருஷ்டி சுத்திப் போடணும்... என்று சீனியம்மா சொன்னாள்.

    என்னா வெள்ளையப்பா... புள்ள பள்ளிக்கூடம் போற அழகை ரசிக்கிறியா? சும்மா சீமை துரை கணக்காயில்லா நடந்து போறான். என்னமோ இந்த கூட்டத்திலேயே உம் புள்ளைக்குத்தான் படிப்பு வாசனை இருக்கு. அவன் படிக்கறதாலயாவது இந்த ஜனம் தலை நிமிருமான்னு பார்க்கலாம். சீனியம்மா... டீத் தண்ணி இருந்தா ஒரு வாய் குடேன்... என்றபடி கைத்தடியை பக்கத்தில் வைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்தார் கிட்ணன்.

    ஏன் மாமா... உனக்குத்தான் முடியலியே... சும்மா வீட்டுல உட்கார வேண்டியதுதானே? எதுக்கு ஊருக்குள்ள கவாத்து நடை பழகிக்கிட்டிருக்கே? என்று வெள்ளையன் கேட்டார்.

    சும்மா உட்கார்ந்து கிடந்தா வயித்துப் பாட்டுக்கு என்னா பண்றது? உங்கத்தை இருந்தவரைக்கும் என்னை நல்லா பார்த்துக்கிட்டா. அவ போனதுக்கப்பறம் மருமவ விரட்டறா. அப்படி ஏரிக்கறை ஓரமா போய் கொஞ்சம் சுள்ளி பொறுக்கிட்டு வந்தா அடுப்புக்கு ஆவுமேன்னு ஜாடை பேசறா. அவளையும் தப்பு சொல்ல முடியாது. கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நாலு வருஷம் ஆவலை... ஐஞ்சு புள்ளிங்க பெத்துட்டா. உடம்பு ஓஞ்சு போவும் போது சிடு சிடுன்னு விழறா... விடு... விடு... என்னா திட்டினாலும் ராத்திரி ஒரு வேளை வஞ்சமில்லாத கஞ்சி ஊத்திடுவா.

    அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சீனியம்மா சின்ன செம்பில் டீயை ஊற்றிக்கொண்டு வந்து வைத்தாள். கிட்ணன் ஊர் நியாயம் பேசிவிட்டு மெதுவாக கைத்தடியை ஊன்றிக்கொண்டு நடந்தார்.

    சீனியம்மா நானும் மாமன்கூட போய் சுள்ளி பொறுக்கிட்டு வரேன். ராத்திரிக்கு அரிசிச் சோறு வடிச்சி சாம்பாரு வை. புள்ளைக்கு ரெண்டு முட்டை அவிச்சிடு. படிக்கற புள்ள... தெம்பா இருக்கணுமில்லே... என்றபடி வெள்ளையன் பீடியை பற்ற வைத்துக்கொண்டு, மாமா... நில்லு... நானும் வரேன் என்று கூவிக்கொண்டே பின் தொடர்ந்தார்.

    பக்கத்துத் தெரு பாவாயி வந்தாள். அக்கா ஜமீன்ல நெல்லு குத்த கூப்பிட்டு அனுப்பியிருக்காங்க. வரியா? சாயங்காலம் ரெண்டு மரக்கா நெல்லும் பத்து ரூபா பணமும் தராங்களாம். மேஸ்திரி வந்திருக்காரு...

    சீனியம்மாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கையில் எதுவுமில்லாதப்ப மாரியாத்தாவே கூப்பிடுவது போலிருந்து அவளுக்கு. இரு... உங்க மாமா அதோ போறாரு. ஒரு வார்த்தை சொல்லிட்டு ஓடியாறேன்... என்று சொல்லிவிட்டு, ஆதியப்பா ஒரு நிமிஷம் நில்லுப்பா... என்று ஓடினாள்.

    "அம்மா எனக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலைம்மா... அப்பாக்கிட்டே சொல்லுங்கம்மா... பிளீஸ்..." தன்னைக் கெஞ்சும் குந்தவியைப் பார்த்து சிரித்தாள் சிந்தாமணி.

