Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ivan Vasam Vaaraayo!
Ivan Vasam Vaaraayo!
Ivan Vasam Vaaraayo!
Ebook341 pages2 hours

Ivan Vasam Vaaraayo!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பிறப்பு முதல் திருமணம் வரை வெறும் ஏமாற்றங்களையே சந்தித்த நாயகி, நிரஞ்சனா எப்படி தன் வாழ்வில் முன்னேறுகிறாள்? அவளுடைய முன்னேற்றத்துக்கு நாயகன், தமிழ்வாணனும் அவன் குடும்பத்தாரும் எப்படி உதவுகிறார்கள் என்பதே இவன் வசம் வாராயோ!

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580144007459
Ivan Vasam Vaaraayo!

Read more from Annapurani Dhandapani

Related to Ivan Vasam Vaaraayo!

Related ebooks

Reviews for Ivan Vasam Vaaraayo!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ivan Vasam Vaaraayo! - Annapurani Dhandapani

    http://www.pustaka.co.in

    இவன் வசம் வாராயோ!

    Ivan Vasam Vaaraayo!

    Author :

    அன்னபூரணி தண்டபாணி

    Annapurani Dhandapani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/annapurani-dhandapani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    கதையைப் பற்றி…

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அணிந்துரை

    வணக்கம்.

    எழுத்தாளர் அன்னபூரணி தண்டபாணி எழுதிய இவன் வசம் வாராயோ என்ற புதினத்திற்கு அணிந்துரை எழுதுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    நாயகன் தமிழ்வாணன் முற்போக்கான இளைஞன். கதைநாயகி நிரஞ்சனாவை பார்த்ததுமே மனதை பறிகொடுக்கிறான். ஆனால் அவள் திருமணமானவள் என அறிந்ததும், அந்த எண்ணத்தில் இருந்து விலகி நின்று கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறான்.

    நாயகி கணவனால் கைவிடப்பட்டபோது மறுபடியும் துளிர்க்கும் காதலால் அவளைத் தேடி அலையும் தவிப்பு, அவனுடைய உண்மையான காதலைக் காட்டுகிறது.

    சந்தர்ப்ப சூழ்நிலையால் மற்றவர்களின் முன்னிலையில், தாந்தான் அவளுடைய கணவன் என பொய்சொல்லி, அவளைக் காப்பாற்ற நினைக்கும் பாங்குகூட, வள்ளுவன் வாக்குப்படி, நன்மை விளைவிக்குமானால் பொய்கூட வாய்மை என்றே கொள்ளப்படும்! என்பதை நிரூபிக்கிறது.

    அவளைப் பற்றிய ரகசியங்கள் பல இருந்தாலும் கடைசிவரை அதை அவன் எதிர்கொள்ளும் விதமும், எது நடந்தாலும் அவளே தன் துணைவி என்ற பிடிப்பும் அவனுடைய நேர்மையான குணத்தைக் காட்டுகிறது. அருமையான ஒரு பாத்திரமாக தமிழ்வாணனை உருவாக்கி சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் வேண்டும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

    நிரஞ்சனா பலவிதத்திலும் பந்தாடப்படும் பாவப்பட்ட ஒரு கதாபாத்திரம்.

    ஆனால் புயல்போன்ற தன் வாழ்க்கையிலும் அவளுடைய போராட்ட குணம் பிரமிக்க வைக்கிறது. உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு பல துன்பங்களுக்கு ஆளானாலும் இரக்கம், கருணை, தாய்மை பண்புகளை கடைசிவரை இழக்காமல் இருக்கிறாள். தன்னால் தமிழ்வாணனின் வாழ்க்கை எந்த விதத்திலும் வீணாகி விடக்கூடாது என அவள் தவிக்கும் தவிப்பு அவளுடைய நேர்மையைக் காட்டுகிறது.

