Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என்னை நான் தேடித் தேடி..
என்னை நான் தேடித் தேடி..
என்னை நான் தேடித் தேடி..
Ebook124 pages42 minutes

என்னை நான் தேடித் தேடி..

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதவு திறந்தது.
 பாவை நின்றாள்
 தோட்டம் ஒரு இளவரசியின் கனவு நந்தவனம் போல விரிந்தது.
 ரோஜா! ரோஜா! ரோஜா! அன்றைய விடியலே ஒரு பெரிய ரோஜா மலரைப் போல சுத்தமும் அழகும் கொண்டு அவளுடைய கடை திறப்புக்காக காத்திருந்து, திறந்தவுடன் கைகளில் பவ்யத்துடன் வந்தமர்வதைப் போல இருந்தது.
 'எனதழகு ரோஜாக்களே! எனதருமை ரோஜாக்களே! காலை வணக்கம்! இந்தப் புத்தம் புதிய நாள் உங்களுக்கும், உங்கள் மூலமாக எனக்கும் மிக ரம்மியமான நாளாக மாறக் கடவதாக!'
 வழக்கம் போல அவள் தன் காலை நடையை அத்தனை ரோஜாச் செடிகளுக்கும் ஊடாக நடந்து, ரோஜாக்களை அணைத்து, சின்னஞ்சிறு மொட்டுகளை முத்தமிட்டு மனதில் ஊறிய உற்சாகமும் அமைதியுமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.
 வீராவின் குரல் கேட்டது.
 "இருடா வீரா இதோ வந்துட்டேன்..." என்று பாலை எடுத்துக் காய்ச்சினாள்.
 தனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரித்துக் கொண்டபோது சடசடவென்று வெளியில் மழைத்தூறல்கள் விழுகின்ற ஓசை கேட்டது.
 'நல்ல வானம், நல்ல மழை, நல்ல ஊர்' என்று செல்லமாகத் திட்டிக் கொண்டாள்.
 வீராவின் குரல் இப்போது வலுவாகக் கேட்டது"டேய் டேய் இருடா என் தங்கக்கட்டி... பால் ஆற வேண்டாமா? கொஞ்சம் பொறுத்துக்கடா பசியை..." என்று சொன்னதும் வீரா சட்டென்று குரலை நிறுத்திவிட, அவன் வேகமாக முன்னறைக்குப் போனாள்.
 அவளைப் பார்த்தவுடன் வீராவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி! அது வாலை இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி வெளிப்படுத்திய அன்புப் பரவசம்! ஓ, இதை விட அழகா அந்த ரோஜாத் தோட்டம்!
 இல்லை. இல்லை. இதுவும் அழகு. அதுவும் அழகு. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அழகுதான். உலகத்தின் எல்லா கணங்களும் அழகுதான். பூமி அழகாயிருக்கும் போது, நிலவு அழகாயிருக்கும் போது, நட்சத்திரங்கள், மேகம், மலை, கடல், அருவி, நதி, காட்டாறு என்று எல்லாமே அழகாக இருக்கும் போது காலம் மட்டும் எப்படி அழகற்றதாகி விட முடியும்?
 "வீரா... இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் சாப்பாடுடா... என்ன தெரியுமா? பால்லயே வெந்த சாதம்... அதுல பெடிக்ரீ... அப்புறம் தண்ணி கலக்காத ரெண்டு கவர் பால்... சரியா?" என்று அதன் தலையைத் தடவி புன்னகைத்தாள்.
