Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irulil Tholaintha Unmai
Irulil Tholaintha Unmai
Irulil Tholaintha Unmai
Ebook124 pages51 minutes

Irulil Tholaintha Unmai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொது ஜன சேவை சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் சாரதா பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறாள். இவள் லாவண்யாவிற்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து அவளை மீட்டெடுத்தாளா? இல்லையா? அதன் பின் லாவண்யாவின் வாழ்க்கையில் என்ன நேர்ந்தது என்பதை 'லக்ஷ்மி'யின் 'இருளில் தொலைந்த உண்மை' கதையில் காணலாம்.

Languageதமிழ்
Release dateMay 20, 2023
ISBN6580155608799
Irulil Tholaintha Unmai

Read more from Lakshmi

Related to Irulil Tholaintha Unmai

Related ebooks

Reviews for Irulil Tholaintha Unmai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irulil Tholaintha Unmai - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இருளில் தொலைந்த உண்மை

    Irulil Tholaintha Unmai

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    அது என்ன சத்தம்...? படுக்கையறைக்குள் புகுந்து தரையை விலக்கி ஜன்னல் வழியே வெளியே கவிந்து நின்ற இருளில் கண்களை ஊன்றிப் பார்த்தாள் சாரதா. ஒரு பறவையின் கழுத்தை யாரோ முறிப்பது போன்ற கிரீச்சென்ற அலறல்... தொடர்ந்து கேட்டபோது அவள் மேனி பயத்தில் நடுங்கியது... நெஞ்சு படபடத்தது. அவர்கள் வசித்த குடியிருப்புப் பகுதிக்குப் பின்னால் புதிதாக உருவாகிக் கொண்டு பாதி கட்டிய நிலையில் கையை விரித்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி நின்ற அசுரன் போன்ற அந்தக் கட்டடத்தின் வழிப் பகுதியிலிருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. கட்டட வேலையாட்கள் எல்லோரும் பொழுது அமரும் முன்னரே புறப்பட்டுப் போய்விட்டனர். கட்டடத்தை காவல் பார்த்துக் கொண்டிருந்த மேஸ்திரியின் அறையில் வெளிச்சத்தைக் காணவில்லை. அடிக்கடி அவன் அந்தி வேளையில் வெளியே போய்விடுவதை அவள் கவனித்திருக்கிறாள். பல லட்சங்களைப் போட்டு சிமெண்டையும் செங்கற்களையும் வாங்கிக் குவித்துவிட்டு... காவலுக்கு ஆள் இருக்கிறான் என்ற தெம்பில் கட்டட வேலையை மேற்கொண்ட காண்டிராக்டர் ஆட்களை அனுப்பியதும் தனது அம்பாசிடர் காரில் புறப்பட்டுப் போனதை அவள் மாலை ஜன்னல் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதே கவனித்து விட்டிருந்தாள்.

    யாரும்... காவல் காக்காது... தன்னந் தனியே... இருளில் மூழ்கிக் கிடந்த அந்தக் கட்டடத்தின் கீழ்ப் பகுதியிலிருந்துதான் அந்த அலறல் சத்தம்... காவலாளி இரவு சமையலுக்குக் கோழியின் கழுத்தை ஓசைப்படாது திருகுகிறானோ...?

    இல்லை... இல்லை மனிதக் குரல் போல... முக்கலும் முனகலும்... கேட்கிறதே... அவளுக்கு மட்டுமே தான் கேட்கிறதா...? அந்தக் குடியிருப்புப் பகுதியில் மற்ற பிளாட்டுகளில் வசிப்பவர்கள் காதுகளில் சத்தம் ஏதும் கேட்க வில்லையோ...?

    எப்படிக் கேட்கும்...? கலர் டெலிவிஷன் வாங்கி விட்டிருப்பவர்கள் வீட்டிலிருந்து ஏகப்பட்ட சத்தம்...

