Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதல் ஒருவனை கை பிடித்தே...
காதல் ஒருவனை கை பிடித்தே...
காதல் ஒருவனை கை பிடித்தே...
Ebook254 pages1 hour

காதல் ஒருவனை கை பிடித்தே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அமுதா... திருமணம் முடிஞ்சு ஒரு வாரம்கூட ஆகலை... அதுக்குள்ளே அலுவலகத்துக்கு வந்திட்டியே... ஒரு மாதம் விடுமுறை எடுத்திருந்தாய் அல்லவா?"
 தலைநிறைய பூவும் பட்டுச்சேலையுமாக அலுவலகத்தில் நுழைந்தவளைக் கண்டு அத்தனை பேரும் வியந்தார்கள். அமுதா புன்னகையுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்.
 "நானேதான்... ஏன் இப்படி மலைச்சுப் போயிட்டீங்க? எங்க வீட்டுக்காரருக்கு விடுமுறை கிடைக்கலை. பெங்களூருக்கு அவசரமா போகச்சொல்லி அவங்க நிர்வாக இயக்குநர் அனுப்பிட்டார். வீட்டில் எந்த வேலையும் இல்லை. எல்லாத்தையும் அத்தை பார்த்துக்கறாங்க. சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தூங்கி எழுந்திருக்கறது அலுப்பா இருந்தது. அதுதான் வந்துட்டேன்."
 "அது என்னமோடியம்மா... உங்க புகுந்தவீடு அதிசயமாத்தான் இருக்கு. எப்படியோ நீ நல்லா இருந்தா எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதான்!"
 "அதெல்லாம் சரி... உங்க வீட்டுக்காரர் பெரிய புரட்சிக்காரர்னு கேள்விப்பட்டோமே... ரொம்ப ரொம்ப முக்கியமானதை திருமணத்தன்னிக்கு வேண்டாம்னு சொல்லிட்டாராமே... ஒரு வாரத்தில் கெடு முடிஞ்சிருக்கணுமே... என்ன பத்தாம் மாசம் தொட்டில்தானா? இந்த மாதிரி புரட்சிக்காரங்களை நம்பமுடியாதும்மா... ரெட்டையா பிறந்தாலும் பிறக்கும்..... உண்மையைச் சொல்லிடு..."
 அமுதாவுக்கு வெட்கத்தில் முகம் கன்றிப்போனது. சொல்லமுடியாத உணர்ச்சியுடன் "இல்லை" என்று தலையசைத்தாள். இதுவரை கிண்டலும் கும்மாளமுமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் சட்டென மவுனமானார்கள். ஒருவரை ஒருவர் கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டவர்கள், வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள்.மதிய உணவு இடைவேளையில் வயதில் பெரியவளான நீலா, அமுதாவைத் தனியாக அழைத்துக் கேட்டாள்.
