Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அம்மும்மா சொல்லும் அமுதகதைகள்
அம்மும்மா சொல்லும் அமுதகதைகள்
அம்மும்மா சொல்லும் அமுதகதைகள்
Ebook197 pages1 hour

அம்மும்மா சொல்லும் அமுதகதைகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆசிரியரின் தேர்தெடுத்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவரின் சிறுகதைகள் சிறுவர்களுக்கு வழிகாட்டியாகவும், பொழுது போக்காகவும் அமைகின்றன.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 30, 2023
ISBN9798223153504
அம்மும்மா சொல்லும் அமுதகதைகள்

Read more from Megala Chitravel

Related to அம்மும்மா சொல்லும் அமுதகதைகள்

Related ebooks

Reviews for அம்மும்மா சொல்லும் அமுதகதைகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அம்மும்மா சொல்லும் அமுதகதைகள் - Megala Chitravel

    1. வெளிச்ச வெள்ளம்...

    ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. அவருக்கு மூணு பிள்ளைங்க இருந்தாங்க. அதுல கடைசி பையன்: உங்களாட்டம் ரொம்ப சுட்டியாகவும், கெட்டிக்காரனாவும் இருந்தான். ராஜாவோட பிள்ளைங்களை இளவரசன்னு சொல்லுவாங்க.

    இளவரசங்க மூணு பேருக்கும் படிக்கற வயசு வந்ததும் ராஜா அவங்களை குருகுலத்துக்கு அனுப்பினாரு. இப்ப நீங்கள்ளாம் படிக்கற பள்ளிக்கூடங்கள் மாதிரி, அந்த கால பள்ளிக்கூடங்களை குருகுலம்னு சொல்லுவாங்க. அங்க குருநாதரும், அவரோட மனைவியும் இருப்பாங்க.

    படிக்கறதுக்குன்னு வர்ற மாணவர்கள் அங்கேயே தங்கிடுவாங்க.

    குரு அவங்களுக்கு எழுத, படிக்க கத்து தருவாரு. சண்டை போட, குதிரை ஏறி ஓட்டறதுக்குன்னு எல்லாமே கத்துக்கலாம். முக்கியமா ராஜாவோட பிள்ளைங்களுக்கு சண்டை பயிற்சி நிறைய சொல்லித் தருவாங்க. (இப்ப நீங்க தற்காப்புக்காக கராத்தே கத்துக்கலியா... அது மாதிரின்னு வைச்சுக்குங்களேன்).

    ராஜாவோட பிள்ளைங்க மூணு பேரும் படிப்பையெல்லாம் முடிச்சிட்டு அரண்மனைக்குத் திரும்பிட்டாங்க. அவங்களோட கெட்டிக்காரத்தனத்தைப் பத்தி தெரிஞ்சுக்க ராஜாவுக்கு ஆசை வந்தது. அதனால உங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் தேர்வு வைக்கறா மாதிரி ராஜாவும் தன்னோட மூணு பிள்ளைகளுக்கும் ஒரு தேர்வு வைச்சாரு.

    இளவரசங்களைக் கூப்பிட்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா ஒரு பொற்காசு குடுத்தார். அப்புறமா சொன்னாரு, இந்த பொற்காசை வைச்சு ஒரு இருட்டு அறையை ஏதாவது பொருள் வைச்சு நிரப்பணும். மூணு மணி நேரத்துக்குள்ள இந்த வேலையை முடிக்கணும். அதுவரைக்கும் நீங்க ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கக்கூடாது...

    கையில காசை வைச்சிக்கிட்டு மூணு இளவரசங்களும் தனித்தனியா உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசிச்சாங்க. அப்பறமா கடைவீதிக்குப் போனாங்க.

    மூணு மணி நேரம் முடிஞ்சதும் இளவரசங்க என்ன செய்திருக்காங்கன்னு பார்க்கறதுக்காக ராஜா ரொம்ப ரொம்ப ஆசையா வந்தாரு. அவரு கூட ராணியம்மா, மந்திரிங்க, சேனாதிபதின்னு நிறைய பேரு வந்தாங்க.

    முதல் இளவரசனோட அறைய தொறந்து பார்த்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டுது. ஏன்னா முதல் இளவரசன் வைக்கோல் பிரிகளை வாங்கி அறை முழுசும் அடைச்சு வைச்சிருந்தான். ராஜா எதுவும் பேசாமல் அடுத்த இளவரசனோட அறைக்குப் போனாரு. அவரு கூட வந்தவங்களும் பேச முடியாம அவரு பின்னாடியே போனாங்க.

