Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மழையும் நீயே மானசி..!
மழையும் நீயே மானசி..!
மழையும் நீயே மானசி..!
Ebook125 pages44 minutes

மழையும் நீயே மானசி..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பள்ளியை விட்டு வெளியே வரும் போது மானசிக்கு திக்கென்று இருந்தது.
 ஒருதடவை கழுத்தைத் திருப்பி பள்ளியைப் பார்த்தாள். வெறும் கட்டிடமாக அது கண்களுக்குத் தெரியவில்லை. ஆறுமாதமாக நான்கு வயிறுகளில் பசியாற்றிய தேவதையின் கோவில் போலவே தோன்றியது. இரண்டு சொட்டு கண்ணீர் உற்பத்தியாவதற்குள் எண்ணங்களை மாற்றிக் கொண்டாள்.
 "மானசி... மானசி... கொஞ்சம் நில்லு" என்று நூலகத்திலிருந்து பானுமதி விரைந்து வருவது தெரிந்தது.
 நின்றாள். "தப்பா நெனைக்கலியே என்னை?" என்று குரல் இறங்க மானசியின் விரல்களைத் தொட்டாள் பானுமதி.
 "அடடா... உன்னையா தப்பா நெனைப்பேன்? இந்த ஆறு மாச வாழ்க்கையே உன்னாலதானே பானு நகர்ந்தது, பிரச்சனை இல்லாம? கோடி நன்றிகள் சொன்னாலும் போதாதே பானு என்றாள் அவளும் குரல் உடைய,
 "தற்காலிக வேலைதான்... ஆனா அப்படியே நிரந்தரம் ஆயிடும்னு நெனைச்சேன் மானசி... ஜெனிபர் மறுபடி வந்து ஜாயின் பண்ணுவாங்க வேலைக்குன்னு எதிர்பாக்கவே இல்லே... ரொம்ப கஷ்டமா இருக்கு, நீ பிரிஞ்சு போறது..."
 "உன் கூட சேர்ந்து வேலை பார்த்தது, குழந்தைகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தது, ஆறு மாசமும் கபடமில்லாத மாணவர்களின் சூழல்ல இருந்தது, நல்ல சம்பளம் கெடைச்சதுன்னு இந்த அனுபவங்களை நான் மறக்கவே மாட்டேன் பானு... எப்பவும் உன்னை நெனைச்சுகிட்டே இருப்பேன்... வரட்டுமா?" அவள் தோழியை அணைத்துக் கொண்டு முறுவலித்தாள்நானும் அப்படித்தான்... எனக்கு இருக்கிற தோழிகளில் முதன்மை முக்கியம் நீதான்... உன்னை மாதிரி ஒருத்தியை நான் பாத்ததே இல்லே மானசி... கவலைப்படாதே... ரொம்ப பிரமாதமான ஒரு வேலை கிடைக்கும் உனக்கு... போயிட்டு வா மானசி..."
 "தாங்க்யூ பானு... வரன்..." என்று சொல்லிவிட்டு, தெருவைக் கடந்தாள்.
 மெல்ல மெல்ல பயம், இரும்புக் குண்டு போல திரண்டு வந்து தொண்டையைப் பிடித்துக் கொள்வதை உணர்ந்தாள். கவினும் கலையும் காத்துக்கொண்டிருப்பார்கள். கல்விச் சுற்றுலாவுக்கு பணம் தர அக்கா வேண்டும் என்று வாசலையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். ராணிப்பேட்டையின் தோல் தொழிற்சாலைகளுக்கான சுற்றுலா. தேவையானது தான். சிறுவயதில் மனதில் விழுகிற விதைகளில் ஏதோ ஒன்று தான் இருபது வருடங்களில் மரமாகிறது. கவினும் கலையும் இந்த பத்து வயதிலேயே பக்குவமாக, அறிவுசார்ந்து இயங்கும் திறன் கொண்டவர்கள். ஐநூறு ரூபாய் என்பது மிகமிகத் தேவைப்படுகிற முதலீடுதான்.
 வாசலிலேயே காத்திருந்த தம்பியையும் தங்கையையும் பார்த்துவிட்டு அவள் நடையை வேகப்படுத்தினாள். ஓடி வந்து சிரித்தார்கள். அணைத்தபடி அவளும் உள்ளே நுழைந்தாள்.
 "அக்கா... இன்னிக்கு எங்க பள்ளியில ஒரு திடீர் மீட்டிங் நடந்தது..." என்று கவின் உற்சாகமாகத் தொடங்க, கலை தொடர்ந்தாள்.
 "குட்டிக்குட்டியா நிறைய கேள்விகள் கேட்டாங்க. பரசுராம்னு ஒரு சயின்டிஸ்ட் வந்திருந்தார் அக்கா... மழைப்பொழிவு ஏன் குறைஞ்சுட்டு வருது உலகம் பூராவும்னு கேட்டார்... கவின் கரெக்டா எழுந்து புவி வெப்பமயமாதல்தான் காரணம்னு சொன்னான். என்ன தீர்வுன்னு கேட்டார்... காடுகள் நிறைய வளர்க்கப்படணும், பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படுத்தப்படணும்னு நான் சொன்னேன்... கை தட்டி, எல்லாரையும் கைதட்ட சொன்னார்க்கா..."
 "அடாமிக் சிம்பல் ஆப் கார்பன் என்னன்னு கேட்டார்க்கா... சிகரெட் விடை நான் சொன்னேன்... ரத்தம் சிவப்பாக இல்லாத உயிரினம் எது, கவின் அதுக்கு கரப்பான்பூச்சின்னு சரியா பதில் சொல்லிட்டான்... அப்புறம்..."இருதயத்துல எத்தனை வால்வுகன்னு கேட்டார்... நான்குன்னு நான் சொன்னேன்... அணுகுண்டு, அணுசக்தி இதுக்கெல்லாம் அடிப்படையான எலிமென்ட் எதுன்னு கேள்வி... யுரேனியம்னு கலை கரெக்டா சொல்லிட்டா... கறுப்புக்கரியை உயர்வெப்ப நிலைல, ரொம்பகாலம் வெச்சிருந்தா என்ன ஆகும்னு கேட்டார்... ரெண்டு பேருமே ஒரே சமயத்துல, வைரமாகும்னு சொன்னோம்... எழுந்து நின்று கைத்தட்டினார்க்கா... வகுப்பே டமடமன்னு தட்டிச்சு... எங்க ரெண்டு பேருக்கும். ரெண்டு பேனா பரிசு கொடுத்தார். இதோ பாருக்கா..."
 குழந்தைகளின் சிரிப்பும் உற்சாகமும் மகிழ்ச்சியும், அவளையும் தொற்றிக் கொண்டன. பிரமிப்பாக இருந்தது. அந்த புத்தம் புது பேனாக்களின் பளபளப்பு, தம்பி தங்கையின் முகங்களில் ஏறியிருந்ததைப் பார்க்கப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இயல்பான அறிவாற்றலும், அதை அவர்கள் வளர்த்துக் கொள்ளும் விதமும் பார்க்கப் பார்க்க, இவர்களை எப்படி நல்லபடியாக வளர்த்து மேலே கொண்டு போவது என்ற கவலையும் எட்டிப் பார்த்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223945420
மழையும் நீயே மானசி..!