 "அமுதா... நீ தப்பா புரிஞ்சுக்கலைன்னா ஒன்று சொல்லட்டுமா? பொதுவா சில குடும்பங்களில் பிள்ளையைப் பெத்தவங்களோட வேண்டாத பிடிவாதத்தினால் தள்ளிப்போகிற முதலிரவை இங்கே மாப்பிள்ளை தள்ளி வைத்திருக்கிறார். அன்னிக்குச் சொன்ன காரணம் பாராட்டுக்கு உரியது. ஆனால், அந்தக் கெடு இன்னும் முடியலைங்கிறபோது கொஞ்சம் யோசனையா இருக்கு. நீ உலக அனுபவம் இல்லாதவள். ஆண்கள்கிட்டே கவனமா இருக்கணும். அதுவும் உன்னைப்போல அழகுப் பெண்ணைத் திருமணம் செய்துகிட்டு இப்படி சாமியார் மாதிரி பேசறவங்ககிட்டே ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும். உன் கணவர்கிட்டே சில விசயங்கள் சரியில்லாதது மாதிரி தோணுது. உடனே அதை தெளிவுப்படுத்திக்க...!"
 தன் கையைப் பிடித்து இருந்தவளை உதறினாள் அமுதா. "நீங்க வயசில் பெரியவங்கன்னு உங்கமேல் ரொம்ப மரியாதை வெச்சிருந்தேன். ஆனால், நீங்க இத்தனை கேவலமா இருக்கீங்களே... நீங்க எனக்கு ஒண்ணும் அறிவுரை சொல்ல வேணாம். என் கணவரைப் பத்திப் பேச நீங்க யாரு? உங்க வேலையை மட்டும் பாருங்க. அடுத்தவங்க படுக்கையறையை மோப்பம் பிடிக்காதீங்க..."
 நீலாவுக்கு அமுதா மீது கோபம் வரவில்லை. பரிதாபம் கிளர்ந்தது. "புதுமோகம்" என்று முணுகியபடி திரும்பினாள்.
 அமுதாவுக்குக் கோபம் அடங்கவே இல்லை. வீட்டுக்குப் போனால் தேவலாம் என்றிருந்தது. விடுமுறை எழுதிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.
 பேருந்தில் போகும்போதுகூட கோபம் அடங்கவில்லை. 'என்ன பெண்கள்... எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்து. வம்பு பேசித் திரிந்து... எப்போதும் அன்பும் அனுசரணையுமான பேச்சுமாக கிருபா... கிடைக்குமா உனக்கு... என்னிடம் அவருக்கு இல்லாத உரிமையா? ஒரே வீட்டில்தானே இருக்கிறோம்? ஒரு தொடல் சீண்டல் எதுவுமில்லையே. சொன்ன வார்த்தை சொன்னதுதான். அத்தைதான் ஆகட்டும், ஒரு வார்த்தை பேசறாங்களா? பொறாமைக்காரர்கள் எதையாவது பேசிப் பிரச்னையைப் பெரிசாக்கிவிடுகிறார்கள். இதையெல்லாம் அத்தையிடமோ, அவரிடமோ சொல்லிவிடக்கூடாது. ரெண்டு பேரும் வேதனைப்பட்டுடுவாங்க...இறங்குவதற்கு இரண்டு நிறுத்தத்திற்கு முன்னால் தான் நினைவுவந்தது. 'சாந்தா தன் அண்ணன் வீட்டுக்கு போயிருப்பாள் என்பது. அத்தை இல்லாமல் வீடு வெறிச்சென்றிருக்குமே. அப்பாவைப் பார்த்துவிட்டு வரலாம்.'
 அப்பாவுக்குப் பிடித்த பச்சை திராட்சைப் பழம் வாங்கிக்கொண்டு பேருந்து மாறினாள். மனதுக்குள் குற்ற உணர்ச்சி. பிறந்தது முதல் பிரியாத பெற்றவர்களை இந்த ஏழு நாளாக நினைக்கக்கூட நேரமில்லாமல் போய்விட்டது. புதுமோகம் கண்ணை மட்டுமல்ல, புத்தியையும் மாற்றியிருக்கிறது. அம்மாவை எப்படி எதிர்கொள்வது என்று பயமாகக்கூட இருந்தது. வீடு நெருங்க நெருங்க நடை ஓட்டமாக மாறியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223138815
காதல் ஒருவனை கை பிடித்தே...

