Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malarum Madhuvum
Malarum Madhuvum
Malarum Madhuvum
Ebook332 pages2 hours

Malarum Madhuvum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மலரும் மதுவும்' நாவலில் வளமாக வாழ்ந்துத் தாழ்ந்த குடும்பமொன்றையும், கண்டிப்பு மிகுந்த குடும்பத் தலைவரையும், அந்தக் கண்டிப்பின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி விட்ட அவர் மகளையும், அவர் மகளது வாழ்வினையும் காண்கிறோம். செல்லமாக வளர்ந்த பணக்கார வீட்டுப் பெண்ணின் கடுமையான மனப்பான்மையும், பெண்களைக் கண்டால் சபல புத்தி கொள்ளும் சாரதியும் இந்த நாவலின் இனிமைக்குக் காரணமாகிறார்கள்.

இந்த நாவலின் மலர்களாக மாலினியும் ராதையும் ஒளி வீசுகிறார்கள். கோதை, மோகன் போன்ற பாத்திரங்கள் குணச்சித்திரப் படைப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த ‘மலரும் மதுவும்' நாவல்

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580136205825
Malarum Madhuvum

Read more from P.M. Kannan

Related authors

Related to Malarum Madhuvum

Related ebooks

Reviews for Malarum Madhuvum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malarum Madhuvum - P.M. Kannan

    http://www.pustaka.co.in

    மலரும் மதுவும்

    Malarum Madhuvum

    Author:

    பி.எம். கண்ணன்

    P.M. Kannan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pm-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    இந்த நாவல்

    ரங்க மஹல்! அழகான பெயருக்கு ஏற்ப அழகான பங்களா. வண்ணமும் ஒளியும் அழகும் சேர்ந்து உருவாகியுள்ள இல்லம் அது. அந்த இல்லத்திலே எத்தனை வண்ணங்கள் இருந்தனவோ, அத்தனை குணங்களுடன் கூடிய மனிதர்கள், ஒரே குடும்பத்து மனிதர்கள், அதில் வாழ்கிறார்கள்.

    அவர்கள் வாழ்வும் தாழ்வும், ஆசையும் பாசமும், குணமும் குறையும் சேர்ந்து 'மலரும் மதுவும்' சித்திரமாகிறது.

    பி. எம். கண்ணன்

    தாம்பரம்

    26-6-61

    *****

    முன்னுரை

    தமிழ்நாட்டில் சமூக நாவல்கள் எழுதும் தலைசிறந்த எழுத்தாளர்களுள் திரு. பி. எம். கண்ணன் ஒருவர். அவரது நாவலில் தேவையற்ற ஆடம்பரமான சம்பவங்களோ, சூழ்நிலைக் கற்பனைகளோ இரா. சமூகப் பிரச்னைகள் வெகு எளிதில் எடுத்துக்காட்டி முடிவு காணுவார். பாத்திரங்களின் படைப்பு மிக உயர்ந்ததாயிருக்கும். அந்தக் கதாபாத்திரங்களை நாம் தினசரி வாழ்வில் எங்கோ சந்திப்பது போலிருக்கும். 'மலரும் மதுவும்' நாவலில் வளமாக வாழ்ந்துத் தாழ்ந்த குடும்பமொன்றையும், கண்டிப்பு மிகுந்த குடும்பத் தலைவரையும், அந்தக் கண்டிப்பின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி விட்ட அவர் மகளையும், அவர் மகளது வாழ்வினையும் காண்கிறோம். செல்லமாக வளர்ந்த பணக்கார வீட்டுப் பெண்ணின் கடுமையான மனப்பான்மையும், பெண்களைக் கண்டால் சபல புத்தி கொள்ளும் சாரதியும் இந்த நாவலின் இனிமைக்குக் காரணமாகிறார்கள்.

    இந்த நாவலின் மலர்களாக மாலினியும் ராதையும் ஒளி வீசுகிறார்கள். கோதை, மோகன் போன்ற பாத்திரங்கள் குணச்சித்திரப் படைப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த ‘மலரும் மதுவும்' நாவல்

    *****

    1

    பளார்!

