Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadhal Kalam Idhu
Kadhal Kalam Idhu
Kadhal Kalam Idhu
Ebook250 pages1 hour

Kadhal Kalam Idhu

By JDR

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466657
Kadhal Kalam Idhu

Read more from Jdr

Related to Kadhal Kalam Idhu

Related ebooks

Related categories

Reviews for Kadhal Kalam Idhu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadhal Kalam Idhu - JDR

    23

    1

    இந்த நாவலை எங்கே ஆரம்பிக்கலாம்? ‘பேப்பரில்’ என்று கடிக்க ஆசைதான். ஆனால், வாசகர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு --

    இந்தத் தொடர்கதையை எங்கே ஆரம்பிக்கலாம்? தலைவாரி பூச்சூடி புறப்பட்டுக்கொண்டிருக்கும் லதாவை வர்ணிப்பதில் ஆரம்பிக்கலாமா? அல்லது

    பொதிகைத் தென்றல் தவழ்ந்து வந்து தழுவும் இந்த மாலையை வர்ணிப்பதில் ஆரம்பிக்கலாமா? அல்லது

    மகாகவி பாரதி வாழ்ந்து பெருமை சேர்த்த இந்தக் கடையத்தின் அருமை பெருமைகளை விவரிப்பதில் ஆரம்பிக்கலாமா? அல்லது

    போதும். எப்படி ஆரம்பித்தாலும் விசயம் ஒன்றுதான். அதைச் சொல்லியே ஆரம்பிக்கலாம்.

    லதா பொருட்காட்சி செல்லப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.

    கடந்த வருடம் வயதுக்கு வந்த ராஜகுமாரி போல லதா அழகாய் இருந்தாள். விழிகளில் குவளை, நாசியில் எள்ளுப்பூ. இதழ்களில் செங்காந்தள், பற்களில் முல்லை, கழுத்தில் சங்கு புஷ்பம், காதுகளில் தாமரை மடல் எனத் தன் முகத்தில் ஒரு பூ மார்க்கெட்டையே வைத்திருந்தாள்.

    தந்தக் கரங்களால் பீரோவைத் துழாவி, மஞ்சள் டாப்ஸ் உடன் கூடிய மஞ்சள் கருப்பு சுரிதாரைத் தேர்வு செய்து அணிந்தாள்.

    அம்மா...போயிட்டு வரேம்மா... என்று இந்த நாவலின் முதல் டயலாக்கைப் பேசினாள்.

    பார்த்துப் போயிட்டு வாம்மா... உன் குறும்புத்தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு சமர்த்தா போயிட்டு வா... என்றாள் அம்மா லட்சுமி.

    சரிம்மா... என்றாள் லதா போலி பவ்யத்துடன்.

    உன்கூட யாரெல்லாம் வர்றா?

    நிம்மி, நந்தினி அப்புறம் ப்ரீதா...

    அட எல்லாம் அனுமார் குலமும் ஆஞ்சநேய கோத்திரமுமாச்சுதே... ப்ரீதா பரவாயில்லை... அடக்கமான பொண்ணு...

    ப்ச்...

    லதா...பொருட்காட்சி போறவங்க கவனமா போயிட்டு வாங்க... வம்புக்கார விடலைப் பசங்க சுத்தற இடம். நாலு பேர் நல்ல விதமா இருப்பாங்க... நாலு பேர் சேட்டை பண்ணுவாங்க!

    அதெல்லாம் நாங்க ஜாக்கிரதையா போயிட்டு வருவோம்மா... நீ - கவலைப்படாம இரு... நாங்க என்ன சின்னப் பாப்பாக்களா?

