Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அமுத கீதம்
அமுத கீதம்
அமுத கீதம்
Ebook126 pages46 minutes

அமுத கீதம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேலை முடித்து சமையலறையில் பாயை விரித்தாள். படுத்ததுமே தூங்கிவிடும் வழக்கமெல்லாம் போய்விட்டது. சன்னல் வழியாக தோட்டம் தெரிந்தது. மல்லிகைக் கொடியில் வெள்ளை முத்துக்களாய் அரும்புகள் இலைகளை மறைத்துக் கொண்டிருந்தன.
 வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அம்சா புலம்பிக்கொண்டே கதவைத் திறப்பது கேட்டது.
 "கணவன் வருவானே..., சாப்பாடு போடணுமேன்னு ஒரு பதைப்பு இருந்தாத்தானே? நீ போய் துணி மாத்திக்கிட்டு வா. நான் சாப்பாடு போடுறேன். இத்தனை வருஷமா அவளா சோறு போட்டு உன்னை வளர்த்தாள்,"
 இத்தனை பேச்சும் காதில் விழுந்தும் அவள் அசையவில்லை. வெறுப்பும் எரிச்சலும்தான் எழுந்தன.
 "வாயைத் திறந்து எதுவும் பேசினாத்தானேடா நாம பேச வசதிப்படும். எதுவுமே சொல்லமாட்டேங்கறாளே."
 அம்சா அங்கலாய்ப்பது கேட்டது. மதன் சத்தம் போட்டுச் சிரித்தான்.
 "என்னது... பேசமாட்டேங்கறாளா? அவளுக்கு வாயாடின்னுதான் பெயர். அவள் வாய்க்குப் பயந்துகிட்டு அத்தனை பேரும் வெற்றிகரமாப் பின் வாங்கிடுவாங்க. அங்கே போய் அமுதா பேசறதில்லைன்னு சொன்னால் உன்னை ஒரு மாதிரி பார்த்துச் சிரிப்பாங்க..."
 "என்னவோ... போ... நீதான் இப்படி சொல்றே. ஒரு தரத்துக்கு மறுதரம் அவள் குரலைக் கேட்க நான் தவமிருக்கேன்."
 அமுதா தனக்குள் கசந்தாள். மதன் சொன்னதும் தவறில்லை. அம்சாவின் வியப்பும் பொய்யில்லை.
 அந்தக் கலகலப்பான கல்லூரி நாள்கள் எத்தனை சுகமானவை! விழிகளில் நீர் வழிந்தது. இருபுறமும் கன்னத்தில் வாய்க்கால் விட்டு தலையணைக் கடலில் கலந்து மறைந்ததுஎப்போதும் பத்து பேர் சுற்றி வர பட்டுப் பூச்சிகள் போல கும்பலாக ஓடித்திரிந்த அந்த நாள்கள் நினைவில் ஓடின.
 அமுதாவின் பேச்சிலும், குறும்பிலும் எத்தனை பேர் மயங்கியிருக்கிறார்கள்! எந்த நேரமும் பேச்சு... பேச்சு... சிரிப்பு... சிரிப்பு... எத்தனையோ பேர், 'தயவு செய்து சிறிது நேரம் பேசாமல் இருக்கிறாயா?' என்று கெஞ்சியிருக்கிறார்கள்...
 உடன் படிப்பவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் அவளுக்குத் தப்ப முடியாது. பாவம், பொருளாதாரப் பேராசிரியர்தான் அமுதாவின் தினசரி இலக்கு!
 கோட்டைக் கழற்றி நாற்காலியில் மாட்டிவிட்டுப் பாடம் நடத்தும் வழக்கம் உள்ளவர் அவர். வகுப்பை விட்டுப் போகும் போது கோட் பைக்குள் தவளையோ, கரப்பான் பூச்சிகளோ நிச்சயம் இருக்கும். வகுப்பை விட்டு வெளியேறிக்கொண்டே கண்ணாடியைக் கழற்றி பைக்குள் வைப்பார்... -
 அவ்வளவுதான்...
 வகுப்புக்குள் நுழைந்து செய்தது யார் என்று மிரட்டினால் அமுதா துணிச்சலாக முன் வருவாள். "சார்... இது வரலாற்றுப் பிரிவு, இங்கே ஏது சார் தவளையும், கரப்பானும்? கத்தியும், கேடயமும் இருந்தால்தான் நாங்க பொறுப்பு" என்பாள்.
 மேலே எதுவும் பேசமுடியாமல் கோபமாக அவர் வெளியேறியதும் வகுப்பில் சிரிப்புக் கூச்சல் எழும்பும்.
 அமுதாவின் குறும்பு கல்லூரியோடு மட்டும் நின்றுவிடாது. வெளியிலும் வம்புதான். வரிசையாக போக்குவரத்து தடையினால் நிற்கும் கார்களைக் கண்டால் அவ்வளவுதான்.
 கார் நகராத அவதியில் அவரவர் எரிந்து கொண்டிருக்கும் போது அமுதாவின் கண்கள் யார் ஏமாந்தவன் என்று தேடும். கணவன் - மனைவி இருவரும் உட்கார்ந்திருக்கும் கார் அருகில் போவாள்ன்னிச்சுடுங்க. நேற்று மாலை நீங்க வரச் சொன்ன மாதிரி உதயம் திரையரங்குக்கு வரமுடியவில்லை. காலையிலிருந்து தொலைபேசியில் பேசுவீங்கன்னு தவமிருந்தேன். என்மேல் கோபம் போகலையா? இன்னிக்கு மாலை படத்துக்குக் கண்டிப்பா வரேன், காத்திருங்க."
 பேசிவிட்டு அவள் பாட்டுக்கு மகிழ்ச்சியாக "டாட்டா" காட்டிவிட்டு கண்ணில் படும் பேருந்தில் ஏறி விடுவாள். கணவன் விழிப்பதையும், மனைவி அவன் கழுத்தை நெறிப்பது போல சண்டையிடுவதையும் கண்ணாடி வழியாகப் பார்த்துச் சிரிப்பாள்
 ஏதாவது இடத்துக்கு வழி கேட்டால் அவர்கள் கதி அதோ கதிதான். இவள் வழி சொல்லிக் காட்டும் பாதை நிச்சயம் அண்டார்டிக்காவுக்குப் போய்ச் சேர்த்துவிடும்.
 அமுதாவின் குறும்பு தாங்கமுடியாமல் போகவே மற்ற தோழிகள் ஒருமுகமாகக் கூறிவிட்டார்கள்.
 "கொஞ்சம் படிக்கவும் நேரம் ஒதுக்கணும், அமுதா இனிமேல்! நீ அதிகமாக குறும்பு பண்ணினால் நாங்கள் உன்கூட ஒத்துவரமாட்டோம். சொல்லிட்டோம். நீ உன் பேச்சையும், குறும்பையும் நிறுத்திடத்தான் வேணும்."
 அமுதாவுக்கு எரிச்சலும், வீம்பும் வந்தன. மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223331360
அமுத கீதம்