    விழி தெறிக்கும் மின்னல்! கன்னம் வீங்கிப் பொறிக்கும் இடி! விரல்களால் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அவர் காலடியில் விழுந்தாள் அவள்.

    அப்பா!

    கழுதை, அப்பாவாம் அப்பா! இனி உனக்கு நான் அப்பாவும் இல்லை நீ எனக்குப் பெண்ணும் இல்லை. எக்கேடாவது கெட்டுப் போ.

    அப்பா சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள் அப்பா! பொங்கும் துக்கத்தை எவ்வாறோ அடக்கிக்கொண்டு பேசினாள் அவள்.

    கேட்டது போதும். போ வெளியே!

    இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் என் கருத்துப்படி...

    போதும், என் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு... பற்றியிருந்த கால்களை உதறிவிட்டுக்கொண்டு, தீப்பந்தமாகத் திரும்பினார் ரங்கமன்னார். அவரது அக்கினிப் பார்வையைத் தாள முடியாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டாள் கோதைநாயகி.

    அவருக்குப் பின்புறமிருந்து மீண்டும் அந்தத் தீனக்குரல்!

    அப்பா...! அவள் இப்போது எழுந்து நின்றுகொண்டிருந்தாள்.

    போகமாட்டாய் நீ? எனக்கு இத்தனை அவமானத்தைக் கொண்டுவந்த பின்னும் எதிரே நின்று பேச என்ன துணிவு உனக்கு? போ! இனி என் உயிர் உள்ளவரையில் உன் முகத்தில் விழிக்கமாட்டேன்! போ! போ!

    அவள் கழுத்தில் கையை வைத்து நெட்டித் தள்ளிக் கொண்டே போய் விட்டார் ரங்கமன்னார்.

    இதோ பாருங்கள், என்ன இருந்தாலும்...! பின்னாலிருந்து பேதை கோதைநாயகியின் துயர ஓலம்!

    கோதை! உனக்கும் அவளோடு போகவேண்டும் என்கிற எண்ணமோ?

    கோதைநாயகியின் வாய் அடைபட்டது. ஆனால், கண்கள் அடைபடவில்லை. அவளுக்கு முன்னால் நின்ற கதவு அடைபட்டது. பெற்றவளிடமிருந்து பெண்ணைப் பிரித்து வைக்கிறோமே என்று கிரீச்சிட்டுக் கதறியழுதது அந்தக் கதவுகூட! ஆனால், ரங்கமன்னார் கதறவில்லை. கல்லாக்கிக்கொண்டார், உள்ளத்தை

    நாலைந்து நாட்களாக உள்ளூறக் குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துத் தீக்கங்குகளைக் கக்கியது. அனற் பிழம்பை ஆறாகப் பெருக விட்டது. அந்த அனலாற்றில் அடித்துக் கொண்டு போய்விட்டாள் அவள். பதினெட்டு ஆண்டுகளாக செல்வத்தின் நிழலிலே வளர்த்துவந்த அந்தப் பெண், வறுமைக் கானலிலே வாடி வதங்க முடிவு பண்ணிக்கொண்டு போய்விட்டாள்.

    ரங்கமன்னார் நல்ல விதமாக எவ்வளவோ சொன்னார். கேட்கவில்லை அவள். கோதைநாயகியும் தன் பெண்ணிடம் இங்கிதம் பேசினாள்; பயனில்லை. அப்பாவின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்று எத்தனையோ முயன்றாள் அம்மா. ஆனால், பெண்ணின் பிடிவாதம் போகவில்லை.

    நல்வவள் தான் அவள். அன்றுவரையில் அப்பாவின் பேச்சுக்கும் சரி, அம்மாவின் கருத்துக்கும் சரி, மாறாக நடந்தது இல்லை தான். ஆனால், அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவள் தன் கருத்துப்படியே நடக்கப் போவதாகத் தீர்மானமாகத் தெரிவித்துவிட்டாள்.

