Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbulla Pilaathuvukku
Anbulla Pilaathuvukku
Anbulla Pilaathuvukku
Ebook142 pages2 hours

Anbulla Pilaathuvukku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thilagavathi, The first women IPS officer from tamilnadu. she is also an exceptional Tamil novelist, written over 100 novels, 100+ short stories, 50+ Articles transulated from verious languages, Readers who love the subjects social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Anbulla Pilaathuvukku

Read more from Thilagavathi

Related to Anbulla Pilaathuvukku

Related ebooks

Reviews for Anbulla Pilaathuvukku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbulla Pilaathuvukku - Thilagavathi

    11

    முன்னுரை

    பஞ்சவன் காட்டு யக்ஷி

    நீண்ட காலத்துக்கு முன்பு நாகர்கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். அவள் இளமையும், செல்வமும் உடையவளாக இருந்தாள். உதவிக்கு யாருமின்றி, ஆண் துணையற்றவளாக அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். ஒரு நாள், ஒரு தமிழ் பிராமணன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தி, அவளோடு தொடர்பு கொண்டான்.

    மூன்று அல்லது நான்கு மாதங்களில் அவள் கருத்தரித்தாள். ஆறு மாதங்கள் ஆனதும் பிராமணன் அவளிடம் பேறு காலம் வரை அவள் பத்மநாபபுரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று சொன்னான். அவள் அவனை நம்பினாள். எனவே, அவள் தன்னுடைய கர்ப்ப காலத்தின் ஏழாவது மாதத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தன்னுடைய உடைமைகளை எல்லாம் ஒழுங்கு செய்து கொண்டு, தன் பணத்தையும், தனது உடைமைகளையும் ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு, பிராமணனோடு பயணம் மேற்கொண்டாள். அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல் பஞ்சவன் காட்டை அடைந்தார்கள். காட்டிலிருந்த கற்களின் மேல் நடந்ததில் அவள் விரைவாகவே களைத்துப் போனாள். அவளால் மேற்கொண்டு ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. பிராமணன் அவளைப் பாதையோரமாக இருந்த முட்களடர்ந்த கள்ளிச் செடியின் கீழே உட்காரச் சொன்னான். அவனும் அவளருகே உட்கார்ந்தான். அவள் தன் மூட்டையைக் கீழே வைத்துத் திறந்து, வெற்றிலை பாக்கை எடுத்து பிராமணனுக்குத் தின்னக் கொடுத்தாள். அவன் மகிழ்ச்சியோடு அவனுடைய கைகளை அவளைச் சுற்றிப் போட்டு, அவளைத் தன் மடியை நோக்கி இழுத்தான். அவள் களைப்பினால் உறங்கிப் போனாள்.

    அவள் நிச்சயமாக உறங்கிவிட்டாளா என்று பார்ப்பதற்காக பிராமணன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் தலையை மெதுவாக உயர்த்தி, அதை ஒரு பாறையின் மேல் வைத்தான். பிறகு அதன்மேல் இன்னொரு பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டான். வலி தாளாமல் அவள் கண்கள் தெறித்துத் திறந்தன. அவளுக்கு நேரே பாறையைச் சுமந்தவாறு குறிபார்த்தபடி பிராமணன் நிற்பதை அவள் கண்டாள். கள்ளிச் செடியை சுட்டிக் காட்டி, கள்ளிச் செடியே நீயே என் சாட்சி! என்று அலறியபடி, மறு உலகுக்கு நழுவிச் சென்றாள். அவளுடைய பார்வை அந்த ராட்சதனின் முகத்தில் நிலைத்திருந்தது. பிராமணன் மூட்டையையும் மற்றும் அவள் அணிந்திருந்த நகைகளையும் திருடிக் கொண்டு, அமைதியாக பத்மநாபபுரத்துக்குப் போய் அங்கு செளகரியமாக வாழ்ந்தான்.

    பாருக்குட்டி முதலில் கதையில் கவனமே செலுத்தவில்லை. என்றாலும் ஒரு பெண்மணி, கணவன், குறிப்பாகப் பஞ்சவன் காடு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் அவளை கவனிக்கச் செய்தன. பிராமணன் பத்மநாபபுரம் போய் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்தான் என்பதைக் கேட்டு அதிருப்தி அடைந்த அவள் அய்யோ! எவ்வளவு பயங்கரம்! அந்த பிராமணன் எவ்வளவு கொடியவன்! அவன் தன்னை நம்பியிருந்த பெண்ணைக் கொலை செய்தான். அத்தகைய தீய மனிதர்கள் இந்த உலகத்தின் எந்தவிதமான கஷ்டத்தையும் அனுபவிக்காமல் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பதை நினைக்கும்போது தெய்வக் கோபம் என்ற ஒன்று இல்லவே இல்லையோ என என்னை அது நினைக்க வைக்கிறது என்று சொன்னாள்.

