Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rathidevi Vanthaal
Rathidevi Vanthaal
Rathidevi Vanthaal
Ebook371 pages4 hours

Rathidevi Vanthaal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Megala Chitravel
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466725
Rathidevi Vanthaal

Read more from Megala Chitravel

Related to Rathidevi Vanthaal

Related ebooks

Related categories

Reviews for Rathidevi Vanthaal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rathidevi Vanthaal - Megala Chitravel

    1

    வானவீதியில் வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் நட்சத்திர மக்களையும், வெண்மேக வண்டிகளையும் எருமைமாட்டு மந்தையாய் கருமேகங்கள் திடுதிடுவென குறுக்கே நின்று வழி மறித்து நகராமல் நின்றன. கொஞ்ச நேரத்தில் சிலுசிலுவெனக் காற்று வீசிபொருட்டு பொட்டாய் மழைத்துளிகள் கீழிறங்க ஆரம்பித்த பின் மாலைப் பொழுது.

    மாடி சன்னலருகில் நின்று அந்த அழகான மழையை ரசித்துக் கொண்டிருந்தாள் ரதி. எங்கிருந்தோ. சன்னமாக,

    ‘மழை வருது மழை வருது...

    குடை கொண்டு வா...

    மானே உன் மாராப்பிலே...’

    என்ற அழகான காதல் பாட்டு கேட்டது.

    தானும் கிருஷ்ணாவும் தனியாக கையோடு கை கோர்த்து கடற்கரை ஓரம் நடந்து போகும் போது இதைப்போலவே திடீரென மழை வந்து தன் சேலைத் தலைப்பால் அவனை மூடிக்கொண்டால்... நினைக்கும்போதே ஒரு சிலிர்ப்பு உடலெங்கும் மின்னலாய் ஓடியது. முகம் சிவந்து வெட்கம் வந்தது. அந்த ரகசிய காதல் நிலையை அம்மாவின் கர்ணகடூரக் குரல் கலைத்தது.

    ஐயோ... துணியெல்லாம் மழையில நனைஞ்சிட்டுதே... சாயங்காலமே எடுக்காம என்னடி பண்ணிக்கிட்டிருந்தீங்க? இந்த வீட்டுல எல்லா வேலையும் நான்தான் செய்யணுமா? வயசுக்கு வந்து தடிமாடுகளாட்டம் ரெண்டு இருந்து என்ன பிரயோஜனம்? அடியே ரதி, இத்தினி கத்தறேனே... காதுல வாங்காம என்னடி பண்றே?

    அம்மாவின் கோபத்தில் நியாயம் இருப்பதால் ரதி வேகமாக கீழே இறங்கினாள். இதோ வந்திட்டேம்மா...

    இப்ப வந்து என்ன பண்றது? துணி மொத்தமும் நனைஞ்சிட்டுது எல்லாத்தையும் நல்லா பிழிஞ்சி உள் கொடியில் போடு. பேனையும் போட்டு விடு. இந்த மழை எதுக்குதான் இப்படி சொல்லாம கொள்ளாம வந்துதோ? சள்ளை பிடிச்சது... அம்மா எரிச்சலுடன் திட்டினாள்.

    இதோ மழை வரலைன்னு நீதானே புலம்பினே? நீ கூப்பிட்டதுக்காகத்தானே மழை வந்துது? இப்ப அதே மழை சள்ளை பிடிச்சதா மாறிட்டுதா உனக்கு? ஏம்மா இப்படி பேச்சு மாறி மாறி பேசறே? வெரிபேட்... வெரிபேட்... என்று கேலி செய்தபடி தன் எதிரில் நிற்கும் சுபாவைப் பார்த்த அம்மாவுக்கு கோபம் எகிறியது.

    ‘பட் பட்டென்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள். நான் சொன்னது தப்புடி தாயே தப்பு... இதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடுத்திடு...

    வந்தியா வழிக்கு? இந்த ஜிலுஜிலு மழைக்கு சுடச்சுட பஜ்ஜியும் சட்னியும் செய்து குடு. இல்லைன்னா காரசாரமா மசால்வடை பண்ணித்தா... போ... போ... மதியம் சாப்பிட்டது காணாம போய் பல மணி நேரம் ஆகிட்டுது.

