Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம்
ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம்
ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம்
Ebook91 pages29 minutes

ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாந்தி முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சுவரோரமாய்த் தாழ்வாய் இருந்த ஜன்னலில் பலகை பிய்ந்து போன துவாரம் வழியே முன் அறையில் நடக்கிற சங்கதிகளை உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருந்தாள்.
 எல்லாரும் பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். பட்டுப் புடவையுடன் வாட்டசாட்டமாய் ஒரு பெண். அருகே பட்டு வேஷ்டி சட்டையில் நுழைந்திருந்த அந்தக் கண்ணாடி அணிந்த மனிதர்.
 அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி அந்த இளைஞன். அவள் மனதில் தயாரித்து வைத்திருந்த சினிமா கதாநாயகனின் தோற்றத்தை எழுபது சதவீதம் எட்டியிருந்தான். கண்ணாடி மனிதர் பேச்சிற்கிடையே ஒரு தரம் கூப்பிட்ட அவனின் பெயரை மறுபடியும் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். கண்ணன்! பெயரில் கொஞ்சம் பழைய வாசனை அடிக்கிறதே!
 மறுபடியும் ஜன்னல் துவாரத்தில் கவனமானாள்.
 செக்கச் சிவந்த தாம்பூலத்தை வெளியே துப்பி விட்டு வேஷ்டி நுனியில் வாயைத் துடைத்தபடியே உள்ளே நுழைகிற புரோக்கர் தெரிந்தார்.
 "இதோ பாருங்க ராமசாமியண்ணே...!"
 அந்த ராமசாமி ஏறிட்டார். சாந்தியின் அப்பா. யூனியன் ஆஃபீஸில் உத்தியோகம். அந்தக் காலத்து எட்டாவது படிப்பு. நடை உடை பாவனைகளில் கிராமியத்தனம். ஒரே மகள் சாந்தி மேல் டன் டன்னாய்ப் பிரியம்.
 "சொல்லுங்க...!"
 "பொதுவா சொல்றேன்... ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தம் செய்துக்க ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கணும். ஏன்னா ரெண்டுமே குறை சொல்லிக்க முடியாத இடங்கள்...!சரி... சரி. கதை அளக்காம விஷயத்துக்கு வாங்க... புரோக்கரே..."
 "வர்றேன்... வர்றேன்... ராமசாமியண்ணே... நேத்திக்குத் தான் இவங்க வீட்ல உங்க பொண்ணோட ஜாதகத்தைக் கொடுத்தேன்... ஜாதகம் பையன் ஜாதகத்தோட அமோகமா பொருந்துதாம்...! நாளும் இன்னிக்கு நல்ல நாள் அதான், இன்னிக்கே கிளம்பி வந்துட்டாங்க..."
 புரோக்கரின் பேச்சைப் பாதியில் கத்தரித்துக் கொண்டு தானே நேரடியாகப் பேச ஆரம்பித்தார் பையனின் அப்பா.
 "வேற ஒண்ணுமில்லைங்க... இன்னும் ஒரு வாரம் போனா ஆனி மாசம் பொறந்துடும்... ஆனி, ஆடில நல்ல காரியத்தைப் பத்தி பேச்செடுக்கமுடியாது. அதான் இன்னிக்கே புறப்பட்டு வந்தோம்... ரெண்டுபேருக்கும் பேச்சு ஒத்துப் போகிற மாதிரி இருந்தா... வர்ற வெள்ளிக்கிழமையே நிச்சயதார்த்தத்தை முடிச்சிடலாம், பாருங்க..."
 "மாப்பிள்ளை என்ன பண்ணிட்டிருக்கார்...?"
 "ப்ரைவேட் கம்பெனி ஒண்ணுல மேனேஜர் உத்யோகம்... மாசமானா ரெண்டு பெரிய நோட்டுக்குக் குறையாம சம்பளம். பட்டணத்துலயே நிறைய ஜாதகங்க வந்தது... அங்கிருக்கிற பொண்ணுங்களோட வாய்க்கு... அம்மாக்காரி ஒண்ணும் தாக்குப்பிடிக்க முடியாது... அதான் குடும்பத்துக்கு அடக்கமா... கிராமத்துப் பொண்ணா பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்..."
 ராமசாமி தூணில் சாய்ந்து நின்றிருந்த மனைவி காமாட்சியைப் புன்னகையோடு பார்த்தார்.
 பையனின் அம்மா கேட்டாள்.
 "பெண்ணோட பேர் என்ன...?"
 "சாந்தி..."
 "என்ன படிக்குது...?"
 "ப்ளீ ஸ் டூ..."
 "வயசு கம்மிதான்... நகை எவ்வளவு போடுவீங்க...?""நீங்க எதிர் பார்க்கறதுக்கு மேலேவே நகை, நட்டு செஞ்சு போடுவோம்... ஏன்னா, எங்களுக்கு இருக்கிறது இந்த ஒரே பொண்ணுதான்..."
 இந்த இடத்தில் மாப்பிள்ளைப் பையன் கண்ணனே குறுக்கே புகுந்தான்.
 "நகையைப் பத்தின பேச்சையெல்லாம்... நீங்களும் சரி... எங்க அப்பா, அம்மாவும் சரி... இன்னொரு தடவை பேசக்கூடாது... உங்களுக்கு இருக்கிறது. ஒரே பொண்ணு... நகையே போட வேண்டாம்னு சொன்னாலும் நீங்க போடாம இருக்கப் போறதில்லை... அதுக்காக இவ்வளவு போடறேன், அவ்வளவு போடணும்னு பேரம் பேசிட்டிருக்க வேண்டாம்."
 கண்ணனின் அப்பா புன்னகைத்தார்.
 "இவன் ஒரு டைப்புங்க. இவனுக்குப் பிடிக்காத விஷயங்கள்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பான்... சுத்தி இருக்கறவங்க இவனுக்குப் பிடிக்காததைச் செய்துட்டாலும் போதும்... வீடு ரெண்டாயிடற அளவுக்குக் கத்தித் தீர்த்திடுவான்..."
 "அதுவும் நல்ல குணம்தானே...!"
 "பொண்ணை வரச் சொல்லுங்க..."
 "இதோ..."
 காமாட்சி சமையலறையை நோக்கி நகர்ந்தாள்.
 ஜன்னல் துவாரத்தை விட்டு விலகிக் கொண்டான் சாந்தி. ஒரு மனசு கல்யாண சந்தோஷத்தில் மிதந்து பார்க்க இன்னொரு மனசு அதற்குள் கல்யாணமா என்று பெரிதாய்க் கேள்விக்குறிபோட்டது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224360000
ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம்

