Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veethiyellaam Pooppanthal
Veethiyellaam Pooppanthal
Veethiyellaam Pooppanthal
Ebook89 pages1 hour

Veethiyellaam Pooppanthal

By Usha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466299
Veethiyellaam Pooppanthal

Read more from Usha

Related to Veethiyellaam Pooppanthal

Related ebooks

Related categories

Reviews for Veethiyellaam Pooppanthal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veethiyellaam Pooppanthal - Usha

    17

    1

    வாழ்க்கை அழகானது!

    சஹானா இப்போதும் அப்படித்தான் நினைத்துக் கொண்டாள்.

    வாழ்க்கை எத்தனை எத்தனை இன்பகரமான விஷயங்களைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிறது! எத்தனை சந்தோஷத் தருணங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது!

    எல்லோரும் அதைப் புரிந்து கொள்வதில்லையோ?

    புரிந்து கொண்ட ஒரு சிலரில் தானும் ஒருத்தியோ?

    சஹானா புன்னகைத்துக் கொண்டாள். உள்ளே ஓடுகிற ரத்த ஓட்டத்துடன் உற்சாகமும் கலந்து கொண்டது. இருதயம் முழுக்க இனிமையான தாள லயத்துடன் லப்டப் ஒலித்தது.

    கங்கிராஜுலேஷன்ஸ் சஹானா... என்று வாசற்படி அருகில் குரல் கேட்டது.

    திரும்பினாள்.

    வார்டன் மனோன்மணி நின்றிருந்தாள், சிரித்த முகத்துடன்.

    வாங்க மேடம்... வாங்க... என்று சஹானா எழுந்து போய் வரவேற்றாள்.

    கடைசில சாதிச்சுக் காட்டிட்டே... வெரிகுட் சஹானா... யூனிவர்ஸிட்டி செகண்டாம்.... ஹ்யூமன் சைக்காலஜி சப்ஜெக்ட்ல முதல் கோல்ட் மெடலிஸ்ட்டாம்... இப்பத்தான் அதிகாரப்பூர்வமா தகவல் வந்தது... வெரிகுட் மை டியர் லிட்டில் கேர்ள்! என்று கைகளைப் பற்றிக் கொண்டு மனோன்மணி பரபரத்தாள்.

    தாங்க் யு மேடம்... என்றாள், அவள் - லேசான வெட்கத்துடன்.

    மெஸ்ல இன்னிக்குப் பாயசம் போடச் சொல்லியிருக்கேன்... சேமியாவா, ஜவ்வரிசியா, எது ரொம்பப் பிடிக்கும் உனக்கு...

    எதுக்கு மேடம் பாயசமெல்லாம்... என்றாள் அவள் சங்கடத்துடன். ஹாஸ்டல் மாதிரியா எங்களை நடத்தறீங்க? பெத்த அம்மா மாதிரி பாசம் காட்டறீங்க... நான் எக்ஸாமுக்கு ப்ரிப்பேர் பண்ணும் போதெல்லாம் எக்ஸ்ட்ரா கரன்ட் செலவு பண்ண அனுமதிச்சு, ஸ்பெஷல் டீ போட்டுக் கொடுத்து... எவ்வளவு பண்ணியிருக்கீங்க! அவ்வளவு அமைதியான மனநிலையில் என்னை வெச்சிருந்ததாலதான் இப்படி முதல் வகுப்புல பாஸ் செய்ய முடிஞ்சிருக்கு மேடம்... நியாயமா பாத்தா இனிப்பு உங்களுக்குத்தான் செய்யணும்... சஹானா சிரித்தாள்.

    பேசியே ஜெயிச்சுடுவியே... என்று வார்டன் வெளியே போனாள்.

    தங்கப் பதக்கம்!

    பல்கலைக் கழகத்தில் இரண்டாம் இடம்!

    நெஞ்சம் சின்னப் பெண் போலத் துள்ளியது.

    நாட்டில் இன்னும் கல்வியின் தரம் தாழ்ந்து விடவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கல்வி அள்ளிக் கொடுப்பதை நல்ல வேளையாக எந்த அரசியல்வாதியும் தட்டிப் பறிக்கவில்லை. அவரவர் முயற்சிக்கும் பயிற்சிக்கும் ஏற்ற பலனைக் கல்வி பாரபட்சமின்றி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

    சஹானா... யாரோ அழைத்தார்கள்.