Read more from Megala Chitravel

Related to காதல் ஒருவனை கை பிடித்தே...

Related ebooks

Reviews for காதல் ஒருவனை கை பிடித்தே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதல் ஒருவனை கை பிடித்தே... - Megala Chitravel

    1

    தை பிறந்தால் வழி பிறக்கும்! அமுதாவுக்கும் வழி பிறக்கிறது! அவளைப் பெண்பார்க்க கிருபா வருகிறான். ஆனால், அமுதாவுக்கு வழி திறந்ததா? பொங்கல் போன்று இனிமையாகக் கதை தொடங்குகிறது!

    கருமேகக் கூட்டைவிட்டு செங்கதிர் பறவை தங்கச் சிறகு விரித்து வானவீதியில் பறந்து பூமிக்கு வரும் இளங்காலைப் பொழுது.

    வீட்டுவாசலில் மாவிலைத் தோரணம் காற்றில் அசைய, வண்ணப் பூக்கோலத்துக்கு நடுவில் ‘பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ மின்னின.

    வீடெங்கும் பச்சைமஞ்சளும் கரும்பும் கலந்த புதுவாசம். பச்சரிசியும் வெல்லமும் நெய்யோடு இசைந்து பரவிய இனிப்பு மணம்.

    வாங்க... வாங்க... வணக்கம்... பொங்கல் நல் வாழ்த்துக்கள்! அப்பாவின் உற்சாகக்குரல் கேட்டதும் அமுதாவின் முகத்தில் லேசான நாணம். போன வாரம் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

    அமுதா... உனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். நல்ல இடங்களிலிருந்து பெண் கேட்டு வருகிறார்கள். உன்னை ஒரு வார்த்தை கேட்டு முடிவெடுக்கலாம் என்று இருக்கிறேன். நீ படித்து வேலைக்குப் போகிற பெண். ஒருவேளை உனக்கு யார் மீதாவது விருப்பம் இருந்தால், அதை வெளிப்படுத்து. தயங்க வேண்டாம். உன் மீது திணிக்கப்படும் எந்த முடிவையும் எங்களுக்காக ஏற்றுக்கொண்டு நீ துன்பப்பட வேண்டாம். உன் மகிழ்ச்சிதான் எனக்கு வேண்டும்.

    அமுதாவுக்கு உள்ளம் குழைந்து, உயிர் உறைந்தது. கண்கள் கசிந்தன. இப்படி ஒரு அப்பாவுக்கு மகளாகப் பிறக்க எத்தனை பிறவி தவம் செய்திருக்கிறேனோ... அப்பா இத்தனை சுதந்திரம் கொடுத்திருப்பதாலோ என்னவோ, இத்தனை வயது வரையிலும் மனம் எந்தக் கணத்திலும் அலைபாய்ந்ததில்லை.

    படிக்கும்போது முதல் மதிப்பெண்ணும் முதல் வகுப்பும்தான் குறிக்கோள். வேலைக்குப் போகும் போது நல்ல உழைப்பாளி என்று பெயர் பெறுவதிலும் பதவி உயர்வு பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற முழுமுனைப்பும்தான். மற்றபடி யாரையும் கண்டு மனமிழக்கத் தோன்றியதில்லை.

    என் மீது இத்தனை பிரியம் வைச்சிருக்கீங்களே அப்பா... எனக்கு அப்படி எல்லாம் எதுவும் எண்ணம் இல்லை. உங்கள் விருப்பம் போல் செய்யலாம்.

    "ரொம்ப மகிழ்ச்சி அமுதா... போன வாரம் தரகர் ஒரு பையனைப் பற்றிச் சொன்னார். நானும் அவன் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தேன். நல்ல வேலை. தகப்பன் இல்லாத பிள்ளை. சொந்தம்னு சொல்லிக்க அம்மாவும் தாய்மாமன் ஒருத்தரும்தான் இருக்காங்க.

    பையன் பார்க்க சிவப்பா, உயரமா பளிச்சின்னு இருக்கான். நல்ல பணிவா, பண்பா பழகறான். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீயும் ஒருமுறை பையனைப் பார்த்துவிட்டால் நல்லது. உனக்கு விருப்பமானால் மேற்கொண்டு பேசலாம். இல்லை என்றால் விட்டுவிடலாம். பொங்கல் அன்று வரச்சொல்லி இருக்கிறேன்."

    "அமுதா...! அப்பா கூப்பிடுகிறார் வா..." அம்மாவின் குரல் கூப்பிட்டது. அமுதாவுக்குத் தன்னையும் மீறி ஒரு தயக்கம் வந்தது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கூடத்துக்கு வந்தாள்.

    அறிமுகம் முடிந்ததும் அவளை அருகே அழைத்து உட்கார வைத்துக்கொண்டாள், சாந்தா.

    அமுதா, ஏன் இப்படிப் பதட்டமா இருக்கே? இயல்பா இரு... உனக்கு ஆடத்தெரியுமா, பாடத் தெரியுமான்னு கேட்டுத் தெரிஞ்சுக்க நாங்க இங்கே வரலை. எனக்கு வேண்டியது எங்கள் கிருபாவுக்கு அன்பான மனைவி. குடும்பத்துக்கு நல்ல மருமகள். உன் விருப்பத்தைச் சொன்னால் மேற்கொண்டு பேசலாம்.

    அமுதா நிமிர்ந்து கிருபாவைப் பார்த்தாள். அப்பா சொன்னது போலவே பளிச்சென்று இருந்தான். சாந்தாவும் நல்லவளாகத் தெரிகிறாள். அப்பாவுக்கும் பிடித்திருக்கிறது. அப்பாவுக்குத் தெரியாததா? ஒப்புக்கொள்ளலாம். அப்பாவைப் பார்த்து தலையசைத்தாள். அங்கிருந்த அத்தனை முகங்களிலும் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது!

