Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neerottam
Neerottam
Neerottam
Ebook203 pages1 hour

Neerottam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முதியோர் இல்லத்தில் ஒரு மரணம். அதன் பின்னணியில் இருக்கும் மர்மம். இல்லத் தலைவி மரகதம் பற்றிய சோக பின்னணி... அங்கு வேலை செய்யும் முத்துவின் அன்பு, தாமரை விரிவது போல் விரியும் குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்கள். எல்லாம் பின்னிப் பினையும் இரு திடுக் நாவல். எதிர்பாராத முடிவு... படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580174610917
Neerottam

Read more from Sankari Appan

Related to Neerottam

Related ebooks

Reviews for Neerottam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neerottam - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீரோட்டம்

    Neerottam

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்-16

    அத்தியாயம்-1

    அந்த முதியோர் இல்லத்தில் ஒரு மரணம். அது அந்த இல்லத்திற்கு புதிது இல்லை. சாவின் விளிம்பில் வாழ்க்கையை தொற்றிக்கொண்டு இருக்கும் அங்கிருந்த பலரின் கனவு தான் மரணம். எப்போ எனக்கு சாவு வரும், கனவு நிஜமாகும் என்று தவிக்கும் மனசுகள். எழுபதை தாண்டியவரும் இருந்தனர். தொண்ணூறு தொடும் வயதினரும் இருந்தனர். பலரும் விடுதலை வேண்டி காத்திருக்கும் காலம் இது. அதுவரை இது சிலருக்கு ஒருவித சிறைச்சாலை. சிலருக்கு ஓய்வு நேரம்... சிலருக்கு அமைதி கிடைத்த நேரம்... இன்னும் சிலருக்கு வேதாந்தம் பற்றி உணரும் நேரம்.

    சாந்தாம்மா போய்விட்டாள். மகராசி... இனி எனக்கு எப்பவோ? என்று பிரலாபித்தாள் பார்வதியம்மாள்.

    பாட்டி சாவை ஏன் இவ்ளோ அவசரப்பட்டு வெத்தலைப் பாக்கு வச்சு அழைக்றேங்க? அது வரும் போது வரும். ஜாலியா இருங்க. என்றாள் முத்து.

    அடி செருப்பாலே... ஏன் சொல்லமாட்டே?... தளுக்கி மினுக்கற வயசு உனக்கு... நாங்க சருகுடி...

    பொறாமையா இருக்கா.?

    நான் ஏண்டி பொறாமைப்படணும்? நான் என்ன அந்த சாந்தாம்மா மாதிரி கொடுத்து வைக்காதவளா?... அழகு போலே மகன் இருக்கான் கொள்ளி போட.

    முத்தம்மா பெருக்கி முடித்துவிட்டாள். மணி எட்டாகுது சாப்பிட ஹாலுக்கு வாங்க பாட்டி. என்று அன்புடன் கூறிவிட்டுச் சென்றாள்.

    முத்தம்மா இங்கு வேலைக்கு வந்த பிறகு நிம்மதியாக இருக்கிறாள். இங்கு வந்து சேர்ந்த புதிதில் அவள் கணவன் கோபாலு குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்தான். ஏய்... முண்டச்சி... இந்த மாதம் சம்பளம் வாங்கி இருப்பே இல்லே... மரியாதையா கொடு... இல்ல நொறுக்கிப் போடுவேன்... இவன் எப்பொழுதும் இப்படித்தான்... அவள் வேலை பார்க்கும் வீடுகளில் மாதம் பிறந்ததும் குடித்துவிட்டு வந்து காலாட்டா பண்ணி காசை வாங்கிக்கொண்டு போய்விடுவான். சம்பளத்தில் பாதிய கொடு போதும்... நான் நாணயஸ்தன் என்று பெருமை பீற்றுவான்... இவனிடம் கொடுக்கமுடியாது என்று அவள் வாதாடினால்... முண்டச்சிக்கு அவ்வளவு திமிரா என்று முடியை பிடித்து இழுப்பான்... கன்னத்தில் அறைவான்... அநியாயமாக அவள் நடத்தையைப் பற்றி அசிங்கமாகப் பேசுவான்... அவள் வைத்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்குப் போகிறதா காசு என்று கேட்பான். இவன் கலாட்டா தாங்காமல் கொடுத்துவிடுவாள். வீட்டுத் தலைவி முகம் சுளிப்பாள். அடுத்த மாதமும் இதே கதை தான்... இரெண்டாம் மாதமே அவளை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். குழந்தைகள் பசியோடு இருப்பதைப் பார்க்க தாங்கமுடியாத வலி வரும். ஒன்றரை வயது பையன் மணிகண்டன்... மூன்று வயது பெண்குழந்தை தாமரை... பசியில் வாடும் முகங்கள். நீயெல்லாம் ஒரு அப்பனா... என்று அவள் சொல்லி, அவன் அடித்ததில் இடது பக்க இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. நல்ல வேளை சரியாகிவிட்டது. அது கடவுள் புண்ணியம்.