Read more from Megala Chitravel

Related to அமுத கீதம்

Related ebooks

Reviews for அமுத கீதம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அமுத கீதம் - Megala Chitravel

    1

    மேகக்குடம் தலையில் சுமந்து வானக்காட்டு வழியே நட்சத்திர விளக்குகள் துணையுடன் நிலவுப் பெண் ஏகாந்தமாக நடக்கும் முன்னிரவுப் பொழுது. அலுவலகம் முடிந்து அலுப்புடன் வீடு திரும்பும் நேரங்களில் பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நிற்பது ஒரு மாபெரும் கலை. அதிலும் அக்கம், பக்கம் உள்ளவர்கள் மீது அதிகம் உராயாமல் இடித்துக்கொள்ளாமல் பயணம் செய்வது அதைவிடப் பெரியது.

    கூட்டத்தின் மத்தியில் நின்றிருந்த அமுதாவின் கண்களில் கடலலைகள் மண்ணில் புரண்டு புரண்டு விழுந்து விளையாடுவது பட்டது. மூன்றாண்டுகளாக மதனோடு உட்கார்ந்து கதைகள் பேசி மகிழ்ந்த படகு தெரிந்தது. புத்தனுக்கு ஞானம் தந்த போதிமரம் போல, அவர்கள் இருவருக்கும் காதலின் வேகத்தைக் கொடுத்தது, அந்தப் படகுதான்.

    திருமணம் நிச்சயமான மறுநாள் மதன் அந்தப் படகை மூன்று முறை சுற்றி வந்து தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டான். அன்று அவள் சிரித்த சிரிப்பு...

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் தொற்றிக்கொள்ள புன்னகைகளாக மலர்ந்து சிரிப்புகளாக வெடித்தது. இந்த வாழ்வில் அதுதான் கடைசி சிரிப்பாக இருந்திருக்க வேண்டும் எத்தனை கனவுகள்! கற்பனைகள்!