    இதோ பாரு குந்தவி... உன்னை படிக்கறதுக்கு காலேஜ் அனுப்பறதே பெரிய விஷயம். நீ ரொம்ப ஆசைப்பட்டதால உங்கப்பாகிட்டயும் அண்ணன்கிட்டயும் சண்டை போட்டு காலேஜிக்குப் போக அனுமதி வாங்கினேன். அதுக்கு பதிலா அவங்க சொன்ன கண்டிஷனுக்கு நீயும் ஒத்துக்கணுமில்லே? இதுல நான் எதுவும் தலையிட முடியாது. ஏதாவது சொன்னா உன் படிப்பை நிறுத்திடுவாங்க... படிப்பா... இல்லை அவங்க சொன்னதுக்கு ஒத்துக்கணுமான்னு நீயே முடிவு செய்துக்க...

    குந்தவி ஒரு நிமிடம் நிதானித்தாள். வேற வழியில்லை அவுங்க சொன்னதை கேக்கறேன். ஆனா கூட வர்றவங்க காரோட நின்னுக்கணும். கிளாஸ் ரூம் வரைக்கும் வரக்கூடாது. அவங்களைப் பார்த்து கூடப் படிக்கற பசங்கள்ளாம் பயப்படறாங்கம்மா. என்கூட சகஜமா பேசக்கூடத் தயங்கறாங்க... பத்து பேர் கூடப் பழகி சந்தோஷமா இருக்கத்தானேம்மா காலேஜுக்குப் போறது? அங்கயும் தனியா ஜமீன்தாரணியா எப்படிம்மா உட்கார்ந்துக்கிட்டிருக்கிறது?

    உங்கண்ணன்கிட்டே சொல்லிப்பாரு. ஒத்துக்கிட்டா எனக்கு எதுவுமில்லை. நீ சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு முக்கியம். போடா கண்ணு... சிந்தாமணி சொல்லிவிட்டாள்.

    அம்மா இந்த நெக்லஸ், பத்து வளையல், நாலு செயின் எல்லாத்தையும் கழட்டிடறேன்மா. சிம்பிளா போறேன். நேத்து ஒரு பையன் நகைக்கடை வருதுன்னு கேலி பண்ணிட்டான்.

    குந்தவி... சத்தமா சொல்லாதே... உன் அண்ணன் காதுல இது விழுந்துதுன்னா அந்தப் பையன் நாக்கை இழுத்து வைச்சி அறுத்திடுவான். கிளம்பு... நேரமாவுது... என்று சிந்தாமணி எச்சரிக்கை செய்து விடை கொடுத்தாள்.

    குந்தவி புத்தகங்களுடன் மாடிப் படியிறங்கி அப்பாவிடம் போனாள். அப்பா... நான் கிளம்பட்டுமா? என்று கேட்டாள். அவளை மேலும் கீழும் பார்த்த குமாரதேவன், என்னம்மா இது உரிச்சக் கோழி மாதிரி எதிரில் நிற்கறே? போட்டிருந்த நகையெல்லாம் எங்க? என்ற சத்தமிட்டார்.

    அது வந்துப்பா... நான்தான் கழட்டி அம்மாகிட்டேக் குடுத்திட்டேன். காலேஜில பசங்கள்ளாம் கண்ணு போடறாங்கப்பா. அதுதான் ஒரு செயினும் ரெண்டு ரெண்டு வளையலும் மட்டும் போட்டுட்டுப் போறேன்ப்பா. இதோ பாருங்க... இந்த வைரக் கம்மலையும் மோதிரத்தையும் கழட்டலை... குந்தவி கெஞ்சலாகப் பேசினாள்.

    எனக்கு இது பிடிக்கலை குந்தவி... இந்த ஜமீனுக்குன்னு ஒரு சில விதிகள் இருக்கு. அதை யாரும் மீறக்கூடாது. அதுல ஒண்ணு பெண்கள் படிக்கறது. ஆனா உன் மேல இருக்கிற பாசத்தால நான் அதை மீறியிருக்கேன். அந்த பாசத்தை சாக்கா வைச்சிட்டு ஒவ்வொண்ணா நீ மாத்தறது எனக்கு பிடிக்கலை. நீ விவரம் புரியாம கழட்டி குடுத்தா உங்கம்மா எப்படி வாங்கிட்டா? சிந்தாமணி... சிந்தாமணி... என்று குமாரதேவன் சத்தமிட்டார்.