    தமிழ்வாணனின் குடும்பத்தார், நிரஞ்சனா ஏற்கனவே திருமணமானவள்… ஒரு குழந்தைக்கு தாய்… என்ற குறைகளை எல்லாம் கொஞ்சம்கூட பெரிதுபடுத்தாமல் அவளை ஏற்றுக்கொள்ள நினைப்பது மாறி வரும் சமுதாயத்தை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

    மொத்தத்தில், இவன் வசம் வாராயோ, புதினம் கொஞ்சம்கூட விறுவிறுப்பு குறையாமல் படிப்பவரின் மனதை, தன் வசம் வாராயோ என்று இழுக்கும் திறன் கொண்டது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    இதுபோன்ற சமூக நற்சிந்தனையுடன் கூடிய குடும்பக் கதைகளைப் படைத்து சிகரம் தொட, ஆசிரியர் அன்னபூரணி தண்டபாணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    எழுத்தாளர் ஆர். சுமதி

    வாழ்த்துரை

    எழுத்தாளர் திருமதி. அன்னபூரணி தண்டபாணி அவர்களைப் பற்றி நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. தற்போது வேகமாக வளர்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். குடும்ப கதைகள் எழுதுவதில் திருமதி. லஷ்மி அம்மா, திருமதி. ரமணிசந்திரன் அவர்களின் அடிச்சுவட்டில் தனக்கென ஒரு பாணியை கைக்கொண்டு எழுத்தோவியங்கள் தீட்டுவதில் வல்லவர்.

    ஒரு சாதாரண குடும்ப தலைவி (குடும்ப தலைவி பணி என்றும் சாதாரணமானதல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றல்லவா?!) தன் விடாமுயற்சியாலும், ஆர்வத்தாலும், எந்த துறையிலும் முன்னேற முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர். இவர் தடம் பதிக்காத துறையே இல்லை என்பதுபோல… மாக்கோலம், பூக்கோலம், முதற்கொண்டு ஓவியம், கண்ணாடி ஓவியம், கைவினை பொருட்கள், சமையல், ஆயத்த உணவு பதார்த்தங்கள், சிறுகதைகள், தொடர்கதைகள் என இவர் விட்டுவைக்காத விஷயங்களே இல்லை எனலாம். எடுத்த எல்லா விஷயங்களிலும் ஒரு குறிப்பிட்டளவு முன்னேற்றத்தை எட்டியதோடு அல்லாமல், அவற்றில் ஆர்வமுள்ள அடுத்தவர்களுக்கும் நல்லதொரு தோழியாக, வழிகாட்டியாக திகழ்பவர்.

    பிரதிலிபி, பெண்மை, குவிகம், சங்கமம், தமிழ் நாவல் ரைட்டர்ஸ், தமிழ் புத்தக நூலகம், புஸ்தகா, அமேசான், கிண்டில் போன்ற பல இணைய செயலிகளிலும், மின்னிதழ்களிலும் எழுதிக் கொண்டிருப்பவர். ஏற்கனவே இவர் எழுதிய ஏழெட்டு நாவல்கள் புத்தகங்களாகவும் வெளிவந்து வாசகர்களின் நல்லாதரவை பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருப்பது, இவன் வசம் வாராயோ என்ற இப்புதினம்.

    இவன் வசம் வாராயோ

    கதையின் தலைப்பே ஒரு அழகான கவிதைபோல் உள்ளது. இந்நாவலை படிக்க ஆரம்பிப்பவர்கள் சில நிமிடங்களில் கதையின் வசம் கவர்ந்திழுக்கப்படுவார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

    கதையின் நாயகன் தமிழ் ஒரு அழகிய இளம்பெண்ணின் குழந்தைத்தனமான குறும்புகளால் கவர்ந்திழுக்கப்படுகிறான். பூப்போன்ற அந்த பூவையை நோக்கி நகரும் போதுதான் தெரிகிறது அவள் ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகை என. இது தெரிந்து அவனின் மனம் வாடி போனாலும், அவளின் வாழ்க்கை, மணம் வீசவில்லை என்றறிந்து, அவள் தன் வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாய் இருக்கிறான். கொழு கம்பின்றி தத்தளிக்கும் மல்லிகை கொடிக்கு நல்லதொரு பந்தலாய் அவனது குடும்பமும் அமைகிறது.

    கல்வி பயில வழியில்லாத ஒரு சாதாரணப் பெண்கூட, தன்னுள்ளே புதைந்துகிடக்கும் திறமைகளைக் கண்டறிந்துக்கொண்டால், அவளின் வாழ்க்கையில் வெற்றி படிக்கட்டுகளில் வேகமாய் முன்னேறலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறாள் கதைநாயகி நிரஞ்சனா.