Read more from V.Usha

Related to மழையும் நீயே மானசி..!

Related ebooks

Reviews for மழையும் நீயே மானசி..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மழையும் நீயே மானசி..! - V.Usha

    1

    அலைகளின் விளையாட்டு எப்பொழுதும் போல இன்னும் ரம்மியமாக இருந்தது. பிரபாகர் கட்டுமரத்தில் சாய்ந்தபடி உட்கார, அவன் வலது பக்கத்தில் மணலைத் தட்டிவிட்டு ராபர்ட் அமர்ந்தான். நிலவு இன்று விரைவாக வந்திருந்தது. ஒரு சில நட்சத்திரங்கள் இங்கும், அங்கும் தென்பட்டன.

    இன்னிக்குதான் கடைசி... இல்லே பிரபா? ராபர்ட் மெல்லக் கேட்டான்.

    எதைச் சொல்லுற?

    நாளைக்கு எல்லாருமே மேன்ஷனை காலி பண்ணணும்ல?

    ஆமாம்... சபாபதி சார் அப்படித்தான் சொல்லியிருக்கார்...

    முக்காவாசி பயலுக காசி லாட்ஜ் பக்கம் போயிட்டாங்க... முன்னமே சொல்லி வெச்சு, சொல்லி வெச்சு... நானும் இன்னிக்கு சாந்தி லாட்ஜ் மானேஜர்கிட்டே பேசிட்டேன்... நீ என்ன செய்யப் போறே பிரபா...?

    அவன் பதில் சொல்லாமல் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். நிலவு குனிந்து தன் மேல் பார்வையை செலுத்துவதைப் போலிருந்தது. அதன் மறுபக்கம் எப்படி இருக்கும் என்று நினைத்தான். கண்களுக்குத் தெரிவதெல்லாம் மட்டுமே உண்மையல்ல என்றும் தோன்றியது.

