Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jarigai Pattaampoochigal
Jarigai Pattaampoochigal
Jarigai Pattaampoochigal
Ebook154 pages58 minutes

Jarigai Pattaampoochigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466947
Jarigai Pattaampoochigal

Read more from Mekala Chitravel

Related authors

Related to Jarigai Pattaampoochigal

Related ebooks

Related categories

Reviews for Jarigai Pattaampoochigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jarigai Pattaampoochigal - Mekala Chitravel

    1

    வான இலையில் வைக்கப்பட்ட தயிரன்னமாய் நிலவு மினுமினுத்தது. அதைச் சுற்றிலும் முத்து முத்தாய் பொறிந்திருந்த சிங்கக்குட்டி வடாம்கள் போல நட்சத்திரங்கள் சிரித்துக் கொண்டிருந்த பின் மாலைப்பொழுது.

    தன்னைச் சுற்றி உட்கார்ந்தும் நின்று கொண்டும் இருந்தவர்களை பார்த்தபடி மௌனமாக இருந்தான் ரத்தினம்.

    என்ன தம்பி இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படி? ஏதாவது பேசுங்க என்றார் பெரியவர் கண்ணுசாமி.

    நான் என்ன பேசறது? இந்த சூழ்நிலையில் நான் ஏதாவது பேசினா உங்களுக்கெல்லாம் வருத்தமா இருக்கும். அதனாலதான் அமைதியா இருக்கேன்.

    ரத்தினத்தின் பதிலில் கோபம் கலந்த எரிச்சல்.

    நீங்களே இப்படி கோவிச்சிக்கிட்டா எப்படியண்ணே? எங்களுக்கு உங்களை விட்டா யார் இருக்காங்க? என்று பவானி கண் கலங்கினாள்.

    எங்களையெல்லாம் உங்கப்பா கூடப்பிறந்த பிறப்புகளாத்தான் பார்த்துக்கிட்டாரு. எங்க வாழ்க்கையில் நல்லது கெட்டதுன்னு எல்லாத்துக்கும் கூடத் துணையா நின்னாரு. சொல்லப்போனா இங்க இருக்கறவங்கள்ல பாதிபேரு நீ பிறக்கறதுக்கு முன்னால இருந்தே இங்க இருக்கோம்... என்று கனகாம்பரம் அழுதாள்.

    ஆமா இருக்கீங்க... அதுக்கு என்ன இப்ப? எங்கப்பா ஏமாளித்தனமா எல்லாரையும் இழுத்துப் போட்டுக்கிட்டாரு. உங்களுக்கு நல்லது கெட்டது பார்த்தாரு. என்னைத்தான் பழிவாங்கிட்டாரு... அவரு மட்டும் நான் ஆசைப்பட்டபடியே என்னை ஒழுங்கா படிக்கவிட்டிருந்தா இந்நேரம் ஏதாவது நல்ல வேலையில் என் பாட்டை பார்த்துக்கிட்டு நிம்மதியா இருந்திருப்பேன். எங்க விட்டாரு? மனுஷன் பத்து வயசில பூசிவிட்ட ரோஸ் பவுடர் இன்னும் மூஞ்சிலேயே ஒட்டிக்கிடக்கு. சுரண்டினாக்கூட உதிராது போலிருக்கு. உங்களாட்டம் எனக்கு மட்டும் கவலையும் கஷ்டமும் இல்லையா? உங்களுக்காவது புலம்ப நான் இருக்கேன். நான் எங்க போய் என் குறையை சொல்றது?

    அவன் சொல்வதிலுள்ள நியாயம் புரிய -

    எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

    என்ன பேசாம இருக்கீங்க? உண்மையைச் சொன்னா உறுத்துது இல்லே? போங்க... போய் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சி முடிவெடுங்க. உங்களுக்கு சாதகமா என்னால எதுவும் செய்ய முடியாதுங்கற நிலையிலதான் வந்திட்டேன். என் பாடே பெரிசா இருக்கு. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு நானும்தான் யோசிச்சிக்கிட்டிருக்கேன்.

    வெட்டு ஒன்று துண்டு நாலு என்று பேசும் அவனிடம் இனிமேலும் பேசிப் பயனில்லை என்று புரிய அவர்கள் நகர்ந்தார்கள். ரத்தினம் கோபம் குறையாமலேயே அறைக்குள் போனான். அங்கே உட்கார்ந்திருந்த யோகலட்சுமியைப் பார்த்து பல்லைக் கடித்தான்.

    என்னடி பார்க்கறே? எல்லாம் உன்னால வந்ததுதான். நான் சொன்னதை கொஞ்சம் மனசு வைச்சிக் கேட்டிருந்தியானா இந்தத் தொல்லை வந்திருக்காதில்லே? புருஷனை பெண்டாட்டி மதிக்கணும். அவன் சொன்னதைக் கேட்கணும். இங்கதான் அதெல்லாம் இல்லையே... நீ நினைச்சதைத்தானே சாதிக்கறே? இப்ப என்னாச்சி? வயித்துப் பாட்டுக்காக பொட்டு பொடி நகையில இருந்து அண்டா, குண்டான் வரை அடமானம் வைச்சாச்சி. கேக்கறவங்களுக்கு பதிலே சொல்லி முடியலை.

