Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaasamalar Theane......!
Vaasamalar Theane......!
Vaasamalar Theane......!
Ebook259 pages2 hours

Vaasamalar Theane......!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580106005400
Vaasamalar Theane......!

Read more from Jaisakthi

Related to Vaasamalar Theane......!

Related ebooks

Reviews for Vaasamalar Theane......!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaasamalar Theane......! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    வாசமலர்த்தேனே......!

    Vasamalartheane......!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    நல்ல வேளையாக முன்பே வந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டாள் சந்தியா.

    கடிகாரத்தைப் பார்த்தாள். இரயில் புறப்படுவதற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது.

    இருபத்தியிரண்டு வயதில் இருந்தாள். அது தங்கமா இல்லையா என்று கண்டு பிடிக்க முடியாத அளவில் வேலைப்பாடுள்ள ஒரு முத்து மாலை கழுத்தில் அணிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் அழகாகப் பொருந்தியது. கையில் இரண்டு மெல்லிய தங்க வளையல்கள். இருபது கையில் வாங்கி பார்த்த மாத்திரத்தில் ஒரு எளிமை தெரிந்தது. ஆனால் பெரிய இடத்துப்பெண் போன்ற ஒரு கம்பீரமும் தெரிந்தது.

    இப்போதெல்லாம் பெண்கள் அது கிராமமாக இருந்தாலும் சரி. நகரமாக இருந்தாலும் சரி. நன்றாக உடை உடுத்துக் கொள்கிறார்கள். கம்பீரமாக நடமாடுகிறார்கள். அது கல்வி தந்த தன்னம்பிக்கையோ என்னவோ அது போலத்தான் சந்தியாவும் அந்த அழகான சந்தன நிற சுடிதாரில் அழகாக இருந்தாள்.

    இரயிலில் அமாந்திருந்தாள். இரண்டாம் வகுப்புப்பெட்டி. ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மென்ட் சென்னைக்குக் புறப்படுற ட்ரெயின். ஈரோட்டிற்கு ஒரு வேலையாக வந்திருந்தாள். இரயில் புறப்படுவதற்கு அரைமணி நேரம் இருக்கிறதே என்று கையில் இருந்த புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டாள்.

    சந்தியாவுக்குப் பிடித்த கதாசிரியரின் புத்தகம். அவர் கதை இலக்கியம், ஆன்மீகம் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி எழுதுகிற விதம் அவளுக்குப் பிடிக்கும். தன்னை மறந்து புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.

    எப்போதுமே இரயிலில் அமர்ந்தால் கொஞ்சம் வேடிக்கை பார்ப்பாள். பரபரப்பான விற்பனையாளர்கள், ஒல்லியும், குண்டுமாக விதவிதமான மனிதர்கள். மூட்டைகளும், முடிச்சுகளும் பரபரப்பும், என்று விதவிதமாய் அவர்கள் இரயில்களில் பயணிக்கிற விதம், காதில் விழுகிற பேச்சுக்கள் என்று எல்லாவறறையும் ரசிப்பாள். இன்றைக்கு ஆனால் அந்தப் புத்தகம் அவளை உள்ளே இழுத்துக் கொண்டது.

    இருபது நிமிடம் ஓடி விட்டது!

    அவள் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். எதிர்ப்புற இருக்கையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வந்து அமர்ந்தாள். ஜன்னலோரமாக ஒரு இளைஞன் அநேகமாக இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தான். அவன் நின்று பேசினான்.

    ஏம்மா...! நோக்கு இந்தப் பாடு! என் ஆம்படையா உன்னைச் சரியா வேலை வாங்கறா. கவனிக்கறதும் இல்லை. பேசாம சந்தர்கிட்டேயே இருக்கலாமில்லே! அவன்தான் வச்சுக்கறேங்கறானே... நாலு மாசத்துக்கொருதரம் வீடு மாறிகிட்டு... என்றான்.

    பாவம்டா! சௌந்தரு! நான் அங்கயே இருந்தா. அவன் எல்லா வேலைகளையும் செய்யறான். என்னை ஒரு வேலை செய்ய விடறதில்லை. வேலைக்கும் போயிட்டு அவன் படற பாட்டைப் பாத்தா... நேக்கு பாவமாயிருக்கு...! அது மட்டுமில்லடா... அவன் வேலைக்குன்னு கிளம்பிப் போயிட்டா... நேக்கு ரொம்ப போரடிக்குது. இங்கயானா குழந்தைகளுக்கு வேணுங்கறது செய்யக் கொண்டு பொழுது நல்லாப்போயிடுது...

