Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மன்னிக்காதே, மறக்காதே…
மன்னிக்காதே, மறக்காதே…
மன்னிக்காதே, மறக்காதே…
Ebook143 pages33 minutes

மன்னிக்காதே, மறக்காதே…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனசுக்குள் சட்டென்று அமிலம் சுரந்தாலும் அதை தன் முகத்தில் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் ரிசப்னிஷ்ட் ஷீலா நீட்டிய ரிஸீவரை வாங்கி "ஹலோ...!" என்றான் விஷ்வா. மறுமுனையில் அவனுடைய மனைவி வினயா மெல்ல குரல் கொடுத்தாள்.
 "என்னங்க...?"
 "சொல்லு..."
 "உங்க செல்போனை ஆஃப் பண்ணி வெச்சுட்டீங்க போலிருக்கு...?"
 "ஆமா...! ஆபீஸ் வேலை பார்க்கிறப்போ கால் வந்துட்டேயிருந்தது. அதான் ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். நீ இப்ப ரிஸீவரை வெச்சுடு... செல்லிலிருந்து நானே உனக்கு போன் பண்றேன்."
 "சரிங்க...! உடனே எனக்கு போன் பண்ணுங்க...! லேட் பண்ணிடாதீங்க..." மறுமுனையில் வினயா ரிஸீவரை வைத்துவிட விஷ்வாவும் ரிஸீவரை ரிசப்னிஷ்ட் ஷீலாவிடம் கொடுத்துவிட்டு செல்போனை தன் சர்ட் பாக்கெட்னின்றும் எடுத்து உயிர்ப்பித்துக் கொண்டே போர்டிகோவில் நின்றிருந்த தன்னுடைய 'ஃபோர்டு ஐகான்' காரை நோக்கிப் போனான். கார்க்குள் நுழைந்து டிரைவிங் சீட்டை ஆக்ரமித்தபோது வினயாவின் குரல் செல்போனில் கேட்டது.
 "இப்ப... ஃப்ரீயாத்தானே இருக்கீங்க...?"
 "ஆமா... ஆபீஸ்ல எல்லாரையும் உட்காரவெச்சு கிட்டு ஆடுபுலி விளையாட்டு விளையாடிகிட்டு இருக்கேன்..."
 "கோபப்படாதீங்க...! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். அதான் கேட்டேன்..."
 விஷ்வா காரை நகர்த்திக் கொண்டே "என்ன விஷயம் சொல்லு...?" என்றான்.
 "பெங்களூர்லயிருந்து என்னோட அண்ணன் கொஞ்ச நேரத்துக்கு முந்தி போன் பண்ணியிருந்தார்...""சரி..."
 "எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்... ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கிறதாக சொன்னார்..."
 "சரி..."
 "என்ன சரி...! நீங்களும் நானும் இன்னிக்கு மத்தியானத்துக்கு மேல் பெங்களூர் புறப்பட்டு போலாமா...?"
 "இதோ பார் வினயா...! கம்பெனியில் எனக்கு தலைக்கு மேல வேலை... ஒரு கூல்ட்ரிங்க் சாப்பிடக்கூட நேரம் கிடையாது. இந்த நிலைமையில் வெளியூர் பயணமெல்லாம் நினைச்சுகூட பார்க்க முடியாது. நீ வேணும்ன்னா பெங்களூர் போய்ட்டு வந்துடு!"
 "உடம்புக்கு சரியில்லாமே ஹாஸ்பிட்டல்ல படுத்துட்டிருக்கிற எங்கப்பாவைப் பார்க்க நீங்க வரமாட்டீங்களா?"
 "நீ மொதல்ல போ... ரெண்டு நாள் கழிச்சு முடிஞ்சா நான் வர்றேன்..."
 "ரெண்டுநாள் கழிச்சு கண்டிப்பா வருவீங்களா...?"
 "ஒரு ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதி ரெஜிஸ்டர் பண்ணி கொடுக்கட்டுமா...?"
 "ப்ளீஸ்...! கோபப்படாதீங்க... உடம்புக்கு சரியில்லாமே படுத்திருக்கிற அப்பாவைப் பார்க்க நீங்களும் வந்தா எனக்கு சந்தோஷமாயிருக்கும்..."
 "உன்னோட அற்ப சந்தோஷத்துக்காக நான் ஆபீஸ் வேலைகளை விட்டுட்டு வரமுடியுமா...?"
 வினயா மறுமுனையில் மௌனம் சாதிக்க விஷ்வா கேட்டான்.
 "எங்கம்மாகிட்டே விஷயத்தை சொன்னியா?"
 "இனிமேத்தான் சொல்லணும்..."
 "மொதல்ல சொல்லிடு..."
 "இன்னிக்கு ட்ரெய்ன்ல டிக்கெட் கிடைக்குமா?""நான் ட்ராவல் ஏஜென்ஸி மூலமா ரிசர்வ் பண்ணி டிக்கெட்டை வீட்டுக்கு கொடுத்துவிடறேன். ரிஸீவ் பண்ணிக்க..."
 "என்னங்க...!"
 "சொல்லு..."
 "அப்பாவுக்கு உடம்பு ரொம்பவும் முடியாமே இருந்தா நான் வேணும்ன்னா பெங்களூர்ல ஒரு பத்து பதினைந்துநாள் சேர்ந்தமாதிரி இருந்துட்டு வரட்டுமா...?"
 "பத்து பதினஞ்சு நாள் என்ன... ஒரு மாசமே இருந்துட்டு வா..."
 "உங்கம்மா ஏதாவது சொல்வாங்களா?"
 "ஒண்ணும் சொல்லமாட்டாங்க... நீ உன்னோட இஷ்டத்துக்கு இருந்துட்டு வா... நான் அம்மாகிட்டே சொல்லிக்கறேன்."
 "ரொம்ப தேங்க்ஸ்ங்க...! மறக்காமே டிக்கெட்டுக்கு சொல்லிடுங்க..."
 "ம்..." தலையசைத்த விஷ்வா செல்போனை அணைத்தான்.
 மனசுக்குள் சந்தோஷம் ஒட்டிக் கொண்டது.
 'வினயாவின் தொல்லை இனி ஒரு மாச காலத்துக்கு இல்லை...!'
 போக்குவரத்து இல்லாத ரோட்டில் காரை விரட்டிக் கொண்டே செல்போனை மறுபடியும் உயிர்ப்பித்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224937165
மன்னிக்காதே, மறக்காதே…

