Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pani Thoongum Neramithu
Pani Thoongum Neramithu
Pani Thoongum Neramithu
Ebook179 pages1 hour

Pani Thoongum Neramithu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருணாவின் கல்யாணம் கபிலன் கூட இனிதே நடக்கிறது. ஆனால் அவன் காதலி அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறாள். "ஒரு வருடம் வரை நாம் கணவன் மனைவி ஆக நடிக்க வேண்டும். பின் உன்னை விவாகரத்து செய்துவிட்டு. என் காதலி ரீமாவை கைப்பிடிப்பேன்." என்று முதல் இரவன்றே ஒரு குண்டை தூக்கிப் போடுகிறான் கணவன் கபிலன். அவன் ஏன் அப்படி சொல்கிறான்? எந்த சூழ்நிலை அப்படி பேச வைக்கிறது.? சுவாரஸ்யமான திருப்பங்கள் உள்ளது. நோ.... நான் தான் உங்கள் மனைவி என்று வாதிடுகிறாள் அருணா. அவளா அவன் மனைவி? இல்லை இவளா அவன் மனைவி? யார் மிஸஸ் கபிலன்? போராட்டம் . திகில். காதல், இரக்கம். என்று பனி படலம் போல் சம்பவங்கள் தொடர, இறுதியில் ஜெயிப்பது மனைவியா? காதலியா? பனி தூங்கும் நேரமிது படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580174610663
Pani Thoongum Neramithu

Read more from Sankari Appan

Related to Pani Thoongum Neramithu

Related ebooks

Reviews for Pani Thoongum Neramithu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pani Thoongum Neramithu - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பனி தூங்கும் நேரமிது

    Pani Thoongum Neramithu

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியயாம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 1

    கண்விழித்தாள் அருணா. ஜன்னல் திரை விலக்கிப் பார்த்தாள். அவளுக்குப் பிடிச்ச காலை நேரமிது. செவ்வரளிப் பூக்கள் மேல் பனி சுகமாக தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு குட்டி வெண்முத்து போல் லேசான சூரிய ரேகை பட்டு மினுமினுத்தது. இன்னும் சிறிது நேரத்தில் காணாமல் போகப் போகிறது. பனி தங்கும் நேரம் போலத் தான் மனுஷ வாழ்க்கை

    அருணா... தூக்கத்தை சுமந்தபடி அடுத்த அறையிலிருந்து குரல் கொடுத்தான் கபிலன். கணவன் மனைவி தான் ஆனால் தனித் தனி அறைகளில் தூங்கினார்கள். இவ்வளவுக்கும் புது மணத் தம்பதி!

    .இங்கே வந்து ரெண்டு வாரம் ஆகிவிட்டது. அவள் பயணித்த பாதைகள் சடார் சடாரென்று முடிவுற்று அவளை திருப்பி அனுப்பிவிட்டது. ஒரு நீண்ட பாதையை தேடிக் கொண்டிருக்கிறாள் அவள்.

    மணி ஒன்பது அடித்தது. சாப்பாட்டு மேஜை மேல் தாளம் போட்டபடி அமர்ந்திருந்தான் கபிலன்...

    இன்னிக்கு தோசையா இட்டிலியா? என்று குரல் கொடுத்தான். அருணா சாம்பாரை தாளித்துக் கொண்டிருந்தாள்.

    வெயிட் ப்ளீஸ். டூ மினிட்ஸ். என்றவள் அவனை அங்கிருந்தே நோட்டம் விட்டாள். குளித்து... ஈரத் தலயை துவட்டாமல் உட்காரந்திருந்தான். அவன் அறை குறையாக துண்டால் போர்த்தியிருந்த மார்பில் நீர் முத்தாக உருண்டு ஓடியது. சாப்பாட்டு டிரேயை எடுத்துக் கொண்டு வந்தவள்...

    ஈரத் தலையோட இருந்தா சளி பிடிக்கும். டவல் எடுத்து வரேன். அவள் ஒரு நீல நிற டர்கி டவல் எடுத்து வந்து துவட்ட முயன்றாள்.

    நீ இதெல்லாம் செய்யத் தேவையில்லை மேடம். நான் தான் சொல்லியிருக்கேனே மறந்து விட்டதா? குறை சொல்லும் பார்வை பார்த்தான். அவள் சிரிக்க முயன்றாள். இது என்ன பிடிவாதம்? இது என்ன அபத்தம்.? அவள் தொடக் கூடாதாம்.

