Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bommai Vizhigal
Bommai Vizhigal
Bommai Vizhigal
Ebook165 pages1 hour

Bommai Vizhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெற்றோருடன் லண்டன் புறப்பட்டு கொண்டிருக்கும் சாருவுக்கு வந்த கடிதம், அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. லக்ஷ்மி அம்மாள் தன் வீட்டை அவள் பேரில் எழுதி வைக்க விரும்புவதாக சொல்கிறார். அவர் யார்? அவருக்கும் தனக்கும் என்ன சம்பதமும் இல்லையே....பின் எப்படி இந்த விசித்திர நோக்கம் அவருக்கு வந்தது .குழம்பு கிறாள் சாரு. தெரிந்து கொள்ள போகிறாள். அஜகான லட்சுமி அம்மாள் திகிலான செயல்களால் பயந்து தப்பிக்கப் பார்க்கிறாள்.

லக்ஷ்மி அம்மாவை நடு இரவில் கத்தியை காட்டி மிரட்டுவது......சாருவின் காதலன் போல் இருக்க, திடுக்கிடும் சாரு......இப்படி திடர்ம் மர்மங்கள். இறுதியில் அவிழும் ரகசியங்கள், படியுங்கள்

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580174610648
Bommai Vizhigal

Read more from Sankari Appan

Related to Bommai Vizhigal

Related ebooks

Related categories

Reviews for Bommai Vizhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bommai Vizhigal - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பொம்மை விழிகள்

    Bommai Vizhigal

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 1

    கண்கவர் வனம் போல் இருந்தது அந்த வீடு. சுற்றிலும் அடர்ந்த மரங்கள். நாங்கள் விண்ணைப் பார்க்கப் போகிறோம் என்று புறப்பட்டுவிட்ட ஏவுகணைகள் போல் அவை உயர்ந்து நின்றன. சூரியன் தன் ஒளியை பாய்ச்ச முடியாமல் திணறியது தெரிந்தது. ஆங்காங்கே காசு காசாய் சூரிய ஒளி, மரங்களின் அடியில் வித்தை செய்திருந்தது. வீட்டுக்கும் தெருவை ஒட்டிய அகல கேட்டுக்கும் நிறைய தூரம் இருந்தது.

    பழைய காலத்து வீடு தான் சாரு, கட்டி ஐம்பது வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். இறங்கு, சுற்றிப் பார்க்கலாம். தாமோதரன் சொல்லிக் கொண்டே காரை விட்டு இறங்கினார்.

    இவ்வளவு பெரிய வீட்டில் தனியாவா இருக்காங்க அந்த லக்ஷ்மிம்மா?.

    என்று சாருமதி வியப்புடன் கேட்டாள். ஒரு கணம் தாமு கண் கலங்கினார். உள்ளுக்குள் லக்ஷ்மியை நினைத்து ஒரு பரிவு ஓடியதோ என்று நினைத்தாள் சாரு. லக்ஷ்மி வீட்டில் தனியாக இருக்கிறாள். அப்படி இருப்பது அவ்வளவு கஷ்டமில்லை. ஆனால் சொந்த பந்தங்களால் புறக்கணிக்கப் பட்டு தனியாக இருப்பது தான் கொடுமை.

    அவங்களுக்கு பூக்கள் என்றால் உயிர். அவங்க நல்லாயிருக்கும் போது இந்த தோட்டத்தை அவங்க தான் பராமரிச்சாங்க. ஒவ்வொரு மரமும் நிழல் மட்டும் தராது, நம்மிடம் சொந்தம் கொண்டாடும்னு சொல்வாங்க. மலர்ந்த பூக்களுக்கு நடுவே தங்க விக்ரகம் போல் அவங்க நிக்கும் போது வானிலிருந்து தேவதை ஒன்று இறங்கி வந்தது போலிருக்கும். அவங்க முகத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்கும். சில பேருக்குத் தான் அந்த தேஜஸ் வரும் சாரு.

