Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கூட்டுக்குள்ளே சில காலம்...
கூட்டுக்குள்ளே சில காலம்...
கூட்டுக்குள்ளே சில காலம்...
Ebook81 pages28 minutes

கூட்டுக்குள்ளே சில காலம்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தெற்கு பார்த்த அறை அது.
 அப்பாவுக்கு ரொம்பப் பிடித்த அறை. மிகப் பெரிய ஜன்னல் வைத்திருந்தார் அப்பா. விசாலமான கதவுகள். ஃபிரெஞ்ச் விண்டோ என்று சொல்லக்கூடிய அளவுக்கு பிரம்மாண்டமான ஜன்னல்கள். கம்பிகளை காற்றின் துணையுடன் வருடுகிற கொய்யா கிளைகள். தெற்கிலிருந்து வருகிற தென்றல் காற்று. கொய்யா கிளைகளில் ஓடி விளையாடுகிற, அவ்வப்போது தலை நீட்டி உள்ளே பார்க்கிற அணில்கள்.
 "பர்ணசாலைல இருக்கிற மாதிரி இருக்கு..." என்றான் அவன்.
 கல்பனா சடாரென்று நிமிர்ந்து பார்த்தாள்.
 சொல்லி வைத்த மாதிரி அவன் விழிகளும் உயர்ந்து அவளைப் பார்த்தன.
 விநாடி நேரம்.
 இரண்டு பார்வைகளா சந்தித்தன?
 இரு சக்திகள் உராய்ந்த மாதிரி -
 இரு மின்னல்கள் இணைந்த மாதிரி -
 சடாரென்று விழிகள் தாமாக சரிந்ததைப் போல அவன் கண்கள் செய்யவில்லை என்பது புரிந்தது அவளுக்கு. அவை கம்பீரமாக இருந்தன. பதிந்த இடத்திலேயே இருந்தன. எவ்வித குறுகுறுப்பும் இல்லாமல் தீர்மானமாக இருந்தன.
 பர்ணசாலை என்றா சொன்னான் அவன்?
 அப்பா மட்டும் இதைக் கேட்டிருந்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். கிராமத்து மனிதர் அவர்.கல்லூரி வாழ்க்கை டவுனில் அமைந்தாலும் தினம் அறுபது மைல் தூரம் கடந்து வந்தாலும் பரவாயில்லை என்று கிராமத்திலேயே இருந்தவர். பதவி உயர்வு என்கிற காரணத்தாலும், வளர வளர மாறுதல் வர வேண்டும் என்கிற தத்துவம் புரிந்ததாலும் நகரத்திற்கு வந்தவர். ஆனாலும் சாமர்த்தியமாக ஒரு திட்டம் போட்டுக் கொண்டவர். நகரத்திற்கு பகலையும், தனக்கென இரவையும் உண்டாக்கிக் கொள்ள நினைத்து கட்டுப்பாடு, சிக்கனம், வரவுப் பெருக்கல் என்று நாட்களை நகர்த்தி ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி வீடு கட்டிவிட்டவர். அடுக்கு மாடி கலாச்சாரத்திற்கு தன்னையும் குடும்பத்தையும் பலி கொடுத்து விடாமல், பத்து, பனிரெண்டு தென்னை மரமும், முத்துச்சுடர் போல நிலா ஒளியும், காணி நிலமும் கைவரப் பெற்று வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக் கொண்டவர். வீட்டிற்கு வந்து போகிறவர்களில், சிலர் வெளிப்படையான மனிதர்கள். 'கோடையிலயும் என்ன குளுமையா இருக்குப்பா பரமசிவம் வீடு' என்று சிலாகிக்கும் போது மனதார அந்தப் பெருமையை ஏற்றுக் கொள்பவர். அப்பா இல்லையே என்றிருந்தது அவளுக்கு.
 "உங்க அப்பா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்... இல்லீங்களா கல்பனா?" என்றான் அவன் புன்சிரிப்புடன்.
 திடும்மென்று மனதில் ஓடிய எண்ணம் எப்படி தெரிந்தது இவனுக்கு?
 "என்ன பாக்கறீங்க கல்பனா? நா சொன்னது கரெக்ட்தானே?"
 "ஆமா..." என்றாள் மெலிதாக.
 "நல்ல ரசனையான மனசு வேணும் இப்படி ஒரு வீட்டை கட்டவும், தோட்டம் அமைக்கவும்... வெள்ளை அரளி, சிகப்பு ரோஜா, மஞ்சள் கனகாம்பரம்னு நிற வரிசை... வாழை, மா, கொய்யான்னு பயன்தர்ற மரவகை... அகத்தி... புதினா, பொன்னாங்கண்ணின்னு மருத்துவமான கீரை... ரொம்ப அழகான திட்டமிட்ட தோட்டம்" அவன் சொல்லிக்கொண்டே போனான்.
 தனியாகப் பேச வேண்டும் என்றதுமே அம்மா உடனடியாக சரி என்று சொல்லிவிட்டது ஏன் என்று மனம் தனியாக யோசித்தது. வேலை, படிப்பு, குடும்பம், உயரம், முகம் என்று இரு பக்கமும் திருப்தியாகிவிட்ட காரணமா?