    ரஞ்சி, ரஞ்சி என எழுத்தாளர் நாயகியை கொஞ்சி கொஞ்சி எழுதுவதைப் படிக்கும்போது, கதை நாயகி பின்னால் சுற்றும் நாயகனைப்போல நாமும் அலைவது திண்ணம்.

    கதைநாயகன் தமிழ், அவன் தங்கை கயல்விழி, மாப்பிள்ளை முகிலன் ஆகியோரது பாத்திரப் படைப்புகள் அபாரம். அவர்களிடையே உள்ள புரிதலும், பாசப் பிணைப்பும் நமக்கும் இப்படிப்பட்ட சொந்தங்கள் அமையாதா என பொறாமை படத் தோன்றுகிறது. தமிழின் குடும்பத்தை பற்றி படிக்கும்போது நாமும் அக்குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே ஆகிப் போகிறோம்.

    மொத்தத்தில் பண்பும் புரிதலும், பாசமும் நேசமும் கலந்துள்ள நல்லதொரு குடும்பத்தை பார்த்த மனநிறைவு ஏற்படுகிறது.

    தன்னலம் பேணாத பெண்நலம் பற்றியும், பெண் கல்வியின் அவசியத்தைப் பற்றியும் கதையின் போக்கில் ஆங்காங்கே எடுத்துக்காட்டிய விதம் அருமை.

    அதேபோல ரஞ்சியின் வாழ்க்கை போராட்டங்களும், மனப் போராட்டங்களும் அவளது உள்ளத்து உணர்வுகளை நமக்கும் உணர்த்தும் வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

    பெண் கல்வி, பெண் நலம், கல்வியின் அவசியம், குடியின் தீமை, தனி நபர் ஒழுக்கம், தன் திறன் அறிதல், நல்ல நட்பு, குடும்பத்தின் அரவணைப்பு, கிடைக்கும் வாய்ப்புகளை கண்டறிந்து முன்னேறுதல் என கதை தொடாத விஷயங்களே இல்லை.

    மொத்தத்தில் கதையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஒரு அழகான குடும்ப கதையில், இடையிடையே சமுதாய முன்னேற்றம் சார்ந்த கருத்துக்களை கலந்து கொஞ்சமும் தொய்வில்லாமல் கருத்தைக் கவரும் வண்ணம் கதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்திறமை எழுத்தாளர் அன்னபூரணி தண்டபாணி அவர்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றிருக்கிறது. அவரின் மற்ற கதைகளைப் போலவே இக்கதையும் வாசகர்களின் கண்ணையும், கருத்தையும் ஒருங்கே கவரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அன்னபூரணி அவர்கள் மேலும் மேலும் இதுபோன்ற பல படைப்புகள் படைத்து எழுத்துலகில் வெற்றி பவனி வர எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.

    வாழ்த்துக்களுடன்,

    எழுத்தாளர் B.V. குமார்

    என்னுரை

    உங்களின் அன்புடனும், பேராதரவுடனும் என் அடுத்த கதையுடன் வந்துள்ளேன்!

    இவன் வசம் வாராயோ என்ற இந்தக் கதை, தமிழ் நாவல் ரைட்டர்ஸ் இணையதளம் நடத்திய கனவுப் பட்டறை! கதைத் தொழிற்சாலை! என்ற நாவல் போட்டிக்காக நான் எழுதியது!

    இந்தக் கதையை புத்தகமாக வெளியிடும் புஸ்தகா இணைய நூலக செயலியின் நிறுவனர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கதையைப் பற்றி…

    பிறப்பு முதல் திருமணம் வரை வெறும் ஏமாற்றங்களை சந்தித்த நாயகி நிரஞ்சனா எப்படி தன் வாழ்வில் முன்னேறுகிறார், அவளுடைய முன்னேற்றத்துக்கு நாயகன் தமிழ்வாணன், அவன் குடும்பத்தாரும் எப்படி உதவுகிறார்கள் என்பது இவன் வசம் வாராயோ!

    வாசகர்களாகிய உங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளே எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் எனர்ஜி பூஸ்ட்டர்கள்.

    குறைகள் இருந்தால் மின்னஞ்சலில் சொல்லுங்க! நிறைகள் இருக்குன்னு நீங்க நெனச்சா உங்க நண்பர்களிடத்தில் சொல்லி இந்தக் கதையைப் படிக்கச் சொல்லுங்க!

