Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணெல்லாம் உன் வண்ணம்..!
கண்ணெல்லாம் உன் வண்ணம்..!
கண்ணெல்லாம் உன் வண்ணம்..!
Ebook122 pages40 minutes

கண்ணெல்லாம் உன் வண்ணம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு வழியாய் எல்லாப் பொருட்களும் வந்தமர்ந்துவிட குடும்பம் மொத்தமும்... இங்கே, அங்கே என்று நகர்த்தி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
“சொந்தமாய் வீடு வாங்கணும்ங்கறது எத்தனை வருஷக் கனவு? லேட்டானாலும்... இப்பவாவது நிறைவேறுச்சே... ரொம்ப சந்தோஷம்ங்க...” புனிதா... ப்ரிட்ஜுக்குள் உரிய இடத்தில் பொருட்களை வைத்துக் கொண்டிருந்தாள்.
ரமணன் டி.வி. வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய யோசித்தவர்... மனைவியின் பக்கம் திரும்பினார்.
“அதென்ன... லேட்டானாலும்? அத்தனை கடமையும் முடிச்சிட்டு... இதையும் வாங்கியிருக்கேனேன்னு சந்தோஷப்படு...”
என்றவருக்கு நாற்பத்தி எட்டு வயது! தலைக்கு அடித்த டையின் உபயத்தாலும்... வகீகரமான முகத்தாலும் இளமை விலகவில்லை.
அப்பா இல்லாக் குடும்பத்தை தாங்கிச் சுமந்தது ரமணன்தான்! தம்பியின் படிப்பு, இரண்டு தங்கைகளின் திருமணம் என்னும் கடமைகளை முடித்து நிமிர்வதற்குள்... இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து, வளர்ந்து நிற்கிறார்கள்.
நெடுநாளையக் கனவு சொந்த வீடு! இ.எம்.ஐ.யில் வாங்கியாயிற்று...! இரண்டு பெண்களையும் கரை சேர்க்க வேண்டுமே! ரமணன் படித்த படிப்பு... எங்கே சென்றாலும் வேலைக்கு இரு கரம் நீட்டி அழைத்துக் கொள்வார்கள்.
“ஒண்ணும் சொல்லிவிடக்கூடாதே! நான் ஒண்ணும் தப்பாச் சொல்லலையே... நமக்குன்னு சொந்த வீடு! இனி ஹவுஸ் ஓனரோட தொணதொணப்பு இல்லே... இதைப் பண்ணாதீங்க... அதைப் பண்ணாதீங்கன்னு டார்ச்சர் இல்லே... சந்தோஷமா இருக்குங்க!”“சரி... சரி... ஆகற வேலையப் பாரு!”
“எனக்கு இங்கே ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சிருக்காங்க டாடி!”
“என்னது... ஃப்ரெண்டா? இங்கே வந்து முழுசா ரெண்டு மணி நேரம் கூட ஆகலே... அதுக்குள்ளே எங்கே புடிச்சே?” புனிதா ஆச்சர்யமாய் மகளைப் பார்த்தாள்.
“லிஃப்ட்லம்மா... இதே அபார்ட்மெண்ட்ல இருக்காங்க... எத்திராஜ்ல படிக்கிறாங்களாம்...” என்றாள் திவ்யா.
“சரி... சரி... சிந்து எங்கே?”
“அவ புக்ஸையெல்லாம் ஷெல்ப்ல அடுக்கி வச்சிட்டிருக்காம்மா...!”
“சரி... சரி... டைமாய்டுச்சு... நான் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட டிபன் வாங்கிட்டு வந்துடறேன்!” ரமணன்... கைகளை துடைத்தபடி ஸ்டூலில் இருந்து இறங்கினார்.
“போன் பண்ணா டோர் டெலிவரி பண்ணிடப் போறாங்க. இத்தனை வேலைய வெச்சுக்கிட்டு ஓடணுமா?”
“வேணாம்... வேணாம்... ஃபேஸ்புக்ல என்னென்னமோ போடறான்... யாரையும் நம்ப முடியல...!”
“.....!”
“லன்ச் சமைச்சிடறியா? முதல் நாள் சமைக்கணும்னு சொல்வாங்க!”
“அதான்... நாம போன மாசம் பால் காய்ச்சும் போதே சமைச்சோமே...! இன்னைக்கு மட்டும் ஹோட்டல்ல பார்த்துக்கலாம்... எல்லாம் ஒழுங்குபடுத்தவே ரெண்டு நாளாகுமே!”
சொன்ன மனைவியை ஒரு பார்வை பார்த்தபடி சட்டையின் பட்டன்களை போட்டார்.
ஹைடெக் அலுவலகம் அது!
பளபளக்கும் ஷூக்களும், நலுங்காத உடையுமாய், கண்களில் படிப்பும், சம்பளமும் தந்த அலட்சியம் மிதக்க ஆண்களும்.
லிப்ஸ்டிக் கலையாமல்... கூந்தல் அலுங்காமல், சருமப் பொலிவுடன், நாகரீக உடையுடன் பெண்களும்.மாதவி அந்த அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவள். அங்கு பணிபுரியும் மற்ற பெண்களைவிட வயதில் மூத்தவளாய் இருந்தாலும்... மற்ற எல்லாரையும் விட அழகிலும் உயரத்தில் இருந்தாள்.
இருபத்தைந்து வயது இளைஞன் கண்கள் கூட அவள் பார்க்காத நேரங்களில் அவசரமாய் அவள் உடம்பில் அலைந்து திரிந்தன.
போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த மாதவியின் முகபாவனைகள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருந்ததை தினகர் ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு அடுத்தபடி பொறுப்பில் இருப்பவன்.
“இன்னைக்கேவா?”
“.....!”
“ஆபீஸ்ல மீட்டிங் இருக்கே?”
“.....!”
“ஓ... ஓக்கே... ஓக்கே...?” யோசனையுடன் போனை கட் பண்ணினாள்.
“தினகர்...!”
“எஸ்... மேடம்!”
“இன்னைக்கு ஆல் ஓவர் பிராஞ்லேர்ந்தும் ஆபீஸர்ஸ் மீட்டிங் லீ மெரிடியன்ல இருக்காமே...!”
“ஆமாம்... மேடம்!”
“ஏன் எனக்குச் சொல்லலே? இன்னைக்கு நம்ம ஆபீஸ்ல மீட்டிங் இருக்கே?”
“நான் உங்களுக்கு ரெண்டு நாள் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணினேன் மேடம்!”
“சொன்னதா ஞாபகம் இல்லை... எனிவே... இங்கே மீட்டிங்கை நீங்க இருந்து பார்த்துக்குங்க...”
“ஓக்கே. மேடம்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
கண்ணெல்லாம் உன் வண்ணம்..!

