Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Urvalangal
Kanavu Urvalangal
Kanavu Urvalangal
Ebook356 pages2 hours

Kanavu Urvalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கனவுகள் காணாத மனிதர்கள் அபூர்வம். எண்ணங்களின் எண்ணக் கூடுகள் தான் சில சமயங்களில் கனவுகளாகப் பரிணமிக்கின்றன. கனவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. என்ன கனவைக் கண்டோம் என்று விழிப்புற்ற பின்னர் நினைவுக்கு வருகிறதே அது தான் மானிடத்தின் நுட்பமான சிறப்பு.

கனவுகள் எண்ணங்களுக்குத் தக்கபடி மாறுபடுகின்றன. பருவங்களுக்குத் தக்கபடி வித்தியாசப்படும் கின்றன. வயதான ஒருவர் காணும் கனவு ஆன்மிக சம்பந்தப்பட்டவைகளாக - முதிர்ச்சியடைந்த மன நிலையைக் காட்டுவனவாக இருக்கும்.

இளைஞர்கள் காணும் கனவுகள்...

அவைகள் தொடர் ஊர்வலங்கள்...

இங்கே “கனவு ஊர்வலங்களின் கதாநாயகி” சத்யா, காதல் கனவுகளைக் காண்கிறான்.

கனவின் நாயகன் பணக்காரன் கெளசிக். அவனும் சத்யாவை மணக்க ஆசைப்படுகிறான்.

“காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே - கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே” என்ற கண்ணதாசனின் கவிதைக்கு இவர்கள் உதாரணம். காதலர்களின் காதலுக்குத்தான் கண்ணில்லை. கெளசிக்கின் பணக்கார பெரியம்மாவுக்கும் - கெளசிக்கின் அப்பாவுக்கும் கண்கள் இருந்தன - அந்தஸ்தைப் பார்க்கும் அளவு கோலாக.

இத்தனைக்கும் அப்பா தேவநாதன் ஏழையாக இருந்து சிறிது வசதியான பெண்ணை மணந்து தன் முயற்சியால் பணக்காரர் ஆனவர். அவருக்குப் பணத்தைத் தவிர வேறு எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை.

சத்யாவை நெருங்கும் மகனை சதுரங்கக் காயை நகர்த்துவது போல் நகர்த்தும் சாமர்த்தியம் பணக்காரர்களுக்கே படரிய கை வந்த கலை. மகளின் காதலைத் தெரிந்து கொண்ட ஏழைத் தாயார் சாவித்ரி படும் மன வேதனை...

ஏற்பாடு செய்யப்பட்ட - கல்யாணம் நின்று போனதற்குக் காரணம் தெரியாமல் தவித்த தவிப்பு...

காதலர்கள் கனவு ஊர்வலம் வருகிறார்கள்... ஆனால், இந்த ஊர்வலத்தின் வெளியே நின்று பெற்றவர்கள் தவிக்கும் தவிப்பு...

இவர்களுக்கு நடுவில் குறுக்கிடும் கதாபாத்திரங்கள்...

என் வாசகர்களே! ‘போதும்... கனவு ஊர்வலத்திற்குள் நாங்கள் நுழைய வேண்டும். இதற்கு மேலும் போக வேண்டாம்’ என்கின்றீர்களா! உங்கள் வார்த்தைக்கு நான் கட்டுப்பட வேண்டியவள் தானே!

என்றென்றும் அன்புடன், லட்சுமி ராஜரத்னம்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704090
Kanavu Urvalangal

Read more from Lakshmi Rajarathnam

Related to Kanavu Urvalangal

Related ebooks

Reviews for Kanavu Urvalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Urvalangal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    கனவு ஊர்வலங்கள்

    Kanavu Urvalangal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    என்னுரை

    கனவுகள் காணாத மனிதர்கள் அபூர்வம். எண்ணங்களின் எண்ணக் கூடுகள் தான் சில சமயங்களில் கனவுகளாகப் பரிணமிக்கின்றன. கனவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. என்ன கனவைக் கண்டோம் என்று விழிப்புற்ற பின்னர் நினைவுக்கு வருகிறதே அது தான் மானிடத்தின் நுட்பமான சிறப்பு.