    என்றும் அன்புடன்,

    உங்கள் அன்பு சகோதரி,

    அன்னபூரணி தண்டபாணி.

    comments2purani@gmail.com

    1

    கயலக்கா! உங்க வண்டி குடுக்கறீங்களா? நா கொஞ்சம் மார்க்கெட் வரைக்கும் போய்ட்டு வந்திடறேன்! ப்ளீஸ்! என்று குழந்தை போல கெஞ்சும் எதிர்வீட்டுக்கு புதிதாகக் குடிவந்திருக்கும் நிரஞ்சனாவைப் பார்த்து புன்னகைத்தாள் கயல்விழி!

    உனக்கு வண்டி ஓட்டத் தெரியுமா? லைசன்ஸ் இருக்கா? என்று கேட்டாள் கயல்விழி.

    லைசன்ஸ் இருக்குக்கா! ஊர்ல ஓட்டியிருக்கேன்! இங்க இந்த ட்ராஃபிக்ல ஓட்ட கூடாதுன்னு வீட்ல தடா சொல்றாங்க! உங்க வண்டிய பாத்ததும் ஆசையா இருக்குக்கா! சின்னதா ஒரு ரௌண்டு… இங்க ஓட்டினா கண்டுபிடுச்சிடுவாங்க… அதான்… மார்க்கெட் வரை போய்ட்டு… அப்டியே காய் வாங்கிட்டு… என்று இழுத்தாள் நிரஞ்சனா! பார்ப்பதற்கு பத்தாம் வகுப்பு மாணவி தன் அன்னையிடம் செல்லமாகக் கொஞ்சுவதுபோல இருந்தது கயல்விழிக்கு!

    சரி! இந்தா! பத்திரமா போயிட்டு வா! அது ப்ரேக் கொஞ்சம் சரியில்ல! மெதுவா போயிட்டு மெதுவா வா! சரியா! என்று கூறிக்கொண்டே தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்து அவளிடம் நீட்டினாள் கயல்!

    ரொம்ப தேங்க்ஸ்க்கா! டொன்டீ மினிட்ஸ்ல வந்திடறேன்! என்று பிரகாசமான முகத்துடன் கூறிவிட்டு சிட்டாகப் பறந்தவளைக் கண்டு சிரித்தபடியே தன் வேலையைப் பார்க்கப்போனாள் கயல்!

    காலை பதினோரு மணியாகி விட்டாலும் கூட பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த காய்கறி மார்க்கெட்டில் தனக்குத் தேவையான காய்கறிகளை பேரம் பேசி வாங்கி, தன் துணிப் பையில் அடைத்துக்கொண்டு வந்து, இரவல் கேட்டு வாங்கி வந்த இருசக்கர வாகனத்தில் மாட்டிவிட்டு அதில் சாவியை பொருத்திவிட்டு உதைத்தாள் நிரஞ்சனா!

    வண்டியை கயலிடம் கேட்டு வாங்கி வரும்போது கிளம்பிய வண்டி இப்போது கிளம்பாமல் தகராறு செய்தது!

    ஒன்று! இரண்டு! மூன்று! ம்ஹூம்! அது கிளம்புவேனா என்றது!

    ‘ஹையியோ… இது ஸ்டார்ட் ஆக மாட்டுதே… இப்ப என்ன செய்யணும்னு புரீலயே…’ என்று அவள் யோசிக்கும்போதே அவளருகில் நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஆட்டோ அண்ணன் ஒருவன்,

    என்னமா? ஸ்டாட் ஆகலயா? என்று கேட்க,

    ‘ஆஹா! ஒருத்தன் சிக்கிட்டான்… இவனையே ஸ்டார்ட் பண்ண வச்சுடுடீ நீரூ…’ என்று தனக்குள் கூறிக்கொண்டவள்,

    ஆமாண்ணா! என்னன்னு தெரீல! ஸ்டார்ட் ஆகல… என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு!

    அந்த ஆட்டோ அண்ணன் கர்ம சிரத்தையாய் வந்து இவளுடைய இரவல் வாகனத்தை இரண்டு மிதி மிதித்து ஸ்டார்ட் செய்து கொடுக்க,

    ரொம்ப தேங்க்ஸ்ண்ணா! என்று வாயெல்லாம் பல்லாக நன்றி கூறிவிட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து பறந்தாள் அவள்!