    ராத்திரி ரொம்ப லேட் ஆக்கிடாதீங்கடீ... கடைசி பஸ்ல வரலாம்னு காலம் கடத்திட்டிருக்காம பத்து பத்தரைக்கெல்லாம் வந்திடுற மாதிரி திரும்பிடுங்க... ஆம்பளைப் பிள்ளைங்களானா பரவாயில்லை. பொட்டப் பிள்ளைங்களை அனுப்பிட்டு வயத்துல நெருப்பை கட்டிட்டு இருக்க வேண்டியதாயிருக்கு!

    அம்ம்ம்மா... இதுதானே வேண்டாங்கிறது! லேட்டா வராதேடின்னு சொன்ன ஓகே. அப்புறம் என்ன ஆம்பளைப் பிள்ளைன்னா பரவாயில்லை? ம்? பெண் பிள்ளை ஒரு சந்தர்ப்பவசத்தால் பிந்தி வந்திட்டா என்ன? இப்ப பதினொண்ணரை வரை பஸ் இருக்கு. ஏன், அப்புறங்கூட நைட் சர்வீஸ் இருக்கு. என்ன பயம் எங்களுக்கு? ஆம்பளைப் பிள்ளை, பொட்டப் பிள்ளைன்னு ஏன் பிரிவினை?

    தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள் லதா.

    ஆம்பிளைப் பிள்ளைன்னா மட்டுந்தான் சுதந்திரம், உரிமை எல்லாமா? இப்படி பிரிச்சுப் பிரிச்சு வச்சுதான் பெண்களை கோழைகளா ஆக்கிடுறீங்க... எக்சிபிஷன் போற பொண்ணு கொஞ்சம் லேட்டா வந்திட்டா என்ன? அதுக்கு நீ ஏன் வயித்துல நெருப்பு கட்டிக்கணும்?

    இளம் கண்ணு பயமறியாதுன்னு சொல்லுவாங்க. இள வயசு நீ. இப்படித்தான் பேசுவ... பெத்த மனசு கேட்க மாட்டேங்குதேம்மா...

    லதா தன் அம்மாவை நெருங்கி வந்தாள்.

    ஒரு விசயம் தெரியுமாம்மா... நீ இன்னிக்கு இந்த நிலையில் கேவலமா இருக்கிறதுக்குக் காரணமே ஆண் பெண் அப்படீன்னு பிரிச்சுகிட்டு கோழைத்தனமா அடங்கி இருக்கிறதுதான். பெண் அப்படீன்னா மட்டமா? பேசக் கூடாதா? உரிமை கேட்கக்கூடாதா? அம்மா, ஆக்டபஸ் மாதிரி விரிச்சுக்க ஆயிரம் கை இருக்கு உனக்கு. ஆனா, நீ உன் பலம் தெரியாம உன்னை ஆமைன்னு நினைச்சுகிட்டு கைகால் சுருக்கிக்கிட்டு ஓட்டுக்குள்ளேயே ஒடுங்கிக் கிடக்கிற...

    லதா பேசப் பேச, லட்சுமியின் முகம் மாறியது.

    என்னைக் குத்திப் பேசறியா? எல்லாம் நேரம்டி.. என் நேரம்...

    இல்லைம்மா... என்னையும் உன்னை மாதிரியே கோழை ஆக்கிடாதேன்னு சொல்றேன்...

    என் சூழ்நிலையும் பிரச்னையும் புரியாம பேசுற லதா...

    சூழ்நிலை யாருக்கு வரலை? பிரச்னை யாருக்கு இல்லை? அதை எதிர் கொள்ளவும் சமாளிக்கவும் தைரியம் வேணும்மா... பொண்ணு, பொண்ணுன்னு அடக்கி வச்சு - அதைச் செய்யாதே, இதைச் செய்யாதேன்னு கட்டுப்படுத்தி அவங்களை கோழைகளாக்கிடுறீங்க. பிறகு எப்படித் தைரியம் வரும்? இதனாலதான் பிரச்னைகள்ல சிக்கி மீள முடியாம தவிக்கிறவங்கள்ல பொதுவா - பெண்களே அதிகம் இருக்கிறாங்க...

