Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Sadugudu
Kaadhal Sadugudu
Kaadhal Sadugudu
Ebook108 pages40 minutes

Kaadhal Sadugudu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஹர்ஷவர்த்தன் “சாரதா என்டர் பிரைஸின் எம்.டி. கோடீஸ்வரர். ஒரே அன்பு மகன் தீபன். மகனிடம் கூடப் பேசக் கூட நேரமில்லாத பிஸினெஸ் மேக்னெட். இறந்த தன் மனைவியின் ஞாபகமாக ஆரம்பித்த கம்பெனி. உழைப்பின் அரிச்சுவடுகளை நன்கு அறிந்தவர்.

தீபனின் காதலி ப்ரணவி .இவன் சிபாரிசால் இவளுக்கு சாரதா என்டர்ப்ரைஸில் வேலை கிடைக்க விதி இவர் மகனின் வாழ்விலும் விளையாடுகிறது.

காரில் பயணிக்கும் போது ஹர்ஷவர்த்தனுக்கு விபத்து ஏற்பட அந்த விபத்தால் பழைய உறவுகள் துளிர்க்க... மர்மமான பல முடிச்சுக்கள் விடுபட கடைசியில் என்ன நடந்தது? இது விபத்தா? கொலை முயற்சியா?

இந்த சடுகுடு விளையாட்டில் ஹர்ஷவர்த்தன் தப்பித்தாரா ? அவரின் கடந்த கால மர்மம் என்ன ? தீபன் ப்ரணவியின் காதல் கைகூடியதா?

விடை நாவல் முழுவதும் படித்தால் தெரியும். நீங்களும் சடுகுடு ஆடிப் பாருங்களேன்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580100804905
Kaadhal Sadugudu

Read more from Vimala Ramani

Related to Kaadhal Sadugudu

Related ebooks

Reviews for Kaadhal Sadugudu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Sadugudu - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    காதல் சடுகுடு

    Kaadhal Sadugudu

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    கனகான்னு கேள்விப்பட்டிருக்கேன், அதென்ன அனகா?

    அனகா அத்புத சாரித்ரா...

    இதுதான் உன்னோட முழுப் பேரா?

    ஞான சூன்யம்.. லலிதா சஹஸ்ரநாமத்துலே வர நாமாவளி. அனகான்னா பாவமற்றவள்னு அர்த்தம்!

    என்னை ஞான சூன்யம்னு கூப்பிடாதே...

    ஏன்… ஸ்கூல் டேஸிலே வாங்கின மார்க்ஸ் ஞாபகம் வருதா?

    உதைச்சேன்னா? என் பேர் ஞான தீபன். ஒண்ணு ஞானம்னு கூப்பிடு. இல்லை தீபன்னு கூப்பிடு

    ரெண்டுமே உங்களுக்குப் பொருத்தமில்லாத பேரு. உங்ககிட்டே ஞானமும் இல்லை. வெளிச்சமும் இல்லை…

    அதைத்தான் நீ கடன் வாங்கிட்டியே?

    ஓ! அப்படியா? சரி திருப்பித் தரட்டுமா?

    கொடுத்தா உடனே திருப்பித் தந்துடுவியா?

    தெரியுமே... இப்படி ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவீங்கன்னு தெரியும். கமல் மாதிரி ஏதாவது கொடுக்கப் போறீங்களா? உடனே திருப்பிக் கேட்பீங்க? அதானே?

    யார் கமல்? மை காட்... நம்ம கூட காலேஜிலே படிக்கறானே... அவனா..?

    கஷ்டம்... நான் சொன்னது கமல்ஹாசனை!

    அடக்கடவுளே... அவர்கிட்டேயும் கடன் வாங்கி இருக்கியா? அவர்கள் சிரித்தார்கள்.

    ஹேய் பேபி... - அவன் மேலே பேச ஆரம்பிப்பதற்குள் அனகா குறுக்கிட்டாள்.

    பேபின்னு கூப்பிடாதீங்க...

    ஏன்?

    ஷக்கலக்க பேபி ஞாபகம் வருது...

    அனகாவைத் தன் 'சாண்ட்ரோ ' காரில் ஏற்றிக்கொண்டு தீபன் கிளம்பினான்.

    அவன் பின்னே ஒரு கார் தொடர்ந்தது.