    கிருபாகரன் அப்பாவிடம் கேட்டான், சார், உங்க அனுமதியோடு அமுதாவிடம் கொஞ்சம் பேசலாம்னு நினைக்கிறேன்...

    அப்பா சம்மதம் தெரிவித்து தலையசைத்தார். பக்கத்தில் இருந்த அறைக்குள் இருவரும் சென்றார்கள்.

    கிருபா புன்னகைத்தான். "உட்காருங்க அமுதா. திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதற்கு நன்றி. நீங்க எம்.ஏ.வில் தங்கப்பதக்கம் வாங்கி தேர்வு பெற்றவராமே... பாராட்டுகள்... நல்ல வேலையில் இருப்பதாகவும் மேலும் மேலும் பதவி உயர்வுக்கு வாய்ப்பு இருக்கு என்றும் உங்கள் அப்பா சொன்னார். என் வாழ்வின் இலட்சியத்தை எப்படிச் சொல்வதென்று தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் சொல்லத்தான் வேண்டும்.

    திருமணத்துக்கு பிறகு நீங்கள் வேலையை விட்டுவிட வேண்டும். தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வீட்டில் தங்கப் புறாவாக, காதல் தலைவியாக இருக்க வேண்டிய என் மனைவியை வேலைக்கு அனுப்பி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொல்லை தர எனக்கு விருப்பமில்லை. பெண்ணைப் போற்றி பாதுகாக்கணுமே தவிர, பேருந்தில் அலையவைத்து சீரழிய வைக்கக்கூடாது. பகலெல்லாம் கோப்புகளோடு போராடி பல பேருக்கு பதில் சொல்லி, வீட்டிலும் வேலை செய்து தவிக்கவா பெண்கள் இருக்கிறார்கள்? இல்லை... நிச்சயமாக இல்லை!

    மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ நினைப்பவன் மனிதனே இல்லை. என்னால் என் மனைவியை நன்கு பார்த்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்க முடிவைச் சொல்லலாம்."

    அமுதா வியந்துபோனாள். மாதம் ஐந்தாயிரம் சம்பாதிக்கும் தன்னைப் போன்ற ஒரு பெண்ணை பணத்துக்காக மட்டும் ஆண்மகன் ஒப்புக்கொள்ளக்கூடும். அலுவலகத்தில் தினம் தினம் எத்தனை கண்ணீர் கதைகளை கேட்கிறாள். அதிகம் படிக்காதவளைக்கூட கூலிவேலைக்கு அனுப்பும் ஆண்கள் மத்தியில் இவன் நிச்சயம் வித்தியாசமானவன். மனைவியை ராணி மாதிரி வைத்துக்கொள்வதற்காகவே வேலையை விடச் சொல்லுகிறவன் கொஞ்சம் அபூர்வமானவன் தான். இந்த எண்ணமும் கொள்கையும் சிறப்பானவைதான். ஆனால், இந்தப் புதுயுகத்தில் நடைமுறை சாத்தியமா?

    ஆணுக்கு மட்டும்தான் உழைப்பது உரியதென்றால், பெண்ணுக்கு தின்பது மட்டுமே உரியதா? இருவரும் உழைத்துச் சம்பாதித்தால் மட்டும் குடும்பச்சுமையை பகிர்ந்துகொள்ள முடியும். ஒருவனைக் கைபிடித்தல் மட்டும் பெண்ணுக்கு விதிக்கப்படவில்லை. அவன் காரியங்கள் யாவினுக்கும் கைகொடுக்கவும்தான் விதிக்கப்பட்டிருக்கிறது. அமுதாவின் முகத்தில் தெளிவு.

    உங்கள் பெருந்தன்மை எனக்குப் புரிகிறது. உங்கள் விருப்பப்படியே வேலையை விட்டுவிடுகிறேன். ஆனால், இப்போது இல்லை... என்று சொன்னவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது. தலைகுனிந்து மெல்லிய குரலில் தொடர்ந்தாள்.

    குழந்தை பிறந்தவுடன் வேலையை விட்டுவிடுகிறேன். அதுவரை என் சம்பளப் பணத்தை சேமித்து வருவோம். பிற்காலத்தில் வரப்போகிற செலவைச் சமாளிக்க அது உதவுமே...

    கிருபா கைதட்டி தலைகுனிந்து சலாமிட்டான். இருவரும் புன்சிரிப்புடன் வெளியே வந்தார்கள்.