    நாலு எழுத்து படிச்சிட்டு என்னென்னவோ வியாக்கியானம் பண்ணுறடி நீ...

    தோணிதைச் சொன்னேன். வெளில் நாலு பேரைச் சந்திக்கிறப்ப - நிகழ்ச்சிகளைப் பார்க்கிறப்ப - இதை என்னால உணர முடியுதும்மா. இதுக்கு படிப்பு தேவையில்லை. வெளி அனுபவமே போதும்...

    சிறிது நேரம் மவுனம் நிலவியது.

    அம்மா...

    ம்?

    கோபமா என் மேல?

    இல்லை...

    நான் போயிட்டு வரவா? ப்ரெண்ட்ஸ் காத்துக்கிட்டிருப்பாங்க!

    போயிட்டு வா லதா!

    டாட்டா...பை...பை... என்ற லதா, தன் அம்மாவை நெருங்கி அவள் கன்னத்தில் ‘பச் சென்று ஒரு முத்தம் வைத்தாள்.

    கொச்சுக்காதேம்மா... போயிட்டு வர்றேன் நான்... என்று அம்மாவின் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டினாள். வாசலைத் தாவித் தெருவில் குதித்தாள்.

    தோழி நிம்மியின் வீடு அடுத்த வீதியில் இருந்தது. அங்கேதான் எல்லாரும் சந்தித்துக்கொள்வதாய் ஏற்பாடு.

    நிம்மியின் வீட்டை லதா அடைந்தபோது, நிம்மி, நந்தினி, ப்ரீதா மூவரும் தயார் நிலையில் இருந்தார்கள்,

    வாம்மா ரயிலு...

    ரயிலா...

    ஆமா ரயில் மாதிரி லேட்டா வர்றியேன்னு சொன்னேன். பதினைஞ்சு நிமிசம் லேட்டா வர்ற உன்னை ஜம்போஜெட்டே வருக வருகன்னா வரவேற்க முடியும்?

    சரி சரி, வாங்கப்பா...129 போயிடப் போறான்... அப்புறம் திருநெல்வேலி போக லேட்டாயிடும்!

    நால்வரும் கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்தார்கள்.

    திருநெல்வேலி வழி - முக்கூடல் என்ற போர்டுடன் தடம் எண் 129 கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக பஸ் நின்றிருந்தது.

    லதா... ஹவுஸ் புல்ப்பா... ஸ்டாண்டிங்தான்...

    பரவாயில்லை போயிடலாம். இந்த பஸ்சை விட்டுட்டா அடுத்த பஸ் இன்னும் முக்கால் மணி நேரம் ஆயிடும்!

    ஆமாடி, போயிடலாம்! என்றாள் நந்தினி.

    அவர்கள் பஸ் ஏறினார்கள். நிம்மி, அவளுக்குப் பின் ப்ரீதாவும், நந்தினியும். கடைசியில் லதா என்ற வரிசையில் நின்றிருந்தார்கள்.

    பஸ் புறப்பட்டது.

    பொட்டல்புதூர் கிளைச்சாலையில் முக்கூடல் நோக்கி அந்த பஸ் முன்னேறியது. பாப்பான்குளம் தாண்டியபோது

    நந்தினீ... கிசுகிசுப்பாய் அழைத்தாள் லதா.

    என்னடி?

    சேப்டி பின் இருக்குதா?

    ஏன்ப்பா... ஜிப் அவுந்திட்டா?

    ச்...பின் இருக்குதா? இருந்தா கொடு...

    நந்தினி ஊக்கு கழற்றிக் கொடுத்தாள். வாங்கிக் கொண்ட லதா, தன்னை மிக நெருங்கி உரசியபடி நின்று மூட்டைப்பூச்சி தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞனின் கையை சேப்டி பின்னால் பதம் பார்த்தாள்.