    எங்கிருக்கும் கோபத்தையும் தன்மீது காட்டி அவன் திட்டின போது யோகலட்சுமி மௌனமாகக் கண்ணீர் விடலானாள்.

    இந்தா எதுக்கு இப்ப அழுதுத் தொலையறே? இன்னும் பத்து நாளில் வீட்டை காலி பண்ணிடணும்னு வீட்டுக்காரன் கண்டிச்சு சொல்லிட்டான். நான் ஒத்தையாளுன்னா எங்கயாவது மரத்தடியில தங்கிக்குவேன். நீ மகாராணியாச்சே. உன்னை வைச்சிப் பார்க்கறது எனக்கு கடமையாச்சேம்மா... ஒரு குடிசையாவது கிடைக்குதான்னு பார்த்திட்டு வரேன். நீ சவுகரியமா உட்கார்ந்திரும்மா... என்று கத்திவிட்டுப் போகும் அவனைப் பார்வையால் பின் தொடர்ந்தாள் யோகலட்சுமி.

    ‘இப்படி சிடுசிடுப்பது அவனுடைய குணம்தானென்றாலும் இன்று அதிகமாகப் பேசிவிட்டான் என்று அவளுக்குத் தோன்றியது. இதே கையில் காசிருந்தால் பேச்செல்லம் கொஞ்சலும் குலாவலுமாகத்தான் இருக்கும். நாலுபேர் பார்க்கும்படியாக சட்டைப் சபையில் நூறு ரூபாய் தாளை வைத்துக்கொண்டு ஜம்பமாகத் தெருவில் போனால்தான் அன்றைய பொழுது அவனுக்கு விடியும். அப்படிப்பட்டவன் ஒரு வருடமாக கையில் பண ஓட்டம் இல்லாமல் சும்மா இருக்கிறான் என்றால் தாங்கிக்கொள்ள முடியுமா? அவன் சொன்னது போலவே இருந்ததையெல்லாம் வாய்க்கும் வயித்துக்கும் ஈடுகட்டியாகிவிட்டது. இனியும் தான் சும்மா இருப்பது சரியல்ல...’ கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

    தான் போட்ட முடிச்சைத் தான் தானே அவிழ்க்க வேண்டும்? மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். தூளியில் புதையல் ஒன்று இருப்பதை அறியாமல் குண்டு கன்னங்களில் குழி விழ சிரித்துக்கொண்டு இருந்தது. யோகலட்சுமி ஒரு முடிவுடன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

    வீட்டின் வாசல்படியில் முடிச்சுகளாக நின்றிருந்தவர்கள் அவளை பயத்துடன் பார்த்தார்கள். கண்ணுசாமி கேட்டார், என்னம்மா... தம்பி கோபமா எங்கப் போவுது?

    போனவரு தன்னால வருவாரு இனிமே எதைப்பத்தியும் யாரும் கவலைப்படாதீங்க. உங்களைக் காப்பாத்த நான் திரும்பி வந்திட்டேன். கண்ணுசாமி அண்ணே நம்ம பழைய டெய்லர் இருக்காரான்னு பார்த்து கூட்டிட்டு வாங்க. உடனடியா புது காஸ்ட்யூம் தைக்க சொல்லிடலாம். அதைப்போல டேவிட் அண்ணே நீங்க மேக்கப் சாமானுக்கு ஒரு புது லிஸ்ட் போடுங்க. லட்சுமணன் மாமா சுத்தி வைச்சிருக்கிற ஸ்கிரீனையெல்லாம் உடனே பிரிச்சிப் பாருங்க. எது தேறும்னு பார்த்திட்டு வீணாதையெல்லாம் ஒதுக்கிட்டு புதுசு போடறதுக்கு ஒரு ஆர்டிஸ்ட் கூட்டிட்டு வாங்க. பவானி டான்ஸ் ஆடி ரொம்ப நாளாகிட்டுது. இடுப்பு கொஞ்சம் ஏறிப்போச்சு. இப்பவே பிராக்ட்டீஸ் ஆரம்பிக்கணும். வைரமணி சாதகம் செய்யாம குரல் திரிதிரியா பிசிறு தட்டிடுச்சி. உடனே பாட்டையெல்லாம் பாடத் துவங்கு. கனகாம்பரம் அக்கா பாடமெல்லாம் நினைப்பிருக்கா இல்லையா? மறந்திருந்தா பாடம் பண்ணுங்க... யோகலட்சுமியின் பழைய கம்பீரத்தையும், கட்டளையிடும் தோரணையையும் கண்ட அவர்கள் கிலோ கிலோவாக பாதாம் பருப்பை அரைத்து குழம்பு போல சுண்டக் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தது போல தெம்பானார்கள். வேக வேகமாக தங்கள் வேலைகளைப் பார்க்க பறந்தோடினார்கள்.

    வீடு பார்க்கப் போய் எரிச்சலுடன் திரும்பினான் ரத்தினம். நாடகக்காரன்னாலே குடிசையைக்கூட தரமாட்டேன்னு சொல்றானுங்க. எனக்கென்ன? வா... வந்து மரத்தடியில சோத்தைப் பொங்கித் தின்னலாம்.