    சிந்தாமணி பயந்து கொண்டு அங்கே வந்தாள்.

    உன் மக என்ன பண்ணுதுன்னு நீ கவலையே படறதில்லையா? இந்த நேரம் நம்ம ஜாதி ஜனங்க யாராவது வந்தா என்னாகும்? குமாரதேவன் உறுமினார்.

    குந்தவி இத்தனை கோபத்தை எதிர்பார்க்காததால் பயந்து போனாள். கலகலவென கண்ணீர் வழிய நின்றாள்.

    என்னப்பா பஞ்சாயத்து நடக்குது? என்று கேட்டபடி பாலதேவன் வந்தான்.

    உன் தங்கச்சி என்ன பண்ணியிருக்கான்னு பாரு... என்றார் குமாரதேவன்,

    இது மட்டும் இல்லைப்பா. கூட அனுப்பறவங்களை கிளாஸ் வரைக்கும் வரக்கூடாதுன்னும் சொல்றாளாம். கண்ட பசங்களும் இவ கூட பேசக்கூடாதுன்னு தானே அவங்களை அனுப்பறது? புரியலியே இதுக்கு? என்று தன் பங்குக்கு குற்றப்பத்திரிகை வாசித்தான் பாலதேவன்.

    பனிரெண்டாவது வரைக்கும் வீட்டுலயே படிச்சா மாதிரி இந்த காலேஜ் படிப்பையும் வீட்டுலயே படிக்க வைச்சா என்ன? குமாரதேவன் சொன்னார்.

    குந்தவிக்கு அழுகை பீரிட்டது. எப்போதும் நாலு சுவரையும் அதே ஆட்களையும் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருந்தாள் அவள். நாடு முழுவதும் சுதந்திரம் கிடைத்தது. ஜமீன்கள் போன இடம் தெரியாமல் போய் விட்டார்கள். தன்னுடைய வீடு மட்டும் இன்னும் பழமையை பிடித்துக் கொண்டிருக்கிறது... தன்னை யார் இந்த கௌரவ பிரச்சினையிலிருந்து காப்பாற்றப் போகிறார்களோ தெரியவில்லை.

    அப்பா... காலேஜிக்கு... நேரமாச்சுப்பா... மெல்ல முணு முணுத்தாள். சொன்னதை கேட்டுக்கிட்டு போறதுன்னா போ... இல்லைன்னா இன்னிக்கு இருந்திடு. இதுக்கு ஒரு ஏற்பாடு செய்யணும்.

    இல்லைப்பா... நீங்க சொல்றதையெல்லாம் கேக்கறேன்பா குந்தவி பின் வாங்கினாள்.

    வந்தியா வழிக்கு... அப்படித்தான் வா... டேய்... யாருடா அது? காரைக் கொண்டா... என்று பாலதேவன் உத்தரவிட்டான்.

    குந்தவி பயந்துகொண்டே போய் காரில் ஏறினாள். அவளுடைய கார் வெளியேறும் போது புதுக்கார் ஒன்று உள்ளே நுழைந்தது. குந்தவி எதிர்பார்த்த காப்பாற்றும் மனிதர்கள் காரிலிருந்து இறங்கினார்கள்.

    ஹலோ குமாரதேவன்... எப்படி இருக்கீங்க? என்னப்பா என்னைத் தெரியாத மாதிரி பார்க்கறே? நான்தான் சந்திரகிரி ஜமீன்தாரோடப் பிள்ளை மகேந்திரன் என்று சொன்னவரை அடையாளம் புரிந்து குமாரதேவன் ஓடோடிப் போய் வரவேற்றார்.

    என்ன இது ஒரு முன்னறிவிப்புகூட இல்லாம வந்திருக்கீங்க? வர்றதைப் பத்தி முன்னாலேயே தெரிவிச்சிருந்தா வரவேற்பு பலமா பண்ணியிருப்பேனே...

    நீ இப்படி ஏதும் பண்ணிடக்கூடாதுன்னு வர்றதை சொல்லலை... உள்ள போகலாமா? இல்லை இந்த படிக்கட்டுலயே நிற்க வேண்டியதுதானா? மகேந்திரன் சிரித்துக்கொண்டே கேட்டார்.