    கையில் ஊக்கால் குத்து வாங்கிய அவன், ஸ்ஸ்... என வாய்க்குள் முனகியபடி கையை ரகசியமாய் உதறி, தடவி விட்டுக்கொள்வதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தாள்.

    லதா?

    என்ன நந்தினி?

    யாரையாவது குத்தினயா, என்ன?

    ம்...எனக்குப் பின்னாடி நிக்குதே கேணம்...

    பாவம்ப்பா... தேமேன்னு நிக்குது!

    கொஞ்ச நேரம் முன்னாடி பார்க்கலையே நீ. இவனோட ஒரு கை ஆயிரம் மூட்டைப் பூச்சிக்குச் சமம்!

    ம்?

    இனிமே சுரிதாரைப் பார்த்தா அவனுக்கு சேப்டி பின் ஞாபகந்தான் வரும். நல்ல பேருப்பா சேப்டி பின் அப்படீன்னு... நம்மோட சேப்டிக்கு ரொம்பதான் உதவுது!

    பஸ் முக்கூடலில் நின்ற போது அவன் இறங்கிக் கொண்டான். நின்றிருந்தவர்களுள் பெரும்பாலானோர் இறங்கிக்கொள்ள ஓரிரு சீட்கள் காலியாயின.

    மூன்று பேருக்கான இருக்கையில் ஆண்கள் இரண்டு பேர் அமர்ந்திருக்க, ஒரு நபருக்கான இடம் காலியிருந்தது.

    சார், கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்குங்க! என்று அங்கே அமர்ந்தாள் லதா.

    பொருட்காட்சி நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிக் கொண்டார்கள்.

    ஒரு விசயம் எனக்குப் புரியலை, லதா!

    என்ன நந்தினி?

    பஸ்சுல நின்னுட்டு வந்தப்ப எவனோ உரசினான்னு ஊக்கால குத்தின நீ, உன்னோட வசதிக்கு உட்கார இடம் வேணும்னப்ப மட்டும் எவனோ தெரியாத ஆம்பளை பக்கத்துல உட்கார்த்தியே...

    பஸ்சுல பக்கத்துல நிக்கறதையோ, உட்கார்றதையோ, தற்செயலா உடல் மேல உடல் படுறதையோ தப்புன்னு சொல்லலை நான். அது குறுகின கண்ணோட்டம்ங்கிறது என் எண்ணம். ஆனா, இந்தத் தவிர்க்க இயலாத சூழ் நிலையைப் பயன்படுத்தி அத்துமீறி உடலைத் தொட்டுச் சீண்டறானுங்களே அதைத்தான் நான் கண்டிக்கிறேன்... தீவிரமான குரலில் சொன்னாள் லதா.

    கூட்டத்துல நின்னுட்டிருக்கிற பொண்ணையோ, தனக்கு முன் சீட்டுல உட்கார்ந்திருக்கிற பொண்ணையோ சீண்டுற ஒருத்தன் பக்கத்துல காலி சீட் இருந்தா உட்கார்ந்து பாரு. நிச்சயம் அவன் ஜென்டிலா நடந்துக்குவான்...

    ஆமாப்பா... என்றாள் நிம்மி.

    இது தான் சைக்காலஜி. பஸ்ல அறிமுகமில்லாத ஒரு பொண்ணை, சான்ஸ் கிடைக்கிறப்ப தொட்டுப் பார்க்கிறவன் அதே பொண்ணு தன் பக்கத்துல உட்கார்றப்ப அடக்க ஒடுக்கமாயிடுறான். தன் பக்கத்துல அவ உட்கார்றான்னா, தன்னோட டீசன்சியை நம்பி அவ உட்கார்றதை அவன் உணர்றான். அந்த நம்பிக்கைக்கு அவன் துரோகம் பண்ணுறதில்லை. இயல்பாவே ஒரு கவுரவ நன்னடத்தை வந்திடுது. ஆண் - பெண் பிரிவினைகள் குறைஞ்சு சமத்துவம் வர்றப்ப ஏற்படுகிற நல்ல விசயம் இது...