    நான் சமைத்ததை மட்டும் சாப்பிடலாமா மிஸ்டர் கபிலன்?

    அருணா மெஸ்ஸில் நான் ஒண்ணும் இலவசமா சாப்பிடலை. என்று சிரித்தான். அவள் மெஸ் நடத்துகிறாளாம் என்ன திமிர் பேச்சு!

    இது உங்களுக்கு மெஸ்சா?. நல்லாயிருக்கு.

    உன் இட்லி சாம்பார் அலுக்கவே இல்லை. சும்மா சொல்லக் கூடாது எக்ஸ்சலண்ட் குக்கிங். பேசாம ஒரு குக்கிங் சேனல் ஆரம்பிச்சுடேன். சப்ஸ்கிரைப் பண்ணுங்க ஷேர் பண்ணுங்கன்னு நீ சொல்லவே வேண்டாம். மில்லியன் வியூஸ் போகும். கிண்டலுக்கு சொல்லலை... நிஜம். என்றான்.

    உங்களுக்கு ஆண்டவன் மனசை வைக்க மறந்திட்டான் ஆனா வாய் ருசியை அதிகமாவே வச்சிட்டான். சாப்பிடுங்க. சாப்பிடுங்க. நான் யுடியூப் சேனல் ஆரம்பிச்சா என்ன டாபிக் தெரியுமா வைப்பேன்? திருமணம் தாண்டிய உறவை விரும்புவது ஆண்களா பெண்களா? என்று பட்டிமன்றம் வைப்பேன். எப்படி சூடான டாபிக் தானே?

    அவன் முறைத்துவிட்டு எழுந்தான். கையை கழுவ வாஷ் பேஷன் சென்றான். அவள் சொன்னாள்

    இட்லி சாம்பார் தான் நல்ல காம்பினேஷன். சென்னா பூரியும் சாம்பாரும் இல்லே. என்றாள்.

    அருணா... நமக்கு இந்த ஊமைக் கல்யாணம் நடந்து ரெண்டு வாரம் ஆகுது. இதோடு நீ மறைமுகமாக என்னை ரெண்டாயிரம் தடவை தாக்கிட்டு இருக்கே. நான் தான் முதல் இரவு அன்றே சொன்னேனே... யு ஆர் நாட் மை ஜோடின்னு.

    ஊமைக் கல்யாணம். இது ஊமைக் கல்யாணாமா? அவள் தன் கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கையிறை எடுத்துக் காட்டினாள். புது மெருகுடன் அது மினுமினுத்தது.

    "இதுக்கு பேர் தாலி. இதைத் தான் நீங்க என் கழுத்தில் அக்னி சாட்சியா, மந்திரம் ஓத, மேளம் கொட்ட, கல்யாண மண்டபத்தில் நிறைந்த சபை முன்னால் கட்டினீங்க. அப்ப இந்த உறவுக்கு என்ன பேர்? நான் ஜோடி இல்லேன்னு நீங்க எப்படி சொல்ல முடியும்? இத கட்டுவதுக்கு முன் நீங்க சொல்லியிருந்தா அதில் நியாயம் இருந்திருக்கும். இப்ப இல்லே. என்னை என்ன செய்யப் போறீங்க?’

    அவன் நீண்ட பெருமூச்சு விட்டான்.

    அது தான் எனக்குத் தெரியலை. யோசிக்கணும். நான் அலுவலகம் போனும். வந்து பேசிக்கலாம். என்றான் அவசரக் குரலில்.

    வந்தும் இதே பதில் தானே தரப் போறீங்க? ஒரு முடிவு சொல்லுங்க. என்னாலே இப்படி தாலியை சுமந்துக்கிட்டு சன்யாசி வாழ்க்கை வாழ முடியாது. எனக்கு என் குழந்தை வேணும். குடும்பம் வேணும். உங்க காதல் வேணும். என்றாள் அழுத்தம் திருத்தமாக.

    என்னை தொந்தரவு பண்ணாதே பிளீஸ் அருணா. இந்தா உன் சுவையான காலை உணவுக்கு. தேங்க்ஸ்... என்று சொல்லி மேஜை மேல் முன்னூறு ரூபாய் வைத்தான். அதை எடுத்து அவன் கண் முன்னாலேயே சாமி உண்டியலில் போட்டாள்.