Read more from Rajeshkumar

Related to மன்னிக்காதே, மறக்காதே…

Related ebooks

Related categories

Reviews for மன்னிக்காதே, மறக்காதே…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மன்னிக்காதே, மறக்காதே… - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அந்த எக்ஸிக்யூடீவ் அறை ஊட்டியாய் மாறியிருக்க விஷ்வா டெலிபோனில் பேசிக்கொண்டே முக்கியமான ஃபைல்களை மேலோட்டமாய்ப் படித்து கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான்.

    எனக்கு திறமைதான் முக்கியம். நோ... ரெக்கமண்டேஷன். இந்த ரெக்கமண்டேஷன் என்கிற வார்த்தையே எனக்குப் பிடிக்காது. இதுவும் ஒருவகை ஊழல்தான்... என்ன க்வாலிஃபிகேஷன். பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸா...? க்வாலிஃபிகேஷன் போதாதே...? என்னோட கம்பெனிக்கு எம்.ஈ. வேணும்... ஸாஃப்ட்வேர் டெக்னாலஜியில் வெரி க்யூட் நாலேட்ஜ் வேணும்... எஸ்... எஸ்... அப்படிப்பட்ட கேண்டிடேட்ஸ் இருந்தா பயோடேட்டாஸ் அனுப்பிவையுங்க. ஒரு இண்டர்வ்யூவை கண்டக்ட் பண்ணி காலியாய் இருக்கிற ரெண்டு போஸ்ட்டை ஃபில்லப் பண்ணிக்கலாம்... லேடீஸுக்கு ஒண்ணு ஜெண்ட்ஸுக்கு ஒண்ணு...

    ரிஸீவரை வைத்துவிட்டு சுழல் நாற்காலியில் அரைவட்டமாய் சுழல - எதிரே ஸ்டெனோ த்ரிஷா கையில் பேடும் பேனாவுமாய் நின்றிருந்தாள்.

    என்ன த்ரிஷா...?

    வரச்சொல்லியிருந்தீங்க ஸார்...!

    ஓ... ஸாரி...! ப்ளூ லாகூனுக்கு ஒரு லெட்டர் டிக்டேட் பண்ணனும்... நோட்... த... பாய்ண்ட்ஸ்.

    ஸ... ஸார்...! த்ரிஷா குறுக்கிட்டாள்.

    என்ன...!

    ப்ளூ லாகூனுக்கு நேத்தே லெட்டர் அனுப்பியாச்சு. பதிலுக்கு அவங்க ஃபேக்ஸும் பண்ணிட்டாங்க...

    விஷ்வா கையில் வைத்து இருந்த பேனாவால் தன் முன் நெற்றியைத் தட்டிக் கொண்டான்.

    வாட் ஹேப்பண்ட் டூ மீ...?

    த்ரிஷா தன் ஒழுங்கான பல்வரிசையைக்காட்டிச் சிரித்தாள். எனி அதர் லெட்டர்.... ஸார்...?

    நாளைக்குப் பார்த்துக்கலாம்... யூ... மே... கோ...

    எஸ்... ஸார்...!

    ஒன் மினிட் த்ரிஷா...

