Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendral Varum Jannal
Thendral Varum Jannal
Thendral Varum Jannal
Ebook239 pages1 hour

Thendral Varum Jannal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தென்றல் வரும் ஜன்னல் என்கின்ற இந்தத் தலைப்பைப் படித்தவுடன் இது ஒரு மென்மையான காதல் கதையாய் இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதே போல் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக் கொண்டு புனையப்பட்ட கதையாய் இருக்குமோ என்று நினைத்தாலும் தவறு.

இது ஒரு மருத்துவம் சார்ந்த கதை. இந்த கதைக்கான கரு கிடைத்தது ஒரு கல்லூரிக்குள். எனக்கு நண்பராய் இருக்கும் பேராசிரியர் ஒருவரைப் பார்ப்பதற்காக நான் கோவையில் உள்ள விவசாயக் கல்லூரிக்கு சென்றிருந்த போது 'ஜெனிடிக்ஸ்' டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த பேராசிரியர் திரு மகேஷ்வரன் என்பவர் என்னை அடையாளம் தெரிந்துகொண்டு பேசினார்.

"ராஜேஷ்குமார் நீங்க எழுதின நிறைய நாவல்களைப் படிச்சிருக்கேன். பெரும்பாலும் உங்களுடைய நாவல்கள் க்ரைம் சம்பந்தப்பட்ட விஷயங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. நீங்க ஏன் நவீன மருத்துவத்தை அடிப்படையாய் வைத்து நாவல் எழுதக்கூடாது?" என்று கேட்டார். நானும் "சமயம் வரும்போது எழுதுகிறேன்." என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தேன். ஆனால் அவரோ "நோ. நோ. சமயம் வரும் போது, எழுதறதாவது.? அதுக்கான சமயம் வந்தாச்சு." என்று சொல்லிவிட்டு ஒரு கேள்வியைக் கேட்டார்.

"ஜீன் தெரபி என்கிற வார்த்தையைக் கேள்விப் பட்டிருக்கீங்களா?"

"ம். கேள்விப்பட்டிருக்கேன், ஆனா அதுபற்றிய முழு விபரங்களும் எனக்குத் தெரியாது. புத்தகம் கிடைச்சா படிக்கணும்." அவர் சிரித்தார். "நீங்க எந்த புத்தகத்தையும் படிக்க வேண்டாம். நான் இப்போ ஒரு மணி நேரம் ஃப்ரீ. நீங்க ஃப்ரீயாய் இருந்தா சொல்லுங்க ரெண்டு பேரும் என்னோட ரூமுக்குப் போய்ப் பேசுவோம்."

நானும் ஒரு புதுவிஷயத்தை தெரிந்து கொள்வதற்காக அவரோடு புறப்பட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஜீன் தெரபியைப்பற்றி என்னிடம் பேசினார். மனிதர்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் காரணம் ஜெனடிக் பிராப்ளம்தான் என்று சொன்னவர், நம் உடம்பில் உள்ள செல் ஜீன்களை மாற்றம் செய்வதின் மூலம் எல்லாவகையான நோய்களையும் குணப்படுத்த முடியும் என்றார்.

நான் உடனே "ஆஹா. மருத்துவத்துறைக்குள் தென்றல் வீச ஆரம்பித்து விட்டது. இனி மக்கள் ஆரோக்கியமாக வாழலாம்." என்று சொன்னேன். அதற்கு அவர் 'இது தென்றல் மட்டும் இல்லை. புயலாகவும் மாற 50% வாய்ப்புள்ளது.' என்று சொல்லி ஜீன் தெரபியில் உள்ள ஆபத்துக்களை எடுத்துச் சொன்னபோது அதிர்ந்து போய்விட்டேன்.

இது தென்றல் வரும் ஜன்னல் மட்டும் இல்லை. புயலும் வரும் ஜன்னல் என்பதைப் புரிந்துகொண்டேன் பேராசிரியர் ஜீன் தெரபி பற்றி சொன்ன சாதக விஷயங்களையும் பாதக விஷயங்களையும் இந்த நாவலில் பதிவு பண்ணியுள்ளேன். படித்துப் பாருங்கள்

- ராஜேஷ்குமார்.

Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580100401600
Thendral Varum Jannal

Read more from Rajesh Kumar

Related to Thendral Varum Jannal

Related ebooks

Reviews for Thendral Varum Jannal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendral Varum Jannal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    தென்றல் வரும் ஜன்னல்

    Thendral Varum Jannal

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    தென்றல் வரும் ஜன்னல்

    1

    பணக்காரத்தனத்தோடு நான்குமாடிகளுக்கு வளர்ந்திருந்த அந்த பிரைவேட் கிளினிக்கின் தலைமை டாக்டர் நீரஜ் - கார் சாவியைப் பொறுக்கிக்கொண்டு எழமுற்பட்டபோது - அவருடைய மேஜையின் மேல் அத்தனை நேரம் சாதுவாய் உட்கார்ந்திருந்த ஆரஞ்சு நிற டெலிபோன் வீறிட ஆரம்பித்தது.

    ரிசீவரை எடுத்து, அலோ... என்றார்.

    டா...டாக்டர்... நா... நான் வசியாபூரீ பேசறேன்...

    நீரஜ் வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டே லேசான உற்சாகத்தோடு பேசினார்.

    என்னம்மா! நல்லா இருக்கியா..? போன மாசம் வெயிட்டை அம்பது கிலோவா குறைச்சிட்டுப் போனே... அதை அப்படியே மெயின்ட்டெயின் பண்றியா... இல்லை மறுபடியும் சதை போட்டுட்டியா..? இப்போ நீ போன் பண்ணியிருப்பதைப் பார்த்தா வெயிட் போட்டுட்டேன்னுதான் நினைக்கிறேன்...

    இ..இல்லை...டாக்டர்...

    இல்லையா... அப்படின்னா ரொம்ப சந்தோஷம்...முந்தாநாள் நான் வி.சி.டி.யில் உன்னோட புதுப்படம் ‘அஞ்சாதே ஜீவா’ பார்த்தேன்... உன்னோட பர்பாமென்ஸ் ரியலி சூபர்ப்... பரவாயில்லை... கவர்ச்சி கதாநாயகியா அறிமுகமான நீ சமீப காலமா எனக்கு நடிக்கவும் தெரியும்ன்னு நிரூபிச்சிட்டுவர்றே...

    டா... டாக்டர்..எ...என்னைக் கொஞ்சம் பேசவிடுங்க... ப்ளீஸ்...

    அவள் குரல் கெஞ்சலாய் வெளிப்பட்டபோதுதான் - அதில் இழையோடிக்கொண்டிருந்த பதட்டத்தையும்... திணறலையும் நீரஜ் கவனித்தார்.

    சற்றே நிதானித்தவர் -

    சொல்லும்மா... என்ன விசயம்.? உன் குரல் ஒரு மாதிரி இருக்கே...

    டா...டாக்டர்...என்னோட உடம்புக்கு என்னவோ ஆயிடுச்சு... நீங்க உடனே இங்கே வரணும்...

    என்னாச்சு...கொஞ்சம் விபரமா சொல்லு...

    உடம்பெல்லாம் திடீர்ன்னு புசுபுசுன்னு வீங்க ஆரம்பிச்சிடுச்சு. கண்ணாடி முன்னால நின்னா என்னை எனக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு இந்த ஒரு மணி நேரத்துக்குள்ளே மாறிப் போயிட்டேன்... பிளிஸ் நீங்க உடனே நேரில் வாங்க...

    ஏதாவது அலர்ஜியா..? அல்லது. அவுட்டோர் ஷூட்டிங்கில் பாய்சன் பைட் ஆயிருக்குமா..?

    அதெல்லாம் இங்கே வந்து யோசனை பண்ணுங்க டாக்டர். உடனே வந்து எனக்கு டிரீட்மென்ட்கொடுங்க ப்ளிஸ்...