    உன்னை விட்டுப் போகவே எனக்கு விருப்பமில்லை பிரபா... நீயும் சரியா சொல்ல மாட்டேங்குற... இந்த பாடாவதி லாட்ஜ்களை விட்டா எனக்கும் வேற வழி இல்லே... நீயும் என் கூடவே வந்துருப்பா... என்ற ராபர்ட்டின் குரலுக்கு ஒத்து ஊதுவதைப் போல இரண்டு அலைகள் சப்தமின்றி அவர்களிடம் வந்து கரைந்து போயின.

    எனக்கும் இந்த சென்னை, என் நட்பு இதையெல்லாம் பிரிய மனமில்லேதான் ராபர்ட்... ஆனால் அப்படித்தான் நடக்கும்னு தோணுது... அவன் மிக மெலிதான குரலில் சொன்னான்.

    ராபர்ட் திடுக்கிட்டான்.

    என்னப்பா சொல்லுற? சென்னையைப் பிரியப் போறியா? இது என்ன புதுசா இருக்கு? லாட்ஜைத்தானே காலி பண்ண சொல்லியிருக்காங்க?

    ஆமாம்பா... பத்து நாளா... இல்லே இல்லே... மூணு மாசமாவே இதே யோசனைதான் ஓடிகிட்டிருக்கு உள்ளுக்குள்ள... ஊருக்குப் போகலாம்னு இருக்கேன்...

    என்ன? ஊருக்கா?

    ஆமாம். உன்கிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன்... நீயே கேட்டுட்ட... இன்னும் ஒருவாரத்துல கைல சர்டிபிகேட் வந்துடும்... கிராஜூவேஷன் முடிஞ்ச பிறகு கௌம்பிடலாம்னு... என்னப்பா அப்படி பாக்குற? என்று பிரபாகர் புன்னகைத்தான்.

    இல்லே... நீ தான் பேசுறியா, நான் தான் கேட்குறேனா, இது கடற்கரையா, இது கட்டுமரமான்னு பாக்குறேன்... பிரபா, நீ எம்.இ. படிச்ச பெரிய இன்ஜினீயர். அதுலயும் டிஸ்டிங்ஷன்ல... எந்த கம்பெனிக்கு நீ அப்ளிக்கேஷன் போட்டாலும், கதறிகிட்டு ஓடி வந்து வேலை கொடுப்பான்... நீ சொல்றது சத்தியமா புரியலப்பா...

    புரியலையா? சரி விளக்கமாவே சொல்றேன்... கிராமத்துக்குப் போகப் போறேன்... அப்பா கூட சேர்ந்து வாழப் போறேன்... நினைவு தெரிஞ்சு அவரு வாய் விட்டு சிரிச்சதே இல்லே... இப்ப வயசாகி தள்ளாமை, முதுமைன்னு சிரமப்படறாரு... இவ்வளவு வருஷம் பி.இ., எம்.இ., எம்.பி.ஏ.ன்னு ஆஸ்டல், விடுதின்னு இருந்துட்டேன்... இனிமேலாச்சும் அப்பா கூட இருக்கணும்னு தோணுது ராபர்ட்... சொல்லேன், தப்பு இருக்கா இதுல?

    ராபர்ட் தலையை குனிந்து கொண்டான். ‘தந்தையுடன் சேர்ந்து வாழ்வது தப்பு என்று யார் சொல்ல முடியும்? ஏன் அவரை இங்கே அழைத்து வரலாமே? இவன் படிப்புக்கும் அறிவுக்கும் நூறு வேலைகள் இங்கேயே கிடைக்குமே. பாசனமில்லாமல், சாகுபடி செய்ய வழியில்லாமல், குடிக்கவும் குளிக்கவும் கூட நீர் இல்லாத காவிரிப்படுகை கிராமத்திற்குப் போய் என்ன செய்யப் போகிறான் இவன்?’

    ஏய்! ராபர்ட்! என்னப்பா, ஏதோ மர்மக்கதை கேட்ட மாதிரி உன் முகம் இருண்டு போயிருச்சு? என்று பிரபாகரன் மறுபடி சிரித்தான்.

    இல்லே... என்னை கலாய்க்குறேன்னுதான் நெனைக்கிறேன் பிரபா... சரி கெளம்பலாம்... பசிக்குது...

    நிச்சயமா இல்லே ராபர்ட்... உன்னைப் போயா கலாய்க்கப் போறேன்? என்று சட்டென்று நண்பனின் தோளை மென்மையாகத் தட்டினான் அவன்.