    ரெண்டாவது இளவரசனோட அறை திறக்கப்பட்டுது. இப்ப ராஜாவுக்கு தலை சுத்திட்டுது. இவன் தன் அண்ணனை விட அதிபுத்திசாலியா இருந்தான். அந்த அறை முழுசும் வராட்டியை வாங்கி நிறைச்சு வைச்சிருந்தான். ராஜா தலையில அடிச்சிக்கிட்டாரு. ரொம்ப கோவமா மூணாவது இளவரசனோட அறைக்கதவை எட்டி உதைச்சாரு.

    ஆனா என்னாச்சு தெரியுமா?

    உள்ள பார்த்ததும் ராஜாவோட முகம் பூவாட்டம் மலர்ந்து போச்சு. ரொம்ப மகிழ்ச்சியா சிரிச்சாரு. அவரு கூட வந்தவங்களுமே கை தட்டினாங்க. என்ன காரணம் தெரியுமா?

    மூணாவது இளவரசன் அறை முழுசும் நெறைய அகல் விளக்குகளை ஏத்தி வைச்சிருந்தான். ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளில் இருந்து வந்த வெளிச்சம் அறை முழுசும் நிறைஞ்சு இருந்தது. அதோட சாம்பிராணி, ஊதுவத்தி, அகில்னு வாசனை தர்ற பொருட்களையும் ஏத்தி வைச்சிருந்தான். அறை வாசமா இருந்தது.

    வெளிச்சத்தையும், வாசனையையும் பார்த்த ராஜா ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சாரு. ‘அறையை நிரப்பணும்னு’ தான் சொன்னதை சரியா புரிஞ்சிக்காம வைக்கோல் பிரியையும், வராட்டியையும் போட்டு நிரப்பின மூத்த முட்டாள் இளவரசங்களை விட,

    அறிவுப்பூர்வமா சிந்திச்சி வெளிச்சத்தாலயும் வாசனையாலயும் அறையை நிறைச்சி வைச்ச மூணாவது இளவரசன்தான் புத்திசாலின்னு ராஜா புரிஞ்சுக்கிட்டாரு. தனக்குப் பின்னால நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்வான்னு முடிவு செஞ்சி அவனை தன் பட்டத்து வாரிசா அறிவிச்சி இளவரசு பட்டம் கட்டினாரு.

    எப்பவும் படிச்ச படிப்பையும், அறிவையும் சரியா பயன்படுத்தணும்னு மூத்த இளவரசங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டாங்க.

    2. எறும்புகளும் வெட்டுக்கிளியும்...

    ஒரு ஊர்ல ஒரு பெரிய காடு இருந்துது. காட்டு ஓரத்தில் பச்சைப் பசேல்னு புல்வெளியும், பூச்செடிங்களுமா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். எப்பவும் சலசலன்னு தண்ணி ஓடற ஒரு ஓடையும் அங்க இருந்துது.

    காட்டுக்குள்ள சிங்கம், புலி, யானை, கரடி, சிறுத்தைன்னு பெரிய மிருகங்களும், புல்வெளியில் மான், முயல், பசுன்னு சாதுவான மிருகங்களும் வாழ்ந்துகிட்டிருந்தன. அதது தன்தன் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கும். அதனால அந்த இடம் அமைதியா இருந்தது.

    இந்தப் புல்வெளியில் ஒரு வெட்டுக்கிளியும் இருந்துது. புல்வெளியோட ஈரக் கரையில நெறைய எறும்புக்கூட்டங்களும் உண்டு. அதுங்க எப்ப பாரு சுறுசுறுப்பா ஏதாவது வேலை செய்துக்கிட்டே இருக்கும். யார்கூடவும் பேசாதுங்க.

    காலங்களில் அழகானதான வசந்தகாலம் வந்திட்டுது. பச்சைப் பட்டுப் பாய விரிச்சா மாதிரி புல்தரையெல்லாம் மினுமினுன்னு மின்னுது. செடிகளிலும், கொடிகளிலும் வண்ண வண்ணமா பூக்களா பூத்துக்கிடக்கு. பூ இருந்தா பட்டாம்பூச்சி கூட்டம் கூட்டமா - வரும்னு. உங்களுக்குத்தான் தெரியுமேடா செல்லங்களா... எங்கப் பார்த்தாலும் வண்ணம் தான். அந்த இடமே வானவில்லை வாரித் தரையில் கொட்டினது போல வண்ணத் திருவிழாவா இருக்கு.

