Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indha Manam Unakkaga
Indha Manam Unakkaga
Indha Manam Unakkaga
Ebook232 pages1 hour

Indha Manam Unakkaga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவன் சந்திரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சீதா. அவன் குழந்தைகளை தன் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்தும் அவளை அவன் வீட்டை விட்டு போ என்கிறான்.

அவன் தன் மறைந்த முதல் மனைவி மோகனா வை இன்னும் மறக்கவில்லை ...... அவளோடு தான் வாழ்கிறேன் என்று கண்ணீர் மல்க செல்கிறாள் சீதா. ஆனால் அவனுக்கு ஒரு கடந்த கால இருட்டு இருக்கு. அதை மறைக்க பாடுபடுகிறான். சீதா அவன் காதலுக்காக ஏங்க .....அவளுக்கு அவன் அன்பு கிடைத்ததா.....சீதாவை தொடருங்கள்

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580174610659
Indha Manam Unakkaga

Read more from Sankari Appan

Related to Indha Manam Unakkaga

Related ebooks

Reviews for Indha Manam Unakkaga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indha Manam Unakkaga - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்த மனம் உனக்காக

    Indha Manam Unakkaga

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 1

    சுகமான காற்று ஜன்னல் வழியே அவன் மேல் வீசிற்று. சீதா தூங்கும் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தாமரை நிறத்தில் கனிந்த

    மஞ்சளோடிய நீளவாகான முகம். முப்பத்தைந்து வயதிற்குரிய முதிர்ச்சி தெரியாத இளசான சாயல். மனசில் இவர் ஒரு குழந்தை தான். கெட்டதை கூட புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளும் விஸ்தாரமான மனதாய் அது இருக்கவேண்டும். அன்பு காட்டப்பட்டால் கனிந்து உருக்கி விடுகிற வர்க்கமாய் இருக்க வேண்டும்... என்று அவள் கணித்தாள். இது சரியாக இருக்குமா? திருமணமாகி ஒரே வாரத்தில் எப்படி இவன் குணாதியசத்தை தன்னால் திட்டமிட முடிந்தது!

    இதோ---மனதின் இனிமை முகத்தில் பொலிகிறதே! வாட் எ லவ்லி ஃபேஸ்! சீதாவிற்கு கணவனை மிகவும் பிடித்திருந்தது.

    இன்று ஞாயற்றிக்கிழமை. மணி ஏழு அடித்து பத்து நிமிடம் ஆகியிருந்தது. அவனை எழுப்ப அவள் முயற்சிக்கவேயில்லை. அவனை அன்புடன் பார்த்தாள். தூங்கட்டும்... பாவம், திருமணம் முடிந்த மறுநாளே அவன் வேலைக்கு போகத் தொடங்கிவிட்டான். பத்து வருடங்கள் ஒருத்தியோடு வாழ்ந்துவிட்டவன்.---இன்று இவளோடு புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறான். இந்த மாற்றத்தால் அவன் மனதில் கலக்கமிருக்கும். அதனால் அயர்ச்சி இருக்கும். ஆபிஸில் வேலை பளு வேறு... பாவம் தூங்கட்டுமே! எழுந்து இப்போ என்ன பண்ணப் போகிறான்?

    கரும்பச்சை நிறத்தில் லேஸ் டிசைன் செய்த ஃபிராக் முட்டிவரை ஏறியிருக்க சின்னவள் ஒரு குட்டி அரசி போல் உறங்கிக் கொண்டிருக்கிறாள். பெரியவள் தன் நைட்டி பாதம்வரை மூடியிருக்க, எச்சரிக்கை உணர்வு முகமெல்லாம் பரவ சயனித்திருக்கிறாள். இவள் பயந்த சுபாவம் உடையவளாக இருக்க வேண்டும். இவள் மேல் விரிவான ஒரு அன்பு தனக்குள் சுரப்பதை சீதா உணர்ந்தாள். சின்னவளின் கலைந்த முடியை கோதிவிட்ட சீதா மெல்ல முணுமுணுத்தாள்.

    உங்க அப்பாவை எவ்வளோ புடிக்குமோ அவ்வளோ உங்களையும் பிடிக்கும்.

