Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paattu Kalanthidavey Part 1
Paattu Kalanthidavey Part 1
Paattu Kalanthidavey Part 1
Ebook258 pages2 hours

Paattu Kalanthidavey Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352854257
Paattu Kalanthidavey Part 1

Read more from Jaisakthi

Related to Paattu Kalanthidavey Part 1

Related ebooks

Reviews for Paattu Kalanthidavey Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paattu Kalanthidavey Part 1 - Jaisakthi

    http://www.pustaka.co.in

    பாட்டுக் கலந்திடவே...!

    பாகம் 1

    Paattu Kalanthidavey…!

    Part 1

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    பாட்டுக் கலந்திடவே...!

    1

    தை பிறந்தால் வழி பிறக்கும்! சற்று முன் கேட்ட அந்த வார்த்தை அவள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.

    குழலியின் கைகள் இரண்டும் கூப்பியிருந்தன. அவள் தண்டுமாரியம்மன் கோவிலில் நின்று கொண்டிருந் தாள். மனம் உருகி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

    கோயிலின் வாசலில் இருந்து கர்ப்பகிரகம் நோக்கி அவள் வருவதற்கு முன்பாக யாரோ இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டு போனார்கள். இந்த மாதிரி அம்மா தை பிறந்தா வழி பிறக்கும்னு சொல்றா. நேக்கும் அப்படித்தான் தோண்றது. இப்ப வந்துட்டுப் போன பிள்ளையாத்துக்காரா பாசிட்டிவா பதில் சொல்லிட்டுப் போயிருக்கா. மேற்கொண்டு பேசணும். வரதட்சணைன்னு என்னத்தைக் கேட்பாளோ?! என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து போனார்கள்.

    தை பிறந்தா வழி பிறக்கும்! என்ற சொற்கள் மட்டும் அவள் மனதிலே தங்கி விட்டன. தண்டு மாரியம்மனிடம் அவள் மனம் பிரார்த்தித்துக் கொண்டது. தை பிறந்தா வழி பிறக்கும்னு சொல்றாங்க. ஒவ்வொரு வருஷமும் தை பிறந்துகிட்டுத்தான் இருக்கு. எங்க வீட்டுக்கான வழி பிறக்கணும். அண்ணாவுக்கு ஒரு வேலை கிடைச்சதுன்னா பரவாயில்லை. எனக்கும் இன்னும் நாலு டியூஷன் கிடைச்சா பரவாயில்லை! என்று அவள் வேண்டிக் கொண்டாள்.

    உனக்கு என்னடி வேணும்? நான்தான் கேட்ட தெல்லாம் வாங்கித் தரேனே? என்று ஏதோ ஒரு கணவன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு நகர்ந்தான்.

    கோயில் மணி ஒலித்தது. குழலியின் மனம் சிலிர்த்தது. ஏதோ இன்று கோயிலில் கேட்கிற வார்த்தைக ளெல்லாம் நல்ல வார்த்தைகளாக இருக்கிறது. இனிமேலாவது வழி பிறக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

    அவள் தாயார் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது. அசரீரி அசரீரின்னா ஏதோ வானத்திலிருந்து யாரோ சொல்லணும்னு அர்த்தமில்லடி குழந்தை. யாரோ போற போக்கில ஒரு நல்ல வார்த்தை சொல்லுவாங்க. அது நமக்கு சாதமாக இருக்கும். அப்படி இல்லைன்னா நம்ம மனசுல ஒரு குழப்பம் இருக்கும் நேரத்துல ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம்னு தொறந்தா நம்ம குழப்பத்துக்கு தகுந்த மாதிரி அங்கே ஒரு பதில் இருக்கும்.அது இருந்தாலும் அசரிரீ மாதிரித்தான் என்று சொல்வாள். அதுபோலத் தான் இப்பொழுது நமக்கு அசரிரீயாக செய்தி கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள்.

    அன்று தை வெள்ளிக்கிழமை! நேரம் கழித்து வந்தால் கூட்டமாகி விடும் என்பதால் நான்கு மணிக்கே உள்ளே நுழைந்துவிட்டாள்.

    வேகமாகச் சுற்றி வந்து தேவிக்கு மறுபடியும் ஒரு கும்பிடைப் போட்டு விட்டு நவகிரகத்தைச் சுற்றிக் கொண்டு போய் ஓரமான ஒரு இடத்திலே அமர்ந்தாள்.