    அதானே பார்த்தேன். எப்பவும் திங்கற நினைப்புதானா உனக்கு? கிரைண்டராடி நீ? எத்தனை தின்னாலும் உனக்கு மட்டும் அது எப்படித்தான் செரிமானம் ஆவுதே தெரியலியே... உனக்கு செய்து போட்டு போட்டு நான் உடம்பு இளைச்சதுதான் மிச்சம். எனக்கெல்லாம் ஒரு வேளைக்கு மறுவேளை அதிகம் தின்னா நெஞ்சு கரிக்குது அம்மா அலுத்துக் கொண்டாள்.

    தின்னதெல்லாம் செரிக்கணும்னா என்னைப்போல மனசு நல்லாயிருக்கணும்மா... பேச்சை மாத்தி பஜ்ஜியை செய்யாம விட்டிடலாம்னு பார்க்கறியா? அதெல்லாம் முடியாது. பஜ்ஜி வேணும் சுபா கத்தினாள்.

    துணிகளைப் பிழிந்து காயவைத்து விட்டு வந்த ரதிக்கு தங்கையின் கோபம் எரிச்சலை உண்டாக்கியது. சுபா... எப்பபாரு தின்னுக்கிட்டே இருக்காதேடி. உடம்புக்கு ஏதாவது வந்திடும். திங்கறதில காட்டற ஆர்வத்தை படிப்பில காட்டியிருந்தா எவ்வளவோ நல்லா இருந்திருக்கும்...

    உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ... அம்மா வீட்டுலதான் வேண்டியதைக் கேட்டு வாங்கித்தின்ன முடியும். நாளைக்கே கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்குப் போனா பழைய சோறாவது கிடைக்குமான்னு தெரியலியே... அதான் இங்கேயே நல்லா தின்னு உடம்பைத் தேத்திக்கறேன். இதெல்லாம் உனக்குப் புரியாது... நீ வெறும் ‘படிப்ஸ்’... போ... போ... சுபாவின் குரலில் தீவிரம்.

    அம்மாவும் ரதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தார்கள். எப்படிடி இப்படியெல்லாம் உன்னால யோசிக்க முடியுது? வெறும் பழைய சோறு போடற இடத்திலயா அப்பா உன்ன கட்டிக் கொடுப்பார்? உன் கனவையும் கவலையையும் மூட்டை கட்டிவைச்சிட்டு வேலையைப்பாரு... அம்மா சொன்னாள்.

    வேலையைப் பார்க்கணுமா? முன்னாடி சொன்னதுதான் இப்பவும்... எப்படி நிறைய சாப்பிட்டு உடம்பை தேத்திக்குவேனோ அதைப்போலவே இங்க ஒரு வேலையும் செய்யாம ஜாலியா இருப்பேன். அப்புறம் தான் வாழ்நாள் பூராவும் மாமியார் வீட்டுல குப்பை கொட்டணுமே... அங்கப்போய் வேலை செய்துக்கறேன். இப்பவே வேலை செய்தா என்கையெல்லாம் தேய்ஞ்சிடும். உடம்பு இளைச்சிடும்... என்று சுபா கண்சிமிட்டினாள்.

    இப்போது அம்மா சிரிக்கவில்லை. பதிலுக்கு கோபத்துடன் குரல் உயர்த்தினாள். கண்ணா சிமிட்டிக் காட்டறே? இப்படி வேலை எதுவும் உடம்பை வளைச்சி செய்யலைன்னா குண்டாகிப் போயிடுவே. கொஞ்ச நாளில் அங்கமுத்துக்கு அக்கா மாதிரி இருப்பே... உன்னைக் கல்யாணம் பண்ணிக்க யாரும் வரப்போறதில்லை...

    உனக்கு எத்தனை நல்லெண்ணம் பார்த்தியாம்மா? கல்யாணம் பண்ணிக்க யாரும் வரப்போறதில்லைன்னு சாபம் குடுக்கறியே... நீயெல்லாம் ஒரு அம்மாவா? இதுக்கு பனிஷ்மென்ட்டா பாசந்தியும் சேர்த்து பண்ணிக்குடு... சுபா கத்தினாள்.

    வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது. பாசந்தி வேணுமா? அதோ உங்கப்பா வராரு. அவர்கிட்ட கேளு... என்னை விட சூப்பரா பண்ணித் தருவாரு... எங்கடி ஓடறே? நில்லுடி... பாசந்தி வேணாம்? என்று கேலி செய்தபடி அம்மா வாசலுக்குப் போனாள்.

    தன்னுடைய பாசந்தியும் பஜ்ஜியும் பின் தொடர சுபா அறைக்குள் ஓடி மறைந்தாள். ரதி அப்பாவுக்கு காபி போட சமையலறைக்குப் போனாள்.