    பிள்ளைகள் பசியோடு இருக்காங்க... நீ பெத்த பிள்ளைதானே... இப்படி காசைப் புடுங்கினா என்ன பண்ணுவேன்?

    மைன்ட் இட்... பாதி காசுதானே தாரே... மீதியை வைத்துக் கொண்டு குடித்தனம் பண்ண முடியாது? எவன் கிட்டடி கொடுக்கறே? என் புள்ளைகளை பட்டினி போடறே.? அதற்கும் இரண்டு அடி சேர்த்து கிடைக்கும். மீனாட்சியம்மா புண்ணியத்தில் இந்த வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்து அவள் சம்பளம் வாங்கிய முதல் நாளே மூக்கில் வேர்த்து வந்துவிட்டான் கோபாலு.எடு எடு... நேரமாவுது காமான் குவிக்... என்று கலெக்டர் உத்தியோகம் பார்க்கும் ஆள் போல் பந்தாவுடன் கேட்டான். அவள் இங்கும் வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் பாதி சம்பளத்தைக் கொடுத்தாள். நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு இங்கலிசு வேறயா? என்று திட்டினாள்.

    ஏய்... என்னடி முண்டச்சி... ரெண்டாயிரம் தாரே... இங்கு உனக்கு சம்பளம் சாஸ்தி... மரியாதையா இன்னும் ஆயிரம் கொடு...

    முடியாதுய்யா... தாமரையை பள்ளியில சேர்க்கணும்... சீருடை வாங்கணும்... என்றாள்

    அய்... அப்பனாகிய எனக்கு இல்லாத அக்கறை உனக்கு வந்திடுச்சா? எவன் கிட்ட கொடுக்றதுக்கு பதுக்கி வைக்கிறே? ராஸ்கோல்... அடி உதை குத்து, முத்தம்மா கன்னத்தில் வீக்கம்... நெற்றியில் ரத்தம்... அவள் ஓவென்று அழ... அங்கே மரகதம் வந்தாள். விடுதி தலைவி. ஒல்லியான களையான முகம். முப்பத்திரண்டு வயது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வயதிற்கு மீறிய முதிர்ச்சியான பக்குவம் உடையவள்.

    என்ன கலாட்டா இங்கே?

    ஒண்ணுமில்லேம்மா... முத்தம்மா மழுப்பப் பார்த்தாள்... இந்த வேலையும் போய்விட்டால்.!