 'சரிசரி' என்று சந்தோஷத்துடன் தலையாட்டி விட்டு அவள் முழங்கால்களுக்கிடையில் தலையை புதைத்துக் கொண்டது அது.
 வீரா! எவ்வளவு அன்பு உனக்கு! எப்படியடா இவ்வளவு பாசத்தை வளர்த்துக் கொண்டாய்! இவ்வளவு மெல்லிய உணர்வுகள் கொண்ட உங்கள் இனம் ஏனடா பேசும் கலையை அறிந்து கொள்ளாமல் போயிற்று! சரி வேண்டாம்! பேச்சு என்ன பேச்சு, பெரிய பேச்சு! வாய்ச்சொற்களால் ஒரு பயனும் இல்லைதான்! எத்தனை மனிதர்களுக்கு வார்த்தைகளை வைத்துக் கொண்டு அழகாக உரையாடத் தெரிகிறது? நூற்றில் இரண்டு அல்லது மூன்று பேர் தேறினால் அதிகம். ஒரு குறைவுமில்லையடா வீரா! மவுனமே பார்வையாய், ஜாடையே பாஷையாய் நீ எப்போதும் சந்தோஷமாகவே இருடா என் கண்ணே!
 "அக்கா..." என்று குரல் கேட்டது. வாசல் கதவிற்கு வெளியிலிருந்து.
 கனகுவின் குரல் அது என்று புரிய உடனே அவள் எழுந்து போய் கதவைத் திறந்தாள்மழையில் ஏறக்குறைய முழுமையாக நனைந்து போன உடையும், வருத்தம் அப்பிய முகமுமாக கனகு நின்றாள். பக்கத்திலேயே அவளுடைய மகள் செம்மணி. முகம் முழுவதும் அழுகையும் அச்சமும் பரவிக் கிடந்தன. மகளின் விரல்களை வலிக்கும் அளவிற்கு இறுக்கமாக பற்றியிருந்தாள் கனகு.
 "உள்ள வா கனகு... இதென்ன மழைல இப்படி தெப்பமா நனைஞ்சுகிட்டு வந்திருக்க? குட்டிய வேற கூட்டிக்கிட்டு வந்திருக்கே? வா வா உள்ள வா..." என்றாள் வேகமாக.
 "உன்கிட்ட மன்னிப்பு கேக்கத்தான் வந்திருக்கேன் அக்கா..." என்றாள் கனகு குரல் தழுதழுக்க.
 "மன்னிப்பா? எதுக்கும்மா?"
 "என்னைய நம்பித்தானே வூட்டுக்குள்ள வுடறே? போன வாரம் உன் பர்சு காணாம போச்சில்லே? நான் கூட ரொம்ப கவலைப்பட்டு வீடு பூரா தேடுன்னேல? இந்த பாதகத்தி செம்மணிதாங்க்கா திருடியிருக்கா..."
 "அட அப்படியா?" என்றாள் வியப்புடன்.
 "ரெண்டு நாளா ஒரு மாதிரி சுத்திவிட்டாப்புல இருக்குறா... அப்பப்ப மூலைல சுருண்டு படுக்குறா... என்னடி பொண்ணே வவுத்து வலியான்னு கேட்டேன். அழுது ஒப்பாரி வெச்சா... பானைத்துணிக்குக் கீழ சுருட்டி வெச்சிருந்ததை எடுத்து நீட்டுனா... ஆடிப்புட்டேன்க்கா... உங்க பர்சுக்கா... மிதி மிதின்னு மிதிச்சு இங்க இட்டாந்திருக்கேன்... நீயும் நாலு சாத்து சாத்துக்கா... பாவிமக... மானத்தோட பொழச்சு வாழத்தான ஊரு விட்டு ஊரு வந்திருக்கோம். இப்படி திருட்டுக்களுதயா இருக்காளே... அக்கா உன் கையால அவளுக்கு தண்டனை கொடுக்கா..." என்று பர்ஸை அவள் கையில் வைத்துவிட்டு கனகு அழுதாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223045816
என்னை நான் தேடித் தேடி..