    நவநீதம்... என்றபடி வாசல் படியேறிய திருவேங்கடம் நீட்டிய பையை வாங்கிக் கொண்டபடி, நல்லவேளை ஆட்டோவில் வந்தீங்க... தடதடன்னு என்னவொரு மழை பிடிச்சிது என்றார்.

    மழை வரணும் நவநீதம். இல்லைன்னா பூமியும் மனுஷங்களும் உஷ்ணத்தில எரிஞ்சி கரிஞ்சி போயிடுவாங்க. வர்ற வழியில் காயெல்லாம் வாங்கிட்டு வந்திட்டேன். எங்க பசங்களைக் காணோம் என்று கேட்டபடி சட்டையைக் கழற்றினார்.

    பெரியவ காபி போடப் போயிருக்கா. சின்னதுக்கு சூடா பஜ்ஜியும் பாசந்தியும் வேணுமாம். இவ்வளவு நேரமும் ரகளை பண்ணிட்டு உங்களை கண்டதும் உள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டிருக்கு எலியாட்டம்.

    திருவேங்கடம் சிரித்தார்.

    சின்னபிள்ளைதானே? அதான் உன்கிட்டே விளையாடறா... பாவம்... போனாப் போவுதுன்னு ரெண்டு பஜ்ஜி சுட்டுக்குடுக்கறதுதானே? நீயும் அவளுக்கு பதிலுக்குபதில் பேசியிருக்கியே... பெரியவ எங்கம்மாவைக் கொண்டிருக்கா... சின்னவ உங்கம்மாவை கொண்டிருக்கா... விடு... விடு...

    நல்லதெல்லாம் உங்களுது... சொத்தையெல்லாம் என்னிது அப்படித்தானே? இதைப்பத்தி இன்னொரு நாள் வைச்சிக்கறேன் கச்சேரி... உங்கக் கண்ணுக்கு சின்ன பிள்ளையா தெரியறவ, என்ன பேச்சு பேசறா தெரியுமா? என்ற நவநீதம், சுபா சொன்னதையெல்லாம் சொன்னாள்.

    அதைக்கேட்ட திருவேங்கடம் கொஞ்சம் அதிர்ந்தார். ‘பெரியவ வீட்டில் இருக்கும்போது இப்படி யோசிக்கிறாளே...’ என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தார்.

    அவ ஏதோ விளையாட்டுக்கு சொல்லியிருக்கா. அதை பெரிசு பண்ணிக்கிட்டிருக்காதே... என்று நவநீதத்தை சமாதானம் செய்தார். அதற்குள் காபியுடன் வந்த ரதியைப் பார்த்ததும் சூழ்நிலை மாறியது. திருவேங்கடம் முகமெல்லாம் சிரிப்பாகியது.

    நவநீதம்... இன்னிக்கு நம்ம ரதியோட புரபசர் கடைக்கு வந்தார். ரதியை அவர் ரொம்ப பாராட்டறாரு. பொதுவா இந்த காலத்து பிள்ளைங்க டாக்டராகணும் கலெக்டராகணும், விஞ்ஞானியாகி வெளிநாட்டுக்குப் போகணும்னு தான் ஆசைப்படறாங்க. ஆனா உங்கப் பொண்ணு டீச்சராகணும்னு சொல்லுது. காலேஜில புரபசராகணும்னு ஆசைப்படுது... வருங்காலத் தலைமுறையை உருவாக்கறதில் தன் பங்கும் இருக்கணும்னு சொல்லுது... இப்படி பொண்ணு பிறக்க நீங்க ரொம்பக் குடுத்து வைச்சிருக்கணும்னு பாராட்டித் தள்ளிட்டாரு போயேன். எனக்கு பெருமையா இருக்கு...

    அவருடைய மகிழ்ச்சியில் ஒரு சதவீதம் கூட நவநீதத்தின் முகத்தில் தென்படவில்லை.

    ஆமா... அவரு பாராட்டினாரு... அதைக் கேட்டு இளிச்சிக்கிட்டு வந்தீங்களா? கெட்டது போங்க... புள்ளைங்களைப் படிக்க வைக்கிறது எதுக்கு? எவ்வளவு கஷ்டப்படறோம்? எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சி ஒரு நாளைக்கு நல்ல வேலைக்குப் போய் நமக்கு சம்பாதிச்சி தரணுங்கறதுக்காகத்தான்... இப்பிடி வாத்தியார் வேலைக்குப் போய் சேவை செய்யறதுக்கில்லே... ரதியை கலெக்டருக்குப் படிக்க வைக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை... சின்னவதான் தீனிதின்னுக்கிட்டுத் தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருக்கா... இவளாவது என் ஆசையை நிறைவேத்தறாளான்னு பார்க்கிறேன்.