    புரியுது... குடித்துவிட்டு வந்திருக்கியாடா... இனிமே இங்கே வந்து கலாட்டா பண்ணினே போலீசைக் கூப்பிடுவேன்... நீ இப்போ வாங்கின காசை திருப்பி முத்தம்மா கிட்ட கொடுத்திட்டு ஓடிப் போயிடு. கடுமையாக தலைவி எச்சரிக்க கோபாலு மந்திரத்திற்கு கட்டுப் பட்டது போல் பணத்தை கொடுத்துவிட்டு கீழ் குரலில்...வருவேல்ல... வச்சுக்கிறேன்... என்றபடி போனான். தலைவி அவளை வீட்டுக்குப் போக விடவில்லை.விடுதிக்குப் பக்கத்தில் உள்ள சிறிய அவுட் ஹவுசை அவளுக்குக் கொடுத்து வசதியா இருக்கா? புள்ளைங்களை அழச்சிட்டு வந்து இங்கேயே இரு என்று சொல்லிவிட முத்தம்மா நன்றிபெருக்கில் கண்ணில் நீர் மல்க மரகதம் காலில் விழுந்தாள். அது முதல் அவள் வாழ்கையில் வசந்தம் வந்தது. கோபாலு வேறு யாரோ ஒரு பெண்ணுடன் தொடுப்பு வைத்துக் கொண்டு இருப்பதாகக் கேள்வி. அவள் அவனை அடக்கி ஆள்வதாகப் பேச்சு...

    ஏய்... முத்து என்னடி சிரிப்பு.? என்று ஒரு பெருசு கேட்க அவள் சொன்னாள் பட்டக் கடனை என் புருஷன் அடச்சிட்டிருக்கான்... அதை நினைத்தேன் சிரித்தேன். என்னை அடித்து உதைத்தான்... பதிலுக்கு நான் கொடுக்க வேண்டாம்... என்னால் கொடுக்கமுடியலை. அந்தக் கடனை இன்னொருத்தி வந்து அடச்சிட்டு இருக்கா. அடியும் உதையும் வாங்கிட்டு இருக்கான்.

    அது சரி... சாமி சும்மா பார்த்திட்டு இருக்குமா? நேரம் வரும்போது பதிலடி கொடுக்கும்.

    இந்த விடுதியில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதை பராமரிப்பதும் அவள் வேலைதான். ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும். வாசனை மனசையே அள்ளிக் கொண்டு போகும். செம்பருத்தி பூக்கள் சிவப்பும் மஞ்சளுமாக செடியெல்லாம் நிறைத்து பச்சை இலை தெரியாமல் அழகுடன் மிளிரும். புல்வெளி பச்சைக் கம்பளம் போல் விரிந்து வரவேற்கும். மரகதத்திற்கு அவளை மிகவும் பிடிக்கும். முத்து... நீ எதுக்கு கஷ்டப்படறே? தோட்டத்தை கவனிக்க ஆள் போட்ரவா?

    அதெல்லாம் வேண்டாம்மா... எனக்கு இது ஒண்ணும் கஷ்டமில்லை... செடிகளுக்குத் தண்ணி ஊத்தறேன்... அது பூக்களாய் பூத்து நன்றி சொல்லுது.

    பலே... நல்லா பேசறியே. விட்டா கவிதையே எழுதிடுவே போலிருக்கே.

    நான் ஒரு எழுத்து கூட படிக்காத முட்டாள்... எனக்கு என்ன தெரியும் கவிதை பத்தி?

    மரகதம் கனிவுடன் சிரித்துவிட்டு நீயே கவிதைதான்... என்றாள்.

    போங்கம்மா....என்று சிணுங்கினாள். அப்பொழுது பரபரப்பாக வந்தான் வேலு.

    அம்மா... இறந்துபோன சந்தாம்மா சொந்தக்காரங்க வராங்க. என்றான்.

    காரிலிருந்து நாலைந்து பேர் இறங்கி வந்தனர். மரகதத்திடம் வணக்கம் தெரிவித்தனர்.

    எல்லா ஏற்படும் பண்ணி இருக்கு. பாடியை எடுக்க வந்தோம்.

    இவங்க சாவில் ஒரு வித்தியாசம் இருக்கு. என்று அருகில் நின்ற ஈஸ்வரி முணுமுணுத்தாள்.

    அகிலாப் பாட்டிக்கு மாத்திரை கொடுக்கும் நேரம் என்று நியாபகம் வர ஓடினாள் முத்து. சாவில் என்ன வித்தியாசம்... என்று வியந்தாள் முத்து. மூச்சு நின்று விடும் அவ்வளவுதானே... இதில் என்ன அதிசயம்!