    கடலளவு கற்பனைகளும், வானளவு கனவுகளும் நடைமுறை வாழ்க்கை என்று வரும்போது அடிபட்டுதான் போகின்றன. அறிவு எத்தனை உண்மைகளை விளக்குப் பிடித்து வெளிச்சம் காட்டுகிறது. ஆனால் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த மனம், சாதித்துக்கொள்ள வேண்டும் என்கிற இருட்டைத்தானே விரும்புகிறது?

    ஓடிப்போய் அந்தப் படகின் அருகில் உட்கார்ந்து சத்தமாக வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது.

    யோசித்துக் கொண்டிருக்கும் போதே வழித்தட நிறுத்தம் குறுக்கிட்டது. இறங்குபவர்கள், புதிதாக ஏறுபவர்கள் என்று கூச்சலும் தள்ளலும் பேருந்தைக் கலக்கிவிட்டன. திக்கித் திணறி, பேருந்து தன் பயணத்தைத் தொடர்ந்தது, படகும், கடலும் கண்ணைவிட்டு மறைந்துவிட்டிருந்தன. இன்னும் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் போக வேண்டும்.

    நல்லவேளையாக காலி இடம் கிடைத்தது. இருக்கையில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டாள், அலுப்பும், ஆயாசமும் அமுதாவுக்குள் கிளை விட்டன. எதற்காக இந்த ஓட்டம்? எதைச் சாதிக்க இந்த வேகம்? யாருக்காக இந்த உழைப்பு?

    வீட்டிற்குச் செல்லுவதற்கா? அங்கே அவள் வருவாள் என்று ஆவலாகக் காத்துக்கொண்டு யார் இருக்கிறார்கள்?

    அலுத்துக் களைத்து வந்தவளுக்கு ஒரு வாய் காபி கலந்து தர யாருக்குத் தோன்றும்?

    ‘வேலை செய்ய வேண்டாம்... ஓய்வெடு’ என்று உரிமையாகக் கை வேலையைப் பறித்துச் செய்ய மனிதர்கள் இருக்கிறார்களா?

    ‘ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறது?’ என்று அன்புடன் கேட்டு, தலைமுடியை ஒதுக்கி வகிட்டில் முத்தமிட யாருக்காவது தெரியுமா, அங்கே?

    செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தால் தீர்ந்தது. முகம் கழுவும் நேரம் கூட மன்னிக்க முடியாத குற்றமாகிவிடும்.

    ஒரு வாய் காபிக்காக எவ்வளவு நேரமாக மொட்டு, மொட்டுன்னு உட்கார்ந்திருக்கிறது? வந்தமா காபியைக் கலந்து கொடுத்தமான்னு தோணாதா, ஒரு பொம்பளைக்கு?

    மகாபாரதம் போல, இராமாயணம் போல நீண்டு செல்லும் அந்தப் புலம்பலுக்கு முடிவேயில்லை. என்பது மட்டுமன்று, பைபிள் போல பல பாகங்களும் கூட உண்டு.

    சுடச்சுடக் காபி குடித்ததும், வெற்றிலையை வாய் நிறையக் குதப்பிக் கொண்டு,

    இராத்திரிக்குத் தேங்காய், பூண்டு சேர்த்து அரைச்சு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வை, தொட்டுக்க கீரை கடைந்து, புடலங்காயைப் பொரிச்சுடு. கூடவே தக்காளி ரசம் வைத்து, துவையல் அரைச்சிடு. மசமசன்னு நிக்காமல் சீக்கிரமா சமையலை முடி. என்னவோ தெரியலை. இடுப்பைப் பிடித்துக்கிட்டு வலிக்குது. மத்தியானம் தூங்காதது வேற கண்ணை இருட்டிக்கிட்டு வருது...’

    இந்தப் பக்குவத்தில் ஒரு கடுகுகூடக் குறையக்கூடாது. குறைந்தால் அவ்வளவுதான் பெரிய போரே நடந்துவிடும்.

    ‘நான் என்ன விருந்தா கேட்டேன்? என்னவோ வாயைத் திறந்து செய்யுன்னு சொல்லிட்டேன். முடியும் முடியாதுன்னு சொல்லிட வேண்டியதுதானே? எல்லாம் என் தலையெழுத்து...’

    இரவு சுண்டக் காய்ச்சின பால் குடித்துவிட்டுப் படுக்கும் வரை நீண்டு கொண்டே போகும். இதெல்லாம் தினமும் நடப்பதுதான். என்றைக்காவது அமுதா நிமிர்ந்து பார்த்துவிட்டால் அவ்வளவுதான்...