    தரகர் தன் வேலையில் கவனமாக இருந்தார். அப்போ மேற்கொண்டு பேசலாமே... வரதட்சணை, நகை மத்த பொருட்கள்...

    அவரை இடைமறித்தான் கிருபா. கடைசியில் உங்க வேலையைக் காட்டிட்டீங்களே... இதுவரை நானும், எங்கம்மாவும் சட்டியில் சாப்பிட்டு, இலை தழையைக் கட்டிக்கிட்டு மரக்கிளையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது பாத்திரம், துணிமணி, இருக்க இடம், புழங்க நாற்காலி, கட்டில் வாங்கிக் கொடுத்து இந்தப் பெண்ணையும் கூட அனுப்பிவைப்பார். அப்படித்தானே? என்னை என்ன மானங்கெட்ட மடையன்னு நினைச்சுக்கிட்டீங்களா? இல்லை, இதுநாள்வரை உப்பு போட்டு சோறு தின்னாதவன்னு முடிவு பண்ணிட்டீங்களா? எனக்கு எதுவும் வேண்டாம் சார்...

    எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டா எப்படி மாப்பிள்ளை... அப்பா தயங்கினார்.

    தேடினாலும் கிடைக்காது. தவம் இருந்தாலும் கிடைக்காது. அத்தனை மேன்மையானது. உலகத்தை உய்விக்கும் அமிர்தத்தை ஒரு பெண்ணாக்கி எனக்குச் சொந்தமா தருகிறீர்களே... அது போதும்.

    அப்பாவும் அம்மாவும் வாயடைத்துப் போனார்கள். அமுதா இமைக்க மறந்தாள்.

    சாந்தா, ஏங்க தரகரே... எங்க கிருபாவுக்கு இதெல்லாம் பிடிக்காது மறந்தும் பேசிடாதீங்கன்னு நான் நேத்தே சொன்னேனே... இப்ப பாருங்க எத்தனை வருத்தப்படறான்...

    மன்னிச்சிடுங்க தம்பி... எல்லா இடத்திலும் பேசிப்பேசிப் பழக்கமாகிப் பேச்சு... அதுதான்...

    பரவாயில்லை என்பது போல கிருபா புன்னகைத்தான். திருமணவேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. சாந்தாவின் விருப்பப்படி திருமணத்தன்றே வரவேற்பு அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டது.

    அமுதாவின் அறை சிரிப்புச் சத்தத்தில் அமளிப்பட்டது. கையில் பழச்சாறுடன் வந்த சாந்தாவைப் பார்த்ததுவும் சத்தம் நின்றது.

    நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கக்கூடாதா அமுதா? தூங்கி விழிச்சாக்கூட நல்லது. அப்பதான் சாயங்காலம் முகம் நல்லா இருக்கும். நாலு மணிக்கு அழகு நிலையத்திலிருந்து ஆள் வரும். உனக்கு எப்படிப் பிடிக்குதோ அப்படியே அலங்காரம் பண்ணிக்க... முதலில் இந்தப் பழச்சாறை குடிச்சுக்க... உங்களுக்கெல்லாம் காபி அனுப்பறேன். அமுதாவைக் கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்க...

    சாந்தா வெளியேறியதும் அமுதாவின் தோழிகள் வாயைப் பிளந்தார்கள். என்னடி இது... உன் மாமியார் இப்படி இருக்காங்க... தங்கத்தட்டில் தாங்கிடுவாங்க போலிருக்கே... நீ எல்லாத்திலேயும் கொடுத்து வச்சவள். அப்பா தாங்கினது போதாதுன்னு மாமியார் வேற. உன் வீட்டுக்காரர் அதுக்கு மேல இருக்கார். பேசாமல் அவர் சொன்னபடி வேலையை விட்டுட்டு நிம்மதியா இருடி...

    தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே காபியும் அமுதாவைத் தூங்கி ஓய்வு எடுக்கும்படி சாந்தா சொல்லிவிட்ட சேதியும் வந்தது. சிநேகிதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்சிமிட்டிக்கொண்டே காபி குடிக்கலானார்கள்.

    வரவேற்பும் விருந்தும் முடிய அதிக நேரம் ஆகிவிட்டது. தரகர் மெதுவாக கிருபாவிடம் என்னவோ பேசினார். அவன் நிமிர்ந்து ஒருமுறை முறைத்தான்.

