Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhaya Veenai Thoonguvathillai...
Idhaya Veenai Thoonguvathillai...
Idhaya Veenai Thoonguvathillai...
Ebook102 pages36 minutes

Idhaya Veenai Thoonguvathillai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சபரி, மாலினி இருவரும் காதலிக்கின்றன. ஆனால் மாலினி விபத்தில் உயிரிழக்கிறாள். இதே போல், சுதாகர் என்பவன் சுனிதாவை காதலிக்கிறான். சுனிதா ஒரு இதய நோயாளி. மாலினியின் இதயம் சுனிதாவிற்கு பொருத்தப்பட்டு உயிர் பிழைக்கிறாள். உயிர் பெற்ற அவள், தான் இதய நோயாளி என தெரிந்தும் காதலித்த சுதாகரை ஏற்றுக்கொண்டாளா? இல்லை, மாலினியின் இதயம் முழுவதும் பரவி இருந்த சபரியின் காதலை ஏற்றுக் கொண்டாளா? என்பதை பார்ப்போம்!

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580137109471
Idhaya Veenai Thoonguvathillai...

Read more from R. Sumathi

Related to Idhaya Veenai Thoonguvathillai...

Related ebooks

Reviews for Idhaya Veenai Thoonguvathillai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhaya Veenai Thoonguvathillai... - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இதய வீணை தூங்குவதில்லை...

    Idhaya Veenai Thoonguvathillai...

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    சுதாகர் வீட்டிற்குள் நுழையும்போதே ‘கலீர்’ என்ற சிரிப்பொலியும், கூடத்தை நிறைத்து வெளியே வந்து வரவேற்ற ‘ஜல் ஜல்’ என்ற கொலுசோசையும், அக்கா மனோகரி வந்திருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்தியது.

    அம்முக்குட்டி... மாமா வந்துட்டான் பாரு... என்ற மனோகரியின் குரலைத் தொடர்ந்து, ‘ஜல் ஜல்’ என்ற ஓசை வாசலுக்கு ஓடி வந்தது.

    கொலுசோசை முன்னே வர, கூடவே ஒன்றரை வயது அம்மு, மாமா... என மழலை மொழிnhதபடி புஸ்ஸென்ற கவுன் அணிந்து இரு கைகளையும் விரித்தபடி, சிரித்தபடி பட்டாம்பூச்சியாய் ஓடிவந்தாள்.

    குட்டி... எப்படா வந்தீங்க...? குனிந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.

    சொல்லாமல் கொள்ளாமல் யாரோ ஐஸ் கட்டிகளை மேலே எறிந்து விளையாடியதைப் போல் சிலிர்த்தான். இரு கன்னங்களிலும் எண்ணிக்கையில்லா முத்தங்களைப் பதித்தான். மழலை வார்த்தைகளில் மனதை மயக்கிய அம்மு மாலையாய் மாமன் தோளில் ஆடினாள்.

    எப்பக்கா வந்தே? என்றபடி சோபாவில் அமர்ந்து கேட்டபோது, தொலைக்காட்சி சீரியலில் ஆழ்ந்திருந்த மனோகரி, ம்... காலையிலேயே நான் வந்துட்டேன், நீ ஆபீஸ் போன பிறகு என்றாள்.

    அத்தான் எப்படியிருக்கார்?

    அவருக்கென்ன? ராஜா மாதிரி இருக்கார்.

    ஒரு வாரத்துக்கு மகாராஜா மாதிரி இருப்பார்.

    சீரியலிலிருந்து முகம் திருப்பி சீற்றமாகப் பார்த்தாள்.

    ஒரு வாரம் இங்க டேரா போட்டுடுவே! அப்புறம் என்ன? அவர் நிம்மதியா இருப்பார் - மகாராஜா மாதிரி....

    ம்... கொழுப்புடா உனக்கு. அந்தக் கொழுப்பை அடக்கத்தான் இப்ப வந்திருக்கேன்...

    "கையோட கொலஸ்ட்ரால் மாத்திரையெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கியா?’

    வந்ததும் வராததுமா என் கோபத்தைக் கிளறாதே.

    அம்மா உள்ளிருந்து வந்தாள்.

    டேய்... உனக்காக நெய் சொட்டச் சொட்ட அல்வா பண்ணிக் கொண்டு வந்திருக்கா. நீ என்னடான்னா அவளைக் கோபப்படுத்தறே என்றபடி கையில் எவர்சில்வர் டப்பாவும் ஸ்பூனுமாக எதிரே நின்றாள்.

    கொழுப்பைக் குறைக்கப் போறேன்னா? கொழுப்பு ஏற அல்வா பண்ணிக் கொண்டு வந்திருக்கா... என்றபடியே அம்மா ஊட்டிய அல்வாவை வாயில் வாங்கி சுவைத்தான்.