Read more from Rajeshkumar

Related to ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம்

Related ebooks

Reviews for ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் - Rajeshkumar

    1

    "என்னோட சாபம் உன்னைச் சும்மா விடாதுடா, நாயே... நீயும் இதே மாதிரி ஒரு நாள் உயிர்ப்பிச்சை கேட்டு என் வீட்டுப் படியேறிக் கெஞ்சத்தான்டா போறே... இது ஒரு பெண்ணோட சாபம் மட்டுமில்லே, ஒரு தாயின் சபதம்...!"

    சாந்தி வீரமாய் அந்த நீளமான வசனத்தை மூச்சுப் பிடித்துப் பேசி முடித்ததும் சுற்றிலுமிருந்த நீல நிறத்தாவணி வெள்ளை நிற ஜாக்கெட்டை யூனிஃபார்மாய் உடம்புக்குக் கொடுத்திருந்த பெண்கள் உற்சாகமாய்க் கை தட்டினார்கள்.

    அட்டகாசம்டி... சாந்தி...!

    ஸ்ரீவித்யா உன்கிட்டே தோத்துப் போகணும்...

    எப்படிடி... இவ்வளவு அற்புதமா நடிக்கறே! நீயெல்லாம் இன்னும் எந்த டைரக்டர் பார்வையிலும் படாம இருக்கிறது, சினிமா உலகத்தோட நஷ்டம்...!

    சாந்தி அவர்களின் பாராட்டுக்களை அமர்த்தலான புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். வசனம் பேசுவதற்காக இழுத்துச் செருகியிருந்த தாவணி நுனியை இடுப்பிலிருந்து விடுவித்து விட்டாள். அகலமான கண்கள் நிறைய சினிமா ஏக்கம் இருந்தது. சின்னச் சின்ன ஜிமிக்கிகளை இரண்டு காதுகளிலும் தொங்கவிட்டு ராதா மாதிரி காதை மறைத்துச் சீவியிருந்தாள்.

    ஏம்மா...

    பின் பக்கமிருந்து குரல் கேட்க,

    எல்லோரும் ஒட்டு மொத்தமாய்த் திரும்பினார்கள். காலி டெஸ்க்குகளின் கோடியில் பியூன் மருதாசலம் தெரிந்தான். கோபமாய் அவர்களை நோக்கி வந்தான்.

    என்னம்மா... தினமும் உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு...! ஸ்கூல் முடிஞ்சாலும் வீட்டுக்குப் போகாம க்ளாஸ் ரூமுக்குள்ளேயே உட்கார்ந்திட்டிருக்கீங்க... ஹெச்.எம். முன்னாடி உங்களையெல்லாம் கொண்டு போய் நிறுத்தினால்தான் சரிப்படும்...

    வேண்டாம். போயிடறோம். இதோ நாங்க க்ளாஸைக் காலி பண்ணியாச்சு...!

    சொல்லி அவரவர்கள் புத்தகக் கட்டைக் கைகளில் எடுத்து மார்புக்குக் கொடுத்துக் கொண்டே வெளியே வந்தார்கள். போகிற ஒவ்வொருத்தரையும் வாசலில் நின்று முறைத்தலாய்ப் பார்த்தான் மருதாசலம்.