    ரங்கமன்னார். பெரிய இடமாகப் பார்த்துப் பெண்ணுக்கு நிச்சயம் பண்ணினார். பெண் பார்க்க ஒரு பட்டாளமே அவர் பங்களாவை நோக்கி வந்தது. பெரிய பெரிய கார்கள் ஐந்தாறு, பங்களா வாசலில் வந்து நின்றன. ஒவ்வொன்றிலிருந்தும் நாலைந்து பேர் பட்டும் வைரமுமாக இறங்கினார்கள் சரிகையும் செண்டுமாக இறங்கினார்கள், பாண்டும் ஸ்லாக்குமாக இறங்கினார்கள் கௌனும் தாவணியுமாக இறங்கினார்கள்.

    ரங்கமன்னார் பங்களாவின் விசாலமான ஹால் அந்தப் பட்டாளத்துக்கு ஒரு சின்னக் குச்சு போலக் காட்சியளித்தது. 'ஜே ஜே' என்று நிரப்பிக்கொண்டு குந்தியிருந்தார்கள் அவர்கள். குசலமும், காப்பியும் ஒழுங்காக முடிந்தபின் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகியது. கோதைநாயகி பெண்ணை அழைத்துவர உள்ளே போனாள். ஆனால், அரைமணியாகியும் வெளியே வரவில்லை. வந்தவர்களுக்குப் பொறுமை குறைந்தது. ரங்கமன்னார் உள்ளே சென்றார், பெண்ணுக்குச் சிங்காரம் இன்னுமா முடியவில்லை என்று பார்ப்பதற்கு. ஆனால், அவர் உள்ளே கண்ட காட்சி...

    குப்புறப்படுத்துக் குமுறியழுது கொண்டிருந்தாள் பெண். கோதைநாயகி அவளைச் சமாதானப்படுத்திக் கூட்டிவர முயன்று கொண்டிருந்தாள். என்னைத் தொந்தரவு செய்யாதே அம்மா! நான் வரமாட்டேன். திரும்பத் திரும்ப இந்தப் பேச்சையே சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

    ரங்கமன்னார் பதற்றமுற்றார். என்ன கோதை? இது என்ன சாகசம்? என்றார் ஆத்திரக் குரலில்.

    அன்றைக்கே வேண்டாம் என்றாள் அவள். நீங்கள் கேட்கவில்லை.

    இவள் சொல்லி நான் கேட்க வேண்டுமா?

    என்னமோ குழந்தை...

    சரி சரி. இப்போது வரப்போகிறாளா இல்லையா? அவர்கள் எத்தனை நேரம் காத்திருப்பார்கள்?

    தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் அப்பா. எனக்கு உடம்பு சரியில்லை!

    கல்பகம்!

    ம்...!

    இது எங்கே போய் முடியப் போகிறது என்று தெரியுமா உனக்கு?

    பதில் இல்லை.

    எரிமலை இந்த இடத்திலேயே வெடித்திருக்க வேண்டும். ஆனால், முன்ஹாலில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் தெரிந்து விடுமே! ரங்கமன்னார் எப்படியோ தம்மைத் தாமே அடக்கிக் கொண்டார். அவமானத்தால் குன்றிய முகத்தை மறைத்துக் கொள்ள முயன்றவாறே வெளியே வந்தார். அவர் நாக்குத் தழுதழுத்தது. வந்திருந்தவர்களைப் பார்த்துப் பேசியபோது திடீரென்று குளிர் வந்து காய்ச்சல் கண்டிருக்கிறது. எழுந்திருக்கவே முடியவில்லை குழந்தைக்கு. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த மாதிரி அசந்தர்ப்பம் நேரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது..." எப்படியோ பேசி முடித்துவிட்டார் அவர்.

