Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjodu Than Poo Poothathu
Nenjodu Than Poo Poothathu
Nenjodu Than Poo Poothathu
Ebook108 pages34 minutes

Nenjodu Than Poo Poothathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் என்பது ஒரு அழகான மலர் போன்றது. யாருக்கு யார் மீது எதனால் காதல் ஏற்படும் என்றும் யாராலும் சொல்ல முடியாது.

மனசுக்குள் பூக்கும் அந்த மலர் மணம் வீசி... மனதை உருகச் செய்யும் கதாநாயகிக்கென்று நிச்சயமானவன் காத்திருக்க...

அடுத்தவர்களுக்கு உதவும் நல்ல மனம் படைத்த கதாநாயகி...

வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டாள் என்பதை... கண்ணியமான காதலுடன் சொல்லப்பட்ட கதை தான் ‘நெஞ்சோடுதான் பூ பூத்தது’ இதைப் படிப்பவர் மனங்களை கவரும் என்ற நம்பிக்கையுடன்

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580137806155
Nenjodu Than Poo Poothathu

Read more from Parimala Rajendran

Related to Nenjodu Than Poo Poothathu

Related ebooks

Reviews for Nenjodu Than Poo Poothathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjodu Than Poo Poothathu - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    நெஞ்சோடு தான் பூ பூத்தது

    Nenjodu Than Poo Poothathu

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    பன்னீர் பூக்களின் நறுமணம் அந்த இடத்தையே நிரப்பியிருந்தது.

    வேப்பமரத்து கிளைகள் காற்றில் அசைந்து தென்றல் காற்றை ஆனந்தியின் பொன்னிற மேனியில் தவழ செய்தன.

    அவளது அழகிய திராட்சை விழிகள் அங்கும் இங்கும் அலைமோதாமல், கையிலிருந்த புத்தகத்தில் நிலைத்திருந்தது.

    ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்தியத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.

    தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் வயல்களை வளப்படுத்தவும், உணவு பொருள்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

    அந்த தண்ணீரில் வாழும் மீன் அழுக்கை தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும், பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

    ஒரு காக்கையின் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே...

    கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகள்.

    நிமிர்ந்தாள். பறவை கூட்டம் வானத்தில் அணிவகுப்பு மாறாமல் வரிசையாக நூல்பிடித்தாற் போல் பறந்தது.

    நான் ஒரு நல்ல ஆசிரியராக... நாலு பேருக்கு கல்வியை கொடுத்து... இந்த சமுதாயத்தில் நல்ல பண்பை வளர செய்து... நாலு பேருக்கு பயனுள்ளவளாக...

    மனதில் கனவு வளர்கிறது.

    ஆனந்தி, ஆனந்தி தோட்டத்தில் எவ்வளவு நேரம் இருப்பே... உள்ளே வாம்மா

    அம்மா வசந்தாவின் அன்பான அழைப்பு,

    அக்கா, இங்கே வாயேன். டி.வி.யில் சூர்யாவின் புதுப்பட பாட்டு போடறான் பாரு.

    என்ன அழகு... என்ன ஸ்டைல்...

    தங்கை வித்யாவின் குறும்பு தெரியும் அழைப்பு.

    "ஆனந்தி கீதா உபதேசம், புத்தகத்தை பார்த்தியாம்மா ஹாலில் தான் வச்சிருந்தேன். நீ எடுத்தியா...

    அப்பாவின் அழைப்பு... கையிலிருந்த புத்தகத்தை மூடியவள் எழுந்திருக்கிறாள்.

    அலமாரியில் இருந்த புத்தகத்தை எடுத்து அப்பாவிடம் தருகிறாள்."

    "தாங்க்ஸ்மா. இந்த வீட்டில் பொறுப்பாக செய்யறவ நீ தானே. அதான் உன்னை கேட்டேன்.

    வாங்கி கொண்டவர், தன் அறை நோக்கி நடக்கிறார். அப்பாவும், அவளை போல புத்தக பைத்தியம்."

    கையில் புத்தகம் இருந்தால் போதும். உலகமே தெரியாது. "கவர்மெண்ட் வேலை பார்த்து ரிடையர்ட் ஆகியாச்சு. ஏதோ புண்ணியம் பண்ணியதாலே, தாத்தா, பாட்டன் சொத்தும் நமக்கிருக்கு. இரண்டு பெண்களுக்கு தாராளமாக செலவு செய்து கல்யாணம் பண்ணலாம்.