    கனவுகள் எண்ணங்களுக்குத் தக்கபடி மாறுபடுகின்றன. பருவங்களுக்குத் தக்கபடி வித்தியாசப்படும் கின்றன. வயதான ஒருவர் காணும் கனவு ஆன்மிக சம்பந்தப்பட்டவைகளாக - முதிர்ச்சியடைந்த மன நிலையைக் காட்டுவனவாக இருக்கும்.

    இளைஞர்கள் காணும் கனவுகள்...

    அவைகள் தொடர் ஊர்வலங்கள்...

    இங்கே கனவு ஊர்வலங்களின் கதாநாயகி சத்யா, காதல் கனவுகளைக் காண்கிறான்.

    கனவின் நாயகன் பணக்காரன் கெளசிக்.

    அவனும் சத்யாவை மணக்க ஆசைப்படுகிறான்.

    காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே - கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே என்ற கண்ணதாசனின் கவிதைக்கு இவர்கள் உதாரணம்.

    காதலர்களின் காதலுக்குத்தான் கண்ணில்லை. கெளசிக்கின் பணக்கார பெரியம்மாவுக்கும் - கெளசிக்கின் அப்பாவுக்கும் கண்கள் இருந்தன - அந்தஸ்தைப் பார்க்கும் அளவு கோலாக.

    இத்தனைக்கும் அப்பா தேவநாதன் ஏழையாக இருந்து சிறிது வசதியான பெண்ணை மணந்து தன் முயற்சியால் பணக்காரர் ஆனவர்.

    அவருக்குப் பணத்தைத் தவிர வேறு எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை.

    சத்யாவை நெருங்கும் மகனை சதுரங்கக் காயை நகர்த்துவது போல் நகர்த்தும் சாமர்த்தியம் பணக்காரர்களுக்கே படரிய கை வந்த கலை.

    மகளின் காதலைத் தெரிந்து கொண்ட ஏழைத் தாயார் சாவித்ரி படும் மன வேதனை...

    ஏற்பாடு செய்யப்பட்ட - கல்யாணம் நின்று போனதற்குக் காரணம் தெரியாமல் தவித்த தவிப்பு...

    காதலர்கள் கனவு ஊர்வலம் வருகிறார்கள்... ஆனால், இந்த ஊர்வலத்தின் வெளியே நின்று பெற்றவர்கள் தவிக்கும் தவிப்பு...

    இவர்களுக்கு நடுவில் குறுக்கிடும் கதாபாத்திரங்கள்...

    என் வாசகர்களே! ‘போதும்... கனவு ஊர்வலத்திற்குள் நாங்கள் நுழைய வேண்டும். இதற்கு மேலும் போக வேண்டாம்’ என்கின்றீர்களா!

    உங்கள் வார்த்தைக்கு நான் கட்டுப்பட வேண்டியவள் தானே!

    என்றென்றும் அன்புடன்

    லட்சுமி ராஜரத்னம்

    1

    கார் காலத்துக் கரு முகில்கள் வெண் முகில்களை மறைத்துக் கொண்டு வந்தன. ஐந்து மணிக்கே ஆறு மணி போல் இருட்டிக் கொண்டு வந்தது பொழுது. தங்கையின் கல்லுாரி அஸைன்மெனளட்களை எழுதி முடித்த சத்யா விரல்களைச் சொடுக்கிக் கொண்டாள். எதுவும் மனதில் பதியாத ஈயடிச்சான் காப்பி.

    சத்யா, கோயிலுக்குப் போகல்லே? மழை வர்ற மாதிரி இருக்கே? அம்மாவின் குரல் கேட்டு எழுந்தாள்.

    இதோ போறேம்மா.

    அவசரமாகக் குளியலறைக்குள் நுழைந்து சோப்பைக் குழைத்து முகத்தில் அப்பிக் கொண்டாள். சோப்பு நுரைக்குள் பழுத்த மாம்பழமாக முகம் கனிந்து ரசம்போன கண்ணாடியிலும் அழகாகத் தெரிந்தது. முகத்தைக் கழுவி பொட்டு வைத்துக் கொண்டு, கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி, திரியைப் போட்டுக் கொண்டு கிளம்பினாள் சத்யா.