    திருவேங்கடம் அதிர்ந்து போய் ரதியைப் பார்த்தார். அவளின் முகம் சுண்டிப்போனது. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல், அம்மா காயெல்லாம் எடுத்து வைச்சிகிட்டு காலையில சமையலுக்கு காய் எது அரிஞ்சி வைக்கட்டும்? என்று கேட்டாள்.

    அவளிடம் காலி காபி டம்ளர்களை நீட்டிக்கொண்டே, கீரையை அரிஞ்சி பாத்திரத்தில் போட்டு மூடி பிரிட்ஜில் வை. வெங்காயம், பூண்டு ரெண்டையும் தோல் உரிச்சி வை... ராத்திரிக்கு தோசை ஊத்திக்கலாம். சட்னியும் அரைச்சிடு... என்று உத்தரவிட்டாள் நவநீதம்.

    நீ இப்படி வேலையிட்டா அவ எப்படி ஐ.ஏ.எஸ் படிக்கிறது? வெறும் எல்கேஜி கூட படிக்க முடியாது. பாஸ் பண்ண முடியாது... திருவேங்கடம் சொன்னதற்கு நவநீதம் முகத்தை சுளித்தாள்.

    கலெக்டர்னா வீட்டு வேலை செய்யக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா? இல்லையில்லை...? நீங்க வாயை வைச்சிக்கிட்டு சும்மா இருங்க போதும். நீ போய் வேலையைப் பாருடி...

    ரதி எதுவும் பேசாமல் உள்ளே போனாள். கீரைக்கட்டை அவள் பிரிக்கும் போது சுபா வந்தாள்.

    கேலியாக சிரித்தாள். இப்ப புரியுதா நான் சொன்னதோட அர்த்தம்? பெத்தவங்க வீட்டுலதாண்டி ஜாலியா இருக்க முடியும். அம்மாவுக்கு உதவி செய்யறேன். ஆட்டுக்குட்டிக்கு புல்லு போடறேன்னு ஆரம்பிச்சின்னா உன் தலையில மிளகாய் அரைச்சிட்டுப் போயிடுவாங்க... கொஞ்சம் கெத்தா இரு. அம்மா சொன்னதைக் கேட்டே இல்லே? கலெக்டராவும் ஆகணுமாம், கீரையை அரிஞ்சி பிரிட்ஜிக்குள்ளயும் வைக்கணுமாம். எப்படி இருக்கு பார்த்தியா? உலகம் இப்படித்தான். நாமதான் கெட்டிக்காரத்தனமாக இருக்கணும். உனக்கு இப்ப புரியாது. கொஞ்சம் பட்டுத்தான் நீ தப்பிக்கப் போறேன்னு நினைக்கிறேன். போனாப் போகுதுன்னு உனக்காக நானும் ஏதாவது உதவட்டுமா? கீரையை நான் ஒழுங்கு செய்யறேன். பூண்டையும் வெங்காயத்தையும் நீ உரிச்சி வை. அது ரெண்டும் உரிச்சா கையில வர்ற வாடைப் போகாது.

    ரதி வந்த சிரிப்பை மறைத்துக் கொண்டாள். கீரைக்கட்டை அவளிடம் கொடுத்துவிட்டு, ரொம்ப தேங்க்ஸ்டி... என்னதான் நீ சண்டை போட்டாலும் என் தங்கைன்னு நிரூபிக்கிறேடி... என்றாள்.

    ம்... போதும்... போதும்... ரொம்ப உருகாதே. எப்பவும் உனக்கு உதவி செய்யமாட்டேன். என் வேலைன்னு வந்துட்டா ஓடிடுவேன்... என்று பதிலுக்கு சொல்லிவிட்டு கீரைக்கட்டைப் பிரித்தாள் சுபா.

    2

    "அம்மா... மழையில ரொம்ப குளுருதும்மா... சூடா ஒரு டீ போட்டுக் குடும்மா..." கிருஷ்ணா அம்மாவைக் கெஞ்சினான்.