    பட்டாம் பூச்சிகளோட வெட்டுக்கிளிங்களும் கூட்டமா பறந்து வந்து புல்லுமேல உட்காரும். ரெண்டும் பச்சையா இருக்கறதால சின்னப் பூச்சிங்க அதுகளைப் பார்க்க முடியாதா... வெட்டுக்கிளிங்களுக்கு கொண்டாட்டம் தான். நெறைய சாப்பாடு கிடைச்சிது. ஆட்டமும் பாட்டமுமா கும்மாளமா காலத்கைக் கழிச்சிது.

    ஆனா இந்த அற்புதமான வசந்த காலத்திலக் கூட எறும்புங்க தங்களோட வேலைய நிறுத்தலை. வெட்டுக்கிளி எறும்புகளை வம்புக்கு இழுத்துது. இது மகிழ்ச்சியா ஆடிப்பாடிக்கிட்டு இருக்க வேண்டிய வசந்த காலம். இப்பகூட வேலை செய்து அலட்டிக்கிறீங்களே... அப்படி என்னதான் வேலை செய்யறீங்க?

    வரிசையா நடந்துகிட்டிருந்த சின்ன எறும்புங்க அதுக்கு பதில் சொல்லாம வேகமா நடந்துதுங்க. ஒரு பெரிய எறும்பு மட்டும் நின்னு சொல்லிச்சி, இப்ப வேணா வசந்த காலமா இருக்கலாம். அப்பறமா வரப்போற குளிர் காலத்துக்கு சாப்பாடு கிடைக்காம போயிடுமே... அதுக்காகத்தான் உணவு சேர்த்து வைக்கிறோம். எங்க குடும்பம் ரொம்ப ரொம்ப பெரிசு... அதனாலதான் முன்னேற்பாடா எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சேர்த்து வைச்சுக்கறோம்... ஆமா.. நீ வரப்போற குளிர்காலத்துக்கு எதுவும் சேர்த்து வைக்கலியா?

    வெட்டுக்கிளி, எறும்பை கேலியா பார்த்துது, அடே, முட்டாள் எறும்புங்களே... இந்தக் காடு எவ்வளவு பெரிசு? இங்க சாப்பாடு கிடைக்கலைன்னா... அந்தப் பக்கம் போயிட வேண்டியதுதானே?

    எறும்புக்கு எரிச்சலா வந்துது. இந்தப் பக்கம் குளிர் காலம் வந்தா, அந்தப் பக்கமும் குளிர் காலந்தானே வரும்? இதுகூட தெரியாத வெட்டுக்கிளிக்கிட்ட பேசிப் பயனில்லைன்னு அதுக்கு புரிஞ்சு போச்சு.

    உன்னால எங்கயும் பறந்து போவ முடியும். ஆனா எங்களால நெனைச்சதும் இடம் மாறிப் போவ முடியாது... நீ உன் விருப்பப்படியே இரு. என் வேலைய கெடுக்காதே... நீ போ அப்படின்னு சொல்லிட்டு எறும்பு வேகமா போயிட்டுது.

    வெட்டுக்கிளி அதைப்பார்த்து சிரிச்சுக்கிட்டு பறந்து போச்சி. எறும்பு சொன்னா மாதிரியே குளிர் காலம் வந்துது. பச்சைப் புல்லுமேல பனித்துளி விழ ஆரம்பிச்சிது... காத்து குளிரா அடிக்க ஆரம்பிச்சிது. தரையெல்லாம் ஈரமாயிட்டுது. பூக்களும் பூக்கலை... பூச்சிகளும் வரலை. எல்லா மிருகங்களும் வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியதாகிப் போச்சி. சிலது சாப்பாட்டுக்காக வேற இடம் போக கிளம்பிட்டுது.

    எறும்புங்க தங்களோட வீட்டை விட்டு வெளியவே வரலை. வெட்டுக்கிளிக்கு சோதனை ஆரம்பிச்சிட்டுது. குளிர்கால ஆரம்பத்தில் ஏதோ கொஞ்சம் சாப்பாடு கிடைச்சிது. நாளாக நாளாக அதுவும் கிடைக்கலை. பல நாள் வெட்டுக்கிளி பட்டினியா கிடக்க வேண்டியிருந்தது. குளிர்ல அதோட கை காலெல்லாம் விரைச்சுப் போச்சு. வெடவெடன்னு உடம்பு நடுங்கிச்சி. எங்கயும் - சாப்பாடு - கிடைக்காம வெட்டுக்கிளி வேற வழியில்லாம எறும்புங்க வீட்டுக் கதவைத் தட்டிச்சி. ஆனா எறும்புங்க உள்ள இருந்ததால அந்தத் தட்டு காதுல விழல. ரொம்ப நேரம் கதவை தட்டிட்டு வெட்டுக்கிளி குளிர்தாங்காம கீழே விழுந்து உயிரை விட்டிச்சி.