    வந்தவர்கள் முகத்தில் கரியை அரைத்துப் பூசியாயிற்று. அவர்கள் ‘சூள்' கொட்டிக்கொண்டே புறப்பட்டு போனார்கள். ரங்கமன்னார் உள்ளம் பொங்கி எழுந்தது. அவர் உள்ளே திரும்பினார். நாலைந்து நாட்கள் பெண்ணுக்கும், தகப்பனுக்கும் வாக்குவாதம் நடந்தது. கோதைநாயகியும் பெண்ணைத் தங்கள் வழிக்குத் திருப்ப எவ்வளவோ முயன்றாள். ஆனால், பலன் இல்லை. கல்பகம் போய்விட்டாள் பிடிவாதமாக தந்தையின் சினம், தாயின் சோகம், அண்ணனின் அப்பாவித்தனம், தங்கையின் கண்ணீர் எதுவுமே அவள் நெஞ்சைத் தொட்டதாகத் தெரியவில்லை. புதிதாக வந்திருந்த மதனியின் ஏச்சுப் பொறுக்காமல் தான் போய்விட்டாளோ அவள்? இல்லை. தான் பிடித்த பிடிவாதத்தைச் சாதித்துக்கொள்ளத் தான் புறப்பட்டுப் போனாள்.

    ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்குமுன் போய்விட்ட கல்பகம் திடீரென்று இன்று எப்படி எதிரே வந்து குறுக்கிட்டாள்? காலத்தால் மாறாத இளமையும், கண் ஒளியும், கடைந்தெடுத்த உடல் வனப்புமாக அப்படியே, அதே அச்சாக இத்தனை காலம் கழித்தும் எப்படி இருக்க முடிந்தது அவளுக்கு!

    கல்பகம்! என்று தன்னையும் மறந்து கோதைநாயகி கூவிவிட்டாள், காரில் இருந்தபடியே. அவள் கூவியதற்கும், அந்தப் பெண் திரும்பிப் பார்த்ததற்கும் சரியாயிருந்தது. ஆனால், மறுவிநாடியே எதிரே நின்ற சாலைக் கட்டுப்பாட்டுப் போலீஸ்காரர் நீட்டிய கையை மடக்கி வழி செய்து கொடுத்தார். கோதைநாயகி குந்தியிருந்த கார் குழலூதிக் கொண்டு புறப்பட்டது. அந்தப் பெண் அமர்ந்திருந்த பஸ் சற்றே பின்தங்கிவிட்டது. அவள் கோதைநாயகியின் புறக்கண்களினின்று மறைந்தாள்; உடனடியாக அகக்கண்ணில் தோன்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சியொன்றைச் சித்திரம் தீட்டிவிட்டாள்.

    முன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த மோகன் கூட, கல்பகம் என்று தாய் அழைத்ததைக்கண்டு அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தான். உடனடியாகக் கார் புறப்படவே அப்போதே தாய்ப்பக்கம் திரும்பிக் கேட்க முடியவில்லை அவனுக்கு. சிறிது தூரம் கார் ஓடிய பிறகு தான் கேட்டான் அவன்: யார் அம்மா கல்பகம்? யாரையோ பார்த்துக் கூப்பிட்டாயே? என்று.

    ம்... யாரும் இல்லை. சொல்லிப் பெருமூச்சு விட்டாள் கோதைநாயகி. அவள் கண்களில் தளும்பித் தத்தளிக்கும் முத்துக்களைக் கண்ணுற்றான் மோகன். ‘அம்மாவின் உள்ளத்தைப் பிழிந்துவிட்டுப் போய்விட்ட அந்தக் கல்பகம் யார்' என்கிற கேள்விக்குப் பதில் தெரியவில்லை அவனுக்கு. ஆனால், அம்மாவைக் கேட்க அது தருணம் அல்ல என்பது தெரியாதா அவனுக்கு அடுத்த சில நிமிஷங்களில் பிறக்க இருக்கும் மகிழ்ச்சிக்கு, இந்தச் சோகமான முன்னோட்டம் ஏனோ அவனுக்கே நெஞ்சு விம்மியது. கண்ணிலே கண நேரமே மின்னலெனத் தோன்றி மறைந்த அந்தக் கல்பகம் தான் அந்தச் சலனத்தை ஏற்படுத்தி விட்டாளோ! அவனும் தான் ஒரு நெடுமூச்சு விட்டான். அவர்கள் ஏறிவந்த காரும் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு தன் பிரயாணத்தின் எல்லையை அடைந்தது.

