Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

புதிய பூ பூத்தது
புதிய பூ பூத்தது
புதிய பூ பூத்தது
Ebook124 pages29 minutes

புதிய பூ பூத்தது

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்தாள் வசந்தி. கண்களை தேய்த்துவிட்டுக் கொண்டு மேஜை மேல் இருந்த அலாரம் டைம்பீஸைப் பார்த்தாள். மணி ஐந்தே கால். சாயந்தர மஞ்சள் வெய்யில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் நுழைந்து தரையில் – வெளிச்சக் கோடுகளாய் விழுந்திருந்தன. பக்கத்து வீட்டு ரேடியோ 'மாலையில் யாரோ மனதோடு பேச' என்று FM அலை வரிசையில் - அந்தத் தெரு மொத்தத்துக்கும் சேர்த்து சத்தமாய் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. வசந்தி கதவுக்கு வந்து தாழ்ப்பாளை பிரித்தாள். சபீனா நின்றிருந்தாள். அவளுடைய ரூம் மேட். பளிச்சென நிறம். சினிமா ரேகா மாதிரி குள்ளம். க்ரே வர்ண பெங்காலி காட்டன் புடவையை உடுத்தியிருந்தாள். பொட்டு வைக்காத அவள் முகத்திற்கு மை தீட்டப் பட்ட புருவங்கள் எடுப்பாகத் தெரிந்தன. வசந்தியை அறையில் பார்த்ததும் கண்களில் ஆச்சர்யம் ரொம்பியது.
 "ஏய்... இன்னிக்கு நீ ஆபீஸுக்கு போகலையா?"
 திரும்ப கட்டிலுக்கு வந்து சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்ட வசந்தி உம் கொட்டிவிட்டு தலையாட்டினாள்.
 "இல்லை..."
 "ஏன் உடம்புக்கு ஏதாவது...?"
 "அதெல்லாம் ஒண்ணுமில்லை."
 "பீரியடா...?"
 "ச்சீ! அதுதான் போன வாரமே முடிஞ்சதே...?"
 "பின்னே...?"
 "அது பெரிய கதை.