    அகிலாப் பாட்டி தமாஷாகப் பேசுவார். திருநீர் அணிந்த நெற்றி. முகத்தில் என்பது வயதின் மூப்பு தெரியாது.

    மாத்திரைகளை கொடுத்துவிட்டு தயங்கி நன்றாள். பாட்டி ஒண்ணு கேக்கலாமா?

    என்ன கேக்கப்போறே? அந்த சாந்தாம்மா பத்தியா?

    அட... எப்படி பாட்டி கண்டுபிடுச்சே... கில்லாடி பாட்டி.

    கில்லாடி பாட்டி இல்லைடி... அனுபவப்பட்ட பாட்டி. நீ இருபது நான் என்பது... மனுசங்களைப் பத்தி இது கூட தெரியாதா?

    சரி சொல்லு... ஈஸ்வரி கூட சொன்னாங்களே... இவங்க சாவில ஒரு வித்தியாசம் இருக்குன்னு... அது என்னது பாட்டி?

    ம்க்கும்... அவ்வளவு லேசிலே சொல்லிடுவேனா? எனக்கு என்ன தருவே?

    லஞ்சமா கேக்றே... அம்மாக்கிட்டே போட்டுக் கொடுக்றேன்...

    அடி பாவி... வந்து ஆறு மாசம் ஆகலை... அதுக்குள்ளே அம்மாவே கணக்கு பண்ணிட்டியா? கில்லாடி நீதான்.

    அங்கே என்ன அரட்டை... வேலையைப் பாரு முத்து... கௌரி அம்மாவுக்கு ரூம்லே தண்ணி இல்லையாம்... கொண்டு போய் கொடு... இங்க நின்னுக்கிட்டு வாயாட்ற. அதுக்குதான் சம்பளம் தராங்களா? என்று ஈஸ்வரியின் குரல் ஓங்கி ஒலிக்க, மிலிட்டரி வந்திடுத்து... அப்புறமா வா பேசலாம். என்றாள் அகிலாப் பாட்டி. பாட்டி தன்னை அப்படிக் கூப்பிடுவது ஈஸ்வரிக்குத் தெரியும். சிரித்துக் கொள்வாள். அந்த பயம் இருக்கட்டும் இல்ல இவங்களை சமாளிக்க முடியாது. முத்து ஓடிவிட்டாள். ஈஸ்வரியிடம் அவளுக்கு கொஞ்சம் பயம். ஈஸ்வரி நாற்பது வயது தாண்டியவள். திருநங்கை. இவள் மட்டும் அல்ல, இன்னும் சில திருநங்கைகள் இங்கு கௌரவமாக வேலை செய்து பிழைக்கிறார்கள்.

    பாட்டி இவ கிட்ட ஒண்ணு சொன்னா இந்த விடுதி பூரா சொன்ன மாதிரி... நீங்க சாந்தாம்மா பத்தி எதுவும் சொல்லாதீங்க.புரியுதுங்களா. அம்மா காதில விழுந்தா வருத்தப் படுவாங்க.

    என்று ஆடர் போட்டுவிட்டுப் போனாள் ஈஸ்வரி. அவளுக்கே அப்படி ஒன்றும் தெரியாது... ஏதோ ஓரளவு தெரியும். சில புதிர் புதிராகவே இருக்கட்டும், என்று நினைப்பவள்.