    மகிழ்ச்சியான காலத்தில கையில கிடைக்கறப் பொருளை கொஞ்சம் சேமிச்சு வைக்கறது எப்பவும் நல்லது இல்லையாடா பட்டுகளா?

    3. மைதாசு ராஜா

    ஒரு ஊர்ல மைதாசுன்னு ஒரு ராஜா இருந்தாரு. உலகத்திலயே தான்தான் ரொம்ப பெரிய பணக்காரனா இருக்கணும்னு பேராசை பிடிச்சவரு அந்த ராஜா. தன்கிட்டே கொட்டிக்கிடக்கற காசும் பணமும் போதாது... இன்னும் வேணும்னு அலைவாரு.

    ‘பேராசை பெருநட்டம்’னு மந்திரிங்கள்ளாம் எத்தனை தரம் எடுத்துச் சொன்னாலும் மைதாசு ராஜா கேட்டுக்கவே மாட்டாரு. காசு, பணம்னு . ஆசைப்பட்டாலும் தங்கத்து மேலதான் ராஜாவுக்கு ரொம்ப விருப்பம்.

    தினமும் சாமி கும்பிடறப்ப, சாமி... சாமி.. நான் தொட்டதெல்லாம் தங்கமா மாறிடணும்னு ஒரு வரம் மட்டும் குடுங்க சாமி அப்படின்னு வேண்டிக்குவாரு. இப்படியே பல வருஷமா அவர் வேண்டிக்கறதை தங்க தேவதை கேட்டுக்கிட்டே இருந்துது. ‘பாவம்... மைதாசு ராஜா... கேக்கற வரத்தை தருவோம்’னு நெனைச்சி ஒரு நாளைக்கு அவரு முன்னால வந்துது.

    பளபளன்னு மின்னிக்கிட்டு தங்க வண்ணத்தில தன்னோட முன்னால நிக்கற தேவதையை மைதாசு ராஜா வாயத் தெறந்துகிட்டு பார்க்கறாரு.

    தலையில இருந்து கால் வரைக்கும் தங்கத்தாலே ஜொலிச்ச தேவதையோட தலைமுடியும் ரெண்டு ரெக்கையும் கூட தங்கமாவே இருந்துது. தேவதை பேசிச்சி.

    மைதாசு ராஜாவே... ரொம்ப நாளா நீ கேட்ட வரத்தை தர்றதுக்காகத்தான் நான் வந்திருக்கேன். வரமும் தந்திடுவேன். ஆனா தொட்டதெல்லாம் தங்கமா மாறணும்னு நீ கேட்டதை இன்னொரு தரம் நல்லா யோசிச்சிக்க... ஒரு தரம் வரம் தந்திட்டா திரும்பி வாங்கிக்க முடியாது... கவனமா கேளு.

    மைதாசு ராஜா இந்த உலகத்திலயே இல்லை. வானத்தில் பறக்கறா மாதிரி இருக்கு. ‘கெடைச்ச வரத்தை எதுக்குத் திருப்பித் தரணும்? நான் மாட்டேன்... எனக்கு வரம் வேணும்’னு மனசுக்குள்ள நினைச்சுக்கறார்.

    தேவதையோட கால்ல விழறாரு, தேவதையே, நீங்க எனக்கு வரம் குடுங்க.. நான் எப்பவும் திருப்பித் தரவே மாட்டேன். உலகத்திலயே யாருக்கும் கெடைக்காத வரத்தைத் திருப்பித் தர நான் என்ன பைத்தியக்காரனா? எனக்கு வரம் தான் வேணும்...

    தேவதை அவரை ஒரு தரம் பார்த்திட்டு, சரி.. மைதாசு ராஜாவே... இந்தக் கணத்தில இருந்து நீ எதைத் தொடறியோ அது தங்கமா மாறிடும்ன்னு சொல்லிட்டு மறைஞ்சு போச்சு.

    மைதாசு ராஜாவுக்கு ஒண்ணுமே புரியலை. ரொம்ப மகிழ்ச்சியாகிட்டாரு... கும்மாளம் போட்டாரு... கூச்சல் போட்டாரு. தேவதை தனக்கு குடுத்த வரம் பலிக்குதான்னு பார்க்க ஆசைப்பட்டாரு. அதனால மொதல்ல தன் எதிரில் இருந்த குட்டி மேஜையைத் தொட்டாரு...

    என்ன ஆச்சரியம்... அந்த குட்டி மேஜை தங்கமா மாறிப்போச்சு. மைதாசு ராஜாவுக்கு நம்பவே முடியலை. நடந்தது நெசந்தானா இல்லை

    Enjoying the preview?
    Page 1 of 1