    மார்க்கெட்டைக் கடந்து வெளியே வந்து இரண்டு பெரிய சாலைகளையும் பயத்துடனேயே கடந்து, வலதுபக்கம் இருக்கும் தன் வீடிருக்கும் தெருவுக்குள் திரும்ப அவள் எத்தனிக்கவும், இடது பக்கத்திலிருக்கும் ரயில்வே கேட் திறந்துவிட, ரயில் தண்டவாளத்தைக் கடந்து வாகனங்கள் வேகமாக வரவும் சரியாக இருந்தது! இவள் வலதுபக்கம் திரும்ப முடியாமல் சில நிமிடங்கள் திணறிவிட்டு, பின்னர் அவசரமாகத் திரும்ப, வண்டி நிலை பிழன்று சரிந்தது! வண்டியில் மாட்டியிருந்த காய்கறிப் பை கீழே விழுந்து காய்கறிகள் தெருவில் சிதறியது!

    ஹையியோ… என் வெங்காயம்! வெங்காயம்! ஓடுது… பிடி… பிடி… என்று இவள் தன் வண்டியை தூக்க முடியாமல் தூக்கி அவசர அவசரமாக ஓரமாக நிறுத்திவிட்டு, சிதறி ஓடும் வெங்காயங்களின் பின்னால் ஓடினாள்!

    பிடிங்க… பிடிங்க… ஏங்க… பிடிங்க… என்ற பெண்ணின் அலறல் கேட்டு அவசரமாகத் திரும்பிப் பார்த்த ஒரு நெடியவன், தன்னருகே தேவதைபோல ஒரு பெண் ஓடி வருவதைக் கண்டு அதிர்ச்சியாகி, சுற்றுமுற்றும் பார்க்க, அவளை யாரும் துரத்தி வரவேயில்லை! அவளுடைய பொருளை யாரும் பறித்துக்கொண்டு ஓடுவது போலும் தெரியவில்லை! அப்புறம் இவள் ஏன் இப்படிக் கூவுகிறாள் என்று குழம்பினான்!

    அவளோ இன்னும்… பிடி பிடி.. என்று கூவிக்கொண்டே, ஓடி ஓடி கீழே தரையில் சிதறி ஓடும் வெங்காயங்களைப் பொறுக்குவதைப் பார்த்த பின்தான் அங்கு என்ன நடக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது!

    வெங்காயங்கள் இவன் காலருகேயும் ஓடி வர, இவனும் அவற்றை எடுக்கத் தொடங்கினான்! எல்லா வெங்காயங்களையும் எடுத்தவள் அங்கு அவளுக்காக வேறு சிலரும் வெங்காயம் பொறுக்கியதைக் கண்டு, ரொம்ப தேங்க்ஸ்! ரொம்ப தேங்க்ஸ்! என்று ஒப்பித்தபடியே எல்லாரிடமும் வாங்கி தன் பையில் போட்டுக்கொண்டாள்.

    இவனிடமும் வந்து, ரொம்ப தேங்க்ஸ்ங்க! என்று ஒப்பித்தபடியே வெங்காயத்தை வாங்கித் தன் பையில் போட்டுக்கொண்டு வந்து தன் இரவல் வாகனத்தில் மாட்டிவிட்டு வண்டியை கிளப்ப, மீண்டும் அது கிளம்புவேனா என்றது!

    சில பலமுறை உதைத்துப் பார்த்தவளுக்கு தோல்வியே கிடைத்தது!

    ‘கடவுளே! அப்ப மாதிரியே இப்பவும் எந்த இளிச்சவாயனையாவது வண்டி ஸ்டார்ட் பண்ண அனுப்பி வைப்பா! உனக்கு புண்ணியமா போகும்!’ என்று மனதுக்குள் வேண்டியபடியே வண்டியை உதைத்தாள்!

    அவளுடைய புலம்பலுக்கு செவி மடுத்த இறைவன் அந்த நெடியவனையே அவளுக்குத் துணையாக அனுப்பி வைத்தார்!

    வண்டி ஸ்டார்ட் ஆகலையா? நா வேண்ணா ஸ்டார்ட் பண்ணித் தரவா? என்று அவளருகில் வந்தான் அவன்!