    ஆண்டார் தெருவின் கோடியில் பங்களா டைப்பில் இருந்த அந்த வீட்டின் சொந்தக்காரி செல்லம்மா அம்மாள். அவள் தினமும் கொஞ்சம் கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றுவாள். பிள்ளையாருக்குப் பின்னால் விளக்கு வைத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்று செல்லம்மா தான் சத்யாவின் அம்மா சாவித்ரீக்குச் சொன்னவள்.

    அந்த நாள் முதல் சத்யாவின் மூலம் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்கிறாள் செல்லம்மா. கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றும் பொழுது, அந்தப் பிள்ளையார் கண்ணைத் திறந்து பார்க்கணும், நல்ல பையனாகக் கொண்டு விடணும் என்று வாய் நிறைய வாழ்த்துவாள்.

    சத்யாவின் முகம் நாணத்தால் சிவந்து போகும். அப்படி முகம் சிவக்க இன்னொரு காரணம் கெளசிக் என்று சத்யாவின் மனதிற்குத்தான் தெரியும். செல்லம்மா இல்லாத ஒன்றிரண்டு தினங்கள் கெளசிக் எண்ணெய் ஊற்றி இருக்கிறான். மெல்லத் தீண்டும் விரல்கள்... விழுங்குவதுபோல் பார்க்கும் பார்வை...

    பெரியம்மாவைப் போல் நானும் ஆசீர்வாதம் செய்யட்டுமா? என்று குறும்பு பொங்கக் கேட்பான்.

    முதல் தடவை பேசாமல் போய்விட்டாள். அடுத்த தடவை ஓ... எனக்குப் பெரியவர்களாக இருப்பவர்கள் ஆசீர்வாதம் பண்ணலாம் என்றாள் துணிவாக.

    அந்தக் குறும்புக்காரன் அதற்கும் சளைக்கவில்லை. அப்படியானால் அந்தத் தகுதி எனக்கில்லை என்றான் பட்டென்று.

    இதற்கு என்ன பதிலைச் சொல்வது பதிலைத் தயாராக வைத்துக் கொண்டு வரவில்லையே... வீட்டிற்குப் போய் நீண்ட நேரம் யோசித்த பின்னர்தானே பதில் சொல்லத் தயார் செய்து கொள்கிறாள்? அதனால் பட்டென்று வெளியேறி விடுவாள்.

    ஒரு தடவை செல்லமாகக் கன்னத்தில் தட்டினான் எங்கேயோ பறப்பது போல் கன்னங்கள் சிவந்து, காது, மடல்கள் குப்பென்று சூடேறி, என்ன செய்வது என்று தெரியாமல், இப்படி எல்லாம் செய்தால் நான் வர மாட்டேன் பொய்யாகக் கோபித்துக் கொண்டு வெளியறினாள்.

    மறு நாள் அவள் வரமாட்டாளோ என்றுதான் பதை பதைத்தான். ஆனால் அவள் வந்தாள். செல்லம்மா வீட்டில் இருந்தாள். ‘கள்ளவிழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்' என்று பாடிக் கொண்டே வெளியேறினான்.

    திருடி… வரமாட்டேன்னு பொய்யாத் தானே சொன்னே? என்று கோயில் அருகில் வந்து கூறிய படியே நகர்ந்தான்.

    இரவு பூராவும் தூக்கம் வராமல் துரத்தும் அவனுடையப், பார்வைகள், மனத்தையே சுற்றும் அவனுடைய கிண்டலான பேச்சுக்கள் - கல்யாணம் ஆக வேண்டும் என்று கோயிலைச் சுற்றி வந்தவள். கெளசிக்கைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே என்று கோயிலை சுற்ற ஆரம்பித்தாள்.

    கௌசிக்கின் நினைவுடனேயே இன்றும் செல்லம்மாவின் வீட்டுக் கதவைத் தட்டினாள். பொசு பொசு வென்று பன்னீர்த் துளிகளாகச் சடசடத்த மழைத் துளிகள்... தலையில் சூட்டிய மல்லிகைச் சரத்தின் மணம்...

    மாமி.

    லுங்கியுடன் சோபாவில் உட்கார்ந்திருந்த கௌசிக் தான் எழுந்து வந்து கதவைத் திறந்தான்.

    மாமி இல்லை... தன் அண்ணா வீட்டுக்குப் போயி இருக்காங்க. சாயங்காலம்தான் வருவாங்க.