    செல்ஃபோன் ஒலித்தது. மிஸ் குழலி, நான் மேகலா பேசறேன்! என்றது ஒரு குரல். அந்தப் பக்கம் இருந்து. சொல்லுங்க மேடம்! என்றாள் இவள்.

    இன்னைக்கு வர்றீங்கதானே? என்றாள் அவள்.

    கண்டிப்பா வரேன். எத்தனை மணிக்கு வரணும்? என்றாள் குழலி.

    ஒரு ஐந்தரை மணிக்கு வந்துடுங்க. நாளையி லேருந்து ஆறு மணிக்கு கிளாஸ் எடுத்துருவோம்.

    ஆறு மணிக்கா? என்று அவள் யோசித்தாள்.

    என்ன மிஸ் குழலி? வரும்போது நீங்க வந்துடுங்க. டிராப் பண்ணச் சொல்றேன். உங்க வீடு எங்கே இருக்கு? காந்தி பார்க் பக்கத்துல தானே? பயப் படாதீங்க. டிராப் பண்ணச் சொல்றேன்! என்றாள்.

    அப்படின்னா சரி! என்றாள் இவள்.

    இப்பக் கூட நான் உங்களை பிக் அப் பண்றதுக்கு யாரையாவது அனுப்பறேன்! என்றாள் மேகலா. ரொம்ப தாங்க்ஸ் மேடம்!என்றாள் அவள்.

    ஓகே. ஷார்ப் அட் 5.30! என்றாள் அவள்.

    சரிங்க மேடம்! என்று சொல்லி விட்டு இவள் ஃபோனை ஆஃப் செய்தாள்.

    ஏதோ சிறுவயதிலே இருக்கும்போது அப்பா ஆசையா ஆசையாய் சொல்லி வைத்த சங்கீதம் இன்றைக்கு பிழைப்புக்கே வழி காட்டுகிறது.

    ‘அப்பவெல்லாம் அப்பாவுக்கு நல்ல வேலையா இருந்தது. இப்பொழுதும் பென்ஷன் வருகிறது என்றாலும் மொத்தக் குடும்பத்துக்கும் அந்தப் பென்ஷனை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? அதனால் தான் இவளும் பாட்டுக் கிளாஸ் எடுக்கவென்று கிளம்பியது...

    இந்த வீட்டில் நல்ல டியூஷன் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. 4000 ரூபாய் தருகிறேன் என்கிறார்கள். ஆனால் வீட்டுக்குப் போய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இருந்தால் என்ன சொல்லிக் கொடுக்கலாம் என்று இவள் எண்ணிக் கொண்டாள்.

    வெகுநாட்களுக்கு முன்பு அதாவது பள்ளியில் படிக்கிற வயசில் அப்பா வாங்கிக் கொடுத்த எச்.எம்.டி வாட்ச் இன்னும் வஞ்சகமில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து திருப்பிப் பார்த்தாள்.

    மணி, நான்கு மணி பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. வெளியே கிளம்பினாள். இப்பொழுது போனால் தான் அந்த இடத்திற்குப் போய்ச் சேர முடியும். ஆர்.எஸ்.புரத்திலே திவான் பகதூர் ரோட்டிலே பெரிய பங்களா. பஸ் பிடித்துப் போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவள் வெளியே வரும்பொழுது மறுபடியும் ஃபோன் ஒலித்தது.

    மிஸ் குழலி! ஒரு சின்ன சேஞ்ஜ். நான் உங்களை ஃபைவோ கிளாக்தான் மீட் பண்ணலாம்னு இருக்கேன். அதனால சீக்கிரம் வந்திடுங்க. இப்ப எங்க வீட்ல இருந்து உங்களை காண்டாக்ட் பண்ணுவாங்க! என்று சொல்லி விட்டு ஃபோனை ஆப் செய்து விட்டாள் மேகலா.

    அவள் வேகமாக வெளியே வந்தாள். குறுக்கு வழியில் போய் கலெக்டர் ஆஃபீஸ், ரயில்வே ஸ்டேஷன் போய் நிற்கலாம் என்ற எண்ணத்தோடு அந்தக் கோயிலை ஒட்டிய தெருவிலே நடந்தாள்.

    அவளுடைய நேரமோ என்னமோ தெருவில் கூட்டமே இல்லாமல் இருந்தது. கொஞ்சம் பயமாக இருந்தது. வேக வேகமாக நடந்தாள். தெருவில் பாதியைக் கடந்திருப்பாள். அப்பொழுது மறுபடியும் ஃபோன் ஒலித்தது. மிஸ் குழலி. எங்கிருக்கிறீங்க? என்று.

