Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Palingu Pookalin Oorvalam
Palingu Pookalin Oorvalam
Palingu Pookalin Oorvalam
Ebook164 pages3 hours

Palingu Pookalin Oorvalam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466770
Palingu Pookalin Oorvalam

Read more from Mekala Chitravel

Related authors

Related to Palingu Pookalin Oorvalam

Related ebooks

Related categories

Reviews for Palingu Pookalin Oorvalam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 4 out of 5 stars
    4/5
    fantastic family story. all are should learn the lesson from this story who all are think money value is best

Book preview

Palingu Pookalin Oorvalam - Mekala Chitravel

1

வானக் கடலின் மேகப் படகில் காற்றுத் துடுப்புப் போட்டு நிலவுப் பெண் ஒய்யாரமாக வரும் பின் மாலைப் பொழுது.

வாத்தியார் வீட்டம்மா… கொஞ்சம் வெளிய வாங்கம்மா என்று குரல் கேட்டது. பொறித்துக் கொண்டிருந்த அப்பளப்பூவை வாரி தட்டில் வைத்துவிட்டு அடுப்பை அணைத்து விட்டு வெளியே வந்தாள் மனோன்மணி.

வீட்டுக்கு முன்னால் இடுப்பில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள் கிளியாம்பா. பக்கத்தில் லேசான தள்ளாட்டத்துடன் அவள் கணவன் முத்து நின்றிருந்தான்.

என்ன கிளியாம்பா இந்த நேரத்தில வந்திருக்கே? என்று கேட்கவுமே, நீங்களே இந்த நியாயத்தைத் தீர்த்து வைய்யுங்கம்மா. இந்த மனுஷன் செய்யறது வரவர எனக்கு சகிச்சிக்க முடியலைம்மா கோபத்துடன் பேசிக்கொண்டே வந்த கிளியாம்பா அழக் கிளம்பினாள். பக்கத்தில் நின்றிருந்த முத்து, இந்தா... அம்மாக்கிட்ட இதையெல்லாம் எதுக்கு பஞ்சாயத்து வைசிக்கிட்டிருக்கே? அது ஒண்ணுமில்லை. சின்ன விஷயத்தை இது பெரிசு பண்ணுதும்மா... என்றான்.

எதுய்யா சின்ன விஷயம்? வீட்டில மேய்ஞ்சிக்கிட்டிருக்கற முட்டையிடறக் கோழியைப் பிடிச்சி வித்து, அந்தக் காசிலக் குடிச்சிட்டு வந்திருக்காரும்மா. குழந்தைக்கு அடிக்கடி உடம்பு முடியாம போயிடுதுன்னு வைத்தியர்கிட்ட இட்டுக்கிட்டுப் போனேன். புள்ளை ரொம்ப பலகீனமா இருக்கு தினம் ஒரு முட்டை குடுன்னு வைத்தியர் சொன்னாரு. அதுக்குத்தான்மா வளர்த்தேன். இந்தப் பாவி என்னன்னா இப்படி செய்திட்டு வந்திருக்காரு.

அவளுடைய அழுகைக்கு பதில் சொல்லமுடியாமல் முத்து நெளிந்தான்.

என்ன முத்து இப்படி பண்ணிட்டே? குடிக்கறதால உனக்கு மட்டும்தானே சுகமா இருக்கு? குழந்தையை விட உனக்கு உன் சுகம்தான் முக்கியம். அதுதான்னா அது உன் இஷ்டம். இன்னிக்குக் கோழி... அடுத்ததா வீட்டிலிருக்கற தட்டு முட்டு சாமான்களையெல்லாம் வித்துடு. இந்த பைத்தியக்கார கிளியாம்பா வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சீட்டு போட்டு வாங்கி வைச்சிருக்கற ரெண்டு பவுன் பொட்டையும் வித்துத் தீர்த்திடு. அப்படி எதையாவது விக்கறதுன்னா ராத்திரியில எடுத்துக்கிட்டு போ. பகல்ல நாலு பேர் பார்த்தா உனக்குதான் அசிங்கம். நான் ஒரு பைத்தியம்... அசிங்கத்தைப் பத்தி உன்கிட்ட போய் பேசறேனே? குடிக்கறவன்ல முக்கால்வாசிப்பேர் பன்னிங்கக்கூட சாக்கடையிலத்தானே உருண்டுகிட்டு கிடக்கறீங்க? போ... நீயும் போய் அந்த ஜோதியிலக் கலந்திடு ராசா... மிகவும் சாதாரணமாக மனோன்மணி பேசியது முத்துவை சாட்டையால் அடித்தது போலிருந்தது.