Read more from ஆர்.மணிமாலா

Related to கண்ணெல்லாம் உன் வண்ணம்..!

Related ebooks

Reviews for கண்ணெல்லாம் உன் வண்ணம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணெல்லாம் உன் வண்ணம்..! - ஆர்.மணிமாலா

    1

    "யாழ்... டைமாய்டுச்சே... இன்னும் ரெடியாகலையா?" மாதவியின் குரல் ஹாலிலிருந்து வந்தது.

    குளித்துவிட்டு அப்போதுதான் பாத்ரூமிலிருந்து வந்த யாழினி... ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் மம்மி... என்று பதிலளித்தாள்.

    ஜீன்ஸிலும், மெலிதான டாப்ஸிலும் உடலை நுழைக்கும்முன்... அந்த அறையிலிருந்த அசையாப் பொருட்கள் உட்பட... பார்த்து ஜொள்விட்டன. முகத்தில் குழந்தைத்தனமும், உடம்பில் வஞ்சனையில்லாத இளமையும் கொண்ட டீனேஜ் கல்லூரிப் பெண்.

    இரண்டாமாண்டு விஸ்காம் படிப்பவள்.

    எந்த க்ளிப்புக்கும் அடங்காத அடர்த்தியான அளவாய் வெட்டப்பட்டு முதுகுவரை புரண்ட கூந்தலை... சீவி... அப்படியே விட்டாள். அந்தக் கூந்தலின் நடுவே அவளின் பளிங்குமுகம் இன்னும் எடுப்பாய் இருந்தது.

    மாதவி... ஹால் ஜன்னலின் ஸ்க்ரீனைத் திறந்துவிட்டாள். காற்றும், வெளிச்சமும்... குபுகுபுவென உள்ளே நுழைந்து... நிறைந்தது.

    என்ன பிரேக் ஃபாஸ்ட் மம்மி? டைனிங் டேபிள் முன் அமர்ந்த யாழினி அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள்.

