Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Angeyum Kadhal Undu
Angeyum Kadhal Undu
Angeyum Kadhal Undu
Ebook139 pages51 minutes

Angeyum Kadhal Undu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மோகன் என்பவனும், பண்ணையாரின் மகள் பைந்தமிழும் காதலிக்கிறார்கள். பைந்தமிழின் அப்பாவிற்கு இது தெரிய வருகிறது. பைந்தமிழை எச்சரிக்கிறான். பைந்தமிழ் மோகனை மறக்கிறாள். பிறகு மோகனின் நிலை என்னானது?

அதேபோல், அவனி என்பவளும், தன்னுடன் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவனான கார்த்திக் என்பவனும் காதலிக்கின்றன. கார்த்திக் விபத்தில் உயிர் இழக்கிறான். இப்பொழுது அவனியின் நிலை என்ன?

மோகன் மற்றும் அவனி இருவரின் வாழ்க்கை என்னானது என்பதை படித்து அறிவோம்!

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580137110749
Angeyum Kadhal Undu

Read more from R. Sumathi

Related authors

Related to Angeyum Kadhal Undu

Related ebooks

Reviews for Angeyum Kadhal Undu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Angeyum Kadhal Undu - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அங்கேயும் காதல் உண்டு

    Angeyum Kadhal Undu

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    இரைச்சலோடு நின்ற பேருந்திலிருந்து இறங்கினான் மோகன்.

    இறங்கியவன் இவனொருவனே! கடந்து சென்ற பேருந்திலிருந்து கையசைத்த யாருக்கோ இவனும் கையசைத்துவிட்டு நடந்தான்.

    புழுதிப் படலம் மறைந்தும் பொழுது புகை மண்டலம் போல் இருந்தது. வீசி தழுவிய தென்றல் மழை வரும் என பேசி சென்றது. அண்ணாந்து பார்த்த போது அத்தனை மேகங்களும் தண்ணீர் குடம் சுமந்த கன்னிகளாய் கருமை காட்டின.

    மண்சாலையின் இறுபுறமும் மதர்ப்பாய் தலைசாய்த்திருந்தன நெற்கதிர்கள். நான்கடி நடந்ததுமே நச்சென்று தோளில் விழுந்த நீர்முத்து மேக சிப்பியின் முதல் பிரசவம்.

    மேக நாடு முத்துடைத்ததில் அடுத்தடுத்த முத்துக்கள் அதிரலாய் மண்ணில் விழுந்து மணம் பரப்பின. மண் வாசனையோடு தன் வாசனையை இணைத்துக் கொண்ட கிராமம் புத்துணர்ச்சியில் திளைக்கத் தொடங்க...

    நடையை துரிதமாக்கினான். தூரத்தே உருளும் மேகங்கள் மிரள வைத்தன. இன்னும் சற்று நேரத்தில் இடித்து நொறுக்கி விடுவேன் என மிரட்டின.

    நனைந்து விடாமல் வீடு போய் சேரமுடியாது என உறுதியாக எண்ணும்படி இறுதியாக மழை வந்தே விட்டது.

    ஒதுங்க கூட இடமில்லை. இந்தப்பக்கம் ஒதுங்கினால் விளைந்த சரிந்த வயல். அந்த பக்கம் ஒதுங்கினால்...கத்தரி நாற்று விட்ட காட்சி.

    காலையில் கல்லூரிக்கு செல்லும்போது பளிச்சென சிரித்த மேகங்கள் இப்பொழுது எங்கிருந்து இந்த கள்ளத்தனத்தை பெற்று

    உருமாறி நிறம்மாறி நீர் பெய்யத் தொடங்கிவிட்டன.

    அவனுடைய அவசர நடையைத் தடுப்பதைப்போல் உரசிக் கொண்டு ஊர்ந்து வந்து நின்றது அந்த கருப்பு நிற கார்.

    வானத்து கருமேகம் ஒன்று கனம் தாளாமல் தொப்பென அருகே விழுந்துவிட்டதோ என நினைக்க வைத்தது.

    காருக்குள்ளிருந்தும் வந்தது சாரலின் இனிமை.

    குரல் வழி வந்த இனிமை அவனை இழுத்துப் பிடித்தது.

    மோகன்... பைந்தமிழின் குரல். பைங்கிளியின் குரலாக கொஞ்சியது.

