Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நதியே பெண் நதியே
நதியே பெண் நதியே
நதியே பெண் நதியே
Ebook218 pages1 hour

நதியே பெண் நதியே

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன்னருகில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக வெளியில் பார்த்து கொண்டு வரும் தயாவைப் பார்த்து சங்கு கேட்டான். "பட்டணத்திலயே பிறந்து வளர்ந்தவன் நீ... உனக்கு என்ன திடீர்னு பட்டிக்காட்டை சுத்தணும்னு ஆசை?"
 "பிறந்ததில இருந்து பட்டணத்து டப்பா வீட்டில அடைஞ்சி கிடந்தது... சுத்தமில்லாத காத்தை சுவாசிச்சி, எந்நேரமும் சாலை நெரிச்சலில் சிக்கி, மூச்சை முட்டுதுடா. அதுதான் இப்படி கொஞ்சம் மாறுதலா இருக்கட்டும்னு உன்கூட புறப்பட்டேன். எங்கம்மாவும் அதிசயத்துல அதிசயமா பர்மிஷன் குடுத்திட்டாங்க. நீயேன் புறப்பட்டதில இருந்து இதையே கேக்கறே? நான்... வர்றது உனக்கு ஏதாவது அசௌகரியமா இருக்குதா? அப்படின்னா சொல்லிடு. நான் திரும்பிப் போயிடறேன்..." தயாவின் குரலில் சின்ன வருத்தம்.
 "டேய்... டேய்... தயா நான் அப்படி சொல்லலைடா. உனக்கு எங்க வீட்டுல வசதி குறைவா இருக்குமோன்னுதான் கவலைப்படறேன். மத்தபடி நீ வர்றது எனக்கு மட்டுமில்லே ஆயாவுக்கும் பாட்டைய்யாவுக்கும் ரொம்ப சந்தோஷம். பஸ் நிறுத்தத்துக்கு வண்டி அனுப்பிவிட்டு விருந்து செய்து வைச்சிக்கிட்டு காத்திருக்காங்க. போதுமா? உன் இஷ்டப்படி இரு..." சங்கு சிரித்தான்.
 "எனக்கு வயல் வரப்புல நடக்கணும். காரசாரமா கிராமத்து சாப்பாடு சாப்பிடணும். உங்க ஊர் ஆற்றில நீச்சலடிக்கணும். டெண்ட் கொட்டகை இருந்தால் அதுல சினிமா பார்க்கணும்…" தயாவின் குரலிலும் கண்களிலும் ஒரு புதிய அனுபவத்துக்குத் தயாரான குதூகலம்.
 "அப்ப... ஒரு முடிவோடத்தான் வந்திருக்கே... சரி... சரி... வா நண்பா வா... கிராமத்தையே ஒரு கலக்கு கலக்கிடலாம்..." சங்கு முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்ன போது தயா சிரித்துவிட்டான்.
 சங்கு சொன்னது போலவே பேருந்து நிறுத்தத்தில் மாட்டு வண்டி காத்திருந்தது. பேச்சும் சிரிப்புமாக வீடு வரை பயணம் களை கட்டியது.சங்குவின் வீட்டு வாசலில் அவனுடைய குடும்பமே கூடி நின்று வரவேற்றது. ஆயா தன் பேரனோடு தயாவுக்கும் ஆரத்தி எடுத்து போட்டு வைத்தாள். ஓடு வேய்ந்த பெரிய வீடு. யாரையும் கேட்காமல் நாலா பக்கமும் காற்று உள்ளே நுழைந்து வெளியேறியது. எல்லா இடத்திலும் வெளிச்சம் இருந்தது. தலை வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது.
 ஆயா பார்த்துப் பார்த்துப் பரிமாற பாட்டய்யா பக்கத்தில் உட்கார்ந்து வாயில் ஊட்டாதக் குறையாக உபசரித்தார். சாப்பாடு காரம் தூக்கலாக இருந்தாலும் அதன் ருசி 'இன்னும் கொஞ்சம் சாப்பிடு' என்று கட்டளையிட்டது.
 கண்ணில் நீர் வழிய வழிய சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு எழுந்ததுமே தூக்கம் கண்ணில் இறங்கியது. மெத்து மெத்தென்ற இலவம் பஞ்சு மெத்தையில் படுத்ததுதான் தெரியும். மறுபடியும் கண்ணை விழித்த போது மாலையாகிவிட்டிருந்தது.
 எழுந்து குளித்து விட்டு வந்ததும் சுடச்சுட வடையும் சட்னியும் தயாராக இருந்தது. கள்ளிச் சொட்டு பாலில் கலந்த காபி சொம்பு நிறைய வந்தது. தயாவைப் பார்த்து சிரித்தான் சங்கு. "என்னடா ஒரே வேளை சாப்பாட்டுக்கே இப்படி கும்பகர்ண தூக்கம் போட்டுட்டே?"
 "இன்னிக்குதாண்டா ஏ.ஸி. இல்லாம தூங்கி இருக்கேன். உடம்பும் மனசும் கலகலன்னு ஆகிட்டுது. எங்கயாவது நடந்திட்டு வரலாமா?" தயா ஆர்வமாகக் கேட்டான். சங்கு சரியென தலையசைத்து புறப்பட்டான்.
 இருவருமாக நடந்து ஆற்றங்கரைக்கு வந்தார்கள். சலசலவென ஓடும் ஆற்றின் வேகமும் காற்றின் ஜில்லிப்பும் தயாவுக்கு மிகவும் புதிதாக இருந்தது. கரையை ஒட்டி நடக்கும் போது அங்கே உட்கார்ந்திருந்த பெண் கண்ணில் பட்டாள்.
 "அட... இப்பகூட இது வந்து இங்க உட்கார்ந்திருக்கே?" என்று தன்னையும் மீறி சங்கு சொன்னான். "யாரு சங்கு அது? உனக்கு தெரிஞ்சவங்களோ?" என்று தயா கேட்ட போது, "ஆமாம். பரஞ்சோதி வாத்தியாரோட பொண்ணு. ஸ்கூல்ல எனக்கு நாலு வருஷம் ஜூனியர். படிப்பில ரொம்ப கெட்டிக்காரி. இந்த வருஷம் பிளஸ்டூவில கூட நல்ல மார்க் எடுத்திருக்குன்னு பாட்டய்யா சொன்னாரு. சின்ன வயசில கூட இப்படித்தான்மணிக்கணக்குல வந்து உட்கார்ந்திருக்கும். நெறைய நாள் பாட்டய்யா பார்த்திட்டு வீட்டுல கொண்டு விட்டிட்டு வருவாரு. சின்ன வயசில சரி. இப்ப வந்து உட்கார்ந்திருக்கே... வயசுப் பொண்ணு இந்த நேரத்தில் இங்க இருக்கக்கூடாது... இப்ப என்ன பண்றது?" சங்குவின் குரலில் பதற்றம்.
 "சங்கு... உன்னை அவங்களுக்கு தெரியுமில்லே? அப்புறம் என்ன தயக்கம்? நீ போய் அவங்களை கூட்டிட்டுவா. நாம அவங்க வீட்டுல விட்டிட்டு போகலாம். இதுக்கு நீயேன் இப்படி பதட்டப்படறே?" என்றான் தயா.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223457879
நதியே பெண் நதியே