    ஏன் சார், உங்களுக்கு அறிவு இருக்கா? காலையில் இருந்து அந்தப் பெண்ணுக்கு ஓய்வு ஒழிச்சலே இல்லை. ‘இன்னிக்கே நாள் நல்லா இருக்கு; சாந்திமுகூர்த்தம் வைக்கலாமான்னு கேட்கிறீங்களே... உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? எங்கம்மாதானே உங்களைக் கேட்கச் சொன்னாங்க? அவங்களுக்கு வயசாச்சே தவிர, அறிவு வேலையே செய்யாது. முதலில் அவங்களைக் கூப்பிடுங்க...

    சாந்தா வந்ததும் கிருபாவின் சத்தம் அதிகமாகியது. ஏம்மா, உங்களுக்கு ஏதாவது நல்ல எண்ணம் இருக்கா? இப்ப எதுக்கு சாந்தி, வாந்தின்னு இம்சை பண்றே? முதலில் இந்த அலுப்பெல்லாம் தீரட்டும். அமுதா நம்மகூட நாலு நாள் நிம்மதியா இருக்கட்டும். இந்த வீட்டைப்பத்தி, நம்மைப்பத்தி புரிஞ்சுக்கட்டும். மனசாலும் உடம்பாலும் தயாராகட்டும். அப்புறமா நாங்க இரண்டு பேரும் கலந்து பேசி உங்களிடம் சொல்றோம். அப்போது ஏற்பாடு செய்யுங்க! புரியுதா? இப்ப நிம்மதியா போய் உடம்பை நீட்டிப் படுத்துத் தூங்குங்க. நீங்க அலைஞ்சிருக்கிற அலைச்சலுக்குப் பத்து நாள் ஓய்வு எடுக்கணும். நீங்க பாட்டுக்கு ஏதாவது வியாதியை வரவழைச்சுக்கிட்டு இந்தப் பொண்ணு வந்த நேரம்னு தொடர்பு இல்லாம சம்பந்தப்படுத்தி புலம்ப ஆரம்பிச்சிடாதீங்க... போங்கம்மா...

    அவனது கோப வார்த்தைகள் அத்தனை பேர் காதுகளிலும் விழுந்தன. அங்கே ஒரு பிரமிப்பான மவுனம் இறங்கியது. மனிதர்களில் இவன் காணக்கிடைக்காத தங்கம்.

    அமுதாவுக்குள் பீரிட்ட பெருமிதம் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. கிருபா இவ்வளவு மேன்மையானவரா... இத்தகைய உயர்ந்த பண்பாளரா என் கணவர்? வானத்து நட்சத்திரமெல்லாம் தலை மீது பொலபொலவென பூக்கள் கொட்டுவது போல அவளுக்குக் குதூகலம் பொங்கியது.

    மகளின் அந்தக் கனவுக் கோலம் அப்பாவுக்குள் மகிழ்ச்சியை விதைக்கவில்லை. கிருபா வார்த்தைகளால் மற்றவரை அசர வைக்க முடிந்தது. ஆனால், அப்பாவை வேறுவிதமாகச் சிந்திக்க வைத்தது.

    மனைவியை வேலைக்கு அனுப்ப மறுப்பவன் -சொன்ன காரணம் ஏற்ககூடியது. ஆனால், முதலிரவை மறுத்து அவன் சொன்ன காரணத்தைத்தான் ஏற்க முடியவில்லை? புதுப்பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்ளுவானாம்... அவள் பழகின பிறகு இவன் நாள் சொல்லுவானாம்... நாம் ஏற்பாடு செய்யணுமாம்... இது நம்பத்தகுந்ததா? நடைமுறைக்கு சரிப்பட்டு வருமா? அளவுக்கு மீறி நல்லவனாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் மனோபாவம்தான் வெளிப்படுகிறது.

    ஒருவேளை இவன் பதுங்கிப் பாயும் ரகத்தைச் சேர்ந்தவனோ... பூனை கூடத்தான் பதுங்கும். ஆனால், இது புலியாக இருந்துவிடுமோ... அப்பாவின் மனதில் புயல் மையமிடத் தொடங்கியது.