    எப்போதும் போல இன்றும் ஆச்சர்யப்படுத்திய அழகு.

    யாழினி அசரவைக்கும் அழகி என்றால்... அம்மா பேரழகி. நாற்பத்தி நான்கு வயது என்றால்... சர்ட்டிஃபிகேட் காட்டினால் கூட நம்பமாட்டார்கள். உடல் முழுக்க இளமை தேங்கி நின்று முப்பதிற்கு மேல் நகராமல் நோக்கும் ஆடவர் கண்களையெல்லாம் காயப்படுத்தியது. அவளும் ஜீன்ஸும், டிஷர்ட்டும்தான் அணிந்திருந்தாள். பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவள். லகரங்களில் சம்பளம்.

    கிழக்கு வானில் பறவைகள்... ஊர்வலம் நடத்துவதுபோல் கூட்டமாய் பறந்த அழகை... ரசித்துப் பார்த்தவளாய்... பார்வையை மகளின் மீது பதிய வைத்தாள்.

    ப்ரட்... ஆம்லெட்!

    ஓஹ்... நோ... இன்னைக்கும் இதேதானா? சிணுங்கினாள்.

    ஹெல்திதானே யாழ்? இன்னைக்கு சாப்ட்ரு... நாளைக்கு ஸ்விக்கில ஆர்டர் பண்ணிடலாம்!

    உனக்கு சமைக்கத் தெரியாதா? எப்பப் பார்த்தாலும் ப்ரட், ஆம்லெட், இல்லேன்னா ஹோட்டல்லேர்ந்து! வெரி போர் மம்மி!

    மூணு லட்சம் சம்பளம் வாங்கறவ கிச்சன்ல நிக்க முடியுமா? ஆபீஸ், மீட்டிங், அவுட்டிங்னு வொர்க் லோட் அதிகம்.

    உன்னை நான் எப்பவும் கேக்கல... எப்பயாவது? ம்ஹூம்...! முகம் சுருக்கியபடி பிரட்டை வாயில் வைத்தாள்.

    டாடியக்கூட என்னை மாதிரிதான் கஷ்டப்படுத்தினியா? அந்த வார்த்தை... சூடிழுத்ததுப் போல் ஜெர்க் ஆக வைத்தது.

    பாவம் டாடி!

    சூழ்நிலையை இதமாக்க... முகத்தில் சிரிப்பை ஒட்ட வைத்துக் கொண்டாள்.

    அவருக்கு சமையல் தெரியும். அதனால கிச்சனை ரணகளம் பண்ணி... ரெண்டு பேரும் சேர்ந்து எதையாவது சமைப்போம்...

    உன்னைவிட டாடி நல்லா சமைப்பாரா?

    இப்ப எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு? டயமாகலையா? சாப்பிட்டுக் கிளம்பு!

    டாடியப் பத்தி எப்பப் பேசினாலும் இப்படிதான் எரிஞ்சு விழுந்து கட் பண்றே?

    …...?!

    அரைகுறையாய்... வேண்டாவெறுப்பாய்... சாப்பிட்டு எழுந்தவள்... அந்த எதையாவது சமைக்கலாமில்லே? நாக்கு செத்துப் போகுது. சீக்கிரத்துல பால் ஊத்தி காரியம் பண்ணவேண்டியதுதான்!

    லூஸு மாதிரி பேசிட்டிருக்காதே கிளம்பு!

    சரி... சரி... கிளம்பியாச்சு... எங்கே உன் ஹேண்ட் பேக்? கேட்டுக்கொண்டே அம்மாவின் அறைக்குள் போனாள்.

    ஏய்... எதுக்கு... ப்ச்... தொடாதே!

    அதற்குள் பேகைத் திறந்து அவளின் ஏடிஎம் கார்டு ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

    எதுக்கு எடுத்தே? என்ன செலவு உனக்கு?

    உன் டைமை வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னுதான் கார்டு எடுத்துக்கிட்டேன். என்ன செலவுன்னு இன்னும் டிஸைட் பண்ணலே... பட், என் ஃப்ரெண்டுக்கு இன்னைக்கு பர்த்டே...!

    எவ்ளோ சொல்லு... கேஷ் தர்றேன்... கார்டைத் தா!

