Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pagal Pol Nilavu...
Pagal Pol Nilavu...
Pagal Pol Nilavu...
Ebook145 pages1 hour

Pagal Pol Nilavu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுஜா..சரவணன் வாழ்க்கையில் பிரிவு வருகிறது. அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? சேர்ந்தார்களா? பவுர்ணமி நிலவு சுஜா... சரவணன் வாழ்க்கையில் ஒரு பரிசு தருகிறது. மறக்க முடியாத அருமையான பரிசு. அது என்ன? படித்துப் பாருங்கள்...

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580174610993
Pagal Pol Nilavu...

Read more from Sankari Appan

Related to Pagal Pol Nilavu...

Related ebooks

Reviews for Pagal Pol Nilavu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pagal Pol Nilavu... - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பகல் போல் நிலவு...

    Pagal Pol Nilavu…

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 1

    மாலை மணி ஐந்து. ஜன்னல் வழியே பார்த்தான் சரவணன். மழை நின்றுவிட்டது தெரிந்தது. அப்ப போகலாம் என்று தீர்மானித்தான். இந்த மழைக்கு சூடாக பக்கோடா பண்ணி கொண்டு வந்தாள் அம்மா ஈஸ்வரி.

    சாப்பிடு சரவணா...உனக்காக பண்ணினேன்...

    தேங்க்ஸ் மா... தட்டில் உள்ள பக்கோடாவை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். ஆகா...என்ன ருசி!

    எப்படிடா இருக்கு? அம்மா கேட்டதும் இவன் முகம் மலர்ந்து……...

    ரொம்ப நல்லாயிருக்கும்மா. நீ செய்றது எல்லாம் நல்லா தானே இருக்கும். உன் கைமணம் அப்படி...

    ஈஸ்வரி முகம் மலர்ந்தது.

    சரிடா எங்கோ கிளம்பிட்டு இருக்கே போலிருக்கு...எங்கேடா?

    ஒண்ணுமில்லேம்மா...மோகன் படத்துக்கு கூப்பிட்டான். அதான் கிளம்பிட்டு இருக்கேன். ரொம்ப வற்புறுத்தறான்... அம்மா மறுத்துவிடுவாளோ என்று பயந்தான். ஆனால் அம்மா அனுமதி கொடுத்துவிட்டாள்.

    வயசு முப்பத்தஞ்சு ஆச்சு, இன்னும் அம்மாவிடம் அனுமதி கேட்டுக் கொண்டு இருக்கும் ஒரே ஆள் நீதாண்டா...என்று மோகன் கேலி செய்திருந்தான்...

    சரி போயிட்டு வா. நீ படம் பார்த்திட்டு வர ராத்திரி பத்தாயிடுமில்லே? இரவு நேரம், பார்த்து வாப்பா. பைக்கில் தானே போறே?

    ஆமாம்மா. மோகன் வீட்டுக்குப் போய், அவனையும் பிக்-அப் பண்ணிட்டு போறேன். சித்ரா என்ன பண்ணிட்டு இருக்கா.?

    உன் தங்கச்சி தானே? மாப்பிள்ளையுடன் பேசிட்டு இருக்கா.? கல்யாணம் அடுத்த வாரம் திங்கள் கிழமை நடக்கப் போவுது. அதுக்குள்ளே என்ன அவசரமோ.? கல்யாணம் நிச்சயமானதிலேயிருந்து மாபிள்ளையோட ஒரே அரட்டை தான். செல்லமாக நொடித்துக் கொண்டாள் ஈஸ்வரி.

    விடும்மா...இதெல்லாம் சகஜம் தானே? சித்ராவுக்கு நல்ல வரன் அமஞ்சுதே. எனக்கு ரொம்ப சந்தோசம். அவள் நல்லாயிருக்கணும்... சரவணன் சொல்லிவிட்டு அம்மாவை நெகிழ்வுடன் பார்த்தான். ஈஸ்வரி முகத்தில் சந்தோஷமும் இருந்தது, சஞ்சலமும் இருந்தது.