    எல்லோரும் எழுந்த பிறகு தான் காப்பி கலக்க முடியும். ஆகாரம் தயார் செய்ய முடியும். இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் சீதா சோபாவில் உட்கார்ந்தாள். தலைக்கு குளித்து ஆற்றுக் கட்டல் கட்டியிருந்தாள். சீதாவிற்கு மஞ்சள் பூசி குளிக்கப் பிடிக்கும். கைநிறைய கண்ணாடி வளையல்கள் அணியப் பிடிக்கும். ஜிமிக்கி போட்டுக் கொள்ள பிடிக்கும். சலங்கை மெட்டி போட்டு, சின்ன ஜல் ஜல் சத்தம் கேட்க நடக்கப் பிடிக்கும். இவளுடைய அலங்காரத்தைப் பார்த்து சந்திரன் கேட்டான்-

    நீ ஒரு பட்டதாரி என்று நம்பவே முடியவில்லை. வில்லேஜ் கேர்ள் மாதிரி இது என்ன வேஷம்? சட்டென்று அந்த சமயம் ஏமாற்றமாக இருந்தது.

    இப்ப தான் டிகிரி முடிச்சிருக்கே. கல்லூரியில் படித்த பெண் மாதிரி ஸ்டைலாக இல்லாமல் அடக்கமாக நீ இருப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... என்று அவன் சொல்லவில்லை என்கிற ஆதாங்கம் அவள் கண்களில் ஈரத்தை ஏற்படுத்திற்று. அவளை அவன் அணைத்து தலை வருடிக் கொடுத்தான். எதையோ சொல்ல பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டான். கண்களால் அவன் பார்த்த பார்வை அவளை என்னவோ செய்தது. அதில் காதலும் நிஜமான அன்பையும் அவள் பார்த்தாள். அவன் அவளைப் புரிந்து கொள்ள அவகாசம் கொடுக்க வேண்டாமா? அப்போ அவன் சொல்லக் கூடும்

    இந்த மஞ்சள் நிலா... என் மார்பில் சாய்ந்தால் என் ஆயுசு கூடும். இந்த நினைப்பே அவள் முகத்தை குங்குமம் ஆக்கியது. தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு நிம்மதி அடைந்தாள் சீதா. அவளுக்கு நிம்மதி பிடிக்கும். அதில் பேரின்பம் வரும். வாழ்க்கை இனிமை சொட்ட ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் இருக்கும். இதெல்லாம் நினைத்து சீதா சிரித்துக் கொண்டாள். நிமிர்ந்த போது சுவரில் இவனின் கல்யாண ஃபோட்டோ தெரிந்தது. பத்து வருடம் முந்திய சந்திரன். இப்பொழுது இருக்கும் சதைப்பற்று அப்பொழுது இல்லை. கன்னம் மெலிந்த தோற்றம். தன்னை அடைக்கலமாக தரத் தயாராக இருக்கிற மாதிரி ஒரு தன்மை பளிச்சிட்டது. நடக்க துவங்கி இருக்கும் குழந்தை நம்பிக்கையோடு அம்மாவின் பலதிற்காக கை நீட்டுகிற மாதிரி பாவனை அந்த அப்போதைய சந்திரன் முகத்தில் தெரிந்தது. யாரிடம் அடைக்கலம் கேட்கிறான்?. பக்கத்தில் நிற்கும் அவளிடமா? அவள்----புஷ்டியான முகம். ரொம்பப் பெரிய கண்கள். தெரித்துவிடுவேன் என்று பயமுறுத்தியது. என்னுள் சகலமும் அடக்கம் என்று வாய் சுழிப்பு சொல்லிற்று. இந்தப் பத்து வருடத்தில் அவள் அவன் மனதை எந்த அளவு ஆக்கிரமித்திருக்கக் கூடும் என்று சீதாவால் இன்னும் நிர்ணயிக்க முடியவில்லை. அவள் தான் மோகனா... அவள் பூமியை விட்டு பூப் போல் மறைந்துவிட்டாள். ஆனால் அவன் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். அந்தப் பழைய நினைவுகளை சுத்தமாக அழித்துவிட முடியுமா? அங்கு தன் மீதான அன்பை புதிதாய் நிர்மாணிக்க முடியுமா? இல்லை பழைய அஸ்திவாரத்தின் மேல் தன் புதிய தாஜ்மகாலை எழுப்ப வேண்டுமா? சீதாவால் தீர்மானிக்க முடியவில்லை. அவன் மனதில் இடம் பிடிப்பது அத்தனை சுலபமான விஷயமல்ல என்று மட்டும் பட்டது. இதில் இவள் ஆதரவிற்கு என்று அந்தக் குடும்பத்தில் யாரும் முன் வரப் போவதில்லை. சந்திரனின் விவேகத்தை நம்பித்தான் அவள் வாழ்க்கையின் தரம் அமையப் போகிறது.

