Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காகித இருதயங்கள்
காகித இருதயங்கள்
காகித இருதயங்கள்
Ebook95 pages29 minutes

காகித இருதயங்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வால்பாறை.
 கெஸ்ட் ஹவுஸ்.
 விவேக் ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்பாய் நின்று ஜெர்கினை தரித்துக் கொண்டிருக்க ரூபலா உள்ளே வந்தாள். ஆச்சர்யப்பட்டாள். இடுப்பில் கையை வைத்துக் கொண்டு.
 ''என்ன கிளம்பிட்டீங்க...?''
 "கடமை அழைக்கிறது கண்ணே!''
 "கடமையா...?''
 ''ம்... நான் எதுக்காக வால்பாறைக்கு வந்திருக்கிறேன்...''
 ''இங்கே ஃபாரஸ்ட்ல ஒளிஞ்சிருக்கிற... தீவிரவாதிகளை பிடிக்கிறதுக்காக...''
 "அவங்க ஒளிஞ்சிட்டிருக்கிற ஏரியாவைப் பத்தி ஒரு 'க்ளு' கிடைச்சிருக்காம். கோகுல்நாத் 'க்ராஸ் ஹில்' போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன் பண்ணினார்...''
 ''அங்கிள் சும்மாயிருக்கமாட்டாரே...?" ரூபலா சலித்துக் கொள்ள விவேக் கேட்டான்.
 "என் தவப்புதல்வன் என்ன பண்றான்...?''
 "சரியான தூங்கு மூஞ்சி... வால்பாறைக்கு வந்து மூணு நாளாச்சு... பால் குடிக்கிறதுக்கும், கொஞ்ச நேரம் அழறதுக்கும் மட்டும்தான் வாயைத் திறக்கிறான். மத்த நேரமெல்லாம் தூக்கம்தான்... இப்ப கூட தூங்கிட்டுதான் இருக்கான்...''
 ''ஊரோட க்ளைமேட் அப்படி...

இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கிற உங்களுக்கு... இப்படியொரு தூங்குமூஞ்சி மகனா...?''
 "உனக்கொரு விஷயம் தெரியுமா?''
 "என்ன...?''
 ''பிற்காலத்துல பெரிய அறிவாளியா இருக்கப் போறவங்களெல்லாம்... சின்ன வயசுல ரொம்ப நேரம் தூங்குவாங்களாம்... நான்கூட இப்படித்தான் தூங்குவேன்னு... எங்கம்மா சொல்லியிருக்காங்க...''
 "உடான்ஸ்...''
 "அட... நிஜமாத்தான்...''
 "இதோ பாருங்க அண்ணாச்சி... உங்க தூங்கி மூஞ்சி மகனுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு வராதீங்க... உங்க பரம்பரையில் யார்க்காவது இப்படி தூங்கற பழக்கம் இருக்கும் அதான் இப்படி..."
 ''ஏன் உன்னோட பரம்பரையிலிருந்து இந்த பழக்கம் வந்திருக்காதோ?''
 "வந்திருக்காது...''
 "ஏன் வந்திருக்காது... விடிய விடிய தூங்காமே சுத்தற கூர்க்கா பரம்பரையா... உன்னோடது...?''
 "இதோ பாருங்க... பரம்பரையைப் பத்தி பேசாதீங்க..."
 "நீ மட்டும் பேசலாமா...?''
 உள்ளே பாரத் விழித்து அழும் சத்தம் கேட்டது ரூபலா ஒடினாள். விவேக் தொடர்ந்தான்.
 "நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டது அவனுக்கு பிடிக்கலை..."
 ரூபலா தொட்டிலினின்றும் 'பாரத்'தை அள்ளினாள்.
 ''ஏண்டா அழறே... சிடுமூஞ்சிக்கு பொறந்த பயலே...''
 "என்ன சொன்னே...?'' விவேக் ரூபலாவின் காதைப்பிடித்தான்.
 "டேய்... பாரத்! அம்மா மூஞ்சியில சர்ர்ன்னு ஒண்ணுக்கு அடி...விவேக் சொல்லி முடிக்கவில்லை.
 பாரத் அடித்தான்.
 "அய்யய்யோ...''
 ''தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு நிரூபிச்சிட்டான்... பையனை சாவகாசமா திட்டிக்கிட்டிரு... நான் வர்றேன்...''
 "என்னங்க... என் ஜாக்கெட்டெல்லாம் நனைஞ்சு போச்சு... வாய் வேற உப்பு கரிக்குது... இவனைக் கொஞ்சம் பிடிங்களேன்...''
 "ஸாரி அம்மிணி'' நெற்றிக்கு கையை கொண்டு போய் சல்யூட் அடித்துவிட்டு கெஸ்ட் ஹவுஸினின்றும் வெளியே வந்தான் விவேக்.
 ஜீப் காத்திருந்தது.
 தாவி ஏறிக் கொண்டதும் டிரைவர் கிளப்பினார்.
 மலைப் பாதையில் பத்து நிமிஷ பயணம்.
 க்ராஸ் ஹில் போலீஸ் ஸ்டேஷன் வந்தது. வாசலில் கோகுல்நாத்தும் இன்ஸ்பெக்டரும், ஒரு சப். இன்ஸ்பெக்டரும் நின்றிருந்தார்கள்.
 விவேக் ஜீப்பினின்றும் இறங்கியதும் அவர்கள் சல்யூட்டுக்கு வர பதில் சல்யூட் கொடுத்துக் கொண்டே விவேக் கேட்டான்.
 ''என்ன மெஸேஜ்...?''
 ''தீவிரவாதிகள் இருக்கிற இடத்தைப் பத்தின க்ளு கிடைச்சிருக்கு சார்... 'ஒரு ஷெட்யூல் ட்ரைப்' தான் வந்து சொன்னான்...''
 "எந்த இடம்...?''
 "சிறுமல்லி எஸ்டேட் ஃபாரஸ்ட்...'

