Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Vaarisu
Kolai Vaarisu
Kolai Vaarisu
Ebook127 pages1 hour

Kolai Vaarisu

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466534
Kolai Vaarisu

Read more from Jdr

Related to Kolai Vaarisu

Related ebooks

Related categories

Reviews for Kolai Vaarisu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Vaarisu - JDR

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    1

    "இதுதான் சார் ஆழ்வார்குறிச்சி. இறங்கிக்குங்க..." என்றார் கண்டக்டர் அருணிடம்.

    அருணும் அவனருகில் அமர்ந்திருந்த இந்துஜாவும் எழுந்தார்கள். தங்கள் அரிஸ்டோகிராட்களையும், ஹோல்ட் ஆல் மற்றும் அடிடாஸ்களையும் எடுத்துக்கொண்டு இறங்கினார்கள்.

    அந்த அதிகாலை ஐந்து மணியின் குளிர் சில்லென்று ஊசியாய் முகத்தில் குத்தியது.

    இஸ்... ஸ்... குளிருது... என்னா பனி! என்ற இந்துஜா தன் முன்றானையை தோளைச் சுற்றிப் போர்த்திக் கொண்டாள்.

    அந்த பஸ்ஸின் முன்வாசல் வழியாக ஒரு சிறுவன் ஒரு பார்சலை இறக்கிக் கொள்ள, பேப்பர் கட்டு இறக்கியாச்சுனா போலாம். ரெய்ட்ஸ் என்றார் கண்டக்டர் ஒரு காட்டுக்கத்தல் கத்தியபடி.

    அந்தப் பையன் பேப்பர் பார்சலை சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானான். அருண் அவனை நெருங்கினான்.

    தம்பி, இங்கேருந்து கடனா அணைக்குப் போக முதல் பஸ் எப்போ?

    கடனா டேமுக்கா. ஆறே முக்காலுக்கு ஒண்ணு வரும். அப்புறம் பதினொன்றரைக்குத்தான். அடுத்தது அடிக்கடி அந்த ரூட்டில் பஸ் கிடையாது சார்.

    அப்படியா... ம்... இது என்ன நியூஸ் பேப்பரா?

    ஆமா சார்...

    தினமலர் ஒண்ணு குடு என்ற அருண், ஒரு நியூஸ் பேப்பர் வாங்கிக் கொண்டான்.

    அத்தப் பையன் புறப்பட்டுப்போக, அருண் இந்துஜாவிடம் வந்தான்.

    உங்களுக்கு பேப்பர் கிடைச்சுட்டா... என்று சிரித்தாள் இந்துஜா.

    அருண் அந்த ஏரியாவை ஒரு பார்வை பார்த்தான். ஒரே ஒரு டீக்கடை மட்டும் சுமாரான சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

    அந்தக் கடைமுன் நின்றபடி மூன்று முண்டாசு தலையர்கள் சூடாக டீயோ, காபியோ உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். மற்ற கடைகள் நோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் நித்திரை செய்தன.

    அருண், ஒருமாதிரி குளிரா இருக்கு. டீ குடிப்போமா என்ற இந்துஜாவைக் கூட்டிக்கொண்டு, திறந்திருந்த அந்த ஒரே ஒரு கடைக்கு விஜயம் செய்தான் அருண்.

    ரெண்டு டீ... என்றவன் கடைக்குள் கண்களை சுழற்றினான். கண்ணாடி பிரேமிற்குள் லட்சுமி காசுகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தாள். இயேசு ஒரு பாறை அருகில் ஜெபம் செய்து கொண்டிருந்தார். புத்தர் உட்கார்ந்த நிலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.

    இந்தாங்க சார் டீ... கடைக்காரர் நீட்டிய இரண்டு டம்ளர்களில் ஒன்றை இந்துஜாவுக்கு வழங்கிவிட்டு இன்னொன்றைத் தான் எடுத்துக்கொண்டான். டீயை வேறு வழியின்றி ரசித்து ரசித்து குடித்துவிட்டு காசு கொடுத்துவிட்டு பழைய இடத்திற்கு வந்தார்கள்.

