Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalanthorum Aram
Kalanthorum Aram
Kalanthorum Aram
Ebook184 pages1 hour

Kalanthorum Aram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thilagavathi, The first women IPS officer from tamilnadu. she is also an exceptional Tamil novelist, written over 100 novels, 100+ short stories, 50+ Articles transulated from verious languages, Readers who love the subjects social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Kalanthorum Aram

Read more from Thilagavathi

Related to Kalanthorum Aram

Related ebooks

Reviews for Kalanthorum Aram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalanthorum Aram - Thilagavathi

    40

    கடவுள்

    கடவுளை மனிதன் உருவாக்கினான் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள். அதாவது கடவுளோட உருவங்களை எதைப் பார்த்து அவன் இந்த உருவங்களைச் சமைச்சிருப்பான்? தன்னைப் பாத்துத்தான். தன்னோட வாழற மனுஷங்களைப் பாத்தும்தான். ஆரம்பக் காலத்துல மனுஷங்ககிட்ட மாடுங்க மட்டும்தான் சொத்தா இருந்திச்சு. தமிழிலே ‘மாடு’ன்னாலே செல்வம்னுகூட ஒரு அர்த்தம் உண்டு. அந்த மாடுங்கிற செல்வத்தை மத்தவங்க திருடிகிட்டுப் போயிடக் கூடாதுங்கறதுக்காக, கையிலே கத்தியும் வேலும் வில்லும் பிடிச்சிக்கிட்டிருக்கற சாமிங்களை அவங்க உருவாக்கியிருந்தாங்க. அப்பல்லாம் கடவுளுங்க ரொம்ப கோவக்காரங்க. அதனாலதான் நாம் கடவுளைக் காவல் தெய்வமுன்னு சொல்றோம். அப்புறம் மனுஷ சமூகம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சியடையத் தொடங்கிச்சு. அன்புதான் கடவுளோட உருவமுன்னு சமூகம் உணரத் தொடங்கிச்சு. சிவன், சுந்தரருக்கு நண்பராகிறாரு. விநாயகர் வியாசருக்கு எழுத்தராகிறார். கடவுளுங்க அன்புமயமானவங்களா ஆகறாங்க. காரைக்காலம்மையாரை அம்மா என்று முறை கொண்டாடி அழைத்து சந்தோஷப்பட்டுக்கிறாரு சிவபெருமான்.

    செருப்புக் காலோடு தன் தலையில் காலை ஊனுபவனுக்கு அருள்புரியறாரு ஒரு கடவுள். இன்னொரு கடவுள் பக்தன் சொல்லிட்டான்னு தன்னோட பாயைச் சுருட்டிக்கிட்டுக் கெளம்பறாரு. கல்லால் எறியறவன் மேலே அன்பும் அருளும் பொழியறார் ஒரு கடவுள். மண்ணுலகப் பெண்ணொருத்தி அணிஞ்சு அழகு பார்த்த மாலைதான் எனக்குப் பிடிச்ச மாலைங்கறாரு இன்னொரு கடவுள். இது எப்படிச் சாத்தியமாச்சு? மக்கள் அன்பு மயமானவங்க. அன்பே கடவுள்ங்கறதை அவங்க கண்டுபிடிச்சாங்க. உலகம் அன்பால் மட்டுமே நடக்குது.

    ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு அழகான கதையைச் சொல்லியிருக்கிறாரு. தண்ணிக்குள்ளே விழுந்து தத்தளிச்சிக்கிட்டிருக்கிற தேளைத் தண்ணியை விட்டு வெளியே எடுத்து ஒருத்தரு காப்பாத்துவாரு. பிரதியுபகாரமாகத் தேள் என்ன செஞ்சது தெரியுமா? அவரைக் கொட்டிடும். வலி தாங்காம அவர் கையை உதறினதும் தேள் மறுபடியும் தண்ணியிலேயே விழுந்துடுது. அவரு மறுபடியும் அந்தத் தேளைத் தண்ணியிலிருந்து எடுத்துத் தரையிலே விட்டுக் காப்பாத்துவாரு. மறுபடியும் அந்தத் தேள் அவரைக் கொட்டிடும். ராமகிருஷ்ணர் சொல்றார், கொட்டுறது தேளோட குணம். ஆனாலும் அடுத்த உயிருங்களுக்கு உதவ வேண்டியது மனித இயல்பு. இதைத்தான் ஒரு அருட்கவி, ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் என்கிறார். இதைத்தான் ஏசுகிறிஸ்து ‘ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு’ என்று உருவகமாச் சொல்றாரு. ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்று கேட்டுக்கறாரு ஒரு கவி.