    என்னப்பா கேள்வி இது? உள்ளவாப்பா... சிந்தாமணி சிந்தாமணி... யார் வந்திருக்காங்கன்னு வந்து பாரு... மகேந்திரன் இவன்தான் என் பெரிய மகன் பாலதேவன். சின்னவன் சுந்தரதேவன் ஊருக்குப் போயிருக்கான். பொண்ணு குந்தவி... காலேஜிக்குப் போயிருக்கா...

    உன் பிள்ளைகளை நான் சின்னவங்களாப் பார்த்தது. அதனால பெயர் நினைப்பில்லை. இவங்க ரெண்டு பேரும் என் பிள்ளைங்க. இவன் நரசிம்மன் இவ காஞ்சனா... என்று சொல்லிக்கொண்டே மகேந்திரன் உள்ளே நுழைந்தார்.

    2

    "மேஸ்திரி நீ செய்யறது உனக்கே நியாயமாப்படுதா? ஜமீன்ல குடுத்த நெல்லுல அரை மரக்கா எடுத்துக்கிட்டே... பத்து ரூபா பணத்திலயும் நாலு ரூபா எடுத்துக்கிறியே... பகலெல்லாம் இடுப்பு ஒடிய நெல்லு குத்தினது நாங்க. நீ உடம்பு நோகாம பங்கு எடுத்துக்கறியே..." பாவாயி திட்டினாள்.

    இப்படி சட்டம் பேசினா நாளைக்கு உன்ன வேலைக்குக் கூப்பிடமாட்டேன் என்று மேஸ்திரி சொன்ன போது, ரொம்ப சந்தோஷம். இவ்வளவு பாடுபட்டு உனக்கு பாதி தெண்டம் அழுவறதை விட முள்ளு செடி வெட்டி இதுல பாதி பாடுபட்டா போதும். பத்து நாளைக்கு அடுப்பு எரிக்க உதவும்... மீண்டும் பாவாயி சொன்னாள்.

    விடு பாவாயி... எது ஒட்டுமோ அதுதானே நமக்கு ஒட்டும்? பிள்ளை பள்ளிக்கூடத்தில் இருந்து வந்திடுவான். பருப்பும் பாயாசமும் செய்து போடலைன்னாலும் வயித்துக்கு செய்து போடணுமில்லே? வா போகலாம்... சீனியம்மா கொடுத்ததை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

    உன்னாட்டம் எல்லாத்துக்கும் ஆமாம் போடறதாலத்தான் இவங்கள்ளாம் இந்த ஆட்டம் ஆடறாங்க... சரி வா... மேஸ்திரி இன்னொரு நாளைக்கு வேலைக்குக் கூப்பிட்டுப்பாரு... அப்ப பேசிக்கறேன் உன்னை. ஜமீன் ஆளுங்களை பார்த்து நாங்கப் பேசமாட்டோம்னு உனக்கு தைரியம் அதிகம் ஆகிட்டது... பார்த்து இருந்துக்க... இல்லைன்னா ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீயே கவுந்துக்குவ... பாவாயி சாபம் இடுவது போல விரலைக்கடாடி எச்சரித்து விட்டுப் போனாள்.

    ‘யப்பா... இந்த காலனி பொம்பளைங்கள் ரொம்ப அடக்கமா இருக்குங்க. இப்ப என்னான்னா இப்படி வாயடி கையடி அடிக்குதுங்களே... அடுத்ததரம் வேலைக்கு கிழக்குத் தெரு பக்கத்து ஆளுங்களை கூப்பிட வேண்டியதுதான்...’ என்று நினைத்துக்கொண்டே மேஸ்திரி தன்னுடைய பங்கை மூட்டைக் கட்டிக்கொண்டு சைக்கிளை மிதித்தான்.

    நல்ல வேளை பிள்ளை இன்னும் வரலை. ஆதியப்பா நீ போய் இந்த ஆறு ரூபாய்க்கு முட்டை வாங்கிட்டு வா. ரெண்டு வருதோ மூணு வருதோ... அண்ணாச்சிக்கிட்ட கடன் சொல்லி கால் கிலோ ரவை வாங்கிட்டு வா... காலையில உப்புமா கிண்டிடறேன் சீனியம்மா வேகமாக சமையல் தடுப்புக்குள் ஓடினாள்.

    அவள் சாதம்

    Enjoying the preview?
    Page 1 of 1