    மாப்பிள்ளை வீட்டார் நிறையவே டிமான்ட் பண்ணிவிட்டார்கள். நகை என்று எடுத்துக் கொண்டால் நாப்பது பவுனுக்கு குறையாம போடணும் என்று விட்டார்கள். ஏதோ பவுன் விலை நூறு ரூபாய் என்பது போல...வெள்ளி அயிட்டம் வேணும் என்று அதுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்து விட்டார்கள்...வெள்ளிக் குத்து விளக்கு அதில் பிரதான இடம் பெற்றிருந்தது...கொசுறாக வெள்ளித் தட்டு. மாப்பிள்ளை அதில் தான் சாப்பிடுவாராம். முகூர்த்தப் புடவை, கெட்டி ஜரிகை போட்டதாக வேணும், என்று கடைக்கு வந்து அவர்களே தேர்வு பண்ணி கொடுத்தார்கள். பணம் என்னவோ சரவணன் பாக்கெட்டில் இருந்து தான். கல்யாண மண்டபம்...லொட்டு லொசுக்கு என்று செலவு ஏறிக் கொண்டே போயிற்று. சரவணன் தான் எல்லாம் செய்ய வேண்டும். ஆனால் அவன் கடமைக்காக செய்யவில்லை. பாசத்துடன் தான் செய்கிறான். அவன் குடும்பம் அவனுக்கு உயிர்.

    பெரிய தங்கை அமலாவுக்கு இவன் தான் ஆறு வருடம் முந்தி கல்யாணம் பண்ணி வைத்தான். அமலாவின் மாமியார் வள்ளிமயில் இந்த அளவு டிமான்ட் பண்ணவில்லை. இருபது பவுன் தான் போட்டான். எல்லாமே சிம்பிளாக இருக்கட்டும்...வீண் செலவு எதுக்கு? என்றுவிட்டார்கள். அமலா வங்கியில் வேலை பார்த்ததாலும்...பார்க்க ரதி மாதிரி இருந்ததாலும் மாப்பிள்ளை பையன் பிரபாகரன், இந்தப் பெண் தான் வேண்டும் என்று அடம் பிடித்ததாலும்...கல்யாண செலவு மட்டுப்பட்டது. அவளும் ரெண்டு குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்கிறாள்.

    சித்ரா வேலை பார்க்கவில்லை. டிகிரி வாங்கிவிட்டாள்.

    எனக்கு வேலைக்கு போக விருப்பமில்லை அண்ணா... என்று சொல்லிவிட்டாள். ஒரு தையல் கிளாஸ் போனோம்...ஏதாவது கற்றுக் கொண்டோம் என்று ஒன்றும் இல்லை. சினிமா பாடல் கேட்பது. நாவல்கள் படிப்பது...இது தான் அவள் பொழுது போக்கு. சமையல் அறை பக்கம், அவள் எட்டி கூட பார்த்ததில்லை. அம்மா ஈஸ்வரி அவளை ஒன்றும் சொல்வதில்லை. சரவணன் அவளிடம்...

    சித்ரா காப்பி போட்டுக் கொண்டு வா. அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க இல்லே? என்று கேட்டால்...

    வரேன் அண்ணா... என்பாள். அவன் அலுவலகம் போய் வந்த களைப்பில் மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருப்பான்...காபி வரவே வராது...சித்ரா...என்னாச்சு காபி? என்று கேட்டால்...

    சாரி அண்ணா. மறந்தே போயிட்டேன். இதோ போறேன்... என்பாள். எழுந்து போகவே மாட்டாள். வெறுத்துப் போய் தானே எழுந்து போய் காபி கலந்து கொண்டு வந்து குடிப்பான்.

    அண்ணா...நீயே போட்டுக்கிட்டியா? நான் தான் வரேன்னு சொன்னேனே?... என்பாள், படித்துக் கொண்டிருந்த நாவலின் பக்கத்தை மடிக்கி பிடித்துக் கொண்டு.பரவாயில்ல...நீ உன் நாவலை படித்து முடி. அதில் உனக்கு பரீட்சை நடக்கப் போவுதில்லே.? படி படி... என்று சொல்வான்.

    வீட்டு வேலைக்கும் டிமிக்கி. அலுவலக வேலைக்கும் டிமிக்கி. பார்க்க சதைப் பற்றுடன் களையாக இருப்பாள். ஸ்டைலாக உடை உடுத்திக் கொள்வாள். கொஞ்சம் மாநிறம் தான் என்றாலும் திரும்பிப் பார்க்க வைக்கிற உருவம். அவளை முதல் முதல் பெண் பார்க்க வந்த பிரபாகரன் உடனே ஒ.கே சொல்லிவிட்டான். அவன் அம்மா வள்ளிமயில் சம்மதம் என்று தலையாட்டினாள். அத்துடன் நீண்ட லிஸ்ட் ஒன்றை கொடுத்து விட்டாள்.

    அம்மா...அமலா கல்யாணக் கடனே இப்ப தான் ஒஞ்சிருக்கு. இவங்க இப்படி டிமான்ட் பண்ணினா எப்படி சமாளிக்க முடியும்மா? வேற வரன் பார்க்கலாம். என்றான் சரவணன்.