    என்னமோ... போ...! அப்பா ஏதாவது சொத்துன்னு வச்சுட்டுப் போயிருந்தா நோக்கும் மரியாதையிருக்கும். இப்படி எங்காத்துக்கும், கல்யாணராமன் ஆத்துக்கும், சந்தராத்துக்குன்னும் நீ அல்லாடறே... என்றான் சௌந்தரராஜன்.

    என்ன செய்றது? எங்க காலத்துல அவர் ஒத்தரோட சம்பளத்தை வச்சுண்டு உங்களையெல்லாம் நன்னாப் படிக்க வக்கறதுக்குள்ளேயே உன்னப்புடி, என்னைப் புடின்னு ஆயிடுத்து. ஏதோ அவன் கையை, இவன் காலைன்னு புடிச்சு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தாரே அதுவே பெரிசுன்னு நினைச்சுக்கோங்க... என்றார் கனகேஸ்வரி...

    ஆமா! என்கிட்டே வக்கணையாப் பேசு! மங்களா அந்தப் பாடு படுத்தறாளே... அவகிட்டே பேச வேண்டியதுதானே...

    பேசிட்டுப் போறா... விடுப்பா! நான் ஏதோ நாலு மாசத்துக்கு வந்து இருந்துட்டுப் போறேன். நான் ஏதோ சொல்லப் போக உங்கம்மா... இப்படிப் பேசினாளேன்னு உன்னைப் புடிச்சுண்டுடுவள என்றார் கனகேஸ்வரி.

    அதுவும் சரிதான்! அம்மா... லோயர் பார்த்துதான்... நன்னா சௌகரியமாப் படுத்துக்கோ...! புளிசாதம் கொடுத்திருக்காளே... சாப்பிட்டுக்கோ...! என்றான் மகன்.

    டிரெயின் புறப்படுவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. இந்த இடைவெளிக்குள்ளாக கனகேஸ்வரி சந்தியாவைப் பார்த்து சிநேகமாக ஒரு முறை புன்னகைத்துவிட்டார்.

    சந்தியாவும் குறை வைக்காமல் ஒரு புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.

    இதோ... இந்தப் பொண் இருக்காளே! இந்தப் பொண்ணுகிட்டே கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தேன்னா... பொழுது ஓடிடாதோ...! என்றார்.

    சௌந்தரராஜன் சங்கோஜத்துடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

    நீங்களும் சென்னையா? என்றான்.

    ம்...! என்றாள்.

    கொஞ்சம் பாத்துக்கோங்க...! ஸ்டேஷன்ல என் பிரதர் வந்துடுவான் என்றான்.

    ம்...! என்றாள்.

    புகைவண்டி புறப்பட்டது. எல்லாரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து விட்டார்கள். எட்டு மணிக்கே புறப்படுகிற ட்ரெயின் என்பதால் உடனே படுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.

    என் பேரு கனகேஸ்வரி என்று புன்னகைத்தார் எதிர் ஜன்னல் அம்மாள்.

    நான் சந்தியா...! என்றாள் சந்தியா.

    வந்துட்டுப் போறானே... என்னோட மூத்த மகன். ரெண்டாவது மகன் சேலத்துல இருக்கான். கல்யாணராமன். அவனுக்கு ரெண்டு குழந்தைகள். மூணாமத்தவன் சென்னையில் இருக்கான். நாங்க சென்னையிலதான் இருந்தோம் இவங்க ரெண்டு பேரும் டிரான்ஸ்ஃபர்ல வந்துட்டா...! ஒவ்வெருத்தர் ஆத்துலயும் நாலுமாசம், நாலுமாசம் மாறி மாறி இருப்பேன்... என்றார்.

    சந்தியா கூர்ந்து கேட்டாள். ஆனால் தன்னைப்பற்றி ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை.