    தீடீரென சந்திரனின் குரல் கேட்டது.

    சீதா... என்ன இது? ஏழரை வரை என்னை எழுப்பாமல்... மோகனா இன்நேரம் பாதிக் காலை வேலைகளை முடித்திருப்பாள். இப்படி எங்களைத் தூங்கவே விட்டிருக்க மாட்டாள். அனு, விணு கெட்டப்... சந்திரன் அடித்துப் புரண்டு இப்படி கத்தியதும் சீதா அரண்டு போனாள்.

    இன்று ஞாயறு தானே? மெதுவா எழுந்துக்கட்டுமே என்று தான்... மென்மையாக சிரித்தாள். ஒரு வேளை ஆபிஸ் போகணும் என்று நினைத்துக் கொண்டு இப்படி பேசுகிறானோ என்று ஞாபகப்படுத்தினாள்.

    தெரியுமே. ஞாயற்றுக் கிழமை என்பதால் சோம்பேறியாக இருக்கணுமா என்ன? அவன் பரபரப்புடன் ஹாலுக்கு வந்தான். சீதா நினைத்துக் கொண்டாள் ஃபோட்டோ மோகனா இன்னும் இறக்கவில்லை... மோகனா போட்ட பாதையில் தான் நடக்கக் வேண்டுமா? புதிய மனைவியை கனிவோடு நோக்கி ஒரு புன்சிரிப்பு காட்டக் கூடாதா? கஞ்சப் பிரபு. அன்பில் சிக்கனம் எதுக்கு? தாராளமாக இவளுக்கும் கொஞ்சம் வழங்கக் கூடாதா? அடிபட்ட மனதுடன் சீதா அவனுக்கு பல் துலக்க ப்ரஷ் பேஸ்ட் எடுத்து வந்தாள். இப்பவாவது ஒரு புன்னகை பரிசாக கிடைக்கட்டுமே! திட்டு தான் கிடைத்தது. இந்த மாதிரி சின்னக் குழந்தையாட்டம் என்னை கவனிக்க வேண்டாம். நானே என்னை கவனிச்சுப்பேன். நீ உன் வேலைகளைப் பார். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு நேரம் கழித்து எழுந்தது ஒரு பெரிய குற்றம் மாதிரி நினைத்துக் கொண்டு அவசரமாக பல் துலக்கும் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

    என்ன சீதா முழிக்கிறே? வாசலில் பேப்பர் வந்திடுத்தா பார்... என்றான்.

    இன்று ஞாயிற்றுக் கிழமை தானே மெதுவா எல்லாம் செய்யலாமேன்னு நினைச்சேன். அதான் எழுப்பலை... அதுக்கு போய் கோவிச்சுக்கிறீங்களே... அவன் பதிலேதும் சொல்லவில்லை. அவள் பேப்பர் எடுக்க வாசலுக்கு போனபோது வழியில் அனுவும் விணுவும் எழுந்து கொண்டு தப்பு செய்துவிட்டது போல் விழிப்பதை பார்த்தாள். அவள் பார்வை ஃபோட்டோ மோகனா மேல் விழுந்தது. இந்த மூவர் மனதிலும் மோகனா அழுத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. அனு, விணு சமர்த்தாக பல் விளக்கிவிட்டு அப்பாவின் அருகில் காப்பிக்காக உட்கார்ந்து கொண்டன. சீதா எல்லோருக்கும் சுடச் சுட பொன்னிற நுரை ததும்பும் காப்பியை எடுத்து வந்தாள். சூடான காப்பியை கணவனுக்கு கொடுத்தாள். பின் குழந்தைகள் முன் அமர்ந்து கொண்டு காப்பியை ஆற்ற ஆரம்பித்தாள்.

    பரவாயில்லையே... இந்தப் புள்ளைகளுக்கு நல்ல ஒரு டிசிப்பிளினை கத்துக் கொடுத்திருக்கா மோகனா... என்று பெருமையுடன் கூறினான்.