டிபன் பாக்ஸை சமையல் கட்டில் போட்டுவிட்டு தோள் பையை சுவர் ஆணியில் மாட்டிய சபீனா புன்னகைத்தாள். கண்ணைச் சிமிட்டினாள்.
 "கதையா...? என்ன கதை...?"
 "நான் நொந்து போய் ஆபீஸுக்கு லீவை போட்டுட்டு ரூம்ல உட்கார்ந்திருக்கேன். உனக்குக் கிண்டலா இருக்கா...?"
 "ஏண்டி சோகக் கதையா...?"
 "இல்ல... புதிர்க் கதை..."
 சபீனாவுக்கு சுவாரஸ்யம் தட்டியது.
 "சொல்லு கேட்போம். அப்புறமா போய் பேஸ் வாஷ் பண்ணிக்கிறேன்..."
 "காலையில நான் ஆபீஸில் வேலையா இருந்தப்ப என்னைப் பார்க்கிறதுக்காக மெட்ராஸிலிருந்து ஒரு பொண்ணு வந்திருந்தா. அவ பேரு நிருபமா...!"
 "சரி..."
 "என்னோட பழைய 'ஹாஸ்டல் ரூம்மேட்' சுப்ரஜாவை உனக்குத் தெரியுமில்லையா...?"
 "தெரியும்..."
 "அவதான் - இந்த நிருபமாவுக்கு ஒரு லெட்டரைக் குடுத்து என்னிட்டே அனுப்பிவிட்டிருக்கா."
 "என்ன லெட்டர்...?"
 "நிருபமாவுக்கு தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணித் தரச் சொல்லி."
 "சரி...!"
 "அவ ஏதோ வேலையா வந்திருக்கா. நாலைஞ்சு நாள்... இல்லேன்னா ஒரு வாரம் தங்கணும்ன்னு சொல்லிச்சு."
 "சஸ்பென்ஸ் தாங்க முடியலை. சீக்கிரமே சொல்லுடி...நிருபமா மும்பைல வளர்ந்த பொண்ணு. பேசற தமிழை திணறித் திணறி பேசறா. ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு - அவளையும் கூட்டிக்கிட்டு வெளியே வந்தேன். வெள்ளி விநாயகர் கோவிலுக்குப் பக்கத்துல ஒரு கூல்ட்ரிங்க்ஸ் ஸ்டால் இருக்கே...?"
 "ஆமா..."
 "அங்கே நானும் அவளும் கூல்ட்ரிங்ஸ் சாப்பிட்டோம். பாதி சாப்டுட்டு இருக்கும் போதே... கோயில் வாசல்ல என் உறவுக்கார பொண்ணைப் பார்த்தேன். அவகிட்ட போய் ரெண்டு நிமிஷம் பேசிட்டு மறுபடியும் நிருபமாகிட்டே வந்தேன். அவளைக் காணோம்."
 சபீனா நிமிர்ந்தாள்.
 "என்னது? காணோமா...?"
 "ஆமா..."
 "எங்கே போயிட்டா...?"
 "கூல்ட்ரிங்ஸ் ஸ்டால்ல விசாரிச்சேன். யாரோ ஒரு ஆள் வந்து அவளைக் கூட்டிட்டுப் போனதாய் சொன்னான்."
 "பக்கத்துல எங்கேயாவது போயிருக்கலாமே...?"
 "அப்படி போறதாயிருந்தா என்கிட்டே சொல்லிட்டுப் போயிருக்கலாமே... அப்படியும் செய்யலை."
 "அப்புறம்."
 "அப்புறம் என்ன... கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் வரைக்கும் அந்த வெள்ளி விநாயகர் கோயிலுக்குப் பக்கத்திலேயே நின்னுட்டிருந்தேன். போனவ போனவதான். வரவேயில்லை. இந்த ஊர் எனக்கு புதுசு. யாரையுமே எனக்குத் தெரியாதுன்னு சொன்னா. ஆனா இப்ப என்னடான்னா... என்கிட்டே சொல்லிக் கொள்ளாமலே கூட எவனோ வந்து கூப்பிட்டதும் போயிட்டா..."
 சபீனா நகத்தைக் கடித்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223559252
புதிய பூ பூத்தது

Read more from Rajeshkumar

Related to புதிய பூ பூத்தது

Related ebooks

Reviews for புதிய பூ பூத்தது

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    புதிய பூ பூத்தது - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    வசந்தி டைப்ரைட்டிங் மெஷினைத் தட்டுவதில் தீவிரமாய் இருந்தாள். கண்கள் வலது பக்கமாய் வைக்கப் பட்டிருந்த இன்வாய்ஸை பார்த்துக் கொண்டிருக்க - மருதாணி பூச்சிட்ட விரல்கள் ஆங்கில எழுத்துக்களின் மேல் வெகு லாவகமாய் ஒற்றி ஒற்றி எழுந்தன.

    அலுவலகம் இன்னும் வேலை நேரத்தை ஆரம்பிக்காத காலை மணி 9.55 ஹாலில் அரட்டை மிச்சமிருந்தது.

    புடவை டிசைன் நல்லாயிருக்கே... எங்க எடுத்தே...?

    நான் எடுக்கலை...

    பின்னே...?

    என் வீட்டுக்காரர் பெங்களூர் போயிருந்தப்ப எடுத்துட்டு வந்தது.

    உன் பாடு பரவாயில்லை. எனக்கும் ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே காலத்துக்கும் தண்டம், ஒரு கர்ச்சீப்பை ஒழுங்கா வாங்கிட்டு வரத் தெரியாது.

    அந்தப் பெண் குரல்களை அமுக்கிக் கொண்டு ஆண்களின் அரசியல்.

    ஒரு கோடி ரூபாய் வாங்கியிருப்பார்னு நினைக்கிறியா?

    சேச்சே...! பிரதமர் அவ்வளவு சீப்பா போக மாட்டார். நம்ம ஊர் எம்.எல்.ஏ.வே ஒரு கோடி வாங்குவார். அந்த பிசாத்து காசைப் போய் ஏன் கை நீட்டி வாங்கியிருக்கப் போறார்.

