Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இப்படிக்கு இறந்துபோன ரமா!
இப்படிக்கு இறந்துபோன ரமா!
இப்படிக்கு இறந்துபோன ரமா!
Ebook146 pages36 minutes

இப்படிக்கு இறந்துபோன ரமா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெண்ணிலா வேதாசலம் கொடுத்த அந்த புகார் மனுவை ஒரு தடவை படித்துப் பார்த்து விட்டு எதிரில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் நீட்டினாள். "இதை பதிவு பண்ணிகிட்டு அதற்கான ரசீதைக் குடுங்க"
 இளங்கோவன் அந்த புகார் மனுவை வாங்கி இரண்டாய், நான்காய், எட்டாய் கிழித்து பக்கத்தில் இருந்த குப்பை கூடைக்குள் போட்டுவிட்டு காப்பி டம்ளரை கையில் எடுத்துக் கொண்டார்.
 "ஓ.கே... உங்க ரியாக்ஷனை நீங்க காட்டிட்டீங்க. என்னோட ரியாக்ஷனை நான் காட்ட வேண்டாமா...?" - சொன்ன வெண்ணிலா தன்னுடைய ஜாக்கிங் ட்ரஸ்ஸின் இடதுபக்கம் இருந்த பாக்கெட்டிலிருந்து அந்தசெல்போனை எடுத்தாள். அதை ஆக்டீவ்க்கு கொண்டு வந்து ஒரு பட்டனை அழுத்தினாள். செல்லின் டிஸ்ப்ளே ஸ்க்ரீனில் அந்த உருவங்கள் தெரிந்தன.
 "இன்ஸ்பெக்டர்! இதைக் கொஞ்சம் பார்க்கறீங்களா?"
 "என்ன இது...?"
 "நேத்து ராத்திரி பதினோரு மணி சுமார்க்கு பெசன்ட் நகரில் இருக்கிற கலாக்ஷேத்ரா காலனியின் எக்ஸ்டன்ஷன் ஒன்பதாவது தெருவில் நீங்களும், இறந்து போன கீதாவின் கணவரான ஜெயபாலனும் திருட்டுத்தனமாய் மீட் பண்ணி பேசிக்கிட்டபோது, பின்னாடியே உங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்த நான் என்னோட செல்போன் காமிராவில் 'க்ளிக்' பண்ணினேன். அந்த சமயத்துல நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டதை ரெக்கார்டும் பண்ணிட்டேன். என்ன பேசிகிட்டீங்கன்னு மறுபடியும் கேட்டுப் பார்ப்போமா?"
 வெண்ணிலா செல்போனின் மைக்கை ஆன் செய்தாள். குரல்கள் ஸ்பஷ்டமாய் கேட்டது.
 "இதோ பாருங்க ஜெயபாலன்... நான் கேட்ட பணத்தை நீங்க கொண்டு வந்து கொடுத்துட்டீங்கள்ள...? இனிமே கவலைப்படாம வீட்டுக்குப் போங்க. உங்க பொண்டாட்டி கீதா செத்துப்போன விவகாரத்துல எந்த பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக்கறேன்...!"
 "ஸார்... என்னோட மாமனார்க்கு மகளோட சாவில் லேசா சந்தேகம் வந்திருக்கு...! என்னை அவர் பார்க்கிற பார்வையே சரியில்லை. 'எம் பொண்ணுக்கு ஜலதோஷம் காய்ச்சல் கூட வராது.  ஹார்ட்  அட்டாக்  எப்படி  வரும்'ன்னு  கேட்கிறார்."
 "எல்லா அப்பனுக்கும் வர்ற சந்தேகம்தான்...! அவர் உங்க மேல கம்ப்ளையிண்ட் பண்ணணும்ன்னா என்கிட்டதான் வரணும். அப்படி வர்றப்ப நான் பார்த்துக்கறேன். நீங்க எதுக்கும் வொர்ரி பண்ணிக்க வேண்டாம். இதுமாதிரி எத்தனை கேஸைப் பார்த்து இருப்பேன். அது சரி ஜெயபாலன்... உங்க பொண்டாட்டி கீதா மேல அப்படி என்ன கோபம்? எதனால அவளைத் தீர்த்துக்கட்டற முடிவுக்கு வந்தீங்க...?"
 "ஸார்...! கடந்த சில மாசமாவே என்னோட ரியல் எஸ்டேட் பிசினஸ் சரியா போகலை. நிறைய பணப்பிரச்னை. கீதாவோட அப்பாகிட்டே நிறைய பணம் இருந்தது. கேட்டேன். அவர் தரமாட்டேன்னு சொல்லிட்டார். அவர்அப்படி சொன்னதும் எனக்கு ஆத்திரம் வந்தது. கீதாவை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சேன். அவ பயப்படலை. என்னையே எதிர்த்துப் பேச ஆரம்பிச்சா... சம்பவம் நடந்த அன்னிக்கு அவ கொஞ்சம் ஓவரா பேசினா... ஓங்கி... விட்டேன் அறை. அப்படியே சுருண்டு விழுந்தவதான்... அப்படியே உயிரை விட்டுட்டா..."
 "அப்படி என்ன அவ ஓவராய்ப் பேசினா?"
 " 'ரியல் எஸ்டேட் பிசினஸ் சரியில்லைன்னா என்ன... வேற பிசினஸ் பண்ணலாமே'ன்னு கீதா சொன்னா. நான் அதுக்கு 'வேற என்ன பிசினஸ் பண்றது... வேற எதுவும் எனக்குத் தெரியாது'ன்னு சொன்னேன். இப்படி நான் சொன்னதும் அவ கிண்டலும் கேலியுமா என்ன சொன்னா தெரியுமா ஸார்?"
 "என்ன சொன்னா...?"
 " 'பஸ் ஸ்டாண்ட்டுக்குப் பக்கத்துல எங்கேயாவது ஒரு கட்டணக் கழிப்பிடம் கட்டி அதுக்கு முன்னாடி டேபிளும் சேரும் போட்டு உட்கார்ந்துக்க வேண்டியதுதானே'ன்னு சொன்னா... கோபம் வருமா வராதா... ஸார்?"
 "சரி... சரி... அவ கதை உங்க கையால முடியணும்ன்னு இருக்கு... என்ன பண்றது...? ஒண்ணும் கவலைப்படாதீங்க ஜெயபாலன்... நிம்மதியா வீட்டுக்கு போங்க. ஒரு வாரம் பத்து நாளைக்கு ஷேவிங் பண்ணிக்காமே... சரியாய் சாப்பிடாமே ட்ராமா பண்ணுங்க... எல்லாம் சரியாப் போயிடும்."
 உரையாடல் நின்று போக, செல்போனை அணைத்தாள் வெண்ணிலா. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் முகம் வியர்த்து இருண்டு போயிருந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 8, 2024
ISBN9798224122660
இப்படிக்கு இறந்துபோன ரமா!