    என்னைப் பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா? நானே மழையில. வீடெல்லாம் ஒழுகுதுன்னு அவதிப்பட்டுக்கிட்டிருக்கேன். உன் முகரைக்கு டீ கேக்குதா? வந்து ஒழுகற இடத்தில எல்லாம் இந்த பாத்திரங்களை வை... என்று இந்திராணி கத்தினாள்.

    ஏன் உள்ள சொகுசா இருக்கே உன் பொண்ணு... அதைக் கூப்பிட்டு வேலை வாங்கேன். அது மாட்டே. என்னை மட்டும் திட்டு. வேலை செய்யச் சொல்லு... கிருஷ்ணா முணுகினான்.

    சத்தமா சொல்லாதேடா... சண்டைக்கு வரப்போறா... அம்மா கஷ்டப்படறாங்களேன்னு அவளா வந்து கூடமாட உதவினா பரவாயில்லை. நானா கூப்பிட்டு வேலை வாங்கறதுக்கு என்னமோ ஒரு தயக்கமா இருக்கு... இந்திராணியும் பதிலுக்கு முணுகினாள்.

    நீ இப்படியே அடங்கிப்போ... அது இன்னும் தலைமேல ஏறி உட்கார்ந்து கூத்தாடப் போவுது. இதெல்லாம் எதுக்கு நடக்குதுன்னே தெரியலை... கிருஷ்ணா கவலையும் மனத்தாங்கலுமாகச் சொன்னான்.

    கிருஷ்ணா... ரங்கன் கடையில கடன் சொல்லி பால் பாக்கெட் ஒண்ணு வாங்கிட்டு வாடா... என் கண்ணில்லே? எனக்குமே சூடா ஏதாவது குடிச்சா தேவலாம் போலத்தான் இருக்கு... இந்திராணி கெஞ்சினாள்.

    காசு குடுத்தின்னா வாங்கிட்டு வரேன். கடனுக்கு வாங்கிட்டு வரமாட்டேன். பத்து பேருக்கு எதிரில ரங்கன் நக்கலா சிரிப்பான் கிருஷ்ணா மறுத்து விட்டான்.

    ஏம்மா அவனைக் கெஞ்சிக்கிட்டிருக்கே? உனக்குப் பால் டீ குடிக்கணும்னா நீ போய் பால் வாங்கிட்டு வா... எனக்கு வெறும் டீயே போதும். அதை போட்டுக்குடு... என்று உள்ளேயிருந்து உத்தரவிட்டாள் ரோகிணி.

    அவளது குரலிலிருந்த அதிகார தோரணையையும் அலட்சியத்தையும் கேட்டு அம்மாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    எல்லாமே நீயே வரவழித்துக்கிட்டது. இப்ப படு... போ... போய் டீ போட்டு அளவா சர்க்கரை போட்டு பதமா ஆத்திகொண்டு போய் குடு... ஏம்மா உனக்கு புத்தி கெட்டுப் போயி இப்படி செய்திட்டியா. அப்பவே அப்பா சொன்னாரில்லே? கேட்டியா? இப்ப படு... கிருஷ்ணா சொன்னது எல்லாமே சரிதானே? இந்திராணி தலைகுனிந்தாள்.

    அம்மா... டீ கேட்டு ஒரு மணி நேரமாகுது. சீக்கிரம் கொண்டு வரமாட்டியா? மீண்டும் ரோகிணியின் குரல் மிரட்டியது.

    இந்திராணி தலையிலடித்துக்கொண்டு டீக்கு தண்ணீரை அடுப்பில் வைத்தாள். மழை உக்கிரம் குறைந்து சிறுசிறு தூறல்களாகி விட்டிருந்தது. கிருஷ்ணா வெளியில் இறங்கி நடந்தான். காற்று சில்லென அடித்தது சுகமாக இருந்தது. இந்த சிறு தூறலில் கை கோர்த்து உடன் நடக்க ரதி இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும் என்று தோன்றியது. ரதியை நினைத்தாலே அவனுக்கு மத்தாப்பூ பூச்சொரிவது போல இருக்கும். வானத்து நட்சத்திரங்களை வரிசையாக நூலில் கோர்த்தது போல மின்னும் பல் வரிசையைப் பார்த்து மயங்காதவர்களே இருக்க முடியாது, எல்லோருடனும் அன்பாக பேசுகிறாளே என்று கொஞ்சம் உரிமை எடுத்துக் கொள்ள நினைத்துக் கை நீட்டினால் ஒட்ட நறுக்கிவிடுவாள். கல்லூரியில் உடன் படிக்கிறாள். பார்ப்பாள்... பேசுவாள்... சிரிப்பாள்... இவன்தான் அவள் மீது மானசீகக் காதல் கொண்டு உருகுகிறான். அவள் மனதில் என்னதான் இருக்கிறது என்று மட்டும் தெரியவில்லை.

    ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்...’ என்று அவளிடம் வகை தொகை இல்லாமல் உளறிவிட்டு உள்ள நட்பைப் கெடுத்துக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது. இப்படியே இருந்து விட வேண்டியதுதான் என்று முடிவு செய்து விட்டான்.

    டீக்கடையில் கூட்டம் மொய்த்தது. மதியம் வரை குளிர்பானம் குடித்தவர்கள் மாலை பெய்த மழைக்கு சூடான டீக்கு ஓடிவந்து குவிந்துவிட்டார்கள். மனித வாழ்வின் சூட்சமத்தை இயற்கை மட்டுமே நிர்ணயிக்கிறது... டீக்கு சொல்ல வாயெடுத்தபோது அப்பா முழுவதுமாக நனைந்த நிலையில் தளர்ந்து போய் வருவது தெரிந்தது. தான் மட்டும் டீ குடிக்க மனதுக்கு எப்படியோ இருந்தது. அப்பாவிடம் போனான்.

    என்னப்பா இப்படி நனைஞ்சிக்கிட்டு வரீங்க? போனாப் போகுதுன்னு ஆட்டோவில வந்திருக்கக்கூடாது? வீட்டுக்குப்போங்க... நான் பால் வாங்கிட்டு வரேன்... என்றான்.

    நான் நனையறது இருக்கட்டும்டா... வீடெல்லாம் ஒழுகியிருக்குமே... அம்மா என்ன பண்றா? அதுதான் எனக்கு கவலையா இருக்கு... என்றார் சாமிநாதன்.

    கவலைப்பட்டு என்னப்பா பண்றது? சீக்கிரமா அதுக்கு ஒரு வழி செய்ய வேண்டியதுதான். நல்ல வேளை அறைக்குள்ள மட்டும் ஒழுகலை நீங்க போய் துணி மாத்துங்கப்பா. இப்ப வரேன்... என்று அவரை அனுப்பினான் கிருஷ்ணா.

    சாமிநாதன் வீட்டுக்குள் நுழையும் போது டீ கொதிக்கும் வாசனை வந்தது. அவரைக்கண்ட இந்திராணி பதறிப்போனாள்.

    அடக்கடவுளே... என்னங்க இப்படி நனைஞ்சிக்கிட்டு வந்திருக்கீங்க? முதல்ல வந்து துணிய மாத்துங்க... சளி பிடிச்சா லேசில விடாதே... பால் கூட இல்லாம டீ போட்டிருக்கேன். குடிக்கறீங்களா?

    கிருஷ்ணா பால் வாங்கிட்டு வரேன்னு சொன்னான். பால் வந்ததும் டீ போடு... என்று சொல்லிவிட்டு சாமிநாதன் உள்ளே போனார்.

    அவர் சொன்னதைக் கேட்டதும் இந்திராணிக்கு கஷ்டமாக இருந்தது. கடன் சொல்லி பால் வாங்கத் தயங்கினவன் அப்பாவைக் கண்டதும் மனம் மாறி விட்டிருக்கிறான். காய்கறி கூடையை பார்த்தாள் நல்லவேளை வெங்காயமும் தக்காளியும் இருந்தது. தக்காளி தொக்கு வைத்து சப்பாத்தி செய்ய முடிவு செய்து மாவை எடுத்து பாத்திரத்தில் கொட்டினாள்.

    துணிமாற்றிக்கொண்டு வந்த சாமிநாதன் இந்திராணி படும் அவதியைப் பார்த்து, ரோகிணி... என்ன பண்ணிக்கிட்டிருக்கே? இங்க வந்து அம்மாவுக்கு கூடமாட உதவி செய்யக்கூடாது? பாவம் தனியா கஷ்டப்படறா இல்லே? என்று கூப்பிட்டார்.

    ஏம்ப்பா... அம்மா வழக்கமான வேலையைத்தானே செய்யறா? என்னமோ மலையைத் தூக்கித் தலையில வைச்சிக்கப் போற மாதிரி துணைக்கு என்னைக் கூப்பிடறீங்களே... இதுதான்ப்பா உங்கக்கிட்டே எனக்கு பிடிக்கறதே இல்லை... எதையும் ஓவரா பேசி அலட்டுவீங்க... ரோகிணியின் குரல் உள்ளிருந்து வந்தது.