    2

    பித்தளை, தகடு, 'பப்பளபளபளா' எழுத்துக்கள். ஹர்ஷவர்த்தன் எம்.டி. சாரதா இன்சுலேட்டர்ஸ். அழகான விஸ்தாரமான ரிசப்ஷன் ஹால். 6 அங்குலத்திற்கும் அதிகமான குஷன் பொருத்தப்பட்ட சோபாக்கள். முகம் தெரியும் கண்ணாடி டீப்பாய்கள். ரிசப்ஷனில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான ஷோ கேஸில் ஹர்ஷவர்த்தன் தன் திறமைக்காக வாங்கிய அவார்டுகள். கவர்னருடன், முதல் அமைச்சருடன், பிரதம மந்திரியுடன் என்று ஒவ்வொரு லேமினேஷனிலும் ஹர்ஷவர்த்தன் இருந்தார்.

    தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி எக்ஸிக்யூடிவ் கிளாஸ். இலேசான நரை. புல்சூட்டில் ஒரு பிரபல வட இந்திய அப்பா நடிகரை நினைவுப்படுத்தினார். ரிசப்ஷனைத் திறந்து உள்ளே போனால் ஏஸியின் குளுமை நம்மை பன்னீர் தெளித்து வரவேற்கிறது. இரு புறங்களிலும் பார்ட்டீஷியன்... மோல்டட் தடுப்புக்கள். நீளமான நடைபாதையில் விரிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் கார்பெட் நமக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பு தருகிறது.

    தனித்தனி கேபின்களில் கம்ப்யூட்டர்கள். ஒவ்வொன்றின் முன்னும் ஒரு பாப் தலை அழகி... ஒரு சூரிதார் இல்லை ஒரு ஸ்லீவ்லெஸ் - என்று மிஸ் யூனிவர்ஸ், மிஸ் வோர்ல்ட் என்று அத்தனை அழகிப் போட்டிகளிலும் கலந்து கொள்ளத் தயார் என்று அறிவிப்புத் தரும் அழகிகள். மாடல் அழகிகள். ஒவ்வொருவரின் கையிலும் ஏதாவது சோப், ஷாம்பு இல்லை ஏதாவது ஒரு சாதனம் (!?) தந்து இதை நான் உபயோகிக்கிறேன் என்று அந்த அழகிகள் சத்தியம் செய்தால், உடனே உலகம் முழுவதும் அதன் விற்பனை 'கிராப்' எக்கச்சக்கமாக ஏறும் வாய்ப்பு.

    இந்த பாஷன் பரேடைத் தாண்டி ஹர்ஷவர்த்தன் எம்.டி. என்று போர்ட் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவில் கதவைத் திறந்தால்...

    சிரித்த முகத்துடன் ஹர்ஷவர்த்தன் மொபைல் போனில் யாருடனாவது பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார். இல்லை எதிரில் கலர் கலராக இருக்கும் போன்களில் குறைந்தபட்சம் இரண்டு ரிஸீவர்களையாவது தோளில் சாத்தியபடி 'தாலாட்டு' பாடிக் கொண்டிருப்பார்!

    ஹர்ஷவர்த்தன் நிமிர்ந்தார்!

    அவரின் தலைக்குப் பின்னால்... பிரம்மாண்டமான லைப் சைஸ் லேமினேஷனில் அழகான ஒரு பெண்ணின் சிரித்த முகம். அந்த லேமினேஷனுக்கு மாலை போடப்பட்டு ஊதுபத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிரந்தரமாக எரிந்து கொண்டிருக்கும் மின்சார 'பிளிக்கரிங்' மெழுகுவர்த்தி! அந்தப் படத்தின் கீழே பிரம்மாண்டமான பித்தளை குத்து விளக்கு ஆடம்பர அணிகலனாய்.

    அந்த லேமினேஷன் படம் இருந்த இடத்தின் மேலே ஒரு கோபுர அமைப்பு வேலைப்பாடு.

    ஹர்ஷவர்த்தன் அந்தப் புகைப்படத்தை ‘ரிவால்விங் சேரில்' அமர்ந்தபடி திரும்பிப் பார்த்தார்.

    சாரதா... எல்லோரும் தன் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டுவார்கள்... நினனவுச் சின்னமாக! உனக்கு நான் கோவில் கட்டி இருக்கிறேன் சாரதா...

    நீ அடிக்கடி சொல்லுவியே சாரதா... ஒரு கோவில் கட்டுங்கள்... என்பாய். ரொம்ப வேண்டாம். சின்னதா ஒரு பிள்ளையார் கோவிலை நம் வீட்டு வாசலில் கட்டிவிடுங்கள். கோவில் கட்டினால் கோடி புண்ணியம் என்பாய்…

    அன்று என்னிடம் கோடி இல்லை.

    உன்னிடம் புண்ணியம் மட்டும் இருந்தது.

    இன்று என்னிடம் கோடி இருக்கிறது சாரதா.

    ஆனால் நீ இல்லை! நான்

    Enjoying the preview?
    Page 1 of 1