    மேகலாவின் குரல்.

    நான் ஒரு டு மினிட்ஸ் ஆர் ஃபோர் மினிட்ஸ்ல கலெக்டர் ஆஃபீஸில் நிக்கறேன்! என்றவள் வேகவேக மாக நடந்தாள். அப்பொழுது சற்றும் யோசிக்காமல் ரோட்டைக் கடப்பதற்கு முயற்சி செய்தாள்.

    சர்ரென்று ஒரு கார் அவள் அருகிலே வந்து நின்றது. ஒரு இளைஞன் தலையை நீட்டிப் பார்த்தான் என்ன மேடம்? வீட்டில சொல்லிட்டு வந்துட்டீங்களா? என்றான்.

    அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. சற்று ஓரமாக ஒதுங்கினாள். சாரி! நான் கவனிக்கலை! என்றாள்.

    அவன் காரை ஓரமாக ஒதுக்கி விட்டு வந்து, பகல் நேரத்துல கனவு கண்டுட்டுப் போறீங்களா? எந்த சினிமாக் கதாநாயகனை நினைச்சுகிட்டுப் போறீங்க? என்றான்.

    அவளுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. நான் வந்தது தப்பு. அதுக்கு சாரி சொல்லிட்டேன். அதுக்கு மேல தேவையில்லாமல் எதுக்குப் பேசறீங்க? என்றாள்.

    ஆமா! எங்களுக்கு வேற வேலையே இல்லை பாருங்க. தேவையில்லாமல் உங்ககிட்ட வந்து பேசிட்டிருக்கேன்! என்றான்.

    வாய்க்குள்ளாக ஏதோ முணுமுணுத்தான் சாவுகிராக்கி, இல்லை யூஸ்லெஸ் ஃபெலோ என்றானோ?!

    அவள் அவனை உறுத்துப் பார்த்துவிட்டு தன் வழியிலே நடக்க ஆரம்பித்தாள். அவனும் அவளை உறுத்துப் பார்த்து விட்டு வேகமாக காரை ஓட்டிக் கொண்டு போனான். கலெக்டர் ஆஃபீஸ் அருகில் போய் ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்தாள் குழலி.

    மறுபடியும் மேகலா போன் செய்தாள். ஏன் மேடம்? பர்ட்டிகுலரா ஒரு பிளேஸ் சொன்னா அந்த இடத்துல இருக்க மாட்டீங்களா? இப்ப தண்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்து தேடிட்டு எங்க வீட்ல ரொம்ப கோபிச்சுக்கறாங்க

    ஐ ஆம் சாரி மேடம்! நான் தான் கலெக்ட்ர் ஆஃபீஸ் முன்னாடி நிக்கறேன்னு சொன்னேனே? என்றாள் இவள்.

    ஓ ஆமால்லே? நான் அதை சொல்ல மறந்துட்டேன்! என்றாள் அந்தப் பக்கம் இருந்து மேகலா. ஓகே சரி! நோ ப்ராப்ளம் நீங்க ஒரு ஆட்டோ பிடிச்சு வந்திடுங்க. ஐ’ல் பே ஃபார்தி ஆட்டோ!" என்றாள்.

    அப்பாடா! என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு குழலி ஒரு ஆட்டோவைப் பிடித்தாள். ஆர் எஸ் புரம் டி.பி ரோட்டிலே அந்த பங்களாவின் விலாசத்தைச் சொன்னாள்.

    ஆட்டோ டிரைவர் திரும்பி அவரைப் பார்த்து விட்டு அங்கே யாரையும் தெரியுமா? என்றான்.

    தெரியுங்க. என்னை அங்கேதான் வரச் சொன்னாங்க. மேகலா மேடம் வரச் சொன்னாங்க! என்றாள்.

    அவன் ஒன்றும் பேசவில்லை வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். ஒரு பதினைந்து நிமிடத்திலே அங்கே போய் சேர்ந்து விட்டார்கள்.

    அவள் உள்ளே போனவுடன் அந்த மேகலா அவசரஅவசரமாக வந்தாள். சல்வார் கமீஸீல் இருந்தாள் வாட்சை வாட்சை திரும்ப பார்த்துக் கொண்டிருந்தாள். ஓ! நீங்கதான் அந்தக் குழலியா? என்றாள் அவள்.