    அதெல்லாம் ஒண்ணும் வேணாம். வீட்டுக்காரர்க்கிட்டே நான் பேசிக்கிறேன். நீங்க போய் ரசாக் பாயை கூட்டிட்டு வாங்க... யோகலட்சுமியின் குரல் அவனுக்குக் கட்டளையிட்டது.

    நொடியில் விவரத்தைப் புரிந்து கொண்டவன், நெசமாத்தானே சொல்றே? நடுவில காலை வாரி விடமாட்டியே? ஏன்னா உன்னை நம்பமுடியாதே... அப்பறம் நானில்லே மத்தவங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டுத் திரியணும்?

    இல்லை... இனிமேல் பின் வாங்குதலே இல்லை. கிளம்புங்க.

    யோகலட்சுமி உத்தரவிட்டு விட்டு உள்ளே போய்விட்டாள்.

    ரத்தினம் முணுகிக்கொண்டே நடந்தான்.

    இவ மாட்டேன்னு சொன்னாலும் ஒத்துக்கணும். சரின்னாலும் சலாம் போடணும். சே... அவனுடைய எரிச்சலை அதிகமாக்குவதுபோல ரசாக் பாய் வீட்டில் இல்லை. வெளியூர் போயிருந்தார். கடுப்புடன் வீட்டிற்குத் திரும்பினான்.

    ஆனால் வீட்டிற்குள் அவனுக்கு முன்னால் ரசாக் - பாய் வந்து உட்கார்ந்திருந்தார்.

    வா ரத்தினம்... ஊரில இருந்து பஸ்ஸில வந்து இறங்கி நடந்தேன். மார்க்கெட்டுல வைச்சி கண்ணுசாமி அண்ணனை தற்செயலாக பார்த்தேன். நம்ம யோகம் என்னைப் பார்க்க உன்னை அனுப்பியிருக்குன்னு சொன்னாரு. அப்பறம் என்ன தடை... தடங்கல்? நானே நேரா வந்திட்டேன். தங்கச்சி எல்லாம் சொல்லிச்சி... நீயும் உள்ளே வர்றே... ஏன் ரத்தினம் நீ என்ன இப்படி முட்டையிடற போந்தா கோழி மாதிரி உப்பிப் போயிட்டே? சீக்கிரம் உடம்பைக் குறைக்கிற வழியைப் பாருப்பா. இப்படியே ஸ்டேஜில வந்து நின்னியானா விசில் சத்தம் காதைக் குடைஞ்சிடும். யோகத்தைப் பார்த்தியா? இன்னிக்கும் அன்னிக்குப் பார்த்தா மாதிரியே இருக்கு... ரசாக் பேசிக்கொண்டே போனார்.

    ரத்தினம் அவரை முறைத்தான்.

    ஏன்யா பாய்... உன்னை யாரு குண்டு... யாரு ஒல்லின்னு சொல்லவா கூப்பிட்டாங்க? நம்ம கம்பெனிக்கு சபா பிடிச்சிக் குடுக்கறதைப் பத்தி மட்டும் பேசு.

    ஐய்ய... கோவிச்சிக்காதே ரத்தினம். சும்மாவாச்சும் பேசிட்டேன். ரசாக் பின்வாங்கினார்.

    அவனோடு சண்டை போட்டால் வேலைக்காகுமா?

    அவர்களின் வாக்குவாத்தை மேலே அதிகரிக்காமல் யோகலட்சுமி, பாயண்ணே... வேலையைப் பாருங்க... நம்ம கம்பெனிக்கு அந்த ஆடி மாதம் மட்டும் ஒரு பத்து சான்ஸ் வாங்கிக் குடுத்தீங்கன்னா... கொஞ்சம் நிமிர்ந்திடலாம்... என்ன சொல்றீங்க? என்று கேட்டாள்.

    ரசாக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பிறகு சொன்னார். ஒரு வருஷமாக நீ பிடிவாதமா இருந்ததால நம்ம சபாவெல்லாம் அந்த சின்னம்மா கம்பெனிக்கு போயிட்டுதும்மா.

    ம்... நல்லா சொல்லு பாய்... நான் சொன்னப்ப வலிச்சிது. இப்ப நீ சொல்லு... புத்தியில உரைக்கட்டும். சபாக்காரன் எல்லாம் நம்ம மாமனுங்க பாரு... இந்த மகாராணிக்காக காத்திருப்பானுங்களா? அது மட்டுமில்லாம அந்த சின்னம்மா எப்படா நாம விட்டிடுவோம்னு காத்திருந்தா... இப்ப பிடிச்சிட்டா... ரத்தினம் நேரம் பார்த்து குத்தினான்.

    யோகலட்சுமி அவனை கண்டுகொள்ளவில்லை.

    "யாருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குதோ அதை பயன்படுத்துக்கறதுதான் புத்திசாலித்தனம். அவங்களை குறை சொல்ல முடியாது.

    Enjoying the preview?
    Page 1 of 1