    சீக்கிரம் எண்ணெய் ஊற்றினா நல்லது. மழை வருது.

    மழை வந்தா நல்லது தானே? என்ன அவசரமோ?

    கேட்டபடி வாசற் கதவைத் தாளிட்டு விட்டு அவளருகில் வந்தவன் இடையில் கையைச் கொடுத்து தன்னுடன் அனைத்துக் கொண்டான். அவள் உடல் பயத்தால் நடுங்கியது.

    விட்டுடுங்க... யாராவது வருவாங்க.

    வந்தா ஒளிஞ்சுக்க.

    சாயங்காலம் தான் பெரியம்மா வருவாங்கன்னு சொன்னீங்க. இது சாயங்காலம்தானே? ஏன் இவ்வளவு நேரம்னு எங்கம்மா திட்டுவாங்க கெளசிக்.

    கெளசிக் அவளது தோளில் கன்னத்தைத் தேய்த்தான். உங்கிட்ட தனியாப் பேசணும்னு நான் துடிச்சிட்டு இருக்கேன் தெரியுமா?

    அவனது அணைப்பின் இருக்கத்தில் அவள் தின்னாறினாள்.

    அதுக்கு இது சமயமல்ல கெளசிக். ப்ளீஸ்... பெரியம்மா வந்துட்டா நான் ஒளிஞ்சிட்டாலும் எப்படி வெளியே போறது? என்று மெல்லக் கேட்டாள்.

    கெளசிக் சட்டென்று நகர்த்து கொண்டான்.

    இனிமே உடன் உத்தரவு இல்லாம உன்னைத் தொடவே மாட்டேன். நீயும் என் மேல் ஆசையா இருப்பேனு நினைச்சேன் என்றான் தளிர்த்த குரலில்.

    அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

    ஆசை இல்லேன்னு யார் சொன்னாங்க? என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்து கொண்டாள்.

    தன்னையறியாமல் வந்து விட்ட வார்த்தை.

    பார்த்தியா... பார்த்தியா... உண்மை உன்னுடைய வாயிலிருந்தே வருதே.

    என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் பிறகு உரிமையா நடந்துக்குங்க.

    இது நடக்கக் கூடியதா என்று இருவரின் உள் மனமும் ஓலமிட்டது...

    ப்ளீஸ் கெளசிக், எண்ணெய் ஊத்துங்க, நான் வெளியே போறதை யாராவது பார்த்தாங்கன்னா வம்பு.

    அவன், செல்லம்மா தயாராகக் கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்த எண்ணெயை ஊற்றினான்.

    நாளைக்கு மலைக்கோட்டைக்கு வர்ரியா?

    அவளுக்கு மட்டும் அவனுடன் தனியாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லையா? ஆசைதான் இல்லையா? சமுதாயத்தின் பார்வை வலைபோல் பின்னிக் கொண்டிருக்கும் பொழுது என்ன செய்ய முடியும்?

    எத்தனை மணிக்கு?

    சரியா நாலு மணிக்கு.

    மனத்தில் எத்தனையோ ஆசைகள் இருந்தாலும், இப்படித் தனியானச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு சந்திப்பது தவறு என்று நினைத்துக் கொண்டாள் சத்யா. எப்படியும் கெளசிக்கிடம் சொல்ல வேண்டும் நாளைக்கு என்று தீர்மானித்தாலும், அவனுடைய ஸ்பரிசம் அவளைப் புல்லரிக்க வைத்திருந்தது.

    கண்டிப்பா வரே. எண்ணெய்க் கிண்ணத்தை வைத்தவன் அதற்கு அச்சாரமா இது முதல்ல என்று இரு கைகளால் முகத்தைப் பற்றிக் கொண்டு தன் முகத்தால் நெருங்கினான்.

    தொபீர் என்ற சப்தம். தன் பிடியை விட்டான் கெளசிக். எலியைக் கவ்விய பூனை ஒன்று குறுக்க ஓடியது.

    சனியன் பிடிச்ச பூனை கெளசிக் திட்டினான்.

    நான் வரேன் சத்யா கதவைத் திறந்து கொண்டு ஓடினாள்.