    2

    "அமுதா... திருமணம் முடிஞ்சு ஒரு வாரம்கூட ஆகலை... அதுக்குள்ளே அலுவலகத்துக்கு வந்திட்டியே... ஒரு மாதம் விடுமுறை எடுத்திருந்தாய் அல்லவா?"

    தலைநிறைய பூவும் பட்டுச்சேலையுமாக அலுவலகத்தில் நுழைந்தவளைக் கண்டு அத்தனை பேரும் வியந்தார்கள். அமுதா புன்னகையுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

    நானேதான்... ஏன் இப்படி மலைச்சுப் போயிட்டீங்க? எங்க வீட்டுக்காரருக்கு விடுமுறை கிடைக்கலை. பெங்களூருக்கு அவசரமா போகச்சொல்லி அவங்க நிர்வாக இயக்குநர் அனுப்பிட்டார். வீட்டில் எந்த வேலையும் இல்லை. எல்லாத்தையும் அத்தை பார்த்துக்கறாங்க. சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தூங்கி எழுந்திருக்கறது அலுப்பா இருந்தது. அதுதான் வந்துட்டேன்.

    அது என்னமோடியம்மா... உங்க புகுந்தவீடு அதிசயமாத்தான் இருக்கு. எப்படியோ நீ நல்லா இருந்தா எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதான்!

    அதெல்லாம் சரி... உங்க வீட்டுக்காரர் பெரிய புரட்சிக்காரர்னு கேள்விப்பட்டோமே... ரொம்ப ரொம்ப முக்கியமானதை திருமணத்தன்னிக்கு வேண்டாம்னு சொல்லிட்டாராமே... ஒரு வாரத்தில் கெடு முடிஞ்சிருக்கணுமே... என்ன பத்தாம் மாசம் தொட்டில்தானா? இந்த மாதிரி புரட்சிக்காரங்களை நம்பமுடியாதும்மா... ரெட்டையா பிறந்தாலும் பிறக்கும்..... உண்மையைச் சொல்லிடு...

    அமுதாவுக்கு வெட்கத்தில் முகம் கன்றிப்போனது. சொல்லமுடியாத உணர்ச்சியுடன் இல்லை என்று தலையசைத்தாள். இதுவரை கிண்டலும் கும்மாளமுமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் சட்டென மவுனமானார்கள். ஒருவரை ஒருவர் கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டவர்கள், வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள்.

    மதிய உணவு இடைவேளையில் வயதில் பெரியவளான நீலா, அமுதாவைத் தனியாக அழைத்துக் கேட்டாள்.

    அமுதா... நீ தப்பா புரிஞ்சுக்கலைன்னா ஒன்று சொல்லட்டுமா? பொதுவா சில குடும்பங்களில் பிள்ளையைப் பெத்தவங்களோட வேண்டாத பிடிவாதத்தினால் தள்ளிப்போகிற முதலிரவை இங்கே மாப்பிள்ளை தள்ளி வைத்திருக்கிறார். அன்னிக்குச் சொன்ன காரணம் பாராட்டுக்கு உரியது. ஆனால், அந்தக் கெடு இன்னும் முடியலைங்கிறபோது கொஞ்சம் யோசனையா இருக்கு. நீ உலக அனுபவம் இல்லாதவள். ஆண்கள்கிட்டே கவனமா இருக்கணும். அதுவும் உன்னைப்போல அழகுப் பெண்ணைத் திருமணம் செய்துகிட்டு இப்படி சாமியார் மாதிரி பேசறவங்ககிட்டே ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும். உன் கணவர்கிட்டே சில விசயங்கள் சரியில்லாதது மாதிரி தோணுது. உடனே அதை தெளிவுப்படுத்திக்க...!

    தன் கையைப் பிடித்து இருந்தவளை உதறினாள் அமுதா. நீங்க வயசில் பெரியவங்கன்னு உங்கமேல் ரொம்ப மரியாதை வெச்சிருந்தேன். ஆனால், நீங்க இத்தனை கேவலமா இருக்கீங்களே... நீங்க எனக்கு ஒண்ணும் அறிவுரை சொல்ல வேணாம். என் கணவரைப் பத்திப் பேச நீங்க யாரு? உங்க வேலையை மட்டும் பாருங்க. அடுத்தவங்க படுக்கையறையை மோப்பம் பிடிக்காதீங்க...

    நீலாவுக்கு அமுதா மீது கோபம் வரவில்லை. பரிதாபம் கிளர்ந்தது. புதுமோகம் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1