Read more from V.Usha

Related to என்னை நான் தேடித் தேடி..

Related ebooks

Related categories

Reviews for என்னை நான் தேடித் தேடி..

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என்னை நான் தேடித் தேடி.. - V.Usha

    1

    அன்றைக்கும் மழை பொழிந்து கொண்டிருந்தது. சக்திவேல் தலையை பக்கவாட்டில் திருப்பி ஜன்னல் கம்பிகளைத் தாண்டி கொட்டிக் கொண்டிருந்த மழைத்துளிகளைப் பார்த்தான். மிக ஆர்வத்துடனும் மிக இளமையுடனும், உற்சாகமான இளம் பெண் தன் மனதிற்கிசைவான நாட்டியத்தை ஆடுவதைப் போல கொட்டியபடி இனிய இசையையும் கூடவே பரப்பிக் கொண்டிருந்த மழையைப் பார்த்தான்.

    ஹேமாவின் ஞாபகங்கள் கீறிக்கொண்டு மேலெழுந்தன. ஐந்து வருடங்களில் எண்பது மழையையாவது பார்த்திருப்போம் என்று தோன்றியது.

    முதல் மழையின் போது அவள் என்ன சொன்னாள் என்று நினைத்துப் பார்த்தான்.

    அய்யய்ய... இந்த மழைக்காலமே எனக்குப் பிடிக்காது... ஒயிட் ட்ரஸ் போட முடியாது... மொட மொடன்னு காட்டன் ஸாரி கட்ட முடியாது... சட்டுனு நெனைச்சமா சினிமா ட்ராமான்னு கெளம்பினோமான்னு முடியாது... மழைன்னாலே அலர்ஜி எனக்கு...

    ஆனால், ஒரு மழைநாளில்தான் அவன் வீட்டை விட்டு ஓடிப் போனாள்.

    ‘உன்னுடன் வாழ இஷ்டமில்லை எனக்கு. சினிமாவில் சேரப்போகிறேன். இனி நாம் சந்திக்க வேண்டாம். நீயும் சரி, குழந்தையும் சரி என்னைத் தேடவோ, அழைத்து வரவோ முயற்சிக்க வேண்டாம். என்னை என் இஷ்டப்படி வாழ விட்டு விடுங்கள் சக்திவேல்.

    அந்தக் கடிதத்தில் இருந்த தெளிவுதான் முதலில் முகத்தில் அறைந்தது. ஒவ்வொரு வார்த்தையும் வெளிப்படுத்திய வெறுப்பு அதிர்ச்சியை வீசியது. ‘எதைச் சொல்லிப் புரிய வைப்பது உங்கள் தடித்த செவிப்பறை அடைத்த காதுகளுக்கு’ என்று ஆவேசத்துடன் யாழன் ஆதி எழுதிய கவிதை தானாக நினைவின் ஆழத்திலிருந்து எழுந்தது. ஐந்து வருடங்களாக இவள், சினிமா வெறியை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு தானா அவனுடன் வாழ்ந்து தீர்த்தாள்? எப்படி அதை அவன் அறிந்து கொள்ளாமல் போனான்? அய்யோ, இதை விட அவலச்சுமை வாழ்வின் எந்தக் கட்டத்தில் இருக்க முடியும்?"

    சக்திவேல்... ஜி.எம். கூப்பிடுறார்ப்பா... போயிட்டு வா... சுகுமார் பக்கத்தில் வந்து தோளைத் தட்டி விட்டுச் சென்றான்.

    "தசைக் கிளறி குதறும் கழுகுகளின் பேரிரைச்சால் நிறைந்திருக்கிறது. வானம் என்ற அடுத்த வரி வலியுடன் மேலெழுவதற்குள் அவன் எழுந்து நடந்தான்.

    வாங்க சக்திவேல்... உக்காருங்க... என்று கண்ணாடி கழற்றிய ராஜராமின் பார்வை அவன்மேல் கரிசனத்துடனே படிந்தது.

    இன்னிக்கு ரிலீவ் ஆகறீங்க... இல்லையா? என்றார்.

    யெஸ் சார்... என்றான், தன் குரல் தனக்கே கேட்டதா என்று தெரியாமல்.

    மவுனமாக இருந்தார். மழையின் ஓசை மட்டும் ஒருக்களித்துத் திறந்திருந்த ஒரு ஜன்னல் கதவின் வழியாக அறைக்குள் வீசிக் கொண்டிருந்தது.

    என்னைப் பொருத்தவரைக்கும், யூ ஆர் எ ஜென்டில்மேன் மிஸ்டர் சக்திவேல்... என்றார்.

    சிறிது இடைவெளி விட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

    உங்க டெஸிஷன் சரின்னுதான் நினைக்கிறேன்... பணத்தை விட முக்கியமானது மன அமைதி... இந்த ஊர், உங்க வீடு எல்லாமே பழசை கிளறி விட்டுகிட்டுதான் இருக்கும்... பெட்டர் பீ இன் நியூ ப்ளேஸ்... கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியர் நீங்க... வேலை கெடைக்கறது கஷ்டமே இல்லே...

    அமைதியாக இருந்தான்.

    இப் யூ டோன் மைண்ட், நான் ஒரு சஜஷன் சொல்லட்டுமா? ஐதராபாத்தில், யூ சல்யூஷன்ஸ்னு ஒரு கம்பெனி... என் பிரெண்ட் காமோஜிராவ்... என்று அவர் முடிப்பதற்குள் அவன் மெலிதாகக் குறுக்கிட்டான்.

    தாங்க் யூ சார்... எனக்கு டோட்டலா வேற மாற்றம் தேவைப்படுது சார்... புது ஊர், புதிய வேலை, புதிய சூழல்... ஐ நீட் டு ஹாங் எ கம்ப்ளீட் சேஞ்ச்...