    இன்னும் விடியவில்லை. பஞ்சாயத்து போர்டின் தெரு விளக்குகள் அழுது வடிந்து கொண்டிருந்தன.

    வயதுக்கு வந்த பெண்கள் குடமும் சிறிய துணி மூட்டையுமாய்க் குளிக்கச் சென்றார்கள். அவர்களை ரசித்து மார்க் போட முயன்ற அருணுடன் தெரு விளக்கின் வெளிச்சம் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியது. இந்துஜா அருணுக்கு நெருக்கமாய் வந்து நின்று கொண்டாள்.

    அருண், இத்தனை நாள் நாம சிட்டியிலேயே இருந்திட்டு இப்ப இந்த வில்லேஜுக்கு வந்திருக்கோம். சூழ்நிலை வித்தியாசமா இல்ல!

    ஆமா இந்து... நகரத்துலேயே சுத்திகிட்டிருந்தா வாசகர்களும் போரடிச்சுப் போயிடுவாங்க. நாம போகப் போற இடம் மலை அடிவாரம். அது ஒருமாதிரி காட்டுப் பிரதேசம். இங்கேருந்து மேற்கே பத்து கிலோ மீட்டர் தள்ளி மேற்குத் தொடர்ச்சி மலையோட அடிவாரப்பகுதி...

    பேப்பரை வாங்கி சும்மாவே வச்சிட்டிருக்கீங்க என்ற இந்துஜா அருணிடமிருந்து தினமலரை வாங்கிக் கொண்டாள். தெரு விளக்கிற்கு நேர் கீழே நின்றபடி நியூஸ் பேப்பரைப் புரட்டி விழிகளை அதில் மேயவிட்டாள்.

    பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த இந்துஜா திடீரென வாவ் என்றாள். அருண், நம்மைக் கூப்பிட்டிருக்கிறவர் பேர் என்ன?

    சுந்தரேச்வர மகாலிங்க சைலப்ப பூபதி

    தப்பு. மகாலிங்க சுந்தரேச்வர சைலப்ப பூபதி...

    அட ஆமா... அவரைப்பத்தி பேப்பர்ல் ஏதாவது செய்தி போட்டிருக்குதா இந்து?

    ம்ஹூம்... அவர்தான் போட்டிருக்கிறார்.

    அருண் ஆர்வமாய் நெருங்கி வந்தான்.

    என் உயிரோடு கலந்து வாழும் என் இதய தெய்வங்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. அப்புறம் ரெண்டு போட்டோ போட்டிருக்கு அருண். ஒண்ணு திரு. ராஜா சுப்ரமணிய சுந்தர பூபதி, அடுத்தது திருமதி. ராணி கல்யாணி சுந்தர பூபதி. கீழே, உங்கள் நினைவில் வாடும் மகாலிங்க சுந்தரேச்வர சைலப்ப பூபதி வாசித்து விட்டு இந்துஜா நிமிர்ந்தாள். அருண் அந்த பேப்பரை வாங்கிக் கொண்டான்.

    இதுல ஒரு விசேஷம் கவனிச்சீங்களா அருண்?

    என்ன விசேஷம் இந்து? என்ற அருண் அந்த நினைவு அஞ்சலியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    ராஜா சுப்ரமணிய சுந்தர பூபதி இந்த மாசம் ஏழாம் தேதி இறந்திருக்கார். ராணி கல்யாணி அடுத்த நாளே அதாவது எட்டாம் தேதி இறந்திருக்கிறாங்க. ரெண்டு பேரும் அடுத்த அடுத்த நாள்கள்ல கடவுள்கிட்ட போயிட்டாங்க.

    இந்த மரணங்கள் - சம்மந்தமாதான் - அந்த சுந்தரேச்வர மகாலிங்...