    ஆரவாரம் பொங்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் அன்று எதையோ பறிகொடுத்தது போலக் காட்சியளித்தது. அந்த நேரத்திலே மெயின் லயன் பிளாட்பாரத்திலே புறப்பட வேண்டிய வண்டி எதுவுமே இல்லை. திரும்பி வரவேண்டிய வண்டியும் ஏதுமில்லை போல் தோன்றியது. எங்கிருந்தோ திருவள்ளூர் ஷட்டிலோ அரக்கோணம் பாஸஞ்சரோ புறப்பட்டுக் கீதம் பாடியது.

    காரை விட்டிறங்கிய மோகனும் கோதைநாயகியும் நேராக மெயின் லயன் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தனர், குழல் விளக்குகள் மங்கலாக ஒளி வீசின.

    பிளாட்பாரத்திலிருந்த புத்தகக் கடை மூடியிருந்தது. தெற்கே யாத்திரை போய்த் திரும்பித் தம் ஊர்களுக்கு பயணமான வட இந்திய யாத்திரிகர்கள் அழுக்குத் துணி மூட்டைகளுக்கிடையில் உருண்டு கிடந்தனர். அவர்கள் சற்று முன் சாப்பிட்டுவிட்டுப் போட்டிருந்த சப்பாத்தித் துண்டுகளை ஒரு நாய் கடித்துத் தின்று கொண்டிருந்தது.

    இன்னும் ஒரு மணி நேரத்தில் புறப்படவேண்டிய ஏதோ ஒரு வண்டிக்குக் காத்திருந்த ஒரு குடும்பம் 'சளபள'வென்று பேசிக்கொண்டிருந்தது.

    கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் இன்னும் ஐந்து நிமிஷத்தில் வந்து சேருகிறது என்று ஒலிபரப்பிக் கருவி அறிவித்ததைக் கேட்டு அவசர அவசரமாக நடந்து கொண்டே மோகன், அம்மா! இன்று வண்டி சரியான நேரத்தில் வந்துவிடுகிறது அதிசயமாயிருக்கிறதே! சீக்கிரமாக வா என்று பேசினான்.

    கோதைநாயகி தன்னால் ஆனமட்டும் வேகமாகத்தான் நடக்க முயன்றாள். ஆனால், கால்கள் இரும்புக்கனம் கனக்கின்றனவே! வரவிருக்கும் பெண்ணுக்கும் மறைந்து போன பெண்ணுக்கும் இடையே பாய்ந்து பாய்ந்து எண்ணங்கள் இதயத்தைத் துள்ளித் துடிக்க வைத்தால் எப்படி நடை சாயும்? ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் டில்லிக்குப் போன பெண் இப்போதுதான் திரும்பி வருகிறாள்! எத்தனை மகிழ்ச்சி இருக்க வேண்டும் ஒரு தாய்க்கு அவளைப் பார்ப்பதில் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் குடும்பத்தை விட்டே போய் விட்ட ஒரு பெண் எதிர்பாராத விதமாகத் திடும் எனக் காட்சி தந்து நெஞ்சைச் சல்லடைக் கண்ணாய்த் துளைத்து மறைகிறாள்! எத்தனை துன்ப நினைவுகள் அந்தத் தாய்க்கு அவளைப் பார்த்ததில் இரண்டு வெவ்வேறான உணர்ச்சிகளுக்கிடையே சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாள் கோதைநாயகி, பரக்கப் பரக்க ஓடி வரும்படி மோகன் அழைக்கிறான். அவள் நடந்து தான் சென்றாளா? ஓடித்தான் போனாளா? தெரியவில்லை. அதோ ஜி டி. எக்ஸ்பிரஸ் கூவிக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தேவிட்டது.