    அந்த விடுதியில் ஒரு துடிப்பு இருந்தது. முணுமுணுக்கும் பாட்டிகள்... ஆலாபனை செய்யும் பாட்டிகள்... அடம் பிடிக்கும் பாட்டிகள் என்று ரகம் ரகமாக இருந்தார்கள். தொந்தரவு கொடுப்பார்கள். அவர்களே... மரகதம் வந்து பேசிவிட்டுப் போனால்... மெல்ல மெல்ல மனம் லேசாகி இந்த சூழலில் வாழக் கற்றுக் கொள்வர். மரகதம் ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஒரு சொற்பொழிவு நடத்துவாள். விரும்புகிறவர்கள் வந்து கேட்கலாம். அநேகமாக அனைவரும் வருவர். அகிலாப் பாட்டி இவ என்ன லெக்சர் பண்ணறது? என்னை விட நாப்பத்தஞ்சு வயசு சின்னவ... இவ வேதாந்தம் பேசறத நாம கேட்கணுமா?... போகாதீங்க. என்று பிரசாரம் பண்ணினாள். போய் தான் பார்ப்போமே என்னதான் சொல்றாங்கன்னு. என்று போய் விட்டு வந்த சுந்தரி, கீதா, கோமதி பாட்டிகள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். அப்படி என்னதான் சொல்றா, என்று மறைந்து இருந்து பார்த்தாள் அகிலா. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? என்று லெக்சர் பண்ணிக்கொண்டிருந்த மரகதம் பாட... என்ன அம்மா தீடீர்னு பாடறாங்க என்று புரியாமல் விழித்தார்கள். "என்ன பாடறேன்னு பார்க்றேங்களா... வாலி கதை தானே சொலிட்டிருந்தேன்... மறைந்திருந்து ராமன், வாலியும் சுக்ரீவனும் சண்டை இடுவதை பார்த்தான் இல்லையா... அதைத்தான் பாடி காண்பித்தேன், என்று பேச்சைத் தொடர்ந்தாள். அகிலாப் பாட்டி மரகதம் தன்னைக் தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டாள். அவள் காட்டிக்கொடுக்கவில்லை என்ற நெகிழ்வில் மரகதத்தை மரியாதையுடன் பார்த்தாள். மனம் லேசானது. மரகதத்தைப் பற்றிய அவள் அபிப்பிராயம் மாறியது. இங்கு வந்த இந்த பத்து வருஷத்தில் அவள் மரகதத்தின் பல நல்ல குணங்களை கண்டு கொண்டாள். அவள் மனதில் பாசம் ஊறியது. எவ்வளவு சின்னப் பெண் இவ்வளவு மன முதிர்ச்சியுடன் இருக்கிறாள் என்று பெருமைப்பட்டாள். அன்று அவளே பேச்சை ரசித்து கேட்டாள். சேரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். பேச்சை கேட்க கேட்க அப்படியே மரகதத்தின் ரசிகை ஆனாள். மரகதம் சொல்வாள் -

    எல்லாருக்கும், அப்பா பெத்த பாட்டி,அம்மா பெத்த பாட்டின்னு இரண்டு பாட்டிதான் இருப்பாங்க... நான் கொடுத்து வைத்தவள், ஐம்பது பாட்டிகள் எனக்கு

    அந்த விடுதியே ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் மாதிரி இயங்கிற்று. அதற்குக் காரணம் மரகதத்தின் அன்பு.

    பாட்டிகள் அனைவரும் அவளை அம்மா என்று தான் கூப்பிடுவார்கள். தொண்ணூறு வயது பாட்டிக்கும் அவள் அம்மா தான்.

    காலை சிற்றுண்டி முடிந்தது. காபி பருகிக்கொண்டே பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த சந்தானத்திடம் விமலா புலம்பினாள்.

    சாந்தா மதனி இறந்த பதினாறாம் நாள் விஷேசம் நல்லா நடந்ததாம்... நமக்குதான் போக முடியலை.

    இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. அவங்க இருக்கும் போது பாடாப் படுத்திட்டு... செத்த பிறகு ஊரைக் கூட்டி நடத்தற போலி மரியாதைக்கு போகாம இருந்ததுதான் ஓட்டயாப் போச்சாக்கும்... இவங்கல்லாம் மனுஷங்கதானா.?

    ம்க்கும்... ரொம்ப இடுக்கிட்டு வராதீங்க. சொந்தப் பிள்ளைகளே பெத்தவங்களை எங்க கவனிக்கறாங்க.? இந்த மட்டில் கொள்ளி வச்சு பதினாறாம் நாள் காரியத்தையும் பண்ணி மொட்டை வேறு போட்டிருக்கானே சொக்கலிங்கம்... அப்புறம் என்ன?. "அடடா... பெரிய தியாகி தான். ஆமா... அந்த விடுதி

    Enjoying the preview?
    Page 1 of 1