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223970385
கூட்டுக்குள்ளே சில காலம்...

Read more from V.Usha

Related to கூட்டுக்குள்ளே சில காலம்...

Related ebooks

Reviews for கூட்டுக்குள்ளே சில காலம்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கூட்டுக்குள்ளே சில காலம்... - V.Usha

    கூட்டுக்குள்ளே சில காலம்

    1

    பொழுது விடிந்தது.

    கல்பனாவின் காதுகளில் வழக்கமான மாமரத்துக் கிளிகளின் கொஞ்சும் மொழி கேட்டது. காற்றும் உற்சாகமாக அதிகாலையிலேயே வீசிக் கொண்டிருந்தது. நுனி சிவந்த மாவிலைகளை அது ஆசையாக ஊஞ்சல் போல ஆட்டி மகிழ்வித்தது.

    மாவிலை... தோரணம்!

    கல்பனாவுக்கு அப்போதுதான் அது ஒரு வித்தியாசமான நாள் என்கிற நினைவே வந்தது.

    வேணு என்கிற ஒருவன் வரப்போகிறான், இருவரும் சந்திக்கிறார்கள், பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், அன்று மாலை அவளைப் பெண் பார்க்க வரப் போகிறார்கள், அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்.

    எழுந்துட்டியாம்மா?

    திரும்பினாள்.

    அம்மா எழுந்து குளித்து கூட முடித்து புன்னகை சுமந்திருந்தாள், பளிச்சென்றிருந்தாள். முகத்தில் உபரியான சந்தோஷம் தெரிந்தது.

    காபி கலக்கட்டுமா? பால் கூட வந்தாச்சு இன்னிக்கு சீக்கிரமாவே...

    இரு... ப்ரஷ் பண்ணிட்டு வரேன்...

    லேசான படபடப்பு இருப்பது புரிந்தது.

    எப்படி இருக்கப் போகிறான் அந்த வேணு கோபால் என்கிற எண்ணம் மெல்ல அரும்புவிட்டது. எல்லாம் சரியாக இருக்கிற பட்சத்தில் தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிட நிகழ்வுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்கப் போகிறது என்கிற நினைப்பு இனம் தெரியாத ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. கல்யாணம் என்கிற ஒன்று தவிர்க்க முடியாத விஷயமாக பெண்களின் வாழ்க்கையோடு இணைந்து போன அதிசயத்தை வியந்தபடி அவள் பல் தேய்த்து முடித்தாள்.

    உண்மையிலேயே காபி பிரமாதமாக இருந்தது. மனதிற்கும் செயலுக்கும் இருக்கிற நெருங்கிய தொடர்பு இது என்று கல்பனா நினைத்துக் கொண்டாள், நெஞ்சம் உற்சாகத்தில் மிதக்கும் வண்ணம் இருக்கிறபோது செய்கிற காரியங்களுக்கும் தானாக அபார இனிமை ஏற்பட்டு விடுகிறது. அம்மா மிகுந்த மனக்கிளர்ச்சியில் இருக்கிறாள்.