    விமலா அக்காவை மோகன் பார்த்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது அவனுக்குப் பதினொறு வயதிருக்கும். ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தான். சேஷகிரி அத்தானுக்கு மாற்றலாகி அவர் விமலாவையும் குழந்தை மாலினியையும் கூட்டிக்கொண்டு டில்லிக்குப் போனார். அவர்கள் புறப்பட்டுப் போனபோது மோகன் ரயிலடிக்குப் போகவில்லை. கோதைநாயகியும் ரங்கமன்னாரும் போய் ரயிலேற்றிவிட்டு வந்தார்கள். ஒத்தாசைக்குச் சந்தானம் போயிருந்தான். அவன் பெரியவன். அவனைத்தான் அவர்கள் அழைத்துப் போனார்கள், விமலாவுக்குக் கடைக்குட்டி மோகன்மீது கொள்ளை ஆசை. ‘மோகன்! நீ ஸ்டேஷனுக்கு வரவில்லையா?' என்று ஆசையோடு கேட்டாள். மோகனுக்கும் போக வேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால், ரங்கமன்னார் சொல்லிவிட்டார், 'அவன் எதற்கு விமலா? பள்ளிக்கூடம் போகட்டும் அவன். அவன் வந்தால் நீ அழுவாய். உன்னைப் பார்த்து அவனும் அழுவான்' என்று.

    ரங்கமன்னார் சொன்னதில் உண்மை இருக்கத்தான் இருந்தது. மோகனைக் கண்ணிலே வைத்து இமையாலே மூடினாள் விமலா. அவனை விட்டுப் பிரிந்து தொலை தூரம் போவது கஷ்டமாயிருந்தது அவளுக்கு. அவள் தன் தாயிடம் கேட்டாள், 'அம்மா! மோகனை என்னோடு அனுப்புகிறாயா? அவன் டில்லியில்தான் படிக்கட்டுமே’ என்று. கோதைநாயகி பதில் சொல்வதற்கு முன் ரங்கமன்னாரே சொல்லிவிட்டார். ‘இங்கே இல்லாத படிப்பா அங்கே? நீ போவதே புது இடம், அங்கே இட வசதியும் மற்ற வசதிகளும் எப்படி எப்படியோ இருக்கும், வேண்டுமானால் மாலினியையும் இங்கேயே விட்டுப் போ' என்று. அது சேஷகிரிக்கு இஷ்டமில்லை, தமது ஒரே மகளை உடன் அழைத்துச் செல்லவே அவர் விரும்பினார். 'அம்மா! என் மாப்பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்' என்று விமலா மோகனைத் தாயிடம் கையைப் பிடித்துக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டபோது அவள் கண்களில் நீர் தளும்பியது.

    ஏழெட்டு ஆண்டுகள் எப்படியோ ஓடிப்போய் விட்டன. இதோ வந்துவிட்டாள் அவள் திரும்பவும் சென்னையை நோக்கி, பெரிய வேலையாகி டில்லிக்குப் போன சேஷகிரி மேலும் பெரிய வேலை கிடைத்துச் சென்னைக்கே மாற்றிக் கொண்டு வந்துவிட்டார். ஆனால், சேஷகிரிக்கும் விமலாவுக்கும் ரயிலை விட்டிறங்கியதும் மோகனை லேசில் கண்டுபிடிக்க முடியுமா? பதினாலு வயதுப் பையனாகப் பார்த்த மோகனை இருபத்திரண்டு வயதுக் காளையாகக் கண்டுபிடிப்பது அத்தனை எளிதா என்ன?