"இங்கிருந்து எவ்வளவு தூரம்...?''
 ''பத்து கிலோமீட்டர் இருக்கும் ஸார்...''
 "சரி... புறப்படலாம்... ரைஃபிள்ஸ் வித் கான்ஸ்டபிள்ஸ் எவ்வளவு?''
 "பத்து பேர் ஸார்...''
 "வேன் நல்ல கன்டிஷன்ல இருக்கா...?''
 "இருக்கு... ஸார்...''
 "தென்... வி... வில் ஸ்டார்ட்...''
 விவேக் கோகுல்நாத்தோடு ஜீப்புக்குள் தாவினான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 10, 2023
ISBN9798223449218
காகித இருதயங்கள்

Read more from Rajeshkumar

Related to காகித இருதயங்கள்

Related ebooks

Related categories

Reviews for காகித இருதயங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காகித இருதயங்கள் - Rajeshkumar

    1

    கோவை. மத்திய பஸ் நிலையம்.

    மழைச்சாரல் அடிக்கும் மத்தியான வேளை. சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு என்று பெயர் பலகை தெரிந்த அத்தனை பஸ்களிலும் ஜனங்களின் முகங்கள் நெருக்கமாய் முளைத்திருக்க. கண்டக்டர்களும், டிரைவர்களும் பிளாட்பாரத்தில் நின்று டீ குடித்து சிகரெட் புகையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

    ‘‘சண்முகம்! இந்தியா இந்த கடனை அடைக்கும்ன்னு நம்பறியா?"

    இந்தியா மத்த நாடுகளுக்கு கடனை திருப்பிக் குடுக்குதோ... இல்லையோ... அதைப்பத்தி எனக்கு கவலையில்லை... சோமு... என்னோட கவலையெல்லாம் போன மாசம் நீ என்கிட்டயிருந்து வாங்கின ஐம்பது ரூபாயை திருப்பிக் குடுப்பியோ இல்லையோன்னுதான்

    சிரிப்பலை கிளம்பியது

    அவர்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போதே –

    அந்த இளைஞன் பக்கத்தில் வந்து நின்றான். அழகாக இருந்தான். தூக்கி வாரிய க்ராப்.

    ‘‘வால்பாறை போகணும்...! பஸ் எந்த ப்ளாட்பாரம்...?’’

    "அதோ... பஸ் நின்னுட்டிருக்கு... போய் ஏறிக்கோ...’’ கண்டக்டர் ஒருவர் தள்ளி நின்றிருந்த சேரன் பஸ்ஸைக் காட்ட -

    வேக வேகமாய் போய் பஸ்ஸுக்குள் ஏறினான்.

    ‘‘எங்கே ஸார் போகணும்...?’’

    "வால்பாறை...’’

    "ம்... ஏறுங்க...’’

    பஸ் எப்ப புறப்படும்...?

    "லோடானதும்...’’

    இளைஞன் சாய்ந்து உட்கார்ந்து, முன்புறக் கண்ணாடியின் வழியே மழையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

    "க்கும்...’’

    தொண்டையின் கனைப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்தான் இளைஞன். அந்தப் பெண் நின்றிருந் தாள். எக்ஸ்க்யூஸ்மீ... குரல், உதடு, கண்கள் எல்லாமே அழகு.

    "எஸ்...’’

    சுற்றும் முற்றும் பாத்தபடி - ‘‘நீங்க ஒரு உதவி பண்ணனும்...’’ என்றாள் மெல்லிய குரலில். கண்கள் ளில் நீர் பளபளத்தது.

    "என்ன...?’’

    குரல் தழுதழுத்தது.

    பஸ் கிளம்பிப் போகிற வரைக்கும்... உங்க பக்கத்துல உட்கார்ந்துக்க எனக்கு அனுமதி தரணும்...