    பிறகு நிதானமாகச் சொன்னான். அப்பாவை நான் எப்பவுமே சிரிச்ச முகமா பாத்ததே இல்லே ராபர்ட்... ஏதோ ஒரு கவலை, பூச்சி மாதிரி அவரை அரிச்சுகிட்டே இருக்கு... நானும் நேரிடையா, மறைமுகமா எத்தனையோ விதங்கள்ல, எத்தனையோ வருஷங்களா கேட்டிருக்கேன்... ஒண்ணுமே இல்லேன்னு சாதிச்சிடுவார்... இப்போ ரொம்ப தள்ளாமையா இருக்காரு... என்ன ஏதுன்னு தன்மையா கேட்கணும்... முடிஞ்சா சரி செய்யணும்... கொஞ்ச நாளாவே என் மனசு இப்படித்தான் ராபர்ட் யோசிக்குது...

    அதுல தப்பே இல்லே பிரபா... நீ உண்மையிலேயே அவ்வளவு நல்லவன். என் கவலையெல்லாம், கடந்து போன ஆறேழு வருடங்களைப் பத்திதான்... வெறும் படிப்பா உன் படிப்பு? முழுசா அதுலதானே மூழ்கிக்கிடந்தே? மொத்த மெக்கானிகல் உலகமும் உன் மூளைக்குள்ளேதானே இருக்கு இப்ப? அந்த விலை மதிக்க முடியாத அறிவுக்களஞ்சியத்தை அப்படியே விட்டுட்டு கிராமத்துக்குப் போகிறதா சொல்றியே... அதான் பிரபா எனக்கு திகைப்பா இருக்கு...

    ராபர்ட்... அவன் புன்னகையுடன் சொன்னான் மெக்கானிகலை விட அக்ரிகல்ச்சர் முக்கியம் ராபர்ட்... எனக்கு அண்மைக்காலங்கள்லதான் அந்த அறிவே வந்தது... பெட்டர் லேட் தேன் நெவர்... இல்லையா?

    2

    பள்ளியை விட்டு வெளியே வரும் போது மானசிக்கு திக்கென்று இருந்தது.

    ஒருதடவை கழுத்தைத் திருப்பி பள்ளியைப் பார்த்தாள். வெறும் கட்டிடமாக அது கண்களுக்குத் தெரியவில்லை. ஆறுமாதமாக நான்கு வயிறுகளில் பசியாற்றிய தேவதையின் கோவில் போலவே தோன்றியது. இரண்டு சொட்டு கண்ணீர் உற்பத்தியாவதற்குள் எண்ணங்களை மாற்றிக் கொண்டாள்.

    மானசி... மானசி... கொஞ்சம் நில்லு என்று நூலகத்திலிருந்து பானுமதி விரைந்து வருவது தெரிந்தது.

    நின்றாள். தப்பா நெனைக்கலியே என்னை? என்று குரல் இறங்க மானசியின் விரல்களைத் தொட்டாள் பானுமதி.

    "அடடா... உன்னையா தப்பா நெனைப்பேன்? இந்த ஆறு மாச வாழ்க்கையே உன்னாலதானே பானு நகர்ந்தது, பிரச்சனை இல்லாம? கோடி நன்றிகள் சொன்னாலும் போதாதே பானு என்றாள் அவளும் குரல் உடைய,

    தற்காலிக வேலைதான்... ஆனா அப்படியே நிரந்தரம் ஆயிடும்னு நெனைச்சேன் மானசி... ஜெனிபர் மறுபடி வந்து ஜாயின் பண்ணுவாங்க வேலைக்குன்னு எதிர்பாக்கவே இல்லே... ரொம்ப கஷ்டமா இருக்கு, நீ பிரிஞ்சு போறது...

    உன் கூட சேர்ந்து வேலை பார்த்தது, குழந்தைகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தது, ஆறு மாசமும் கபடமில்லாத மாணவர்களின் சூழல்ல இருந்தது, நல்ல சம்பளம் கெடைச்சதுன்னு இந்த அனுபவங்களை நான் மறக்கவே மாட்டேன் பானு... எப்பவும் உன்னை நெனைச்சுகிட்டே இருப்பேன்... வரட்டுமா? அவள் தோழியை அணைத்துக் கொண்டு முறுவலித்தாள்.

    "நானும் அப்படித்தான்... எனக்கு இருக்கிற தோழிகளில் முதன்மை முக்கியம் நீதான்... உன்னை மாதிரி ஒருத்தியை நான் பாத்ததே இல்லே மானசி... கவலைப்படாதே... ரொம்ப பிரமாதமான ஒரு வேலை கிடைக்கும் உனக்கு...

    Enjoying the preview?
    Page 1 of 1