    2

    சத்யாவுக்கு வயது இருபத்திரெண்டு ஆகிறது. அவளுக்கும் கீழே ஒரு தங்கை வனிதா பி.ஏ. முதலாருண்டு. ஒன்பதாவது படிக்கும் தம்பி ஒருவன். பத்து வருடத்திற்கு முன்பாகவே இறைவனடி சேர்ந்துவிட்ட அப்பா ஹிந்தி பண்டிட்டாகக் காலம் தள்ளியவர். சேமிப்பு என்று ஒன்றையும் வைத்துவிட்டு போகவில்லை.

    கணவனை இழந்ததும் திடீரென்று கண்களை விழித்துப் பார்த்த சாவித்ரிக்குத் திக்குத் திசை புரியவே இல்லை. குழந்தைகளைப் பார்த்து அழத்தான் முடிந்தது. அவள் கணவன் வேலையை பார்த்து வந்த பள்ளியிலேயே அவளுக்கும். ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்கள்.

    குழந்தை சத்யாவுக்கு நல்ல குரல்வளம் இருந்தது. சாவித்ரி வேலை பார்த்து வந்த பள்ளிக்கூடப் பாட்டு டீச்சாரே சத்யாவுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்தாள். பள்ளிப் படிப்பு முடித்த பின் கல்லுாரியில் சேர பொருளாதாரம் இடம் தரவில்லை. அதனால் சத்யா வீட்டில் இருந்தபடியே சின்னக் குழந்தைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து வந்தாள்.

    திருச்சி நகரில் ஆண்டார் தெருவில் ஒரு சின்ன வீட்டில் குடி இருந்துகொண்டு காலத்தை ஓட்டினார்கள் என்பதுதான் பொருந்தும். வனிதா படித்து வேலைக்குப் போகட்டும் என்று சத்யாதான் அம்மாயிடம் வாதாடி கல்லூரிக்குப் போக வைத்தாள்.

    சாவித்ரிக்குச் சத்யாதான் ஒரு சுமையாக இருந்தாள். சத்யாவின் பேரழகும், இளமையும் பயத்தைக் கொடுத்தது. அதனால்தான் வெளியே வீடு வீடாக சென்று பாட்டு சொல்லித் தர அவமதிக்கவில்லை. பணம், சீர், வரதட்சனை என்று எதிர்பார்க்காமல் யாராவது ஒருவன் வந்து சத்யாவைக் கொத்திக் கொண்டு போக மாட்டானா என்று காத்திருந்தாள்.

    ஆனால் ஒருவனும் வரவில்லை.

    கோவிலிலிருந்து வீடு திரும்பும் பொழுது கௌசிக் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் சன்னக் குரலில் மறக்காமல் நாளைக்கு என்று முனகினான். குளிரினால் தன் தொண்டை கட்டும் என்று பயந்த சத்யா வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள்.

    நாளைக்கு கெளசிக்கிடம் என்ன பேச வேண்டும்? தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லிக் கேட்க வேண்டும். செல்லம்மா இதற்கு ஒப்புக் கொள்வாளா? அவள் ஒரே குழப்பமான நிலையில் இருந்தாள்.

    சத்யாவிற்கு இதே கவலையாகி விட்டது. கௌசிக் உங்களை மறக்க முடியுமா? 'நெவர்', என்னாலே முடியாது.

    வாசற் படியில் காலை வைத்த பொழுது அம்மாவின் குரலுடன் இன்னொரு குரலும் சேர்ந்து ஒலித்தது. தகரடப்பாவில் கல்லை போட்டுக் குலுக்கியது போன்ற குரல். குரலியிருந்தே யாரென்பதைக் கண்டு பிடித்தாள் சத்யா. சிந்தாமணி ரங்கம்மாதான். பொது சேவை, தொண்டு என்று சதா ஊரைச் சுற்றி வருவாள். நுழைந்த இடங்களில் கிடைத்ததைக் கண்டு சாப்பிடடுக் காலத்தைக் கழிப்பவள்.

    ஊரில் அவளைப்பற்றி ஒவ்வொரு விதமாகச் சொல்லுவார்கள். சத்யா அவளுக்கு ‘இன்பர்மேஷன் பீரோ!' என்று பட்டப் பெயர் வைத்திருந்தாள்.

    சிலர் அவளை ஸ்பீக்கர் என்று கூப்பிடுவார்கள். எதற்கும் ரங்கம்மா கோபித்துக் கொள்ளுவதில்லை. தன்னால் ஆன உதவியைச் செய்யாமல் விட்டதும் இல்லை.