    சரவணா...நீ சொல்றது சரிதாண்டா. ஆனா உன் தங்கச்சி மனசு வசிட்டாடா. அவளுக்குப் பிடிச்சிருக்கு. குழந்தே சந்தோஷமாக இருக்க வேண்டாமா.? முன்னே பின்னே இருந்தாலும் இந்த வரனை முடச்சிடலாம்டா...என்னவோ உங்க அப்பா இருந்தா நடத்தி வச்சிடுவார். அவர் போய்...நான் இருக்கேன். உன்னை கஷ்டப்படுத்த வேண்டியிருக்கு...சங்கடமாதான் இருக்கு...

    சரிம்மா. உனக்கு எதுக்கு ஆதாங்கம்.? அப்படியே செஞ்சுடலாம். என்று சரவணன் சொல்ல வேண்டியதாகப் போய்விட்டது. கழுத்து முட்டக் கடன். விழி பிதுங்கிற்று சரவணனுக்கு.

    என்னடா இப்படி ஒஞ்சிட்டே? உன் கடமை இத்தோட முடிஞ்சிடுத்து. சந்தோஷமா இரு... என்று உற்சாகப் படுத்தினான் அலுவலக நண்பன் மோகன். இருவரும் ஒரே நேரத்தில் தான் இந்த அலுவலகத்தில் சேர்ந்தார்கள். பன்னிரண்டு வருடமாக நல்ல நண்பர்கள். சித்ரா கல்யாணத்துக்காக மோகன் அஞ்சு லட்சம் கடன் கொடுத்திருக்கான்.

    எப்போ உன் கடனை அடைப்பேனோ தெரியலை... என்று சரவணன் சொன்ன போது, அவன் தோளில் தட்டிக் கொடுத்த மோகன் ஆதுரத்துடன் சொன்னான்.

    எப்ப முடியுமோ அப்ப கொடு. அவசரமே இல்லே. சரவணன் உங்க அம்மா இப்பவாவது உன் கல்யாணத்தை பத்தி பேச்செடுத்தாங்களா? என்றான்.

    எனக்கு கல்யாணத்தில் இண்டரெஸ்ட் இல்லே. உனக்குத் தெரியாதா?...

    தெரியும்டா. சுஜாவை நீ இன்னும் மறக்கலை...

    அப்பா இறந்தபோது எனக்கு பதினாறு வயசு. வீட்டு பொறுப்பு என்னிடம். ரெண்டு தங்கச்சிகள். பத்து வயதில் தங்கை அமலா. அஞ்சு வயதில் தங்கை சித்ரா. எப்படியோ...தத்தி முத்தி கரை சேர்த்திட்டேன். அது போதும். இனி அம்மாவுக்கு நான். எனக்கு அம்மா...காதல் எல்லாம் எனக்கு வரக் கூடாது. என்றான் சரவணன். அவன் முகத்தில் சோகம் தெரிந்தது. அதை மாற்ற எண்ணி தான் மோகன் அவனை படத்துக்கு கூப்பிட்டான்.

    என்னடா இப்ப போய் கூப்பிடறே? சித்ரா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அம்மா விட மாட்டாங்க.

    உன் அம்மாவுக்கு வேற வேலை என்ன? உன்னை பத்தி என்றாவது சிந்திச்சிருக்காங்களா? லோ லோன்னு ஒரு மாசமா கல்யாண வேலையா அலஞ்சு திருஞ்சி எல்லாம் முடிச்சிட்டே. உனக்குன்னு ரிலாக்ஸ் பண்ணிக்க ஒரு என்டர்டேன்மென்ட் வேண்டாமா? நீ வரே. நல்ல படம்... என்று சொல்லியிருந்தான் மோகன்.

    சரவணனுக்கும் அது சரி என்று பட்டது. எப்பொழுதும் மனம் பாரமாக இருந்தது, இந்த ஒரு மாசமாக. சமையல் காண்ட்ராகட். பூ அலங்காரம், பாட்டு கச்சேரி...அது இது என்று பார்த்து பார்த்து செய்து முடித்திருந்தான். எல்லாம் ரெடி. கல்யாண நாளுக்கு முந்திய தினம் மாப்பிள்ளை அழைப்பு. மோகனும் கூட மாட அவனுக்கு உதவி செஞ்சிருந்தான். அவன் மனைவி தாமரை அண்ணா...நீங்க கண்டிப்பா படத்துக்கு போணும்... என்று கட்டளை இட்டிருந்தாள். அவர்கள் குழந்தை அஞ்சு வயசு ரோஷினி அங்கிள்...நீங்க வரலின்னா உங்க கூட பேசமாட்டேன்...அப்பா கூட நீங்க போணும். என்று செல்லமாக பயமுறுத்தியிருந்தாள்.

    சரவணன் பக்கோடா சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். சித்ரா அவசரமாக ஓடி வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1