    சாந்தி வெளியேறுகிற போது

    ஏய்... புள்ளே...!

    கூப்பிட்டு நிறுத்தினான்.

    என்ன...?

    பள்ளிக்கூட வருஷ விழா மேடைல நடிக்கறதோட நிறுத்திக்க...! தினமும் இங்கே வேற நடிச்சுக் காட்டாதே... இவளும் இவ ஜடையும். உங்கப்பன்கிட்டே சொல்லி பட்டை கிளப்பச் சொல்லணும்...!

    ஒரு மாதிரி வாயைக் கோணிக் காட்டினாள் சாந்தி.

    கொஞ்சம் கூட உனக்கு ரசனையே கிடையாது. நாளைக்குச் சாயந்தரம் ‘விதி’ சுஜாதா வசனம் பேசறேன்... மறக்காம வந்துடு...

    உனக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு... ராத்திரி உன் வீட்டுப் பக்கமா வந்து உங்கப்பன்கிட்டே சொல்றேன், போ...

    அவன் திட்டிக் கொண்டிருக்க, சாந்தி ஓடிப்போய்த் தோழிகளோடு இணைந்து கொண்டாள். ஸ்கூல் காம்பெளண்டைக் கடந்து வீதிக்கு வந்தபோது எல்லா மாணவிகளும் எதிர்ப்பக்கமாய் போக சாந்தியும் பரிமளாவும் மட்டும் வலது பக்கம் திரும்பி நடந்தார்கள்.

    பரிமளா இவளின் வீட்டுக்கு நாலைந்து வீடுகள் தள்ளி இருப்பவள். சாந்தியைக் காட்டிலும் நன்றாகவே படிப்பவள். மாதா மாதம் சாந்தியின் ரேங்க் ஷீட்டைப் பரிமளாவின் ரேங்க் ஷீட்டோடு கம்பேர் செய்துவிட்டுத்தான் வீட்டில் அர்ச்சனை மழையைப் பொழிவார்கள்...

    இன்னிக்கு நீ நல்லா திட்டுவாங்குவே! இல்லே, சாந்தி?

    எதுக்கு?

    ரேங்க் ஷீட் கொடுத்திருக்காங்களே!

    நான் வீட்ல காட்டினாத்தானே!

    கையெழுத்து...!

    அஞ்சு நாள் வெச்சிருந்துட்டு நானே அப்பாவோட கையெழுத்தைப் போட்டுக் கொண்டு போய்க் கொடுத்துடுவேன்.

    நடக்காதே...

    ஏன்...?

    எங்கப்பா சும்மா இருப்பாரா... என்னோட ராங்க் ஷீட்டைப் பார்த்த மறு நிமிஷமே உங்க வீட்டுக்கு வந்துடுவாரே!

    மாசா மாசம் உங்கப்பாவினாலதான் நான் திட்டு வாங்கறேன்!

    ஏன்டி கொஞ்சம் ஒழுங்கா படிக்கறதுக்கென்ன...? நல்லாத்தானே படிச்சிட்டிருந்தே...! என்னிக்கு ஸ்கூல் நாடகத்துல முதல் ப்ரைஸ் வாங்கினியோ அன்னிலர்ந்தே நீ படிக்கறதை விட்டுட்டே...

    அலட்சியமாய் ‘பச்’ என்றாள் சாந்தி.

    ப்ச்’னா என்ன அர்த்தம்...?

    படிச்சுப் படிச்சு என்னத்தைக் கண்டோம்...? நடிகை பத்மலதா ரெண்டாவது படிக்கறப்போவே நடிக்கப் போயிட்டாளாம், தெரியுமா...?

    தலையில் நோகாமல் அடித்துக் கொண்டாள் பரிமளா.

    அவ நடிகைடி...!

    நானும் நடிகையாகப் போறேன்.

    என்ன...?

    வேணா பாரேன்...

    உனக்குப் பைத்தியம் தான்டி பிடிச்சிருக்கு! வீட்ல இந்த வார்த்தையைச் சொல்லிடாதே. உன்னோட ஆத்தா அடுப்புல கரண்டியைப் போட்டுச் சூடு வெச்சுடுவா...

    பேசிக் கொண்டே வந்தவள் சட்டெனத் தன் அருகே சாந்தியைக் காணாமல் திகைத்து நின்றாள். திரும்பிப் பார்த்தாள் பத்தடி தூரத்தில் சாந்தி நின்றிருந்தாள். எதையோ ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    திரும்பி நடையிட்டு அவளைத் தொட்டாள் பரிமளா. பக்கத்தில் போனதம்தான் தெரிந்தது. சுவரில் அப்பியிருந்த சினிமா

    Enjoying the preview?
    Page 1 of 1