    இதோ வரேன்... என்று வெளியே வந்தாள்.

    பூங்காவனத்தம்மா நின்றிருந்தாள.

    உங்க சித்தப்பா வந்திருக்காரும்மா...

    அப்படியா? இதோ வந்துட்டேன்... என்று கதவை மூடிக்கொண்டு வெளியே வந்தாள். விரைந்தாள்.

    சித்தப்பாவைப் பார்த்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டது என்பது நினைவுக்கு வந்தது. பரிட்சைக்காக மும்முரமாகத் தயார் செய்து கொண்டிருப்பவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்துத்தான் சென்னைப் பக்கமே அவர் தலைகாட்டவில்லை. பாவம், மிக நல்ல மனிதர். மூன்று பெண் குழந்தைகளையும் நோயாளி மனைவியையும் சுற்றிச் சுற்றி வந்தே அந்த நல்ல மனிதரின் நாட்கள் நகர்ந்து கொண்டு வருகின்றன - வேறெந்தத் திறமையையும் வளர்த்துக் கொள்ள முடியாமல்!

    சிந்தனையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் ரிசப்ஷனை அடைந்தாள்.

    வாம்மா சஹானா... வா வா... தங்கப் பதக்கம் வாங்கிட்டியாமே! ரெண்டாவது ராங்க்காமே... ரொம்ப சந்தோஷம்மா... என்று சித்தப்பா பார்த்தவுடனே படபடவெனப் பேசிச் சிரித்தார்.

    என்ன சித்தப்பா இது, இப்படி இளைச்சுப் போய்ட்டீங்க? என்றாள் அவள் திகைப்புடன்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... அறுவடை நேரமில்லையா? வெண்ணெய் திரண்டு வர்றப்ப தாழி வுடையக்கூடாதில்லையா? அதான் வயலு, காவலுன்னு கண் முழிச்சு காபந்து பண்ண வேண்டியதாயிருக்கு... இந்தாம்மா... முறுக்கும் கடலை உருண்டையும். சித்தி கொடுத்தா... என்று நீட்டினார்.

    வாங்கிக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்தாள்.

    சித்தப்பாவிடம் நிறைய மாறுதல்கள் தெரிந்தன. நன்றாக இளைத்தது மட்டுமில்லாமல் முகம் முழுக்க சிந்தனைக் கோடுகள். எப்போதும் இருக்கும் இளநகை இல்லை. எதையோ தீவிரமாக யோசிக்கும் பார்வை. என்ன விஷயம்?

    லஸ்ஸி சாப்பிடறீங்களா சித்தப்பா? இல்லே சூடா காபி, டீ... என்று எழ முயன்றாள்.

    இப்பத்தாம்மா ராயர் கபேல காபி, டிபன் முடிஞ்சுது... என்று முகத்தைத் துடைத்துக் கொண்டு அவளை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். புன்னகைத்தார்.

    திருப்தியா இருக்கும்மா சஹானா... என்று குரல் கரகரத்தது. அண்ணன் என்கிட்ட ஒப்படைச்ச பொறுப்பை நல்லபடியா நெறைவேத்திட்டேன்... பட்டதாரிப் பெண்ணா, கோல்ட் மெடலிஸ்ட்டா உருவாக்கிட்டேன்... இன்னும் ஒரே ஒரு எண்ணம் இருக்கு... அதுவும் நிறைவேறிட்டா போதும்... மனசு நெறைஞ்சுடும் சஹானா... என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.

    அச்சச்சோ, என்ன சித்தப்பா இது? ஏன் இமோஷனல் ஆகறீங்க சித்தப்பா? என்ன வேணும், சொல்லுங்க... எது வானாலும் நெறைவேத்தறேன்... அவள் முகம் கனிந்தது.

    நிஜமாவாம்மா? என்றார் துடிப்பாக.

    என்ன சந்தேகம் சித்தப்பா?

    Enjoying the preview?
    Page 1 of 1