    மோகன் இப்போது வாட்ட சாட்டமாக வளர்ந்து விட்டான். அகன்ற நெற்றியும் அரும்போடிய மீசையும், கூர்மையான கண்களும், கொழுவிய கன்னங்களுமாக ஆஜானுபாகுவான தோற்றமும் பாண்ட்டும், ஸ்லாக்குமாக அவனை இப்போது பார்த்தால் விமலாவுக்கே அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

    சேஷகிரியும் விமலாவும் வரப்போகிறார்கள் என்று அறிந்ததுமே மோகன் சொல்லிவிட்டான். ‘நான் ரயிலுக்குப் போய் அவர்களை அழைத்து வருகிறேன்' என்று. ரங்கமன்னார் தான் சொன்னார் கோதைநாயகியிடம்: ‘கோதை! நீயும் போய் வா மோகனுடன். அவனைப் பார்த்தால் அவர்களுக்கு இப்போது அடையாளம் தெரியாது. அவனும் அவர்களைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சின்னப்பிள்ளை தானே அப்போது, முகம்கூட மறந்து போயிருக்கும்’

    சந்தானத்துக்கு வியாபாரத்தைக் கவனிக்கப் போக வேண்டியிருந்தது. எனவே, அவன் ஸ்டேஷனுக்கு வரவில்லை. கோதைநாயகியும், மோகனும் தான் புறப்பட்டு வந்தார்கள்.

    வழியில் தான் கோதைநாயகிக்கு நெஞ்சைக் கிளறும் அந்தச் சந்திப்பு வாய்த்தது. இப்போது கூட அவள் அதைப் பற்றி நினைத்தவாறேதான் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தாள். ஒருவேளை அந்தப் பெண் கல்பகத்தின் பெண்ணாயிருக்குமோ? இத்தனை காலத்துக்குப் பிறகு கல்பகமே அப்படிச் சின்னஞ்சிறுக்கக் குத்து விளக்குப்போல் எப்படியிருக்க முடியும்? அல்லது அதே சாயலுடன் வேறு எந்தப் பெண்ணோ... ம்... என்னதான் இருந்தாலும் அதே அச்சு, அதே வார்ப்பு அப்படியேகூட இருக்க முடியுமா? நடந்தவாறே நெஞ்சை வளர்த்துக்கொண்டாள் கோதைநாயகி.

    அம்மா! என்ற குரல் கேட்டுத்தான் அவள் சிந்தனை கலைந்து திரும்பினாள். எதிரே ஒரு பெட்டியிலிருந்து விமலா இறங்கிக் கொண்டிருந்தாள். கையிலே கூஜாவும், கண்ணிலே மகிழ்ச்சியுமாக இறங்கினாள் விமலா. அவள் பின்னால் பதினாலு பதினைந்து வயதுக் குமரியொருத்தி எழிலோவியமாய்க் கதவடியில் நின்றாள்.

    மோகன் பிளாட்பாரத்தில் சற்றே தள்ளி நின்றபடியே அவர்களைக் கவனித்தான். விமலா அக்காவை அவனுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், அவள் பின்னால் நிற்பவள் தான் மாலினியோ. ஏழெட்டு வயதிலே பாவாடையும் சட்டையுமாகப் போன அந்தக் குறும்புக்காரப் பெண்தான் எத்தனை உயரம் வளர்ந்துவிட்டாள் பருவம் அவள் மேனிக்கு அழகு முலாம் பூசியிருந்தது. குறு குறுக்கும் கண்களும் கொவ்வைக் கனி இதழ்களுமாகக் கொள்ளை கொள்ள வந்துவிட்டாளோ அவன் உள்ளத்தை?

    மோகனுக்கு அவளைப் பார்த்த போது சற்றே பிரமிப்பாகத் தான் இருந்தது. இந்தப் பெண்கள் தான் எப்படி வளர்ந்து விடுகிறார்கள்! தனக்குள்ளாகவே வியந்து கொண்டான் அவன்.

    விமலாவும் மாலினியும் வண்டியை விட்டிறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் சேஷகிரியும் இறங்கினார். அதற்குள்ளாகவே பெட்டிக்குள் ஏறிக்கொண்ட ரயில்வே போர்ட்டர் ஒருவன் அவர்கள் சாமான்களை இறக்கி வைத்தான்.