    ‘நா வேண்டினதும் இந்த இளிச்சவாயனை அனுப்பினதுக்கு நன்றி கடவுளே!’ என்று உள்ளுக்குள் சிரித்தபடி வெளியே பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டவள்,

    ஹூம்… ரொம்ப தேங்க்ஸ்ங்க… என்று கூறி நகர்ந்து நிற்க, அவனும் அந்த வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்து கொடுத்தான்!

    அவனுக்கு தலையசைத்து நன்றி சொல்லிவிட்டு வண்டியில் அதில் ஏறி அமர்ந்தவளைப் பார்த்து,

    வண்டி சர்வீஸ் பண்ணணும்னு நெனக்கிறேன்! எதுக்கும் இனிமே வண்டிய சர்வீஸ் பண்ற வரைக்கும் எங்கயும் எடுக்காதீங்க! என்றான்!

    ம்… சரிங்க… என்று சொல்லிக்கொண்டே வேகமெடுத்தாள் அவள்.

    ‘கட்டுனா இவள மாதிரி ஒருத்திய கட்டணும்… என்ன ஃபிகரு… என்ன கலரு…’

    அழகியே… மேரி மீ... மேரி மீ... அழகியே!

    என்று காற்று வெளியிடை கார்த்தி போல முணுமுணுத்தபடி மெதுவாக நடந்துபோனவன் அந்தத் தெருவின் கடைசியிலிருந்த பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்து முதல் அடுக்கின் மின்தூக்கியருகே செல்ல, அங்கே அந்த வண்டிக்காரியும் நிற்கக் கண்டவன்,

    ‘ஆஹா… அழகி இந்த ஃப்ளாட்டுதானா? எப்டியாச்சும் பேசி நம்பர் வாங்கிடணும்…’ மனதுக்குள் நினைத்துக்கொண்டே அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

    நீங்க இந்த ஃப்ளாட்டா? எந்த வீடு? என்று கேட்டான்!

    ஜீ 3! என்ற அவள், அவன் எந்த வீடு என்று கேட்டுக் கொள்ளவில்லை!

    மார்க்கெட்டா?

    ம்… வெங்காயம் ரொம்ப விலை ஆச்சே… தங்கத்த விட காஸ்ட்லியா விக்குதே… அதான்… கீழ விழுந்தாலும் பரவால்லன்னு ஓடி ஓடி பொறுக்கி… சாரி… எடுக்க வேண்டியதா போச்சு… என்று கூறி தன் அசட்டுத்தனமாய் சிரித்து வைத்தாள் அவள்.

    ம்… எப்டி வெங்காயம்லாம் கீழ கொட்டிச்சி? கேட்டான்.

    அந்த டர்னிங்ல எப்பவும் ட்ராஃபிக் அதிகம்ல… நா திரும்பறச்சே சரியா கேட் தெறந்திடுச்சு… வண்டில்லாம் வந்ததும் திரும்ப முடியல… நடுல கேப் கிடைக்கும்போது திரும்பறப்ப வண்டி பேலன்ஸ் தப்பிடுச்சு… என்று அவள் விளக்கம் சொன்னாள்.

    மின்தூக்கி வந்து நின்று திறந்தது. இருவரும் அதில் ஏறினார்கள்! மூன்றாம் தளத்துக்கான பொத்தானை அழுத்திவிட்டு அவன் தன் பேச்சை தொடர்ந்தான்!

    ஆனா… உங்க வண்டி சரியாம இருந்திருந்தா… உங்க பையும் விழுந்திருக்காது! வெங்காயமும் கீழ கொட்டியிருக்காது! உங்க வண்டி கண்டிஷன்ல இல்ல… நாளைக்கே சர்வீஸுக்கு விடுங்க… இல்லன்னா தினமும் நீங்க வெங்காயம் பொறுக்க… சாரி… எடுக்க வேண்டியிருக்கும்… என்று கூறிவிட்டு,

    ‘ஐயோ… லூசு… லூசு… அவ நம்பர கேக்காம வண்டிய பத்தி கேக்கறியேடா… லூசு…’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டான்!

    மின்தூக்கி இரண்டாம் தளத்தை கடந்து மேலே ஏறியது!

    ‘ஓ… இந்தாளு இது என் வண்டின்னு நெனச்சுகிட்டானா? சூனா பானா! அப்டியே மெய்ன்டய்ன் பண்ணிக்க… ஆங். ஆங்…’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டவள்,

    ரொம்ப தேங்க்ஸ்ங்க… எங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்றேன்… என்றபடியே குனிந்து தன் பையைத் தூக்கினாள்.

