Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீங்காத நிழல் ஒன்று
நீங்காத நிழல் ஒன்று
நீங்காத நிழல் ஒன்று
Ebook96 pages29 minutes

நீங்காத நிழல் ஒன்று

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரவு ஒன்பது மணி.
 கட்டிலில் மல்லாந்து படுத்து மேல் முகட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மவுனிகாவின் தோளைத் தொட்டான் சிவகுரு.
 "மவுனிகா..."
 "இன்னிக்கு உனக்கு என்னாச்சு?"
 "ஒ... ஒ... ஒண்ணும் ஆகலையே..." சுதாரித்துக்கொண்டு கணவனிடம் திரும்பினாள்.
 "இல்லை... சாயந்திரத்திலிருந்தே நீ சரியா இல்லை எதையோ தீவிரமா சிந்தனை பண்ணிட்டிருக்கிற மாதிரி தெரியுது."
 "ஆ... ஆபீஸ் வேலையைப் பற்றி நினைச்சுட்டிருந்தேன்."
 "இது வீடு மேடம். அந்தக் கவலையெல்லாம் ஆபீசோடு சரி. இப்போ அப்பா அம்மா விளையாட்டு விளையாடற நேரம். விளக்கை அணைக்கட்டுமா?"
 "வே... வேண்டாங்க."
 சிவகுரு எழுந்து உட்கார்ந்தான். "மவுனிகா... உனக்கு என்னாச்சு?"
 "தலையை வலிக்குது..."
 "சரி. வா. மொட்டை மாடிக்குப் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வரலாம்."
 'இவரிடம் அந்த அனில் வந்து பேசிவிட்டுப் போன விசயத்தைப் பற்றி சொல்லலாமா?'
 'வேண்டாம்! இவருக்கு கோபம் வந்தால் ஆளை கட்டுப்படுத்த முடியாது.

"நீங்க போய் இருங்க நான் ஒரு மாத்திரை சாப்டுட்டு வந்துடறேன்."
 இரவு உடையின் முடிச்சை இறுக்கிக்கொண்டு சிவகுரு அறையைக் கடந்து மாடிப்படிகளை நோக்கிப் போக மவுனிகா சுவர் அலமாரிக்கு போய் தலைவலி மாத்திரையைத் தேடினாள்.
 மாத்திரை கிடைத்து - அதை தொண்டைக்கு கொடுத்து ஜக்கில் இருந்த தண்ணீரை விழுங்கியபோது அறைக்குள்ளிருந்த தொலைபேசி துடித்தது.
 போய் ரிஸீவரை எடுத்தாள்.
 "அலோ..."
 "மவுனிகா! நான் அனில்..."
 "நீ... நீ... நீ... நீ..."
 "கோபப்படாதீங்க மவுனிகா... உங்கள் குரலை கேட்கணும் போல் இருந்தது. அதான் போன் பண்ணினேன்."
 "ராஸ்கல்! யார்ரா நீ?"
 அவன் சிரித்தான். "நீங்க திட்டினாலும் எனக்கு கோபம் வரலை... நல்லா யோசனை பண்ணிப் பாருங்க. நான் யாருன்னு உங்களுக்குத் தெரியலை?"
 "தெரியலை... தெரியலை... தெரியலை..."
 "அப்படின்னா நீங்கள் நல்லா யோசனை பண்ணலைன்னு அர்த்தம்."
 "டேய்ய்ய்..."
 "இராத்திரி தூக்கம் கெட்டாலும் பரவாயில்லை மவுனிகா, நான் யாருன்னு யோசனை பண்ணுங்க..."
 "டொக்!"றுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டுவிட - மவுனிகா தன் கையிலிருந்த ரிஸீவரை வைக்கத் தோன்றாமல் அப்படியே நின்றான். இதயத்துக்குள் இரத்தம் தறிகெட்டு பாய்ந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223739715
நீங்காத நிழல் ஒன்று

Read more from Rajeshkumar

Related to நீங்காத நிழல் ஒன்று

Related ebooks

Related categories

Reviews for நீங்காத நிழல் ஒன்று

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீங்காத நிழல் ஒன்று - Rajeshkumar

    1

    அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கோப்பு ஒன்றை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த மவுனிகா நிமிர்ந்தாள்.

    இந்த நாவலின் முதல் வரியிலேயே நீங்கள் பார்த்துவிட்ட மவுனிகாவுக்கு இருபத்தைந்து வயது. கண்களை உறுத்தாத மேக்கப்பில் அழகாக இருந்தாள். அரைத்த சந்தனத்தில் லேசாய் குங்குமம் கலந்துவிட்ட தினுசில் ஒரு நிறம். வெள்ளிக்கிழமையின் எண்ணெய்க் குளியலில் சுருண்ட கேசம் மின் விசிறிக் காற்றுக்கு அழகாக சிலும்பியது. வெண்ணெய்க்கட்டி மோவாயில் எள்ளை பதித்த மாதிரியான குழியும் பிரம்மதேவனால் போடப்பட்ட கொசுறுகள்.

    படிப்பு எம்.பி.ஏ. நுனி நாக்கில் இந்திய நாட்டின் நான்கு மொழிகளை தயாராய் வைத்திருந்தாள்.

    டொக்... டொக்...

    மறுபடியும் கதவு தட்டப்பட –

    மவுனிகா குரல் கொடுத்தாள் - எஸ். உள்ளே வாங்க.

    ஐம்பது வயதைத் தொட்ட அந்த புரொடக்சன் சூபர்வைசர் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார்.

    வணக்கம் மேடம்.

    வணக்கம்.

    என்னை நீங்கள் கூப்பிட்டதா பேக்டரி மானேஜர் சொன்னார்.