    மனதில் மட்டும் தோன்றியது. ஐம்பதைத் தாண்டிய இந்த வயதுக்குப் பின் காடாறுமாசம், நாடாறு மாசம் என்பது போல ஒவ்வொரு நாலு மாதத்துக்கும் வீடுகள் மாறுகிற அந்தப் பெண்ணைப் பார்க்கிற போது அவள் மனம் உருகியது.

    பசங்களுக்கெல்லாம் வச்சுக்கணும்தான் ஆசை! ஆனா மாட்டுப் பொண்கள் - ஒத்து வரணுமே! என்னமோ சொத்து பத்துன்னு நாலு காசு சேத்து வச்சுக்கணும்னு எங்களுக்குத் தோணலை. இவங்களையெல்லாம் நல்லபடியா வளத்தாப் போதும்னு நினைச்சோம் என்றார்.

    ஒரு பெருமூச்சுவிட்டார். சந்தியாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    உங்க மூணாவது மகன்னு சொன்னேளே! அவருக்குக் கல்யாணமாயித்தா. என்று கேட்டாள்.

    இல்லை...! பெண் பாக்கலாம்ன்னு கேட்டா கோபிச்சுக்கறான். மூத்தது ரெண்டுகிட்டயும் நீ படறது போதாதா? இன்னொருத்திகிட்டயும் சிக்கிக்கணுமாங்கறான். என் மேல பாசம். அதுக்காகக் கல்யாணம் பண்ணாம இருக்க முடியுமா? பாக்கணும் என்றார்.

    டிக்கட் பரிசோதகர் வரவும் பேச்சுத் தடைப்பட்டது எல்லாரும் அவரவர் மூட்டைகளப் பிரித்து சாப்பிட்டார்கள்.

    சந்தியாவும் தான் கொண்டு வந்திருந்த உணவைச் சாப்பிட்டாள். பத்து மணி ஆகி இருந்தது.

    எல்லாரும் அவரவர் படுக்கையில் சாய்தார்கள்.

    நடுத்தரக் குடும்பங்களின் இன்றைய மாற்றங்கள் குறித்துப் பெருத்த சிந்தனைகள் அவளுக்குத் தோன்றியது.

    அன்றைக்கு அவளுக்கு தெரியவில்லை. கனகேஸ்வரியும் அவள் மகன் பாலச்சந்திரனும் தன் வாழ்க்கையில் வந்து போகிற பயணிகளாக மட்டும் இருக்கப் போவதில்லை என்று.

    சிந்தனையுடன் படுத்திருந்தாள்.

    ***

    ஐந்து மணிக்கெல்லாம் சலசலப்பு ஆரம்பித்துவிட்டது!

    பயணிகள் எழுந்து பல்துலக்கவும் ஆடை திருத்தவும், டீ, காஃபி என்று வாக்கிப் பருகவும் ஆரம்பித்து விட்டார்கள்.

    சந்தியாவும் விழித்தாள். எப்படியும் இனிமேலும் படுத்திருக்க முடியாது. எழுந்தாள்.

    இரவிலும் கூட இரண்டு முறை விழித்தாள். விழித்த போதெல்லாம் எதிர் சீட்டில் பெண்மணியைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்துக் கொண்டாள்.

    ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அதனால் அவளும் நிம்மதியாகப் படுத்துக் கொண்டாள். ஏனோ அம்மாவின் நினைவும், பெரியம்மாவின் நினைவும் வந்தது.

    ஐம்பது வயது போயிருக்கும். இந்த வயதில் மூன்று வீடுகளுக்கும் மாறி மாறி அலைகிற கொடுமை அவள் நெஞ்சில் அடைத்தது. முகம் தெரியாத மருமகள்களின் மேல் கோபம் வந்தது.

    இப்போதைய தலைமுறையினர் பெரியவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றாலே அச்சப்படுகிறார்கள் போல இருக்கிறது. அவரவர் குடும்பம் அவரவருடையது என்று நினைக்கிறார்கள் போல் தோணுகிறது என்று எண்ணிக் கொண்டாள்.

    இந்தியக் கலாசாரத்தின் சிறப்பே இந்தக் குடும்பங்கள் தானே என்று எண்ணிக் கொண்டாள்.

    அம்மா... காஃபி சாப்பிடளோ? என்று வாங்கிக் கொடுத்தாள்.