    ஏம்மா... அதை வெளியில் வந்து சொன்னா என்னக் குறைஞ்சிடுவே? நீ செய்யறது ஏதாவது சரியா இருக்கா? எப்பப்பாரு அறைக்குள்ள நுழைஞ்சிக்கிட்டு என்னதான் செய்யறே? வெளிய வந்தாத்தான் உடம்பில வெளிக்காத்தும், வெளிச்சமும் படும். அதுதான் உடம்புக்கும் மனசுக்கும் நல்லது. வெளியவா... சாமிநாதனின் குரலில் கண்டிப்பு தெரிந்தது.

    அதற்கு மேல் எதுவும் பேசினால் வீண்வம்பாகிவிடும் என்று புரிந்து கொண்ட ரோகிணி வேகமாக வெளியில் வந்தாள்.

    இதோ வந்துட்டேன். என்னப்பா தரப்போறீங்க? சும்மா பல்லி மாதிரி தொணதொணன்னு கத்திக்கிட்டிருக்கீங்களே...

    இன்னும் உனக்கு என்னம்மா தரணும்னு கேக்கறே? அதுதான் எல்லாத்தையும் வாரிக்குடுத்திட்டு இங்க ஒழுகல்ல உட்கார்ந்திருக்கோமே... போதாது? இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்துக்கிட்டிருந்து ஒரு பயனும் இல்லை. அடுத்து என்ன செய்யப்போறேன்னு ஏதாவது யோசிச்சியா?

    நான் என்ன யோசிக்கணும்ப்பா? நீங்க... நீங்கதான் அதை யோசிக்கணும். ஏன்னா செய்ததெல்லாம் நீங்களும் உங்க பெண்டாட்டியும்தான். அதனால தண்டனையா இருந்தாலும் அதை நீங்கதான் ஏத்துக்கணும்... ரோகிணியின் குரலில் அலட்சியம்.

    கேட்டீங்களா அவ பேசறதை? இப்படியே பேசிப்பேசிதான் மனசை நோகடிக்கறா. அவ எனக்கு சப்பாத்தி செய்ய உதவி செய்யவும் வேணாம். இப்படி பேச்சை நான் கேக்கவும் வேணாம். இந்திராணி மனத்தாங்கல் பட்டாள். பேச்சு மேலும் வளருமுன்னே கிருஷ்ணா பால்பாக்கெட்டுடன் உள்ளே வந்தான்.

    அதன் பிறகு டீ போடுவதில் இந்திராணி மும்மரமாக, கிருஷ்ணா மாவை பிசையலானான்.

    நீ எதுக்குடா இதையெல்லாம் செய்துக்கிட்டிருக்கே வை... நான் இதோ வந்திடறேன்... என்று இந்திராணி சொன்னதை கிருஷ்ணா அலட்சியம் செய்தான். மாவைப் பிசைந்து உருண்டைகளாக்கினான்.

    பெண்பிள்ளை இருந்தும் எதுக்கும் பிரயோஜனம் இல்லை. ஆண்பிள்ளை வேலை செய்யற அதிசயம் எங்கயும் நடக்காது. இது இப்படியே போய்க்கிட்டிருந்தா என்னதான் முடிவு? என்று சாமிநாதன் விரக்தியாக சொன்னபோது மற்ற மூவரும் அமைதியாக இருந்தார்கள். மழைவிட்டும் விடாத தூவானம் போல அந்தக்குடும்பம் ஒரு விதமான மன இம்சைக்கு ஆளாகி விட்டிருந்தது.

    யார் பேசினாலும் துன்பமாகிவிடும் என்னும் ஒரு இக்கட்டான சூழ்நிலை பரவியது. இந்திராணி டீ டம்ளர்களை அவர்களிடம் நீட்டினாள். டீயைக் குடித்த ரோகிணி மீண்டும் புற்றுப்பாம்பாய் அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.

    3

    காலையில் ரதி கல்லூரிக்கும், திருவேங்கடம் கடைக்கும் புறப்பட்டு போன பிறகு நவநீதம் அலுப்புடன் உட்கார்ந்தாள். சூடாக ஏதாவது குடித்தால் தேவலாம் என்று தோன்றியது.

    சுபா... சுபா... உள்ள என்னடி பண்றே? கொஞ்சம் காபி கலந்து கொண்டா... என்னமோ அலுப்பா இருக்கு.