    விணு... காப்பியை குடி... என்ன இன்னும் சூடா இருக்கா? சீதா எதுக்கு புள்ளைக்கு இப்படி சூடா கொடுக்றே? பார்த்து பதமா கொடுக்கக்கூடாதா? அனு உனக்கு சரியா இருக்கா? காப்பியை உறுஞ்சியபயே சொன்னான். எல்லாம் முடிந்ததும் காலி தம்பளர்களை எடுத்துக் கொண்டு போன சீதாவின் கண்களில் கண்ணீர் தளும்பியது. நீயும் குடியேன் என்று யாரும் சொல்லவில்லை... அவள் என்ன ஹோட்டல் சர்வரா? விட்டால் டிப்ஸ் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கே! புதுசா ஒருத்தி வந்திருக்காளே அவள் கிட்டே இரண்டு வார்த்தை ஒட்டுதலா பேசுவோம் என்று யாருக்குமே தோன்றவில்லையா? சீதா தொண்டை அடைக்க உணர்ச்சி வசப்பட்டு தவித்தாள். தம்பளர்களை மேடை மேல் வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அடக்க முடியாமல் அழகை வந்தது. விக்கி விக்கி அழுதாள். இந்த இருபத்திமூன்று வயதில் சீதா கண்ணீர் விடுவது இது தான் முதல்முறை. கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள். சந்திரன் மேல் முட்டிக் கொண்டாள்.

    என்ன சீதா அழுதியா என்ன? கண்ணெல்லாம் சிவந்திருக்கு. என்னாச்சு? அவன் கனிவோடு கேட்டது அவள் மனதை துள்ள வைத்தது.

    இல்லியே... கண்ணில் தூசி விழுந்திடுச்சு...

    கண்ணிலா மனசில்லா?... சொல்லிவிட்டு அவளை அணைத்து முத்தமிட்டு சிரித்தான். போனஸ் கிடச்ச மாதிரி இருந்தது. அவன் மார்பில் முகம் பதித்து சுகம் கண்டாள். ப்பா... இந்த அன்புக்குத் தானே ஏங்குகிறாள்!

    என்ன சீதா இது? நீ என்ன சின்னக் குழந்தையா? அனு, விணுவிற்கு நீ அக்காவா அம்மாவா? புரிந்து நடந்துக்க மாட்டியா? நீயே குழந்தை மாதிரி என் மூத்த மகளாட்டம் நடந்துக்கிட்டா எப்படி? இன்னும் கொஞ்சம் முதிர்ந்த மனதை உன்னிடம் எதிர்பார்த்தேன்... சரி சரி போ... பிள்ளைகளுக்கு டிபன் ரெடி பண்ணு... சீதா இந்த வார்த்தைகளால் மீண்டும் காயப்பட்டுப் போனாள். சடக்கென்று அவன் மார்பிலிருந்து முகம் எடுத்து விலகினாள். அவமானமாக உணர்ந்தாள். பத்து வருட தம்பதிய வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு அதிகமான முதிர்ச்சி இருந்தது. அவன் பந்தயத்தில் எங்கேயோ தூர தூர ஓடிவிட்டிருந்தான். இவள் இப்பொழுது தான் பந்தயத்தை ஆரம்பிக்கும் கட்டத்தில் இருந்தாள். இந்த இடைவெளி அவர்கள் மனசுகளை எதிர் எதிராக தூக்கிப் போட்டிருந்தது.

    அத்தியாயம் 2

    சந்திரன் அன்று அலுவலக விஷயமாக டூர் கிளம்பிக் கொண்டிருந்தான். வருவதற்கு பத்து நாள் ஆகும் என்று சொல்லியிருந்தான். அவனுடைய உடைகளை நீட்டாக ஐயர்ன் பண்ணி பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருந்தாள் சீதா. ஏழு மணிக்கு பஸ். ஐந்தடித்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்த போது சந்திரன் வந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் சீதாவினுள் ஒரு பரவச சந்தோசம் முட்டி மோதியது. சோபாவில் அமர்ந்து ஷூவை கழற்ற முற்பட்டான். சீதா மண்டியிட்டு அமர்ந்து அவன் காலை தன் மடியில் வைத்து ஷூ லேசை அவிழ்க்கத் தொடங்கினாள். அவன் வெடுக்கென்று காலை இழுத்துக் கொண்டான்.

    மை காட்... என்ன இது நளாயினி ஸ்டைல்? நல்ல தமாஷ். தாங்க முடியலை. டோன்ட் பீ சில்லி சீதா... என்று கடுமையாக சொன்னான். கொஞ்சம் கொஞ்சலாகச் சொல்லியிருந்தால் என்னவாம்? இவ்வளவு கடுமை அவசியம் தானா?. சீதா விசனத்துடன் எழுந்து நின்றாள். நான் என்ன தமாஷா பண்றேன்?. இப்படி சொல்றானே... அவளுக்கு அழுகை வந்தது. அடிபட்ட பறவை போல் பார்த்தாள். அவள் அதிர்ச்சியான ஏமாற்றுப் பார்வை அவனுக்கு சங்கடத்தை கொடுத்திருக்க வேண்டும். மெல்லிய குரலில் சொன்னான்.