    அதுவும் பெரியவளுக்கு உங்க அக்கா மகன் சிவாவை தான் முடிக்கிறதுங்கிறது... முடிவான ஒண்ணு.

    எந்த பிரச்சனையும் இல்லைன்னு, எப்ப பார்த்தாலும் புத்தகமும், கையுமாக அலையறீங்களே...

    கூடமாட வீட்டு வேலைகளில் எனக்கு உதவ கூடாதா... அப்படி பொழுதுக்கும் படிச்சு என்ன தான் செய்ய போறீங்களோ...

    அலுத்துக் கொள்வாள் வசந்தா.

    "என்ன வசந்தா... படிப்பதை பத்தி இப்படி சாதாரணமா சொல்லிடே... படிப்பதனால் நாலு நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்க முடியுது. கற்றது கைம்மன் அளவு... கல்லாததது உலகளவுன்னு சொல்வாங்க.

    வாழ்க்கையில் கடைசிவரை புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் கடலளவு இருக்கு வசந்தா."

    இவ்வளவு நாள் வேலை, வேலைன்னு என் பொழுதுகள் போச்சு. இனிமேலாவது எனக்கு பிடிச்ச விஷயம்... புத்தகம் படிப்பது - அதை செய்யறேனே... அதுக்கு கூட தடை போட பார்க்கிறே...

    இங்கேப்பாரு... நீ டி.வி. டிராமான்னு பொழுது போக்கலையா... அது மாதிரி தான் இதுவும்"

    "ஆமாம், உங்களை பார்த்து தான் ஆனந்தியும் கெட்டு போயிட்டா, படிப்பை முடிச்சாச்சு... டீச்சர் டிரெயினிங் பாஸ் பண்ணியாச்சு. ஏதோ அவ ஆசைக்கு படிக்க வச்சோம்.

    இப்ப என்னடான்னா... எனக்கு வேலைக்கு கிடைச்சிருக்கு போறேன்மான்னு பிடிவாதமா நிற்கிறா..."

    போகட்டும் வசந்தி... படிச்ச படிப்புக்கு உபயோகம் இருக்க வேண்டாமா. டீச்சர் டிரெயினிங் முடிச்சிருக்கா. அதுவும் கவர்மெண்ட் ஸ்கூல் வேலை, ஏன் வேண்டாம்னு சொல்லணும்

    யோசித்து தான் பேசறீங்களா. அவ வேலைக்கு போய் சம்பாதித்து என்னாக போகுது. ஆசைப்பட்டா படிக்க வச்சோம்.

    "ப்ராஜெக்ட் விஷயமா சிவாவை அவன் கம்பெனியில் அமெரிக்கா அனுப்பியிருக்காங்க. வந்ததும் கல்யாணம் தான்னு. உங்க அக்கா சொல்லிட்டாங்க.

    இப்ப இவ எதுக்கு வேலைக்கு போகணும். அதுவும் ஏதோ ஒரு கிராமத்துக்கு... அந்த வேலையே வேண்டாங்க."

    இரண்டு நாட்களாக வீட்டில் இந்த பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

    அக்கா, இங்கே பாரேன்... சூர்யா தனி அழகு இல்லையாக்கா

    ஏய் மக்கு. அவர் ஒரு சினிமா நடிகர்... அவ்வளவு தான். அளவுக்கு மீறி ஆம்பிளைகளை புகழக்கூடாது வித்யா

    "போக்கா... உனக்கென்ன. நீ அதிர்ஷ்டம் பண்ணினவள். சூர்யாவுக்கு மேலே அழகா... ஹேண்ட்சமா... ஆறடி உயரத்தில் கம்பீரமான... ஆண்மையோடு... சிவா தான் காத்திட்டிருக்காரு...

    என்னை சொல்லு... எனக்கு எந்த நொண்டி, குருடு வாய்க்க போகுதோ"

    வாய்விட்டு சிரிக்கிறாள் ஆனந்தி.

    சரி... சிவா அத்தானை நான் விட்டு தரேன். நீ கல்யாணம் பண்ணிக்க

    "அதுக்கு நான் இந்த வீட்டில் மூத்தவளாக பிறந்திருக்கணும். நான்

    Enjoying the preview?
    Page 1 of 1