    இவ்வளவு டேஸ்டியா அக்கா அல்வா கிண்டுவாளா? வர்ற வழியில ஸ்வீட் கடையில வாங்கி டப்பாவுல கொட்டிக்கிட்டு கவரைத் தூக்கிப் போட்டுட்டு வந்திருப்பா. தான் செய்ததா பாராட்டுவாங்க பொய் சொல்றா...

    ஆமாடா... நீ அப்படியே அவார்டு கொடுத்துடப் போறே... அதுக்காகப் பொய் சொல்றேன்.

    அதெப்படி? அம்மாவீட்ல இருக்கும்போது காபிகூடப் போடத் தெரியாத பொண்ணுங்களெல்லாம் புகுந்த வீட்டுக்குப் போன பிறகு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப் மாதிரி மாறிடறாங்க.

    அம்மாவீட்ல இருக்கும்போது அம்மா எங்க கிச்சன்ல சமைக்க விடறாங்க ‘கைய சுட்டுப்பே. மேல் எண்ணெயைக் கொட்டிப்பே’ அப்படி இப்படின்னு சொல்லிக் கெடுத்துடறாங்க." மனோகரி இப்படிச் சொல்லவும்...

    பொண்ணுமேல அம்மாவுக்கு அத்தனை பாசம் என்றான் சுதாகர்.

    பாசமும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இவ சமையலறைக்குள்ள போனா, இருக்கிற மளிகை சாமானையெல்லாம் ரெண்டே நாள்ல காலி பண்ணிடுவா. மளிகை சாமான் வாங்கிக் கட்டுப்படியாகாது. அதனால்தான், சுட்டுப்பே....காலை சுட்டுப்பே... எண்ணெயைக் கொட்டிப்பே’ன்னு எதையாவது சொல்லித் தடுத்துடுவேன். புருஷன் வீட்ல போய் அவன் சொத்தை அழிச்சா நமக்கென்ன... ? - அம்மா இப்படிச் சொல்லவும் கண்களில் அதிர்ச்சி காட்டி கையைத் தாடையில் தாங்கிச் சொன்னாள்.

    அம்மா... இவ்வளவு பெரிய சதித்திட்டத்தோடதான் இருந்தியா...?

    சுதாகர் கலகலவெனச் சிரித்தான்.

    ஒவ்வொரு அம்மாவும் பொண்ணுங்களை ஒரு வேலையும் செய்ய விடாம செல்லமா வச்சிருக்கிறதா சொல்றதுக்கு இதுதான் காரணமா?

    அவனுடைய கேலி மனோகரிக்கு எரிச்சலை உண்டாக்கியது. முகத்தில் கோபத்தைக் காட்டியவளாக, தொலைக்காட்சி சீரியலில் கவனத்தைத் திருப்பினாள்.

    டேய்... உனக்காக அவ எவ்வளவு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கா? அவளை ஏதாவது சொல்லிக்கிட்டு...

    "நல்ல செய்தியா? என்ன நல்ல செய்தி

    எல்லாம் உன் கல்யாணத்தைப் பத்தித்தான். சொல்லிவிட்டு அம்மா அவனுடைய முகத்தை ஆராய்ந்தாள்.

    அவள் எதிர்பார்த்த மாதிரியே அவனுடைய முகம் மாறியது. மனோகரியும் அவன்மீதிருந்த கோபத்தைத் துறந்தவளாக அவனுடைய முகத்திலிருந்து மனதைப் படிக்க முயன்றாள்.

    மனோகரியோட நாத்தனார் சைடில் ஒரு பொண்ணு இருக்காளாம். நல்ல அழகு. நல்லா படிச்சிருக்கா. கை நிறைய சம்பளத்தோட ஒரு கம்பெனியில வேலை பார்க்கிறாளாம். உனக்குக் கொடுக்க அவங்க வீட்ல எல்லாரும் ரொம்ப விருப்பமாயிருக்காங்களாம். பொண்ணோட ஃபோட்டோவைப் பாரேன். மனோகரி... அந்தப் பொண்ணோட ஃபோட்டோவைக் காட்டு என்றாள்.

    மனோகரி எழுந்து சென்று தன் மொபைலை எடுத்து வந்தாள். மடியிலிருந்த அம்முவை இறக்கிவிட்டுவிட்டு சட்டென்று தன் அறையை நோக்கிச் செல்ல முயன்றவனின் குறுக்கே வந்து நின்றாள் மனோகரி.

    ஃபோட்டோவைப் பார்க்காம எங்க போறே? பார்... இந்தப் பொண்ணை. எத்தனை அழகாயிருக்கா

    "இதப்பார். நான் எந்தப் பொண்ணையும் பார்க்கிற மாதிரி இல்லை. பேசாம எடுத்துக்கிட்டுப் போ. சும்மா கண்டகண்ட பொண்ணுங்களோட ஃபோட்டோவைத் தூக்கிட்டு இங்கே வராதே’ன்னு எத்தனை தடவை சொல்றது? நான் ஒரு பொண்ணை சின்சியரா காதலிக்கிறேன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1