    ஆமாம்! என்றாள். தன்னையும் மீறி அவள் புன்னகைத்தாள்.

    நாட் பேட். யு ஆர் லுக்கிங் பியூட்டிஃபுல்! என்றாள். அதைச் சொன்ன விதத்திலே கூட ஒரு அலட்சியம் தெரிந்தது. இவள்தான் படபடப்பாக நன்றி என்றாள்.

    ஓகே ஓகே. இப்பக் குழந்தையைக் கூட்டிட்டு வந்து காட்டுவாங்க. நீங்க பார்த்துக்கங்க. எப்ப இருந்து கிளாஸுக்கு வருவீங்க? என்றாள்.

    எப்ப வேண்ணா வரேன் மேடம். நாளைக்கே கூட வரேன் என்றாள் இவள்.

    ஓ.கே.,ஜஸ்ட் இண்ட்ரொட்யூஸ் பண்ணிக்கோங்க! நாளைக்கு வாங்க! என்றாள். அவ்வளவுதான்! என்பது போல வேகமாக ‘டிரைவர்!’ என்று அழைத்துக் கொண்டு போனாள்.

    குழந்தையைக் கூட அறிமுகப்படுத்தாமல் ஒடுகிற வளைப் பார்த்து குழலிக்கு ஆச்சரியமாக இருந்தது.

    மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள் குழலி. அப்பொழுது அவள் வேலையாள் வந்து உட்காருங்க மேடம்! என்றான்.

    அவள் மலமலங்க விழித்துக் கொண்டு அந்தப் பெரிய ஹாலில் இருந்த ஒரு சோஃபாவில் போய் அமர்ந்தாள். உண்மையில் வாசலின் இரண்டு பக்கத்திலும் பெரிய சோஃபாக்கள் போடப்பட்டிருந்தன. பக்கவாட்டு சோபாக்களும் இருந்தன. அதிலே போய் அமர்ந்தாள்.

    அந்த நேரம் ஒரு இளைஞன் கார் சாவியை சுழற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தான். சொன்னா சொன்ன டைமுக்கு வரமாட்டேங்கறாங்க! என்று வேலையா ளிடம் சொல்லிக்கொண்டுத் திரும்பியவன் ஒரு கணம் அதிர்ந்து நின்றான்.

    அவளுமே அதிர்ந்து போனாள். சற்று நேரத்திற்கு முன்பு வழியிலே வாக்கு வாதம் செய்தானே அதே இளைஞன்!

    அவன் அவளைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு மிஸ் குழலி! என்றான்.

    ‘ம்!’ என்றாள் அவள்.

    என்ன குழலி? பூங்குழலி, ஏலவார் குழலி...தேன் குழலி...? என்றான் அவன்.

    அவள் மெல்லச் சிவந்த முகத்துடன் வண்டார் குழலி! என்றாள்.

    2

    நரேந்திரன் கடகடவென்று சிரித்தான். நான் எதிர் பார்க்கவேயில்லை மிஸ் வண்டார்குழலி என்றான்.

    குழலிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. பதில் சொல்லாமல் விட்டு விடுவதே நல்லது என்று தோன்றியதால் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவன் சிரிப்பதை நிறுத்தி விட்டு இரண்டு கைகளையும் சற்றே உயர்த்தித் தூக்கி சாரி, சாரி, நான் இப்படி சிரிச்சிருக்கக் கூடாது! என்றான்.

    குழலி அதற்கும் பதில் சொல்லவில்லை. மேடம்! வண்டார் குழலிங்கறது ரொம்பப் பெரிய பெயரா இருக்கு. நாங்க எல்லோரும் குழலின்னு கூப்பிட லாமா? என்று கேட்டான். அவள் குனிந்தபடியே தலையசைத்தாள்.

    அது சரி, கரெக்டா இன்ஃபர்மேஷன் கொடுக்க மாட்டீங்களா? என்று கேட்டான்.

    அவள் அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள். சார்! நான் மேடம் கிட்ட சொன்னேன் கலெக்டர் ஆபீஸுக்கு முன்னாடி நிக்கறேன்னு. அவங்க தான் சொல்ல மறந்துட்டாங்க போல இருக்கு என்றாள்.

    அவன் ஒரு நிமிடம் திகைத்தாற் போல் பார்த்தான். ஓ! அப்படியா ஓகே! ஓகே! தென் இட்ஸ் அவர் மிஸ்டேக் என்றான்.