    "எதுக்கு...?’’

    "உட்கார்ந்துட்டு காரணத்தைச் சொல்றேன். ப்ளீஸ்... அலவ் பண்ணுங்க... உங்களுக்கு புண்ணியமா போகும்...’’ கையெடுத்து கும்பிட்டாள்.

    இளைஞன் அவளை ஏறிட்டான். முகத்தில் செல்வச் செழிப்பும் குடும்பப் பாங்கும் தெரிந்தது. கண்களில் பயமும் நீரும் முண்டியடித்தன.

    ‘‘உட்கார்...’’

    இளைஞன் நகர்ந்து இடம் கொடுத்தான். அவள் உட்கார்ந்து கொண்டே சேலைத் தலைப்பை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டாள்.

    ‘‘தேங்க்ஸ்...’’

    "மொதல்ல... விஷயத்தை சொல்லு...’’

    எங்கப்பா வால்பாறையில் ஒரு எஸ்டேட் ஓனர்... அவருக்கு நான் ஒரே பொண்ணு. போன வருஷம்தான் எனக்கு கல்யாணமாச்சு... கோயமுத்தூரில் இருக்கிற ஒருத்தர்க்குத்தான் வாழ்க்கை பட்டேன். கல்யாணம் ஆன நாளிலிருந்து... என்னோட கணவரும், மாமியாரும் பணம் பணம்’ன்னு கேட்டு கொடுமைப்படுத்துவாங்க. எங்கப்பாவும் ஆயிரக்கணக்கில் பணத்தை குடுத்திருக்கார். போன மாசம் ஒரு பிசினஸை ஆரம்பிக்கிறதுக்காக ஒரு லட்ச ரூபாய் வேணும்ன்னு அப்பாகிட்டே கேட்டாங்க. அப்பா தரமாட்டேன்னு சொல்லிட்டார். அன்னியிலிருந்து என்னை வால்பாறைக்கு போய் உங்கப்பாவை பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. நானும் மனசைகட்டுப்படுத்திகிட்டு போகாமே இருந்தேன்... ஆனா ஒரு மணிநேரத்துக்கு முந்தி இந்த தந்தி எனக்கு வந்தது.

    கையில் கசக்கி வைத்திருந்த இளஞ்சிவப்பான அந்த தந்தியைக் காட்டினாள். இளைஞன் வாங்கிப் பார்த்தான்.

    FATHER SERIOUS - MANAGER.

    அவன் அந்த வாசகத்தை படித்துக் கொண்டிருக்கும் போதே அவள் சொன்னாள்.

    "உயிருக்கு போராடிகிட்டு இருக்கிற எங்கப்பாவை பார்த்துட்டு வந்துடறேன்னு சொல்லி எவ்வளவோதூரம் கெஞ்சினேன். என் மாமியாரும், கணவனும் விடலை. ஒரு ரூம்ல போட்டு அடைச்சுட்டாங்க... நான் அவங்களை ஏமாத்திட்டு எப்படியோ வந்துட்டேன். நான் தப்பிச்சதை அவங்க... கண்டுபிடிச்சுட்டா... நேரா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து என்னை தேடுவாங்க... தனியா, எந்த பெண்ணாவது உட்கார்ந்திருக்காளான்னுதான் பார்ப்பாங்க... உங்க பக்கத்துல நான் உட்கார்ந்துகிட்டா... அவங்க கண்ணை ஏமாத்திடலாம். பஸ் புறப்பட்டு சிட்டி அவுட்டரை தாண்டற வரைக்கும் உங்க பக்கத்துல உட்கார்ந்துக்கிறேன். உங்களை என் அண்ணனா நினைச்சு...’’

    இளைஞன் கையமர்த்தினான்.

    "நீ தாராளமா வால்பாறை வரைக்குமே என் பக்கத்துல உட்கார்ந்துட்டு வரலாம்...’’

    "ரொம்ப... ரொம்ப தேங்க்ஸ்...’’ கண்ணீரில் நனைந்த கண்களை சேலைத்தலைப்பால் ஒற்றிக் கொண்டே பஸ்ஸுக்கு வெளியே பார்வையை துரத்தி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

    ‘‘அவங்க வந்துடுவாங்கன்னு பயப்படறியா...?"

    "ஆமா...’’

    "அவங்க வரட்டும். நான் பேசிக்கிறேன்.’’

    "அய்யய்யோ... சண்டையெல்லாம் வேண்டாங்க...’’

    "சண்டை போடமாட்டேன்... உன்பக்கம் இருக்கிற நியாயத்தை எடுத்துச் சொல்வேன் அவ்வளவுதான்... ஆமா உன் பேரென்ன...?’’

    ‘‘காயத்ரி...’’

    ‘‘உன் கணவர் என்ன வேலை

    Enjoying the preview?
    Page 1 of 1