    அவளும் பருகினாள். நல்ல வேளையாக இன்றைக்கு ட்ரெயின் பேசின்பிரிட்ஜ் அங்கே, இங்கே என்று எல்லாம் வண்டி நிற்கவில்லை.

    பொலபொலவென்று விடிகிற நேரத்துக்கும் வண்டி சென்டிரல் ஸ்டேஷனுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

    கூட்டமெல்லாம் இறங்கட்டும்மா! என்றாள்.

    சரிம்மா...! என்று அவரும் அமர்ந்து கொண்டார்.

    ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்.

    பாலச்சந்தரைக் காணோமே... என்று முணுமுணுத்தார்.

    டோண்ட் வொரிம்மா! உங்க மகன் வரவரைக்கும் நான் கூட இருந்து அனுப்பிக் குடுத்துட்டுப் போறேன் என்றாள்.

    ரொம்பத் தாங்ஸ்ம்மா! என்றார் மகிழ்ச்சியாக,

    எல்லாரும் இறங்கிய பின்பு இறங்கினார்கள். சுற்று முற்றும் பார்த்தார்கள்.

    இரயில் நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் 'வெக்கு வெக்கென்று' போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தார்கள்.

    அம்மா நடுப்புறமா போயிரலாம். முட்டித் தள்ளிடுவாங்க என்றாள்.

    அவளது சின்ன ஏர்பேக்தான். கனகேஸ்வரி அம்மாவின் சின்னப் பெட்டியையும் அவளே எடுத்துக் கொண்டாள்.

    ஓரளவு கூட்டம் வடிந்துவிட்டது. இன்னமும் அவரது மகனைக் காணோம்.

    சரி... வாங்கம்மா...! கொஞ்ச தூரம்... நடக்கலாம் என்று அவள் பெட்டியைக் தூக்குகிற நேரத்தில் கொஞ்ச தொலைவில் சற்றே வேக நடையுடன் அவர்கள் நின்ற இடம் நோக்கி ஒரு இளைஞன் வருவது தெரிந்தது.

    கனகேஸ்வரி அம்மாவின் சாயல் தெரிந்தது. சந்தியாவுக்கு அவன்தான் பாலச்சந்திரன் என்பது புரிய திரும்பிப் பார்த்தாள். அதற்குள் கனகேஸ்வரி

    வந்துட்டாம்மா...! என்றார்.

    அம்மா.! என்று பாசமாகத்தான் வந்தான் மகன்.

    சாரிம்மா! நேத்து அவசரமா ஒரு கணக்கை முடிக்க வேண்டியிருந்தது. லேட்டாத்தான் தூங்கினேன். கண்ணசந்துட்டேன் என்றான் விளக்கம் போல.

    பரவால்லைடா...! என்றார் அம்மா.

    சந்தியாவிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டான்.

    இந்தப் பொண்ணுதான்... நன்னாப் பாத்துண்டா... என்றார்.

    தாங்ஸ்... மேடம்...! என்றான்.

    இவன் இங்கயே இருன்னுதான் சொல்றான்... நேக்குத்தான்... என்றவர் மென்று விழுங்கினார்.

    அம்மா! என்றான் பாலச்சந்தர்

    வீட்டு விஷயமெல்லாம் எதுக்கு அன்னியர்கிட்டே சொல்றே...! என்ற எச்சரிக்கை உணர்வு அதிலே தெரிந்தது.

    இல்லை...! நான் ஒண்ணும் சொல்லலே! சௌந்தர் பேசிண்டிருந்தானோன்னா... அதைக் கேட்டுண்டிருந்தா... என்றார் விளக்கம் போல.

    பை தி பை... நான் சந்தியா...! என்றாள் சந்தியா.

    ஐ ம் பாலச்சந்திரன் என்றான்.

    உங்க பிரதர் நேத்துக் ரிக்வெஸ்ட் பண்ணிண்டார். அதான் வெயிட் பண்ணினேன் என்றாள்.

    தாங்ஸ் மேடம்... என்றான் சொல்லிக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தவன் கண்கள் ஏனோ அந்த முகத்திலேயே ஒரிரு நிமிடங்கள் தங்கின.

