Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thappu Thappaai Oru Thappu
Thappu Thappaai Oru Thappu
Thappu Thappaai Oru Thappu
Ebook125 pages41 minutes

Thappu Thappaai Oru Thappu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466862
Thappu Thappaai Oru Thappu

Read more from Devibala

Related to Thappu Thappaai Oru Thappu

Related ebooks

Related categories

Reviews for Thappu Thappaai Oru Thappu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thappu Thappaai Oru Thappu - Devibala

    1

    சுவர் கடிகாரம் நாலு முறை அடித்து ஓய்ந்த போது ஃபைலை மூடி வைத்துவிட்டு எழுந்து விட்டான் சிவா.

    ஆறுமணி வரை ஆபீஸ் நேரம்.

    இரண்டு மணி நேரம் பர்மிஷன்.

    கல்யாணம் முடிந்து - ஒரு மாத லீவும் முடிந்து இன்றுதான் அலுவலகம் வருகிறான்.

    மறுபடியும் பர்மிஷன்.

    அப்படி... இப்படி வெளியே வரும்போது நாலே காலாகி விட்டது.

    ஸ்கூட்டரை ஸ்வீட் ஸ்டாலின் முன்பு நிறுத்தி முந்திரி அல்வா வாங்கிக் கொண்டான்.

    ஜாதி மல்லி ஒரு பந்து, ரோட்டோரப் பூக்காரியிடம் சேகரித்துக் கொண்டான்.

    ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோது...

    சார்... சார்...!

    பின்னால் பார்த்தால், மூச்சிரைக்க ஓடிவரும் ஆபீஸ் பாய்.

    என்னப்பா?

    மானேஜர் உங்களை அவசரமா கூப்பிடறார்!

    எதுக்கு?

    ஹெட் ஆபீஸ்லேர்ந்து போன் வந்திருக்காம். கான்பிடன்ஷியல் பைல் ஒண்ணு அவசரமா தேவையாம்!

    இதப்பாரு! பர்மிஷன் போட்டுட்டு வெளியே வந்தாச்சு. அவனவனுக்குனு ஒரு சந்தோஷம் உண்டு. ஆபீசைக் கட்டிட்டு என்னால அழ முடியாதுனு சொல்லு!

    ஒரு நடை வந்துட்டுப் போயிடுங்களேன் சார்!

    சிவாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

    என்னடா புரியாம பேசற? முடியாதுனு போய் அந்த மனுஷன்கிட்டச் சொல்லு!

    சார் இது ஆபீஸ்!

    தெரியும். நான் வர்றன்!

    ஆத்திரத்தோடு ஸ்கூட்டரை உதைத்தான்.

    பயணிக்கும் நேரம் சிவா பற்றி தெரிந்து கொள்ளலாமா?

    முப்பது வயது சிவாவுக்கு போன மாதம்தான் மனைவியானாள் உஷா.

    சிவா ஒன்றும் பெரிய அழகனல்ல.

    சினிமா ஜனகராஜ் போன்ற தோற்றம். நல்ல புத்தி கூர்மை, நேரம் தவறாமை, நாணயம், இரக்க சிந்தனை அத்தனையும் நிரம்பிய கலவை.

    ‘ஆனால் கோபம் என்றால் அப்படி இப்படியல்ல. மூக்கின் மேல் நிரந்தரமான இடம் அதற்கு உண்டு. தப்பைப் பார்த்துவிட்டால் உடனே தண்டனை வழங்கி விடும் ஆவேசம் அவனுக்குண்டு. ஆள் தராதரமே பார்க்காமல் ‘முணுக் கென்று வந்துவிடும் கோபம்!’

    வீட்டை நெருங்கும்போது கோபம் சற்று விலகியிருக்க,

    ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டுவிட்டு படியேறினான்.

    ‘கதவு சாத்தியிருந்தது.

    வாசலில் செருப்புகள்?

    ஆணின் செருப்பு!’

    ‘விரல் நுழைக்கும் வளையம் அறுந்து போன செருப்பு!’

    ‘யார் வந்திருக்கக் கூடும்?’

    கதவு வேறு சாத்தியிருக்க,

    விரலை மடக்கி கதவை அணுகிய நேரம்,

    துல்லியமாகக் கேட்டது அந்தச் சிணுங்கல்...

    ஸ்... விடுங்க ஆனந்த்... வலிக்குது... ப்பா... மொரட்டுத்தனம் தான்!

    சற்று கரகரப்பான, காமம் சொட்டும் ஆண்தனமான பெண்ணின் குரல்...

    ‘உஷாவுக்கும் கட்டைத் தொண்டைதான்!’

    ‘பளிச்’சென ரத்த ஓட்டம் குதிக்கத் தொடங்க,

    ஆவேசமாக கதவில் கை வைத்தான் சிவா!

    சரி சரி... விலகுங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் வந்துருவார். இன்னொரு நாள் பார்த்துக்கலாம்!

    அத்தனை ஜன்னல்களும் அழுத்தமாக மூடியிருக்க, காற்று நுழையக்கூட இடைவெளி இல்லாமல் இருந்தது.

    சிவா படபட’ வென கதவைத் தட்டினான்.

    உள்ளே பேச்சு ‘சட்’டென நின்றது.