    அவளுடைய அவசரத்தைப் புரிந்துகொண்டவராய் -

    இன்னும் பத்து நிமிஷத்தில் நான் அங்கே வர்றேன்... நீ ஒண்ணும் பயப்படவேண்டாம்... அலர்ஜி அல்லது பாய்சன் பைட் ரெண்டில் ஏதோ வொண்ணுதான் இருக்கும்... அதுக்குத் தகுந்த மருந்தோடு வர்றேன்... என்று சொல்லி ரிசீவரை வைத்தார்.

    இன்ட்டர்காமை அழுத்தினார்.

    மறுமுனையில் சற்றே கனமாய், அலோ... கேட்டது.

    சேகர்... வசியாபூரீ வீட்டுக்குப் போகணும். கிட்டோட காருக்கு வந்துடுங்க.

    என்ன பிராப்ளம் டாக்டர்?

    திடீர்ன்னு அவளுக்கு முகம்...கை...காலெல்லாம் வீங்கிக்க ஆரம்பிச்சிடுச்சாம்..பயந்துபோய் கூப்பிடுறா...

    அலர்ஜி ஆகியிருக்குமா..?

    அப்படித்தான் நினைக்கிறேன்... அல்லது டூயட்டுக்காக புல்வெளிகளிலும்... செடி கொடிகளுக்கிடையிலும்.. புரள்றது அவளை மாதிரி நடிகைகளுடைய முக்கியமான டியூட்டி ஆச்சே.. ஏதாவது விஷ பூச்சிகள் தீண்டியிருக்கலாம்... தன்னோட தோற்றத்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ரொம்ப பயந்து போயிருக்கா... நாம போய் முன்னாடி நின்னோம்ன்னா சைக்கலாஜிக் கலா அவளுக்கு நிம்மதி ஏற்படும்...

    நான் காருக்கு வந்துடறேன் டாக்டர்...

    இன்ட்டர்காமை வைத்து விட்டு - அறையைக் கடந்து லிப்டில் கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்.

    இதுவரை தன்னுடைய மருத்துவ வாழ்க்கையில் பார்த்திராத பயங்கர அனுபவத்தைச் சந்திக்கப் போகிறோம் என்பது அப்போது நீரஜ்ஜுக்குத் தெரியாது.

    உலர்ந்த மேகத்தின் நிறத்தில் இருந்த டாட்டா எஸ்டேட் அகலமான கிராதி கேட்டின் முன்னால் நின்று ‘பீம்ப்’ என்று ஹார்ன் விநியோகித்தது.

    கூர்க்கா, கூண்டுக்குள் இருந்து ஓடிவந்து - கேட்டைத் திறந்து வைத்தான்.

    கார் போர்ட்டிகோவில் போய் அடங்கி நின்றதும் - உள்ளே இருந்து பட்டுச்சேலை சரசரக்க கோமதியம்மாள் இடதுபக்கமிருந்து இறங்க -

    பட்டுவேட்டியிலிருந்த கார்மேகம் டிரைவிங் இருக்கையை விட்டு விலகி வந்தார்.

    போர்டிகோ படிகளை ஒட்டியிருந்த சுவற்றில் விரல் முனை அளவு சதுரத்துக்கு அழைப்பு மணி சுவிட்ச் இருந்தது.

    கார்மேகம் அதை அழுத்தினார்.

    உள்ளுக்குள் ஒசை சிதறிக்கொண்டிருக்க - கோமதியம்மாளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

    நாம வருவோம்ன்னு சம்பந்தி வீட்டில் எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க...

    நீங்க எப்பவும் இப்படித்தான் அடுத்தவங்களைத் தவிர்க்க விடுங்க... அட்லீஸ்ட் ஒரு போன்கூட பண்ணாம திடீர்ன்னு அவங்க முன்னால் வந்து நிக்கறது அவ்வளவு சரியா எனக்குப் படலை...

    அதனால என்ன கோமதி. நாம இங்கே வருமோம்ன்னு முன்னமே பிளான் பண்ணியிருந்தா போன் பண்ணி சொல்லியிருக்காலாம்... திடீர்ன்னு ஏற்பட்ட யோசனைதானே...

    அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே - அந்தப் பங்களாவின் முகப்புக் கதவு திறந்தது.

    எட்டிப் பார்த்த மருதாசலம் - பரபரப்புத் தொற்றிக்கொள்ள - உற்சாக முகத்தோடு வரவேற்றார்.

    அடடே... வாங்க வாங்க...

    உள்ளே பார்த்துச் சத்தமாய்க் குரல் கொடுத்தார்.

    அன்னபூரணி... அன்னபூரணி...

    சற்றே குள்ளமாய் பருமனான தோற்றத்தில் இருந்த அன்னபூரணி ஹாலுக்கு அப்பாலிருந்து வெளிப்பட்டாள்.

    கார்மேகத்தையும், கோமதியம்மாளையும் பார்த்ததும் பரபரப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.

    சேலைத்தலைப்பைத் தோளில் போர்த்திக்கொண்டு உதடுகளில் புன்னகையை நிரப்பிக்கொண்டு வரவேற்றாள்.

    வாங்க... உட்காருங்க... என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்...?

    கோமதியம்மாள் சோபாவில் அமர்ந்துகொண்டே சொன்னாள்.

    ஒரு போன்கூட பண்ணாம போறோமேன்னு சொல்லிகிட்டே தான் வந்தேன்...

    மருதாசலம் சிரித்தார்.

    இந்திரா நகர்ல இருக்கிற என்னோட பிரெண்ட் ஒருத்தருக்கு கல்யாணப் பத்திரிகை கொடுக்கப் போயிருந்தோம்... அவர் வீடு மாத்தி இந்த ஏரியாவுக்கு வந்துட்டார்ன்னு தெரிஞ்சது...இவ்வளவு தூரம் வந்தபிறகு உங்க வீட்டுக்கு வராம போனா நல்லா இருக்கா தேன்னு காரை இங்கே திருப்பிட்டேன்... அதனாலதான் போன்கூட பண்ண முடியலை...

    மருதாசலம் சந்தோஷமாய்த் தலையை ஆட்டினார்.

    நீங்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்... இன்னும் மூணு வாரத்தில் சம்பந்தி ஆகப்போகிறோம்... அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒரே குடும்பம் போலத்தானே... நமக்குள்ளே எதுக்கு அநாவசிய பார்மாலிட்டி எல்லாம்...

    அந்த உரிமையை இப்பவே எடுத்துக்கிட்டோம்...

    கார்மேகம் சிரிக்க - அன்னபூரணி கேட்டாள்.

    என்ன சாப்பிடறீங்க... டிபன் ஏதாவது பண்ணட்டுமா..?

    அதெல்லாம் எதுவும் வேண்டாம்... ஸ்ட்ராங்கா ஒரு தம்ளர் காபி கொடுத்தாப் போதும்... கல்யாண வேலை எல்லாம் எந்த அளவில் இருக்கு?

    எல்லாமே பர்பெக்ட்டா நடந்துட்டிருக்கு... ரிலேட்டிவ் சர்கிள்ல பத்திரிகை வெச்சு முடிச்சாச்சு... பிரெண்ட்ஸ்களுக்கு மட்டும் தரவேண்டியிருக்கு...

    இன்னும் மூணு வாரம் இருக்கே..

    அப்படித்தான் இப்ப தோணும்... ஆனால் மூணு வாரம்ங்கறது மூணு நிமிடம் மாதிரிப் பஞ்சாப் பறந்திடும்...

    கிச்சனை நோக்கிச் சென்ற அன்னபூரணி சிறிது நேரத்தில் காபி தம்ளர்களைத் தாங்கிய டிரேயைக் கையில் சுமந்தபடி திரும்பி வந்தாள்.

    அவர்களிடம் பரிமாறுகிற போது கோமதியம்மாள் கேட்டாள்.

    எங்கே என் வருங்கால மருமகளையே காணோமே..?

    வாணி அவளோட பிரெண்ட்ஸ்களுக்குப் பத்திரிகை கொடுக்கிறதுக்காக வெளியே போயிருக்கா...