    பரவாயில்லை சார்! இதிலே என்ன இருக்கு? சில நேரங்கள்லே இப்படி ஆயிடுது. இப்ப நான் குழந்தையைப் பார்க்கலாமா? என்று கேட்டாள்.

    ஓகே, மேட்டருக்கு வாங்கன்னு சொல்றீங்க. ஐ அன்டர்ஸ்டேன்ட்! என்றவன் திரும்பி. வேலண்ணே, குழந்தையைக் கூட்டிட்டு வாங்க! என்றான்.

    அதற்குள்ளாக மீண்டும் திரும்பி காஃபி? என்றான்.

    நோ தாங்க்ஸ்! என்றாள் அவள்.

    வேலண்ணன் என்று அழைக்கப்பட்டவர் நடுத்தர வயதில் இருந்தார். அவர் குழந்தையை அழைத்துக் கொண்டு வந்தார்.

    பெண் குழந்தை! ஆறு வயது இருக்கும். அழகாக இருந்தாள். தன் பெரிய கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

    ஹாய் லேகா! என்று சிரித்தான் நரேந்திரன்.

    ஹாய், மாமா! என்றாள். உற்சாகமாக ஓடி வந்து அவன் அருகிலே நின்று கொண்டாள். அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு போய் குழலி அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் அமர்ந்தான். மேடம்! இவங்கதான் ஸ்ரீலேகா. மை நீஸ். எங்க அக்கா பொண்ணு! என்றான்.

    ஹலோ! என்றாள் குழலி.

    வணக்கம் மேடம்! என்றது ஸ்ரீலேகா.

    ஹலோ! என்று புன்னகைத்தாள் குழலி. நான் தான் உனக்கு ட்யூஷன் சொல்லித் தரப்போறேன்! என்றாள்.

    ம்...! என்றது குழந்தை.

    பாடறதுக்குப் பிடிக்குமா? என்று கேட்டாள்.

    ம். ரொம்ப. நான் தான் மாமா கிட்ட நான் மியூசிக் கத்துக்கறேன், எனக்கு மியூசிக் டீச்சர் ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னேன்! என்றாள்.

    ஓ! தட்ஸ் ரியலி குட்! என்று பாராட்டினாள் குழலி. அவர்கள் இரண்டு பேரும் பேசுவதில் குறுக் கிடாமல் கவனித்துக் கொண்டிருந்தான் நரேந்திரன்.

    எதிரில் ஒருவர் அப்படி உட்கார்ந்து உற்றுப் பார்ப்பது குழலிக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஒரு நாள் மட்டும்தானே. நாளையிலே யிருந்து அவளும் குழந்தையும் மட்டும்தான் என்ற எண்ணத்துடன் அவன் இருப்பதையே மறந்தது போல குழந்தையிடம் பேசினாள்.

    சரி, நீ ஸ்கூல்ல இருந்து எப்ப வருவே? என்றாள்.

    நான் நாலு மணிக்கெல்லாம் வந்துடுவேன்! என்றாள் ஸ்ரீலேகா.

    அப்ப சரி! அம்மா, உனக்கு ஆறு மணிக்கு கிளாஸ் எடுக்கச் சொல்லியிருக்காங்க. ஆறு மணிக்கு வந்துடட்டுமா? என்று கேட்டாள்.

    ம்... ஆறு மணிக்கு வாங்க. ஏழு மணி வரைக்கும் எடுப்பீங்களா? என்றாள்.

    ஆமாம்பா. ஏழு மணி வரைக்கும் எடுப்பேன். அதுக்கப்புறம் நீ ஹோம் ஒர்க் செய்யலாம். பிராக்டிஸ் பண்ணலாம். உன் வசதி போல பண்ணிக்கலாம்! என்றாள்.

    சரிங்க மேடம்! என்றது ஸ்ரீலேகா.

    அவள் திரும்பி நரேந்திரனைப் பார்த்தாள். ஓகே சார்! அப்போ நான் நாளையிலேயிருந்து கிளாஸுக்கு வந்துடறேன் சார்

    அக்கா அப்படியா சொன்னாங்க?

    நாளையிலேயிருந்து கிளாஸ் ஆரம்பிச்சுக்கலாம் அப்படின்னுதான் சொன்னாங்க

    "தட்ஸ் ரைட். உங்களுக்குத் தனியா இடம்

    Enjoying the preview?
    Page 1 of 1