    திரும்பினான்.

    அரும்பிய மொட்டாய் அவள் காருக்குள்ளிருந்து சிரித்தாள். வெளியே அங்கங்கே மின்னிய மின்னல் ஊற்றெடுத்து உள்ளே தான் உருவாகியது என அவளுடைய இதழ்கள் சொன்னது.

    திரண்டிருந்த கார்மேகம் திருடிக்கொண்ட கருமை தோளில் புரண்ட கூந்தலில்!

    மோகன்...வாங்க என கதவை திறந்து விட்டாள். எப்பொழுதும் மறுக்கும் அவனால் இப்பொழுது மறுக்க முடியவில்லை.

    பிகு காட்டினால் பிடித்துக் கொண்ட மழை அவனை கரைத்து சேறோடு சேறாக செம்புலப் பெயல்நீராக்கிவிடும். வானத்தோடு வம்பு வழக்கெதற்கு என வாய் மூடி ஏறி அவளருகே அமர்ந்தான்.

    மழை ஆரம்பித்த அடுத்த அடுத்த நிமிடங்களிலேயே அரைகுறையாய் நனைந்துவிட்ட அவனை அழகு விழியால் ரசித்தாள் பைந்தமிழ்.

    மழை அழகென்றால் அதில் நனைந்தவரின் அழகு கூடுகிறது என நினைத்தாள்.

    மோகன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக் குட்டையை எடுத்து முகம் கழுத்து தலை என துடைக்க முற்பட்டான். அந்த கையளவு துணி தாக்குப் பிடிக்க முடியாமல் ஈரமாகி இப்பொழுது இதற்கு மேல் இயலாது என சொத சொதத்தது.

    சட்டென பைந்தமிழ் தன் மார்பில் இருந்த துப்பட்டாவை எடுத்து நீட்டினாள்.

    ம்...துடைச்சிக்கங்க.

    மெல்லிய அதிர்ச்சி பரவியவனாய் அவளைப் பார்த்தவன் வேண்டாம் என்ற ஒற்றை சொல்லில் மறுத்தான்.

    ஏன்... என் துப்பட்டாவால துடைச்சிக்கக் கூடாதா? உங்க கற்பே பறிபோய்டுமா?

    புரியாததைப் போல் புன்னகைக்கும் அவனை கேலியாகப் பார்த்தாள்.

    மழையில நனைஞ்சு குளிரால நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன் மாதிரி வரலாற்றுல எனக்கு இடம் கிடைச்சு பேரும் புகழும் வந்துடக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    தேங்க்ஸ்

    எதுக்கு?

    கார்ல லிப்ட் கொடுத்ததுக்கு

    ம்...நீங்க நன்றி சொல்லனும்னா நிறைய விஷயத்துக்கு நன்றி சொல்லனும்

    வேற எதுக்கு நன்றி சொல்லனும்?

    என் மனசுல இடம் கொடுத்ததுக்கு. உங்களை எனக்கு ஹீரோவா ஆக்கினதுக்கு

    இதய நரம்பகளை இழுக்கும் ஈர்ப்பு சக்தி அவளுடைய கண்ணசைவில் அவனுக்குள் பாய்ந்தது.

    காரை நிறுத்து

    ஏன்?

    நான் இறங்கனும்

    எதுக்கு இறங்கனும்?

    உன்னோட டார்ச்சர் தாங்கலை

    யூ மீன் காதல் டார்ச்சர்?

    ஆமா! நான் நடந்தே போறேன்

    வெளியே செம மழை. நனைஞ்சா ஜூரம் வரும்

    வாந்தி பேதியே வந்தாக் கூட பவாயில்லை. இந்த டார்ச்சரக்கு அது பரவாயில்லை

    அப்ப சரி காரை நிறுத்தினாள்.

    கதவைத் திறந்துக்கொண்டு இறங்கினான் மோகன்.

    வரிகளில் எழுத நினைத்த கவிதையை நீர் வரிகளாகவே ஆக்கி வானிலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தாள் மேக கவிதாயினி. நீர் வரி கானல்வரி கவிதைகளாக அவளுடைய கண்ணிலிருந்து பொழிந்துக் கொண்டிருந்தது.

    உலகை தழுவியது உன்னதமில்லை உன்னை தழுவதற்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போல் ஓடோடி வந்து அவனை அப்பிக் கொண்டன அமுததாரைகள்.