    நகர முயன்ற அவள் நின்றாள்.

    ஸார்...!

    எம்.டி. வந்துட்டாங்களா...?

    இன்னும் வரலை ஸார்...

    வந்தா எனக்கு தகவல் கொடு...

    எஸ்... ஸார்...

    அப்புறம் உனக்கொரு மினி வார்னிங்...

    எ... என்ன ஸார்...?

    இன்னிக்கு நீ பயங்கர லோஹிப். இப்படியே போய் எம்.டி.க்கு முன்னாடி நின்னுடாதே...! மெமோ வாங்கிக்க வேண்டிவரும்.

    ஸார்... இது மைசூர் சில்க் க்ரேப் ஸாரி. கட்டினா லோஹிப் மாதிரிதான் தெரியும்... அதுவும் இல்லாமே...

    நோ... எக்ஸ்ப்ளனேஷன்...! எம்.டி.யைப் பார்க்கப் போகும்போது ட்ரஸ் சென்ஸ் நீட்டா இருக்கணும்...? அதர்வைஸ் யூ ஹேவ் டூ ஃபேஸ் த ப்ராப்ளம்ஸ்.

    ஐ... நோ... ஸார்... லேசாய் முகம் மாறிய த்ரிஷா அறையினின்றும் வெளியேற - விஷ்வா பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் தீவிரமானான். இரண்டு ஃபைல்களைப் பார்த்து முடித்திருந்தபோது சில்வர் உடம்பாலான செல்போன் ஒரு ‘மியூஸிக் நோட்’டை வெளியிட்டது. செல்லை எடுத்து மானிட்டரில் நம்பர் பார்த்து மலர்ந்து போய் காதுக்குக் கொடுத்தான்.

    அருணா...!

    மறுமுனையில் பெண் குரல் வெடித்தது. என்கிட்ட பேசாதீங்க... நான் உங்ககிட்ட ‘டூ’...

    நான் பழம்...

    ஒண்ணும் வேண்டாம்...

    அட... என்ன கோபம்... என்னோட அருணாவுக்கு?

    இந்த அருணாவோட ஞாபகம் உங்களுக்கு இருக்கா...?

    இல்லாமே...?

    அப்படி இருக்கிற மாதிரி தெரியலையே...! ரெண்டு நாளா நீங்க என்னைப் பார்க்க வரலை...

    கம்பெனியில் ஒர்க் நிறைய இருக்கு...! ரெண்டு நாளைக்கு உன்னைப் பார்க்க வரமுடியாதுன்னு ஏற்கெனவே சொல்லியிருந்தேனே...?

    சரி... வரவேண்டாம்...! போனாவது பண்ணியிருக்கலாமே...?

    ஸாரி... அருணா...! ரெண்டு நாளா கம்பெனி ஆடிட்டர்களோடு உட்கார்ந்து பாலன்ஸ்ஷீட்டை ப்ரிப்பேர் பண்ணியதில் மூளையே அல்வா பதத்துக்கு மாறிப்போயிருக்கு. இன்னிக்குத்தான் கொஞ்சம் ஃப்ரீ. மத்தியானத்துக்குள் நானே உனக்கு போன் பண்ணலாம்ன்னு இருந்தேன்...

    பொய்யி...!

    பொய் கிடையாது. நிஜம்...!

    சரி... இப்ப நீங்க ஃப்ரீயா...?

    பார்க்கவேண்டிய ஃபைல்ஸ் இன்னும் கொஞ்சம் இருக்கு...

    அதையெல்லாம் எடுத்து ஓரமா போட்டுட்டு உடனே புறப்பட்டு... கன்னிமாரா... ரெஸ்டாரெண்ட்டுக்கு வாங்க...

    நீ இப்போ கன்னிமாரா ரெஸ்டாரெண்ட்லயிருந்தா பேசிட்டிருக்கே...?

    ஆமா... வீட்ல உட்காரப் பிடிக்கலை. லான்ஸரை எடுத்துட்டு வந்துட்டேன். இடது கையில் பெப்ஸி. வலது கையில் செல்போன். ரெஸ்டாரண்ட் கூட்டம் இல்லாமே அமைதியாயிருக்கு. வர்றீங்களா... கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்...?

    கொஞ்ச நேரம்ன்னா...?

    ஒரு மணி நேரம்...

    வெயிட் பண்ணு... வந்துடறேன்...

    வெயிட் பண்றதா...! நோ... நோ... உங்களுக்கு இன்னும் பதினஞ்சு நிமிஷம்தான் டைம். அதுக்குள்ளே நீங்க எனக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கணும். இல்லேன்னா நான் பாட்டுக்கு கிளம்பிப் போய்கிட்டேயிருப்பேன்...

    "என்ன... அருணா...

    Enjoying the preview?
    Page 1 of 1