    இது தான் உங்க பதிலா? உங்களுக்கு வெக்கமா இல்லே? தாலி கட்டி வந்த பெண்ணிடம் பிரேக் ஃபாஸ்ட்க்கு பணம் வைத்துவிட்டுப் போவதுக்கு? ஆண் என்ற திமிரா? இல்லை கேட்க ஆள் இல்லை என்ற மிதப்பா?

    இரெண்டும் இல்லை. பிரின்ஸ் சார்லஸ் எதுக்கு டயானாவை ஒதுக்கினார்? அதே காரணம் தான். ஐ ஆம் இன் லவ் வித் ரீமா.

    நான் டயானா இல்லை. இன்னொருவரை தேடிக்கிட்டுப் போக. உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்... பிகாஸ் ஐ லவ் யு... கடைசி வார்த்தைகளை அவள் மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். மாட்டேன் வரை தான் அவனுக்கு கேட்டது. அவன் அவளைப் பரிதாபமாக பார்த்தான்.

    பனித் துளி நினைச்சா கடல் முத்து போல், ஹாரம் ஆக முடியுமா? வீண் கனவு வேண்டாம் அருணா. பிளீஸ் அன்டர்ஸ்டாண்ட்.

    அவன் கூலாக சொல்லிவிட்டு பிரீப் கேசை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அவள் கண்களின் தளும்பல் கண்டும், காணாதது போல் போய்விட்டான். கார் விரைந்து சென்று விட்டது.

    அவள் சாப்பிடாமல் உட்கார்ந்து விட்டாள். ஒரு வெறுமை அவளை சூழ்ந்தது. கல்யாணத்தன்று இரவு அவளை முதலிரவுக்கு தயார் படுத்திக் கொண்டிருதார்கள் உறவுப் பெண்கள். தாரா அவள் தலையில் மல்லிகைச் சரத்தை சூட்டிவிட்டு ஒற்றை வரி பாடல் ஒன்றைப் பாடினாள்...

    மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா... என்ன அருணா? இந்தப் பாட்டு கொஞ்சம் பழசு தான். ஆனா இது நீ பாட பொருத்தமா இருக்கும். முதலிரவு ஓப்பனிங்க சாங். என்று சிரித்தாள்.

    எனக்கு பயமா இருக்கு டீ... இந்த லட்சணத்தில் நான் பாடவா போறேன்? கேலி பண்ணாம ஏதாவது நல்ல டிப்ஸ் கொடுங்களேன். என்றாள் அருணா. அந்த கும்பலில் சமீபத்தில் திருமணமான உமா சொன்னாள்...

    நிறுத்துங்க டீ. இப்படி சிரிச்சா அவ பாவம் அழுதிடப் போறா. நான் சொல்றேன் அருணா... உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு கேளு. ரொமான்ஸ் அங்கிருந்து ஆரம்பிச்சிடும். என்றாள் உமா.

    ஆளாளுக்கு ஒன்று சொல்ல அருணா பரீட்சைக்கு போகும் மாணவி போல் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள். அவன் கட்டிலில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பழங்கள் இருந்த டீபாயில் அவள் பாலை வைத்தபடி அவன் அருகில் நின்றாள். அப்பொழுதும் அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.

    மல்லிகையின் மணம். அவள் உடுத்தியிருந்த மெல்லிய ஜார்ஜெட் புடவையின் ஃப்ளவர் டஸ்டின் மணம்... அவள் கூந்தலின் ஷாம்பு மணம்==இந்தப் பெண்மையின் எந்த மணமுமா அவன் நாசிக்கு எட்டவில்லை.? ஒரு புன்னகை? ஒரு காதல் பார்வை? ஒரு அணைப்பு?...

    கபிலன் இது நூல் நிலயம் இல்லே. புத்தகம் படிக்க இதுவா நேரம்? என்று சொல்ல நினைத்தாள்.

    அருணா... உன் கிட்டே ஒரு கேள்வி? என்றான் ஒரு வழியாக.

    சொல்லுங்க.