வாத்தியார் வீட்டம்மா... அந்த நட்டுப்பய பேச்சைக் கேட்டு கொஞ்சம் தடுமாறிட்டேம்மா. தப்புதான். இன்னும் ஒரு வாரம் ராப்பகலா வேலைக்குப் போய் ஒரு கோழிக்கு நாலு கோழியா வாங்கிட்டு வந்து வீட்டு முத்தத்தில விட்டிட்டு உங்களைப் பார்க்க வரேம்மா... முத்து வேகமாக நடந்தான்.

கிளியாம்பா அதிசயத்துப் போனாள். தன்னையும் மீறி சொன்னாள். உங்க வார்த்தையில என்ன மாயமந்திரம் இருக்கோ தெரியலைம்மா. இந்த மனுஷன் இப்படி சொல்லிட்டுப் போறாரேம்மா. நிச்சயமா செய்து முடிச்சிடுவாரும்மா. ரொம்ப நன்றிம்மா.

மாய மந்திரம் எல்லாம் இல்லை கிளியாம்பா. முத்து தான் செய்திட்டு வந்திருக்கறது தப்புன்னு உணர வைச்சிட்டேன். கண்ணைத் துடைச்சிக்கிட்டு உள்ளவா. வீட்டுல பால் இருக்கு. பிள்ளைக்குக் குடு. தினமும் கொஞ்சம் பாலில தண்ணி விட்டுக் காய்ச்சி ஹார்லிக்ஸ் போட்டுக் கலந்து குடு. பிள்ளை தெம்பாவும்.

மனோன்மணியுடன் உள்ளே போன கிளியாம்பா, அவள் தடுக்கத் தடுக்க வீட்டிலிருக்கும் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்தாள். கீரையை சுத்தம் செய்து பிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு விடை பெற்றாள். சமையலறை வேலையை மனோன்மணி முடிக்கும்போது பரமேஸ்வரன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார். அவளிடம் சாப்பாடு பாத்திரப் பையை நீட்டியவர்,

என்ன மனோன்மணியம்மா கோர்ட்டுல இன்னிக்கு கேஸ் வந்திருந்துது போலிருக்கு? என்ன தீர்ப்பு குடுத்தீங்க? முத்துப்பய பார்த்தும் பார்க்காதது மாதிரி துண்டைக் காணோம். துணியைக் காணோம்னு ஓடறானே? தீர்ப்பு அவனுக்கு சாதகமில்லையோ? என்று கேலி செய்தார்.

எல்லாம் உங்கக்கிட்ட கத்துக்கிட்டதுதான் வாத்தியாரய்யா. நான் என்ன படிச்சிருக்கேன்? அந்த காலத்து எட்டாங்கிளாஸ்தானே?

அந்த எட்டு படிப்புக்கே இந்த போடு போடறியே.... இன்னும் அதிகமா படிச்சிருந்தா இந்தியாவின் பொருளாதார மேதையாகி இருப்பியே. ராத்திரி சாப்பாட்டுக்கு புளிக்குழம்பா வைச்சிருக்கே? வாசனை ஊரைக் கூட்டுதே... ஒரே நிமிஷத்தில குளிச்சிட்டு ஓடி வரேன் பரமேஸ்வரன் உள்ளே போனார்.

சாப்பிடும்போது பரமேஸ்வரன் சொன்னார். உன் கைக்கு பக்குவத்தை சாப்பிட்டு சாப்பிட்டு வேற யாரோட சமையலும் பிடிக்கலை மனோன்மணி.. அடுத்தவங்க வீட்டுல ஒரு வாய் காபி கூட குடிக்க முடியலைன்னா பாரேன்.