    உள்ளே இருந்து பதில் குரல் வரவில்லை.

    ஏய் சுபா கூப்பிடறது காதில விழலை?

    கூப்பிட்டது காதில விழுந்துது... ஆனா வேற என்னமோ சொன்னியே... அதுதான் காதுல விழலை... முதல்ல காபி போடச் சொல்லுவே... அப்பறம் சாமானைக் கழுவி அடுக்க சொல்லுவே... என்னால அதெல்லாம் முடியாது. அதனால முதல் வேலையே காதில விழலைன்னு சொல்லிட்டேன்.

    அடிப்பாவி... ஏண்டி ஒண்ணு ஒண்ணையும் கோத்து வாங்கி முடிச்சி போடறே? யப்பா... யமகாதகிடி நீ... அப்படியே உங்கப்பாவோட அக்கா மாதிரியே கில்லாடித்தனமாக இருக்கே. ஆனா ஒண்ணு சொல்றேன்... உங்கத்தையும் இப்படி இருந்திட்டு, இப்ப நாய்பாடு... பேய் பாடு படறா... புருஷன்காரன் ஒரு பக்கமும் புள்ளைங்க மறு பக்கமும் இடிக்கறானுங்க... நவநீதம் கேலி பாதியும் கிண்டல் மீதியுமாக சொன்னாள்.

    அதுக்கு முட்டுக்குடுக்கத்தான் உன்கிட்டே பொண்ணு கேட்டு நடையா நடக்கறாங்களா? அம்மா... எனக்கோ அத்தைகூட எப்பவும் ஒத்து வராது. அவங்க பிள்ளைங்க அதுக்கு மேல குணக்குன்று கூட்டம் பாரு... நீ பொண்ணு கொடுக்கலாம்னு நினைக்கக்கூட செய்யாதே... ஒரு வேளை சொந்தம்னு ஆசைப்பட்டா உன் பெரிய பொண்ணு ரதியைக் கொடு. என்னை இழுக்காதே... என்னோட ரேஞ்சே தனி. பெரிய இடத்தில் வாழணும்னு ஆசைப்படறேன்... சுபா எதிரில் சொன்னபோது நவநீதம் தலையில் அடித்துக் கொண்டாள்.

    ஏண்டி உனக்கு... கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? பெத்தவங்கக்கிட்ட பேசறோமேன்னு ஒரு பயம் இருக்காடி உனக்கு? தோல் தடிச்சிப்போயிட்டுது உனக்கு. உன்னைச் சொல்லிக் குத்தமில்லைடி... என்னைச் சொல்லணும்... உணக்கையா செய்து போட்டு நாக்கை வளர்த்திட்டேன்... வேற ஒண்ணுமில்லை...

    சும்மா இரும்மா... என்னமோ பிரியாணியும் பாயாசமுமா செய்துட்டா மாதிரி சிலிர்த்துக்கறியே... இந்த சாம்பாரும் உருளைக்கிழங்கு பொரியலுக்கும் இத்தினி பேச்சு? என் மனசில பட்டதைச் சொன்னேன். அது ஒரு தப்பா உனக்கு?

    இதோ பாருடி... உங்கப்பா தலையிட்டு தன் அக்கா மகனுக்கு பொண்ணு குடுக்கணும்னு நின்னார்னா உன்னைத்தான் அவ வீட்டுக்குத் தள்ளப் பார்ப்பேன். ரதியை இல்லை. அவளைப்பத்தி என் மனசில ஒரு கணக்குப்போட்டு வைச்சிருக்கேன்... நவநீதத்தின் குரலில் வேகம்.

    ஐய... தோடா... நீ சொல்லிட்டா நான் கழுத்தை நீட்டிக் காட்டுவேன்னு காத்திருக்காதே... அதுக்கு வேற ஆளைப்பாரு... போனாப்போகுதுன்னு காபி போட்டுத்தர வந்தேன். வீணா என்னைக் கிளப்பிட்டே... நான் என் பிரண்டு கல்கி வீடு வரைக்கும் போயிட்டு வரேன்... என்றபடி சுபா வாயில் கதவைத் திறந்தாள்.

    எதிரில் நின்றவளைப் பார்த்தபோது அவளுக்கு சிரிப்பு பொங்கியது. உள்ளே திரும்பி, அம்மா... அத்தை வராங்க...

    Enjoying the preview?
    Page 1 of 1