    இதோ சத்யா வந்துட்டாளே அம்மா தான் அவளைப் பார்த்ததும் கூவினாள்.

    வாடி சத்யா, வா. இப்படி உட்கார், பாட்டெல்லாம் எப்படி இருக்கு... கொலுவ மரகத தோடியில் நீ பாடிக் கேட்கணும்... இப்படி மழைக் காலத்துல போயிட்டு வரயே... தொண்டை என்னத்துக்கு ஆகும்."

    இந்த விதர்ணை, விசாரணை எல்லாம் ரங்கம்மாவின் கூடப் பிறந்தது.

    கோயிலுக்குப் போயிட்டு வரயாக்கும்?

    பதில் சொல்லத் தேவையே இல்லை. கேள்வியும் நானே... பதிலும் நானே என்பது போல ரங்கம்மா எதையும் எதிர்பார்க்காமல் தானே பேசுவாள்.

    இப்பொழுதும் சத்யாவின் பதிலை எதிர்பார்க்கவே இல்லை. சத்யாவின் அருகில் வந்து நின்று ஏற இறங்கப் பார்த்துவிட்டு, காதோரம் சுருள் தொங்கும் மயிர் கற்றையை ஒதுக்கினாள். நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டாள்.

    உங்கப்பா இருந்தா உன்னன ராசாத்தி மாதிரி வச்சுப்பான். நீ சம்பாதிக்க வேண்டி வந்து விட்டது. அழகாத்தான் இருக்கே. கோயிலுக்குப் போறே... பகவான் கண்ணைத் திறந்து பார்க்கட்டும் என்று இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாகத் தானே சொல்லிக் கொண்டாள்.

    சத்யா அவளிடம் வாயைக் கொடுக்கத் தயாராக இல்லை. இந்த ரங்கம்மா அவளுடைய அப்பாவின் தூரத்து உறவினர். அந்த உறவு விட்டுப் போகாமல் வந்து கொண்டிருக்கிறாள். எண்ணெய்க் கிண்ணியைக் கொண்டு வைக்கும் சாக்கில் உள்ளறைக்குள் மறைந்தாள் சத்யா. சுவரோரம் கிடந்த ஒற்றை இலையும், வனிதா சமையலறையில் அப்பளம் பொறிக்கும் மணமும் ரங்கம்மாவின் இரவு போஜனம் இங்கேதான் என்பதை உணர்த்தின.

    ஜன்னலடியில் நின்றவள்... கெளசிக்கைச் சந்தித்து முதல் சந்திப்பை நினைத்தாள்.

    அது ஒரு பங்குனி உத்திரம். திருச்சி மலைக் கோட்டை தாயுமானவர் தெப்பத்தில் பவனி வரும் திருநாள், தெப்பக் குளத்தைத் தெப்பம் சுற்றி வரும் சமயம் தான் இரு குடும்பத்தினரும் சந்தித்தனர். செல்லம்மா துணைக்குக் கௌசிக்கை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

    சத்யா... இவ்வளவு அழகா? பொன் கலரில்... கண்கள் மின்ன. துறுதுறுவென்று பார்வை அலைய ஒரு நகைக்கூட இல்லாமல் கழுத்தில் கடுகமணி சரம் மினு மினுக்க... செல்லம்மா அவளைச் சத்யா என்று அழைத்ததும் அவனும் தன்னுள் அழைத்துப் பார்த்துக் கொண்டான்.

    என்ன சத்யா பார்க்கறே. இவன் என் தங்கை பிள்ளை. எனக்கு ஒரு தலைக் காலை வலிச்சா ஒரு துணைக்கு வேண்டாமா, கெளசிக் இனிமே என் கூடத்தான் இருப்பான்.

    சத்யா சிநேகிதமாக ஒரு சின்னப் புன்னகையை மிளிரவிட்ட பொழுது, அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து தலையைக் குனிந்து கொண்டாள்.

    சத்யா போனபின்பும்கூட செல்லம்மா அவளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தாள்.

    தங்கமான பெண்! எனக்கு ரொம்ப ஒத்தாசையா இருப்பா. பண வசதி மட்டும் இருந்திருந்தா இந்தப் பெண் எப்பவோ கல்யாணமாகிப் போயிருப்பாள்."