    இரண்டு யுத்தங்கள் உலகத்தைப் பாலை நிலமாக்கினது நமக்குத் தெரியும். மிக முக்கியமான ஒரு மந்திரத்தை வள்ளுவர் நமக்கு வழங்கியிருக்கிறார். அம்மந்திரச் சொல் ‘அன்பு’ அந்த ஒற்றைச் சொல்லில்தான் குடும்பம், தாய் - தந்தை, மக்கள், கணவன் - மனைவிமார்கள், உறவு, நட்பு, பாசம் என்று அனைத்தும் கட்டப்பட்டிருக்குது.

    அன்பு ஒன்றுக்குத்தான் அடைக்கும் தாழ் இல்லை. செலவில்லை. ஆனால் வரவு உண்டு. வரவோ பலகோடி. உலகத்தில் எல்லாப்பொருளுக்கும் விலை உண்டு. அன்பில் மலர்ந்த ஒரு புன்னகைக்கு விலை ஏது?

    பூக்கள்

    பூக்களைச் சேக்கறவங்க தங்களோட மகிழ்ச்சியையும் சேத்துக்கறாங்க. தமிழர்களை விடவும் பூக்களை நேசிக்கறவங்க வேற யாரு இருக்க முடியும்? தமிழர்களோட வாழ்க்கையிலே ஒவ்வொரு கட்டத்துலயும் பூக்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. தமிழருங்க தாங்க வாழற இடத்தை அஞ்சு வகையாப் பிரிச்சிருந்தாங்கங்கறது நமக்குத் தெரியும். மலையையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சின்னாங்க. குறிஞ்சிங்கறது ஒரு பூவோட பேரு. காடுள்ள பகுதிக்கு முல்லைன்னு பேரு. ஆமா, நாம்ப நேசிக்கற அதே முல்லைப்பூதான். வயல்நிலப் பகுதிக்கு மருதம்னு பேரு. கடல் பகுதியை நெய்தல்னாங்க. வறட்சி மிகுந்த மணல்பகுதி பாலை. இதெல்லாம் பூக்களோட பேருங்கதான்.

    பழங்காலத்துல, தமிழருங்க வாழ்ந்த நேரங்களைக் காட்டிலும் சண்டை, போர்ன்னு கழிச்ச காலமே அதிகம். நமக்கு அது தெரியும். சண்டையை, யாராவது எப்படியாவது தொடங்குவாங்க. இல்லியா? ஒரு நாட்டினுடைய வீரருங்க பக்கத்து நாட்டுக்குப் போய் ஊர் எல்லையிலே இருக்கற மாடுங்களை ஓட்டிக்கிட்டு வந்துடுவாங்க. இந்த மாடு பிடிக்கற காரியத்துக்கு ஒரு பேரு வச்சிருக்காங்க. அதுவும் பூவோட பேருதான். அதுக்குப் பேரு வெட்சி. மாடுங்களைப் பறிகொடுத்தவங்க போய்ச் சண்டை போட்டு மீட்டுக்கிட்டு வருவாங்க. அதுக்குப் பேரு கரந்தை. அதுவும் ஒரு பூவோட பேருதான்.

    பொண்ணு பாக்கப் போனா பூ இல்லாம போக முடியுமா? கல்யாணத்துலே, அய்யர், ‘புஷ்பம் கொண்டு வாங்கோ’ம்பாரே. புஷ்பமில்லாம கல்யாணம் நடக்குமா? பிறப்பு தொடங்கி இறப்பு வரை பூவுங்க இல்லாம தமிழர் வாழ்க்கையே இல்லை.

    ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. இல்லீங்களா? சேலம்னாலே சிலருக்கு மாம்பழம் ஞாபகம் வரும். பண்ருட்டின்னா பலாப்பழம். திருச்சி, தஞ்சாவூருன்னா கதம்பம். நமக்குக் கதம்பம்னு ஒரு வார்த்தைதான் தெரியும். பூவுங்களைச் சேர்த்துக் கட்டற முறைகளிலே கண்ணி, தார், கத்திகை, கோதை, தாமம், திரளை, தெரியல், தொடலை, படலை, பிணையல், அலங்கல், மாலை, செண்டு, சரம்னு இன்னும் பலப்பல பேருங்க இருக்குது. பழைய கவிஞர்கள் மன்னர்களைத் தார் வேந்தே, அலங்கல் மார்பன்னெல்லாம் அழைச்சிப் பாராட்டியிருக்காங்க.

    வள்ளுவருக்குக் காதலை நெனைக்கறப்ப பூதான் ஞாபகத்துக்கு வரும். பூ எடுத்த எடுப்பிலேயே பூவா வந்துடறதில்லை. முதல்லே அரும்பாகி, அப்புறம் மொட்டாகி அப்புறம்தான் பூவாகுது. காதலும் அப்படித்தானாம். இன்னமும் நம்ப சினிமா கதாநாயகருங்க நாயகிங்களை மலரேன்னுதான் அழைக்கிறாங்க.

    நேருவுக்கும் ரோஜாப்பூக்களுக்கும் இருந்த உறவு உலகம் அறிந்ததுதான். பூக்களைப் பறிக்காதீங்கன்னும், பூக்கள் மேலே நடக்காதீங்கன்னும் பதைபதைப்போட உங்களைக் கேட்டுக்கற அறிவிப்புக்களை நீங்க பாத்திருப்பீங்கதானே?

    சரோஜினி நாயுடுவைக் கவிக்குயிலும்பாங்க. இந்திய சுதந்திரப் போராட்டத்துலே அவங்க கைதாகிச் சிறைப்பட்டிருந்த நேரம். கவிஞருக்குச் சும்மா இருக்க முடியலே. சிறை வாசலிலே ஒரு பூச்செடியை நட்டாங்க. தினம் நீர் வார்த்து அதை வளர்த்தாங்க. அதோட பேசுவாங்க. அதுவும் தலையை ஆட்டி ஆட்டி அவங்களோட பேசும். மனசாலே பேசற பேச்சுக்குப் பாஷை வேணுமா? ஒரு நாள் சிறை அதிகாரி, அவருக்கு அன்னிக்கு சாயங்காலம் சிறை வாசத்துலேயிருந்து விடுதலைன்னு சொன்னார். சிறையிலிருக்கறவங்களுக்கு விடுதலை கெடைச்சா அவங்க சந்தோஷப்படணும்தானே. ஆனா, அந்தம்மா சந்தோஷப்படலை. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு என்னை விடுதலை பண்ணுங்களேன்னாங்க. ஆச்சரியப்பட்டுப்போன சிறை அதிகாரி, ஏன்னு கேட்டாரு. இப்பதான் என் செடியிலே மொட்டு வச்சிருக்கு நாளைக்குப் பூத்துடும். அதைப்பார்த்துட்டு நாளை மறுநாள் போயிடறேன்னாங்க. பூக்களை நேசிக்கறவங்களால மனுஷங்களையும் நேசிக்க முடியும். மனுஷங்களை நேசிக்கறவங்களாலே பூக்களையும் நேசிக்க முடியும்.

    அழகு

    அழகைப் பற்றி எத்தனை விதமான கருத்துக்களைத்தான் நாம் வைத்திருக்கிறோம்? பெரும்பாலும் பெண்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் கொஞ்சம்கூட யோசிக்காமல் நாம் பயன்படுத்தும் சொல் இதுதான். அநேகமாக நாம் பயன்படுத்தும் அர்த்தமிழந்த சொற்களில் முதல் சொல்லே அதுதான். அவ எவ்வளவு அழகு.

    பெண்களைச் சிகப்பாக மாற்றுவதற்கு எத்தனை நிறுவனங்கள்? எத்தனை க்ரீமுங்க? பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் நீங்கள் சிவப்பாயிடுவீர்கள். நீங்க ஆணாக இருந்தால் கிட்டத்தட்ட ஒரு டஜன் பெண்கள் உங்க மேல் மோகமாகி உங்கள் மேல் வந்து விழுவார்கள். நீங்க பெண்ணாக இருந்தால் தெருவிலே அல்லது பொது இடத்திலே நீங்கள்தான் இளவரசி.