    புள்ளைங்க எதிரில் இதெல்லாம் வேண்டாம்னு தான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதே. மேலும் இந்த சேவை எல்லாம் ஓல்ட் பாஷன் சீதா. கல்லூரியில் படிச்சிருக்கே... எப்படி இந்த மாதிரி போன தலைமுறை பழக்கங்களுடன்... இது அடிமைத் தனம். என்னை சுதந்திரமா விடு... என்னை கவனிக்க எனக்கு இடம் கொடு... இதெல்லாம் நீ செய்யனும்னு அவசியமில்லை... ராஜாத்தி மாதிரி இரு.

    அவன் அவளைப் பார்த்து ஆறுதல்படுத்துகிற மாதிரி சிரித்தான். அவளுக்கு சமாதானம் ஆகவில்லை. அவமானமாக உணர்ந்தாள். மறுபடியும் கண்களில் நீர் படலம் தேங்கிற்று. சின்னச் சின்ன ஆசைகளுக்கு கூட கதவடைகிறானே!

    நான் செய்யும் போது ஏன் ரசித்து அனுபவிக்க அவனுக்குத் தெரியவில்லை. சூ... என்று ஏதோ காக்கையை விரட்டுகிற மாதிரியான அவன் செய்கையில் தன் தன்மானம் பாதிக்கப் பட்டதாய் அவள் உணர்ந்தாள். தான் ஆழமாய் தாக்கப்பட்டிருப்பதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் முகத்தை சாதாரணமாக சீக்கிரத்திலேயே வைத்துக் கொண்டாள். அது அவளுக்கு கை வந்த கலை.

    தோல்வி சீதாவுக்கு பிடிக்காது. வாழ்கையில் தோற்று போவது என்கிற உணர்வு தனக்கு வராமல் சீதா தன்னை எப்பொழுதும் காத்துக் கொள்வாள். சின்ன வயதிலிருந்தே சீதா நன்றாகப் படிப்பவள் அல்ல. குறைந்த மார்க்குகள் வாங்கும்போது தான் தோற்று விட்டோம் என்று அவள் புழுங்கியதில்லை. அவளுக்கு படிப்பில் நாட்டம் இல்லை. அதனால் அவள் கஷ்டப்பட்டு படித்ததில்லை. தன்னால் தீவிரமாக முயலப்படாத ஒன்றின் வீழ்ச்சி அவளைப் பாதித்ததில்லை. ஆனால் அவள் விரும்பி ஈடுபடுகிற விஷயங்களில் அவள் நிச்சயம் வெற்றியே பெறுவாள். எனவே கண்ணீர் என்பது அவள் இதுவரை அறிந்ததில்லை. இப்பொழுது முழு ஈடுபாட்டுடன் அவள் சந்திரனை நேசிக்கிறாள். அவனை பிரேமையுடன் கவனித்தும் அவன் காட்டிய அசிரத்தை அவளுக்கு தோல்வி என்கிற கசப்பை காட்டியது. அது முதல் முதலாக அவளைத் தாக்கியது. இப்படிதான் கைக்குமா தோல்வி.? உப்பை மட்டுமே டேஸ்ட் பண்ணியதுபோல் இருக்கே! கசப்பும் கரிப்பும் தான் காதல் கொடுக்கும் என்றால் இந்தக் காதலை விட்டு ஒழித்தால் என்ன? அப்படி விட்டுவிடுவது அவ்வளவு சுலபமா என்ன? அது மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருக்கும். தோல்வியில் கூட இன்பம் இருக்கு என்று நம்ப வைக்கும். அதன்படி சீதா மீண்டும் உயிர்தெழுந்தாள். ச்சே... சராசரி பெண்ணைப் போல் கலங்குவதா? என்றாவது அவள் கவனிப்பை நிச்சயம் அவன் ரசிக்கும் நாள் வரும். அதற்காக அவள் காத்திருப்பாள். அவன் சிரித்தபடி தன் பெண்ணிடம் பேசுவதை அவள் தீராக்காதல் கொண்ட கண்களோடு பார்த்தாள். கண்ணுக்கு எவ்வளவு இன்பம்!.

    Enjoying the preview?
    Page 1 of 1