    சத்யாவை இறைவன் தனக்காகத்தான் படைத் திருப்பானோ? சத்யா அன்றிரவு அவன் கனவில் வந்து நின்றாள். திருச்சி அவனுக்கு இனித்தது. சத்யா அவன் வீட்டிற்கு வரும் நேரம் எல்லாம் பகல் வேலைகள் தான். அதனால் அவளைப் பார்க்கும் நேரம் கிடைக்கவே இல்லை. மனத்தினுள் புதையுண்ட சிலையாக இருந்தாள் சத்யா.

    சத்யா சாப்பிட வரயா? ரங்கம்மாதான் அழைத்தாள். லட்சணமான பெண். எவன் கொடுத்து வச்சிருக்கானோ என்று அங்கலாய்த்தபடி சாப்பிட எழுந்தாள்.

    இவர்களுக்காகக் காத்திராமல் சாப்பிட்டு எழுந்த ரங்கம்மா சாவித்ரி, நான் நாளைக்கு வரட்டுமா? என்று கேட்டபடி விடை பெற்று சென்றாள்.

    நீ வந்தா எனக்கு என்ன? நாளைக்கு கௌசிக்கைப் பார்க்க மலைக்கோட்டைக்குப் போய்விடுவேன் என்று எண்ணிக்கொண்டாள் சத்யா. மனிதர்கள் நினைப்பது நடந்தால் அப்புறம் என்ன கஷ்டம் உலகத்தில்?

    எதுக்கும்மா இந்த டமாரம் வந்தது என்று சத்யா இலையில் உட்கார்ந்தபடி கேட்டாள்.

    சாதத்தில் குழம்பை பற்றிய சாவித்ரி, நானளக்கு உன்னன ஒரு பையன் பெண் பார்க்க வரான் என்றாள் மகிழ்வாக.

    தொண்டையில் சாதம் அடைத்துக் கொண்டு இறங்க மறுத்தது. நாளைக்கா? கெளசிக் அவரைப் மலைக்கோட்டையில் சந்திப்பதாகக் கூறி இருக்கிறான்.

    என்னம்மா திடீர்னு.... நம்மாலே ஏற்பாடு பண்ண முடியுமா? என்று கேட்டாள்.

    பெண் பார்க்க என்ன பெரிய ஏற்பாடு வேணும்? பஜ்ஜியும், சொஜ்ஜியும் பண்றது பெரிய காரியமா? இந்த வரனாவது தகையணுமேனு நான் தாயுமான ஸ்வாமியை வேண்டிண்டு இருக்கேன்.

    சத்யாவால் தலையைத் தூக்க முடியவில்லை, கண்ணீர் பொங்கியது, தலையைக் குனிந்து கொண்டாள்.

    3

    கெளசிக்கின் அப்பா அம்மா – கல்கத்தாவில் இருந்தார்கள். கெளசிக்கின் கூடப்பிறந்தவர்கள் முன்று பேர்கள், மைத்துனி செல்லமாவின் சொத்து வேறு யாருக்கும் போய்விடக் கூடாது என்பதில் வெகு அக்கறையாக இருந்தார் கெளசிக்கின் அப்பா.

    அதனால் செல்லம்மாவிடம் கௌசிக்கை அனுப்பி வைத்தார்.

    கெளசிக் இன்ஜினீயரிங் படிப்பு படித்திருந்தது வசதியாகப் போயிற்று. ஹெவி பாய்லர் தொழிற்சாலையில் அவனுக்கு வேலையும் கிடைத்தது. கௌசிக் திருச்சி வந்தாலும் கல்கத்தா சூழ்நிலையில் வளர்ந்த காரணத்தால் திருச்சியில் மிகவும் துன்பப்பட்டான். அம்மா அப்பாவிடமே திரும்பிப் போய்விடலாம் என்று எண்ணமே நீவிரமாக எழுந்தது. கட்டிப்போட்டாத போல உணர்ந்தான்.