    ‘வீட்டுக்காரரா?’ என்று அதிர்ந்தவன் அப்போதுதான் அவள் கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிற்றைக் கவனித்தான்.

    மின்தூக்கி மூன்றாம் தளத்தில் நிற்க, அவள் அவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு வெளியேறினாள்! புது மஞ்சள் வாசம் அவள் நகர்ந்த பின்னரும் அவ்விடத்தில் சுற்றிக்கொண்டிருந்தது!

    2

    அழைப்புமணிச் சத்தம்கேட்டு கதவைத் திறந்த கயல்விழி தன் வீட்டு வாசலில் நின்றிருந்த நெடியவனைப் பார்த்து ஆச்சர்யத்துடன் புன்னகைத்து வரவேற்றாள்.

    ஹே! தமிழ்! எவ்ளோ நாளாச்சு உன்ன பாத்து! வா! வா! உள்ள வா! என்று கூறி அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்!

    அதெல்லாம் இருக்கட்டும்! நீ வெச்சிருக்கற டப்பா வண்டிய உன்னையே ஓட்டாதன்னு நா கத்திட்டு கெடக்கறேன்… நீ என்னடான்னா அத பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கறியா? எங்க உன் புருசன்? அவன் வேல வெட்டிக்கு எதும் போகறதில்லையா? என்று படபடவென பொரிந்தான் தமிழ் என்று கயல்விழியால் அழைக்கப்பட்ட அந்த நெடியவன்!

    டேய்! வந்ததும் வராததுமா என் மண்டைய ஏண்டா உருட்டற? என்றபடியே அங்கு வந்தான் கயல்விழியின் கணவன் முகிலன்.

    அப்ப கன்ஃபார்ம்டா வேலைக்கு போறதில்ல… அப்டிதான? என்று தமிழ் நக்கலாகக் கேட்டு, முகிலனின் கையால் தன் முதுகில் சில பல மொத்துகளை இலவசமாக வாங்கிக்கொண்டான்!

    ஏய்! பாவி! கூடப் பொறந்த அண்ணன ஒம்புருசன் போட்டு இப்டி அடிக்கறான்… பாத்துட்டு சும்மா நிக்கறியே… நீல்லாம் ஒரு தங்கச்சியா… என்று அலறினான் தமிழ் என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்வாணன்!

    அவளோ இவர்கள் அடித்துக்கொள்வதைப் பார்த்து சிரித்தபடியே சமையலறைக்குச் சென்று காபி போட்டு எடுத்து வந்தாள்!

    சரி! சரி! இந்தா! காபி குடி! ஆமா! பஸ்ஸிலதான வந்த… பல்லு வௌக்கினியா? என்று கயல்விழி காபி கோப்பையை அவனருகே கொண்டு போய்விட்டு திரும்பவும் கையை இழுத்துக்கொண்டே தன் அண்ணனைக் கேட்க, தமிழ் தன் தலையில் அடித்துக் கொண்டான்!

    மச்சி… டோட்டல் டேமேஜ்! என்று கூறி சிரித்தான் முகிலன்!

    என்னை என்ன உம் புருசன் மாதிரின்னு நெனச்சியா? பல்லெல்லாம் நேத்தே வௌக்கியாச்சு! நீ காபியக் குடு! என்று தன் தங்கை கணவரை வாரியபடியே காபியை வாங்கிக்கொண்டான் தமிழ்!

    இதையும் கேட்டு சிரித்தாள் கயல்விழி.

    ஏண்டீ? உங்கண்ணன் என்னப் பாத்து வேலைக்கு போக மாட்டானா… பல்லு வௌக்க மாட்டானான்னு கேணத்தனமா கேள்வி கேட்டு நக்கலடிக்கறான்… பாத்துட்டு பல்லிளிக்கற… என்ன நக்கலா? என்று மனைவியைப் பார்த்து முகிலன் கோபமாகக் கேட்க, அதற்கும் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள் கயல்விழி!

    என்னடா உன் தங்கை! சூடு சொரணையே கிடையாதாடா அவளுக்கு?

    Enjoying the preview?
    Page 1 of 1