    ஸோ?

    ஒரு ஸ்கூல்ல வேலை கெடைச்சிருக்கு சார். வெலிங்டனுக்குப் பக்கத்துல சேரிங் கிராஸ்னு ஒரு சர்ச்... அந்த சர்ச் நடத்தற எலிமெண்ட்ரி ஸ்கூல்ல டீச்சர் வேலை...

    வாட்? ராஜாராமன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தார்.

    ஸ்கூல் டீச்சரா? வெலிங்டன்னா... ஊட்டி, குன்னூர் ரூட்ல வருமே அந்த இடமா? வாட் டு யூ மீன் சக்திவேல்?

    யெஸ் சார்... புதுசா மறுபிறவி எடுக்க நம்மால முடியாது... புதுசா வாழ்க்கை முறையை மாத்திக்க முடியுமே... பழைய வாழ்க்கையோட எல்லா சுவடுகளையும் அழிக்க விரும்பறேன் சார்... இங்க இருந்தவரைக்கும் அலுவலகம் எனக்கு கொடுத்த வசதிக்கும் வாய்ப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி... என்ற போது அவன் கண்கள் நன்றியுடன் அந்தப் பெரியவரை ஏறிட்டு நோக்கின.

    இட்ஸ் ஒகே சக்திவேல்... யூ ஸ்டார்ட்... எனக்கு வாழ்க்கையின் மேல எப்பவும் நம்பிக்கை உண்டு... நம்முடைய ஒவ்வொரு அடுத்த நாளும் சிறப்பா வாழ்வதற்கான புதிய வாய்ப்புன்னுதான் நான் எடுத்துக்கிடுவேன்... டேக் கேர்... டேக் கேர் ஆப் யுவர் சைல்ட்... என்றார். எழுந்து நின்று கை குலுக்கினார்.

    தாங்க் யூ சார் என்று புன்னகைக்க முயன்றான்.

    தாங்க் யூ வெரி மச் ஃபவர் யுவர் கெஸ்ச்சர்

    ஒரு விஷயம்

    சொல்லுங்க சார்

    சக்திவேல் என்கிற அற்புதமான சாப்ட் ர் மேதைக்காக இந்த ஆபீஸ் கதவு எப்பவும் திறந்திருக்கும்...

    மைகாட்... தாங்க் யூ சார்... என்று விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்தான்.

    காத்திருந்த சுகுமாரின் முகம் இறுகிப் போயிருந்தது. விறுவிறுவென்று அருகில் வந்தான்.

    என்ன முடிஞ்சுதா? என்ற போது அந்தக் குரலில் இருந்த உணர்வுகளின் கசப்பு புரியாமல் இல்லை.

    ஆமாப்பா... முடிஞ்சது...

    சக்திவேல், உனக்கு ரொம்ப அவசரம்

    இல்லப்பா... நான் ரொம்ப மந்தமா இருந்திருக்கேன்... அஞ்சு வருஷமா... அவன் சிரித்தான்.

    நாலு வயசு பையனை வெச்சுகிட்டு மலை கிராமத்துல அவஸ்தைப்படப் போறே... அரைகுறை சம்பளத்துல... தேவையா இது? புத்திசாலித்தனமா இது?

    சுகுமார்... வாழ்வு மிகப் பெரிது... அதுல எடுக்கப்படுற எல்லா முடிவுகளும் புத்திசாலித்தனமாவும் இருக்காது. முட்டாள்தனமாவும் இருக்காது...

    பணம் ரொம்ப தேவைப்பா...

    அவசியத்துக்கு அது கிடைக்கத்தான் போகுது சுகுமார், டீச்சர் வேலைல...

    பிடிவாதம்பா உனக்கு...

    இல்லேப்பா... என்றவன் நண்பனின் கையைப் பற்றிக். கொண்டான்.

    வெறுப்பு கசப்பு, ஆத்திரம், கோபம், வெறின்னு எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்து என்னை ஒரு வன்முறையாளனா மாத்தற சூழல் இது வேண்டாம்... நான் எப்பவும் மென்முறையாளனாவே இருக்கணும்... அதுக்கு தேவை உடனடி மாற்றம்... நீ ஒரு நல்ல சிந்தனையாளன்... புரிஞ்சுக்குவ... என்ற தோழனை, சுகுமார் கண்கள் கலங்க ஏறிட்டான்.

    2

    கதவு திறந்தது.

    பாவை நின்றாள்

    தோட்டம் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1