Read more from Rajeshkumar

Related to இப்படிக்கு இறந்துபோன ரமா!

Related ebooks

Related categories

Reviews for இப்படிக்கு இறந்துபோன ரமா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இப்படிக்கு இறந்துபோன ரமா! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    தங்கமான விஷயம்:

    பிளாட்டினம் விலை உயர்ந்ததாக இருந்தாலும் பெண்களின் வோட்டு என்னவோ தங்கத்துக்குத்தான்! மனிதன் இந்த மஞ்சள் உலோகத்தைக் கண்டு சொக்க ஆரம்பித்தது இன்று நேற்றல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் தங்கத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எகிப்தை தொடர்ந்து லிபியாவும் தங்கத்தை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. மற்ற உலோகங்களைப் போல் இல்லாமல் அரிதாய் கிடைப்பதால்தான் தங்கத்துக்கு இவ்வளவு மவுசும் மதிப்பும்.

    விடியற்கால சென்னை இன்னமும் பனிமூட்டத்தில் வசமாய் சிக்கியிருக்க கிழக்கே வங்கக் கடலின் விளிம்பில் தக்காளி நிற சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தலையை உயர்த்திக் கொண்டிருந்தான். பல பகுதிகளில் இன்னமும் சோடியம் விளக்குகள் உயிரோடு இருந்தன. பேப்பர் போடும் பையன்கள் சைக்கிளில் பறக்க, ஆவின் பால் பூத்துகளில் ரிடையர்ட் ஆசாமிகள் தலையில் மப்ளர்களைச் சுற்றிக் கொண்டு காத்திருந்தார்கள்.

    வழக்கம்போல் மெரீனா பீச் கடற்கரையின் பேவ்மெண்ட்டில் தொப்பைகளைக் கரைப்பதற்காக வாக்கிங் போய்க் கொண்டிருந்த ஒரு சின்ன கும்பலில் வெண்ணிலாவும் இருந்தாள். 27வயது 55 கிலோ எடையோடு சிவப்பாய் அழகாய் இருந்த வெண்ணிலாவுக்கு அந்த கறுப்பு நிற ஜாக்கிங் சூட் எடுப்பாய் இருந்தது. ஒரு லாயராக ப்ராக்டீஸ் செய்யும் வெண்ணிலா சமீப காலமாய் பிரபலம். காரணம் ‘மறுபடியும் வசந்தம்’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, விவாகரத்தான கணவன் மனைவிகளை சேர்த்து வைக்கிற பணியை ஆரம்பித்து இருந்தாள். பிரஸ் மீடியாக்களும், டி.வி. மீடியாக்களும் போட்டி போட்டுக் கொண்டு வெண்ணிலாவை பேட்டி காண, வெண்ணிலாவின் இமேஜ் கடந்த சில மாதங்களில் ஒரு குபீர் உயரத்துக்குப் போயிருந்தது.

    குட்மார்னிங் வெண்ணிலா...

    தனக்குப் பக்கவாட்டில் எழுந்த குரல் கேட்டு வெண்ணிலா திரும்பிப் பார்த்தாள். பப்ளிக் பிராசிகூட்டர் பொன்னம்பலம் தன்னுடைய டீ ஷர்ட்டுக்குள் அடங்காத தொப்பையோடும் மினுமினுக்கிற வழுக்கை மண்டையோடும் தெரிந்தார். வெண்ணிலா மலர்ந்தாள்.