    அதே சமயம் கார் கதவைத் திறந்துக் கொண்டு தானும் இறங்கினாள் பைந்தமிழ். அவள் இறங்கயதுதான் தாமதம் தாய் தன் பல குழந்தைகளையும் ஒன்றாக சேர்த்து அணைத்துக் கொள்வதைப் போல் மழை அவளையும் அணைத்து நனைக்கத் தொடங்கியது,

    ஏய்...என்னது? நீ ஏன் இறங்கினே? அவன் முகத்தில் பட்டு தெறித்த மழைத் துளிகளின் ஊடே தெரிந்த அவள் நனையும் காட்சியை ரசிக்க முடியாமல் பதறினான்.

    ம்...கங்கை நதியோரம் ராமன் நடந்தான். கண்ணின்மணி சீதை தானும் நடந்தாள் என சத்தமாகப் பாடினாள். மழையின் இரைச்சலோடு கலந்து அவளுடைய குரல் ஒலித்தது.

    லூசா நீ கொட்டற மழையில பாட்டுப் பாடறே? அவன் சீற...

    அவள் மேலும் பாடினாள்.கொட்டும் மழையோடு மோகன் நடந்தான். கொஞ்சும் கிளி பைந்தமிழ் கூட நடந்தாள்...மெல்ல நடந்தாள்.

    நிஜமாவே உனக்கு பைத்தியம்தான் புடிச்சிட்டு

    அவனுடைய குரல் காதில் விழாதவளாய் வானத்தை நோக்கி முகத்தை நிமிர்த்தி வானத்து அத்தனை மழையையும் அது மண்ணில் விழுவதற்கு முன்னாலேயே வாங்கிக் கொள்வதைப்போல் இரு கைகளையும் பட்டாம் பூச்சியாய் விரித்தாள்.

    நிஜமாவே மழையில நனையறைதைவிட பெரிய சுகம் இனிமை சந்தோஷம் இந்த உலகத்துல எதுவுமே இல்லை. அதிலேயும்...இப்படி மனசுக்குப் பிடிச்சவனோட மழையில நனையறது சுகமோ சுகம்.

    அடச்சீ...முதல்ல காருக்குள்ள போ என அவளை இழுத்து கார் கதவைத்திறந்து தள்ளியவன் தானும் ஏறிக் கொண்டு கதவை அடித்து சாத்தினான்.

    ப்ளீஸ்...ப்ளீஸ் மோகன் நாம அப்படியே ஜாலிய நனைஞ்சுக்கிட்டு ஜோடியா ஒட்டி உரசிக் கிட்டு கட்டிப் புடிச்சுக்கிட்டு வீட்டுக்குப் போவோமே. எவ்வளவு நல்லாயிருக்கும்

    ம்...அப்படியே அந்தி மழைப் பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதுன்னு டுயட் பாடிக்கிட்டேப் போகலாம்

    அந்த பாட்டு வேண்டாம். பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துக்கிட்டு கூட வரவேணும்னு பாடிக்கிட்டுப் போகலாம்

    ம்...அப்படி போனா என்ன நடக்கும்னு யோசிச்சுப் பாரு

    யோசிச்சுப் பார்க்கவே ரொம்ப கிளுகிளுப்பாயிருக்கு. அனுபவிச்சுப் பார்த்தா எப்படியிருக்கும்?

    உனக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா எனக்கு?

    ஏன்...ஜூரம் வந்து ஹாஸ்பிடல்ல போய் படுத்துடுவோமோன்னு பயமாயிருக்கா?

    ஹாஸ்பிடல்ல போய் படுத்தாக் கூட பரவாயில்லை. என்னைக்கொண்டு போய் ஆலமரத்தடியில இல்ல நிறுத்திடுவானுங்க

    ஆலமரத்தடியிலயா?

    ஆமா...நம்ம ஊர் பஞ்சாயத்து ஆலமரத்தடியில. உன் கூட நீ சொல்ற மாதிரி மழையில நனைஞ்சுக்கிட்டு நெருக்கமா பாடிக்கிட்டு நடந்தா பஞ்சாயத்துல நிறுத்தாம என்ன பார்லிமன்ட்லயா நிறுத்துவானுங்க?

    Enjoying the preview?
    Page 1 of 1