    தாமு உணர்ச்சி வசப்பட்டு சொன்னதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

    எனக்கு பதினைந்து வயசாயிருக்கும் போது தான் அவங்களை முதல் முதலாப் பார்த்தேன். என் அம்மாவைப் பார்ப்பது போல் ஒரு ஒட்டுதல் வந்துவிட்டது. எனக்கு கனிந்த ஒரு மாம்பழத்தைக் கொடுத்தாங்க. எவ்வளவு சுவை தெரியுமா சாரு? அதற்கப்புறம் நான் எவ்வளவோ மாம்பழங்கள் சாப்பிட்டிருக்கேன். அந்த ருசி வேறு எதிலும் இல்லை. என்றார்.

    சாருவுக்கு மனம் சுருண்டது. லக்ஷ்மி அம்மாவைப் பற்றி இவ்வளவு சிலாகித்து சொல்கிறார் வக்கீல். ஆனால் அவள் அப்பா சுந்தரேசன் வெறுப்புடன் சொன்னார்.

    இவங்களை எல்லோரும் தலை மூழ்கிட்டதா சொல்றாங்க. இவ்வளவு வருஷம் கழித்து எங்கிருந்து வந்தாங்களோ? நீ அவங்களைப் பார்த்துக்கப் போறேன்னு பிடிவாதம் பிடிக்கிறே. எனக்கு இஷ்டமில்லை சாரு.

    அப்பா... அவங்க வீட்டை எனக்கு எழுதி கொடுத்திட்டாங்க. அவங்க முகத்தைக் கூட நான் பார்த்ததில்ல. ஏன் அவங்களைப் பத்தி கேள்விப்பட்டதும் இல்லை. அவங்க என் பேரில் எதுக்கு அக்கறை காட்டணும்? எனக்கு அவங்க வீட்டை ஏன் எழுதித் தரணும்? காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்காகத் தான் போறேன். அவங்களுக்கு பிள்ளை இல்லை. கணவன் இல்லை. குடும்பம் இல்லை. உடம்பு சரியில்லாமல் இருக்காங்க. முதல்லே என்னன்னு பார்த்திட்டு வரேன். ப்ளீஸ் அப்பா. என்று கெஞ்சலாகக் கேட்டாள் சாரு.

    சாரு பிடிவாதம் பிடித்து தான் தாமோதரனோடு கிளம்பி வந்துதிருக்கிறாள். அவள் அம்மாவுக்கும் இது பிடிக்கவில்லை.

    எவளோ ஒருத்தி ஊர் பேர் தெரியாதவ உன் பேருக்கு கோடிக் கணக்கில் உள்ள சொத்தை எழுதி வைப்பதென்றால் என்ன அர்த்தம்? இதில் ஏதோ வில்லங்கம் இருக்கு. ஏதோ ஆபத்தும் இருக்கு. நமக்கு வேண்டாம் அந்த சொத்து. என்று மகளிடம் வாதாடினாள் விமலா. தாமோதரன் உடன் இருந்தார். அவர் சொன்னார்.