நல்லா இருக்கோ இல்லையோ... இப்படி அன்பா பேசறதில உங்களை யாரும் ஜெயிக்கவே முடியாது. இன்னிக்கு என்ன இவ்வளவு நேரமாகிட்டுது. ஏதும் மீட்டிங்கோ? என்று கேட்டவளைப் பார்த்து பரமேஸ்வரன் சிரித்தார்.

ஆமாம் மீட்டிங்தான். இந்த மாசம் ரிட்டயர் ஆகிறவங்க லிஸ்ட் எடுத்துச் சொன்னாங்க. அதுல நானும் இருக்கேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. இருபத்து எட்டாம் தேதியோட இந்த வாத்தியார் வேலை முடிஞ்சிடும். என்னால ஸ்கூலுக்கு போய் பசங்களைப் பார்க்காம இருக்க முடியுமா? என்னமோ மாதிரி இருக்கு மனோன்மணி கண்கலங்க எதிரில் உட்கார்ந்திருப்பவரைப் பார்த்தபோது மனோன்மணிக்கு கவலை வந்தது.

அவர் எதிரில் அதைக் காட்டிக்கொள்ளாமல், நம்ம கல்யாணத்துக்கு முன்னால இருந்தே வேலைக்குப் போறீங்க. இப்படி ஓயாம ஒழியாம வேலை பார்த்துக்கிட்டே இருக்கீங்களே... உழைச்சது போதும். ஓய்வெடுத்துக்குங்கன்னு அரசாங்கமே உங்களுக்கு ஓய்வு தருது. அதை ஒத்துக்குங்க என்றாள்.

பரமேஸ்வரன் சொன்னார். என்னைப்போல ஓய்வில்லாம உழைச்சிக்கிட்டே இருக்கறவங்களுக்கு இந்த திடீர் ஓய்வு சந்தோஷமில்லை மனோன்மணி.

எனக்காக சந்தோஷப்படுங்க. எப்பவும் ஏதாவது வேலை விஷயமா நீங்க வெளிய போய்க்கிட்டேதானே இருந்தீங்க? இனிமே என்கூட இருங்க. சின்ன வயசில கிடைக்காத தனிமை இப்பக் கிடைச்சிருக்குன்னு நினைச்சிக்கலாமேங்க. கஞ்சி வைச்சிக் குடிச்சாலும் பக்கத்தில பக்கத்தில் உட்கார்ந்து குடிக்கற சுகம் கிடைக்குமே... மனோன்மணி பேசப்பேச பரமேஸ்வரன் அவளையே பார்த்தார்.

அட... உன் மனசில இப்படி ஒரு ஏக்கம் இருக்கா? நான் பாரு உன்கூடவே இருக்கேன். இது தெரியாம இருந்திருக்கேன். போகட்டும் விடு... இனிமே நீ என்ன சொன்னாலும் அது தான் இந்த வீட்டின் சட்டம். பென்ஷன் வரும். உன்னை மகாராணி போல வச்சிக்குவேன். இப்ப எனக்கு ஓய்வு கிடைக்கறதில வருத்தமில்லை. பிள்ளைங்க மூணு பேரையும் செட்டில் பண்ணிட்டோம். இனிமே அவங்களைப் பத்தியும் கவலை இல்லை. மனோன்மணி... ஒரு மனுஷன் எப்ப தெரியாம முழுமையானவனா ஆகிறான்? அவனுடைய நிழலாய் கூடவே நிற்கிற மனைவியை மகிழ்ச்சி படுத்தும் போதுதான். சின்ன வயசில வர்றது எதுவும் நிலையான மகிழ்ச்சி இல்லை... இளமை பறந்தோடிப் போகுதேன்னு கவலைதான் வரும். நடு வயசுதான் வாழ்க்கையை உண்மையா அணுகிப் பார்க்கிற காலம். இப்ப நமக்கு அது வாய்ச்சிருக்கு. இதை முழுசா அனுபவிப்போம்... வா...

வாத்தியார்னு நிரூபிக்கறீங்களே... கை காய்ஞ்சிப் போச்சு எழுந்திருங்க... என்று மனோன்மணி பரிகாசம் செய்தாள்.

பரமேஸ்வரன் சிரித்துக்கொண்டு எழுந்தார்.

மனோன்மணிக்கு நிம்மதியாக இருந்தது.