    விடு மம்மி... எவ்ளோ எடுத்தேன்னு மெசேஜ் வரும்... பார்த்துக்க... பை மம்மி! வேகமாய் பறந்துவிட்டாள்.

    இதே வேலையாப் போச்சு உனக்கு!

    தன் செல்போனை எடுத்துக்கொண்டு ஜன்னலருகே சென்றவள்... தன் அலுவலகத்தில் பணிபுரியும் ரமேஷிற்கு போன் பண்ணி... சில விஷயங்கள் பேசியவள் போனை அணைத்து... அங்கிருந்து கண்கள் எட்டுவரை தெரிந்த வெளி உலகை வேடிக்கை பார்த்தாள்.

    வடபழனியில் பத்து மாடிகள் கொண்ட அப்பார்ட்மெண்டில் இவள் ஏழாவது மாடி ஃப்ளாட்டில் வசிக்கிறாள். இரண்டு பெட்ரூம் கொண்ட விஸ்தாரமான வசதிகள் நிறைந்த ஃப்ளாட்! நவீனமாய் வடிவமைக்கப்பட்ட விலை உயர்ந்த ஸோஃபாக்களும், ஃபர்னிச்சர்களும்... ஆயில் பெயிண்ட்டிங் என்ற பெயரில் புரியாத சித்திரங்கள் சுவற்றிலும்!

    இங்கிருந்து பார்க்கையில் சற்று தூரத்தில் தெரிந்த சாலையில், மனிதர்களும், வாகனங்களும் மொபைலில் பார்ப்பது போல் சின்னதாகத் தெரிந்த வடபழனி முருகன் கோயிலின் கோபுரம் கூடத் தெரிந்தது.

    பார்த்ததும் பக்தி பரவசத்துடன் கன்னத்தில் போட்டு முத்தமிடும் ரகமல்ல அவள்.

    சொல்லப்போனால் அந்த வீட்டில் பூஜையறையும் இல்லை... ஒரு சாமி படமும் இல்லை.

    நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவள் தன்னை மட்டுமே நம்பி வாழ்பவள். தன் உழைப்பையும், புத்திசாலித்தனத்தையுமே கடவுளாக நினைப்பவள்.

    கீழே... கார் பார்க்கிங் கண்களுக்குத் தென்பட்டது. அருகிலேயே ஒரு பெரிய டெம்ப்போ வேன், ஃபர்னிச்சர், சாமான் இத்யாதிகளுடன் நின்றிருந்தது.

    புதிதாய் யாரோ குடிவந்திருக்கிறார்கள்.

    மாதவி அங்கிருந்து விலகி... அலுவலகம் கிளம்ப ஆயத்தப்பட்டாள்.

    லிஃப்ட் கீழிறங்கிக் கொண்டிருந்தது. அதனுள் யாழினி மட்டுமே இருந்தாள். நான்காவது மாடியில் நின்று... இளம் பெண்ணொருத்தி நுழைந்தாள். இவளைவிட ஓரிரு வயது சிறியவளாக இருக்க வேண்டும்

    அமைதியான, சாந்தமான முகம்! தூக்கம் கெட்டது போல் முகத்தில் சிறு களைப்பு!

    இதற்கு முன் அவளை இந்த அப்பார்ட்மெண்டில் பார்த்ததில்லை.

    அந்தப் பெண்ணும் யாழினியை பார்த்தாள்.

    சிரிக்கலாமா, வேண்டாமா, என்பது போன்ற தயக்க பாவனை!

    யாழினி புன்னகைத்தாள்.

    ஹாய்...

    ஹாய்...!

    உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததில்லையே...

    இன்னைக்குதான் குடி வந்திருக்கோம்... ஃபோர்த் ஃப்ளோர்...

    வாவ்...! என்பேரு யாழினி... எத்திராஜ்ல செகண்ட் இயர்!

    கிரேட்! என்பேரு திவ்யா... ஃபர்ஸ்ட் இயர் குயின் மேரீஸ்!

    சூப்பர். எங்க ஃப்ளாட் செவன்த் ஃப்ளோர்... அடிக்கடி பார்க்கலாம். அவள் கையைப் பற்றிக் குலுக்கும்போதே... கதவு திறந்தது.

    பை... திவ்யா... ஸீ யூ...! டாட்டா காட்டி தன் டூ வீலர் அருகே வேகமாக

    Enjoying the preview?
    Page 1 of 1