Read more from Megala Chitravel

Related to நதியே பெண் நதியே

Related ebooks

Reviews for நதியே பெண் நதியே

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நதியே பெண் நதியே - Megala Chitravel

    =ebook_preview_excerpt.html]n#~A .b4ArIb'yii/"<Df(JD '꫟Rl9Wճ?~?}>k|Ͽ9ׇvڇC:CۥCw Cat&]mO^o\Myz̬IWsg?\cӇe;Oh]C>?Yϗ!wwIOyDT@DwCX oMqm4ݼib/,.*u+RPϴ𢕓 .鑾_N dֻ$="wb@isSȆduB_ O{yKkx]:@u5])݋c{PGA9 z? 2^d ?N ,?dS6L'O*C=hI 4-p9=3=/xXaJy, ~.3|f,KӝsOE%FdWBsRXSiOiJoy0p܍Cg|OCMslzK|wCwaojPO`">ic_"Y]Ӑ0rnDMy(ۙ`.$=%8Lpѳ; ifRmcZz{e@zF`v#AL긒MNz#È%qZ< eq0;M-r_KZYKHudž"-r ,l)βe|UE3CAjng&ԃP˶g_S=֖IZA$ ذKQGuR OSVH^dF1H(%kBĹqOnZ'e[rLhn[! Ƙ)XZ4i;){jE1TmzƤhS17ZhcUp vsrҀ-jF =$ͮǶa;%ND2K5 1QT5Ç#g=cZT5Tra^OD ]W<`?/H{qd׷veǫxvߡʂR/Zw %FZ#.F51*«K"nyg`EҲ9x NTT(GLihacXe-MIyGRa7aZIL%-1/8vQq.isdMM~PJ$xM*٣l5:yaX$Kbj1wMY2:Dqٱ1SЗbxNCuuBg KF *Me)Mq"Gk2nK (4 *bV͞瓤|N gIѬY7PK%c߯؃PO fVvf a)egMhW'6(h;.=͋Ӱ>QI;Z Ơozf%L{pV0T'\e+Mc]XڕB)j钠Yo:roHMY~,m'َԀRY|kC-1J5D9ٍW;I 72"KmHmFcɚG(;(['݂4lxD,ET]8gz/<T5zP&?H(Pl?sz/ߠ'*Bkd0bC ; s{#\F)X,4*()ZV^MrT sPw=sղ( "gm;#J~ "(}7NTv/]k`ε:;ut*ٹ/`pyx瘃O@*bj*>N1CF6TZLhTt3hpEw5m:*!;XbQkd!zGk5&U)$Lx'7{{a"ch".͸1{̷bɂjYPc!9, Dr+kǣdC#k~d[>Tiת"h- JSƠB3ݒTVK&y CjJ_Ko 5hnnlެ1"CB1lBkJ>=9ȶvvb어L劥u&fT\N6LX_*GLs:/d&fnr* i<ŞZ$D FI|-,#$6F |) xGO|x=n*yS={ֻFV9RJuue Mu)l?<g!t^.-*|7ccBIc'K{R=̣Ѿ4a[Tmxb(>D2c<X><\+Eڅ1-U< OaIƫ|ewSj=z 31bE\De}v62h-&!p9 ?bIRQϿ˴\YRmQ}]@~cu4E_z 2cPŚ oƿc1 V2M18*jo?CY{. #TsNՑ ֘U^YMw>CM(Wdz"s ^pONVS*K.|M c/ +ᐃnlIz:Z" |쐉 m0qh,zHGނW *1:S f(N)}urck@.vX,Qm-(=SeP'/2|¿^t~]7PWQ"o}39C&A;_)$O+xM/ d_-/7wZYJl2}JU#Ľ:(-AG F\0 k)VIؚ #)82x@j-NG{(p{"s
    Enjoying the preview?
    Page 1 of 1