    ஸ்ரீலங்காவைப் போட்டுப் பாரு... என்ற கூச்சல்... போதாததிற்கு அன்று ஞாயிற்றுக்கிழமை...

    கலர் டி.வி. இருந்தவர்கள் இந்திப் படத்தை வண்ணத்திலும் மற்றவர்கள் கருப்பு வெள்ளையிலும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்த சமயம். அப்படி ஒன்றும் நேரம் அதிகமாகிவிடவில்லை... ஜன்னல் திரையை மீண்டும் மூடி விட்டுப் பெருமூச்செறிந்தபடி... படுக்கையறை விளக்கைப் போட்டாள். கடிகாரத்தைப் பார்த்தாள். ஏழு பதினைந்துதான் ஆகிக் கொண்டிருந்தது. பக்கத்திலே கொலையே நடந்தால் கூட காதில் போட்டுக் கொள்ளாது அவரவர் பிளாட்டுக்குள்ளே அடங்கிப் போகும் சுயநலத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    அந்தக் குடியிருப்பின் கேர் டேக்டர் சந்தானத்திடம் கூட அவள் ஒரு நாள் சொல்லியிருந்தாள்.

    பின் பக்கம் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய கட்டடம் முடியும் வரை... அந்தப் பகுதியில் ஒரே இருட்டு... ஊரில் திருட்டு அதிகமாகிக்கொண்டு வருவதால் அவர்களது பிளாட்டின் பின்னால் ஒரு குழல் விளக்கைப் பொருத்தி இரவு முழுவதும் எரியச் செய்தால் நன்மையாக இருக்கும்.

    மத்தவங்க ஒத்துக்கணுமே, கரண்ட் கட் சமயத்திலே இதெல்லாம் நடக்கிற சங்கதியா? கையைவிரித்து விட்டான் சந்தானம்.

    நகரத்திலே இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கும் கட்டடக் காய்ச்சல் அந்தப் பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

    ஸர் சதாசிவத்தின் பெயரைத் தாங்கிக் கொண்டு ஓடிய சாலையின் திருப்பத்திலேயே, முன்பு ஒரு பள்ளமும், சில ஓட்டுக் கட்டடமும் இருந்த இடத்தில் இப்போது திடீரென்று காளான்கள் போல ஒரு பெரிய குடியிருப்புப் பகுதி கிளம்பி விட்டிருந்தது. வெற்று பூமியையும் பழைய பங்களாக்களையும் வாங்கி இடித்து நிரவி ஏழடுக்கு, பத்தடுக்கு என்று ஃபிளாட்டுகளும் நெருப்புப் பெட்டிகளை அடுக்கினாற் போல சிறு தனி வீடுகளும் கட்டிக் கொள்ளை லாபம் கொழித்துக் கொண்டிருந்த ஏகநாதன் அண்ட் பிரதர்ஸ் நிறுவனம் கட்டிய குடியிருப்பு பகுதிதான் அது. காவேரி நர்மதா மான்ஷன் என்ற அந்தக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், பின் பக்கம் பார்த்தபடி காலியாக இருந்த அந்த இரண்டு படுக்கையறை கொண்ட சிறிய ஃபிளாட்டை இரண்டரை லட்சம் கொடுத்து வாங்கிவிட்டிருந்தாள். அவளும் அவள் கணவரும், வேலைக்குப் போய் வந்த, பிள்ளை பேறு இல்லாத தம்பதிகள்.

    வெகு காலம் பம்பாயிலேயே வசித்தவர்கள். அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்மட்டத்து அதிகாரியாக இருந்தார்.

    அவள் ஒரு அலுவலகத்தில் கணக்கராக வேலை பார்த்து வந்தாள். ஒரே படுக்கையறை கொண்டதொரு ஃபிளாட்டில்தான் நீண்ட காலம் வசித்து வந்தனர்.