    கார்த்தியாயினி அம்மா: பொறு மகளே! கதையை முழுமையாகக் கேட்காமல் நீ எப்படி அப்படிச் சொல்லலாம்? பிராமணன் நிச்சயமாக அவனுக்குரிய தண்டனையை பெற்றான். ஒருவர் தன்னுடைய செயல்களுக்கு இந்த உலகத்தில் தண்டனைகளையும், பலன்களையும் உடனடியாகப் பெறாமல் போகலாம். ஆனால், இது ஒரு அநியாயமான உலகம் என்ற முடிவுக்கு நீ வந்துவிடக்கூடாது. அவள் புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்தோடு கதையைத் தொடர்ந்தாள்.

    "பிராமணன் விரைவிலேயே தண்டிக்கப்பட்டான். ஒரு குறிப்பிட்ட நாள்வரை, அந்தக் காட்டு வழியில் பயணம் செய்வதை அவன் தவிர்த்தே வந்தான். நண்பர்கள் அவனை சுசீந்திரத்தில் நடக்க இருந்த தேர்த் திருவிழாவுக்கு தங்களோடு வரும்படி அழைத்தார்கள். பிராமணன் முதலில் தனக்குத் திருவிழாக்களில் விருப்பமில்லை என்றுதான் சொன்னான். ஆனால், மற்றவர்கள் அவன் சொல்லும் சாக்குப் போக்குகளை ஏற்றுக் கொள்வதாக இல்லை. தங்களோடு அவனும் வந்தேயாக வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். அவர்கள் பஞ்சவன் காட்டுக்கு வந்தபோது, ஒரு ஆலமரத்தின் கீழ், மிகவும் அழகான ஒரு பெண் தன் எதிரே தெய்வீக ஒளி சிந்திய ஒரு குழந்தையுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்கள். அந்தப் பெண்மணி பயணிகளைப் பார்த்து மோசமான சைகைகள் செய்தபடி இருந்தாள். அவள் பொன்னில் குளித்தது போல் காட்சியளித்தாள். பள பளக்கும் பட்டுப் புடவையை அணிந்திருந்தாள். அவள் நெற்றியில் அணிந்திருந்த திலகமோ, கண்களில் அணிந்திருந்த மையோ, தலையைச் சீவியிருந்த பாணியோ, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. மேலும் அவள் அணிந்திருந்த மலர்களின் மணம்!

    இந்த அறிகுறிகளிலிருந்து அவள் ஒரு விலைமாது என்பதைப் புரிந்துகொண்டு, பயணிகள் மேல் நோக்கி நடந்தார்கள். ஆனால் பிராமணனால் அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை அடக்க முடியவில்லை. அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான். அது ஒரு வெள்ளிக் கிழமை பிற்பகல். பிராமணனும் அந்தப் பெண்ணும் அருகருகே நடக்கத் தொடங்கினார்கள். அவர்கள் புரிந்த லீலைகள்! அந்தப் பெண்மணி ஒரு குழந்தையை வைத்திருந்தாள் என்பதை அவர்கள் இருவருமே மறந்து போய்விட்டார்கள். இத்தகைய ஐந்துக்கள்தான் பெண்களின் நல்ல பெயரைக் கெடுப்பவை. பிராமணன் அவளுடைய புருவங்களின் வீச்சில், தன்னிலை மறந்தவனாகி, அவளுடைய மையிட்ட கண்கள் அங்குமிங்கும் அலைவதைக் காண்பதிலும், அவளுடைய நாணம் மிகுந்த வார்த்தைகளிலும், அடிக்கடி அவள் பாடிய பாடல்களிலும், அவள் உடல் முழுவதையும் அசைத்துக் காட்டிய நடையிலும், அவ்வப்போது அவள் அவனுடைய கன்னங்களையும், மோவாயையும் கிள்ளிக் குத்தி, செல்லமாக அடித்ததிலும் போதை தலைக்கேறியவனாக ஆனான். இப்படி அவர்களுடைய தாளத்துக்கு ஏற்றபடி ஆடும் மனிதர்கள் இல்லையென்றால் பெண்கள் இன்னும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமானவர்களாக இருக்கமாட்டார்களா?"