    குட் மார்னிங் பி.பி. ஸார்...

    பொன்னம்பலம் பக்கத்தில் வந்தார். என்னம்மா வெண்ணிலா... நீ மட்டும் வர்றே.. எங்கே உன்னோட ஹஸ்பெண்ட் மிஸ்டர் மாயக்கண்ணன்?

    ரெண்டு நாளாய் அவர்க்கு வைரஸ் ஃபீவர். ஆபீஸுக்கே போகலை. வீட்ல இருந்து ரெஸ்ட் எடுத்துட்டிருக்கார். இன்னிக்கு கொஞ்சம் பரவாயில்லை. நாளைக்கு வாக்கிங் வந்துடுவார்... நீங்க எப்படி இருக்கீங்க பி.பி... ஸார்...?

    எனக்கென்னம்மா... ஹாய்யா இருக்கேன்... மகளோட பிரசவத்துக்காக என்னோட ஒய்ஃப் அமெரிக்கா போயிருக்கா. புதுசா வந்து இருக்கிற மருமகப் பொண்ணு நல்லா சமைச்சுப்போடறா... கோர்ட்டுக்குப் போனா ஒரு ரெண்டுமணி நேர வேலைதான். எவ்ரிதிங்க் ஈஸ் ஆன் ஸ்மூத் கோயிங்...!

    உங்க தொப்பையைப் பார்த்தாலே தெரியுது ஸார்...

    என்னதான் வாக்கிங் போனாலும் ஓடினாலும் வயிறு மட்டும் குறையவே மாட்டேங்குதம்மா...

    "ஸார்...! உங்க வயிறு குறையணும்ன்னா இந்த வாக்கிங்... ஜாக்கிங் எல்லாம் உபயோகப்படாது. அதுக்கு ஒரு சின்ன எக்சர்சைஸ் இருக்கு... அதை மட்டும் நீங்க பண்ணினாப் போதும். ஒரே மாசத்துக்குள்ளே இந்த வயிறு காணாமே போயிடும்.

    மொதல்ல அந்த எக்சர்சைஸை எனக்கு சொல்லிக் கொடம்மா... உனக்கு புண்ணியமாய் போகும்...

    அது ஒண்ணும் பெரிய கஷ்டமான எக்சர்சைஸ் இல்லை ஸார்... காலையில ஒன்பது மணிக்கு ஒரு தடவை, மத்தியானம் ஒரு மணிக்கு ஒருதடவை, ராத்திரி எட்டு மணிக்கு ஒருதடவை தலையை ஒரு ரெண்டு விநாடி இடது பக்கமிருந்து வலது பக்கமாய் ஆட்டினால் போதும்.

    அவ்வளவுதானா...?

    அவ்வளவுதான்...!

    அது என்ன மூணு வேளை கணக்கு?

    அப்பத்தானே... நீங்க டைனிங் டேபிள்ல சாப்பிட உட்கார்வீங்க... மருமகள் ரெண்டாவது தடவை பரிமாற வரும்போது தலையை அப்படி ஆட்டினாப் போதும்...! தொப்பை... போயே போச்சு!

    பொன்னம்பலம் சிரித்தார்.

    இது ரொம்பவும் கஷ்டமான எக்சர்சைஸ் ஆச்சே... நம்மால முடியாதம்மா... மருமக ப்ரிப்பேர் பண்ற ‘நான்-வெஜ்’ அயிட்டம் சாப்பிடறதுக்கே இன்னொரு வாயும் வயிறும் இருக்கக் கூடாதான்னு யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன். நீ வேற...!

    அப்படீன்னா உங்க தொப்பைக்கு விமோச்சனமே கிடையாது ஸார். நித்ய கல்யாணி மாதிரி அது நித்ய தொப்பை - வெண்ணிலா சொல்லி சிரித்துக் கொண்டிருக்கும்போதே எதிரே வந்த அந்த வயதான பெரியவர் கும்பிட்டார்.

    வக்கீலம்மா... வணக்கம்...!

    வெண்ணிலா ஏறிட்டாள்.

    ஓ! வேதாசலம்... நீங்களா... என்ன காலங்கார்த்தால இந்தப்பக்கம்...?

    அம்மா... உங்களைப் பார்க்கத்தான் வீட்டுக்குப் போனேன். நீங்க வாக்கிங் போயிருக்கிறதாய் அய்யா சொன்னார். அதான் வந்தேன்...!

    என்ன விஷயம்...?

    உங்ககிட்டே ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும்மா

    சூழ்நிலையை உணர்ந்த பி.பி. விடை பெற்றுக் கொண்டார்.

    "நான் வர்றேம்மா... உன்னோட க்ளையண்ட் தனியா ஏதோ பேச விரும்பறார். நாளைக்கு பார்க்கலாம்மா... உன்னோட ஹஸ்பெண்ட் மாயக்கண்ணனை

    Enjoying the preview?
    Page 1 of 1