    பம்பாய் வாசத்தின் நெருக்கம், அவசர வாழ்க்கை எல்லாம் அலுத்துப் போய்விட்டிருந்தது. கணவர் மறைவுக்குப் பின் அவளும் வேலையிலிருந்து ஓய்வடைந்ததும் சென்னைக்கு வந்து குடியேறிவிட்டாள்.

    என் வீட்டில் வந்து எங்களுடன் தங்கிவிடு என்று தம்பி பல முறை அழைத்ததை மறுத்துவிட்டாள்.

    கூடப் பிறந்த அக்கா இனி தனிமையில் என்ன செய்யப் போறே? வேலையும் இல்லை. ஓய்வா, ஒருபிடி சாப்பிட்டுவிட்டு மீதிக்காலத்தை எங்களுடன் ஓட்டிவிடு தங்கை எத்தனையோ சொல்லிப் பார்த்தாள். உறவினர்களுடன் அதிகம் நெருக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது... சௌக்கியமா என்று கேட்குமளவுக்கு விலகியே இருப்பது நலம் என்பது அவள் கொள்கை. மேலும் இத்தனை ஆண்டுகள் அவள் வீட்டுக்கு அவளே ராணியாக வாழ்ந்து விட்டு இப்போது பிறர் தயவில் வாழ அவளுக்கு விருப்பமே இல்லை.

    நீங்கள் எல்லாம் சென்னையில் இருக்கும்போது நான் எப்படி தனியாகி விடுகிறேன். அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். கவலை வேண்டாம். ஒண்டியாக வசித்து எனக்கு பழக்கமாகிவிட்டது ரொம்பப் பிடிவாதமாக உறவினர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டு... அந்தப் ஃபிளாட்டில் குடியேறி விட்டிருந்தாள்.

    காலை ஒரு வேளை மட்டும் பால் பொட்டலங்களை வாங்கித் தந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பாத்திரம் துலக்கி, துணி துவைத்து காயப் போட்டுவிட்டு அந்தப் பக்கமிருந்த மற்ற ஃபிளாட்டுகளுக்கு வேலைசெய்ய ஓடி விடுவாள் வேலைக்காரி மருதாயி.

    அதைப்பற்றி அவள் கவலைப்பட்டதில்லை. அதற்கு மேல் அவளுக்கு வேலைக்காரியின் துணையும் தேவையாக இருக்கவில்லை.

    காலை பத்து மணிக்குள் சமையலை முடித்துக் கொண்டு முன் அறையில் பத்தரிக்கைகளுடன் உட்கார்ந்து விடுவாள்.

    அருகிலிருந்த நூல் நிலையத்திலிருந்து வாரம் ஒரு முறை அள்ளிக் கொண்டு வரும் வார - மாத இதழ்கள், நாவல்கள் முதலியவற்றைப் படித்து முடிக்கப் பொழுது இருக்காது. சாப்பிட்ட பின்னர் ஒரு சிறு குட்டித் தூக்கம் பின்னர் தேநீர் அருந்திவிட்டு முகம் கழுவி, வேறு உடை மாற்றிக் கொண்டு கையில் பிளாஸ்டிக் கூடையுடன் காய்கறிக் கடைக்குப் புறப்பட்டு விடுவாள். அப்படியே சாலையின் கோடியிலிருந்த சர்வசக்தி விநாயகர் கோவிலுக்குப் போய்விட்டு விளக்கு வைக்கும் வேளைக்குத் திரும்புவது வழக்கம். சிறிது நேரம் டெலிவிஷன் பார்ப்பாள். கொஞ்சம் டேப் ரிக்கார்டரில் பஜனை சங்கீதம் கேட்பாள். கொஞ்ச நேரம் ரேடியோவுடன் உட்கார்ந்து விட்டு, இரவு ஒன்பது மணியளவில் சாப்பிடுவாள். பின்னர் ஆங்கிலச் செய்தியை டெலிவிஷனில் பார்த்து

    Enjoying the preview?
    Page 1 of 1