    கரெக்ட் என்றாள் நந்தினி.

    பஸ்சுல ஆம்பிளை பக்கத்துல உட்கார்றதினால கற்பு போயிடப் போறதில்லை ஒரு ஜென்டில்னஸ்தான் உருவாகும்!

    லதா, உன்னோட கண்ணோட்டம் எல்லாம் முற்போக்கா இருக்குடி...பேசாம உன் பேரை பொம்பளை அந்துமணின்னு மாத்தி வச்சிடலாம்ப்பா...

    ஹேய், என் மூஞ்சி டீ கப் மாதிரியா இருக்கு?

    இல்ல...சாசர் மாதிரி...

    அவ்ள் சப்பையாவா?

    இல்லைடிம்மா... சாசர்னா வட்டமா... நிலா மாதிரி. பவுர்ணமி நிலா மாதிரி...ஹி...ஹி... பேசியபடியே பொருட்காட்சி அரங்கினுள் நுழைந்தார்கள்.

    அவன் தனது யமஹா பைக்கை பொருட்காட்சி அரங்கம் முன் பார்க்கிங் பகுதியில் நிறுத்தினான். நிதானமாய்க் காசு எடுத்துக் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொண்டான். பார்க்கிங் பகுதியிலிருந்து வெளிவந்தான்.

    பொருட்காட்சி அரங்கம் நிமிர்ந்து நின்றிருந்தது. ஒரு கோட்டையின் வாசல் போல கம்பீரமாய் நுழைவாயில் அமைந்திருந்தது. மனிதர்கள் சாரை சாரையாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள்,

    கும்பல் கும்பலாய்ப் போய்க்கொண்டிருந்த மக்களைப் பார்த்தான் அவன். அடேயப்பா எவ்வளவு கூட்டம்! ஆளே அடையாளம் தெரியாத லதாவைக் கண்டுபிடித்துவிடலாமா?

    இந்தியாவில் வறுமை வறுமை என்கிறார்கள், இந்தியா ஒரு ஏழை நாடு என்கிறார்கள். விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்கிறார்கள். ஆனால் பணம் செலவு செய்து சினிமாவும் பொருட்காட்சியுமாய்ப் பொழுதைப் போக்கும் கூட்டம் குறைந்ததாகத் தெரிய வில்லையே... காலை பத்து மணி சினிமா காட்சிக்கு ஒன்பது மணிக்கே வந்து நின்று, டிக்கட் எடுக்க அடிதடியில் இறங்கி உயிரைக்கூட விடும் கூட்டம் இங்கே இருக்கிறது. இந்த மனித சக்தியும் பணமும் ஆக்கபூர்வமான செயல்களில் செலவு செய்யப்பட்டால் எவ்வளவு முன்னேற்றம் இருக்கும்!

    அவன் நகர்ந்தான். இளம் பெண்களைக் கவனித்தான். ‘எத்தனை வித உடைகள்! அவள் எப்படி இருப்பாள்? அழகாக...? அழகில்லாமல்? சுமாராக? எப்படி இருப்பாள்? அவள் என்ன உடை அணிந்திருப்பாள்? சேலை? சுரிதார்? மிடி? சல்வார் கம்மீஸ்! அல்லது பெயர் தெரியாத ஏதோ ஒரு மாடர்ன் டிரஸ்?’ யோசித்தான்.

    டிக்கட் கவுண்டரில் டிக்கட் வாங்கிக் கொண்டு. நுழைவாயிலை அடைந்தான். டிக்கட் கிழித்த இளைஞனிடம் கேட்டான், ஆபீஸ் எங்கே இருக்கு, சார்?

    தோ அந்தப் பக்கம்... சமூகநலத்துறை ஸ்டால் பக்கமா, அங்கே யாரைப் பார்க்கணும் சார்?