    உஷா... நான்தான்!

    உள்ளே படபட’வென ஒரு ஓசை மட்டும்!

    நாலைந்து நிமிடங்கள் துரித கதியில் நகர –

    ‘பட்’டென்று கதவைத் திறந்தாள் உஷா.

    வாசலில் நின்ற நிலையிலேயே ஏற இறங்க அவளைப் பார்த்தான்.

    ‘உஷா முகத்தில் பேய்க்களை இருந்தது. உடைகளைத் திருத்திக்கொண்டு விட்டாள் போலும்...’

    வாங்க... என்ன இவ்ளோ சீக்கிரம்?

    நீ எதிர்பார்க்கலையா?

    இல்லை!

    அவன் பார்வை டீபாயில் விழுந்தது.

    ஆஷ்ட்ரே நிரம்ப சிகரெட் துண்டுகள்.

    சிவாவுக்கும் சிகரெட் பழக்கமுண்டு.

    ஒரு நாளைக்கு ரெண்டே சிகரெட்.

    காலையில் புறப்படும்போது காலியாக இருந்தது ஆஷ்ட்ரே.

    உள்ளே காமக் கூச்சல்!

    ‘படபட வென ஓட்டம்!

    ஆஷ்ட்ரே நிரம்ப சிகரெட் துண்டுகள்!

    பின் பக்கம் பார்வை படர -

    கதவு தாளிடப்படாமல் இருந்தது. அகலக் கால்களை வைத்து, நாலே எட்டில் நெருங்கினான். கதவுகளைத் திறந்தான். தோட்டத்து மண்ணில் அழுத்தமான, அவசரக் காலடிகள் கிணறுவரை போய், காணாமல் மறைய -

    கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தான்.

    காபி தரட்டுமா?

    நான் உனக்கு என்ன மரியாதை செய்யணும்னு யோசனை பண்றேன்!

    புரியலை!

    எதுடீ புரியலை?

    நாற்காலியைத் தள்ளிக்கொண்டு ‘சரே’ லென எழுந்தான்.

    நீங்க... நீ... ங்... க...?

    மூடின கதவு... வாசல்ல ஆம்பளைச் செருப்பு... உள்ளே முக்கல் முனகல். ஆஷ்ட்ரேல சிகரெட் துண்டுகள், தோட்டத்துல காலடிகள்... எல்லாத்தையும் இணைச்சுப்பாரு! என்ன கதை வருதுனு தெரியும்!

    அய்யோ என்னை...

    ஸ்... பேசாதே! கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் முடியறதுக்குள்ள துரோகமா?

    தயவு செஞ்சு கொஞ்சம்...

    அவனுக்கு ஆத்திரம் இன்னும் அதிகமானது.

    ‘தம்...தம். மென்று காலடிகளைப் பதித்து, உஷாவை நெருங்கிக் கொண்டிருந்தான்.

    உஷா பீதி வழியும் முகத்தோடு –

    அவனையே பார்க்க -

    அவள் பேச நினைத்தும், நாக்கு பெயராமல் தவியாய் தவித்தாள்...

    வெகு அருகில் நெருங்கி –

    துரோகி...

    கையை பளாரென காதும் கன்னமும் சேருமிடத்தில் இறக்க -

    ஒரு பந்து போல எழும்பிய உஷா -

    அப்படியே நேர்த்தியாக 600 கோணத்தில் ‘சரக்’ கென வளைந்து -

    இடுப்பு வரை செங்குத்தாக கீழே நோக்கி மடிந்து, திரும்பி தரையில் மல்லாந்தாள்.

    அவள் விழுந்த விதம் சிவாவை கலவரப்படுத்தியது.

    அப்படியே ஒரு நிமிடம் நின்றவன் –

    உஷாவிடம் எந்த சலனமும் தெரியாமல் போக-

    மண்டியிட்டு உட்கார்ந்தான்.

    குனிந்து அவள் முகத்தைத் தொட்டான்.

    ‘சட்’டென எழுந்து, ஜக்கில் தண்ணீர் எடுத்து வந்து, முகத்தில் தெளித்தான். அசைவில்லை.

    மறுபடியும் உட்கார்ந்து, நாசி துவாரம் தொட்டான்.

    சுவாசம் இல்லை...

    மணிக்கட்டில் இயக்கம் இல்லை.

    உஷா செத்துப்போய் நாலு நிமிடங்கள் முடிந்திருந்தன.

    2

    அந்த அறையே தட்டாமாலை ஆடியது சிவாவுக்கு.

    ‘ஓ இது ஒரு கொலை!’

    ‘நான் அறைந்ததால்தான் உஷா செத்துப் போனாள். ஆத்திரத்தில் நிதானம் தவறி விட்டது...’

    ‘அவள் உனக்கு துரோகம் செய்தாள். அதனால் நீ நிதானம் இழந்தாய்!’

    ஒரு குரல் உள்ளே அலற -

    அதை மீறிக்கொண்டு பீதி புறப்பட்டது!

    ‘காரணம் எதுவானாலும் இது கொலை!’

    குபீ’ரென்று உடல் முழுவதும் வியர்க்க, உடைகளே நனைந்து போகுமளவு வியர்வை

    Enjoying the preview?
    Page 1 of 1