    உண்மையிலே சிவப்பு அல்லது பழுப்பு மனித குலத்துக்கு அழகைத் தருமா? உலகின் மாபெரும் அழகிங்கன்னு சொல்லப்படறவங்களெல்லாம் சிவப்பானவங்க இல்லைங்கறதே வரலாறு. அழகு, சிவப்பு நிறத்தில் இருக்க முடியாது. அது மனோபாவம் சம்பந்தப்பட்டது. அதோடு ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. புன்னகை செய்யும் எந்த முகமும் அழகற்றதாக இருக்கவே முடியாது. ஆரோக்கியம், மன விகசிப்பு, இவைதான் அழகின் மூலங்கள். தகழி, அவருடைய புகழ்பெற்ற நாவலான செம்மீனில் சித்தரித்திருக்கிற கதைத்தலைவி கருத்தம்மாவை ஆரோக்யமான ஸ்திரீ என்று மட்டுமே வர்ணிக்கிறார். அதைக் காட்டிலும் கூடுதலாக ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.

    ஒரு பெண்ணை, அழகு என்று சொல்லும் போது உங்கள் மூளையில் அவள் உடம்பைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. அவள் படித்த புத்தகங்கள், அவள் கேட்ட நல்ல சங்கீதம், அவள் காட்டும் அன்பு, அவளுடைய சமூக அக்கறை, சகமனிதர்கள் மேல் அவள் காட்டும் பரிவு, முகம் தெரியாதவர்களுக்கு உதவும் மேன்மை, இவை எதுவும் நீங்கள் சொல்லும் அந்த அழகென்ற சொல்லில் இல்லை. அப்புறம் எதை வைத்து நாம் அவளை அழகியென்கிறோம்.

    கண்ணுக்கு மை அழகு என்கிறோம். ஆனால், உலகத்தில் பல கண்டங்களில் வசிக்கும் பெண்களுக்கு மையிடுவது என்றால் என்னவென்றே தெரியாது. வயிறு சுருங்கியிருத்தல் பெண்களுக்கு மட்டுமா ஆண்களுக்கும்தான் அது ஆரோக்கியம்.

    நமது புத்தியில் இரண்டாயிரம் வருஷத்து அடிமைத்தனம் படிந்திருக்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நம்மை ஆதிக்கம் செலுத்தியவர்கள் எல்லாம் சிவப்புத்தோல்காரர்கள். இளவரசர்கள் ஊர்ந்துவரும் குதிரைகள்கூட வெள்ளை நிறத்தில் இருந்தால்தான் இளவரசர்களுக்கே மதிப்பு. தோலின் நிறத்தை ஜீன்களும், இனவரைவியல் தன்மைகளும் வரையறுக்கின்றன. நீங்கள் முப்பத்தி மூன்று ரூபாய் கொடுத்து வாங்குகின்ற களிம்புக்குழல் அல்ல.

    பீரங்கிப்படையைச் சேர்ந்த ஒரு ரஷ்ய ராணுவ வீரன் போர்க்களத்தில் பெரும் விபத்துக்குள்ளாகிறான். அவன் முகம் சுத்தமாகச் சிதைந்துபோகிறது. பதினெட்டு மாதங்கள் தீவிர அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஏதோ ஒரு விதமாக முகத்தை அறுவை மருத்துவ நிபுணர்கள் உருவாக்குகிறார்கள். அவன் முகம் அவனுக்கே அடையாளம் தெரியவில்லை. அவனுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பெற்றோர்களைப் பார்க்கக் கிராமத்துக்குப் போகிறான் அவன்.

    தன் வீட்டின் கதவைத் தட்டுகிறான். அவனுடைய அம்மா கதவைத் திறக்கிறாள். யார் நீ? என்கிறாள். தன் தாயாலேயே அவனை அடையாளம் காண முடியவில்லை. அம்மாவிடம் நான், உங்கள் மகனுடைய நண்பன் என்கிறான். அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறாள் தாய். தன் மகனைப்பற்றி விசாரிக்கிறாள். போர்க்களத்தில் அவள் மகன் ஆற்றிய வீரச்செயலை எடுத்துச் சொல்கிறான் அவன். தன் வீரத்தை, நண்பனின் வீரமாக மாற்றிச் சொல்கிறான் அவன். இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலையில் புறப்படுகிறான் அந்த வீரன்.

    சில நாட்களில் அம்மாவிடமிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1