    பதில் கூறாமல் அலட்சியமாய் நடந்தான் அவன். பொருட்காட்சி அலுவலகம் வந்து - பொறுப்பாளரை அணுகினான்.

    எக்ஸ்யூஸ் மீ, சார்...

    எஸ்...என்ன வேணும்?

    நான் கடையத்துலேர்ந்து வர்றேன் சார். என் கூட எக்சிபிஷன் வந்த என் அக்கா பொண்ணு கூட்டத்துல தவறிட்டா. மைக்குல அனவுன்ஸ் பண்ணி... அவளை... வரச்சொல்லணும்!"

    நீங்க அந்த பொண்ணுக்கு யாரு?

    மாமா சார்... அவ என் அக்கா பொண்ணு!

    சரி, அந்தப் பொண்ணைப் பற்றின விவரம் சொல்லுங்க...

    அவன் சொன்னான்: மிஸ் லதா, ப்ரம் கடையம்...

    2

    பொருட்காட்சி அரங்கினுள் லதா அன் கோ நுழைந்தது. இளசு, சிறிசு, பெரிசு எனக் கும்பல் கும்பலாய் மனிதர்கள். திடீர் திடீர் என முளைத்திருந்த இன்ஸ்டென்ட் கடைகள். அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்துகிற வகையில் அமைக்கப்பட்ட ஸ்டால்கள்..

    வளையம் வீசுதல் போன்ற சில்லறைச் சூதாட்டங்கள்... ராட்சச ராட்டினம், சர்க்கஸ், பொம்மலாட்டம், மரணக் கிணறு போன்ற பொழுதுபோக்குச் சமாச்சாரங்கள்...

    லதா, வாப்பா பிளாஸ்டிக் வளையல் வாங்கலாம்... என்றாள் ப்ரீதா. நுழைவாயில் அருகில் இருந்த அலங்காரக் கடைக்குள் புகுந்தார்கள்.

    ப்ரீதா வளையல் பகுதியில் துளாவி, பட்டையாய் இருந்த சிவப்பு வளையலை எடுத்தாள்.

    "இது நல்லாருக்கா, நிம்மி...

    நிம்மி பதில் சொல்லுமுன் அவர்கள் அருகில் ஆண் குரல் கேட்டது.

    என்னடா குமார்... மூஞ்சியில அடிக்கிற மாதிரி டார்க் சிவப்பு வளையலை எடுக்கிற? மாநிறமான உன் தங்கச்சிக்கு லைட் கலர் வளையல் தான் அம்சமா இருக்கும், மச்சான்...

    குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே மூன்று இளைஞர்கள் நின்றிருந்தார்கள்.

    ஒரு டீ சர்ட், ஒரு ஜிப்பா, ஒரு பனியன்! (பனியனில் ‘என்னை ஒரு முறை முயலவும்’ என்பதன் ஆங்கில மொழியாக்கம்)

    டீ சர்ட் அணிந்திருந்தவன் கையில் ஒரு சிவப்பு வளையல் வைத்திருந்தான்.

    ப்ரீதா சட்டெனத் தன் கையிலிருந்த வளையலைக் கீழே வைத்தாள்.

    வாங்கப்பா... வேறு கடைக்குப் போகலாமே!

    ஏன் வேற கடை?

    எனக்குப் பிடிக்கலை, லதா!

    ஏகப்பட்ட வெரைட்டியும் டிசைனும் குவிஞ்சு கிடக்குது... எதுவுமேயா பிடிக்கலை?

    இந்தக் கடையே பிடிக்கலை...

    இந்த ரீலுதானே வேண்டாம்ங்கிறது? எத்தனை டிசைன் இருக்கு? இரு, நல்லதா பார்த்து நானே செலக்ட் பண்ணித் தர்றேன்... என்ற லதா, வளையல் வரிசையில் தேடி, இளம் ரோஸ் கலரில்

    Enjoying the preview?
    Page 1 of 1