    அடடா... அன்னிக்கு நிச்சயதார்த்தத்தின்போது பார்த்தது... இப்போ அவளைப் பார்க்கலாம்ங்கற ஆசையோடதான் வந்தேன்...

    மருதாசலம் புன்னகைத்தார்.

    வாணி மத்தியானமே போயிட்டா... இப்போ திரும்பி வர்ற நேரம்தான்... கல்யாணப் பொண்ணு நீ வெளியே போறதே தப்பு... அதனால இருட்டறதுக்கு முன்னால வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லித்தான் அனுப்பியிருக்கேன். அநேகமா ஒரு பத்து நிமிட நேரத்துக்குள்ளே வந்துடுவா.

    கோமதியம்மாள் கார்மேகத்திடம் திரும்பினாள். என்னங்க. வந்தது வந்து ட்டோம். ஒரு பத்து நிமிடம் இருந்து வாணியைப் பார்த்துட்டே போயிடலாம்.

    கார்மேகம் சிரித்தார். தாராளமா இருந்து பார்த்துட்டே போயிடலாம். நாமதான் இன்னிக்கு போகவேண்டிய இடங்களுக் கெல்லாம் போயிட்டு வந்துட்டோமே. பத்து நிமிடம் என்ன ரெண்டு மணி நேரமானாலும் சரி, இருந்து நம்ம மருமகளைப் பார்த்துட்டே போயிடலாம்.

    கோமதியம்மாள் அன்னபூர்ணியிடம் கேட்டாள் - அழைப்பிதழ் கொடுக்க வாணி மட்டும் போயிருக்காளா. இல்லை கூட அவளோட தங்கை உஷாவும் போயிருக்காளா?

    உஷாவுக்கு இப்ப செமஸ்டர் எக்ஸாம். எக்ஸாம் நாளைஞ்சு நாளில் முடிஞ்சுடும். அதுக்கப்புறம்தான் அவள் ஹாஸ்டலில் இருந்து வருவா. வாணி இப்போ தனியாத்தான் போயிருக்கா.

    கார்லதானே?

    ஆமா! பேசிட்டிருங்க. நான் சாப்பிட ஏதாவது கொண்டு வர்றேன்.

    அதெல்லாம் வேண்டாம். உட்காருங்க. அழைப்புக்கு போன இடத்தில் எல்லாம் காப்பி கூல்ட்ரிங்க்ன்னு சாப்பிட்டு வயிறு காஷ்மீர் மாநிலம் மாதிரி இருக்கு. கல்யாண நேரத்துல உடம்பை கவனமா பார்த்துக்கணும்... இல்லேன்னா படுக்கைதான்." எல்லோரும் சிரிக்க மருதாசலம் சொன்னார் –

    வாணிக்கு பதினஞ்சு பவுன்ல ஒரு ஒட்டியாணம் பண்ண கொடுத்து இருக்கோம்.

    இந்தக் காலத்துல யார் ஒட்டியானமெல்லாம் போடறாங்க. அதுக்குப் பதிலா வேறு ஏதாவது பண்ணியிருக்கலாமே?

    கோமதியம்மாள் சொல்லிக் கொண்டிருந்த அந்த விநாடி –

    கார் சத்தம் கேட்டது.

    ரத்தநிற மாருதி கார் போர்டிகோவில் பிரவேசிப்பது ஹாலிலிருந்து பளிச்சென்று தெரிந்தது.

    காரிலிருந்து இறங்கி உள்ளே வந்த வாணியை பார்த்து கார்மேகமும் கோமதியம்மாளும் பலத்த அதிர்ச்சிக்குள் விழுந்து ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.

    2

    காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே வந்த வாணியை கார்மேகமும் கோமதியம்மாளும் திகைப்பும் அதிர்ச்சியும் நிரப்பிக்கொண்ட கண்களோடு பார்த்தார்கள்.