    தப்பு... தப்பு...

    ஸாரி... அந்த ஏதோ ஒரு பூதியை நாம சந்திக்கப் போறம்... போய் பேசினாத்தான் மற்ற விவரம் தெரியும்.

    அருண் வாட்சைத் திருப்பி மணி பார்த்தான். நேரம் இப்போது சரியாக ஐந்து மணி முப்பது நிமிடங்கள் என்று உணர்த்தியது அவனது கடிகாரம். பஸ் வர இன்னும் ஒண்ணே கால் மணி நேரம் இருக்கிறது.

    அருண் பேப்பரை மேய்ந்தான்... குளித்துவிட்டு ஈரச் சேலை சரசரக்க அவன் முன்னால் ரோட்டில் குடம் தூக்கி வந்த இளசுகளை ரசித்தான். நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து, காலை வெளிச்சம் தோன்றி, இருள் கலைய, அருணும் இந்துஜாவும் கடனா டேமம் பஸ்சுக்காக காத்திருந்தார்கள்.

    கடனா அணைக்கட்டில் இறங்கிய எட்டு பயணிகளில் நால்வர் ஆண்கள், இருவர் பெண்கள், மற்றும் இருவர் குழந்தைகள். அவர்கனில் அருணும் இந்துஜாவும் இருந்தார்கள்.

    எதிரே ந்நீசளமாய் அணைக்கட்டும் சற்று தொலைவில் குவார்ட்டர்ஸும் தெரிய, அருணும் இந்துஜாவும் அந்த சுந்தரேச்... சாரி... மகாலிங்க சுந்தரேச்வர சைலப்... ஹக் நமக்கே தாடை சுளுக்கிக் கொண்டது. இனி அவர் பெயரை பூபதி என்றே வைத்துக்கொள்வோமா!

    இந்தப் பூபதியைப் பற்றி யாரிடம் விசாரிப்பது என்ற குழப்பத்தில் பார்வையைச் சுழற்றியபோதே

    ஐயா... என்ற குரலுக்கு அருண் சட்டென்று திரும்பி இந்துஜாவை முறைத்தான்.

    என்ன இந்து. நகரத்திலேர்ந்து கிராமத்துக்கு வந்ததும் ஐயா, கொய்யான்னு எல்லாம் கூப்பிட ஆரம்பிச்சுட்டே? அசிங்கமா இருக்கு... சும்மா எப்பவும் போல அருண் அப்படீன்னே கூப்பிடு.

    ஐயா... இடப் பக்கம் குரல் வர, அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்து இனிமையாய் அதிர்ந்தான்.

    வ்வுய்க் என்று மனது விசிலடித்தது. கட்டம் போட்ட ஒரு சேலையைச் சுற்றிக்கொண்டு, செதுக்கிய முகமும் தயக்க விழிகளுமாய் அந்த நாட்டுப்புற டீன் ஏஜ்.

    நீதான் கூப்பிட்டியா... உனக்கு என்ன வேணும்?

    ஜமீந்தார் அய்யா வூட்டுக்கு வர்றது நீங்கதாணுங்களே?

    அட, வாட் எ ஸ்வீட் வாய்ஸ்... இன்னொரு தடவை சொல்லேன்... என்று சிலாகித்த (சிலாகித்த அப்படீன்னா கரெக்ட் அர்த்தம் என்னங்க?) அருணை, இந்துஜா விலாவில் இடிக்க, அந்த நாட்டுக்கட்டை மிரட்சியாய் விழித்தது.

    ஜமீன்தார் வீட்டுக்கு வர்றது நாங்கதான். எங்கள கூட்டிட்டுப் போக வந்தியா? என்றாள் இந்துஜா.

    ஆமா... வாரீங்களா... என்ற அந்த நாட்டுக் கட்டை தன் முன்றானையை வட்டமாக சுற்றி தலையில் வைத்து, சூட்கேசுகளை வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள்.

    அருணின் பார்வை அந்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1