ஒவ்வொரு ஊழியருக்கும் உனக்கு வயசாகிப் போச்சு... நீ இனிமே இங்கே வேணாம். வீட்டுக்குப் போ என்று வேலை செய்யும். நிறுவனமோ, அரசாங்கமோ அனுப்பும்போது ஏற்படும் வெறுமை மிகவும் ஆபத்தானது. கூடவே இருப்பவர்கள்தான் அதைப் புரிந்து தக்கபடி நடந்து அந்த நிலைமையை மாற்ற வேண்டும். செய்த கடமையை ஒழுங்காகச் செய்துவிட்ட திருப்தி ஏற்பட்டது.

அவள் வேலைகளை முடித்துக்கொண்டு வந்தபோது பரமேஸ்வரன் காற்றாட வெளியில் உட்கார்ந்திருந்தார். அவள் போய் உட்காரும்போது கைபேசிக் கூப்பிட்டது. வழக்கம்போல ஸ்பீக்கரைப் போட்டார் பரமேஸ்வரன். சின்னவள் விமலாதான் கூப்பிட்டது.

யாருடைய பதிலையும் எதிர்பாராமல் விமலா படபடவென பேசினாள். அப்பா... எங்க மாமியாருக்கு ‘உடம்பு சரியில்லை. கர்ப்பப் பையை எடுத்திடணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அடுத்த வாரம் ஆபரேஷன். என்னால பசங்களையும் வைச்சிக்கிட்டு அவங்களையும் பார்த்துக்க முடியாது. வீட்டில் அம்மா சும்மாதானே இருக்கா. உடனே அவளை துணைக்கு அனுப்புங்க. வைக்கிறேன்பா.

மனோன்மணியும் பரமேஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தார்கள்.

நானும் இந்த ஏரியா ஜனங்களும் உன்னை நீதிபதியாக்கி வைச்சிருக்கோம். உன் சின்ன மக நீ சும்மாதானே இருக்கேன்னு சொல்றா? நீ என்ன முடிவு பண்ணியிருக்கே?

உதவிக்குத்தானே கூப்பிடறா? போயிட்டு வரேன். அவ கைப்பிள்ளைக்காரியாச்சே... மனோன்மணி புன்னகை மாறாமல் சொன்னாள்.

2

"விமலா... என்னோட சர்ட் எங்கே வைச்சிருக்கே?" என்னும் வெங்கடேசனின் கூக்குரல் படுக்கையறையை உடைத்தது.

மம்மி என்னை குளிக்க வை. பஸ் வந்திடும் என்னும் கூக்குரல் படுக்கையறையை உடைத்தது.

ஏம்மா விமலா... இன்னும் பேப்பர் வரலியா? இந்த காபியை கொஞ்சம் சூடு பண்ணிக்குடுக்கறியா? என்னும் மாமனார் ரகோத்தமனின் மிரட்டல் வாசல் பக்கமிருந்து வந்தது.

விமலாம்மா... துணி எடுத்துப் போட்டியானா சோப்பு பவுடர்ல ஊற வைச்சிட்டு மத்த வேலையைப் பார்ப்பேன். இல்லைன்னா, நாளைக்குதான் துவைப்பேன். சொல்லிட்டேன் தோட்டத்துப் பக்கமிருந்து வேலைக்காரி வடிவு உறுமின சத்தம் காதைக் குடைந்தது.

விமலாவோ காலில் சலங்கைக் கட்டாதக் குறையாக சதிராடிக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் குக்கர் கத்தியது. மறுபக்கம் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. சமையலறை அல்லோகலப்பட்டு குமுறிக் கொதித்தது.

அந்த நேரம் பாகீரதி மெதுவாகத் தலை நீட்டினாள்.

விமலா உங்கம்மாவை வரச் சொல்லி போன் செய்திட்டியா? இப்பவே சொன்னாத்தான் அவ வர்றதுக்கு சரியா இருக்கும் என்று நூறாவது தடவையாக கேட்டாள்.

வந்ததே விமலாவுக்குக் கோபம்... இருந்த எரிச்சலையெல்லாம் மாமியார் மீது காட்டினாள்.

"எதை எப்ப கேட்கணும்னு உங்களுக்கு நேரம்

Enjoying the preview?
Page 1 of 1