    உள்ளே வந்த வாணி இருவரையும் பார்த்து ஒரு சில விநாடிகள் திடுக்கிட்டு பின் இயல்புக்கு வந்து புன்னகையோடு கை குவித்தாள். வெட்கம் கலந்த சிரிப்போடு வாங்க அத்தே... வாங்க மாமா... என்றான்.

    அவர்கள் புன்னகைக்க மறந்தவர்களாய் இருண்ட முகங் களோடு வாணியின் அப்பா மருதாசலத்திடம் திரும்பினார்கள்.

    இ...இ...இது உங்க பொண்ணு வாணிதானே?

    மருதாசலத்தின் நெற்றி வரிவரியாய் கோடு போட்டது. இது என்ன கேள்வி! அவள் என் பொண்ணு வாணிதான்... ஏதோ புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?

    கார்மேகம் தீர்க்கமாய் வாணியை ஏற இறங்கப் பார்த்து விட்டு மறுபடியும் மருதாசலத்தை ஏறிட்டார்.

    அன்னிக்கு நிச்சயதார்த்தத்தின்போது பார்த்த வாணிக்கும் இப்ப எங்க முன்னாடி நிக்கிற வாணிக்கும் அடையாளமே தெரியலையே... நிறைய வித்தியாசம் இருக்கே.

    கார்மேகம் இப்படிச் சொன்னதும் வாணி சட்டென்று முகம் மாறி தலையைத் தாழ்த்திக்கொண்டு வேகவேகமாய் உள்ளே போய் மறைந்தாள்.

    மருதாசலம் அவஸ்தையான சிரிப்போடு கார்மேகத்திடம் திரும்பினார்.

    சரியா சாப்பிடாமே கொஞ்சம் இளைச்சு போயிட்டா. கழுத்துல தாலி ஏறிட்டா உடம்புல பூரிப்பு வந்துடும். அப்போ சரியாயிடும்...

    கார்மேகம் மறுத்தலாய் தலையாட்டினார். இல்ல மிஸ்டர் மருதாசலம்... இது இளைச்சுப்போன உடம்பு மாதிரி தெரியலை. ஏதோ அடையாளமே மாறிட்ட மாதிரி தெரியுது. அன்னிக்கு இந்த நிலைமையில் உங்கள் பொண்ணைப் பார்த்திருந்தான்னா என் பையன் கல்யாணம் பண்ணிக்க கண்டிப்பா சம்மதிச்சிருக்க மாட்டான்.

    மருதாசலத்தின் முகம் லேசாய் கோபமாகி சிவப்புச் சாயம் பூசிக்கொண்டது.

    நீங்க பேசற பேச்சு சரியில்லைங்க கார்மேகம்! உடம்பு என்ன கல்லா மரமா... அப்படியே இருக்கிறதுக்கு? உடம்புன்னு இருந்தா ஏதாவது ஒண்ணு வரும், போகும். இன்னிக்கு ஒல்லியா இருக்கிற வங்க ஆறு மாசம் கழிச்சுப் பார்த்தா குண்டா தெரிவாங்க. அதே மாதிரி குண்டா இருக்கிறவங்களும் திடீர்ன்னு ஒரு நாளைக்கு இளைச்ச மாதிரி தெரிவாங்க. இதை யெல்லாம் பெரிசா எடுத்துக்க முடியுமா என்ன?

    அதுவரைக்கும் மவுனம் காத்த கோமதியம்மாள் இப்போது சீறினாள். உங்க பொண்ணு இளைச்சு போகலை உருக்குலைஞ்சு போயிருக்கா... பொண்ணைப் பெத்துட்டோமேங்கிறதுக்காக முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி பேசாதீங்க.

    வாணி ஆரோக்கியமாத்தான் இருக்கா.

    "அப்படீன்னு நீங்க சொல்றீங்க. எங்களுக்கு அப்படி தெரியலை. நான் எதையுமே மனசுல வைச்சுகிட்டு பேசத் தெரியாதவள். இப்ப பட்டவர்த்தனமா சொல்றேன். உங்க பொண்ணுக்கு ஏதோ வியாதி இருக்குன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1