    ‘உன் மனசில் என்ன டாட்டா, பிர்லா மகள்னு நினைப்பா? கொடுக்க வேண்டியதை, சொன்ன நேரத்தில் கொடுக்க வக்கில்லாதவன்தானே உங்கப்பன்? உனக்கு எதுக்கு இந்த முறைப்புங்கறேன்? சொன்ன வேலையைச் செய்துட்டுக் கிடக்கிறதானா கிட... இல்லை, இப்பவே வெளியே நட...’

    கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கலாம். இந்தப் புலம்பல் ஓயாது. எதற்குமே அமுதா வாயைத் திறக்கவேமாட்டாள்.

    அம்சாவுக்கு அது பெரிய குறை. ‘மெய்யாவே ஊமைன்னா பரவாயில்லை. என்ன அழுத்தமா இருக்கா! ஏதாவது பதில் சொன்னாத்தானே நாம திருப்பிப் பேசவும் ஒரு பிடிப்புவரும்? தட்டிவிட்ட டேப்ரெக்கார்டு மாதிரி நாமதான் தனியாப் பேசிகிட்டிருக்கணும். இப்படி ஒரு வேதனையை விலைகொடுத்து வாங்கிக்கிட்டிருக்கோமே...’

    மேடம்... மேடம்... நடத்துனர் கையிலிருந்த விசிலால் பக்கத்து இருக்கையில் தட்டினார். நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்திட்டுது... வேலை அதிகமா? வீட்டுக்குப் போய் ஓய்வு எடுங்க.

    அன்பும், பண்பும் நிறைந்த வார்த்தைகள். சட்டெனக் கண்ணைக் கலக்கிவிட்டன. நன்றி... வரேன் என்றபடி பேருந்தை விட்டு இறங்கினாள்.

    தினமும் அதே பேருந்தில் காலையும் இப்படி முன்னிரவுப் பொழுதும் வருவதால் அறிமுகமான ஓர் அந்நிய மனிதன். அவனுக்காக எந்தவிதத்திலும் உழைக்கப் போவதில்லை. காசு பணம் கொடுக்கப் போவதில்லை. தன்னைப்போல உழைக்கும் ஒரு மனித உயிர் என்கிற மனிதாபிமானம். இப்படி அன்பான வார்த்தைகளைக் கேட்டு எத்தனை நாளாகிவிட்டது! மனப்புண்ணில் மருந்திட்டது போல அது மாயம் செய்திருக்க வேண்டும். வேகமாக நடைபோட்டாள். திடீரென ஸ்கூட்டர் இடிப்பது போல குறுக்கே நிறுத்தப்பட்டது.

    புன்னகையுடன் மதன் கூப்பிட்டான். வா, அமுதா! வீட்டிற்குப் போகலாம்.

    ஒரு விநாடி யோசித்தவள் கேட்டாள். ஏன்... உங்கம்மா வீட்டில் இல்லையா?

    இல்லை... அம்மா பக்கத்து வீட்டுக்காரங்களோடு சினிமாவுக்குப் போயிருக்காங்க.

    அதுதானே பார்த்தேன். உங்கம்மா இருந்தால் இத்தனை துணிச்சலும், அக்கறையும் வராதே... நீங்கள் உங்கள் நண்பர்கள் வீட்டுக்குப் போயிட்டு, உங்கம்மா வந்தப்புறம் வந்து சேருங்கள்.

    அது வந்து... நான்... நீ... வா... அம்மா ஒண்ணும் சொல்லமாட்டாள்... தன் குரலிலே தெம்பில்லை என்பது மதனுக்கே புரிந்தது.

    உங்கம்மா இராத்திரி சமையலைப் பத்தி எழுதி வைச்சிட்டுப் போயிருப்பாங்க. எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கும். தயவு செய்து என்னை விட்டுடுங்க.

    விறு விறுவென தன்னைத் தாண்டி நடக்கும் தன் மனைவியைப் பார்த்துச் சிலையாகி நின்றான் மதன்.

    2

    வேலை முடித்து சமையலறையில் பாயை விரித்தாள். படுத்ததுமே தூங்கிவிடும் வழக்கமெல்லாம் போய்விட்டது. சன்னல் வழியாக தோட்டம் தெரிந்தது. மல்லிகைக் கொடியில் வெள்ளை முத்துக்களாய் அரும்புகள் இலைகளை மறைத்துக் கொண்டிருந்தன.

    வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அம்சா புலம்பிக்கொண்டே கதவைத் திறப்பது கேட்டது.

    "கணவன் வருவானே..., சாப்பாடு போடணுமேன்னு ஒரு பதைப்பு இருந்தாத்தானே? நீ போய் துணி

    Enjoying the preview?
    Page 1 of 1