    தானும் ஒரு கப் எடுத்துக்கொண்டு அம்மா எதிரில் வந்து உட்கார்ந்தாள், இன்னும் அகலமாகப் புன்னகைத்தாள்.

    காஃபி எஸ்டேட்ல இருந்து நேரா நம்ம வீட்டு கிச்சனுக்கு வந்துதா என்ன? அவ்வளவு ஃபிரஷ்ஷா இருக்கு? என்றாள் கல்பனா.

    நெஜமாவா? நல்லா இருக்கா? அம்மாவின் குரலில் சந்தோஷம் ரொம்ப வெளிப்படையாகத் தெரிந்தது.

    அற்புதம்... கல்பனா சிரித்தாள். அப்பா சொல்லுவார்னு சொல்லுவியேம்மா... இந்தக் காபிக்கே பாதி ராஜ்யத்தை எழுதிக் கொடுத்துடுவேன், ராஜாவா பொறக்கலியே... கரெக்டா?

    வெட்கத்துடன் சிரித்தபோது அம்மா இன்னும் அழகாகத் தெரிந்தாள்.

    அப்பா இருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் இன்னிக்கு? என்றபோது அம்மாவின் குரல் கம்மியிருந்தது. இப்படியா சாவகாசமா ஒக்காரவிடுவார் என்னை? தரை தொடைச்சியா, ஸோஃபா தட்டினியா, பஜ்ஜி மாவு கரைச்சியா, கோலத்துக்கு செம்மண் ரெடியான்னு விரட்டிகிட்டே இருப்பார். பையனைப் பத்தி நாலுக்கு எட்டு பேர்கிட்ட விசாரிச்சிருப்பார். என்ன செய்ய? தலையெழுத்துன்னு ஒண்ணு இருக்கே, அச்சாணில எழுதின மாதிரி அழுத்தமா? அனுபவிச்சுதானே தீரணும்?

    அம்மாவின் பரபரப்பான பேச்சை அவள் ரசித்துக் கேட்டாள், இந்த மாதிரி வித்தியாசமான சம்பவங்களின் போது தான் மனிதனின் நிஜமான தன்மை வெளியே வருகிறது என்று நினைத்துக் கொண்டாள். பொதுவாக அமைதியான பெண்மணியாகத் தோற்றமளித்தாலும், உண்மையில் அம்மா வேகமான உணர்ச்சிகள் நிறைந்தவள்தான் என்று தோன்றியது.

    கல்பனா.

    சொல்லும்மா...

    டென்ஷனா இருக்கா?

    டென்ஷனா? எதுக்கும்மா?

    என்னம்மா இப்படி கேக்கறே...! இது ஒரு முக்கியமான நாளில்லையா? பொண்ணு பாக்க ஒருத்தன் வரப்போற நாள்... டென்ஷன் இல்லாம எப்படி இருக்கும்? எனக்கே பரபரன்னு இருக்கே...

    டென்ஷன்னெல்லாம் ஒண்ணும் இல்லே... லேசா படபடப்பு இருக்கு... எ ஸ்மால் எக்ஸைட்மென்ட்...

    அதுக்குப் பேர்தான் டென்ஷன் ஒரே வார்த்தைல... அம்மா கலகலவென்று சிரித்தாள். சரி... ஒரு கேள்வி கேக்கணும் உன்னை... தப்பா நெனைக்கமாட்டியே?

    இந்தக் கேள்வியத்தான் தப்பா நெனைப்பேன்...

    சரி... அம்மா டம்ளரை வைத்து விட்டு முன் பக்கமாக சாய்ந்து கொண்டாள். "எல்லாப் பொண்ணுங்களையும் போல புடவை, நகை, சினிமான்னு இருக்கறவ இல்லே என் பொண்ணுன்னு தெரியும் எனக்கு... நெறைய படிக்கிறவ... அமைதியா சிந்திக்கிறவ... கருணையான மனசு இருக்கிறவ... எதைச் செஞ்சாலும் அர்த்தமும் அழகும் இருக்கணும்னு நினைக்கிறவ... ஆனா கல்பனா இந்த கல்யாணம்

    Enjoying the preview?
    Page 1 of 1