    இந்த எண்ணங்களின் அலைப்புக்கள் எல்லாம் சத்யாவைப் பார்க்கும் வரையில்தான். அதற்குப் பின் சத்யா தான். பெரியம்மா அவளிடம் எண்ணெய் ஊற்றித் தருவேதை அறிந்தான். தன் அறையிலிருந்து அவளை தரிசித்தான். அவள் திரும்பிப் போகும் பொழுது வாசலில் காத்திருப்பான். அவளும் மோகனமாக ஒரு பார்வையை வீசுவாள். அந்தக் காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டான் கெளசிக்.

    செல்லம்மா ஒரு நாள் வெளியே போக வேண்டி இருந்தது. சத்யா வருவாளே என்று கவலைப்பட்டான்.

    கவலப்படாதே பெரியம்மா. ஒரு கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி வைச்சுட்டுப் போ. அந்தப் பெண் வந்ததும் நான் ஊத்தறேன்.

    பார்வையின் ஊறல் வார்த்தையில் வந்து வடிந்தது. அது தான் தனிமையில் அவர்கள் சந்தித்த முதல் சந்திப்பு.

    இரவு பூராவும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்து சத்யா விடியற்காலையில் தூக்கம் கண்களை அழுக்க தூங்கிப் போனாள். ஏழு மணிக்கு மேல் தான் எழுந்தாள். சாவித்ரியும் தூங்கட்டும் என்று எழுப்பவில்லை.

    சத்யா, முதல்ல ட்யூஷன் குழந்தைகளை இன்னிக்கு வரவேண்டாம்னு சொல்லி அனுப்பு முரளிகிட்ட என்றாள்.

    தான் இன்று மலைக்கோட்டைக்கு வர முடியாதுனு கெளசிக்கிற்குச் சொல்லி அனுப்ப வேண்டாம்? உடனே சுறுசுறுப்பாகச் செயல்பட்டாள். தம்பி முரளியை அழைத்தாள். ஒரு பழைய புத்தகத்தை கொடுத்து அதனுள் கெளசிக்கிற்கு ஒரு கடிதத்தை வைத்துக் கொடுத்தாள்.

    முரளி, கொஞ்சம் கெளசிக் வீட்டுக்குப் போய் விட்டு வந்துடேன். நேத்து ராத்திரி இந்தப் புத்தகம் வேணும்னு கேட்டார். கொடுத்தனுப்ப மறந்துட்டேன். நீ கொடுத்துட்டு வந்துடேன். ப்ளீஸ் என்று முகவாயைத் தூக்கிக் கொஞ்சிக் கெஞ்சி அனுப்பி வைத்தாள்.

    கௌசிக் இல்லாவிட்டால் திரும்ப எடுத்துக் கொண்டு வந்து விடு என்று சொல்ல மறந்து விட்டாள். அன்று காலை நண்பன் ஒருத்தருக்குக் கல்யாணம் என்று சீக்கிரமே கிளம்பி கெளசிக் போய்விட்டான். முரளி போன பொழுது செல்லம்மா தான் காய் நறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

    வாடா முரளி, அம்மா ஏதாவது சொல்லி அனுப்பினாாளா?

    இல்லே மாமி, சத்யாக்கா இதைக் கெளசிக் அங்கிளிடம் கொடுத்துட்டு வரச் சொன்னா.

    வாழைக்காய் நறுக்கிய கறை ஈரத்துடன் கரத்தில் படிந்திருந்தபடியால் இப்படி வை, கெளசிக், ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கான். வந்ததும் தந்துடறேன்.

    முரளி புத்தகத்தைச் செல்லம்மாவின் பக்கத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டான். சத்யா கேட்டதும். புத்தகத்தைத் கொடுத்துவிட்ட அடயாளமாகத் தலையை ஆட்டினான்.

    கைளைக் கழுவிக் கொண்டு வந்த செல்லம்மா புத்தகத்தை மேஜை மேல் வைப்பதற்காக எடுத்தாள். பொத்தென்று சத்யாவின் கடிதம் அதிலிருந்து விழுந்தது. ஏற்கனவே சத்யா எதற்காக தன் மகனுக்குப் புத்தகம் கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற சம்சயம் மனத்தில் எழுந்திருந்தது.

    கடிதத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தாள். கடிதம். கவரில் ஒட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. செல்லம்மா தன் யூதம் ஊர்ஜிதமாகி விட்டதே என்று பரபரத்தாள், கவரைக் கிழித்துக் கடித்தைப் படித்தாள்.

    அன்புள்ள கெளசிக்

    தங்களிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1