    அம்மா! நீ மட்டுமா தனியாக வந்தாய்? துணைக்கு யாரும் வரவில்லையா? அப்பா எப்படி இருக்கிறார்? அண்ணா எப்படி இருக்கிறார் மோகன் நன்றாயிருக்கிறானா கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள் விமலா, தன் தாயின் கைகளைப் பற்றிக்கொண்டு.

    இதோ வந்திருக்கிறானே அவன்? இடைமறித்துப் பதில் சொன்னாள் கோதைதாயகி.

    யார்? மோகனா? தாய் காட்டிய பக்கம் திரும்பிப் பார்த்தாள் விமலா ஆச்சரியத்துடன், அவள் தன் கண்களையே நம்பவில்லை. அட! மோகனா இவன்!

    ஏன் அக்கா? என்னைப் பார்த்தால் கடோற்கஜன் போலத் தோன்றுகிறதா உனக்கு? சிரித்துக்கொண்டே கேட்டான் மோகன்.

    அப்போது அவன் பக்கத்தில் வந்து நின்ற சேஷகிரி அவனைத் தலைதூக்கிப் பார்த்தார். அடேயப்பா! என்ன விட உயரமாய் வளர்த்து விட்டாயே? என்றார் வியப்புடன்.

    விமலாவுக்குப் பின்னால் நின்றபடியே மாலினி தன் சின்ன மாமனைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவளுக்கு அப்படிப் பார்ப்பதே என்னவோ போலிருந்தது. சட்டென்று வேறு பக்கம் கண்களைத் திருப்பிக் கொண்டாள்.

    பெட்டிகளும் படுக்கைகளும், ஹோல்டாலும், கூஜாவும், டிபன் செட்டும், கள்ளிப்பலகைச் சாமான் பெட்டிகளும், கோணிப்பை மூட்டைகளுமாக ஏறக்குறைய முப்பது உருப்படிகளுக்கு மேல் பிளாட்பாரத்தில் இறங்கின. அத்தான்! இவ்வளவும் நமது சாமான்களா? என்றான் மோகன் ஆச்சரியத்துடன்.

    கையோடு கொண்டு வரக்கூடியவற்றைக் கொண்டு வந்தேன். மற்றதெல்லாம் கூட்ஸில் வந்து சேரும் என்று நிதானமாகப் பதில் சொன்னார் சேஷகிரி.

    குடும்பத்தையே காலி பண்ணிக் கொண்டு வருகிறதென்றால் லேசாகவா இருக்கிறது? என்று விமலா தன் கணவனுக்கு அனுசரணையாகப் பேசினாள்.

    சரி சரி, அம்மா! விமலா அக்காவையும் மாலினியையும் கூட்டிக்கொண்டு நீ காரில் போய்விடு. அத்தானும் நானும் இந்தச் சாமான்களை ஒரு லாரியிலாவது ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வருகிறோம் என்றான் மோகன்.

    மோகன்! லாரியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நீ இவர்களை அழைத்துக் கொண்டு போ. ஆபீஸிலிருந்து 'வான்' அனுப்பச் சொல்லியிருக்கிறேன். அது வெளியே நின்றிருக்கும். நான் போய்ப் பார்த்து அதில் சாமான்களை ஏற்றிவிட்டு வருகிறேன் என்றார் சேஷகிரி.

    அதற்குள் ஆபீஸ் வண்டியுடன் டிரைவர் வந்து சேர்ந்தான். ஒரு வழியாகச் சாமான்களை அதில் ஏற்றியனுப்பிவிட்டு எல்லோருமே சேர்ந்து போய்க் காரில் ஏறிக்கொண்டார்கள்.

    கார் கிளம்பியது. கூடவே பேச்சும் கிளம்பியது. ரொம்ப இளைத்துப்போய் விட்டாயே அம்மா? என்று விமலா கேட்டாள் பக்கத்திலிருந்த தாயைப் பார்த்து.

    வயசு ஆகவில்லையா? ஒரு வரண்ட சிரிப்பை உதிர்த்தவாறே பதில்

    Enjoying the preview?
    Page 1 of 1