    ஆமா! உட்காருங்க.

    அவர் நாற்காலியின் முனையில் பவ்யமாய் உட்கார்ந்தார். மவுனிகா கையில் வைத்திருந்த பென்சிலால் தன் அழகான சின்ன நெற்றியைத் தட்டிக்கொண்டே கேட்டாள்.

    நேத்தைய உற்பத்தி குறிப்பு பற்றிய படம் இன்னும் என் மேசைக்கு ஏன் வரலை?

    நேத்திக்கு உற்பத்தி ஐநூறு டன் மேடம்.

    அது எனக்கும் தெரியும். நான் கேட்டது உற்பத்திக் குறிப்புப் பற்றிய படம் ஏன் இன்னும் என் மேசைக்கு வரலை?

    நேத்திக்கு இரண்டாவது சிப்ட் கிளார்க் எதிர்பாராத விதமா விடுமுறை எடுத்துகிட்டார். அதனால் படம் ரெடியாகலை...

    மவுனிகா கண்ணாடி மேசையின் மேல் தன் இரண்டு முழ்ங்கைகளையும் வைத்து ஊன்றிக்கொண்டாள்.

    இரண்டாவது சிப்ட் கிளார்க் நேத்திக்கு விடுமுறை எடுத்துகிட்டாரா?

    ஆமா மேடம்.

    அவர் விடுமுறை எடுத்துகிட்டதால நேத்து இரண்டாவது சிப்டில் உற்பத்தி வேலை நடக்கலையா?

    நடந்தது மேடம்.

    அதை யார் மேற்பார்வை பார்த்துகிட்டது?

    நான்தான்.

    "மேற்பார்வை பார்த்த நீங்களே படத்தையும் தயார் பண்ணியிருக்கலாமே?’

    அது... வந்து... வந்து...

    எனக்குப் புரியுது... இன்னொருத்தர் வேலையை நாம எதுக்காக பார்க்கணும்ங்கிற சோம்பேறித்தனம்தான்... இல்லையா?

    இல்லை மேடம். நான் படத்தை வரையறதுக்குள்ளே மூணாவது சிப்ட் ஆரம்பமாயிடுச்சு...

    மவுனிகா குரலை உயர்த்தினாள். இந்த நொண்டி சாக்கெல்லாம் என்கிட்ட வேண்டாம். என்னைப் பொறுத்த வரைக்கும் உற்பத்தி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு வேலை சம்பந்தப்பட்டக் குறிப்புகளும் முக்கியம். இன்னிக்கு என்ன நடந்ததுன்னு பத்து நாள் கழிச்சு உங்களைக் கேட்டாலும் தெரியாது. வேலை செஞ்சவனைக் கேட்டாலும் தெரியாதுன்னு சொல்வான். அந்த மாதிரி சமயத்துல குறிப்புகள்தான் பேசும்.

    வியர்த்துப்போனார் சூபர்வைசர். இனிமே இப்படி நடக்காது மேடம். அந்தந்த நாளைய குறிப்புகள் இனிமேல் தவறாமே உங்கள் மேசைக்கு வந்துடும்.

    சரி! இன்னிக்கு எவ்வளவு உற்பத்தி பண்ணப் போறீங்க?

    எழுநூறு டன்.

    உலோகக் கலவை அரை சதவீதம் சரியில்லைன்னாலும் வாங்கற கம்பெனிக்காரன் தயவு தாட்சண்யம் பார்க்காமே மொத்த லாட்டையும் திருப்பி அனுப்பிடுவான்.

    நான் பார்த்துக்கிறேன் மேடம்.

    இப்போ பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு நாளைக்கு ஏதவாது தப்பு நேர்ந்தா நான் ஒத்துக்க மாட்டேன்.

    தப்பு வராது மேடம்.

    தொழிலாளர் பிரச்சினை ஏதாவது இருக்கா?

    இல்ல மேடம். எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு.

    சரி, நீங்கள் போங்க மவுனிகா தலையசைத்துவிட்டு கோப்பை பிரித்து வைத்துக்கொண்டாள். இரண்டு பக்கங்களை புரட்டியிருப்பாள்.

    இண்டர்காம் முணுமுணுத்தது.

    ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

    அலோ...

    மறுமுனையில் ஒரு பவ்யமான குரல்.

    மேடம்! நான் பி.ஏ. கண்ணபிரான் பேசறேன்.

    என்ன விசயம்?

    மானேஜிங் டைரக்டர் உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னார்.

    வர்றேன்னு சொல்லுங்க.

    மவுனிகா ரிஸீவரை சாத்திவிட்டு எழுந்தாள். அறையினின்று வெளிப்பட்டு உருவத்தை மங்கலாக பிரதிபலிக்கும் மார்பிள் தரைபரப்பில் வேகமாய் நடந்தாள். தொழிற்சாலையின் உயரமான காம்பவுண்ட் சுவர் வெகு தொலைவில் ஒரு சாம்பல் கோடு மாதிரி தெரிந்தது. நூறு மீட்டர் தள்ளியிருந்த உற்பத்திப் பிரிவு கட்டிடத்தில் நீல நிற சீருடை அணிந்த தொழிலாளர்களின் நடமாட்டம் தெரிந்தது. நிர்வாகக் கட்டிடத்தின் கண்ணாடி சன்னல்கள் தொழிற்சாலையின் இரைச்சல்களை சுத்தமாய் வடிகட்டியிருந்தது.

    மவுனிகா புல்தரை லானில் நடந்து - எதிர்ப்பட்ட மானேஜிங் டைரக்டர் அறைக்கு முன்னால் போய் நின்று பாலீஷ் செய்யப்பட்டு பளபளத்த தேக்கு மரக் கதவை ஆட்காட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1