    அம்மா... லக்ஷ்மி அம்மாவை எனக்கு ஓரளவு தெரியும். சின்ன வயதில் நாங்க மதுரையில் இருக்கும்போது அவங்க குடும்பம் அடுத்த வீடு. ரொம்ப நல்ல குடும்பம். லக்ஷ்மி அம்மாவோட அப்பா தியாகராஜன் ஒரு கண் டாக்டர். சொந்தங்கள் யார் வந்தாலும் இலவசமாக கண் சிகிச்சை செய்வார். பெரும் வள்ளல். அவங்க அம்மா மோகனா, அவருக்கு ஏத்த மனைவி. கருணையே வடிவானவங்க. அவங்க வீட்டில் நான் நிறைய தரம் சாப்பிட்டிருக்கேன். எது செய்தாலும் அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு சமயம் ஒரு மாம்பழம் கொடுத்தாங்க அவ்வளவு ருசியா இருந்தது. அந்த மாதிரி ருசி இதுவரை வேறு எந்த மாம்பழத்திலும் இல்லை. கடவுள் பக்தி ரொம்ப உண்டு. லக்ஷ்மி அம்மாவுக்கு ஒரு அண்ணன் உண்டு. பெயர் கணேஷ். அவர் தான் ஒரு மாதிரி. சிடு சிடுன்னு விழுவார். அப்பாவும் அம்மாவும் தாராளமா இருக்கறது அவருக்குப் பிடிக்காது... நாங்க அப்புறம் வீட்டை காலி செய்திட்டு போயிட்டோம். அதற்கு பிறகு அவங்க பத்தி எந்த தகவலும் எனக்குத் தெரியாது... இப்ப தான் ஆறு மாசம் முந்தி என்னை தேடித் பிடித்து போன் பண்ணாங்க. தனக்கு உடம்பு முடியலை... இந்த வீட்டை சாருமதி பேரில் எழுதி வைக்கப் போறேன். நீங்க அவங்க வக்கிலாமே... நீங்க தான் போய் அவங்க கிட்டே சொல்லனும்னு சொன்னாங்க.

    அது சரி அவங்களுக்கு என் பொண்ணு பத்தி எப்படித் தெரியும்? அவங்களுக்கும் இவளுக்கும் என்ன உறவு? அவங்க சொந்தம் யாராவது வந்து இந்த சொத்துக்கு நான் தான் வாரிசுன்னு சொன்னா என்ன செய்யறது?

    கேள்வி கேட்டபடி காப்பி கலந்து சூடாக வைத்தாள் சாருமதியின் அம்மா விமலா.

    அதை உறுஞ்சிக் குடித்து விட்டு பேஷான காப்பி... என்றார்.

    விவரமெல்லாம் நானும் கேட்டேன். அவங்க சொன்னாங்க. இது என் சுய சம்பாத்தியம். நான் யாருக்குவேனா எழுதி வைக்கும் உரிமை எனக்கு இருக்கு. எனக்கு பிள்ளை இல்லை குட்டி இல்லை. கணவர் இறந்துவிட்டார். அது முதல் நான் இந்த மலர் வனத்தில் தான் தனியே இருக்கேன்... அப்படின்னு சொன்னாங்க. சாரு உங்களுக்கு என்ன உறவுன்னு கேட்டேன். மகள்னு வச்சுக்கோங்களேன்னு சொல்லிட்டாங்க. வேற எந்த விளக்கமும் சொல்ல அவங்க தயாரா இல்லை.

    சாருவின் அம்மா விமலாவும் அப்பா சுந்தரேசனும் இது பற்றி விவாதம் பண்ணி முடிவில் இந்த சொத்து வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். அப்புறம் லக்ஷ்மியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதை தாமோதரன் தான் கொண்டு வந்து கொடுத்தார். பிரித்துப் பார்த்தார்கள். படித்ததும் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள்.

    இது கடிதமா இல்லை உருக்கமான வேண்டுகோளா என்று தெரியவில்லை. பேசாமல் நின்றார்கள்.

    அப்பா... அந்தக் கடிதத்தை இப்படிக் கொடுங்கள்...

    சாரு வாங்கிப் படித்தாள். அவள் கண்ணோரம் ஒரு இனுக்கு நீர் சேகரமாகி மினுமினுத்தது. எவ்வளவு அடி பட்டிருந்தால் இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருப்பாங்க என்று தோன்றியது. அந்த நிமிஷமே அவள் தீர்மானித்தாள் அவங்களை போய் பார்ப்பது என்று. வாய் விட்டும் சொன்னாள்.

    அம்மா... அப்பா நான் லக்ஷ்மி அம்மாவைப் போய் பார்க்கிறேன். பிறகு தீர்மானிக்கலாம் அந்த வீட்டை நான் ஏற்றுக் கொள்வதா வேண்டாமான்னு... கடிதத்தை மடித்து தன் ஹான்ட் பாகில் வைத்துக் கொண்டாள்.