    உன்னை யாரு ஓ. கே சொல்லச் சொன்னது? நீ முடியாதுன்னு சொல்லியிருக்க வேண்டியது தானே?. ரீமாவுக்கு தெரிஞ்சா அவ உயிரையே விட்டிடுவா தெரியுமா? என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். ஹிரோஷிமா நாகசாக்கி மேல் விழுந்த குண்டு போல் அவள் அதிர்ந்தாள். அந்த நாடு அப்ப நாசமான மாதிரி அவள் உள்ளம் நாசமானது.

    யாரு ரீமா? என்றாள்.

    என் அஞ்சு வருஷக் காதலி.

    அவள் திக்பிரமித்து நின்றாள். இது தான் அவளுக்கான முதலிரவா? துக்கம் நெஞ்சை அழுத்தியது. ஏ.சி குளிர்ச்சி சுட்டது. அந்த ரீமா இருக்க வேண்டிய இடத்தில் அவள் இருக்கிறாள். ஓரமாக கட்டிலில் படுத்துக் கொண்டாள்... கண்ணீரை மறைக்க.

    ஐ ஆம் இன் லவ் வித் ரீமா. அஞ்சு வருஷக் காதல் தூக்கிப் போட முடியலை. அவள் இப்ப யூ. எஸ் லே, எம். எஸ் பண்ணிட்டு இருக்கா. ஆறு மாசத்திலே படிப்பு முடிஞ்சுடும். திரும்ப வந்ததும் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு ஆசை ஆசையா நினச்சிருந்தோம். நீ குறுக்கே வந்திட்டே. அவளையே அவன் குற்றம் சொன்னான்.

    நானா குறுக்க வந்தேன்? நீங்க உங்க அப்பாக் கிட்டே சொல்லியிருக்கலாமே.

    எப்படி சொல்ல முடியும் அருணா? அப்பா, டேய் உக்காருடா மணமேடையில். இந்தக் கல்யாணம் நடந்தே ஆகணும்ன்னு சொல்லிட்டார். அத்தனை பேர் முன்னாடி எப்படி அப்பாவுக்கு ஒரு தலை குனிவை ஏற்படுத்த முடியும்? ரீமாவை என்னால் மறக்க முடியாது அருணா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.

    அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

    கபிலன். நான் தாலியை மதிக்கிறேன். அவ்வளவு தான் சொல்வேன்.

    நான் காதலை மதிக்கிறேன். நானும் அவ்வளவு தான் சொல்வேன். ரீமா தான் இந்த ஜென்மத்திலே எனக்கு மனைவி. அவளை மறந்து வாழ என்னால் முடியாது. அவன் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டு தரையில் படுத்துக் கொண்டான். அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவள் நானல்லவா? எப்படி துக்கம் வரும்?

    அன்று இரவு முழுவதும் அருணா தூங்கவில்லை. ஜன்னல் நிலவை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். எண்ணங்கள் ஸ்தமித்துப் போனது. வானத்தில் லேசான வெளுப்பு தெரிந்ததும் எழுந்து கொண்டாள். பாத்ரூம் சென்று ஷவரில் நன்றாக குளித்தாள். அவள் வெளியே வந்தபோது கபிலன் இன்னுமும் உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. எப்படித் தான் உறங்க முடிகிறதோ? நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். அவள் மனசை கொளுத்தி விட்டு இவன் உறங்குகிறான். வெளியே சென்றாள். பெண்கள். அதுக்குள்ளே குளிச்சிட்டா பாரு. எங்கெங்க காயம் இருக்குன்னு நமக்கு தெரியக் கூடாதாம். பலே கில்லாடி நீ அருணா. என்று கேலியில் இறங்கினர்.

    ஆமா... என்னோட காயம் யாருக்கும் தெரியக் கூடாது தான்... அருணாவின் முதலிரவுக் கனவுகள் கருக்கிப் போயின. வெந்து போன மனசு தான் பரிசு.

    அத்தியாயம் 2

    டல்லஸ்சில் டெக்சாஸ் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருதாள் ரீமா. அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளுக்கு ஃபோன் வந்தது. அம்மா தான். அலுப்புடன் எடுத்தாள். அதே புராணம் தான் பாடப் போகிறாள். அந்த வரன் வந்திருக்கு, இந்த வரன் வந்திருக்கு என்ற பல்லவி. இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1