    ஆவள் பார்வையும் மோதியது. இரண்டு பேருமே ஓரிரண்டு நிமிடங்கள் பார்வையை விலக்கிக் கொள்ள முடியாதவர்களாய் தவித்தார்கள் போல இருந்தது. பிறகு வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டார்கள்.

    சரி... வரட்டுமா? என்பது போல் அவன் கத்தரித்துக் கொண்டு கிளம்புவதை அவள் ஒருவிதச் சுவாரசியச் சிரிப்புடன் பார்த்தாள்.

    தாயும், மகனும் இயல்பான வேகத்தில் நடந்து செல்ல அவன் வேண்டுமென்றே பின் தங்கினாள்.

    நல்ல பொண்ணுடா... பாலு! நன்னா கவனிச்சுண்டா...! என்றார் கனகேஸ்வரி,

    ம்...! என்றான் பாலச்சந்திரன்.

    என்னத்துக்கு இந்தப் பொழப்பு! என்னமோ அவாத்துல தாங்கறா மாதிரி... பேசாம இங்கயே இரேன்னா... கேட்க மாட்டேங்கறே... என்றான் புலம்பல் போல,

    ஆமடா...! நான் உட்காந்துட்டேன்னா... சுமை பூராமையும் உன் தலையே தாங்கட்டும்னு. விட்டுட்டு அக்கடான்னு உட்காந்துக்குவாங்கடா... என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டார் கனகேஸ்வரி, ஆனால் சொல்லவில்லை.

    நேக்கும் அவாளையெல்லாம் பாக்கணும். அவாளோட இருக்கணும்னு தோணாதா...! அது கிடக்கிறது விடு... என்னமோ நான் மட்டும்தான் நீ சொன்ன பேச்சுக் கேட்கறது. இல்லேங்கறயே! நீயும்தான் நான் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கறே. என்றான்.

    ஏன்? நீ என்னத்தை அப்படிச் சொல்லி நான் கேட்காம விட்டுட்டேன்... என்றான் பாலச்சந்திரன்.

    இன்னைக்கு ரயில்ல வந்தாளே... ஒரு பொண்ணு அவளை மாதிரி ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிகோன்னா... கேட்க மாட்டேங்கறே...!

    நன்னா... ஆச்சு... போ! யாராவது ஒரு பொண்ணு கொஞ்சம் சுமாரா உன் கண்ல பட்றப் படாதே! உடனே இந்தப் பாட்டுபாட ஆரம்பிச்சர்றே...! என்றான்.

    ம்...! நான் சொன்னா... மட்டும் கேட்கப் போறயாக்கும் என்று அம்மா முணுமுணுக்கையில் அவன் அந்தப் பெண் பின்னால் வருகிறதே என்று அவள் காதில் விழுந்து விடப்போகுது என்ற எண்ணத்துடன் திரும்பிப் பார்த்தான்.

    கொஞ்சம் தள்ளித்தான் வந்து கொண்டிருந்தாள்.

    வெளியே வந்த பிறகும் தன்னையும் அறியாமல் அவன் அந்த திசையைப் பார்த்தான்.

    பாவம்...! வசதியில்லாத பெண் போலத்தான் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.

    டாக்ஸி கிளம்பியவுடன் வரேண்டியம்மா! என்று கனகேஸ்வரி தலையை அசைத்தார்.

    அவளும் புன்னகையுடன் தலையாட்டினாள். அவர்கள் டாக்ஸி கிளம்பியவுடன் அவள் ஏதோ ஒரு திசையைப் பார்த்துத் தலையை அசைக்க கார் ஒன்று வந்து நின்றது.

    கப்பல் போல என்பார்களே அது மாதிரி ஒரு கார்! டிரைவர் இறங்கி பவ்யமாகக் காரைத் திறந்துவிட்டான்.

    2

    மணி... மணி...! என்று கத்திக் கொண்டிருந்தான் இராமநாதன்.

    வர்றேன்... என்று அடுப்படியிலிருந்து அவசர அவசரமாகக் கையை புடவைத் தலைப்பில் துடைத்தபடி வந்தாள் மணிமாலா.

    என்னத்துக்கு இப்படிக் கத்தறேள்! அதுவும் என்னமோ நாய்க்குட்டியைக் கூப்பிடறாப்போலே... மணி... மணின்னுட்டு...!

    Enjoying the preview?
    Page 1 of 1