    அவசரப்பட்டு முடிவு பண்ணாதே சாரு. எனக்கு பயமா இருக்கு. எந்த புத்தில் எந்தப் பாம்பு இருக்கும்னு யாருக்குத் தெரியும்? என்றாள் விமலா. சுந்தரேசன் மனைவி சொல்வதை ஆமோதித்தார்.

    ஆமாம்மா. எதுக்கு வம்பு? நாம என்ன வீடு வாசல் சொத்து இல்லாதவங்களா? பேசாமல் அவங்களை இந்த வீட்டை ஒரு அநாதை இல்லத்துக்கு எழுதி வைக்கச் சொல்லுங்க தாமோதரன். முன்னே பின்னே தெரியாதவங்களோட சொத்து எதுக்கு?

    சாரு யார் சொல்வதையும் கேட்கவில்லை. அவள் படிப்பை முடித்துவிட்டிருந்தாள். வேலை தேடிக் கொண்டிருந்தாள். இப்போ கல்யாணம் வேண்டாம் இரண்டு வருஷம் போகட்டும் என்று சொல்லிவிட்டாள். அம்மாவும் அப்பாவும் அக்கா ஊர்மிளாவின் பிரசவத்துக்காக லண்டன் போகிறார்கள். அவளும் போவதாக இருந்தது. இப்பொழுது சாரு அவர்களுடன் போகப் போவதில்லை லக்ஷ்மி அம்மாவுடன் இருக்கப் போவதாக சொல்லிவிட்டாள்.

    அப்பா... ப்ளீஸ். நீங்களாவது சம்மதியுங்கள். சாகப் போகும் ஒரு உயிர்... சொந்த பந்தம் இல்லாத ஒரு தனி மனுஷி. தன் பக்கத்தில் சாகும் போது நான் இருக்க ஆசைப்படுவதாக வேண்டி கேக்றாங்க. மாட்டேன்னு சொல்ல எனக்கு மனசு வரலை. எனக்கு வீடு வேண்டாம். அவங்க கூட அவங்க சாவு வரை ஆறுதலா இருக்க ஆசை. தடுக்காதீங்க.

    சாரு மனசில் லக்ஷ்மி உட்கார்ந்து விட்டாள். ஆனால் இயற்கையாகவே சாரு கருணை மனம் கொண்டவள். அவளுக்கு கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. யார் எப்படி என்ற சந்தேகம் இருக்கத் தான் செய்தது. இருந்தாலும் அந்தக் கடிதம் அவளை கட்டிப் போட்டு விட்டது. தன் ஈகோ விட்டு ஒருவர் கெஞ்சும் போது நோ என்று முகத்தில் அடிப்பது போல் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை.

    இதோ இங்கே வந்தாகிவிட்டது. தோட்டம் பார்க்க அழகாக இருந்தது. இங்கு விதம் விதமான ரோஜாக்கள் தலையாட்டி சிரித்தது, கண் கொள்ளாக் காட்சி. வாசனை அள்ளிக் கொண்டு போயிற்று. தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் போது ஒரு தாமரைக் குளம் வந்தது. அப்படியே நின்றுவிட்டாள் சாரு. தாமரை மொக்குகள் இரவு விளக்கு போல் கூம்பியிருந்தது. ஒரு மெல்லிய வெளிச்சம் பரப்பிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. இரண்டு மலர்ந்த தாமரை மலர்கள் அந்த குளத்துக்கே நகை போல் இருந்தது.

    சாருவுக்கு லக்ஷ்மிம்மாவின் கடிதம் மனதிற்குள் ஓடியது. அந்தக் கடிதம் மிகவும் வித்தியாசமானது.

    அதன் ஒவ்வொரு வரியும் அவளுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.

    அன்பான சாருவுக்கு...

    Enjoying the preview?
    Page 1 of 1