    அவள் அந்தப் பிராமணனை அந்தக் கற்றாழை முட் புதருக்கு அருகே எப்படியோ அவள் அழைத்துச் சென்று, அதன் அடியில் அவனை உட்காரச் செய்தாள். நீண்ட காலத்துக்கு முன்பு செய்ததைப் போலவே, அவள் இந்த முறையும் வெற்றிலை பாக்கை எடுத்தாள். பிராமணன், கடந்த காலத்தில் நடந்தவற்றை எல்லாம் மறந்து போயிருந்தான்.

    இந்த உலகத்தில் ஒரு ஆணின் இதயத்தைவிடக் கடினமானது வேறு ஏதாவது இருக்கிறதா? பெண்களைப் பொன்னே! கண்ணே! கண்மணியே! என்றெல்லாம் கொஞ்சி இனிமையாகப் பேசி மயக்குகிற ஆண்கள், பயங்கரமான கனவுகளில்கூட நம்பத்தகாதவர்கள். பெரும்பாலும் பெண்கள் மட்டும்தான் இதயத்தை உருக்குகிற அன்புடையவர்களாக இருக்கிறார்கள்.

    ஒரு காலத்தில், பிராமணன் உபயோகப்படுத்திய இரண்டு பாறாங்கற்களும் அவன் பக்கத்திலேயேதான் இருந்தன. ஆஹா! ஆனால், அவன் எதையும் பார்க்கவில்லை. அவன் அந்த விபச்சாரியின் புன்னகையில் தன்னை இழந்திருந்தான். அவள் வாயிலிருந்த வெற்றிலையைத் தன் வாயில் எடுத்துக் கொள்வதற்காக, அவன் அவளை நெருங்கிச் சென்று, தன் வாயைப் பெரிதாகத் திறந்தான். திடீரென்று ‘அய்யோ, அப்பா! அவன் என்னை ஏமாற்றிவிட்டான்!’ என்று பஞ்சவன் காடு முழுவதையும் நடுங்கச் செய்யும்படி பெரிதாகக் குரலெடுத்துத் திடீரென்று கூச்சலெழுப்பினாள். அவ்வாறு கூச்சலெழுப்பிய பிறகு பிராமணன் துள்ளியெழுந்து ஓடத் தொடங்கினான். பல காலத்துக்கு முன்னால் அவன் பயன்படுத்திய அதே கல் காலில் தடுக்க, அவன் கீழே விழுந்தான்.

    அந்தப் பெண்மணி தன்னுடைய மாறுவேடத்தை களைந்துவிட்டு, அவனுடைய கர்ப்பிணி மனைவியாகத் தன்னை மாற்றிக் கொண்டாள். விழுந்த இடத்திலிருந்து கையாலாகாதவனாக அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய மனைவியின் உருவமும் மாறத் தொடங்கியது. பஞ்சவன் காட்டின் யக்ஷியே பிராமணன் எதிரில் நின்றாள். அவளுடைய உருவம் வானம் வரை உயர்ந்து காடு முழுவதும் நிறைவது போல வளர்ந்து அச்சமூட்டத்தக்கதாக ஆயிற்று. எடுப்பான பற்களும், ரத்தம் போலச் சிவந்து தரை வரையிலும் தொங்கிய நாக்கும், நெருப்புத் துளிகளைச் சிதறி அடித்த குகை போலத் திறந்த வாயுமாகத் தன்னுடைய அடர்ந்த தலைமுடி மரங்களைப் போல நிமிர்ந்து நிற்கக் காட்சியளித்தது. யக்ஷியின் வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும், கண்களிலிருந்தும் தீயும், புகையும் பயங்கரமான கர்ஜனை போன்ற சிரிப்புடன் சேர்ந்து சிதறியது. அய்யோ! பத்மநாபா! பத்மநாபா! பரிதாபத்துக்குரிய அந்தப் பிராமணன்...

    "என் அன்பே, நீ ஏன் நடுங்குகிறாய்? நீ பயந்து விட்டாயா? கதை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒருமுறை நான் யக்ஷி பிராமணனை ரெண்டாகக் கிழித்துவிட்டாள் என்றும், அவனுடைய ரத்தம் முழுவதையும் குடித்துவிட்டாள் என்றும் சொல்லியிருக்கிறேன். அந்தக் குழந்தை ஒரு மாயை, அது ஒரு கள்ளிக் குச்சியிலிருந்து உருவாக்கப்பட்டது. குழந்தையை சாட்சியாக வைத்துக்கொண்டு பிராமணன் அவனுடைய குற்றத்துக்காக யக்ஷியால் முழுமையாக தண்டிக்கப்பட்டான். இவ்வாறாகத்தான் நாம்

    Enjoying the preview?
    Page 1 of 1