    எதை நம்பறதுன்னு தெரியலை. ராணுவ ஆட்சி வந்து துப்பாக்கியைக் காட்டி கேட்டாதான் உண்மையை ஒத்துக்குவாங்க போலிருக்கு. குறுக்கே ஒரு குரல்.

    சிலிண்டர் எப்ப கிடைக்கும்னு தெரியலை. நாயா பேயா அலைஞ்சிட்ருக்கேன்...

    ஓடிப்போன சுதா ஒழுங்கா குடும்பம் நடத்தறாளா? இத்தனை பேச்சுக்களும் வசந்தியின் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருந்தன. கேட்டு அதை மனசுக்குள் ரசித்தபடி - டைப்ரைட்டிங் மெஷினை தட்டுவதில் கவனமாய் இருந்தாள்.

    அம்மா...

    பக்கவாட்டில் குரல் கேட்டது. திரும்பினாள்.

    ஆபீஸ் ப்யூன்.

    என்ன மருதாசலம்...?

    உங்களைப் பார்க்க விஸிட்டர் வந்துருக்காங்கம்மா...

    ஆணா... பெண்ணா?

    பொண்ணு...

    பேர் கேட்டியா?

    ம்... கேட்டேன். நிருபமான்னு சொன்னாங்க.

    வசந்தி உதட்டைக் கடித்து யோசித்தாள்.

    'நிருபமா...?' அவளுக்குக் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத பெயர். நெற்றி சுருங்கியது.

    'என்னோடு படித்தவளோ...?'

    வசந்தியின் மூளைப் பிரதேசம் ஒரு முறை பள்ளி நாட்களையும், கல்லூரி நாட்களையும் தோண்டிப் பார்த்தது. சோர்ந்தாள்.

    அந்தப் பெயரில் எந்த முகமும் மனசுக்கு தட்டுப்படவில்லை. மருதாசலம்...

    என்னம்மா...?

    அந்த நிருபமா என்னைத்தான் கேட்டாளா?

    ஆமாம்மா... டைப்பிஸ்ட் மிஸ். வசந்தியைப் பார்க்கணும்னு சொன்னாங்க.

    வசந்தி எழுந்தாள். மேஜை வரிசைகளுக்கு இடையில் நடைபோட ஆரம்பித்தாள். சென்ட்ரலைஸ்ட் ஏர்கண்டிஷனர் ஆபீஸ் மொத்தத்தையும் ஊட்டியின் சீதோஷ்ண நிலையில் வைத்திருந்தது.

    சீஃப் அக்கௌண்டன்ட் ஆபீஸரை கடக்கும்போது அவர், அவளை 'எங்கே போறே?' என்பது போல் பார்க்க யாரோ விசிட்டர் ஸார் என்று சொல்லி அறைக் கதவைத் திறந்து கொண்டு வசந்தி வந்தாள்.

    வராந்தாவின் மொசைக் புள்ளிகள் போலவே குழப்பமாய் 'யார் அந்த நிருபமா?' என்ற கேள்வி மீண்டும் மனசுக்குள் ஓடியது. வராந்தா விளிம்பில் வரிசையாய் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்த செம்மண் தொட்டிகளில் கல்வாழைச் செடிகள் சிவப்புப் பூக்களோடு சிரித்தன. வராந்தா முடிவில் படிகள் வந்தன. இறங்கினாள். ரிசப்ஷன் அறை வாசனையோடு வந்தது. அழகான ரிசப்ஷனிஸ்ட் உறுத்தாத நிறங்களில் சில பாலிமர் நாற்காலிகளில் - டீபாய் - ஆஷ்ட்ரே - ஹிண்டு. கண்ணாடி போட்ட ஷபாரி அணிந்த மனிதர் ஒரு சின்ன ப்ரீப்கேஸோடு உட்கார்ந்திருந்தார். அவரைத் தவிர - இன்னொரு நாற்காலியில் அந்தப் பெண் தெரிந்தாள். 'இவளா நிருபமா...?'

    வசந்தி அங்கே வந்ததுமே - அந்தப் பெண் ரிசப்ஷஸ்டை

    Enjoying the preview?
    Page 1 of 1